அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9213 topics in this forum
-
மாவீரர் தினத்தை முன்னிறுத்திய தரப்படுத்தலும் கருத்தியலும் மேடைப் பேச்சுகளும் கடந்த பத்து ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு, இம்முறை மாவீரர் துயிலும் இல்லங்களை நோக்கிப் பெருவாரியாக மக்கள் திரண்டார்கள். வடக்கு - கிழக்கிலுள்ள 30க்கும் அதிகமான மாவீரர் துயிலும் இல்லங்களில், அஞ்சலிச் சுடர் ஏற்றப்பட்டது. கடந்த காலத்தில் மாவீரர் துயிலும் இல்லங்களை இராணுவம் உருத்தெரியாமல் இடித்து, அழித்த போதும், அந்தச் சிதைவுகளை ஒன்றாக்கி, மாவீரர்களின் அர்ப்பணிப்பை, ஆகுதியின் பெரும் வடிவமாக மக்கள் மாற்றிக் காட்டினார்கள். அலுவலகங்களுக்குள் மட்டும், மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்திய, அரசியல் கட்சியினரும் அமைப்புகளும் கூட, மக்களோடு மக்கள…
-
- 0 replies
- 309 views
-
-
அரசாங்கம் எதிர்நோக்கும் நெருக்கடி முன்னைய ஆட்சியில் முஸ்லிம் மக்களுக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து வன்செயல்களில் ஈடுபட்டிருந்த பௌத்தவாத கடும்போக்காளர்களின் மதவாதச் செயற்பாடுகளை இந்த அரசாங்கமும் ஊக்குவிக்கின்றதோ என்று சந்தேகப்படும் அளவில் பொதுபல சேனா அமைப்பின் செயற்பாடுகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. அந்த அமைப்பைப் பின்பற்றி வேறு சுமணரத்ன தேரர் போன்ற சில பௌத்த மதகுருமார்களும் மதவாதச் செயற்பாடுகளில் ஈடுபடுவதை அரசாங்கம் கண்டு கொள்ளாமல் இருப்பது முஸ்லிம் மக்களை அதிருப்தியடையவும், ஆத்திரமடையவும் செய்திருக்கின்றது. இதனால் முஸ்லிம் மக்களும் இந்த அரசாங்கத்தைச் சந்தேகத்தோடு நோக்…
-
- 0 replies
- 308 views
-
-
தமிழ் மக்கள்... 21ஆவது திருத்தத்தில், தொங்கிக் கொண்டிருக்கலாமா? -நிலாந்தன்!- மிருகக்காட்சி சாலைகளில் உள்ள மிருகங்களுக்கு உணவு கொடுக்க முடியாத அளவுக்கு நாட்டின் பொருளாதார நெருக்கடி மோசமாகி வருகிறது. மிருகங்களுக்கு உணவு வழங்க முடியாத ஓர் அரசாங்கம் மனிதர்களை எப்படி பாதுகாக்கப் போகின்றது ? தொடரும் உணவுத் தட்டுப்பாடு காரணமாக சிறுவர்கள் மத்தியில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருவதாக கொழும்பு ‘லேடி ரிட்ஜ்வே’ சிறுவர் மருத்துவமனையின் குழந்தைகள் நல மருத்துவர் தீபால் பெரேரா கவலை வெளியிட்டுள்ளார்.அண்மை நாட்களில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 53 குழந்தைகளில் 11 பேருக்கு ஊட்டச்சத்து குறைபாடு உள்ளது என்றும், அவர்களில் நால்வருக்கு கடுமையான ஊட்டச்சத்துக் குறைபாட்டின் அறிகுறி…
-
- 1 reply
- 308 views
- 1 follower
-
-
அரசியல் கட்சிகளின் உத்திகளுக்குள் அமிழும் உள்ளூராட்சி உள்ளூராட்சி சபைத் தேர்தல் - 2018 அறிவிக்கப்பட்டு, பெப்ரவரி மாதம் 10ஆம்திகதி வாக்கெடுப்பு நடைபெறவிருக்கும் நிலையில், தேர்தல்த் திருகுதாளங்களும் திருவிழாக்களும் களைகட்டத் தொடங்கிவிட்டன. அனைத்து உள்ளூராட்சி சபைகளுக்குமான தேர்தல்களும் ஒரே தடவையில் நடத்தப்பட வேண்டும் என்ற அடிப்படையில், சட்டங்களை மாற்றுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, அதனடிப்படையில் இம்முறை தேர்தல் நடைபெறுகிறது. இம்முறை நடைபெறவிருக்கும் தேர்தலில் வேட்பாளர் பட்டியலில், 25 சதவீதம் பெண்களுக்கான ஒதுக்கீட்டின் அடிப்படையில் நடைபெறுவது முக்கியமானதாகும். இன்னொரு முக்க…
-
- 0 replies
- 308 views
-
-
மாகாண சபைத் தேர்தல் எப்போது நடைபெறும்? – அகிலன் 51 Views மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எப்போது நடத்தப்படும்? எந்த முறையில் இந்தத் தேர்தல்கள் நடத்தப்படும்? கொழும்பு அரசியலில் இப்போது பிரதான கேள்விகளாக இருப்பவை இவைதான். ஜெனிவா கூட்டத் தொடரின் பின்னர் இவை குறித்த கேள்விகள் பலமாக எழுப்பப்படுவதற்கு பல காரணங்கள் உள்ளன. மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட வேண்டும் என அந்தத் தீர்மானத்திலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனைவிட, சிறீலங்கா அரசாங்கமும் இது தொடர்பில் சர்வதேசத்துக்கும், இந்தியாவுக்கும் உறுதிமொழிகளை வழங்கியிருந்தது. ஆனால், மாகாண சபைகளுக்கான தேர்தல்கள் எப்போது நடைபெறும் என்பது கேள்விக்குறியாக்கப்பட்டிருக…
-
- 0 replies
- 308 views
-
-
மாற்றுத் தலைமை ஒன்றிற்கான சந்தர்ப்பம் தவறவிடப்படுமா? யதீந்திரா மாற்றுத் தலைமை தொடர்பில் ஆரம்பத்தில் இருந்த உற்சாகத்தை இப்போது காணமுடியவில்லை. அது தொடர்பான உரையாடல்களும் பெருமளவிற்கு கழுதை தேய்ந்து கட்டெறுப்பான கதையாக சுருங்கிக்கொண்டு செல்கிறது. இது தொடர்பில் அதிகம் எழுதப்பட்டுவிட்டது. அதிகம் விவாதிக்கப்பட்;டுவிட்டது. ஆயினும் விடயத்தில் எந்தவொரு முன்னேற்றமும் இல்லை. இவ்வாறானதொரு பின்புலத்தில்தான் வடக்கு மாகாணத்தின் முன்னைநாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான விக்கினேஸ்வரன், அகில இலங்கை தமிழ் காங்கிரசின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திற்கு கடிதம் ஒன்றை எழுதியதான செய்தியொன்று வெளியாகியிருக்கிறது. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் பத்திரிகை…
-
- 0 replies
- 308 views
-
-
மக்கள் எழுச்சிக்குப் பின் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அரசியல்
-
- 0 replies
- 308 views
-
-
எரிபொருள் விலைக்குள் அரசியல் மோதல் நாட்டின் பல பகுதிகளிலும் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, மண்சரிவு உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களுக்கு மத்தியிலும், அரசியல் சண்டைகள் மாத்திரம் ஓயவில்லை. குறிப்பாக, எரிபொருள் விலையை அதிகரிப்பதற்கு அரசாங்கம் மேற்கொண்ட முடிவைத் தொடர்ந்து, பல்வேறுபட்ட கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. எரிபொருள் விலை அதிகரிப்பென்பது, சாதாரண மக்களைப் பலமாகப் பாதித்திருக்கிறது என்பதைப் புரிந்துகொள்ளக்கூடியதாக இருக்கிறது. பஸ் கட்டணத்திலிருந்து சோற்றுப் பொதியின் விலையிலிருந்து, பல பொருட்களினதும் சேவைகளினதும் விலைகள் அதிகரித்திருக்கின்றன. எரிபொருளுக்கான வரியை நீக்கி, எரிபொருளின் விலை நீக்கப்படுமென …
-
- 0 replies
- 308 views
-
-
மோடி- புட்டின் சந்திப்பும் பிபின் ராவத்தின் மரணமும் –விபத்தில் சிக்கிய கெலிகொபட்டர் ரஷியாவில உற்பத்தி செய்யப்பட்டது. Mi-17V5 கெலிகாப்டர்கள் ஏனைய வல்லரசு நாடுகளிலும் பயன்படுத்தப்படுகின்றன. இந்திய ஊடகங்கள் கெலிகொப்படரின் தரத்தை கேள்விக்குட்படுத்தாமல், காலநிலை மற்றும் விமானியின் செயற்பாட்டுத் தவறுகளே அதாவது மனிதக் காரணிகளையே விபத்துக்குப் பிரதான காரணம் என்ற வாதத்தை முன்வைக்கின்றன— -அ.நிக்ஸன்- உத்தராகண்ட் மாநிலத்தில் இருக்கும் பௌடி என்ற பிரதேசத்தில் 1958 ஆம் ஆண்டு பிறந்த பிபின் லக்ஸ்மன் சிங் ராவத் (Bipin Laxman Singh Rawat) 1958ஆம் மார்ச் மாதம் 16ஆம் தேதி பிறந்தார். இந்தியாவின் முதல் முப்…
-
- 0 replies
- 308 views
-
-
தமிழ், முஸ்லிம், மலையகச் சமூகங்களுக்குள் ஏற்பட்டிருக்கும் தோல்வி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் அரச ஆதரவைக் கொண்டிருக்கும் முஸ்லிம், மலையகக் கட்சிகளும் நெருக்கடிக்குள்ளாகியுள்ளன. அரசாங்கத்தின் போதாமைகளைச் சுட்டிக்காட்ட முடியாமலும் தாமதமான அல்லது பாராமுகமான நடவடிக்கைகளை எதிர்க்க முடியாமலும் தத்தளிக்கும் இரண்டும் கெட்டான் நெருக்கடி நிலைக்குள், இவை இன்று தள்ளப்பட்டிருக்கின்றன. அதாவது ‘உள்ளே இருக்கவும் முடியாது, வெளியேறிச் செல்லவும் முடியாது” என்ற பெரும் பொறிக்குள் சிக்கியிருக்கின்றன. இந்த நிலையானது, ஒரு வகையில் இந்தக் கட்சிகளுக்கும் தமிழ், முஸ்…
-
- 0 replies
- 308 views
-
-
வாக்காளருக்கு அபராதம் அவசியம் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியரி ஜீ.எல்.பீரிஸ் தவிசாளராக இருந்தாலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இயங்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது, வேட்பாளராக நிறுத்துவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு, பின்னர் அந்த வாய்ப்பு வழங்கப்படாத ஒருவர், விம்மி அழும் காட்சியை, கடந்த வாரம் தொலைக்காட்சியில் காணக் கூடியதாக இருந்தது. அதேபோல், தமது கட்சி, தமக்குத் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்காததை எதிர்த்து, ‘சத்தியாக்கிரகம்’ செய்ய முற்பட்ட ஒரு பெண்ணை வாக்கு மூலம் பெறுவதற்கென, பொலிஸார் அழைத்துச் செல்லும் காட்சியும் மற்றொரு செய்தியின் போது காணக்கூ…
-
- 0 replies
- 308 views
-
-
முள்ளிவாய்க்கால் ஆறாம் ஆண்டு நினைவு: ஒரு தேசமாக எம்மை வலுப்படுத்துவதற்கு என்ன செய்துள்ளோம்? முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து ஆறு ஆண்டுகள் ஆகிப் போயின. தமிழீழ நடைமுறை அரசு, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தலைவர் பிரபாகரன் உட்பட தளபதிகள், ஆயிரக்கணக்கான போராளிகள், பல்லாயிரக்கணக்கான மக்கள், தமிழர்களின் நிறுவனங்கள் என 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலப்பகுதியில் நாம் இழந்தவை சொல்லில் வடிக்க முடியாத பெருந்துயர் தருபவை. ஆறு ஆண்டுகளின் முன்னர் நிகழ்ந்தவைகளை இப்போது நினைத்துப் பார்த்தாலே இதயம் வெடித்து விடுவது போன்ற பெரும் வலி எம்முள் ஏற்படும். தலைவர் பிரபாகரன் உட்பட தமது இன்னுயிரை ஈகம் செய்த தளபதிகள், போராளிகள் பொதுமக்கள் அனைவருக்கும் பொங்குதமிழ் இத்தருணத்…
-
- 0 replies
- 308 views
-
-
கஜேந்திரகுமாரின் தோல்வி கொள்கை நிலைப்பாட்டின் தோல்வியா? சர்வேந்திரா படம் | TAMIL DIPLOMAT நடைபெற்று முடிவடைந்த நாடாளுமன்றத் தேர்தல் தொடர்பாக தேர்தலுக்கு முன்னர் வெளியாகியிருந்த எனது கட்டுரையில் தேர்தலின் பின் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தடம் புறளாமல் பாதுகாப்பதற்கு கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ்த் தேசிய மக்கள் முன்னணிக்கு மக்கள் பிரதிநிதித்துவம் கிடைப்பது துணை புரியும் என்ற கருத்தினை வெளிப்படுத்தியிருந்தேன். தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் ஒரு ஆசனத்தையாவது வெற்றி கொள்ளும் எனப் பொதுவாக எதிர்பார்க்கப்பட்ட போதும் அது நடைபெறவில்லை. இதனை கஜேந்திரகுமார் முன்வைக்கும் கொள்கையின் தோல்வியாக வியாக்கியானப்படுத்துவோரும் உள்ளனர். தமிழ்த…
-
- 2 replies
- 307 views
-
-
’13க்கு ஆதரவாகவும் எதிராகவும்’! - நிலாந்தன். 13வது திருத்தம் எனப்படுவது தமிழ் இயக்கங்களின் ஆயுதப் போராட்டத்தின் விளைவு. அதாவது தமிழ் மக்கள் சிந்திய ரத்தத்தின் விளைவே அது. இந்திய இலங்கை உடன்படிக்கைக்கு பின்னர் ஏற்பட்ட முரண்பாடுகளின் திரட்டப்பட்ட விளைவாக விடுதலைப் புலிகள் இயக்கம் 13வது திருத்தத்தை ஏற்றுக்கொள்ள மறுத்து அதற்கு எதிராக இரத்தம் சிந்தியது. அதேசமயம் 13ஆவது திருத்தத்தை ஆதரித்து ஈபிஆர்எல்எஃப் இயக்கமும் ஏனைய இயக்கங்களும் ரத்தம் சிந்தின. மொத்தத்தில் 13ஐ உருவாக்குவதற்காகவும் ஈழத்தமிழர்கள் இரத்தம் சிந்தினார்கள். 13ஐ ஆதரிப்பதற்காகவும் இரத்தம் சிந்தினார்கள். எதிர்ப்பதற்காகவும் ரத்தம் சிந்தினார்கள். ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து பன்னிரண்டு ஆண்டுகளின் பின்னரு…
-
- 0 replies
- 307 views
-
-
வடக்கை இரையாக்கும் 'போதைப்பொருள்' : 23 வயது இளைஞனின் சாட்சியம் - நேரடி ரிப்போர்ட் By NANTHINI 19 OCT, 2022 | 09:27 PM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையின் வடக்கு மாகாணம் உள்நாட்டு போரின்போது இழந்தவை ஏராளம். ஆனால், அதனை விட பன்மடங்கு இழப்புகளை போரற்ற இன்றைய சூழலில் வட மாகாணம் இழந்து வருகிறது. சமூக ஆர்வலர்களின் கண்களுக்கு இவை மறைந்து கிடக்கின்றமை கவலையளிக்கின்றது. 'போதைப்பொருள்' முழு வடக்கையும் ஆக்கிரமித்துள்ளது. இதனால் அடுத்த சந்ததியினரை இழக்கும் நிலையில் இந்த மாகாணம் உள்ளது. பிள்ளைகளை போதைப்பொருளில் இருந்து பாதுகாக்க முடியாமல், எத்தனையோ தாய்மார்கள் கண்ணீர் விடுகின்றனர். மறுபுறம் போதைக்கு அடிமையான தன…
-
- 0 replies
- 307 views
- 1 follower
-
-
ஈழம் பெற்றுத் தருவதாக வலம்வரப் போகின்றார்கள் நாட்டின் சகல உள்ளூராட்சி மன்றங்களுக்குமான தேர்தல், எதிர்வரும் பெப்ரவரி மாதம் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன. ஆகவே நாடு, இன்னொரு தேர்தல் திருவிழாவைக் கொண்டாத் தயாராகிறது. இந்நாட்களில் இருந்து பெப்ரவரி மாதத் தேர்தல் திகதி வரையிலான இரண்டு மாதங்கள், அரசியல்வாதிகள் மக்களை நோக்கிப் படை எடுக்க, அணி திரளப் போகின்றார்கள். மக்களை “நேசிக்க”த் தொடங்கப் போகின்றனர். தெற்கில், மைத்திரி எதிர் பலப்பரீட்சை களமாக உள்ளூராட்சித் தேர்தல் அமையப் போகின்றது. அதற்கிடையில் ஐக்கிய தேசியக் கட்சியும் தனித்துப் போட்டியிட்டு, தன் பலத்தை நிரூபிக்க வேண்டிய தேவைப்பாட்டில் உள்ளது…
-
- 0 replies
- 307 views
-
-
இலங்கை மற்றும் இந்திய ஆளும் உயரடுக்குகள் வறுமையில் வாடும் மீனவ சமூகங்களுக்கு இடையே தேசிய பகைமையை தூண்டுகின்றன Naveen Dewage wsws டிசம்பர் 18, 19 மற்றும் 20 ஆகிய தேதிகளில், இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்ததாகக் கூறி 68 இந்திய மீனவர்களை இலங்கைக் கடற்படை கைது செய்ததுடன், அவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்தது. சமீபத்திய மாதங்களில் தீவிரப்படுத்தப்பட்ட கடற்படை ரோந்துகளின் ஒரு பகுதியாக இந்த கைதுகள் நடந்துள்ளன. கைதுசெய்யப்பட்ட இந்திய மீனவர்…
-
- 1 reply
- 307 views
-
-
இறுதி யுத்தகாலத்தில் – பலர் காணாமல்போனவேளை- பொலிஸ்மா அதிபராக பதவி வகித்தவரை காணாமல்போனவர்கள் அலுவலகத்திற்கு நியமிப்பதா? மனித உரிமை அமைப்புகள் பாதிக்கப்பட்டவர்கள் கடும் எதிர்ப்பு இலங்கையில் யுத்தம் இடம்பெற்ற காலத்தில் பொலிஸ்மா அதிபராக பதவி வகித்தவரை காணாமல்போனவர்கள் அலுவலகத்தின் உறுப்பினராக அரசாங்கம் நியமித்துள்ளமை குறித்து மனித உரிமை அமைப்புகளும் பாதிக்கப்பட்டவர்களும் கடும் விமர்சனத்தை முன்வைத்துள்ளனர். இலங்கையில் யுத்தகாலத்தில் ஆயிரக்கணக்கானவர்கள் பலவந்தமாக காணாமல்போகச்செய்யப்பட்டமை குறித்து விசாரணைகளை மேற்கொள்வதற்காகவும் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் குடும்பத்தவர்களிற்கு இழப்பீட்டை வழங்குவதற்காகவும் உருவாக்கப்பட்ட நிலைமாற்று நீதி பொறிமுற…
-
- 0 replies
- 307 views
-
-
எட்டாக்கனியாக மாறும் பாதிக்கப்பட்டோருக்கான நீதி ரொபட் அன்டனி பொறுப்புக்கூறல் பொறி முறை என்பது மிகவும் உணர்வுபூர்வமான மற்றும் மிக இலகுவில் தீப்பற் றிக்கொள்ளக் கூடிய விவகாரமான ஒரு விடயம் என்பதை நாம் அனைவரும் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த விடயத்தை மிகவும் கவனமாகவும் பொறுப் புடனுமே அனைத்து தரப்பினரும் அணுக வேண்டும். இந்த விடயம் தீப்பற்றிக்கொண்டால் அரசாங்கத்தின் இருப் புக்கே பாதகத்தை ஏற்ப டுத்தும் என்பதை புரிந் துகொண்டே இந்த விட யத்தை நாங்கள் அணுகவேண்டும் "தம்பி.. அரசியலமைப்பு வரைபைக்காட்டி பொறுப்புக்கூறல் செயற்பாட்டை இல்லாமல் செய்யும் செயற்பாட்டையே முன்னெடுக்கிறாங்கள், போற…
-
- 0 replies
- 307 views
-
-
13ஆவது திருத்தமும் தமிழ் அரசியல் சமூகமும் – ஒரு யதார்த்த அணுகுமுறை Samakalam February 21 http://www.samakalam.com/wp-content/uploads/2022/02/856.jpeg – கலாநிதி நிர்மலா சந்திரகாசன் இன்றைய தமிழ் அரசியல் பரப்பில் முக்கிய பேசுபொருளாக மாறியுள்ள விவகாரம் இலங்கை அரசியல் யாப்பில் கொண்டுவரப்பட்ட 13வது திருத்தம் பயனுள்ளதா, பயனற்றதா என்பதும், அதன் விளைவாக ஏற்படுத்தப்பட்ட மாகாணசபை அரசு முறைமை உண்மையிலேயே தமிழ் பேசும் மக்களுக்கு அதிகாரத்தை பகிர்ந்தளிக்கும் தன்மையை கொண்டதா, இல்லையேல் உள்ளக சுயநிர்ணய அடிப்படையில் அடையக்கூடிய கணிசமான அதிகார பகிர்வை தடுத்து நிறுத்தும் ஒரு பயனற்ற நிறுவனமாக இருக்கின்றதா? என்பதுமாகும். …
-
- 0 replies
- 307 views
-
-
நன்றி - யூரூப்
-
- 0 replies
- 307 views
-
-
இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தல் ஈழத் தமிழர் இறைமையை நிலைநிறுத்த சிவாஜிலிங்கத்துக்கு வாக்களிக்க வேண்டும்- ஆய்வாளர் ஜோதிலிங்கம் மேற்குலகத்துடனான உரையாடல்கள் அவசியம். எனவே பகிஸ்கரிப்பு சாத்தியமற்றதென்றும் கூறுகிறார் இலங்கை ஒற்றையாட்சி அரசின் ஜனாதிபதித் தேர்தலில் ஈழத் தமிழ் மக்கள் எப்படியான நிலைப்பாட்டை முன்னெடுக்க வேண்டுமெனச் சிவில் சமூக அமைப்புகள் தீவிரமாக ஆலோசித்து வருகின்றன. பொது வேட்பாளர் விடயத்தில் தமிழ் அரசியல் கட்சிகளின் ஆதரவைப் பெறுவதில் பல்வேறு இடர்கள், தடைகளை எதிர்கொண்ட சிவில் சமூக அமைப்புகள், தற்போது சுயமாகப் போட்டியிடும் சிவாஜிலிங்கத்தை ஒரு குறீயீடாக மாத்திரமே கருதி அவருக்கு வாக்கள…
-
- 0 replies
- 307 views
-
-
ராஜபக்ஷர்களின் எதிர்கால அரசியல் வியூகங்கள் Veeragathy Thanabalasingham on May 25, 2023 Photo, AFP, THE HINDU மூன்றரை வருடங்களுக்கு முன்னர் ராஜபக்ஷர்கள் மீண்டும் பதவிக்கு வந்தபோது இலங்கையின் ஆட்சியதிகாரத்தில் இருந்து தங்களது குடும்பத்தை நீண்ட காலத்துக்கு அசைக்கமுடியாது என்று அவர்களுக்கு ஒரு நம்பிக்கை இருந்தது. அவர்களின் அதிவிசுவாசிகள் குறைந்தது ஒரு இருபது வருடங்களுக்காவது தங்களது அரசியல் எசமான்கள் ஆட்சியில் இருப்பார்கள் என்று பேசினார்கள். தங்களில் யார் யார் அடுத்தடுத்து ஜனாதிபதியாக வருவது என்று ராஜபக்ஷர்கள் ஒரு பட்டியல் போட்டு செயற்பட்டார்கள். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவைப் பொறுத்தவரை மூத்த மகன் நாமல் ரா…
-
- 0 replies
- 307 views
-
-
ஊழல், இலஞ்ச முறைகேடுகளை அகற்றுவதில் தேசிய மக்கள் சக்தியால் எவ்வளவு தூரம் செல்ல முடியும்? கந்தையா அருந்தவபாலன் ஊழல், இலஞ்சம் போன்ற சொற்களை நாம் கருத்து வேறுபாடின்றி பொதுவாகப் பயன்படுத்தினாலும் இரண்டும் ஒன்றல்ல. ஒருவரின் தீர்மானம் அல்லது செயல் மீது செல்வாக்குச் செலுத்தும் வகையில் சட்டமுரணாக அல்லது நெறிபிறள்வாக ஏதாவது பெறுமதியொன்றை வழங்குதல் அல்லது பெறுதல் ஊழல் எனப்படும். உதாரணமாக ஒப்பந்தம் ஒன்றைப் பெறுவதற்காக அதனைத் தீர்மானிப்பவருக்கு பணம் கொடுப்பது ஊழல் எனப்படும். ஆனால் இலஞ்சம் என்பது சட்டமுரணாக அல்லது நெறிபிறள்வாக ஒருவர் தனது பதவியை அல்லது அதிகாரத்தைப் பயன்படுத்தி பெறுவது அல்லது தனிப்பட்ட ரீதியில் நன்மையடைவதாகும். உதாரணம…
-
- 0 replies
- 307 views
-
-
புலம்பெயர் தமிழர்கள் விடயத்தில் நிலையான கொள்கை வேண்டும் எம். எஸ். எம் ஐயூப் இலங்கையில், அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்புக்கும் இடையிலான போர் முடிவடைந்து, கடந்து சென்ற 13 ஆண்டுகளில், இலங்கை அரசாங்கங்கள், இரண்டு முறை புலம்பெயர் தமிழர்களின் அமைப்புகளைத் தடை செய்துள்ளன. இரண்டு முறை, சில அமைப்புகளின் மீதான தடையை நீக்கியுள்ளன. கடந்த வாரம் இரண்டாவது முறையாக, அவ்வமைப்புகள் மீதான தடையை, அரசாங்கம் நீக்கியுள்ளது. மேலும் விளக்கமாகக் கூறுவதாயின், 2014ஆம் ஆண்டுக்குப் பின்னரான எட்டு ஆண்டுகளிலேயே, இவ்வாறு அந்த அமைப்புகள் தடைசெய்யப்பட்டு, மீண்டும் அத்தடை நீக்கப்பட்டுள்ளது. ஆயினும், இந்நான்கு சந்தர்ப்பங்களிலும், தடை செய்யப்பட்ட மற்றும் தடை நீக்கப்பட்ட அமைப்புக…
-
- 0 replies
- 306 views
-