Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. உருமாற்றம்! இலங்­கையில் கொண்­டு­வ­ரப்­ப­ட­வுள்ள மேற்­படி பயங்­க­ர­வாத எதிர்ப்பு சட்டம் தொடர்பில் பலர் தமது அதி­ருப்­தி­க­ளையும் எதிர்ப்­பு­க­ளையும் தெரி­வித்­தி­ருப்­பது இங்கு கவ­னத்தில் கொள்­ளப்­ப­ட­வேண்­டிய விட­ய­மாகும். அந்த வகையில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு, மற்றும் சர்­வ­தேச அமைப்­புகள் பல தமது அதி­ருப்­தி­களை முன்­வைத்­துள்­ளன. நடை­மு­றை­யி­லுள்ள பயங்­க­ர­வாத சட்­டத்­துக்கு மாற்­றீ­டாக புதிய பயங்­க­ர­வாத எதிர்ப்புச் சட்­ட­மொன்றை கொண்டு வரு­வ­தற்­கான ஏற்­பா­டு­களை மேற்­கொண்டு வரு­கின்ற நிலையில் வர­வி­ருக்கும் புதிய சட்­ட­மா­னது சாதா­ரண மனி­த­னொ­ரு­வனின் அடிப்­படைச் சுதந்­தி­ரத்தைக் கூட பறித்­தெ­டுத்­து­விடக் கூடிய மிக மோச­…

  2. ஆபத்தான கேள்விகள் இயற்கை அனர்த்தங்கள் நிகழும் ஒவ்வொரு தருணத்திலும் சமூக நல்லுறவுகளால் நாம் நிறைந்து போகிறோம். பாதிப்புகளிலிருந்து மீளும் போது, குரோதங்கள் மீளவும் நமக்குள் குடிகொள்ளத் தொடங்குகின்றன. சுனாமி, மண்சரிவு, இப்போது ஏற்பட்டுள்ள வெள்ளம் போன்றவை இதற்கு நல்ல அத்தாட்சிகளாக உள்ளன. சுனாமி ஏற்பட்டபோது நீரில் தத்தளித்துக் கொண்டிருந்த புலிகளை இராணுவத்தினர் உயிரைப் பயணம் வைத்துக் காப்பாற்றினார்கள். அதுபோலவே, உயிருக்காகப் போராடிக் கொண்டிருந்த இராணுவத்தினரை புலிகள் காப்பாற்றிக் கரை சேர்த்தார்கள். ஆனால், இந்த நல்லுறவு மூன்று வருடங்கள் கூட நின்று நிலைக்கவில்லை; அனைத்தும் மறந்து போனது. 2004 இல் காப…

  3. இலங்கை அரசின் இனப்படுகொலை மறுப்பு (வாதத்தி)ன் அரசியல் Photo: Dinuka Liyanawatta Photo, The New York Times இனப்படுகொலை புலமைத்தளத்தில் இனப்படுகொலையின் இறுதிகட்டமாக ‘இனப்படுகொலை மறுப்பு’ அமைகின்றது எனக் குறிப்பிடப்படுகின்றது (Genocide denial is the final stage of genocide). ஸ்ரான்லி கோஹைன் தன்னுடைய நூலில், ‘அரசுகளுடைய மறுப்பு : அட்டூழியங்களையும், துன்பப்படுத்தல்களையும் தெரிந்து கொள்ளல் – States of Denial: Knowing about atrocities and suffering (2001), மறுப்பு என்றால் என்னவென்பதை, ‘மறுப்பு என்பது இலகுவில் நழுவித் தப்பித்துக் கொள்ளக்கூடிய ஒரு சொற்பதம், அது பலவற்றைக் குறித்து நிற்கும் மறுப்புக்குரிய முறையான பாவனை அல்லது நடைமுறை என்பது, எப்போது நபர்கள் பார்வையாளர்…

  4. மகிந்தவின் பொறிக்குள் தமிழ் தலைவர்களும் விக்னேஸ்வரனும் சிக்குவார்களா? 10 அக்டோபர் 2013 ராஜதந்திரத்தில் வெல்வார்களா? பாவம் மக்கள் குளோபல் தமிழ்ச் செய்திகளிற்காக ராஜாபரமேஸவரி இலட்சக்கணக்கான தமிழ் மக்களினதும், ஆயிரக்கணக்கான போராளிகளின் தியாகங்களினும் ஒன்றுமே இல்லாத மாகாண சபையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி கொண்டுள்ளது. இந்த வெற்றி என்பது தமிழரசுக் கட்சியின் தனித்த வெற்றியோ, இரா சம்பந்தனின் தலைமைத்துவத்திற்கு கிடைத்த வெற்றியோ, சீ.வீ விக்னேஸ்வரன் என்ற முன்னாள் நீதியரசரின் நீதிக்கு 132000 விருப்பு வாக்குகளுடன் கிடைத்த வெற்றியோ அல்லது கூட்டமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் தனிப்பட்ட கட்சிகளின் அவர்களின் தலைவர்களின் செல்வாக்கிற்கோ கிடைத…

  5. பூட்டான்: வளர்ச்சியா, மகிழ்ச்சியா? மகிழ்ச்சியின் அளவுகோல் எது என்ற கேள்விக்கான விடை மிகவும் சிக்கலானது. மகிழ்ச்சி என்பது பண்பறி ரீதியானது. அதை அளவுகோல்களின் அடிப்படையில் அளவிடவியலாது. பண்பறி ரீதியானவை அகவயமானவை. அவை ஆளாளுக்கு வேறுபடுபவை. இவ்வளவு சிக்கல்களைக் கொண்டுள்ளமையால், மகிழ்ச்சியை அளவிடவியலாது. வளர்ச்சியை அளவிடலாமா என்ற கேள்விக்கு பொருளியல் நிபுணர்கள் “ஆம்” என்று பதிலளிக்கின்ற போது, எது வளர்ச்சி என்பதற்குப் பொதுவான, ஒருமித்த வரைவிலக்கணம் இன்னமும் இல்லை. பொதுவில், பொருளாதார வளர்ச்சியே வளர்ச்சி என அறியப்படுகிறது. அவ்வகையில் வளர்ச்சி, மகிழ்ச்சியைத் தருமா என்பது இவ்…

  6. இரட்டை வேடம் எப்போதும் பலன் தருமா? பிரே­சில் நாட்டுக்கான இலங்­கைத்­தூ­து­வர் ஜகத் ஜய­சூ­ரிய தமக்கு எதி­ரா­கப் போர்க் குற்­றச்­சாட்­டுச் சுமத்­தப்பட்­டுள்­ள­தா­கக் கூறிக் கொண்டு படுத்த பாய்க்­குக் கூடத் தெரி­யா­மல் திடு­திப்­பென்று இலங்­கைக்­குத் திரும்­பி­யி­ ருந்­தார். அவ­ரது அந்­தத் தக­வ­லைக் கேட்டு நாடே குழப்­ப­ முற்­றது. இன்­றைய கூட்டு அர­சைத் தேசத் துரோக அரசு என்று கூற வைக்­கும் அள­வுக்கு குறிப்­பிட்ட அந்­தச் செய்தி பார­தூ­ர­மான ஒன்­றாக அமைந்­தது. ‘‘உல­கையே வென்று விட்­ட­தா­கக் கூறப்­பட்­டது. பன்­னாட்­டுச் சமூ­கம் தற்­போது இலங்­கையை நேசிப்­ப­தா­கக் கூறப்­பட்­டது. ஆனால் போர் வீரர்­களை பன்­னாட்டு நீதி­மன்­றத்­தில் நிறுத்…

  7. தடுமாறும் அரசாங்கத்துக்குச் சட்டங்கள் காவல் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கையின் இன்றைய நெருக்கடியை, ரம்புக்கனை கொலைகள் இன்னொரு தளத்துக்கு நகர்த்தியுள்ளன. இலங்கையில் அரச பயங்கரவாதம் புதிதல்ல. பொலிஸ் அராஜகத்தின் வரலாறு மிக நீண்டது. ஆனால், செல்வந்தர்கள், உயரடுக்கினர் தவிர்த்து, முழு இலங்கையர்களும் பொருளாதார நெருக்கடியை அன்றாடம் எதிர்நோக்கி இருக்கையில், இந்த நிகழ்வு நடந்தேறியுள்ளது. தமது வாழ்வாதாரத்துக்காகப் போராடிய மக்களை, அதே வாழ்வாதாரத்துக்காகத் தொழில்புரியும் பொலிஸ்துறையினர் துப்பாக்கியால் சுட்டுள்ளார்கள். போராடுகின்ற மக்கள், இதே பொலிஸ்துறையினருக்கும் சேர்த்துத்தான் போராடுகிறார்கள். இந்த நெருக்கடி யாரையும் விட்டுவைக்கவில்லை. வரிசைகளில் அனைவரு…

  8. இலங்கைத் தமி­ழர்­களும் தேசிய நல்­லி­ணக்­கத்தின் கட்­டாயத்தேவையும் மூன்று வரு­டங்­க­ளுக்கு முன்னர் 2015இல்­ ஜன­நா­யக விழு­மி­யங்­க­ளையும் நிறு­வ­னங்­க­ளையும் மீள­மைத்து வலு­வூட்­டு­வ­தற்­கா­க­வும்­ சட்ட ஆட்­சியை ஸ்தாபிப்­ப­தற்­கா­க­வும்­ ஊழலை ஒழிப்­ப­தற்­கா­கவும் மற்றும் தேசிய ஒற்­று­மையை மேம்­ப­டுத்தும் வகையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு ஒன்றை உரு­வாக்­கு­வ­தற்­கு­மான மக்கள் ஆணையைப் பெற்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அவர்கள் நிறை­வேற்று ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்டார். குடி­மக்கள் சமூ­கத்தைப் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் அமைப்­புக்­க­ளி­னாலும் மற்றும் பல அர­சியல் கட்­சி­க­ளி­னாலும் அடை­யாளம் காணப்­பட்ட குறிக்­கோள்­களை அடை­யும…

  9. கண்டி கலவரம் - அதிரன் கண்டியே பற்றியெரிந்தபோது, அதைக் கணக்கிலெடுப்பதற்கு யாரும் தயாராய் இருக்கவில்லை, அதற்காகச் சமூக ஊடகங்களை தடை செய்துதான் கட்டுக்குள் கொண்டுவர வேண்டிய நிலை தோன்றியிருந்தது. அப்படியானால், சமூக, சிவில் அமைப்புகள், தலைவர்கள் எங்கே இருந்தார்கள், என்ன செய்தார்கள் என்ற கவலையொன்று இலங்கையில் உருவாகியிருக்கிறது. இலங்கையின் சரித்திரத்தில் இடம்பிடித்த முதலாவது இனக்கலவரம், 1915 ஆம் ஆண்டின் கண்டிக் கலவரம் தான். ஆனால், இப்போது 2018 மார்ச்சில் ஏற்பட்ட கலவரத்தோடு இரண்டாகிக் ‘கண்டிக் கலவரங்கள்’ என்று வரலாறு பதிவு செய்கிறது. இலங்கையில் மாத்திரமல்ல, உலகத்திலேயே தேசியம் சார் நல…

  10. பதவி நீடிப்பும் பின்­ன­ணியும் -சுபத்ரா இறுதிப் போரில் முக்கிய பங்காற்றிய இராணுவ அதிகாரிகளை ஒருவாறு ஒதுக்கித் தள்ளி வந்துள்ள அரசாங்கம், அதனை மேலும் உறுதிப்படுத்திக் கொள்வதற்காகத் தான், மீண்டும், லெப்.ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவுக்கு சேவை நீடிப்பை வழங்கியுள்ளது. நல்­லி­ணக்கச் செயற்­பா­டு­க­ளுக்கு எதி­ராகப் பேசுவோர், செயற்­ப­டு­வோரை இரா­ணுவ முகாம்­க­ளுக்குள் அனு­ம­திக்கக் கூடாது என்ற கடு­மை­யா­ன­தொரு உத்­த­ரவை இரா­ணுவத் தள­பதி லெப்.ஜெனரல் மகேஸ் சேன­நா­யக்க அனைத்து பற்­றா­லியன் கட்­டளை அதி­கா­ரி­க­ளுக்கும் பிறப்­பித்து, ஒரு வார காலத்­துக்குள் அவ­ருக்கு சேவை நீடிப்பு அளிக்­கப்­பட்­டி­ருக்­கி­றது. அண்­மையில் யாழ்ப்­பா­…

  11. சம்பந்தனின் ராஜதந்திரம் !? யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் இந்தியாவின் புதிய வெளிவிவகாரச் செயலர் வியஜ் கோகலே இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கை வந்திருந்தார். இதன் போது வழமைபோல் கூட்டமைப்பையும் சந்தித்து பேசியிருந்தார். பொதுவாக இந்தியாவின் ராஜதந்திரிகள் இலங்கைக்கு விஜயம் செய்கின்ற போது, கூட்டமைப்பின் பிரதிநிதிகளை சந்திப்பது வழக்கம். எனவே இதற்கு அதிக அரசியல் முக்கியத்துவம் இருப்பதாக கூற முடியாது. ஆனால் தமிழர் தரப்பின் நிலைப்பாடுகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்பாக இவ்வாறான சந்திப்புக்களை கூட்டமைப்பினர் பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால் பொதுவாக இந்திய தரப்பினரிடம் ஒரு அபிப்பிராயம் உண்டு என்று அறிந்திருக்கிற…

  12. ஜனாதிபதித் தேர்தலுக்கான அரசியல் பிரசாரங்கள் டிசம்பர் 8 ஆம் திகதி முதல் தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுத் தாக்கலோடு பெரும் ஆரவாரத்துடனும் அக்கறையுடனும் ஆரம்பிக்கப்படவிருந்தன. போட்டி மிக நெருக்கமானதும் கடுமையானதுமாகவும் இருக்கப்போவதால் சிறுபான்மையினத்தவரது வாக்குகள் தேர்தல் முடிவுகளை தீர்மானம் செய்வதில் ஆற்றல் உள்ளதாக இருக்கலாம் என நம்பப்படுகின்றது. இருந்த போதிலும் பிரதான தமிழ் மற்றும் முஸ்லிம் கட்சிகள் தாம் எந்த வேட்பாளரை ஆதரிக்கப் போகின்றோம் என்னும் தீர்மானத்தை இன்னும் எட்டாதிருக்கின்றன. அவை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் போட்டியாளர்கள் எவ்வாறு தமது அரசியல் விஞ்ஞாபனத்தை அமைக்க உள்ளனர் என்பதனைப் பொறுத்தே தாம் ஒரு தீர்மானத்தை செய்யலாம் என்று காலம் தாழ்த்தி வருவதாகத் …

  13. துருக்கியின் பொருளாதார நெருக்கடி: கட்டவிழும் கோலங்கள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / உலக நாடுகள் வெவ்வேறு வடிவங்களில் பொருளாதார நெருக்கடியை எதிர்நோக்குகின்றன. அவை பற்றிய பல கதைகள் எமக்குச் சொல்லப்பட்டாலும், பொருளாதார நெருக்கடி என்பது, உலகின் பெரும்பான்மையான நாடுகளில் நிலவுகின்றது என்பது உண்மையே. இதை அரசாங்கங்களும் அறிவுஜீவிகளும் பொருளாதார வல்லுநர்களும் தொடர்ந்து மறுத்து வந்தாலும், உலக நிலைவரங்கள், பொருளாதார நெருக்கடியின் நிகழ்நிலையை, தொடர்ந்து காட்டிக் கொண்டேயுள்ளன. அதேவேளை, இந்நெருக்கடி, தனியே ஒரு நாட்டை மட்டும் பாதிப்பதில்லை; மாறாக, பல நாடுகளைப் பாதிக்கிறது என்பதும் தெளிவாகியுள்ளது. …

  14. அணில் கட்டிய பாலமும் ரணில் கட்டாத பாலமும் ? - நிலாந்தன்! adminJuly 30, 2023 ரணில் விக்கிரமசிங்கவின் இந்திய விஜயத்தைத் தொடர்ந்து இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பிணைப்பு திட்டங்கள் மேலும் விரிவுபடுத்தப்பட்டிருக்கின்றன. ஏற்கனவே பலாலியிலிருந்து மீனம்பாக்கத்திற்கும், காங்கேசன்துறையில் இருந்து தமிழ்நாட்டுக்கும், மன்னாரியிலிருந்து தமிழ்நாட்டுக்கும் என மூன்று திட்டங்கள் யோசிக்கப்பட்டன. இந்தக் கடல் வழிப்பிணைப்பு, வான்வழிப் பிணைப்பு, என்பவற்றோடு, தரை வழியாக ஒரு பாலத்தை கட்டுவது குறித்தும் பரிசீலிக்கப்படுகிறது. இவைதவிர ரணிலின் விஜயத்தின் பின்னணியில் இந்திய வெளியுறவுச் செயலர் தெரிவித்த கருத்துக்களின்படி கடல் வழி, வான்வழி, தரைவழிப் பிணைப்புகளோடு வர்த்தகப் பிணைப்பு, எரிசக்த…

  15. முள்ளிவாய்க்கால் ஆறாம் ஆண்டு நினைவு: ஒரு தேசமாக எம்மை வலுப்படுத்துவதற்கு என்ன செய்துள்ளோம்? முள்ளிவாய்க்கால் பேரவலம் நிகழ்ந்து ஆறு ஆண்டுகள் ஆகிப் போயின. தமிழீழ நடைமுறை அரசு, தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம், தலைவர் பிரபாகரன் உட்பட தளபதிகள், ஆயிரக்கணக்கான போராளிகள், பல்லாயிரக்கணக்கான மக்கள், தமிழர்களின் நிறுவனங்கள் என 2009 ஆம் ஆண்டு மே மாதம் வரையிலான காலப்பகுதியில் நாம் இழந்தவை சொல்லில் வடிக்க முடியாத பெருந்துயர் தருபவை. ஆறு ஆண்டுகளின் முன்னர் நிகழ்ந்தவைகளை இப்போது நினைத்துப் பார்த்தாலே இதயம் வெடித்து விடுவது போன்ற பெரும் வலி எம்முள் ஏற்படும். தலைவர் பிரபாகரன் உட்பட தமது இன்னுயிரை ஈகம் செய்த தளபதிகள், போராளிகள் பொதுமக்கள் அனைவருக்கும் பொங்குதமிழ் இத்தருணத்…

  16. ஜெனீவாவை நோக்கிய ‘மறப்போம் மன்னிப்போம்’ Editorial / 2019 பெப்ரவரி 19 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:13 Comments - 0 -க. அகரன் ‘காலம் தாழ்த்திய நீதி, மறுக்கப்பட்ட நீதிக்குச் சமம்’ என்ற அனுபவ மொழிக்கிணங்க, எந்த விடயத்துக்குமான நீதியாக இருந்தாலும், அது உரிய காலத்தில் வழங்கப்படும் பட்சத்திலேயே, அதற்கான பெறுமதியும் தீர்வும் தர்மத்துக்கும், நியாயத்துக்கும் அதற்கும் மேலாக இந்தப் பிரபஞ்சத்தை இயக்கும் சக்திக்கும் ஏற்புடையதாக இருக்கும். இலங்கையைப் பொறுத்தவரையில், உள்ளக விசாரணைகளின் ஊடான சாதாரண வழக்குகளும் சரி, பாரிய வழக்குகளுக்கும் சரி, கால நீடிப்பின் பின்னரே, தீர்ப்புக் கிடைக்கின்ற நிலை காணப்படுகின்றது. அது, இலங்கை நீதிச்சேவையின் பலவீனமான, இறுக்கமற்ற தன்மையில்…

  17. சந்தர்ப்பவாத அரசியல் -பி.மாணிக்கவாசகம் March 9, 2019 நிலைமாறு கால நீதிப் பொறிமுறைகளின் ஊடாக மனித உரிமை மீறல்களுக்கும், இழைக்கப்பட்ட அநீதிகளுக்கும் நீதி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை இலங்கை அரசு முற்றாக நிராகரிக்கும் போக்கில் செல்லத்தலைப்பட்டிருப்பதையே காண முடிகின்றது. ஆட்சி மாற்றத்தின் போது பதவிக்கு வந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அரசாங்கம் 2015 ஆம் ஆண்டு ஐநா மனித உரிமைப் பேரவையின் தீர்மானத்திற்கு இணை அனுசரணை வழங்கி அதனை ஏற்றுக்கொண்ட போதிலும், காலம் கடத்தி அந்தத் தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்வதற்கான நடவடிக்கைகளிலேயே ஈடுபட்டு வந்துள்ளது. அரசாங்கத்தின் இந்த முயற்சியிலேயே கடந்த நான்கு வருடங்களும் கழிந்து போயிருக்கின்றன. …

  18. ஐ.நா இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிக்கின்றதா? - நிலாந்தன் தமிழ் மக்கள் ஏற்றுக் கொள்கிறார்களோ, இல்லையோ கூட்டமைப்பு ஜெனீவாவில் கால அவகாசத்தை ஏற்றுக் கொள்ளும் என்றே தெரிகிறது. அதற்கு அவர்கள் வழமை போல் ஓர் அப்புக்காத்து விளக்கம் தருகிறார்கள். அதாவது அது கால அவகாசம் அல்ல. இலங்கை அரசாங்கத்தைக் கண்காணிப்பதற்கான ஒரு கால நீட்சியே என்று. அப்படியென்றால் கடந்த நான்கு ஆண்டுகளாக வழங்கப்பட்ட கால அவகாசமானது ஐ.நா அரசாங்கத்தை கண்காணிப்பதற்கான அல்லது பின்தொடர்வதற்கான ஒரு கால அட்டவணையைக் கொண்டிருக்கவில்லையா? அல்லது கடந்த நான்கு ஆண்டுகால ஏமாற்றங்களின் விளைவாக இம் முறைதான் அவ்வாறு கண்காணிப்பது என்று முடிவெடுக்கப்பட்டிருக்கிறதா? ஆனால் கடந்த முறை கால அவகாசம் வழங்கப்பட்ட போது அரசாங்கத்தைக…

  19. எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் தமக்குரிய பிரதிநிதித்துவங்களைப் பெற்றுக் கொள்வார்களா? இழந்தவற்றை மீட்டுக்கொள்வார்களா அல்லது இருந்தவற்றையும் இழந்துவிடுவார்களா என்ற ஆதங்கம் தமிழ் மக்கள் மத்தியிலே உருவாகியுள்ளது. பெரும்பான்மையினத்தவர்கள் ஆட்சியைக் கைப்பற்ற வரிந்துகட்டிக்கொண்டு தேர்தலில் களமிறங்கியுள்ள நிலையில், தமிழ் மக்கள் தமது இருப்பை உறுதிப்படுத்தவும் வெளிப்படுத்தவும் வேண்டிய நிலையில் பொதுத்தேர்தலை எதிர்நோக்கியுள்ளனர். ஆனால் வழமைபோன்று தனக்கு மூக்குப் போனாலும் பரவாயில்லை தன்னினத்திற்கு சகுனப் பிழையாக வேண்டும். தனக்குக் கிட்டாத மக்கள் பிரதிநிதித்துவம் என்ற பாராளுமன்ற உறுப்பினர் பதவி இன்னுமொரு தமிழனுக்குக் கிட்டக்கூடாது என்ற சிந்தனையுடனும் தேர்தல் களமாடப் பல தம…

    • 0 replies
    • 162 views
  20. பொது வேட்பாளர் தமிழ்த் தேசியத் தீவிரவாதியா? நிலாந்தன். அனுர,ரணில், சஜித் ஆகியோரின் தேர்தல் அறிக்கைகள் வெளிவந்துவிட்டன. எதிர்பார்க்கப்பட்டது போல அவை அமைந்திருக்கின்றன. 13க்கு அப்பால் அவர்களிடம் தீர்வு கிடையாது. மேலும் இனப் பிரச்சனைக்கான தீர்வை நோக்கி உருவாக்கப்படும் புதிய யாப்பு அடுத்த நாடாளுமன்றத்தில் தான் தீர்மானிக்கப்படும். இப்பொழுது கேள்வி என்னவென்றால், பிரதான தென்னிலங்கை வேட்பாளர்கள் எதைத் தர கூடும் என்பது தெளிவாகக் கூறப்பட்டு விட்டது. தபால் மூல வாக்கெடுப்புக்கு சில நாட்களே உண்டு. தமிழரசுக் கட்சி அதன் உத்தியோகபூர்வ முடிவை இக்கட்டுரை எழுதப்படும் நாள் வரை அறிவிக்கவில்லை. ஆனால் அதன் திருகோண மலைக் கிளை பொது வேட்பாளருக்கு ஆதரவாக அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அ…

  21. தேர்தலை தனக்கும் அநுராவுக்கும் இடையிலான போட்டியாக காண்பிக்கும் முயற்சியில் ஜனாதிபதி ரணில் September 10, 2024 — வீரகத்தி தனபாலசிங்கம் — ஜனாதிபதி தேர்தலுக்கு இன்னமும் இரு வாரங்களே இருக்கின்றன. 38 பேர் போட்டியிடுகின்ற போதிலும், அவர்களில் பலரை பொதுவெளியில் காணவில்லை. பிரதான வேட்பாளர்கள் தங்களின் தேர்தல் பிரசாரங்களை நாடுபூராவும் மும்முரமாக முன்னெடுத்திருக்கிறார்கள். பிரதான வேட்பாளர்களாக விளங்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்கவும் தங்களது தேர்தல் விஞ்ஞாபனங்களில் பொருளாதார நெருக்கடியில் இருந்து இலங்கையை மீட்டெடுத்து அபிவிருத்திப்…

  22. மாற்றத்துக்கான தேர்தல்: நேர்நிலையும் எதிர்நிலையும் November 4, 2024 — கருணாகரன் — ஜனநாயக அடிப்படையில் வழங்கப்பட்டுள்ள வாய்ப்பையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி, தங்களுடைய ஆட்சிப் பிரதிநிதிகளைத் தெரிவு செய்வதை மக்கள் எப்போதும் சரியாகத்தான் செய்கிறார்களா? பல சந்தர்ப்பங்களிலும் இல்லை. அல்லது குறைவு என்றே சொல்ல வேண்டும். சரியான முறையில் (பொருத்தமான) நற்கொள்கை, சிறந்த செயலாற்றல், நற்பண்பு, பொறுப்புக்கூறும் கடப்பாடு போன்றவற்றைக் கொண்ட தரப்பைத் தெரிவு செய்திருந்தால் – தவறான தரப்பை நிராகரித்திருந்தால் நாடும் சமூகமும் (மக்களும்) பல முன்னேற்றங்களை எட்டியிருக்கும். இப்போதுள்ள பொருளாதார நெருக்கடி, அரசியல் நெருக்கடி போன்றவற்றில் சிக…

  23. எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 செப்டெம்பர் 04 புதன்கிழமை, பி.ப. 08:16 கடந்த நான்காண்டு காலங்களில், இலங்கையில் இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணப்படாததையிட்டு, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன குறைகூறியிருக்கிறார். இனப் பிரச்சினைக்குத் தீர்வை வழங்கக்கூடிய வகையில் அரசமைப்பை மாற்றியமைக்காது, நான்காண்டுகளை வீணடித்தாகவும் அரசாங்கத்தை அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். கடந்த வாரம், யாழ்ப்பாணத்துக்கு மேற்கொண்ட விஜயத்தின் போதே, அவர் இந்தக் கருத்தைத் தெரிவித்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது, முற்றிலும் தவறான குற்றச்சாட்டல்ல; அதேவேளை, முற்றிலும் நியாயமான குற்றச்சாட்டுமல்ல. இனப் பிரச்சினைக்குத் தீர்வு காண…

    • 0 replies
    • 789 views
  24. பட்ஜெட் விவாதமும் பாதாள உலக கொலைகளும் March 5, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கன்னி பட்ஜெட்டின் இரண்டாவது வாசிப்பு கடந்த வாரம் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டதை தொடர்ந்து தற்போது அதன் குழுநிலை விவாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதுவரையான விவாதங்களில் பெரும்பாலான எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் பட்ஜெட்டின் பொருளாதாரத்தை விடுத்து பட்ஜெட்டின் அரசியலையே பேசினார்கள். முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கையின் பிரகாரம் பொருளாதாரத்தை கையாளும் ஜனாதிபதி திசாநாயக்க ஜனதா விமுக்தி பெரமுனவ…

  25. சிதையும் தமிழர் அரசியல் கட்சிகள்: நிலை தடுமாறும் தமிழ்த் தேசியம் -க. அகரன் ‘சட்டியில் இருந்து அடுப்பில் விழுந்த’ கதையாகி இருக்கும் தமிழர் அரசியல் களம், தொடர்ந்தும் நிதானமின்றிப் பயணிக்கின்றதா என்கின்ற கேள்வி எழுந்துள்ளது. தமிழ் மக்கள், தமது அரசியல் தலைமைகளிடம் ஒற்றுமையின் தேவையை உணரச் செய்கின்ற போது, அரசியல் தளத்தில் இருக்கின்றவர்கள், தமக்குள் இருக்கும் காழ்ப்புணர்ச்சிகளைக் கக்கியவாறு, தமக்கான தனித்தனித் தளங்களை ஆரம்பிக்கும் படலங்கள் தொடங்கியுள்ளன. தனிக்கட்சி அரசியலும் அதன் பின்னரான கூட்டும் வடக்கு, கிழக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளிடம் நாகரிகமாக ஒட்டிக்கொண்டுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தமிழீழ விடுதலைப் புலிகள் உருவாக்கின்ற போது, த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.