அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9267 topics in this forum
-
புலம்பெயர்ந்த நாடுகளில் தமிழ்த் தேசிய நலன் சார்ந்து இயங்கும் தமிழ் அமைப்புகளிற்கு பல்வேறு பட்ட கடமைகள் உண்டு. இற்றைவரை இந்த தமிழர் அமைப்புகள் நம்மவர்கள் நோக்கிய கலை கலாச்சார நிகழ்வுகள், பிரச்சார கூட்டங்கள் கண்டன கூட்டங்கள், நிதிதிரட்டல், கவனயீர்ப்பு நினைவு கூரல் நிகழ்வுகள் மற்றும் ஊர்வலங்களோடு மாத்திரம் நின்றுவிடுகின்றன. தாயகத்தின் அவல நிலையையும், எந்தவித வெளி உதவிகள் இன்றி விடுதலை வேண்டி 30 ஆண்டுகளிற்கு மேலாக பலத்த இழப்புக்களோடு போராடும் இனமாக மட்டுப்படுத்தப்பட்ட நேர மற்றும் மனித வளரீதியில் இவைதான் முக்கியத்துவம் பெறுபவைகளாக இருக்கின்றன. இருந்த போதும் புலம் பெயர்ந்த நாம் ஒவ்வொருவரும் தமிழ்த் தேசியத்தின் பிரதிநிதிகளாக நல்லெண்ண தூதுவர்களாக நடந்து கொள்ள வேண்டிய அத்தியாவசிய …
-
- 16 replies
- 4.3k views
-
-
தங்கத்தை புடம் போட்டாலும் தரம் குறையாது. Saturday, 30 June 2007 ஊடகங்களைக் கட்டுப்படுத்தும் அல்லது முடக்கும் மகிந்தராஜபக்ஷ ஆட்சியின் மற்றுமொரு விரிவாக்கம் "தமிழ்நெற்" இணையத்தளத்தை முடக்க முயலும் அதனது செயற்பாட்டிலிருந்து ஆரம்பமாகியுள்ளது. சிறிலங்காவில் இணைய இணைப்பு சேவை வழங்குணர்களூடாக இணைப்புப்பெறும் பயன்பாட்டாளர்கள் "தமிழ்நெற்" இணையத்தளத்தைப் பார்வையிட முடியாத நிலையை அது ஏற்படுத்தியுள்ளது இந்த நடவடிக்கைக்கும் தமக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை என ஊடகத்துறை அமைச்சர் அனுராபிரியதர்சனயாப்பாவும், சிறிலங்கா இராணுவப்பேச்சாளர் பிரிகோடியர் பிரசாத் சமரசிங்கவும் கூறியிருக்கின்றனர். இதிலே எவ்வளவு வீதம் உண்மை இருக்கும் என்பதை அவர்கள் நாளாந்தம் வெளியிடும் அற…
-
- 0 replies
- 1.3k views
-
-
இலங்கையின் மிரட்டலுக்கு இந்தியா அடிபணிந்து விட்டதா? -(கலைஞன்) இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கோதாபயவின் அவசர டில்லி விஜயமும் இந்திய தேசியப் பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனின் திடீர் தமிழ் நாட்டுப் பயணமும் அரசியல் இராணுவ ரீதியில் இலங்கையில் சில மாற்றங்களை ஏற்படுத்தப்போகின்றன. ஆயுதங்கள் வாங்குவதற்காக பாகிஸ்தான், சீனா ஆகிய நாடுகளை இலங்கை நாடுவதை இந்தியா ஒருபோதும் விரும்பாது என்று பிரதமர் மன்மோகன் சிங்கின் பாதுகாப்பு ஆலோசகரும் முன்னாள் `றோ' வின் உயரதிகாரியுமான எம்.கே.நாராயணன் தெரிவித்துள்ளதன் மூலம் இலங்கைப் பாதுகாப்பு அமைச்சின் செயலாளரும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் சகோதரருமான கோதாபய ராஜபக்ஷவின் வேண்டுகோளுக்கு இந்தியா பச்சைக்கொடி காட்டியுள்ளது. …
-
- 0 replies
- 944 views
-
-
இந்த மே மாதத்தில் இரு தினங்கள் கலைஞர் எரிமலையாய்ப் பொங்கி வெடித்ததையும், குற்றால அருவியாய்க் குளிர்ந்ததையும் தி.மு.க. வரலாறு மட்டுமல்ல, அகில இந்திய அரசியல் வரலாறும் கவனமுடன் பதிவு செய்து கொண்டது. மே 13 அன்று தி.மு.க. தலைவர் கருணாநிதி தலைமையில் கூடிய கட்சியின் உயர்மட்ட நிர்வாகக் குழு, மத்திய அமைச்சரவையிலிருந்து தயாநிதிமாறனை விலக்கிக் கொள்ளும் அதிகாரத்தை தலைவருக்கும், பொதுச் செயலாளருக்கும் வழங்கி தீர்மானம் நிறைவேற்றியது. அன்றைய தினம் கனத்த இதயத்துடன் கூட்டரங்கத்தை விட்டு வெளியேறிய கலைஞர், பத்திரிகையாளர்கள் சந்திப்பைத் தவிர்த்தார். அந்தச் செய்தி நாடு முழுவதிலும் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அடுத்து பதின்மூன்று நாட்களுக்குப் பிறகு, மே 27_ம் தேதி தி.மு.க.,…
-
- 1 reply
- 1.2k views
-
-
அறுபத்தெட்டு நாட்களுக்குப் பிறகு மீனவர்கள் மீண்டு வந்தது குமரியில் சந்தோஷத் திருவிழாவாகக் கொண்டாடப்பட்டபோதும்இ அவர்கள் கடத்தப்பட்டது சம்பந்தமான மர்மம் இன்னும் முழுமையாக விலகியபாடில்லை. ராமேஸ்வரம் அருகே நடுக்கடலில் மாயமான பன்னிரண்டு மீனவர்களைக் கடத்தியது சிங்கள ராணுவமா? விடுதலைப்புலிகளா? என பட்டிமன்ற ரேஞ்சுக்கு விவாதங்கள் நடைபெற்றுக்கொண்டிருந்தன. தமிழக டி.ஜி.பி. முகர்ஜிஇ ‘கடத்தியது விடுதலைப்புலிகள்தான்’ என உறுதியாக கருத்துத் தெரிவித்து வந்தார். கடந்த மார்ச் ஆறாம் தேதி எப்படி மர்மமாக அவர்கள் கடத்தப்பட்டார்களோஇ அதேபோல கடந்த பதினெட்டாம் தேதி இரவு ராமேஸ்வரம் கடல் பகுதியில் கொண்டு வந்து விடப்பட்டிருக்கிறார்கள். மீண்டு வந்த மீனவர்களில் பத்துப் பேர் குமரி மாவட்டம் குளச்…
-
- 2 replies
- 1.4k views
-
-
பெண்களின் கைகளுக்கு மாறிக் கொண்டிருக்கிறது உலக அதிகாரம்! உலகின் சக்திமிக்க பெண்கள் ஒரு பார்வை. இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பிறகு ஏற்பாடு செய்யப்பட்ட ஐ.நா தலைமையிலான உலக அரசுகளும்இ அவைகளின் ஆட்சிகளும் ஆண்களின் கைகளில் இருந்து இப்போது பெண்களின் கைகளுக்கு மாறியவண்ணமுள்ளன. ஆண்களின் சலிப்பு மிக்க ஆட்சி மறையஇ பெண்களின் அதிகாரம் உலக அரங்கில் வேகமாகப் பரவுகிறது. அரசியல் மட்டுமல்லாமல்இ நிர்வாக மையங்களிலும் பெண்களின் மேலாதிக்கம் படிப்படியாகக் கையோங்கி வருகிறது. ஐரோப்பிய அரங்கில் பெண்களின் சிறப்பு 1979 முதல் 1990 வரை ஆட்சி செய்த இரும்புப் பெண்மணி மாக்கிரட் தாட்சர் காலமேயாகும். தற்போது ஜேர்மனியில் புதிய சான்சிலராக தெரிவான அஞ்சலா மார்க்கிலின் வருகைக்குப் பின்னர் ஐரோ…
-
- 5 replies
- 2.9k views
-
-
குமார் பொன்னம்பலம் பற்றி தமிழர் மனித உரிமைகள் மையம் இவ்வாறு கூறுகிறது. அவர் இலங்கையின் பிரபலகுற்றவியல் வழக்கறிஞர். பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்காக வாதடியவர். சட்டமா அதிபர் திணைக்களத்தின் தகவல்களின் படி பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தொடரப்பட்ட 98வீதமான வழக்குகளில் எதிரிகளுக்காக தோன்றி வாதடியவர். கிருஷாந்தி கொலை வழக்கு மற்றும் செம்மணியில் படுகொலை செய்யப்பட்ட 18 பொதுமக்களின் படுகொலை வழக்கு உட்பட ஸ்ரீலங்கா அரசாங்கத்தின் மனித உரிமை மீறல்களை அம்பலப்படுத்தும் வழக்குகளில் தோன்றி வாதாடியவர். மனித உரிமைகளை மீறிவந்த சிறீலங்கா அரசாங்கத்திற்கு அவரின் செயல்கள் சவாலாக இருந்தது. அரசு தலைவராக இருந்த சந்திரிக்கா பண்டாரநாயக்காவின…
-
- 0 replies
- 1.1k views
-
-
பஞ்சாப் மாநிலமே இப்போது அதிகபட்ச கொதிநிலையில் இருக்கிறது. உறையில் இருந்து உருவப்பட்ட வாளைக் கையில் ஏந்தியபடிஇ முகத்தில் கோபம் கொப்புளிக்க தெருவில் சீக்கியர்கள் ஒருவருக்கொருவர் ஆவேசமாக மோதிக்கொண்டிருந்தால்இ ஏன் அனல் பறக்காது? எங்கு பார்த்தாலும் சாலை மறியல்இ கடை உடைப்புஇ கல்வீச்சு என்று பஞ்சாப் மாநிலமே அல்லோலகல்லோலப் பட்டுக்கொண்டிருக்கிறது. சீக்கியர்களின் புண்ணிய பூமியான பஞ்சாப்இ திடீரென கலவர பூமியாக அவதாரம் எடுத்திருப்பதற்கு என்னதான் காரணம்? குர்மித்சிங் ராம் ரஹீம் என்பவரது புகைப்படம்தான் இத்தனை காரியங்களுக்கும் பிள்ளையார்சுழி போட்டிருக்கிறது. ‘தேரா சச்சா சவுதா’ என்பது சீக்கிய மதத்தின் உட்பிரிவுகளுள் ஒன்று. இதன் தலைவராக செயல்பட்டுக் கொண்டிருப்பவர் ராம் ரஹீம். இ…
-
- 0 replies
- 916 views
-
-
ரத்தக் கறைகளோடு தம்மை தரிசிக்க வந்த சிங்கள அதிபர் ராஜபட்சேக்கு, போப்பாண்டவர் நல்ல புத்திமதி சொல்லியிருக்கிறார். ‘மனித உரிமைகளுக்கு மதிப்புத் தாருங்கள். மனித உரிமைகளை மீறாதீர்கள். விடுதலைப்புலிகளுடன் பேசுங்கள்’ என்று அவர் கூறியிருக்கிறார். அநியாயக்காரர்கள் ஏசுபிரானை ரத்தம் சிந்த வைத்தனர். சிங்கள இனவாதிகள் தமிழ் இனத்தையே ரத்தம் சிந்தவைக்கிறார்கள். போப்பாண்டவர்கள் போன்ற நல்லோர், எப்படி அந்த மனிதப் படுகொலைகளைச் சகித்துக் கொள்ள முடியும்? அவர்கள் இனம், மொழி, நாடு என்ற எல்லைகள் கடந்த புனித ஆத்மாக்கள் அல்லவா? உலக வங்கியிடம் வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த முடியவில்லை. அதனால் இலங்கை தவிக்கிறது. அந்தக் கடனைக் கட்ட கடனுதவி செய்யும்படி பிரிட்டனை சிங்கள அரசு கேட்டுக் கொண்ட…
-
- 4 replies
- 1.4k views
-
-
ராணுவமில்லாத நாடுகள் உலகில் மிகப் பெரிய ராணுவம் உள்ள நாடு சீனா என்பது எல்லோருக்கும் தொரியும். இரண்டரை கோடி பேர் சீன ராணு வத்தில் பணியாற்றிவருகிறார்கள். இதில் 2 கோடி பேர்கள் வரை தரைப் படையிலும் ஏனையோர் கப்பல், விமானம் போன்ற படைவீரர்களா கவும் பணியாற்றி வருகிறhர்கள். இதுதான் உலகின் மிகப்பொரிய ராணுவ நாட்டின் கதை. அதே சமயம் ஒரே ஒரு ராணுவ வீரர்கூட இல்லாத நாடுகளும் இந்த உலகில் உள்ளது என்பது ரொம்ப பேருக்குத் தொரியாது. இதில் முத லிடம் வகிப்பது வாடிகன் நாடாகும். 0.4 சதுர கிலோ மீட்டர் சுற்றளவே இந்த நாட்டுக்கு உள்ளது. இங்குள்ள மக்கள் தொகையோ 900 பேர்கள் தான் இந்தகுட்டி நாடு எப்படி ஒரு ராணுவத்தை வைக்க முடியும். அப்படியே ராணுவம் இருந்தாலும் இந்த குட்டி ராணுவப் படையால் பிற நாட…
-
- 4 replies
- 2k views
-
-
ரீ.ரீஎன் தொலைக்காட்சியில் வரும் முக்கியமான நிகழ்வுகளை கண்டுகளியுங்கள். www.mms://66.135.40.34/sk www.tamilvision.tv
-
- 11 replies
- 2.5k views
-
-
என் இனிய வலைத்தமிழ் மக்களே...! "புரட்டுக்காரியின் உருட்டு விழிகளில் உலகைக் காண்பவரே.." என்று என்றைக்கோ 'மனோகரா' படத்திற்காக கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம், இன்று அவரையே திரும்பிப் பார்க்கவும், படிக்கவும் வைத்திருக்கிறது. 'அன்பான அப்பா', 'பாசமான தாத்தா' என்று தமிழகம் முழுவதும் அறியப்பட்ட கலைஞர் கருணாநிதிக்கு, தற்போது ஏற்பட்டுள்ள சோதனை குறித்து தமிழகம் முழுக்கவே, சாலமன்பாப்பையா தலைமை தாங்காதப் பட்டிமன்றங்களாக ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. 'தினகரன்' பத்திரிக்கை தாக்கப்பட்டபோது தயாநிதி மாறன் டெல்லியில் இருந்தார். அங்கிருந்தே கலைஞரைத் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். அப்போதே "தலைவர் ரொம்பக் கோபமா இருக்கார்.. நீங்க மெட்ராஸ¤க்கு வந்துட்டு, அப்புறமா பேசுங்…
-
- 2 replies
- 10k views
-
-
என் இனிய வலைத்தமிழ் மக்களே...! "புரட்டுக்காரியின் உருட்டு விழிகளில் உலகைக் காண்பவரே.." என்று என்றைக்கோ 'மனோகரா' படத்திற்காக கலைஞர் கருணாநிதி எழுதிய வசனம், இன்று அவரையே திரும்பிப் பார்க்கவும், படிக்கவும் வைத்திருக்கிறது. 'அன்பான அப்பா', 'பாசமான தாத்தா' என்று தமிழகம் முழுவதும் அறியப்பட்ட கலைஞர் கருணாநிதிக்கு, தற்போது ஏற்பட்டுள்ள சோதனை குறித்து தமிழகம் முழுக்கவே, சாலமன்பாப்பையா தலைமை தாங்காதப் பட்டிமன்றங்களாக ஆங்காங்கே நடந்து கொண்டிருக்கிறது. 'தினகரன்' பத்திரிக்கை தாக்கப்பட்டபோது தயாநிதி மாறன் டெல்லியில் இருந்தார். அங்கிருந்தே கலைஞரைத் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளார். அப்போதே "தலைவர் ரொம்பக் கோபமா இருக்கார்.. நீங்க மெட்ராஸ¤க்கு வந்துட்டு, அப்புறமா பேசுங்…
-
- 0 replies
- 1.1k views
-
-
தென்னிலங்கை அரசுக்கு தேன்னிலவு அமெரிக்காவுடனா, அல்லது இந்தியாவுடன்தானா ? சில வாரங்களாகச் சேது சமுத்திரத்திட்டம் பற்றி, பலர் பேசுவதையும், எழுதுவதையும் வாசகர் எல்லோரும் அறிந்ததே. பல ஊடகங்களும், ஆய்வு அமைப்புக்களும்;, சேது சமுத்திர திட்டத்தின் வரலாறு பற்றியும்@ பௌதீக, சூழல், காலநிலை மாற்றங்கள் பற்றியும்;@ மற்றும் பொருளாதார, அரசியல் தாக்கங்கள் பற்றியும் பலவித, ஆய்வுகளையும,; கட்டுரைகளையும் எழுதியுள்ளன, நடாத்தியுள்ளன. அதுமட்டுமல்ல. அறிஞர்கள் என்று சொல்லப்படுவர்கள் பலரும், கருத்தரங்குகளை நடாத்தியும், 'சுஎஸ்" (ளுரநண) கால்வாய் போன்ற கடல் இணைப்புத் திட்டங்களோடு இதை ஒப்பிட்டும், எதிர் காலத்தில் தமிழ்த் தேசம் அனுபவிக்கப்போகும் அனுகூலங்கள் பற்றியும் எதிர்கூறல்களையும் செய்…
-
- 2 replies
- 1.4k views
-
-
ஈழப் பிரச்சினையில் - மேல்சாதியினரின் மிரட்டல்! இராணுவத்தின் முப்படைகளையும் - தமிழர்கள் மீது ஏவி, அவர்களைப் படுகொலைக்கு உள்ளாக்கி, வாழ்வுரிமையைப் பறித்து வரும் சிறீலங்கா அரசிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும், உரிமைகளை மீட்டெடுக்கவும், ஈழத் தமிழ் மக்கள் உருவாக்கியுள்ள ராணுவம் தான் விடுதலைப் புலிகள் இயக்கம். ஈழத் தமிழர்களின் குடும்பத்திலிருந்து ஆண்களும், பெண்களும் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் சேர்ந்து, தங்களின் விடுதலைக்காக, உயிர்த் தியாகம் செய்து வருவதை உலகமே பார்த்து நிற்கிறது. ஆனால் - இந்தியாவில் மட்டும் மேல்சாதிய சக்திகள் தங்களின் ஊடக வலிமையைப் பயன்படுத்தி, தமிழ் மக்கள் உருவாக்கிய விடுதலை இயக்கத்தை பயங்கரவாதியாக சித்தரித்து, பொய்யானப் பிரச்சாரத்த…
-
- 6 replies
- 1.9k views
-
-
கிளிவெட்டி சாத்தான் தேவாரம் பாடிய வரலாறு - நெருப்பின் தொடர் ஆய்வு அப்பழுக்கற்ற, சுத்தமான, ஜனநாயக-வழிவந்த மனிதர் ஒருவர் டென்மார்க்கில் இருக்கிறார். கிழக்கின் தந்தை என்ற மகத்தான தலைமைக்கு தன்னைத் தயார்படுத்தி வந்த அந்த நபர் இப்போது சுருதி இறங்கி இணையத்தளங்களில் மறுப்புகள் வெளியிடுவதும், முகவரிகள் அறிந்து அதனை வெளியிட்டு மகாதிருப்தியடைந்து வருகிறார். அவர் வேறு யாருமல்ல கிளிவெட்டியிலிருந்த அரசமரத்தை வெட்டி சிறைக்குச் சென்று வந்த செம்மல் அருளம்பலம் குமாரதுரை என்ற காட்டுக் குமாரதுரைதான் அவர். எங்களின் இந்த இணையதளத்துக்கு ஒரு கொள்கை உண்டு. அது என்னவென்றால், தனிமனிதரை தனிப்பட்ட அவர்களது வாழ்க்கையை விமர்சிப்பதில்லை என்பதுதான் அந்தக் கொள்கை. அதே வேளை எங்கள் இனத்துக்கு…
-
- 0 replies
- 1.8k views
-
-
'இயற்கையின் சீற்றமும், செயற்கையின் சீற்றமும்' -சபேசன் (அவுஸ்திரேலியா)- இலங்கைத்தீவைப் பொறுத்தவரையில், அண்மைக்காலத்தில், மேற்குலகம் சில அதிரடிச் செயற்பாடுகளை மேற்கொண்டு வருவதை நாம் அவதானிக்க முடிகின்றது. சிறிலங்கா அரசு மீது சில அழுத்தங்களை மேற்கொள்ளுகின்ற மேற்குலகம், அதேவேளை, விடுதலையைக் கோரி நிற்கின்ற தமிழர் தரப்புமீதும் சில அழுத்தங்களை பிரயோகித்து வருகின்றது. உள்நாட்டுப் பிரச்சனை என்று முன்னர் வர்ணிக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் போராட்டம் இன்று உலக மயமாக்கப்பட்டு விட்ட இவ்வேளையில், சில கருத்துக்களை முன்வைத்துத் தர்க்கிப்பது அவசியமானது என்று நாம் கருதுகின்றோம். பிரித்தானிய நாடாளுமன்றத்தில், தமிழீழ மக்களின் தேசியப் பிரச்சனைக்குச் சார்பாக விவாதங்கள் நடைபெறுவது…
-
- 0 replies
- 1.1k views
-
-
"நிகழ்ச்சி நிரலைத் தீர்மானிக்கும் பிரபாகரன்" வான்புலிகளை முன்வைத்து ஒரு விபரணம் -பரணி கிருஸ்ணரஜனி- கடந்த 26 ஆம் திகதி மாலைப்பொழுது அல்ஜசீராத் தொலைக்காட்சியின் ஆங்கில சேவை வளைகுடா நாடுகளுக்கு பணிப்பெண்களாகச் சென்று சீரழியும் சிங்கள அபலைப் பெண்களின் கண்ணீர்க் கதைகளினூடாக சிங்களத்தின் வேறொரு முகத்தை அப்பட்டமாகத் தோலுரித்துக் கொண்டிருந்தது. சிங்கள அரச பயங்கரவாதத்திற்கு இரையாகி அல்லலுறும் எமது தமிழ்ப் பெண்களின் துயரத்திற்கு நிகரான வலியையும் கவலையையும் மனதில் விதைத்தன அந்தக் கண்ணீர்க் கதைகள். அந்த அபலைகளின் துயரத்திற்குப் பின்னான காரணமாக முன்றாம் உலக நாடுகளுக்கே பொதுவான சில பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டாலும் அதன் வழியே போகிறபோக்கில் சிங்கள அதிகார பீடம் கடும் வ…
-
- 1 reply
- 1.1k views
-
-
எம்.கே. நாராயணன்! அவர்தான் தமிழ்நாட்டில் உளவுத் துறையை பின்னணியில் இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் மர்ம மனிதராக, அதிகார வட்டாரங்களில் பேசப்படுபவர். தமிழ் ஈழத்தில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து, மிகப் பெரும் யுத்தத்துக்கு, சிறீலங்கா அரசு தயாராகி வரும் நிலையில், இந்தியாவின் உளவு நிறுவனங்கள் தமிழ்நாட்டில், தங்களது திரைமறைவுப் பணிகளை வேகம் வேகமாக முடுக்கி விட்டு வருவது பளிச்சென்று தெரிகிறது. பல்லாயிரக்கணக்கான அகதிகள் சிங்கள ராணுவத்தின் கொடூரத் தாக்குதலிலிருந்து தப்பி, குடும்பம் குடும்பமாக தமிழகம் நோக்கி அகதிகளாக ஓடி வருகிறார்கள். இந்திய கடலோரக் காவல்படை - இந்திய கப்பல் படை மற்றும் உளவுத் துறையின் மிரட்டல் கெடுபிடிகளுக்கு அஞ்சி, அகதிகளை பெரும் பொருட் செலவில் ஏற்றி வரும்…
-
- 5 replies
- 2.1k views
-
-
கூட்டு ரோந்து’ என்ற பெயரில் அரங்கேறும் கூட்டு சதி! தமிழ்நாட்டில் அலுமினியம் தொடர்பான உருளைகள், ‘பால்சு’கள், உற்பத்தி செய்வோர் எல்லோருமே இப்போது விடுதலைப்புலிகளுக்கு ஆயுதம் தயாரிக்க உதவுவோராகக் கருதப்பட்டு, கைது செய்யப்பட்டு வருகிறார்கள். தமிழ்நாட்டில் அலுமினிய உருளைகள் - உளவுத் துறையினரால் ‘அணுகுண்டுகளாக’ கருதப்படுகின்றன. அடுத்து, தமிழ்நாட்டில் பாலித்தின் துணி தயாரிப்பாளர்கள்கூட கைது செய்யப்படலாம். விடுதலைப்புலிகள் ஆயுதங்களைப் பொட்டலம்கட்ட பாலித்தின் துணி தயாரித்தவர்கள் என்று, உளவுத்துறை கூறினாலும் வியப்பதற்கு இல்லை. ஏதோ தமிழ்நாடே விடுதலைப்புலிகளின் தளமாக மாறிவிட்டதைப் போல் ஒரு பொய்யான தோற்றத்தை, உளவுத்துறை உருவாக்குகிறது. ‘தினத்தந்தி’, ‘தினகரன்’, ‘தினமலர்’,…
-
- 0 replies
- 769 views
-
-
உலகில் விமானப்படைக் கொண்ட ஒரே இயக்கம் களமிறங்கியது, ‘வான்புலி’ப் படை விடுதலைப்புலிகளின் விமானப்படை ஈழ விடுதலைப் போராட்டக் களத்தில் இறங்கி விட்டது. மார்ச் 26, 2007 - தமிழின வரலாற்றில், நீங்கா இடம்பெற்ற நாளாகும். உலகிலேயே எந்த ஆயுதம் தாங்கிப் போராடும் விடுதலை இயக்கமும் விமானப்படையைக் கொண்டிருக்கவில்லை. தமிழ்ஈழ விடுதலைப் புலிகள் மட்டுமே இந்த உலக சாதனையை நிகழ்த்தியுள்ளனர். ஏற்கனவே தரைப்படையும், கடல்படையும் தம்மிடம் கொண்டுள்ள விடுதலைப்புலிகள் இப்போது ‘வான்புலி’களையும் களத்தில் இறங்கியிருப்பது சிங்களப் பேரினவாத ஆட்சியை நிலை குலையச் செய்து விட்டது. உலகமும், வியந்து பார்க்கிறது. வன்னியிலிருந்து புறப்பட்ட புலிகளின் இரண்டு போர் விமானங்கள், கொழும்பிலிருந்து 23 கிலோ மீட்…
-
- 0 replies
- 1.4k views
-
-
ஈழத் தமிழர் ஆதரவைக் குலைத்திட உளவு நிறுவனங்களின் சதி பின்னணியில் நிற்கும் மர்ம மனிதர் எம்.கே. நாராயணன்! அவர்தான் தமிழ்நாட்டில் உளவுத் துறையை பின்னணியில் இருந்து இயக்கிக் கொண்டிருக்கும் மர்ம மனிதராக, அதிகார வட்டாரங்களில் பேசப்படுபவர். தமிழ் ஈழத்தில் போர் நிறுத்தம் முடிவுக்கு வந்து, மிகப் பெரும் யுத்தத்துக்கு, சிறீலங்கா அரசு தயாராகி வரும் நிலையில், இந்தியாவின் உளவு நிறுவனங்கள் தமிழ்நாட்டில், தங்களது திரைமறைவுப் பணிகளை வேகம் வேகமாக முடுக்கி விட்டு வருவது பளிச்சென்று தெரிகிறது. பல்லாயிரக்கணக்கான அகதிகள் சிங்கள ராணுவத்தின் கொடூரத் தாக்குதலிலிருந்து தப்பி, குடும்பம் குடும்பமாக தமிழகம் நோக்கி அகதிகளாக ஓடி வருகிறார்கள். இந்திய கடலோரக் காவல்படை - இந்திய கப்பல் …
-
- 1 reply
- 1.1k views
-
-
சீர் மங்கும் மேதினம் ` நாளை மே முதலாம் திகதி. மேதினி எங்கும் மேதினம் தொழிலாளர் திருநாள் அனுஷ்டிக்கப்படும் வேளை அது. எனினும் இம்முறை இலங்கையில் அது மே முதலாம் திகதிக்கு முதல் நாளான இன்று இடம்பெறுகின்றது. முன்னைய வருடங்களில் தசாப்தங்களில் கொண்டாடப்பட்டமைபோல எழுச்சியாக, மலர்ச்சியாக, உத்வேகத்தோடு இப்போதெல்லாம் மேதினம் அமைவதில்லை என்பது தெளிவு. உழைப்பாளர் வர்க்கத்தின் உழைப்பைப் போற்றி, அவர்களின் உரிமைகளை உறுதிப்படுத்தும் எழுச்சிக் கோஷத்தோடு கொண்டாடப்படும் மேதினத்தின் சிறப்பும், தொனியும் காலம் செல்லச் செல்ல இப்போது மங்கி வருவது கண்கூடு. இதற்குக் காரணம் என்ன? உலக ஒழுங்கு மாறி வருவதே இதற்கு அடிப்படை. அது எங்ஙனம் என்பதை இந்த உழைப்பாளர் தினத்தில் அசைபோடுவது பொர…
-
- 1 reply
- 1.1k views
-
-
இலங்கை கொடி, கண்டியை ஆண்ட கடைசி தமிழ்மன்னன் விக்ரமராஜசிங்கனுடயது. பிரித்தானியானியர் இறுதியாக கைப்பறியபிரதேசம் கண்டி ராஜ்ஜியம், ஆதலால் இலங்கை சுதந்திரம் அடைந்தபோது சம்பிரயாத முறைப்படி கண்டி தமிழ் மன்னனின் கொடியாகிய சிங்க கொடியை ஏற்றி இலங்கைக்கு சுதந்திரத்தை கொடுத்தார்கள். How national is our National Flag? By: C. V. Vivekananthan Courtesy: Sunday Times - February 2, 2003 Article Tools E-mail this article Printer friendly version Comments [ - ] Text Size [ + ] The 'Lion Flag' of the last King of Kandy, was hauled down when the Kandyan Convention was signed on March 2, 1815. Though it was buried in the sand of…
-
- 0 replies
- 1.5k views
-
-
புலிகள் வலையில் படைகளா..?? படைகள் வலையில் புலிகளா...?? விடுதலைப் புலிகளால் நடாத்தப்பட்ட கட்டு நாயக்கா விமான தள தாக்குதலின் பின் அமைதியாகவிருந்த இலங்கை இராணுவ களம் மீண்டும் களைகட்ட ஆரம்பித்துள்ளது. அண்மையில் நடந்த இராணுவ கட்டமைப்பில் ஏற்ப்படுத்தப் பட்ட மாற்றத்தின் பின் தற்போது இலங்கையில் மீண்டும் ஒரு போர் பீதி ஆரம்பித்துள்ளது. இலங்கை அரசுகளாலும் அந்த மக்களாலும் மிகவும் நேசிக்கப்படுபவரும் தமிழின அழிப்பின் கத நாயகனுமானவரும் மணலாற்றில் பல நூறு போராளிகளை காவு எடுத்தவருமான ஜெனகே பெராராவே இந்த மாற்றத்திற்காண அடிப்படை கரணமாக அமைகிறார். அண்மையில் பல படை தளங்களிற்கு சென்று அந்த கள நிலமைகளை அவதானித்து பல உத்தரவுகளையும் போரியல் தந்திரங்களையும் தெரிவித…
-
- 0 replies
- 979 views
-