Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. தமிழ் அரசியலில் திட்டமிடல், தூரநோக்குக்கான தேவை என்.கே. அஷோக்பரன் http://www.twitter.com/nkashokbharan உலகத்தையே, ஏறத்தாழ ஒன்றரை வருட காலத்துக்கு மேலாக, ‘கொவிட்-19’ பெருந்தொற்று ஆட்டம் காணச் செய்துகொண்டிருக்கிறது. ‘கொவிட்-19’ இன் கோரமுகத்தை, இலங்கை எதிர்நோக்கியிருக்கும் இந்த நிலையில், இலங்கை வாழ் மக்கள், ஆரோக்கிய ரீதியான சவாலை மட்டுமல்ல, வாழ்வாதார ரீதியான சவாலையும் சந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். ‘கொவிட்-19’ வெறும் பெருந்தொற்று நோய் மட்டுமல்ல; அதன் விளைவுகள், இந்நாட்டின் உற்பத்தியையும் பொருளாதாரத்தையும் தள்ளாட்டம் காணச்செய்துள்ளது. பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பில், இலங்கை நின்று கொண்டிருக்கிறது. உணவுத் தட்டுப்பாடு ஏற்பட்டுவிடுமோ என…

  2. சுமந்திரன் சுற்றும் வாளும் அகப்படும் ஊடகங்களும் தமிழ்த் தேசிய அரசியலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு மாற்றான அரசியல் என்பது, கூட்டமைப்புக்கு எதிரான நிலையிலிருந்து, தமிழரசுக் கட்சிக்கு எதிரான நிலையாக மாறி, இன்றைக்கு அது, எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிரான அரசியலாக மாறி நிற்கின்றது. ஒரு முனையில் சுமந்திரனும் மறுமுனையில் சி.வி.விக்னேஸ்வரன், கஜேந்திரகுமார் பொன்னம்பலம், சுரேஷ் பிரேமச்சந்திரன் உள்ளிட்டவர்களும் நிற்கின்றனர். (அவர்களோடு சந்தர்ப்பத்துக்குத் தகுந்த மாதிரி, தமிழ் மக்கள் பேரவையும் சில புலம்பெயர் தரப்புகளும் இணைகின்றன) சுமந்திரனுக்கு எதிரான அரசியல் நிலைப்பாடுகளின் போக்கில், எதிர்முனையிலுள்ளவர்கள் அவ்வப…

  3. இந்திய உயர்ஸ்தானிகரின் வட, கிழக்கு விஜயம் சொல்லும் தெளிவான செய்தி! இந்தியா ஓர் இரட்டை சகோதரராக, குறிப்பாக தேவைப்படும் சகல சந்தர்ப்பங்கள் உட்பட எப்பொழுதும், இலங்கைக்கு துணை நிற்குமென்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இம்மாதத்தின் முதல் வாரத்தில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்த அவர், திருகோணமலையில் வைத்து இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தி நம்பிக்கையை மீண்டும் அளித்ததோடு, தெளிவான செய்தியையும் வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய சந்திப்புக்களும், கரிசைனகளும் இந்தியா, தமிழ் பேசும் சமூகங்கள் உட்பட ஒட்டுமொத்த இலங்கையின் மீதும் எவ்வளவு தூரம் ஆழமான கரிசைனையைக் கொண்டிருக்கின்றது என்பதை அப்பட்மாக வெளிப்படுத…

  4. மாகாணசபைத் தேர்தலும் -கிழக்கின் நிலையும் – மட்டு.நகரான் October 21, 2021 மாகாணசபைத் தேர்தல் தொடர்பான பல்வேறு அறிவிப்புகள் வெளிவந்த வண்ணமுள்ளன. தமிழர் அரசியலில் கடந்த காலத்தில் மாகாணசபை தொடர்பில் ஆர்வம் குறைந்திருந்த நிலையிலும், இன்று அந்த நிலைமை மாற்றமடைந்துள்ள முழுமையான ஆர்வத்துடன் தமிழ்த் தேசிய அரசியலில் உள்ளவர்கள் செயற்படுவதைக் காணமுடிகின்றது. மாகாணசபைத் தேர்தல் என்பது, இன்று வடகிழக்கு மாகாணத்தினைப் பொறுத்தவரையில், முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படும் சூழ்நிலைக்குச் செல்லவேண்டிய நிலையேற்பட்டுள்ளது. வடகிழக்கு இணைந்த தமிழ்த் தேசியத்தின் மிக முக்கியமான கோரிக்கையாக வடகிழக்கு இணைந்த மாகாணசபையினைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று வாய்கிழியக் கூவியவர்கள்…

  5. பெரியாரின் எழுத்துகளும் காப்புரிமையும் - அருண்மொழிவர்மன் “பெரியாரின் எழுத்துக்களை ஏன் நாட்டுடைமை ஆக்கிவில்லை? அவற்றை ஏன் பதுக்கி வேண்டும்? உண்மைகள் வெளிவந்து விடும் என்பதாலா? “ என்ற கேள்வியை நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டிருந்தார். சீமானின் திட்டமிட்ட அவதூறுகளில் ஒன்றினை அப்படியே நம்பிக் கொண்டே நண்பர் என்னிடம் கேள்வி கேட்கின்றார்; அவருக்கான தனிப்பதிலாக இல்லாமல் இந்தக் கேள்வி இருக்கக் கூடிய பலருக்குமான விளக்கமாக இதுபற்றிச் சற்றே பகிர்கின்றேன். ஒன்றைச் சொன்னால் அதை அப்படியே ஒப்பிக்காமல் சிறிதளவேனும் ஆராய்ந்து முடிவெடுத்தலே பகுத்தறிவு; அதன்படி சீமான் சொல்வதை அப்படியே நம்பாமல் தர்க்கபூர்வமாக யோசித்தால், அது உண்மை தானா என்று தேடினாலே, பகுத்து ஆராய்ந்தாலே, இப்படிச் சீமான் சொல்வ…

    • 2 replies
    • 331 views
  6. பொறுப்பு கூறலில் பொறுப்பு உள்ளவர்களின் பொறுப்பில்லாத போக்கு - காரை துர்க்கா பயங்கரவாதிகளின் கோரப் பிடியில் சிக்கி தவிக்கும் அப்பாவித் தமிழ் மக்களை மீட்டெடுக்கும் ஒரு புனித யுத்தமே நடைபெறுவதாக வன்னி, முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்துக்கு முகவுரை கொடுத்தனர் கடந்த ஆட்சியாளர்கள். பல வழிகளிலும் ஒன்று திரட்டப்பட்ட அசுர பலம் கொண்டும் பல நாடுகளது நேரடியானதும் மறைமுகமானதுமான ஒத்தழைப்புடனும் தமிழ் மக்களது இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டத்துக்கு 18.05.2009 இல் முடிவுரையும் எழுதினர் கடந்த ஆட்சியாளர்கள். ஆனால், அவ்வாறு நடைபெற்ற இறுதிப் போரில் மனித குலத்துக்கு தீங்கு இழைக்கக் கூடிய பல போர்க் குற்றங்கள் இடம் பெற்றுள்ளன என்ற குற்றச்சாட்…

  7. இலங்கை ஒற்றையாட்சியை நிலை நிறுத்தும் ஏமாற்றுவித்தைகளாக அரங்கேறும் ஒரே குப்பையில் ஊறிய மட்டைகளே இந்திய-இலங்கை ஒப்பந்தமும் 13 ஆவது திருத்தமும் தேசிய இனம் என்ற அங்கீகாரத்தைக் குறைத்து பல்லினச் சமூகங்களாக்கும் முயற்சி இலங்கை-இந்திய ஒப்பந்தம் ஈழத்தமிழர் தேசத்தின் பாரம்பரியத் தாயகமாக ஒன்றிணைந்த வடக்கு கிழக்கை நேர்த்தியாக அங்கீகரிக்கவில்லை. வடக்கு-கிழக்கு தமிழ் பேசும் மக்களின் வரலாற்று வாழிடம் என்று மட்டுப்படுத்தப்பட்ட ஒரு கோட்பாட்டையே முன்வைத்தது. கிழக்கில் மட்டும் நிரந்தர இணைப்புக்கான பொதுவாக்கெடுப்பு என்று தமிழ்த் தேசத்தின் நிலவொருமைப்பாட்டைச் சிக்கலுக்குள்ளாக்கியது. அந்த ஒப்பந்தம் 'பல்லின சமூகம்' என்ற சொற்பிரயோகத்தைக் கையாண்டிருப்பதில் ஏதோ விடயம்…

    • 0 replies
    • 330 views
  8. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் மாகாண சபைத் தேர்தலும் என்.கே. அஷோக்பரன் Twitter: @nkashokbharan அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டி, தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் முன்னாள், இன்னாள் தலைவர்கள் சிலர் கையொப்பமிட்டு, பாரதப் பிரமருக்கு கடிதமொன்றை அனுப்பியிருந்தமை அனைவரும் அறிந்ததே! இந்த முயற்சி, 13ஆம் திருத்தத்தை தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை அடைந்துகொள்வதற்கான தீர்வாக உருவகப்படுத்தப்படுவதைக் கண்டித்து, தமது எதிர்ப்பை வலுவாகத் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி முன்வைத்து வருகிறது. அண்மையில், கூட்டமொன்றில் உரையாற்றிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், “தமிழர்களுடைய தீர்வு விடயத்தில், …

  9. ஈழத் தமிழர் பிரச்சினையில் ஸ்டாலின் செய்யப்போவது என்ன? – அகிலன் 96 Views தமிழகத்தில் ஏற்பட்டுள்ள ஆட்சி மாற்றம், ஈழத் தமிழர் பிரச்சினையில் சாதகமான மாற்றங்கள் எதனையாவது ஏற்படுத்துமா? கடந்த ஒருவார காலமாக எழுப்பப்படும் பிரதான கேள்விகளில் ஒன்றாக இது இருக்கின்ற போதிலும், இவ்விடயத்தில் நம்பிக்கையை ஏற்படுத்தக்கூடிய சமிஞ்ஞைகள் எதனையும் இதுவரையில் காண முடியவில்லை. உலகத் தமிழர்கள் அனைவரும் கடந்த வாரத்தில் நுணுக்கமாக அவதானித்த விடயமாக இருந்தது, தமிழகத்தில் இடம்பெற்ற ஆட்சி மாற்றம்தான். ஜெயலலிதாவில் தொடங்கி எடப்பாடியில் முடிவடைந்த அ.தி.மு.க. ஆட்சி பத்து வருடங்களை நிறைவு செய்திருக்கும் நிலையில், ஆட்சிமாற்றம் எதிர் பார்க்கப்பட்ட ஒன்…

  10. பாகிஸ்தானின் கொள்கை மீறல் - ஜனகன் முத்துக்குமார் சவூதி அரேபியாவுக்கு சுமார் 1,000 இராணுவப் படையினரை அனுப்புவதற்கு பாகிஸ்தான் அண்மையில் முடிவெடுத்திருக்கின்றமை, யேமன் தொடர்பில் பாகிஸ்தான் நாடாளுமன்றம், 2015ஆம் ஆண்டில் யேமன் தொடர்பில் நிறைவேற்றிய தீர்மானத்தை மீறியதான ஒரு செயற்பாடு என்பதற்கு அப்பால், இது மத்திய கிழக்கைப் பொறுத்தவரை அதன் இரண்டு பிரதான பிராந்தியப் போட்டியாளர்களான சவூதி அரேபியா, ஈரான் ஆகிய நாடுகளுக்கு இடையேயான முரண்பாடுகளுக்கு நடுவே நடுநிலையான நிலைமையைப் பேணுதல் தொடர்பில் கடைப்பிடித்திருந்த தொடர்ச்சியான கொள்கையை விட்டு விலகும் செயலாகவே பார்க்கப்படுகின்றது. குறித்த நடுநிலையைப் பேணும் கொள்கையானது, வெ…

  11. இந்தியாவும் தெற்காசிய புவிசார் அரசியலும்! தெற்காசியாவின் புவிசார் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் இந்தியாவின் முக்கியத்துவம் அவசியமானதாக கருதப்படுகிறது. அதிகரித்து வரும் பிராந்திய கொந்தளிப்புக்கு மத்தியில், இந்தியாவுக்கு கடினமான பணி உள்ளது. அதன் பொருளாதார அடிப்படைகள் வலுவாக இருப்பதையும், அது தொடர்ந்து மேல்நோக்கி வளர்ச்சிப் பாதையில் செல்வதையும் முதலில் உறுதி செய்ய வேண்டும். தெற்காசியா எப்போதும் ஒரு கொந்தளிப்பான பகுதியாக இருந்து வருகிறது. உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினருக்கு இடையே, மற்றும் அரசுகளுக்கு இடையேயான போட்டிகளுடன் கூடிய ஒரு பிராந்தியமாக இது இருக்கிறது. இந்த பிராந்தியத்தில் அரசியல் மற்றும் பொருளாதார சவால்கள் மற்றும் அந்நிய சக்திகளின் தலையீடுகள்…

  12. தமிழர் வரலாற்றில் ஏமாற்றங்கள் லக்ஸ்மன் மாற்றங்கள், தமிழர் வரலாற்றில் மறக்கப்பட முடியாத, மாற்றப்பட முடியாத ஒன்றாகவே இருந்து வருகிறது. அது நம்மவர்களாலும் நண்பர்களாலும், எதிரிகளாலும் கூட நிகழ்த்தப்பட்டிருக்கிறது. நமது முயலுமைகள் பயனற்றுப் போதல் என்பதும், எதிர்பாராமலே நம் எதிர்பார்ப்புகள் நிகழாமல் போதலும், நிகழாமலாக்கப்படுவதும் இந்த ஏமாற்றங்களுக்குள் அடக்கம். இலங்கையில் தமிழ் மக்களுக்கெதிராக முன்னெடுக்கப்பட்ட பெரும்பான்மையினரின் நெருக்குதல் நடவடிக்கைகளால் உருவானதே இனப்பிரச்சினையாகும். அதனைக்கூட, இந்த நாட்டுக்குள் அவ்வாறு ஒரு பிரச்சினையுமில்லை என்று சொல்லும் தலைவரே நமது நாட்டில் இருக்கிறார். இதற்கு குறிப்பிட்டளவு தமிழர்களும் உடந்தை. வரலாற்றுக் காலம்தொட்டு ஏம…

  13. தமிழ் அரசியலின் இன்றைய பிளவு நிலமைகள்: (உள் நோக்கிய பார்வை) May 29, 2021 — வி. சிவலிங்கம் — இன்று இலங்கை அரசியலில் ஏற்பட்டு வரும் மாற்றங்களை அவதானிக்கும்போது மிகவும் ஆபத்தான ஓர் எதிர்காலம் உருவாகி வருவதை பலரும் உணர்வர். குறிப்பாக சிங்கள மக்கள் மத்தியில் ஏற்பட்டு வரும் சமூக மற்றும் அரசியல் மாற்றங்கள் அதனை உணர்த்துவதாகவே உள்ளன. கடந்த நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக நாட்டில் நிலவி வரும் திறந்த நவ தாராளவாத பொருளாதாரமும், செயற்பாட்டிலுள்ள நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி ஆட்சி முறையும் நாட்டின் பாதையை மாற்றி அமைத்து வருகின்றன. இந்த நாற்பது ஆண்டுகளில் சுமார் முப்பது ஆண்டுகள் நாடு உள்நாட்டுப் போரிற்குள்ளும் சிக்கியிருந்தமையால் சிங்கள சமூகத்திற்குள் மிகவும் கா…

  14. http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2016-11-20#page-5 வடக்கு மக்கள் தொடர்ந்தும் பாதிக்கபடுகின்றனர் // சி.வி. விக்னேஸ்வரன்

  15. ஐரோப்பிய ஒன்றியத்தின் சீனா மீதான தடையும் கொழும்பு போட்சிற்றிச் சட்டமும் –சீனாவில் முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்கள் தொடர்பாக அதிகளவு அக்கறையை வெளிப்படுத்தியது போன்று. சீனாவின் ஆதிக்கத்துக்கு உட்பட்டிருக்கின்ற இலங்கைத் தீவில் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலை மறுக்கப்படுகின்றமை இந்த நாடுகளுக்குத் தெரியாதா?– -அ.நிக்ஸன்- 2004 ஆம் ஆண்டு பாக்கிஸ்…

    • 1 reply
    • 330 views
  16. கிழக்கு: மேய்ச்சல் தரை அத்துமீறல் -இல. அதிரன் அரசியல் என்பது, நடுநிலைமையும் பொதுப்படையும் கொண்டதாக அமையப்பெற்றிருக்க வேண்டும். அது ஒருதலைப்பட்சமாக, பக்கச்சார்பாக முடிவுகள் எடுக்கப்படுகின்றபோது, திட்டங்கள் கொண்டு வரப்படும் பொழுது, முரண்பாடுகள் தோற்றம் பெறுகின்றன. இதற்கு நல்லதோர் உதாரணமே கிழக்கின் மேய்ச்சல்தரை அத்துமீறல்கள். மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைப்பகுதியான மயிலத்தமடு, மாதவணை பிரதேசத்தில் தொடரும் பண்ணையாளர்களுக்கெதிரான செயற்பாடுகளைத் தடுப்புக்குரிய முயற்சிகளும், கவனயீர்ப்பு போராட்டங்களும் எதிர்ப்பு நடவடிக்கைகளும் நடைபெற்றுக் கொண்டே இருக்க அத்துமீறல்களும் தொடர்…

  17. கேள்விக்குள்ளாகும் அரசியல் நேர்மை "போரில் பங்­கேற்ற படை­யினர் மீது சட்ட நட­வ­டிக்­கைகள் எடுக்­கப்­படக்கூடாது என்­பதும் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­னவின் நிலைப்­பாடாக உள்­ளது. அதனால் தான், போரில் ஈடு­பட்ட கடற்­படைத் தள­ப­தி­களை விசா­ர­ணைக்­காக அழைக்­கப்­பட்­டதை நான் விரும்­ப­வில்லை என்று அவர் வெளிப்­ப­டை­யாக கூறி­ யி­ருக்­கிறார். இதி­லி­ருந்தே, படை­யி­னரை எந்த சட்ட நட­வ­டிக்­கை­க­ளுக்கும் உட்­ப­டுத்தக் கூடாது என்­பதே அவ­ரது மனோ­நி­லை­யாக இருக்கிறது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள முடியும். " பாது­காப்பு அமைச்சில் கடந்­த­வாரம் நடந்த நிகழ்வில் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன நிகழ்த்­திய உரை, அவ­ரது அர­சியல் நேர்­மைக்குப் பலத்த சவா­லையும், சர்…

  18. "விலைபோகும் நீதி" "விலைபோகும் நீதி முல்லைத்தீவில் புரியுது தலையாட்ட மறுத்தவனுக்கு பயமுறுத்தல் வேறு! கொலைக்குப் பயந்து நாட்டையே துறந்தான் அலையாத மனமும் திரையில் மறைந்தது!" "அடங்காத வெறியர்களின் ஆட்டத்தை நிறுத்த அறிவாகத் தர்மத்தை எடுத்து உரைத்தானே! அளவாகச் சட்டத்தை நேர்மையாகப் பாவித்தவனுக்கு அசிங்கமான பேச்சே பரிசாகக் கிடைத்ததே!" "புத்தநாடு இதுவென பெருமையாகக் கூறுபவனே புத்தன் போதித்த கொள்கை தெரியுமா? புகழ்மிக்க எங்கள் இலங்கை நாட்டை புற்று நோயாய் மகாவம்சம் கெடுக்குதே!" [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாண…

  19.  அலெப்போவும் சர்வதேச சமூகத்தின் ‘தோல்வியும்’ - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா சிரியாவின் அலெப்போவில் நடக்கும் பேரழிவை, உலகம் புறக்கணித்துக் கொண்டிருக்கிறது என்பது தான், உலக முஸ்லிம்களில் கணிசமானோரினதும் உலக மக்களில் சர்வதேச விவகாரங்கள் பற்றிய அக்கறை கொண்டோரினதும் குரலாக, அண்மைய சில வாரங்களாக இருந்து வந்தன. இவ்வாறு கவலைப்பட்டோருக்கு நிம்மதியளிப்பது போன்று, சிரியாவின் மிகப்பெரிய நகரமான அலெப்போவில், அந்நாட்டின் ஜனாதிபதி பஷார் அல்-அசாட்டுக்கு எதிராகப் போராடிவரும் போராளிகள், தங்களது பின்னடைவை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நீண்ட இழுபறிக்குப் பின்னர், போராளிகளின் கட்டுப்…

  20. சீனாவுடனான போர்ப்பயிற்சியை இலங்கை மறைக்க முனைவது ஏன்? கடந்த மாத இறுதியில் சீன - இலங்கைப் படையினருக்கு இடையில் ஆரம்பிக்கப்பட்ட போர்ப்பயிற்சிக்கு, சீனா வைத்திருக்கும் பெயர் பட்டுப்பாதை ஒது்துழைப்பு 2015 என்பதாகும். சீனா தனது கனவுத் திட்டமான பட்டுப்பாதை திட்டத்தை செயற்படுத்துவதற்கு பெருமளவு வளங்களை ஒதுக்கி பல்வேறு நாடுகளையும் தன்பக்கம் திருப்பி வருகிறது. அது முற்றிலும் வணிக நோக்கம் கொண்ட திட்டம் என்றே சீனாவினால் கூறப்பட்டு வந்தாலும், அதன் பின்னால் மிகப்பெரிய இராணுவ ஆதிக்க நோக்கம் ஒழிந்து கிட்டப்பதாக பொதுவான விமர்சனங்கள் உள்ளன. இலங்கையும் இந்த கடல்சார் பட்டுப்பாதை திட்டத்தில் இணைந்து கொள்ள முன்னைய ஆட்சிக்காலத்தில் ஒப்புதல் வழங்கியிருந்தது. ஆனால் புதிய ஆட்சி அமைந்த பின…

  21. பாரம்பரியங்களும் சட்டங்களும் எதிர்காலமும் இந்திய வரலாற்றில் மாத்திரமல்ல, அண்மைக்கால உலக வரலாற்றிலும், மிக முக்கியமான தீர்ப்பொன்றை, இந்திய உச்ச நீதிமன்றம், நேற்று முன்தினம் வழங்கியிருக்கிறது. ‘முத்தலாக்’ என்று அழைக்கப்படுகின்ற விவாகரத்து முறை, இந்திய அரசமைப்புக்கு முரணானது எனவும், அந்நடைமுறையைத் தடை செய்வதாகவும், அந்நீதிமன்றம் அறிவித்தது. இது, மிகவும் முக்கியமான தீர்ப்பாக அமைந்தது. அதைவிட, எதிர்காலத்தில் பல முக்கியமான தீர்ப்புகளுக்கான முன்னோடியாகவும் கூட, இது அமையக்கூடும். இதனால்தான், இது பற்றியும் இதைப் போன்ற வேறு சில விடயங்கள் பற்றியும் ஆராய வேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது. ‘முத்தலாக்’ என்ப…

  22. பேரினவாதமும் காக்கிச் சட்டையும் உரசினால்தான் தமிழ்த் தலைமைகளின் இரத்தம் கொதிக்குமோ? – நடராஜா குருபரன்... 28 ஏப்ரல் 2015 யாழில் தற்போது வாள் வெட்டுடன் கூடிய வன்முறைக் கலாச்சாரம் அதிகரித்துக் கொண்டே செல்கின்றது.; இரவானதும் ஊருக்கு ஊர் கத்திகளோடு, கட்டுக்கடங்காத காளைகள் திரியத் தொடங்கி விடுகின்றனர். அந்த நேரம் யார் கண்ணில் தென்படுகின்றார்களோ அவர்களை வெட்டிச் சாய்ப்பதுவே இவர்களது வேலையாகிப் போகிறது என்கின்றனர் கிராம மக்கள்.யாழ்.பல்கலைக்கழகத்தில் கல்வி கற்கும் இரண்டாம் வருட கலைப்பீட மாணவர்கள் 9 பேரை நேற்று முன்தினம் இனந்தெரியாத சில குண்டர்கள் சுதுமலை சந்தியில் வைத்து வெட்டியும், போத்தல் மற்றும் கொட்டன்களாலும் சரமாரியாகத் தாக்கியும் உள்ளனர். வெட்டப்பட்ட மாணவன் ஒர…

  23. வடக்குக் கிழக்கில் பட்டிப் பொங்கல் எப்படிக் கொண்டாடப்பட்டது? நிலாந்தன். இம்முறை வடக்குக் கிழக்கில் பட்டிப் பொங்கல் ஒரு போராட்டமாக முன்னெடுக்கப்பட்டது.கிழக்கில் விவசாயிகள்,பெண்கள்,பண்ணையாளர்கள் அரசியல்வாதிகள், செயல்பாட்டாளர்கள் ஆகியோர் இணைந்து தலைகளில் பொங்கல் பானையை வைத்துக்கொண்டு ஊர்வலமாகப் போனார்கள். தமிழரசுக்ககட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அங்கே காணப்பட்டார்கள். மேச்சல் தரையை சிங்கள விவசாயிகள் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கும் ஒரு பின்னணியில்; நாட்டு மாடுகள் சுட்டும் வெட்டியும் வெங்காய வெடி வைக்கும் கொல்லப்படும் ஒரு பின்னணியில்; நாட்டு மாடுகளை சுருக்குத் தடம் போட்டு பிடித்து செல்பவர்கள் யார் என்று தெரிந்திருந்தும் போலீசார் மற்றும் அரச அதிகாரிகள் அவர்களைத் த…

  24. விக்கினேஸ்வரனின் ‘தமிழ் மக்கள் கூட்டணி’ தமிழ் தேசிய அரசியலில் ஒரு புதிய திருப்புமுனையை ஏற்படுத்துமா? யதீந்திரா பலரும் நீண்டகாலமாக எதிர்பார்த்த ஒரு விடயம் கடந்த 24ம் திகதி நிகழ்ந்திருக்கிறது. விக்கினேஸ்வரன் தனது அடுத்தகட்ட அரசியல் பயணம் தொடர்பில் தெளிவான அறிவிப்பை செய்திருக்கிறார். இதுவரை அவர் பக்கத்தில் nளிவானதொரு பதிலில்லாமல் இருந்தது. இது தொடர்பில் பலரும் குறைபட்டுக் கொண்டிருந்தனர். இந்தப் பத்தியாளரும் பல்வேறு சந்தர்பங்களில் இது தொடர்பில் வலியுறுத்தி வந்திருக்கிறார். ஆனால் அந்த பிரச்சினை இப்போது தீர்ந்துவிட்டது. விக்கினேஸ்வரன் தனது கட்சியின் பெயர் – தமிழ் மக்கள் கூட்டணி என்று அறிவித்திருக்கிறார். தமிழ் தேசிய அரசியல் வரலாற்றில் காலத்துக்கு காலம் பல அரசியல்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.