அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
இலங்கையில் ஊடகவியலாளரால் கடைப்பிடிக்கப்படும் சுயதணிக்கை இன்று உலக பத்திரிகைச் சுதந்திர தினம் - நடராஜன் ஹரன் உலகின் பல நாடுகளிலே சமூக உறுதிப்பாட்டையும் விட பத்திரிகைச் சுதந்திரம் கூடுதல் முக்கியத்துவம் வாய்ந்ததாக நோக்கப்படுகிறது. பத்திரிகைகளின் பணி மிகவும் பொறுப்பு வாய்ந்ததாகும். ஏனென்றால், கோடான கோடி மக்களைச் சென்றடையக் கூடியவையாக இருப்பதால் பத்திரிகைகள் உண்மை நிலையை உருமாற்றம் செய்யக்கூடிய சக்தி கொண்டவையாக விளங்குகின்றன. 1991 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐக்கிய நாடுகள் கல்வி, விஞ்ஞான, கலாசார நிறுவனத்தின் (யூனெஸ்கோ) பொதுமாநாட்டின் 26 ஆவது கூட்டத்தொடரில் செய்யப்பட்ட விதப்புரையைத் தொடர்ந்து, வருடம்தோறும் …
-
- 0 replies
- 409 views
-
-
நான்கு சகோதாரர்கள் எப்படி ஒரு தீவை பலவீனப்படுத்தினார்கள் bloomberg தமிழில்- தினக்குரல் கடந்த இரண்டு வருடங்களில் இலங்கையின் முதல்குடும்பம் தானே உருவாக்கிய பல நெருக்கடிகளிற்கு தலைமைதாங்குகின்றது 22 மில்லியன் மக்களை கொண்ட இலங்கைத் தீவு அதன் வரலாற்றில் மிகமோசமான பொருளாதார குழப்பநிலையை எதிர்கொள்கின்றது. மோசமான அறுவடைக்கு வழிவகுத்துள்ள உரத் தடைகள் முதல் இலங்கையின் முதல் குடும்பம் அந்நியசெலாவணி நெருக்கடியை கையாள்வதில் தோல்வியை சந்தித்துள்ளதால் நாடு பாரிய மனிதாபிமான நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. ஜனாதிபதி கோத்தபாய ராஜபக்ச தீர்வுகள் எதுவுமில்லாத நிலையில் காணப்படு…
-
- 0 replies
- 431 views
-
-
ஏன் அரசியல்வாதி ஆகிறார் மைத்திரி? “அரசியல்வாதி என்பவன், அடுத்த தேர்தலைப் பற்றி நினைக்கிறான். நாட்டின் தலைவன் என்பவன், அடுத்த தலைமுறையைப் பற்றி நினைக்கிறான்” என்ற, ஐக்கிய அமெரிக்க எழுத்தாளரான ஜேம்ஸ் ஃபிறீமான் கிளார்க்கின், மிகப்பிரபலமான மேற்கோள் வசனத்தை, பல தடவைகள் வாசித்திருக்கிறோம். அதன் பொருளும், எவ்வளவுக்கு ஆழமானது என்பதையும் நான் பார்த்திருக்கிறோம். வெறுமனே சில்லறைத்தனமான அரசியல் நன்மைகளுக்காக, இந்நாட்டில் மேற்கொள்ளப்பட்ட மிக மோசமான நடவடிக்கைகள் காரணமாக, நாடே பல பிரிவுகளாகப் பிளவுபட்டு, அந்தப் பிளவுகளை இன்னமும் இணைக்க முடியாமலிருப்பதையும் நாங்கள் பார்த்துக் கொண்டிருக்கிறோம். போருக்குப் பின்னரான இலங்…
-
- 0 replies
- 552 views
-
-
நம்பிக்கையில்லாப் பிரேரனை என்ன நடக்கப் போகிறது? பிரதமருக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷ கடந்த புதன்கிழமை சபாநாயகரிடம் கையளித்த நிலையில் இலங்கை அரசியலின் போக்கு ஒரு பரபரப்பான திசையை நோக்கி நகர்ந்திருப்பது ஜெனிவா பரபரப்பை விட வேகமுடையதாக மாறியுள்ளது. பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை பாராளு மன்றில் சமர்ப்பிக்கப்படுமா? அது தோற்கடிக்கப்படுமா என்றெல்லாம் பேசப்பட்டும் சந்தேகம் தெரிவிக்கப்பட்ட நிலையில் கடந்த புதன்கிழமை பிரதமர் மற்றும் அரசாங்கத்துக்கெதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவின் கையி…
-
- 0 replies
- 574 views
-
-
மாற்றத்திற்குள்ளாகும் இந்திய அணுகுமுறைகள் By DIGITAL DESK 2 13 NOV, 2022 | 02:48 PM (சி.அ.யோதிலிங்கம்) இந்தியாவிற்கும், இலங்கைக்குமான உறவுகள் மீண்டும் இறுகத்தொடங்கியுள்ளன. இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவைச் சந்திப்பதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி தயக்கம் காட்டியே வருகின்றார். இந்தியாவிற்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கடும் முயற்சிகளைச் செய்தபோதும் அது கைகூடவில்லை. இதுவிடயத்தில் ஜனாதிபதியின் ஆலோசகா் சாகல ரத்நாயக்காவை இரசகியமாக புதுடில்லிக்கு இலங்கை ஜனாதிபதி ரணில் அனுப்பி வைத்தார். அதுவும் வெற்றியளிக்கவில்லை. சாகல ரத்நாயக்காவினால் இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் வினய்மோகன் குவாத்ராவையும் உயரதிகார…
-
- 0 replies
- 247 views
- 1 follower
-
-
ஆட்சிமாற்றமும் தமிழ் மக்களும் - நிலாந்தன் சிங்கள வாக்காளர்களுக்கு வாக்களிக்கப்பட்ட மாற்றம் படிப்படியாக வரத் தொடங்கிவிட்டது. அது உடனடியானதாகவும், தூலமானதாகவும் தொட்டுணரக் கூடியதாகவும் அதிகம் காட்சிமயப்படுத்தப்பட்டதாவும் காணப்படுகிறது. பொது எதிரணியின் நூறு நாள் திட்டம் எனப்படுவது நடைமுறையில் ராஜபக்சாக்களை மீண்டும் தலையெடுக்க முடியாதபடி தோற்கடிப்பதாகவே காணப்படுகின்றது. அதை அவர்கள் இரண்டு தடங்களில் முன்னெடுக்கின்றார்கள். முதலாவது, சம்பள உயர்வு, விலைக்குறைப்பு, பாதைகள் திறப்பு என்பவற்றின் மூலம் படித்த நடுத்தர வர்க்கத்தையும் கீழ் நடுத்தர வர்க்கத்தையும் ஓரளவுக்கு வறிய சிங்கள மக்களையும் கவர முற்படுகின்றார்கள். வரப்போகும் பொதுத் தேர்தலை நோக்கிய ஒரு தயாரிப்பே இது. இது …
-
- 0 replies
- 428 views
-
-
வெடுக்குநாறி மலையும் வெள்ளை ஈயும்! - நிலாந்தன் வெடுக்குநாறி மலை விவகாரம் பெரும்பாலான தமிழ்த் தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை ஒன்றுபடுத்தியிருக்கிறது. கடந்த 15 ஆண்டுகளாகத் தமிழ்க் கட்சிகளை ஒன்றுபடுத்துவது எதிர்த் தரப்புத்தான். சிவ பூசையில் கைது செய்யப்பட்டவர்களை விடுவிப்பதற்கான போராட்டக் களத்தில் எல்லாக் கட்சிகளும் ஒன்றாக நின்றன. பரவாயில்லை. குறைந்தது ஒரு விவகாரத்தை மையமாகக் கொண்டாவது கட்சிகள் அவ்வாறு ஒன்றாகத் திரள்வது நல்லது. ஆனால் இந்த விவகார மைய ஐக்கியம் மட்டும் தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டப் போதாது. தமிழ் மக்களை ஒரு தேசமாகத் திரட்டுவது என்ற அடிப்படையில் கட்சிகள் ஒன்றிணையும் போதுதான் கடந்த 15 ஆண்டு காலத் தேக்கத்தில் இருந்து விடுபடலாம். அல்லது அவ்வாறு க…
-
- 0 replies
- 683 views
-
-
அமெரிக்கா, இந்தியா கூறிய மாற்றம் என்பதை நம்பி 2015 ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்த மக்களின் நிலை- அரசியல் குழப்பத்திற்குக் காரணம் 19 ஆவது திருத்தம்- மைத்திரி நிலைமாறுகால நீதியின் நிலை? மீண்டும் மகிந்த ராஜபக்சவோடு உறவைப் பேணிவரும் சர்வதேசம் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியைக் கவிழ்த்துவிட்டால் இலங்கையில் அனைத்துப் பிரச்சினைகளும் தீர்ந்துவிடும். இனப்பிரச்சினைக்கும் தீர்வைக்காணலாம் என்ற நம்பிக்கைளை மக்கள் மத்தியில் விதைத்தே 2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் எட்டாம் திகதி ஆட்சி மாற்றம் என்ற பெயரில் மைத்திரி- ரணில் அரசாங்கம் உருவாக்கப்பட்டது. அமெரிக்கா உள்ளிட்ட மேற்குலகமும், இந்தியா போன்ற நாடுகளும்…
-
- 0 replies
- 846 views
-
-
ரணிலுக்கு எதிரான மூன்றாவது உட்கட்சிக் கிளர்ச்சி எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 செப்டெம்பர் 18 புதன்கிழமை, மு.ப. 11:28 ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பாக, ஐக்கிய தேசிய கட்சிக்குள் உருவாகியிருக்கும் சர்ச்சை, மிகவும் மோசமான நிலையை அடைந்து உள்ளதாகவே தெரிகின்றது. ‘தாமே கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக வேண்டும் என்பதில், ஐ.தே.க பிரதித் தலைவர் சஜித் பிரேமதாஸ உறுதியாக இருக்கிறார். அதேவேளை, அவருக்கு அதற்கு இடமளிப்பதில்லை என்பதில், கட்சித் தலைவரும் பிரதமருமான ரணில் விக்கிரமசிங்கவும் உறுதியாக இருக்கிறார். இதற்கு முன்னர் ஒருபோதும் இல்லாதவாறு, சஜித்துக்கு ஆதரவாகக் கட்சித் தலைமையை எதிர்த்துக் குரல் கொடுக்கக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களும் அமைச்சர்களும் முன்வ…
-
- 0 replies
- 537 views
-
-
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல் ஈழத் தமிழர் இறைமையை நிலைநிறுத்த சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்க வேண்டும்- ஆய்வாளர் ஜோதிலிங்கம் மேற்குலகத்துடனான உரையாடல்கள் அவசியம். எனவே பகிஸ்கரிப்பு சாத்தியமற்றதென்றும் கூறுகிறார் இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் ஈழத் தமிழ் மக்கள் எப்படியான நிலைப்பாட்டை முன்னெடுக்க வேண்டுமெனச் சிவில் சமூக அமைப்புகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. பொது வேட்பாளர் விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதில் பல்வேறு இடர்கள், தடைகளை எதிர்கொண்ட சிவில் சமூக அமைப்புகள், தற்போது சுயமாகப் போட்டியிடும் சிவாஜிலிங்கத்தை ஒரு குறீயீடாக மாத்திரமே கருதி அவருக்கு வாக்கள…
-
- 0 replies
- 306 views
-
-
தமிழ் அரசுக் கட்சியும் ஆள்பிடி அரசியலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும், பலம் வாய்ந்த கட்சியான இலங்கை தமிழ் அரசுக் கட்சி, மஹிந்த ராஜபக்ஷவின் பாணியில், பிற கட்சிகளை நசுக்க முனைகிறது என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டிருக்கிறது. அண்மையில், நாடாளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன், தமிழ் அரசுக் கட்சியில் இணைந்து கொண்டதையடுத்தே, இந்தக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டு வருகிறது. வடக்கு மாகாணசபைத் தேர்தலில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில், அதன் பங்காளிக் கட்சியான ஈ.பி.ஆர்.எல்.எபவினால், அரசியலுக்குக் கொண்டு வரப்பட்டவர் தான் இப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன். மாகாணசபை உறுப்பினராக இருந்த அவரை, கடந்த ஆண்டு நாட…
-
- 0 replies
- 470 views
-
-
தமிழ்த் தேசியப் பேரவை: பத்தாண்டு காலத் தவறுகளில் இருந்து கற்றுக்கொள்வது? - நிலாந்தன் புதிய உள்ளூராட்சி சபைகளை உருவாக்கும் விடயத்தில் தமிழ்க் கட்சிகளுக்கு இடையே நிகழும் போட்டா போட்டிகளும் உள்ளூராட்சி சபைகளை ஒரு கட்சி கைப்பற்றிய பின் கட்சிகளின் விசுவாசிகள் சமூக வலைத்தளங்களில் மோதிக் கொள்ளும் காட்சிகளும் ஒரு விடயத்தைத் தெளிவாகக் காட்டுகின்றன. நடப்பது கட்சிகளுக்கு இடையிலான போட்டிதான். அதாவது தேர்தல்மைய அரசியல் தான். இதில் தேசத்தைத் திரட்டும் அரசியல் அல்லது தேசத்தைக் கட்டியெழுப்பும் அரசியல் எங்கே இருக்கிறது? தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைமையிலான தமிழ்த் தேசியப் பேரவை ஒப்பீட்டளவில் அதைச் செய்யலாம். அதற்கு மூன்று காரணங்களைக் கூறலாம். முதலாவது காரணம், அது ஒப்பீட்டளவ…
-
- 0 replies
- 164 views
-
-
12 Oct, 2025 | 09:26 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையின் வெளியுறவுக் கொள்கையானது, தற்போது அரசாங்கத்திற்குள்ளேயே ஒரு தீவிரமான உள்நாட்டுப் போராட்டத்தை ஏற்படுத்தியுள்ளது. அரசாங்கத்தில் உயர்மட்டத்தில் ஏற்பட்டுள்ள கொள்கை ரீதியான முரண்பாடுகள் வெளியுறவுக் கொள்கையிலும் தாக்கம் செலுத்தியுள்ளன. குறிப்பாக மேற்குலக சார்பு நிலையில் ஒரு தரப்பும், மார்க்சிசம் அல்லது சோசலிச சீன சார்பு கொள்கையில் மற்றொரு தரப்பும் ஆளும் கட்சிக்குள் செயல்படுகின்றமையானது, நாட்டின் வெளியுறவுக் கொள்கையை நிலையான போக்கில் முன்னெடுப்பதற்கு சவால்களை ஏற்படுத்துகின்றன. எந்தவொரு நாட்டுடனும் முரண்பாடுகளை ஏற்படுத்திக்கொள்ளாது இலங்கையின் பொருளாதார நலன்களை கருத்தில் கொண்டு ஜனாதிபதி அநுரகுமர திசநாயக்க மற்றும் பிரதமர் ஹரிண…
-
- 0 replies
- 169 views
- 1 follower
-
-
இலங்கை ஒற்றையாட்சியின் நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவது குறித்து இலங்கை சுயாதீன ஆணைக்குழுவுக்கு அரசாங்கம் கடும் அழுத்தம்- பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் படை அதிகாரிகள் கூட்டத்திற்கு அழைக்கப்பட்டிருப்பதாகவும் குற்றச்சாட்டு இலங்கைச் சுயாதீனத் தேர்தல் ஆணைக்குழுவுக்கு இலங்கை ஒற்றையாட்சி அரசு கடும் அழுத்தங்களைக் கொடுத்து நாடாளுமன்றத் தேர்தலை நடத்துவதற்கு முற்படுவதாக சுயாதீனத் தேர்தல்கள் ஆணைக்குழு உறுப்பினர்களில் ஒருவரான பேராசிரியர் ரட்ணஜீவன் கூல் குற்றம் சுமத்தியுள்ளார். தேர்தலை நடத்துவதா இல்லையா என்பது தொடர்பான கலலந்துரையாடல்களுக்கு உரிய முறையில் அழைப்பு விடுக்கப்படவில்லை என்றும் ஆணைக்குழுவின் தலைவ…
-
- 0 replies
- 383 views
-
-
ராஜபக்ஷகளின் தேர்தலுக்கான அவசரம்; ஆபத்தின் வாசலில் மக்கள் -புருஜோத்தமன் தங்கமயில் கொரோனா வைரஸ் தொற்று அச்சுறுத்தல், எதிர்பா -ர்க்கப்பட்ட அளவையும் தாண்டி நீடித்து வரும் நிலையில், ராஜபக்ஷக்களின் பொதுத் தேர்தலுக்கான அவசரம், நாட்டைப் பல்வேறு வழிகளிலும் நெருக்கடிக்குள் தள்ளிக் கொண்டிருக்கின்றது. மக்களின் உயிர்ப் பாதுகாப்பு, வாழ்வாதாரப் பிரச்சினைகள் தொடங்கி, அரசமைப்பு சிக்கல்கள் வரை, நாளுக்கு நாள் மேலெழுந்து வருகின்றன. இலகுவாகத் தீர்வு காணக்கூடிய பிரச்சினைகளைக்கூட, ராஜபக்ஷக்கள் தேர்தலை இலக்கு வைத்துக் கையாள முனைவது, பிரச்சினைகளின் அளவை அதிகரிக்கவே செய்திருக்கின்றது. அது, கொள்ளை நோயைக் காட்டிலும் நீண்டகால நோக்கில், பாதிப்பை ஏற்படுத்தும் சாத்தியக் கூறுகளைக் காண…
-
- 0 replies
- 574 views
-
-
தானாகவே பொறியில் சிக்கிய கருணா அம்மான் பல காலமாக, எவராலும் கண்டுகொள்ளப்படாத ஒருவராக இருந்த முன்னாள் பிரதியமைச்சர் கருணா எனப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன், ஒரே நாளில் தலைப்புச் செய்திகளில் இடம்பெறும் அளவுக்குப் போய்விட்டார். அவர், மீண்டும் செய்தியின் மய்யப் பொருளாக மாறியதற்குக் காரணம், விடுதலைப் புலிகள் காலத்தைப் பற்றி அவர் வெளியிட்ட ஒரு கருத்துதான். ஆனையிறவில் ஒரே இரவில் 2,000 - 3,000 படையினரைக் கொன்றதாகத் தற்புகழ் தேடிக்கொள்ள முயன்ற விவகாரமே, அவருக்கு எதிராக எழுந்துள்ள விமர்சனங்கள், சர்ச்சைகளுக்குக் காரணம். இங்கு கருணா வெளியிட்ட தகவல்களும் தவறு; அதனை நியாயப்படுத்தி அவர் கூறுகின்ற கருத்துகளும் தவறு. அதுபோல, அவருக்கு எதிராக முன்வைக்கப்படும் கருத்துகளிலும் …
-
- 0 replies
- 442 views
-
-
அரசியலில் பொய்கள் ? - யதீந்திரா சர்வதேச அரசியல் உரையாடல்களில், உலகளவில் கவனிக்கப்படும் அறிஞர்களில் ஒருவரான ஜோன் மியஷைமர், சர்வதேச அரசியலில் தலைவர்கள் எவ்வாறு பொய் கூறுகின்றனர் என்பதை விபரிக்கும் வகையில் ஒரு நூலை எழுதியிருந்தார். அந்த நூலின் பெயர் தலைவர்கள் ஏன் பொய் சொல்லுகின்றனர் : சர்வதேச அரசியலில் பொய்கள் பற்றிய உண்மை (Why leaders lie : the truth about lying in international politics) இந்த நூல் பிரதானமாக அமெரிக்க தலைவர்களை அடிப்படையாகக் கொண்டே விடயங்களை ஆராய்கின்றது. ஆனால் இந்த நூலின் உள்ளடக்கம் அனைத்து நாட்டுச் சூழலுக்கும் பொருந்தக் கூடியது. அவர் பொய்களை வகைப்படுத்தியிருக்கின்றார். அதவாது நாட்டின் நலன்களுக்காக கூறப்படும் பொய்களும் இருக்கின்றன. வெறும் சுயநலன்களுக்கா…
-
- 0 replies
- 385 views
-
-
தந்தை செல்வா, தலைவர் பிரபாகரன் ஆகியோரின் தொடர்ச்சியா விக்னேஸ்வரன்? வடக்கு மாகாண முதலமைச்சராக சி.வி.விக்னேஸ்வரன் பதவியேற்று, கடந்த ஏழாம் திகதியோடு மூன்றாண்டுகள் கடந்து விட்டன. ‘ஓய்வுபெற்ற நீதியரசர்’ என்கிற நிலையில் கொழும்பை மையமாகக் கொண்ட தமிழ் மேட்டுக்குடியினரால் முன்னிலையில் வைத்து கௌரவமளிக்கப்பட்டு வந்த விக்னேஸ்வரன், வடக்கு - கிழக்கினை பிரதானப்படுத்தும் தமிழ்த் தேசிய அரசியல் அரங்கிற்குள் இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்டோரின் பெரும் ஆதரவோடு அழைத்து வரப்பட்டார். வடக்கு மாகாண சபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராக விக்னேஸ்வரன் அறிவிக்கப்படும் வரையில், அவர் யாரென்பது வடக்கு மக்களுக்கு அவ்வளவாகத் தெரியாது. ஆனாலும், கூ…
-
- 0 replies
- 467 views
-
-
911 இன் இரகசிய வரலாறு http://www.youtube.com/watch?v=mhtzWcaZx5A http://www.youtube.com/watch?v=s1ZHUl_PT2M
-
- 0 replies
- 814 views
-
-
தேசிய அடையாளமின்றி அரசியல் விபரீதங்களை சந்திக்கும் “இந்தியத் தமிழர்கள்” - மு.சிவலிங்கம் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் 2011 ம் ஆண்டு குடிசனத் தொகை மதிப்பீடு பற்றி விமர்சிக்கப்பட்ட இரண்டு ஆய்வு கட்டுரைகளை கடந்த சில வாரங்களில் வெளியான தேசிய பத்திரிக்கைகளில் வாசிப்பதற்கு வாய்ப்பு கிடைத்தது. அவை பற்றிய எனது கருத்துக்கள் சிலவற்றைப் பகிர்ந்து கொள்வதற்கு இக் கட்டுரையை எழுதுகின்றேன். ஓன்று, ஜனவரி மாதம் 13 ம் திகதி வெளிவந்த “சன்டே லீடர் பத்திரிக்கையில் “Up country Tamils, The Vanishing people?” என்ற கட்டுரையாகும். இந்த கட்டுரை புது டெல்லியில் செயற்படும் Observer Research Foundation (ORF) என்ற நிறுவனத்தின் பணிப்பாளர் என்.சத்தியமூர்த்தி அவர்களால் எழுதப்பட்டுள்ளது. இக் கட்டு…
-
- 0 replies
- 686 views
-
-
புத்தரின் பிறந்தநாளைக் கொண்டாடுவோம் !: A.P.G சரத்சந்திர (சிங்கள மொழியிலிருந்து..) அன்றைய காலத்திலிருந்தே உலகத்தில் யுத்தங்கள் நடந்திருக்கின்றன. யுத்தத்தின் இயல்பே குரூரமானது. எனினும் முன்னையவர்கள் ஒழுக்க மேம்பாடுகளுக்கமையவே யுத்தம் செய்தார்கள். ஒழுக்க மேம்பாடுகளுக்கமைய யுத்தம் செய்வது பற்றி கற்றுத் தரும் மகாபாரதம் போன்ற மகா காவியங்கள் அக் காலத்தில் எழுதப்பட்டன. இராமன், இராவணன் யுத்தமானது இராமாயணம் எழுதப்படக் காரணமானது. மகா அலெக்ஸாண்டர் அரசருக்கும் கூட யுத்த களத்தின் கௌரவங்கள், ஒழுக்க மேம்பாடுகள் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. அதனால் அவரும் தோல்வியுற்ற எதிரிகளை மிகவும் கௌரவத்துடன் நடத்தினார் என்று சொல்லப்படுகிறது. எங்களது எல்லாள, துட்டகைமுனு யுத்தம் கூட மிகவும் நீதமா…
-
- 0 replies
- 789 views
-
-
இராஜதந்திர ஜனநாயகப் போராட்டத்தின் அவசியம் – பி.மாணிக்கவாசகம் 19 Views ஜெனிவாவில் உருவாகி வருகின்ற நெருக்கடிகளுக்கு உறுதியோடு முகம் கொடுப்பதற்கான ஆயத்தங்களில் அரசு ஈடுபட்டிருக்கின்றது. அதனை பகீரதப் பிரயத்தனம் என்று கூட குறிப்பிடலாம். ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் ‘கோர் குறூப்’ என குறிப்பிடப்படுகின்ற முக்கிய உறுப்பு நாடுகள் இலங்கைக்கு எதிராக கடுமையானதொரு தீர்மானத்தைக் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டிருப்பதாக வெளியாகிய அறிக்கையொன்றையடுத்து அரசு இந்தியாவின் உதவியை நாடியுள்ளதாகத் தெரிகின்றது. அதற்கான அவசர கோரிக்கைக் கடிதம் ஒன்று இந்திய அரசாங்கத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. …
-
- 0 replies
- 366 views
-
-
முழு அடைப்புப் போராட்டம் : உணர்வுகளின் பிரதிபலிப்பு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உற வுகள் விடுத்த அழைப்பின் பேரில்- தமிழ், முஸ்லிம் அரசியல் கட்சிகள், பொது அமைப்புகளால் ஆதரிக்கப்பட்ட முழு அடைப்புப் போராட்டம் கடந்த வாரம் வடக்கு, கிழக்கின் பெரும்பாலான பகுதிகளை முற்றாகவே செயலிழக்கச் செய்திருக்கிறது. போர் முடிவுக்கு வந்த பின்னர், வடக்கு, கிழக்கில் நடத்தப்பட்டிருக்கின்ற மிகப்பெரிய ஓர் அரச எதிர்ப்பு செயற்பாடாக இந்த முழு அடைப்பு போராட்டம் இடம்பெற்றிருக்கிறது. மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் பதவிக்கு வந்த பின்னர், இதுபோன்ற ஓரிரண்டு போராட்டங்கள் தமிழ்ப் பகுதிகளில் இடம்பெற்றிருக்கின்ற போதிலு…
-
- 0 replies
- 615 views
-
-
போரில் வாழ்வை தொலைத்தவர்களும் தொலையாத போர் வடுக்களும் - காரை துர்க்கா இலங்கையில் நடைபெற்ற மூன்று தசாப்த காலத்துக்கு மேற்பட்ட, தமிழ் மக்களது விடுதலைக்கான ஆயுதப் போராட்டம், 2009 மே மாதத்துடன் முள்ளிவாய்க்காலில் மௌனம் கண்டது. போரில் தமிழ் மக்கள் சந்தித்த, மேலும் அதன் தொடர்ச்சியாக தற்போதும் அனுபவிக்கின்ற வேதனைகள், வார்த்தைகளில் வடிக்க முடியாதவை; பெரும் கறைகள் படிந்தவை. கொடிய யுத்தத்தில் தம் வாழ்க்கைத் துணையை இழந்தவர்கள் வாழ்வை இழந்தவர்களாகவே, நடைப்பிணங்களாக நம் தேசத்தில் ஊசலாடுகின்றனர்; உலாவருகின்றார்கள். வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஆயுத மோதலால் தமது கணவனைப் பறிகொடுத்த, ஆயிரக்கணக்கான அப்பாவித் தமிழ்ப் பெண்கள் அன்றாட வாழ்வாத…
-
- 0 replies
- 456 views
-
-
சர்வ கட்சி மாநாடு ஒரு நாடகமா? நிலாந்தன். March 27, 2022 சர்வகட்சி மாநாடு எனப்படுவது வளர்ச்சியடைந்த ஜனநாயகங்களில் ஒரு உன்னதமான பயில்வு. முழு நாடும் கட்சி பேதங்களைக் கடந்து தேசியப் பிரக்ஞையோடு ஒன்றிணைந்து முடிவை எடுக்கும் நோக்கத்தோடு சர்வகட்சி மாநாடு கூட்டப்படுவதுண்டு. ஆளுங்கட்சி,எதிர்க்கட்சி சிறிய கட்சி ,பெரிய கட்சி என்ற பேதமின்றி நாட்டில் உள்ள அனைத்து கட்சிகளும் இணைந்து ஒரு பொது முடிவை எட்டுவதற்கான ஒரு மகத்தான ஜனநாயக நடைமுறைதான் சர்வகட்சி மாநாடு ஆகும். ஆனால் இலங்கைத் தீவில் சர்வகட்சி மாநாடு எனப்படுவது அவ்வாறான உன்னதமான ஒரு பயிலுகை அல்ல. இலங்கைத்தீவின் மோசமான அரசியல் கலாச்சாரத்தை பொறுத்தவரை, சர்வகட்சி மாநாடு எனப்படுவது ஒரு தப்பி…
-
- 0 replies
- 696 views
-