அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
முடிவெடுக்க வேண்டிய கட்டத்தில் மைத்திரி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகள்தான் என்று உயர்நீதிமன்றம் அதிகாரபூர்வமாக அறிவித்திருக்கிறது. இதன்படி, 2020 ஜனவரி 8ஆம் திகதியுடன் தற்போதைய ஜனாதிபதியின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. 1978ஆம் ஆண்டு அரசமைப்புக்கு இணங்க, ஜனாதிபதியாகப் பதவியேற்ற மைத்திரிபால சிறிசேன, 19 ஆவது அரசமைப்புத் திருத்தச் சட்டம் நடைமுறையில் உள்ள தற்போதைய சூழ்நிலையில், தனது பதவிக்காலம் எதுவரை என்று உயர்நீதிமன்றத்திடம் கேள்வி எழுப்பியிருந்தார். 19ஆவது அரசமைப்புத் திருத்தத்துக்கு அமைய, 2020 வரை மாத்திரமா அல்லது, 2021 வரை பதவியில் இருக்க முடியுமா என்பதே ஜனா…
-
- 0 replies
- 229 views
-
-
சர்வதேச மனித உரிமை பிரகடனம் இலங்கையில் தாக்கம் செலுத்தியிருக்கிறதா? Posted on December 13, 2022 by தென்னவள் 22 0 ஒரு அரசியல் தீர்வை எட்டுவதற்கு அக்கறையுள்ள எவருக்கும், எழுபத்து நான்கு வருடங்கள் குறுகிய காலம் அல்ல! வேறு வார்த்தைகளில் கூறுவதானால், இலங்கையின் ஆட்சியாளர்கள், இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வு காண்பதற்கு மேலாக தமிழர்களையும், சர்வதேச சமூகத்தையும் முட்டாளாக்குவதற்கான வழிகளை மட்டுமே தேடுகிறார்கள் என்பதே யதார்த்தம்-உண்மை. உலகெங்கிலும் உள்ள கொடூரமான மனித உரிமை மீறல்களுக்கான முக்கிய காரணங்களில் ஒன்று, சுயநிர்ணய உரிமையைப் பயன்படுத்துவதற்கான போராட்டங்களுக்கு எதிரான ஒடுக்குமுறையாகும். சர்வதேச மனித உரிம…
-
- 0 replies
- 379 views
-
-
அன்பின் ஐயா நெடுமாறனுக்கு ! அண்மையில் நீங்கள் தெரிவித்த விடுதலைப் புலிகளின் தலைவர் பற்றிய கருத்து அனைவரையும் உங்கள் மேல் உற்றுப் பார்க்க வைத்திருக்கிறது. பிரபாகரன் உயிரோட இருக்கிறார் என்று வந்த அறிவிப்பு இத்தனை பூகம்பத்தை ஏற்படுத்தி விடுதலைப் புலிகளின் தலைவரை ஓர் கவர்ச்சியான மக்களை ஈர்க்கும் தாக்கத்தை சமூக இணையத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. ( Charismatic figure ) முகம் கொண்டு பார்க்க வைத்திருக்கிறது. ஈழத் தமிழர் விடிவுக்காய் எந்த வித அரசியல் ஆதாயமும் பதவியும் பணமும் இன்றி இயன்றவரை நீங்கள் ஆற்றிய அர்பணிப்புக்களை நாகரிகமாக நன்றியுணர்வுடன் நினைவு கொள்ளும் அதே வேளை ஐயா உங்கள் இறுதிக் காலத்திலும் உண்மையோடு உழைப்பீர்கள் என்கிற நம்பிகை நமக்கு சில ஐயங்களை உண்டு பண்ணியுள்ளது. …
-
- 0 replies
- 998 views
-
-
மின்வெட்டும் இல்லை தேர்தலும் இல்லை? - நிலாந்தன் கடந்த 16ஆம் திகதியிலிருந்து மின்வெட்டு நிறுத்தப்பட்டு விட்டது. ஆனால் மின்கட்டணம் 66 விகிதத்தால் அதிகரித்திருக்கிறது. இதன் மூலம் அரசாங்கம் மக்களுக்கு உணர்த்த விரும்புவது எதனை? மின்வெட்டை நிறுத்துவது என்றால் நீங்கள் மின் கட்டண உயர்வை தாங்கிக் கொள்ள வேண்டும். இதை அதன் பிரயோக அர்த்தத்தில் கூறின், மின் கட்டணத்தை குறைப்பது என்றால் மின்சாரத்தை குறைவாக நுகருங்கள் என்பதுதான். இப்படி ஒர் உத்தியைத்தான் எரிபொருள் விநியோகத்திலும் அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. கியூஆர் கோட் முறைமை என்பது எரிபொருள் நுகர்வைக் கட்டுப்படுத்தியது. எரிபொருள் பதுக்கப்படுவதையும் தேவைக்கும் அதிகமாக நுகரப்படுவதையும் அது ஒப்பீட்டளவில் கட்டுப்படுத்தியது. அத…
-
- 0 replies
- 328 views
-
-
ஜனாதிபதி தேர்தலும் அவசரப்பட்ட சஜித்தும் என்.கே அஷோக்பரன் கடந்த மே மாதம் 15ஆம் திகதி, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாஸ ஊடகங்களுக்கு கருத்துரைக்கும் போது, “ஜனாதிபதி தேர்தலை திட்டமிட்ட காலத்துக்கு முன்னதாக நடத்துவதற்கான அரசாங்கத்தின் பிரேரணைக்கு, ஐக்கிய மக்கள் சக்தி ஆதரவளிக்கும்” என அறிவித்தார். அதேநேரத்தில், அரசாங்கம் தனது வசதிக்காக, தேர்தல் நடைமுறைகளை கையாளும் முயற்சியை விமர்சித்த அவர், இது ஜனநாயகத்தை மீறுவதாகும் என்றும் கூறினார். ஜனாதிபதியின் அல்லது அவரது ஆதரவாளர்களின் பணிப்புரையின் பேரில் மாத்திரம், ஜனாதிபதி தேர்தலை திட்டமிடுவது அடிப்படையில் பிழையானது எனவும் வலியுறுத்தினார். விரைவானதும் ஜனநாயகத் தேர்தலை உறுதி செய்வதற்காக நியாயமானதும் வெள…
-
- 0 replies
- 270 views
-
-
அரசியல் மிதவாதத்தின் நெருக்கடி எம்.எஸ்.எம். ஐயூப் / எதிரிக்கு ஆயுதம் வழங்கக் கூடாது என்பார்கள். ஆனால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன், ஓர் ஆயுதத்தை அல்ல; ஆயுதக் களஞ்சியம் ஒன்றையே, எதிரியின் கையில் கொடுத்துவிட்டார் போலும். உத்தேச புதிய அரசமைப்பு தொடர்பாக, காலியில் அண்மையில் இடம்பெற்ற கூட்டமொன்றில், அவர் உரையாற்றும் போது தெரிவித்த ஒரு கருத்தை, வடக்கில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் போட்டியாளர்கள், அவரை மட்டுமல்லாது, கூட்டமைப்பையே தாக்குவதற்காகப் பாவிக்கிறார்கள். அந்தக் கூட்டத்தின் பின்னர், யாழ்ப்பாணத்துக்குத் திரும்பிச் சென்ற சுமந்திரன், தமது காலி உரை குறித்து அளித்த விளக்கத்தை, கூட்டமைப்…
-
- 0 replies
- 573 views
-
-
அரசியல் நெருக்கடியும் தமிழர்களும் எம்.எஸ்.எம். ஐயூப் / 2018 டிசெம்பர் 12 புதன்கிழமை, மு.ப. 02:31 Comments - 0 தற்போதைய அரசியல், அரசமைப்பு நெருக்கடியால், தமிழ் அரசியலிலும் தமிழ் ஊடகத்துறையிலும் பாரியதொரு மாற்றம் ஏற்பட்டு இருப்பதை அவதானிக்க முடிகிறது. தமிழ் அரசியலும் ஊடகத்துறையும், இனப்பிரச்சினை என்ற கூண்டிலிருந்து வெளியே வந்து, தேசிய அரசியலைத் தமது பிரதான களமாக மாற்றிக் கொண்டு இருப்பதே, அந்த மாற்றமாகும். உதாரணமாக, கடந்த வெள்ளிக்கிழமை வெளியான பிரதான இரண்டு தமிழ்ப் பத்திரிகைகளில், இனப்பிரச்சினை தொடர்பான இரண்டு செய்திகள் வீதம், நான்கு செய்திகள் மட்டுமே பிரசுரமாகியிருந்தன. இந்த அரசியல் நெருக்கடிக்கு முன்னர், தமிழ்ப் பத்திரிகைகளில், தேசியச்…
-
- 0 replies
- 421 views
-
-
புதிய அரசியல் சூழ்நிலையை சரியாக பயன்படுத்த வேண்டும்! - கூட்டமைப்புக்கு ஜோன் கெரி அறிவுரை!! இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள நல்லதொரு அரசியல் சூழ்நிலையை தமிழ்த் தரப்பினர் சரியாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலமே, சுமுகமான அரசியல் தீர்வொன்றை காணமுடியும் என அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஜோன் கெரி தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கு இரண்டு நாள் அதிகாரபூர்வ பயணத்தை மேற்கொண்டு கொழும்பைச் சென்றடைந்த அமெரிக்க இராஜாங்க அமைச்சர் ஜோன் கெரி இன்று ஞாயிற்றுக்கிழமை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதிநிதிகளை கொழும்பில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்திய போதே இவ்வாறு அறிவுறுத்தியுள்ளார். கொழும்பு தாஜ் சமுத்ரா நட்சத்திர விடுதியில் இன்று காலை 9.30 மணியிலிருந்து 10.15 மணிவரை இடம்பெற்ற இந்தச் சந்த…
-
- 0 replies
- 970 views
-
-
அனுமன் வால்போல் நீளும் “பிரெக்சிற்” விலகல் ஐரோப்பிய யூனியலிருந்து பிரித்தானியா விலகுவது என்கின்ற செய்தி முடிவில்லாமல் ஊடகங்களில் தொடர்கிறது என்பது பலவிதமான கருத்துக்கள், விமர்சனங்கள், ஊகங்கள், செவ்விகள் ஆகியவற்றுக்கு களமாக அமைகின்றது. பிரித்தானியா என்பது சூரியன் அஸ்தமிக்காத சாம்ராஜ்யம் என முன்னர் புகழ்பெற்ற நாடு என்பதும், பாராளுமன்ற ஜனநாயகம், சட்ட ஆட்சி, மனித உரிமை மேம்பாடு, கைத்தொழில் செழிப்பு, வந்தோரை வரவேற்கும் நாடு எனவும் பல பெருமைகளை தன்னகத்தே கொண்டநாடு. ஏன் பிரித்தானியாவிலிருந்து விலகுதல் என்ற கொள்கை சார்ந்த விடயத்தில் முடிவில்லாமல் இழுபடுகிறது என்கின்ற வினா அரசியல் விடயங்களை பின்பற்…
-
- 0 replies
- 802 views
-
-
Published By: DIGITAL DESK 7 09 SEP, 2024 | 09:22 AM டி.பி.எஸ். ஜெயராஜ் இலங்கை தமிழர்களின் பிரதான அரசியல் கட்சி என்று கருதப்படும் இலங்கை தமிழரசு கட்சி 2024 செப்டம்பர் 21 ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய மக்கள் கூட்டணியின் ( சமகி ஜன சந்தானய ) தலைவர் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கப்போவதாக அறிவித்திருக்கிறது. செப்டெம்பர் முதலாம் திகதி வவுனியாவில் கூடிய அதன் ' மத்திய செயற்குழு ' அதற்கான தீர்மானத்தை எடுத்தது. தமிழ் பொதுவேட்பாளராக போட்டியிடும் பாக்கியசெல்வம் அரியநேத்திரனை ஆதரிப்பதில்லை என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மட்டக்களப்பு மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான அவர் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினர். சிறுபான்மைச்…
-
- 0 replies
- 354 views
- 1 follower
-
-
ஹுசைனின் உறுதியும் தமிழரசு கட்சியின் தளம்பல் போக்கும் - யதீந்திரா இந்தக் கட்டுரை எழுதப்பட்டுக் கொண்டிருக்கும்போது இலங்கையின் மீதான அமெரிக்க பிரேரணை ஐ.நா.மனித உரிமைகள் பேரவையில் வாக்கெடுப்பின்றி ஏற்றுக் கொள்ளப்பட்டிருக்கும் செய்தி வெளியாகியிருக்கிறது. இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்றுதான். ஏனெனில், மேற்படி பிரேரணையின் திருத்தப்பட்ட நகலை இலங்கை அரசாங்கம் நிராகரிக்கவில்லை. எனவே அதற்கான வாக்கெடுப்பும் அவசியமில்லாமல் போனது. 30ம் திகதி குறித்த பிரேரணை தொடர்பான விவாதங்கள் ஆரம்பித்த வேளையில் ஐக்கிய நாடுகள் சபையின் (ஐ.நா) மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் ஹூசைன் தனதுரையில் தெரிவித்திருந்த விடயங்களையே இப்பத்தி பிரதானமாக எடுத்துக் கொள்கிறது. 2014ம் ஆண்டு அமெரிக்காவினால் கொண…
-
- 0 replies
- 228 views
-
-
பெளத்த பேரினவாதத்துக்கு கடிவாளம் போடவேண்டும் உயிர்த்த ஞாயிறு தின தொடர் தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் மூலம் இரண்டு விடயங்கள் வெளிப்பட்டிருந்தன. உலக பயங்கரவாதத்தின் பிடிக்குள் இலங்கை சிக்கியிருக்கின்றது என்ற அதிர்ச்சி மிக்க அபாயகரமான உண்மை வெளிப்பட்டிருந்தது என்பது முதலாவது. இஸ்லாமிய ஜிஹாத் அடிப்படைவாதம் இலங்கைக்குள் வேரூன்றி இருக்கின்றது என்பது இரண்டாவது விடயம். இந்த பயங்கரவாதத்தில் இருந்தும் இஸ்லாமிய அடிப்படைவாதத்தில் இருந்தும் எவ்வாறு நாடு மீளப் போகின்றது என்ற கவலையான நிலைமையில் இருந்து விடுபடுவதற்காக நாடு போராடிக் கொண்டிருக்கின்றது. சமூகங்களும் வெவ்வேறு வழிகளில் இதனால் போராட வேண்டிய …
-
- 0 replies
- 529 views
-
-
-இலட்சுமணன் இன, மத, மொழி வேறுபாடுகள் அற்ற ஒரு நாட்டை, நாம் இனிமேலும் எதிர்பார்க்கவே கூடாது என்பதற்கான முடிவு ஒன்று, ஞாயிற்றுக்கிழமை கிடைக்கப் பெற்றிருக்கிறது. இதன்மூலம், தமிழர்கள் மீண்டும் ஒரு தோல்வியைத்தழுவிக் கொண்டுள்ளார்கள். இது நிரந்தரமான தோல்வியாகவும் இருக்கலாம்; இலங்கையின் வரலாறு, 70 வருட தமிழர் போராட்ட வரலாற்றையும் உள்ளடக்கியதேயாகும். இவ்வாறான சில கருத்துகளை முன்வைப்பதற்கு விருப்பமில்லை; மனம் இடங்கொடுக்கவில்லை என்றாலும், இத்தகைய யதார்த்தபூர்வமான கருத்துகளைப் பதிவு செய்தாகவேண்டும் என்ற தேவை இருக்கத்தான் செய்கின்றன. இனவாதமும் இனப்பற்றும், நாட்டை இழந்துவிடுவோம் என்ற அச்சமும் பெரும்பான்மைச் சிங்களவர்களிடம் இருப்பதன் வெளிப்பாடே, இந்த வருட ஜனாதிபதித்…
-
- 0 replies
- 418 views
-
-
சம்பூர் அனல்மின் நிலையம்: மக்களைவிட மின்சாரம் மேலானதா? – கலாநிதி. கோ. அமிர்தலிங்கம் APR 10, 2016 | 0:00by நெறியாளர்in செய்திகள் உலக நாடுகள் அனைத்தும் நிலக்கரி மூலம் பெறப்படும் மின் சக்தியிலிருந்து படிப்படியாக விடுபட்டு மீள உருவாக்கக்கூடிய சக்தி மூலங்களான சூரிய ஒளி, மற்றும் காற்று மூலம் மின்சாரம் பெறக்கூடிய பொறிமுறைகளை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. அமெரிக்கா, ஜேர்மன், சீனா போன்ற நாடுகள் நிலக்கரி அனல் மின் நிலையங்களை படிப்படியாக மூடி வருகின்றன. அண்மையில் மெக்சிக்கோ அரசாங்கம் 2.1 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டில் 1720 மெகாவாட் மின்சாரத்தினை காற்று மற்றும் சூரிய ஒளியிலிருந்து பெறுவதற்கான முதலாவது முதலீட்டு வாய்ப்பினை தனியார் துறைக்கு வழங்கியுள்ளதுட…
-
- 0 replies
- 541 views
-
-
ஐநாவில் தமிழ்த் தரப்பு பலமாக உள்ளதா? நிலாந்தன். அண்மையில் நோர்வேயில் அந்த நாட்டின் துணை வெளி விவகார அமைச்சர் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தைச் சேர்ந்தவர்கள் ஒரு பகுதினரோடு உரையாடியுள்ளார். இதன்போது அவர் இரண்டு விடயங்களைச் சுட்டிக்காட்டியுள்ளார். முதலாவது, இலங்கைதீவின் நல்லிணக்க முயற்சிகள் இப்பொழுது நோர்வே நாட்டின் முன்னுரிமை பட்டியலுக்குள் உள்ளன என்பது. இரண்டாவது, தமிழ் மக்கள் ஒருமுகமாக உலக சமூகத்தை அணுகுவதில்லை என்பது. இதில் இரண்டாவது விடயம்,அதாவது தமிழ் ஐக்கியத்தைப் பற்றிய விடயம்.அதனை நோர்வே மட்டுமல்ல, இந்தியா மட்டுமல்ல, ஐரோப்பிய சமூகம் மட்டுமல்ல,உலகில் பெரும்பாலான நாடுகளின் பிரதிநிதிகள் தமிழ் மக்களின் பிரதிநிதிகளைச் சந்திக்கும் பொழுது அல்லது தமிழ்ச் சிவில் சமூகங்களைச் …
-
- 0 replies
- 137 views
-
-
ராகுல் காந்தியால் காங்கிரசைக் காப்பாற்ற முடியுமா? மக்களவை தேர்தலுக்கு இன்னும் சுமார் 18 மாதங்கள் இருக்கும் நிலையில் காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டிருக்கும் ராகுல் காந்தியால் இப்போது பெரும் நெருக்கடியில் இருக்கும் காங்கிரசை வரும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் வலிமைப்படுத்திக் காப்பாற்றமுடியுமா?காங்கிரஸ் கட்சியே காப்பாற்றப் படவேண்டுமா என்ற கேள்வியை சிலர் கேட்கலாம். இந்தியாவில் தேர்தல் பாராளுமன்ற ஜனநாயக முறையில் எத்தனையோ சிக்கல்கள் இருந்தாலும் அதை விட சிறந்த மாற்றாக எதையும் பார்க்க இயலாத நிலையில் இன்னமும் அதன் மீதே நம்பிக்கை வைத்திருப்பவன் என்ற முறையிலேயே இந்த விஷயத்தை நான் அணுக விரும்புகிறேன். இதில் இயங்கும் கட்சிகளில் இடதுசாரி கட்சிகள் பரவலாக பலம் பெறாத சூழலி…
-
- 0 replies
- 595 views
-
-
கிழக்கு பறிபோய்விடுமென்ற சம்பந்தனின் எச்சரிக்கை வடக்கு மாகாணத்துடன் இணையாவிடின் கிழக்கு மாகாணம் விரைவில் பறிபோய் விடும் என்ற எச்சரிக்கையை பகிரங்கமாக விடுத்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் அவர்கள் அதாவது வடக்கும் கிழக்கும் இணையாது பிரிந்து செயற்படுமாயின் கிழக்கு மாகாணம் விரைவில் பறிபோய்விடும். கிழக்கு மாகாணமானது தமிழ், முஸ்லிம் மக்களுக்கு உரிமை இல்லாத நிலை ஏற்பட்டுவிடும். எனவே கிழக்கு மாகாணம் பறி போவதற்கு தமிழ், முஸ்லிம் மக்கள் உடந்தையாக இருக்கக்கூடாது. எனவே இரு மாகாணங்களும் இணைக்கப்படவேண்டியது அவசியமானது. அவசரமான தேவையுங்கூட. இந்த நிலைப்பாட்டிலேயே த.தே.கூட்டமைப்பு உள்ளது என்ற ய…
-
- 0 replies
- 436 views
-
-
காட்டுமிராண்டி பௌத்த துறவிகளின் தொடரும் வன்முறை எதிர்கொள்ளப்பட வேண்டும்! 11/16/2016 இனியொரு... மட்டக்களப்பில் தமிழ்க் கிராம சேவரைத் நடுத்தெருவில் வைத்துத் திட்டித்தீர்த்த காட்டுமிராண்டி பௌத்த பிக்கு தொடர்பான அதிர்வலைகள் இன்னும் ஓயவில்லை. இலங்கை அரசு இன்று பேசிவரும் நல்லிணக்கம் என்ற கருத்தியலின் மீதான நேரடித் தாக்குதல் நடத்தியுள்ள இந்த பௌத்த துறவி தனியாள் இல்லை. இன்றைய இலங்கையின் சிங்கள பௌத்த மனோ நிலையின் மொத்த உருவம் தான் இவர். யாழ்ப்பாணத்தில் இரண்டு மாணவர்களைக் கொலை செய்வதற்கான துணிவை வழங்கியதும், பௌத்த துறவியை பொலிஸ் முன்னிலையில் பேச வைத்ததும் சிங்கள பௌத்த மேலாதிக்க உளவியல் தான். ஆக, இப் பௌத்த துறவி நல்லிணக்கம் என்று இலங்கை அரசு கூறும் அழகான வார்த்தை சிங்கள…
-
- 0 replies
- 556 views
-
-
எரிதணல் மொஹமட் பாதுஷா இலங்கையில் வாழும் அனைத்து இனங்களைச் சேர்ந்த மக்களும் இனவாதம் என்கின்ற எரிதணலுக்கு மத்தியில் சிக்கித் தவிக்கின்றனர். இந்த எரிதணலை,ஊதிஊதிப் பெரும் தீயாக எரியச் செய்யலாம். இல்லாவிடின், நீருற்றி அணைத்து விடலாம். இதில் எதைச் செய்யப் போகின்றோம் என்பதே நமக்கு முன்னே இருக்கின்ற வினாவாகும். தற்போது நடைமுறையில் இருக்கும் முஸ்லிம் தனியார் சட்டத்தை மாற்றுவதற்கான நிர்ப்பந்தம் பற்றிஅரசாங்கம் விடுத்தஅறிவிப்பையடுத்து, முஸ்லிம் சமூகம் பாரிய உணர்வு மேலீட்டுக்கு ஆளாகியது. இந்நிலையில் கொழும்பு, புறக்கோட்டையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தின் பின்னர் தெரிவித்த கருத்தை அடிப்படையாகக் கொண்டு தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் அ…
-
- 0 replies
- 509 views
-
-
தமிழர் பிரதேசத்தில் முன்னெடுக்கப்படும் நிழல் யுத்தம்’ – மட்டு.நகரான். 61 Views கிழக்கு மாகாணத்தின் நிலைமை, அதற்காக முன்னெடுக்கப்பட வேண்டிய செயற்பாடுகள், கிழக்கு தற்போது எதிர்நோக்கும் நெருக்கடிகள், அந்த நெருக்கடிகள் எவ்வாறான வகையில் ஏற்படுத்தப்படுகின்றன போன்ற விடயங்களை நாங்கள் தொடர்ச்சியாக எழுதி வருகின்றோம். இன்று கிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், யுத்தத்திற்கு பின்னரான காலப்பகுதியில் நிழல் யுத்தம் ஒன்றை தமிழினம் எதிர்கொண்டுள்ளதாகவே பார்க்கப்பட வேண்டியதாகவுள்ளது. குறிப்பாக யுத்த காலத்தில் தமிழர்கள் எந்த விடயங்களை பாதுகாத்தார்களோ, அந்த விடயங்களை அவர்களிடம் இல்லாமல் செய்யும் வகையிலான நடவடிக்கைகளை மிகவும் திட்ட…
-
- 0 replies
- 605 views
-
-
சாதுரியமான முன்னெடுப்புக்களே உரிய தீர்வைக்காண உதவும் – செல்வரட்னம் சிறிதரன் புதிய அரசியலமைப்பு ஒன்றை உருவாக்குவதன் மூலம், இனப்பிரச்சினைக்கு ஒர் அரசியல் தீர்வைக் காண முடியுமா, எந்த வகையில் அது சாத்தியம் என்பதை பரிசீலனை செய்ய வேண்டிய நிலைமை உருவாகியிருக்கின்றது. இந்த நிiலையில் எதிரும் புதிருமாக இருந்து கொண்டு புதிய அரசியலமைப்பில் முன்கூட்டியே இணக்கப்பாடு ஒன்றை எட்டாமல் தீர்வு காண்பது சாத்தியம் என்று கூறுவதற்கில்லை. ஏனெனில், வடக்கு கிழக்கு இணைந்த தமிழர் தாயகம், …
-
- 0 replies
- 344 views
-
-
திருப்பித்தாக்க போகிறதா ஐ. நா? ரொபட் அன்டனி கடந்த இரண்டு பிரதான தேர்தல்களில் அரசாங்கம் பெற்றுக் கொண்ட மக்கள் ஆணையின் பிரகாரம் செயற்படுவதா அல்லது தென்னிலங்கையின் கடும் போக்குவாத சக்திகளுக்கு அடி பணிந்து நல்லிணக்க பொறுப்புக்கூறல் செயற்பாட்டில் முன்னேற்றத்தை ஏற்படுத்தாமல் விடுவதா என்பது தொடர்பில் அரசாங்கம் தீர்மானம் எடுக்க வேண்டிய கட்டம் வந்துள்ளது. மிகவும் காட்டமாகவே வரப்போகின்றது செய்ட் அல் ஹுசேனின் இலங்கை தொடர்பான அறிக்கை... இலங் கைக்கு இம்முறை சற்றுக் கடினமாகவே ஜெனிவா கூட்டத் தொடர் இருக்கப்போகின்றது.. கடந்த இரண்டு வருடங்களாக அரசாங்கத்துக்கு சர்வதேச சமூகமும் ஐக் கி…
-
- 0 replies
- 623 views
-
-
கும்புறுமூலை விவகாரம்: குடியை கெடுக்குமா நல்லாட்சி - முகம்மது தம்பி மரைக்கார் முரண்நகை’ என்று தமிழில் ஒரு சொல் உள்ளது. முரண்பாண்டின் மூலம் உருவாகும் நகைச்சுவை என்பது இதன் அர்த்தமாகும். ‘படிப்பது இராமாயணம்; இடிப்பது சிவன் கோயில்’ என்பதில் முரண்நகை உள்ளது. அரசியலில் முரண்நகைக்கு பஞ்சமேயில்லை. போதையற்ற நாட்டினை உருவாக்குவது, தனது இலட்சியங்களில் ஒன்றெனக் கூறும் நல்லாட்சி அரசாங்கம், மட்டக்களப்பு, கும்புறுமூலை பகுதியில் 450 கோடி ரூபாய் முதலீட்டில் மதுபான உற்பத்திசாலையொன்றினை அமைப்பதற்கு வரிச் சலுகையுடன் அனுமதியளித்துள்ளமையானது, சமகால அரசியல் முரண்நகையாகும். மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்குடா பிரதேசத்தில் உள்ளது…
-
- 0 replies
- 452 views
-
-
மாகாணத்தின் அதிகாரங்கள் பறிக்கப்படுவதற்கு எதிராக அனைவரும் அணிதிரளுங்கள்; சுரேஷ் பிறேமச்சந்திரன் 6 Views மாகாணங்களுக்கென்று குறித்தொதுக்கப்பட்ட அதிகாரங்கள் ஜனநாயக விழுமியங்களுக்கு எதிராக எதேச்சாதிகாரமாகப் பறிக்கப்படுகின்றது. இந்தப் போக்கை அனைத்து அரசியல் தலைமைகளும் ஓரணியில் நின்று எதிர்க்க வேண்டும் என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க. பிறேமச்சந்திரன் அறைகூவல் விடுத்திருக்கிறார். மாகாண பாடசாலைகளை தரம் உயர்த்தல் என்ற போர்வையில் மத்திய அரசு மாகாண பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மாற்றிவருகின்றது. இந்தப் போக்கு கண்டனத்திற்குரியதும் கண்டிக்கத்தக்கதுமாகும் என்று தெரிவித்துள்ள சுரேஷ் பிறேமச்சந்திரன் அரசின…
-
- 0 replies
- 276 views
-
-
மலையக அரசியல் பிரவேசத்துக்கான இலவச ஓடுபாதை - சி.அருள்நேசன் இலங்கை நாட்டைப் பொறுத்தவரையில் மலையகத் தமிழர்கள் 200 வருடகால வரலாற்றைக் கொண்டவர்கள். எட்டு பிரதான மாவட்டங்களில் செறிந்து வாழும் மலையக மக்கள், அதே லயன் குடிசைகளிலும் முறையற்ற சுகாதார வசதி, கல்வி வசதி, பொருளாதார பிரச்சினை, வரட்சி, வறுமை, வேலைவாய்ப்புத் திண்டாட்டம், மத்திய கிழக்கு நோக்கிய பெண்கள் பயணம், இளைஞர்களின் நகர்ப்புற மோகம் என்ற பல்வேறு சொல்லொணாத் துயரங்களை நாளுக்கு நாள் அனுபவித்து வருகின்றனர். மனிதன் மரணித்து, அவனை அடக்கம் செய்வதற்கான நிலம்கூட இல்லாத சமூகமாகவே, மலையகச் சமூகம் இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கின்றது. மலையகத்தைச…
-
- 0 replies
- 450 views
-