Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. அரசாங்கத்துக்கு நெருக்கடியைத் தோற்றுவிக்கக்கூடிய சுமந்திரனின் பாராளுமன்றப் பேச்சு - பி.கே.பாலச்சந்திரன் - இலங்கை உள்நாட்டு போரின் இறுதிக் கட்டங்களில் இடம்பெற்றதாகக் கூறப்படுகின்ற போர்க்குற்றங்களை விசாரணை செய்வதற்கான உத்தேச நீதிச் செயன்முறையில் பணியாற்றுவதற்கு வெளிநாட்டு நீதிபதிகளை அழைப்பதை தடுக்கும் ஏற்பாடு எதுவும் நாட்டின் அரசியலமைப்பில் இல்லை என்று பாராளுமன்றத்தில் தமிழரசுக் கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட எம்.பி.யும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளருமான எம்.ஏ.சுமந்திரன் செய்த வாதம் அரசாங்கத்தை தடுமாற்றத்திற்குள்ளாக்கக் கூடியதாகும். அத்துடன் அவரை எதிர்க்கின்ற தமிழ் அரசியல்வாதிகளையும் அது ஓரங்கட்டும் வாய்ப்பு இருக்கின்றது. இலங்கை நீதிமன்றங்களுக்கு…

    • 1 reply
    • 786 views
  2. அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்றும் தமிழ்த் தரப்பினர் சாதித்தது என்ன? கிழக்கில் பறிபோகும் நிலங்கள், வழிபாட்டு இடங்கள், தொல்பொருள் ஆராட்சி என்ற பெயரில் தொடரும் கையகப்படுத்தல்கள் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? ஆதவன் வானொலியில் 30.05.21 ஞாயிறு இரவு லண்டன் நேரம் இரவு 7.00 மணிக்கு இலங்கை இந்திய நேரம் இரவு 11.30ற்கு ஒலிபரப்பாகிய நேருக்கு நேர் நிகழ்ச்சியில் நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசதுரை சந்திரகாந்தன் - பதில் அளிக்கிறார் https://soundcloud.com/user353945565/sets/nerukku-ner

    • 0 replies
    • 563 views
  3. அரசாங்கமும் தோற்றுவிட்டது, எதிர்க்கட்சிகளும் தோற்றுவிட்டன, நாடே... தோற்றுவிட்டது? நிலாந்தன். தற்பொழுது தென்னிலங்கையில் நடந்துகொண்டிருக்கும் மக்கள் எழுச்சிகள் இலங்கைத்தீவின் நவீன அரசியல் வரலாற்றில் முன்னெப்பொழுதும் ஏற்படாதவை. இதற்கு முன்பு இலங்கைத்தீவு, நாடு தழுவிய வேலை நிறுத்தங்களை கண்டிருக்கிறது. தமிழ் மக்களின் சத்தியாகிரக போராட்டத்தை கண்டிருக்கிறது. தொழிற்சங்க போராட்டங்களை கண்டிருக்கிறது. ஜேவிபியின் இரண்டு ஆயுதப் போராட்டங்களை கண்டிருக்கிறது. தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தை கண்டிருக்கிறது. தவிர கடந்த 12 ஆண்டுகளாக தமிழ் மக்கள் ஆங்காங்கே தெட்டந் தெட்டமாக நடத்தும் கவனயீர்ப்பு போராட்டங்கள், ஒருநாள் எழுத தமிழ்கள், சில நாள் P2P போன்றவற்றை கண்டிருக்கிறது. ஆனால் தென்னிலங்க…

  4. அரசாங்கம் பேச்சுவார்த்தைக்குத் தயாராகிறதா? நிலாந்தன்! பசில் ராஜபக்ஷ நிதியமைச்சராக வந்தபின் தொடர்ச்சியாக புதிய நகர்வுகளை முன்னெடுத்து வருகிறார்.ஒரு மாற்றத்தின் அலை ஏற்பட்டிருப்பதாக ஒரு தோற்றம் கட்டியெழுப்பப்படுகிறது. மாற்றத்தின் முகமாக மேற்கின் முன்னும் இந்தியாவின் முன்னும் ஐநாவின் முன்னும் தமிழ் மக்களின் முன்னும் பசில் நிறுத்தத்தப்பட்டிருக்கிறார். அரசாங்கம் எந்தெந்த முனைகளில் நெருக்கடிகளை எதிர்கொள்கிறதோ அல்லது எந்தெந்த முனைகளில் இறங்கி வந்து சுதாரிக்க வேண்டி இருக்கிறதோ அந்தந்த முனைகளில் மாற்றத்தின் முகவராக பசில் இறக்கப்க்கப்பட்டிருக்கிறார். முதலாவதாக மேற்கு நாடுகள்.அவர் ஒரு அமெரிக்கப் பிரஜை. நிதியமைச்சு வழங்கப்பட முன்பு அவர் அமெரிக்காவுக்கு போனார்.அங்கே அவருக்க…

  5. அரசாங்கம் + கொரோனா = மக்கள் -இலட்சுமணன் கொரோனா வைரஸ் தொற்று அபாயம் தொடர்பாக, அரசாங்கம் மிகமுக்கியமான வேலைத்திட்டங்களை முன்னேற்றகரமாக எடுத்துள்ள போதும், அவற்றை விளங்கிக் கொண்ட விதமும் நடந்து கொள்ளும் ஒழுங்குகளும், அரசாங்கத்துக்கு மிகச் சவாலாகவே அமைந்துள்ளன. இலங்கைத்தீவின் பல்வேறு பகுதிகளிலும் நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்குச் சட்டமும் அதை மீறுகின்ற மக்களின் செயற்பாடுகளும், சட்டத்தை மதிக்காத தன்மையின் வெளிப்பாடுகளாகவே கருதவேண்டியுள்ளன. ஊரடங்குச் சட்டம் அமுலில் உள்ள வேளையில், தேவையற்ற விதத்திலான மக்களின் நடமாட்டமும் அது தொடர்பாக அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகளும் கைதுகளும் 2,000க்கும் மேற்பட்டு இருப்பதும் சட்டத்தை மீறியதற்காகத் தடுத்து வைக்கப்பட்டுள்ள…

  6. அரசாங்கம் இந்தியாவோடு விளையாடுகிறதா? -எம்.எஸ்.எம். ஐயூப் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன அரசாங்கம், தேர்தல் வெற்றிக்காகக் கண்ணை மூடிக் கொண்டு, மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாது தடுமாறுகிறது. விலைவாசியைக் குறைப்பதாக வாக்குறுதியளித்தது. இப்போது, விலைகள் வானளாவ உயர்ந்துள்ளன. கம்பனிகளுக்குச் சொந்தமான தோட்டங்களில் தொழிலாளர்களுக்கு நாளொன்றுக்கு 1,000 ரூபாய் சம்பளம் வழங்குதாக வாக்குறுதி அளித்தது. இப்போது, அந்தக் கம்பனிகள் அதை வழங்க முடியாது என்கின்றன. இது போன்றதொரு நிலைமை தான், இப்போது கொழும்புத் துறைமுகத்தின் கிழக்கு முனையம் தொடர்பாக உருவாகி இருக்கிறது. கடந்த அரசாங்கம், கிழக்கு முனையத்தின் நிர்வாகத்தை, இந்திய, ஜப்பானிய நிறுவனங்களிடம் கையளிக்க ஒப்ப…

  7. அரசாங்கம் இன ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டும் கிழக்கில், மூவின மக்களும் வாழ்ந்து வருகின்றார்கள். இந்நிலையில், அரச சார்பற்ற அமைப்புகள் மாத்திரமன்றி, அரசாங்கமும் இன ஒற்றுமையை நிலைநாட்ட வேண்டிய தேவை இருக்கின்றதென, ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சி சார்பில், மட்டக்களப்பு மாவட்டத்தில், இலக்கம் 2இல் போட்டியிடும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் அக்கட்சியின் பிரதித் தலைவரும், இலங்கைத் தொழிற்பயிற்சி அதிகார சபையின் முன்ளாள் தலைவருமான நஸீர் அஹமட் தெரிவித்தார். மத ரீதியிலும் அரசியல் கட்சிகள் ரீதியிலும், இனவாதக் கருத்துகளைக் கக்குகின்ற நிலையிலிருந்து விடுபட்டு, யதார்த்தத்தைப் பேசுகின்ற அரசியல் கட்சிகளூடாகவும் தலைவர்களாகவும் இருந்து, உண்மையாகவே கிழக்கு மாகாணத்தி…

  8. அரசாங்கம் எதிர்நோக்கும் நெருக்கடி முன்­னைய ஆட்­சியில் முஸ்லிம் மக்­க­ளுக்கு எதி­ராகக் கிளர்ந்து எழுந்து வன்­செ­யல்­களில் ஈடு­பட்­டி­ருந்த பௌத்­த­வாத கடும்­போக்­கா­ளர்­களின் மத­வாதச் செயற்­பா­டு­களை இந்த அர­சாங்­கமும் ஊக்­கு­விக்­கின்­றதோ என்று சந்­தே­கப்­படும் அளவில் பொது­பல சேனா அமைப்பின் செயற்­பா­டுகள் தொடர்ந்து முன்­னெ­டுக்­கப்­ப­டு­கின்­றன. அந்த அமைப்பைப் பின்­பற்றி வேறு சும­ண­ரத்ன தேரர் போன்ற சில பௌத்த மத­கு­ரு­மார்­களும் மத­வாதச் செயற்­பா­டு­களில் ஈடு­ப­டு­வதை அர­சாங்கம் கண்டு கொள்­ளாமல் இருப்­பது முஸ்லிம் மக்­களை அதி­ருப்­தி­ய­டை­ய­வும், ஆத்­தி­ர­ம­டை­யவும் செய்­தி­ருக்­கின்­றது. இதனால் முஸ்லிம் மக்­களும் இந்த அரசாங்­கத்தைச் சந்­தே­கத்­தோடு நோக்…

  9. அரசாங்கம் வீழ்ச்சியடைவதாக ஜனாதிபதி ஏன் சொன்னார்? அரசாங்கம் வீழ்ச்சி அடைகிறது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். ஒரு நாட்டின் ஜனாதிபதியாக இருக்கக் கூடிய ஒருவர், தனது அரசாங்கம் வீழ்ச்சியடைகிறது எனக் கூறியதற்குள் அவரின் இயலாமை தெரிகிறதா? அல்லது தேசிய அரசாங்கம் என்பது ஒருபோதும் சாத்தியமற்றது என்பதைக் குறிக்கிறதா? என்ற ஐயம் எழுகிறது. கூடவே, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் போக்கு ஆளுமையற்றது என்பதைச் சொல்லாமல் சொல்வதற்காக அரசு கீழ் இறங்கிப் போகின்றது என்ற வார்த்தையை ஜனாதிபதி மைத்திரி பிரயோகித்தாரா? என்றெல்லாம் எண்ணத்தோன்றும். எதுவாயினும் மகிந்த ராஜபக்­ இருந்த கதிரையில் இன்னொருவர் இருப்பதாக இருந்தால், அவர் மகிந்தவைவிட மிகவும் வல்லமை பொருந்தியவராக, அதிரடியான …

  10. அரசாங்கம், ஐநாவை... கையாளத் தொடங்கி விட்டதா? நிலாந்தன்! ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் வாய்மூல மீளாய்வு அறிக்கை எதிர்பார்க்கப்பட்டது போலவே வெளிவந்திருக்கிறது. அது சிங்கள கூட்டு உளவியலை ஒப்பீட்டளவில் அதிகம் பயமுறுத்தாதவிதத்தில் இலங்கை முழுவதுக்குமான மனித உரிமைகள் தொடர்பான ஓர் அறிக்கை என்ற வெளித்தோற்றத்தை காட்டுகிறது. இந்த அறிக்கை இவ்வாறு அரசாங்கம் சுதாகரித்துக் கொள்வதற்கு ஒப்பீட்டளவில் அதிகரித்த வாய்ப்புக்களைக் கொண்ட ஓர் அறிக்கையாக வெளிவருவதற்கு உரிய வேலைகளை அரசாங்கம் கடந்த சில மாதங்களாக தீவிரமாகச் செய்துவந்தது. இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது தன்னை தனிச்சிங்கள மூன்றில் இரண்டு பெரும்பான்மையோடு வெற்றி பெற்ற ஓர் அரசாங்கமாகவே காட்டிக் கொண்டது. இதன்மூலம் ஏனைய தேசிய இன…

  11. அரசினை பயங்கரவாதத்திலிருந்து பாதுகாக்கும் சட்டம் (PSTA): தேசிய மக்கள் சக்தி வழிதவறிச் செல்கிறதா? Photo, Anura Kumara Dissanayake fb page வரலாறு மீண்டும் மீண்டும் எடுத்துக் காட்டியுள்ளபடி, பிரஜைகளின் நடத்தைகளைக் கட்டுப்படுத்தும் அரசாங்கத்தின் அடக்குமுறை நடவடிக்கைகள், அரசியல் ரீதியான சட்டபூர்வத்தன்மையை வலுவிழக்கச் செய்து, அரசாங்கத்திற்கு எதிரான உணர்வுகளைத் தூண்டிவிடுகின்றன. சோவியத் ஒன்றியம் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். அடக்குமுறையானது பெரும்பாலும் கருத்து வேறுபாடுகளை ஒடுக்குவதை விட, சமூக இயக்கங்களையும் அரசியல் பங்கேற்பையும் ஊக்குவிக்கவே செய்கின்றது. ஜனநாயகம் வெற்றியடையவும், நிலையான ஆட்சி வேரூன்றவும் வேண்டுமானால், அரசாங்க மறுசீரமைப்பு நடவடிக்கைகளில் பிரஜைகளை உள்வாங்கப்பட…

  12. இலங்கைக்கு உள்நாட்டு வெளிநாட்டு அழுத்தங்கள் வரும்போதேல்லம் தம்மோடு இணைந்திருக்கும் தமிழர் ஒருவரை பலி கொடுத்து புலிகள் மீது பழியைப் போட்டுவிட்டு அதிலிருந்து தப்பிக் கொள்வதுதான் வழக்கம். கடந்த காலங்களில் மகிந்த அரசின் இந்தத் திட்டம் வெகு கச்சிதமாக மிகப் புத்திசாலித்தனமாக நிறைவேற்றப்பட்டுள்ளதை பல ஆய்வாளர்கள் உறுதி செய்துள்ளார்கள். இதுவே தமிழீழ விடுதலைப் புலிகள் களத்தை அழிப்பதற்கு சிங்கள அரசு கையாண்ட மிகப் பெரிய தந்திரம். சிங்கள அரசிற்கு மிகுந்த நம்பிக்கையுடன் உழைத்த முன்னாள் வெளிநாட்டமைச்சர் கதிர்காமர், நீலன் திருச்செல்வம் ஆகியோரை கொலை செய்தது சிங்கள அரசு. ஆனால் அவற்றை புலிகள்தான் செய்தார்கள் என்பதை மிகத்திறமான பரப்புரையின் மூலம் உலகை நம்ப வைத்தது சிங்கள அரசு. அந்…

  13. அரசின் உள்ளகப் பொறிமுறைக்குள் தமிழ் மக்கள் பிரச்சினையை சிக்க வைக்க கூடாது. ரெலோ கோரிக்கை. கு சுரேந்திரன் ஊடகப் பேச்சாளர் தமிழ் ஈழ விடுதலை இயக்கம் -ரெலோ தமிழ் தேசியக் கூட்டமைப்பு சர்வதேச அழுத்தங்களை நீர்த்துப் போக வைக்கும் அரசின் நகர்விற்கு இடமளிக்க முடியாது. நல்லிணக்க கோரிக்கைகளை கையாளுவதில் அவதானம் தேவை. 25 மார்ச் 2022 அன்று காலை பத்தரை மணியளவில் ஜனாதிபதியின் தலைமையில் அரச தரப்பினருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளாகிய தமிழரசுக் கட்சிக்கும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்திற்கும் (புள…

    • 0 replies
    • 262 views
  14. அரசின் காய் நகர்த்தல்களும் தமிழ் தேசிய இனத்தின் இருப்பும் புதிய அர­சி­ய­ல­மைப்பை நடை­மு­றைப்­ப­டுத்தி அதில், இனப்­பி­ரச்சினைக்­கான நிரந்­தர தீர்வு வழங்­கப்­பட்டு விட்­ட­தாக சர்­வ­தேச சமூ­கத்­திற்கு காட்ட இந்த அர­சாங்கம் எத்­த­னிக்­கின்­றது. அதன் மூலம் சர்­வ­தேச அழுத்­தத்தை இல்­லாமல் செய்­வ­துடன், தமிழ் தேசிய இனத்தின் பிரச்­சி­னையை தீர்த்து விட்­ட­தாக கூறி சர்­வ­தேச மட்­டத்தில் தமிழ் மக்கள் சார்­பா­க­வுள்ள ஆத­ரவு நிலையை இல்­லாமல் செய்­வ­தற்­கான முயற்­சிகள் இடம்­பெ­று­கிக்­றது. தமிழ் மக்களது அபிலாஷைகளை புறக்கணித்த அரசாங்கம் தீர்வுத் திட்டம் என புதிய அரசியலமைப்பை திணிக்க முயல்வது என்பது எதிர்காலத்தில் தமிழ் இனத்தின் தனித்துவ அடையாளங்களையும், இருப்பையும் கே…

  15. அரசின் செயற்பாட்டுத் தாமதத்தால் அரசுக்கே ஆபத்து இன்­றைய நல்­லாட்சி அரசு பத­வி­யேற்ற ஆரம்ப கால­கட்­டத்­தில், தேர்­தல் வேளை­யில் நாட்டு மக்­க­ளுக்கு வழங்­கிய வாக்­கு­று­தி­க­ளுக்­க­மைய தனது செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க முயன்­றதை அவ­தா­னிக்க முடிந்­தது. பொதுமக்கள் தமது எத்­த­கைய கருத்தை வெளிப்­ப­டுத்­த­வும், அச்­சம் எது­வு­மின்றி அர­சின் செயற்­பா­டு­களை விமர்­சிக்­கவும் வாய்ப்­புக்கிட்­டி­ய­தோடு அத்­த­கைய சுதந்­தி­ரம் தற்­போ­தும் தொடர்­கி­றது என்­பது முக்­கி­ யத்­து­வம் மிக்­க­தா­கும். அத்­த­கைய பின்­ன­ணி­யில் கருத்து வௌிப்படுத்தும் சுதந்­திர கலா­சா­ர­மொன்று நாட்­டில் உரு­வா­னது என்­ப­தை­யும் மறுப்­ப­தற்­கில்லை. ஆனா­லும் ஆட்­சி­யைக் கைப்­ப…

  16. -கே.சஞ்சயன் தமிழ்நாட்டில் தணிந்து போய்க்கிடந்த இலங்கை அரசுக்கு எதிரான உணர்வலைகள், இப்போது மீண்டும் கொதி நிலைக்கு வந்திருக்கின்றன. இதற்கு, இலங்கைத் தமிழர் பிரச்சினையோ அல்லது தமிழ்நாட்டில் உள்ள புலிகளின் ஆதரவாளர்களோ காரணமல்ல. இலங்கை பாதுகாப்பு அமைச்சே இந்த பிரச்சினையை உருவாக்கி விட்டது. எங்கோ சிறகடித்துப் பறக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட இந்திய - இலங்கை உறவுகளுக்கு கடிவாளம் போட்டு அடக்கி விடும் சூழலை பாதுகாப்பு அமைச்சே ஏற்படுத்தி விட்டது. ஒரு வகையில் சொல்லப் போனால், இதனை யானை தன் தலையில் மண்ணை வாரியது போல என்று கூறலாம். ஏனென்றால், புதுடெல்லியில் இரண்டு மாதங்களுக்கு முன்னர் அமைந்த நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசாங்கம், கொழும்புக்குச் சாதகமான உற்சாகத்தை ஏற்படுத்தத்தக்க …

  17. அரசின் மீதான அழுத்தத்தை பயன்படுத்த தவறும் கூட்டமைப்பு நிலை­மாறு கால நீதியை நிலை­நாட்டி, நல்­லி­ணக்­கத்தை ஏற்­ப­டுத்­து­வ­தற்கு பல நட­வ­டிக்­கை­களை அர­சாங்கம் உளப்­பூர்­வ­மாக முன்­னெ­டுத்­தி­ருக்க வேண்டும். ஆனால் அந்த வகையில் அர­சாங்கம் செயற்­படத் தவ­றி­யி­ருக்­கின்­றது. அதன் கார­ண­மாக ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் அரசு சிக்­கல்­பட்டுக் கொண்­டி­ருப்­ப­தா­கவும், அங்கு எழுப்­பப்­ப­டு­கின்ற பல்­வேறு வினாக்­க­ளுக்கு ஆக்­க­பூர்­வ­மாகப் பதி­ல­ளிக்க முடி­யாமல் தடு­மாற நேர்ந்­தி­ருப்­ப­தா­கவும் தக­வல்கள் வந்து கொண்­டி­ருக்­கின்­றன. மனித உரிமை மீறல்கள், யுத்­தக்­குற்றச் செயற்­பா­டுகள் என்­ப­வற்­றிற்குப் பொறுப்பு கூறு­வதில் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் ப…

  18. அரசின் வாக்குறுதியை நம்பத் தயாரில்லை : விரக்தியின் விளிம்பில் சர்வதேசம்! -கார்வண்ணன் ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானத்துக்கு பிரதான அனுசரணை வழங்கிய நாடுகள், அரசாங்கத்தின் உள்நாட்டுப் பொறிமுறைகளின் மீது நம்பிக்கையில்லை என்ற முடிவுக்கு வந்து விட்டன. கடந்தவாரம் தொடங்கிய ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 45 ஆவது கூட்டத்தொடரில், நாடுகளின் மனித உரிமைகள் நிலை குறித்த தமது அறிக்கையில், ஐ.நா மனித உரிமை ஆணையாளர் மிச்சேல் பசெலெட் அம்மையாரும் அதே கருத்தை தான் வெளியிட்டிருந்தார். இலங்கை தொடர்பாக, புதிய கவனத்தை செலுத்த வேண்டும் என்று அவர் பேரவையின் உறுப்பு நாடுகளிடம் கோரியிருந்தார். அதற்குப் பின்னரே, இணை அனுசரணை நாடுகளின் சார்பில் உரையாற்றிய…

  19. அரசின் வியூகத்தை உடைத்த அமெரிக்கா (கே. சஞ்சயன்) ஜெனீவாவில் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடர் இடம்பெற்றுக் கொண்டிருந்த போதும், அதற்கு முன்னரும், அரசதரப்பு செய்து வந்து பிரசாரங்களைப் பொய்ப்பிக்கின்ற வகையில், அமெரிக்க காங்கிரஸில் கடந்தவாரம் அறிக்கை ஒன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஒரு பிரிவான – போர்க்குற்றங்கள், மனித உரிமைமீறல் விவகாரங்களைக் கையாளும் - குற்றவியல் நீதிப் பணியகமே இந்த அறிக்கையைச் சமர்ப்பித்துள்ளது. குற்றவியல் நீதிப் பணியகத்துக்குப் பொறுப்பான ஸ்டீபன் ராப், கடந்த பெப்ரவரி மாதத் தொடக்கத்தில் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். அவரது பயணத்தை அடிப்படையாக வைத்து, 2010 ஓகஸ்ட் 11ம் திகதி சமர்ப்பிக்கப்ப…

    • 0 replies
    • 709 views
  20. அரசியற் கட்சிகளிடையே பொது உடன்பாடு: சிவில் சமூகத்தின் முயற்சிகளும் தமிழரசுக் கட்சியின் நேரமின்மையும் முத்துக்குமார் அண்மைக்காலமாக தமிழ் அரசியலில் மூன்று முக்கிய விடயங்கள் பேசுபொருளாகியுள்ளன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தென்னாபிரிக்க விஜயம், தமிழ் சிவில் சமூகத்தின் தமிழ் அரசியற் கட்சிகளுடனான பேச்சுவார்த்தை முயற்சிகள். பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் அலுவலகத்தில் வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டதாகக் கூறப்பட்டமை என்பனவே அம் மூன்றுமாகும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தென்னாபிரிக்க விஜயம் தற்போது உறுதியாகிவிட்டது. ஜனவரி 29ம் திகதி அவர்கள் செல்லவிருப்பதாக செய்திகள் வருகின்றன. அரசாங்கத்திற்கு ஜெனிவா நெருக்கடிகள் வருகின்ற போதெல்லாம் சம்பந்தன் ஓடிச்சென்று அரசாங்கத்தைப…

  21. அரசியற் கைதிகளின் விடுதலை – திறப்பு யாருடைய கையில்? நிலாந்தன் அரசியல்க் கைதிகளின் விடுதலை தொடர்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் ரெம்பிள் றோட்டில் அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையக் காரியாலயத்தில் ஒரு கூட்டம் ஒழுங்கு செய்யப்பட்டது. அரசியல்க் கைதிகள் தொடர்பாக அதிகம் போராடி வருகின்ற, அதிகம் பேசி வருகின்ற, அதிகளவு சந்திப்புக்களை மேற்கொண்டு வருகின்ற ஒரு செயற்பாட்டாளரும், அங்கிலிக்கன் மதகுருவுமாகிய பாஃதர் சக்திவேல் மேற்படிக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். தற்பொழுது தமிழ் அரங்கிலுள்ள பெரும்பாலான மக்கள் பிரதிநிதிகளை விடவும் மிகவும் தெளிவாகவும், செறிவாகவும், அறிவு பூர்வமாகவும் அவர் உரையாற்றினார். அரசியற் கைதிகளுக்கு பொது மன்னிப்போ புனர்வ…

  22. அரசியற் கைதிகளை முன்வைத்து விவாதிக்கப்பட வேண்டியவை – நிலாந்தன் October 21, 2018 அரசியற் கைதிகளை விடுவிப்பதற்காக கடந்த வெள்ளிக்கு முதல் வெள்ளிக்கிழமை கைதடியில் மாகாணசபைக் கேட்போர் கூடத்தில் நடந்த சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சித்தார்த்தனும் பங்குபற்றினார். அதில் அவர் ஒரு விடயத்தைச் சொன்னார். கைதிகள் உண்ணாவிரதத்தைத் தொடங்கிய சில நாட்களில் அங்கு தான் போனதாகவும் அவர்களைக் கண்டு கதைத்தபின் அடுத்தடுத்த நாளே பிரதமரை சந்தித்ததாகவும், கதைத்ததாகவும் சொன்னார். பிரதமர் எல்லாவற்றையும் கேட்டபின் பொறுங்கள் சட்டமா அதிபர், நீதி அமைச்சர் போன்றோரோடு பேசிய பின் முடிவைச் சொல்கிறேன் என்று சொன்னாராம். சித்தார்த்தன் விடாமல் தொடர்ந்து வற்புறுத்தியிருக்கிறார். கைதிகள…

  23. அரசியற் கைதிகள் விடுவிக்கப்படவில்லை வாக்குறுதிகளே வழங்கப்பட்டுள்ளன நிலாந்தன் ஒரு சிவில் செயற்பாட்டாளர் என்னிடம் கேட்டார். அரசியற்கைதிகளின் போராட்டம் எனப்படுவது பிரதானமாக சிறைக்கு வெளியிலேயே முன்னெடுக்கப்பட வேண்டிய ஒன்று. எனவே இது தொடர்பில் சிறைக்கு வெளியே போராட்டத்தை முன்னெடுக்கக் கூடிய தரப்புக்களோடு கைதிகள் தமது போராட்டத்தைக் குறித்து திட்டமிட்டவர்களா? இப்போராட்டம் ஏன் கடந்த ஆண்டு தோல்வியுற்றது என்பதைக் குறித்து ஆழமாக ஆராயப்பட்டதா? உணவை ஓர் ஆயுதமாக எத்தனை தடவைகள் பயன்படுத்தலாம்? கடந்த ஆண்டு கைதிகளுக்கு வாக்குறுதி வழங்கி போராட்டம் முடித்து வைக்கப்பட்ட போது அதிலிருந்து மாணவப்பிரதிநிதிகள் அவ்வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்ற முடியாமல் போயிற்று என்பதைக் குறித்து ஆழமாக ஆராய்…

  24. அரசியற் கைதிகள் விவகாரத்தின் பின்னால் அரசின் பெரும் சூழ்ச்சி இருக்கிறது! - குணா கவியழகன் நேர்காணல் இனப்படுகொலை விவகாரத்தை இராணுவ அத்துமீறலாகச் சுருக்கும் முனைப்புடன் அரசியல் கைதிகள் விடுவிப்புத் தொடர்பான விவகாரம் சிறிலங்கா அரசாங்கத்தினால் கையாளப்படுவதாக எழுத்தாளர் குணா கவியழகன் பொங்குதமிழுக்குத் தெரிவித்துள்ளார். கடந்த சனியன்று தனது 'விடமேறிய கனவு' நாவல் அறிமுக அரங்கில் பங்கேற்பதற்காக குணா கவியழகன் நோர்வேக்கு வருகை தந்திருந்த போது அரசியல் கைதிகள் விவகாரம் தொடர்பாக அவருடன் நேர்காணல் ஒன்றினை மேற்கொண்டிருந்தோம். அரசியல் கைதிகள் விடுதலை பற்றிய வாக்குறுதிகள் சில மாதம் முன்னரே வழங்கப்பட்டிருந்தன. ஆட்சிமாற்றத்தின் பின் இலகுவில் நடந்துவிடுமென நம்பப்…

  25. அரசியலமைப்பாக்க சபையின் (Constitutional Assembly) வழிநடத்தல் குழு (Steering Committee) டிசம்பர் 10 அன்று தனது அறிக்கையை சமர்ப்பித்திருக்க வேண்டும். ஆனால், அறிக்கை பிற்போடப்பட்டது. அதற்குப் பதிலாக அன்றைய தினமே வழிநடத்தல் குழுவின் தலைவர் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வழிநடத்தல் குழுவின் ஒரு தற்காலிக உப குழு (adhoc sub-committee) ஒன்றின் அறிக்கையை தாக்கல் செய்தார். அரசியலமைப்பாக்க சபை மார்ச் 2016இல் உருவாக்கப்பட்ட போதே வழிநடத்தல் குழு ஸ்தாபிக்கப்பட்டது. அதற்கு 6 உப குழுக்களும் ஸ்தாபிக்கப்பட்டன. அவ்வுபகுழுக்களின் அறிக்கை 19 நவம்பர் 2016 அரசியலமைப்பாக்க சபையில் தாக்கல் செய்யப்பட்டது. இது இப்படியிருக்க ஏன் முன்னர் அறிவிக்கப்படாத ஓர் உபகுழு திடீரென உருவாக்கப்பட்டது என்ற கேள்வி எழு…

    • 0 replies
    • 471 views

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.