அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9268 topics in this forum
-
மாணவர் போராட்டமும் ஈழத் தமிழர்களும் - அ.மார்க்ஸ் - சுமார் மூன்று வாரங்கள் தமிழகத்தைக் குலுக்கிய மாணவர் போராட்டம் ஓய்ந்துள்ளது. ஜெனிவாவில் ஐ.நா அவையின் மனித உரிமை கவுன்சில் மாநாடு கூட இருந்த தருணத்தில் சானல் 4 தொலைக் காட்சி வெளியிட்ட பாலச்சந்திரன் கொலைப் படங்கள் மாணவர் எழுச்சியைப் பற்ற வைத்தது. விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் இளைய மகன் பாலச்சந்திரனைப் (12) பிடித்துப் பங்கரில் வைத்திருந்து பின்னர் சுட்டுக் கொல்லப்பட்டதைக் காட்டும் படங்களை இங்கு ‘இந்து’ நளிதழ் வெளியிட்டது. யாருடைய மனதையும் உலுக்கும் படங்களாக அவை அமைந்தன. 2009 மேயில் நடந்த போர்க்கொடுமைகளில் ஒன்று இது. பாலச்சந்திரனை மட்டுமல்ல பிரபாகரன் உட்பட முக்கிய தலைவர்கள் பலரும் இப்படிப் படுகொலை செய்யப்பட்டனர…
-
- 0 replies
- 770 views
-
-
பெண்களுக்கான அரசியலில் ஜெயலலிதாவின் மரணம் ஏற்படுத்தியுள்ள வெற்றிடம் - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இந்தியாவின் தமிழ்நாடு அல்லது இலங்கையின் வடக்கில், திருமணம் முடிக்காத, குழந்தை இல்லாத ஒரு பெண், அந்தப் பகுதிக்கான ஆட்சியை, 2017ஆம் ஆண்டில் கைப்பற்றுவதாகக் கற்பனை செய்துகொள்ளுங்கள். அந்தக் கற்பனையில் கூட, “அது நடப்பதற்குச் சாத்தியமுள்ளதா? மக்கள் ஏற்றுக் கொள்வார்களா?” என்ற கேள்விகள் எழுகின்றன, இல்லையா? ஆனால், 1980களில், அதே நிலைமையில் காணப்பட்ட ஒரு பெண், ஆட்சியைப் பிடித்தார் என்றால், அவரது திறமைகளையும் துணிச்சலையும் பாராட்டத் தோன்றுகின்றது தானே? ஜெயலலிதா ஜெயராம் என்ற, …
-
- 0 replies
- 325 views
-
-
அழுத்தங்களைத் தாண்டிய அரசின் செயற்பாடுகள்: ஜீ.எஸ்.பி வரிச்சலுகை லக்ஸ்மன் சர்வதேச அழுத்தங்கள் ஒரு பொருட்டேயல்ல என்பதுபோல், இலங்கை அரசாங்கத்தின் செயற்பாடுகள் அமைந்திருக்கின்றன. இதற்குச் சிறப்பானதொரு எடுத்துக்காட்டு ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை நிறுத்தப்பட்டால் அதனை எதிர்கொள்ளத் தயாராகவே இருக்கிறோம் என தற்போதைய மத்திய வங்கியின் ஆளுனராக இருக்கின்ற அஜித் நிவாட் கப்ரால் முன்னர் இராஜாங்க அமைச்சராக இருந்த வேளை வெளியிட்ட கருத்தாகும். ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை நிறுத்தப்பட்டால், அதற்கு அரசாங்கம் என்றவகையில் நாங்கள் முகம்கொடுப்போம். ஏனெனில் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகை மூலம் நாட்டுக்கு கிடைப்பது நூற்றுக்கு 3வீதமான நிவாரணமாகும். என்றாலும் ஜீ.எஸ்.பி. வரிச்சலுகையை தொடர்ந்து பெற்றுக…
-
- 0 replies
- 347 views
-
-
இன ஆதிக்க அரசியலும் கிழக்கின் யதார்த்தங்களும் http://content.epaper.virakesari.lk/newspaper/Weekly/samakalam/2017-07-30#page-5
-
- 0 replies
- 365 views
-
-
99ஆண்டுகளுக்கு முன்னரான ஜாலியன்வாலா படுகொலைக்கு பிரிட்டன் மன்னிப்பு கோர வேண்டுமானால் முள்ளிவாய்க்கால் படுகொலைக்கு? குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்:- இந்திய சுதந்திரப் போராட்ட காலகட்டத்தில் பிரித்தானிய அரசால் நிகழ்த்தப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலைக்கு பிரித்தானிய அரசு மன்னிப்பு கோர வேண்டும் என்று பிரித்தானியாவில் வாழும் இந்தியரான வீரேந்திர சர்மா, பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினர் கோரிக்கை விடுத்திருப்பது பிரித்தானியாவில் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை பிரித்தானிய நாடாளுமன்றத்தில் ஒரு தீர்மானமாக அவர் முன் மொழிந்திருக்கிறார். இந்த விடயம் தொடர்பில் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் விவாதம் ஒன்றை நடத்த வேண்டும் என்றும் பிரித்தானிய அரச…
-
- 0 replies
- 613 views
-
-
வருகிறது தேர்தல் நஜீப் பின் கபூர் ——————————- எரிபொருட்களுக்கும் சமையல் எரிவாயுக்காகவும் ஏன் அன்றாட உணவுக்குக்கூட மக்கள் இரவு பகலாக வீதியில் நிற்கின்றார்கள்.விவசாயிகள் தங்களது பயிர்களுக்கு பசளையின்றி நாசம் போன தங்கள் விளை நிலங்களைப் பார்த்துக் கண்ணீர் வடித்துக் கொண்டிருக்கின்றார்கள். தாய்மார் தமது குழந்தைகளுக்கு ஒரு நேர சாப்பாடு போடுவது எப்படி என்று தவித்துக் கொண்டிருக்கின்றார்கள். வருமானத்துக்கான அனைத்து வழிகளும் மூடப்பட்டு வருவதால் என்ன பண்ணலாம், ஏது பார்க்கலாம் என்று ஓடித்திரியும பெற்றோர். பள்ளிப் படிப்பை தொடர வழி இன்றி வீடுகளுக்குள் முடங்கிக் கிடக்கும் மாணவர்கள்.…
-
- 0 replies
- 237 views
-
-
வாக்காளருக்கு அபராதம் அவசியம் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பேராசிரியரி ஜீ.எல்.பீரிஸ் தவிசாளராக இருந்தாலும், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இயங்கும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவினால் இம்முறை உள்ளூராட்சி மன்றத் தேர்தலின்போது, வேட்பாளராக நிறுத்துவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டு, பின்னர் அந்த வாய்ப்பு வழங்கப்படாத ஒருவர், விம்மி அழும் காட்சியை, கடந்த வாரம் தொலைக்காட்சியில் காணக் கூடியதாக இருந்தது. அதேபோல், தமது கட்சி, தமக்குத் தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்காததை எதிர்த்து, ‘சத்தியாக்கிரகம்’ செய்ய முற்பட்ட ஒரு பெண்ணை வாக்கு மூலம் பெறுவதற்கென, பொலிஸார் அழைத்துச் செல்லும் காட்சியும் மற்றொரு செய்தியின் போது காணக்கூ…
-
- 0 replies
- 314 views
-
-
யேமனில் தொடரும் மனிதாபிமான அவலம் - ஜனகன் முத்துக்குமார் உலகிலேயே மிகப் பெரிய மனிதாபிமான நெருக்கடியில், யேமன் இப்போது சிக்கியுள்ளது. 2.9 மில்லியனுக்கும் மேலான பொதுமக்கள், வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ள இந்நிலையில், 21 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் -- அதாவது சனத்தொகையில் மூன்றில் ஒரு பகுதிக்கு மேலானவர்களுக்கு -- அவசர மனிதாபிமான உதவி தேவைப்படுகிறது என, சர்வதேச செஞ்சிலுவைச் சங்கச் செயற்குழு அறிவித்துள்ளது. கடந்தாண்டு மே மாதம், வாந்திபேதி பரவியதிலிருந்து, 911,000க்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டனர் எனப் பதிவாகியுள்ள நிலையில், அதில் குறைந்தது 2,195 பேர் வரை இறந்திருந்தமை பதியப்பட்டுள்ளது. இவ்வெண்ணிக்கை, உண்மையான நிலைவரத்தைப்…
-
- 0 replies
- 295 views
-
-
தோல்வியில் முடிந்த ஒபரேசன் பாராளுமன்றத்தில் கடந்த புதன்கிழமை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேம ஜயந்தவும், வெளியிட்ட கூட்டு அரசாங்கம் இன்னமும் தொடர்கிறது என்ற அறிவிப்புடன், ஆட்சிக் கவிழ்ப்புக்கான ஒப்பரேசன் முடிவுக்கு வந்திருக்கிறது. மைத்திரி- ரணில் கூட்டு அரசாங்கத்தை வீழ்த்துவதற்காக உள்ளே இருந்தும், வெளியே இருந்தும் தீட்டப்பட்ட திட்டங்களும், மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளும், தோல்வியில் முடிந்திருக்கின்றன. உள்ளூராட்சித் தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின்னரான ஒரு வாரகாலத்தில் கொழும்பு அரசியல் களம் பெரும் பரபரப்பிலு…
-
- 0 replies
- 493 views
-
-
மக்களின் தெரிவுக்கு அமையவே- சம்பந்தனுக்குப் பின்னரான தலைமைத்துவம்!! சம்பந்தனுக்குப் பிறகு, வடக்குக் கிழக்கில் வாழ்கின்ற தமிழர்கள் ஏற்றுக் கொள்ளக் கூடியதொரு தலைமைத்துவத்தை தெரிவு செய்வதற்கான தேவையொன்று தமிழர்கள் மத்தியில் எழுமென்பதை எவருமே மறுத்துக்கூற முடியாது. இணைந்த வடக்குக் கிழக்கில் தமிழ் மக்களே பெரும்பான்மையினராக வாழ்கின்றனர்.இதையே தமது தாயக பூமியாகவும் அவர்கள் தொன்றுதொட்டுக் கருதி வருகின்றனர். திட்டமிட்ட சிங்களக் குடியேற்றங்களால் தமிழர்களின் இனப்பரம்பல் சிதை…
-
- 0 replies
- 601 views
-
-
பாராளுமன்றத்தில் இல்லாத பாராளுமன்ற உறுப்பினர்கள் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan இராணுவம், கடற்படை, விமானப்படை ஆகியவற்றுக்கு புனர்வாழ்வு மையங்களை நடத்தும் அதிகாரத்தை வழங்கும் புனர்வாழ்வுப் பணியக சட்டமூலம், புதன்கிழமை (18) இலங்கை பாராளுமன்றத்தில் நிறைவேற்றியது. தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் பிற அரசியல் எதிரிகளை, இராணுவத்தால் இயக்கப்படும் தடுப்பு முகாம்களில் அடைத்து வைக்கும் அதிகாரத்தை, இந்தச் சட்டம் அரசாங்கத்துக்கு வழங்கும் என, இந்தச் சட்டமூலத்தின் விமர்சகர்கள் பலரும் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து வந்த நிலையில், நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ஷவால் அமைச்சரவையில் அங்கிகரிக்கப்பட்டு, பாராள…
-
- 0 replies
- 453 views
-
-
நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி ஒழிப்பும் ஈழக் கோட்பாட்டு பூச்சாண்டியும் வீ. தனபாலசிங்கம் இலங்கையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி ஆட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்ட காலத்தில் இருந்தே அதை ஒழிக்க வேண்டுமென்ற கோரிக்கையும் மறுபுறத்தில் முன்வைக்கப்பட்டு வந்திருக்கிறது. ஆனாலும், அந்த ஆட்சி முறை மூன்றரைத் தசாப்தகாலமாக நடைமுறையில் நீடித்து வருகிறது. அந்தக் கோரிக்கை நீண்ட காலமாக வெகுஜனக் கோரிக்கையாக மேலெழும்ப முடியாமல் இருந்ததற்கான முக்கியமான காரணங்களில் ஒன்று நிறைவேற்று அதிகார ஜனாதிபதிப் பதவியை அடையமுடியாமல் போனவர்களினாலும், என்றைக்குமே அப்பதவியை அடையக் கூடிய அளவுக்கு மக்கள் மத்தியில் செல்வாக்கைப் பெற முடியாதவர்களினாலும் அது முன்வைக்கப்பட்டதேயாகும். 1994 பிற்பகுதியில் ஜனாதிப…
-
- 0 replies
- 457 views
-
-
தயாசிறி ஜயசேகரவின் கதைக்கு பின்னாலுள்ள கதை முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர, மத்திய வங்கி பிணைமுறி விவகாரத்தில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள பேர்பெச்சுவல் டிரெஷரீஸ் நிறுவனத்தின் தலைவர் அர்ஜூன் அலோசியஸிடம், பத்து இலட்சம் ரூபாய் பணம் பெற்றதாக வெளியாகியிருக்கும் செய்தியால் குழம்பிப் போயுள்ளார். அத்தோடு, மேலும் 118 பேர் அவ்வாறு அலோசியஸிடம் பணம் பெற்றதாகக் கூறப்படுவதால், அது கடந்த வாரம் முழுவதும் நாட்டின் பிரதான செய்தியாகி இருந்தது. இச்செய்திகளை அடுத்து, ஊழல் பேர்வழிகளிடம் அவ்வாறு பணம் பெற்ற அரசியல்வாதிகள் யார் என்பதை அறிய, மக்கள் ஆர்வத்துடன் இருக்கிறார்கள். ஆனால், தமி…
-
- 0 replies
- 894 views
-
-
இழந்து விட்ட அரசியல் ஓர்மம் தேர்தலொன்று விரைவில் வரப்போகிறது போல் தெரிகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் ஊர்களுக்குள் அடிக்கடி வந்து போகின்றமை அதற்கான கட்டியமாகும். குறிப்பாக, முஸ்லிம் கட்சித் தலைவர்கள், ‘மடித்து’க் கட்டிக் கொண்டு, களத்தில் இறங்கி விட்டார். முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ஹக்கீம், அம்பாறை மாவட்டத்துக்கும், தேசிய காங்கிரஸ் தலைவர் அதாவுல்லா, திருகோணமலை மாவட்டத்துக்கும் கடந்த வாரம் சென்று, தத்தமது கட்சிகளைப் புனரமைக்கும் நடவடிக்கைகளிலும், அங்குள்ள முக்கியஸ்தர்களைத் தங்களின் கட்சிகளுக்குள் ஈர்த்துக் கொள்ளும் செயற்பாடுகளிலும் இறங்கியிருந்தனர். அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாட் பதியுதீன், கட…
-
- 0 replies
- 403 views
-
-
அபிவிருத்தியின் அரசியலும் தேசிய இனப் பிரச்சனையின் அரசியல் தீர்வும் சமுத்திரன் அபிவிருத்தியா அரசியல்தீர்வா எனும் கேள்வி மீண்டும் எழுந்திருக்கிறது. உண்மையில் இந்த இரண்டுக்குமிடையே ஒரு சீனப்பெரும் சுவர் எழுப்பப்படவேண்டுமா என்ற கேள்வியும் எழுகிறது. அபிவிருத்திக்கும் அரசியல் உண்டென்பதை மறந்துவிடலாகாது. உள்நாட்டுப் போரினை இராணுவரீதியில் முடிவுக்குக் கொண்டுவந்த முன்னைய அரசாங்கம் இனப் பிரச்சனை என ஒன்றில்லை, இந்த நாட்டில் சிறுபான்மையினரும் இல்லை எனக்கூறியபடி மக்கள் வேண்டி நிற்பது அபிவிருத்தியே எனும் கொள்கையைத் தனக்கே உரிய வகையில் நடைமுறைப் படுத்தத் தொடங்கியது. ‘கிழக்கின் உதயம்’, ‘வடக்கின் வசந்தம்’ அரசாங்கத்தின் காட்சித் திட்டங்களாயின. அன்றைய அரசாங்கத்தின் கொள்கை ப…
-
- 0 replies
- 412 views
-
-
உலக நீதி : காசாவும் முள்ளிவாய்க்காலும் - நிலாந்தன் “அனைத்துலக நீதியின் மாண்பு தராசில் தொங்கிக்கொண்டிருக்கிறது” இவ்வாறு அனைத்துலக நீதிமன்றத்தில் வைத்துக் கூறியிருப்பவர் தென்னாபிரிக்காவின் பிரதிநிதி. காசாவில் இஸ்ரேல் புரியும் இனப்படுகொலைக்கு எதிராகத் தென்னாபிரிக்கா உலக நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருக்கிறது. அந்த வழக்கின் தொடக்கத்தில் மேற்கண்டவாறு கூறப்பட்டிருக்கிறது. உலக நீதி மட்டுமல்ல மேற்கு நாடுகளின் அரசியல் அறமும் கூட தராசில் வைக்கப்பட்டிருக்கிறது. முழு உலகத்துக்கும் ஜனநாயகம் மனித உரிமைகள் போன்றவற்றின் மாண்பைக் குறித்து வகுப்பெடுக்கும் மேற்கு நாடுகளின் அரசியல் அறத்தை மிக இளைய ஜனநாயகங்களில் ஒன்று ஆகிய தென்னாபிரிக்கா கேள்விக்கு உள்ளாக்கியிருக்கிறது. காசாவில்…
-
- 0 replies
- 718 views
-
-
ஆறு கோடி வாக்காளர்கள் நிர்ணயிக்கும் அரசியல் எதிர்காலம் எம். காசிநாதன் / 2019 ஏப்ரல் 08 திங்கட்கிழமை, மு.ப. 11:31 Comments - 0 தேர்தல் கூட்டணிகள் அனல் பறக்கும் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளன. தி.மு.க மற்றும் அ.தி.மு.க தலைமையில், இரு கூட்டணிகள் எதிரும் புதிருமாக மோதிக்கொண்டாலும், நடிகர் கமல்ஹாசன், டி.டி.வி. தினகரன் போன்றோரும் களத்தில் தனியாக, உதிரிக்கட்சிகளின் கூட்டணியுடன், தமிழக நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்துக் கொண்டிருக்கின்றனர். “ராகுல் காந்தி பிரதமர்” என்று அறிவித்து, காங்கிரஸ் கட்சியுடனான கூட்டணியை தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலின் உறுதி செய்து கொண்டார். பாட்டாளி மக்கள் கட்சிக்கு எட்டு இடங்களைக் கொடுத்து, அ.தி.மு.க - பா.ம.க கூட்டணியை முதலில்…
-
- 0 replies
- 686 views
-
-
புருஜோத்தமன் தங்கமயில் / 2019 ஓகஸ்ட் 28 புதன்கிழமை, பி.ப. 12:31 கடந்த வாரம், நல்லூர் கந்தசுவாமி கோவிலில் வழிபாடுகளை முடித்துக் கொண்டு, மூன்றாவது, ‘எழுக தமிழ்’ பேரணிக்கான பிரசாரப் பயணத்தை சி.வி. விக்னேஸ்வரன் ஆரம்பித்தார். அவரோடு, சுரேஷ் பிரேமசந்திரனும் இருந்தார். முதலாவது, ‘எழுக தமிழ்’ பேரணி, 2016 செப்டெம்பரில் நடைபெற்றது. மூன்றாவது, ‘எழுக தமிழ்’ பேரணி, செப்டெம்பர் மாதம் ஏழாம் திகதி நடைபெறவிருக்கிறது. ஆக, ‘எழுக தமிழ்’ போராட்ட வடிவத்துக்கான வரலாறு, மூன்று வருடங்கள் மட்டுமே! ஆனால், இந்த மூன்று வருடங்களுக்குள், அந்தப் போராட்ட வடிவத்தின் அடையாளமும் அதற்கான அர்ப்பணிப்பும் எவ்வளவுக்கு வலுவிழந்து இருக்கின்றது என்பதைக் கவனித்தாலே, தமிழ்த் தேசிய அரசிய…
-
- 0 replies
- 861 views
-
-
ஜெனீவா தீர்மானமும் நகரும் அரசியல் தந்திரமும் ஆக்கம்: வ.திருநாவுக்கரசு நாட்டின் அரசியல் பொருளாதார நிலைமைகளைப் பொறுத்த வரை மகிந்த ராஜபக்ஷ அரசாங்கம் திக்கற்ற நிலைக்குத் தள்ளப்பட்டிருப்பதையே அரசாங்க உயர் பீடத்தினரின் சொல்லும் செயலும் நன்கு புலனாக்கி வருகின்றன. அதாவது ஜனாதிபதி ராஜபக்ஷ பயங்கரவாதம் எனப்படுவதைத் தோற்கடித்த வெற்றிக்களிப்பு தீர்ந்து விடக்கூடாதென்பதற்காக உயர்ந்த வண்ணமுள்ள வாழ்க்கைச் செலவுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறிக்கொண்டிருக்கும் பரந்துபட்ட மக்களைத் திசை திருப்புவதற்காக நான் பயங்கரவாதத்தை மீண்டும் தலைதூக்க விடமாட்டேன். நான் அதனை அழித்துவிட்டேன். சில நாடுகள் எம்மீது அழுத்தம் கொடுப்பதற்கு முனைந்து வருகின்றனவாயினும் எமக்கு முழுமையான சர்வதேச ஆத…
-
- 0 replies
- 593 views
-
-
தெற்கின் பிரித்தாளும் தந்திரோபாயத்திற்கு பலியாகிறதா தமிழரசுக் கட்சி? - யதீந்திரா பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களிடம் கற்றுத் தேறியிருக்கும் தெற்கின் சிங்கள ஆட்சியாளர்கள் பிரித்தாளும் அரசியல் கலையை கையாளுவதில் தாங்கள் வல்லவர்கள் என்பதை பல்வேறு சந்தர்ப்பங்களில் நிரூபித்துக் காட்டியிருக்கின்றனர். தமிழ் மக்களுக்கு தனிநாடு கோரிய தந்தை செல்வநாயகத்தின் மருமகனையே தன்னுடைய ஆலோசகராக்கிய ஜே.ஆர் ஜெயவர்த்தனவின் வழிவந்தவர்களின் பிரித்தாளும் தந்திரோபாய பொறிக்குள் (Strategic trap) தமிழரசுக் கட்சி கொஞ்சம் கொஞ்சமாக விழுந்து விட்டதா என்னும் கேள்வி தொடர்பில் பதில் தேடவேண்டிய நிர்ப்பந்தம் ஒன்றை அண்மைக்கால அரசியல் நிகழ்வுகள் ஏற்படுத்தியிருக்கின்றன. அண்மைக்க…
-
- 0 replies
- 524 views
-
-
ஜனாதிபதி தேர்தல் : சுயாதீனக் குழுவும் பல்கலைக் கழக மாணவர்களும். கட்சிகளின் மீது சிவில் அமைப்புக்களின் தலையீடு ? நிலாந்தன் October 13, 2019 பேரவையால் தொடக்கி வைக்கப்பட்ட சுயாதீனக் குழு ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் நிறுத்த வேண்டும் என்று கோரிக்கையை முன்வைத்த பொழுது அது தமிழ் அரசியற் சூழலையும் தென்னிலங்கையின் அரசியற் சூழலையும் சடுதியாகக் குழப்பியது. அப்படி ஒரு குழு உருவாக்கப்பட்டது பல தளங்களிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியது. ஏன் அப்படி அதிர்வுகள் ஏற்பட்டன? ஏனெனில் அவ்வாறு சிவில் அமைப்புக்கள் கட்சிகளின் மீது தலையீடு செய்ய வேண்டிய ஒரு தேவை ஏற்பட்டிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் முன்னைய காலங்களைப் போல கண்ணை…
-
- 0 replies
- 430 views
-
-
‘ஒருமித்த குரலில் பேசட்டாம்; ஒன்னா மண்ணா போகட்டாம்’ ஒருமித்த கருத்தோடு, ஒரே பயணத்தில் இணைய எல்லோரையும் அழைக்கிறார்கள். இப்போது கொஞ்சக் காலமாய் ஓரே குரலில் பேச வேண்டியதன் அவசியம் பற்றி அடிக்கடி பேசப்படுகிறது. போதாக்குறைக்கு தமிழர்களின் மகுடவாசகம், ‘ஒருமித்த கருத்தும் ஒருமித்த பயணமும்’ என்ற அலப்பறைகள் வேறு. இதில் பிரதானமாய்க் கேட்க வேண்டிய வினா, எந்தத் தமிழர்களின் மகுடவாசகம் அது என்பதுதான்; கோவிலுக்குள் நுழைய இயலாமல் வெளியே நிற்கின்ற தமிழன், தோட்டக்காட்டான் என்று புறக்கணிக்கப்படும் தமிழன், மட்டக்களப்பான் என்று ஒதுக்கப்படும் தமிழன் ஆக…
-
- 0 replies
- 411 views
-
-
அரசியலில் ‘மீட்சி’ குறித்து கனவுகாணும் மகிந்தவும் ரணிலும் September 30, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — முன்னாள் ஜனாதிபதிகள் இருவர் தங்களுக்கு இனிமேலும் கூட அரசியலில் ‘மீட்சி’ இருக்கிறது என்ற நம்பிக்கையுடன் செயற்படத் தொடங்கியிருக்கிறார்கள். தனிப்பட்ட வெளிநாட்டு விஜயத்துக்கு அரசாங்க நிதியைப் பயன்படுத்தியதாக குற்றஞ்சாட்டப்பட்ட ரணில் விக்கிரமசிங்க தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் ‘அரசியலமைப்புச் சர்வாதிகாரத்தை’ தோற்கடிப்பதற்காக எதிர்க்கட்சிகளை ஐக்கியப்படுத்தும் முயற்சிகளை முன்னெடுத்திருக்கிறார். அதேவேளை, ஜனாதிபதிகளின் உரித்துரிமைகளை நீக்குவதற்கான சட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து கொழும்பில் பிரமாண்டமான அரசாங்க மாளிகையில் இருந்து வெளியேற நிர்ப்பந்திக்…
-
- 0 replies
- 156 views
-
-
இன்று பூமிப்பந்து ஒரு நோய்த்தொற்றினைச் சுமந்தவாறு உருண்டு கொண்டிருக்கிறது. சரியான மருத்துவக் கவனிப்புக் கிடைக்காத நிலையில் உலகின் பல பாகங்களிலும் இளையவர்களும், முதியவர்களும் இறந்து கொண்டிருக்கிறார்கள். உலகெங்கும் பல்லாயிரக்கணக்கானவர்கள் தமது தொழில்களையும், வாழ்வாதாரங்களினையும் இழந்துகொண்டிருக்கிறார்கள். பல நாடுகளிலே ஓர் உணவு நெருக்கடி ஏற்கனவே தோன்றிவிட்டது. இப்போது நாங்கள் கண்ணுற்றுக் கொண்டிருப்பது எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு மருத்துவ ரீதியிலான நெருக்கடியோ அதே அளவுக்கு அது ஒரு சமூகப் பொருளாதார ரீதியிலான நெருக்கடியாகவும் அமைகிறது. எம்மை வேறுபடுத்திப் பார்க்காது, கண்ணை மூடியபடி, பொத்தாம் பொதுவாகத் தனது பீடிப்பினை எம் எல்லோர் மீதும் மேற்கொள்ளுவதற்கு வைரஸினால் முடியாது. ஏனென…
-
- 0 replies
- 545 views
-
-
’அவசரப்பட்டு தேர்தலை நடத்தி சிக்கலில் மாட்ட தேவையில்லை’ ஏ.சி.எம் பௌசுல் அலிம் ஒத்தி வைக்கப் பட்டிருக்கும் நாடாளுமன்ற தேர்தலை விரைவில் நடத்துவது தொடர்பில் ஆராயும் பொருட்டு தேர்தல்கள் ஆணைக்குழு தலைவர் இன்றைய தினம் முக்கிய மாநாட்டை கூட்டி இருக்கிறார். ஏற்கனவே அறிவிக்கப்பட்ட நிலையில் இந்த கூட்டத்துக்கு காவல்துறை உயரதிகாரிகளும் தேர்தல்கள் செயலகம் அதிகாரிகளும் அழைக்கப்பட்டிருக்கிறார்கள். இவர்களுடன் தற்போதைய நெருக்கடி நிலையை கவனத்தில் கொண்டு தேர்தலை நடத்த முடியாத நிலை …
-
- 0 replies
- 540 views
-