Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அரசியல் அலசல்

அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.

  1. இலங்கையின் எரிசக்தி துறையில் சீனாவின் ஆக்ரோஷம் இலங்கையில் எரிசக்தி செல்வாக்குக்காக இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையிலான போட்டி இருதரப்பு உறவுகளுக்கு அப்பால் பரந்த தாக்கங்களை கொண்டுள்ளன. இரு நாடுகளும் மூலோபாய மேலாதிக்கத்துக்காக போட்டியிடும் இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், இது புவிசார் அரசியல் போட்டியின் ஒரு பகுதியாகும். இலங்கையின் மூலோபாய இருப்பிடம் மற்றும் அதன் எரிசக்தி வளங்கள் இந்த அதிகாரப் போராட்டத்துக்குள் சிக்கிவிடும் நிலை உள்ளது... இலங்கையின் எரிசக்தி துறையில் சீன…

    • 0 replies
    • 349 views
  2. பரீட்சை எழுதிய பிள்ளைகள் செய்த குழப்படி – நிலாந்தன். adminJune 18, 2023 அண்மையில் ஓ/எல் பரீட்சை எழுதிய மாணவர்கள் பரீட்சைகள் முடிந்த கடைசி நாளன்று வகுப்பறைகளிலும் வகுப்புக்கு வெளியேயும் அட்டகாசம் செய்ததாக சில ஒளிப்படங்கள் வெளியாகின. இந்த ஒளிப்படங்களை வைத்து மூன்று விதமான கருத்துக்கள் கூறப்பட்டன. முதலாவது, சில மாணவர்கள் செய்த குழப்படிகளுக்காக எல்லா மாணவர்களையும் குற்றங் கூறக்கூடாது என்று. இரண்டாவது,அந்த வயதுக்கு அவர்கள் அப்படித்தான் இருப்பார்கள். அவர்கள் அந்த மகிழ்ச்சியை அனுபவிக்க விடுங்கள் என்பது. மூன்றாவது, ஆசிரியர்களின் கைகளில் இருந்து பிரம்பு பறிக்கப்பட்டதால் மாணவர்கள் தறிகெட்டுப் போய்விட்டார்கள் என்ற குற்றச்சாட்டு. பரீட்சை முடிந்த கடைசி நாளைக் கொண்ட…

  3. சம்பந்தரை எரிச்சலூட்டிய ரணில் புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன்,“...எந்தவித முன்னேற்றமும் இல்லாத நிலையில், தொடர்ந்தும் அரசாங்கத்தோடு பேச்சுவார்த்தை நடத்துவதால் எந்தப் பயனும் இல்லை..” என்று ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் தெரிவித்திருக்கின்றார். ஜனாதிபதிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தை கடந்த வாரம் இடம்பெற்றது. இந்தப் பேச்சுவார்த்தையில் டெலோ, புளொட் அமைப்புகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரமே கலந்து கொண்டிருந்தனர். இந்தப் பேச்சுவார்த்தையில், ஜனாதிபதியின் கருத்துகளுக்கு பதிலளித்து பே…

  4. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தின் கைது என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தார் என்ற குற்றச்சாட்டின் பெயரில், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் பொதுச் செயலாளருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் கடந்த ஏழாம் திகதி காலை கொள்ளுப்பிட்டியிலுள்ள அவரது வீட்டில் வைத்து கைது செய்யப்பட்டு, கிளிநொச்சி அழைத்துச் செல்லப்பட்டு, கிளிநொச்சி பொலிஸின் வாக்குமூலம் பெற்ற பின்னர், கிளிநொச்சி நீதவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டு, பிணையில் விடுதலை செய்யப்பட்டிருக்கிறார். பொலிஸார் சந்தேகத்தின் பெயரில் கைது செய்வதிலும், உடனே நீதவான் முன்பு ஆஜர் படுத்துவதிலும், குற்றஞ்சாட்டப்பட்டவர் பிணையில் விடு…

  5. முன்னணிக்கு எதிரான அச்சுறுத்தலும் இன்னும் சிலவும் புருஜோத்தமன் தங்கமயில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், கொழுப்பிலுள்ள அவரது இல்லத்தில் வைத்து புதன்கிழமை காலை பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். பாராளுமன்றத்தில் சிறப்புரிமை விடயத்தை எழுப்பி உரையாற்ற இருந்த நிலையில், அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடமராட்சி கிழக்கிலுள்ள விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகளுடனான சந்திப்பொன்றை கடந்த இரண்டாம் திகதி பிற்பகலில், மருதங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் நடத்தினார். அப்போது அங்கு வந்த, தங்களை யார் என வெளிப்படுத்தாத நபர்கள் இருவர், சந்திப்புக்கு இடையூறு விளைவிக்கும்…

  6. சர்வதேச ஒப்பந்தத்தை இரத்துச் செய்வது சாத்தியமா?? இலங்கையில் மாகாண சபைகளுக்கான தேர்தல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கும் மேலாகின்ற காலத்தில் நடத்தப்படாது கிடப்பில் போடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆளும் தரப்பின் களுத்துறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித்த அபேகுணவர்த்தன, மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்துங்கள், இல்லாது விட்டால் வெள்ளை யானைகளாக உள்ள மாகாண சபைகளை கலைத்து விடுங்கள் என்று கூறியிருக்கின்றார். உண்மையில் மாகாண சபைகள் முறையானது இலங்கை, இந்திய ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டதன் அடிப்படையில் இலங்கையின் அரசியலமைப்பில் மேற்கொள்ளப்பட்ட 13ஆவது திருத்தத்திற்கு அமைவாகவே உருவாக்கப்பட்டதாகும். இந்த மாகாண சபைகள் முறையானது, வெறுமனே நிருவாகக் கட்டம…

  7. ரணிலுடன் பேசுதல் ? - யதீந்திரா தமிழ் கட்சிகள் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசிவருகின்றன. ரணிலுடன் பேசுவது தமிழ் கட்சிகளை பொறுத்தவரையில் புதிய விடயமல்ல. மைத்திரிபால அரசாங்கத்திலும் ரணிலுடன் பல சுற்றுப் பேச்சுக்களில் தமிழ் கட்சிகள் ஈடுபட்டிருந்தன. புதிய அரசியல் யாப்பொன்றை கொண்டுவர முடியுமென்றும் தமிழ் கட்சிகள் – குறிப்பாக இராஜவரோதயம் சம்பந்தன் அப்பாவித்தனமாக நம்பிக் கொண்டிருந்தார். அந்த அடிப்படையில் சம்பந்தன் தலைமையில் பேச்சுக்கள் இடம்பெற்றன. இறுதியில் வழமைபோல் வெறுங்கையுடன் திரும்பினர். ரணில் தந்திரமான அரசியல்வாதியென்று பெயரெடுத்த ஒருவர். ரணில், அவரது மாமனார் ஜே.ஆர்.ஜெயவர்த்தனவிடமிருந்து அரசியலை கற்றுக்கொண்டவர். தமிழ் சூழல…

  8. Published By: VISHNU 11 JUN, 2023 | 04:55 PM ஹரிகரன் “சிங்களத் தலைமைகளின் ஊடாக இந்தியாவின் நலன்களை உறுதிப்படுத்த முடியாத போது, தமிழ் தலைமைகளை வளைத்துப் போட்டு, தமிழ் அமைப்புகளுக்கு ஆயுதங்களைக் கொடுத்து, காரியம் சாதித்துக் கொண்டது இந்தியா” வடக்கு, கிழக்கில் பௌத்தமயமாக்கல் தொடர்ந்தால், இந்தியாவில் உள்ள இந்து அமைப்புகளின் உதவியைக் கோரப் போவதாகக் கூறியிருக்கிறார், பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன். ஆங்கில ஊடகம் ஒன்றில் வெளியான அவரது இந்தக் கருத்து, பரவலாக கவனிக்கப்பட்ட ஒன்று. அதேசெய்தியில், பாராளுமன்ற உறுப்பினர் மனோகணேசன், மாறுபட்ட கருத்தை கூறியிருக்கிறார். …

  9. மருதங்கேணியில் நடந்ததும் அதன் விளைவும் -நிலாந்தன் written by adminJune 11, 2023 புலனாய்வுத்துறை தமிழ்மக்களின் அரசியல்நடவடிக்கைகளைக் கண்காணிப்பது என்பது கடந்த பல தசாப்தகால யதார்த்தம். குறிப்பாக கடந்த 14 ஆண்டுகளாக தமிழ்க்கட்சிகள் மற்றும் செயற்பாட்டாளர்களின் எல்லா நடவடிக்கைகளையும் புலனாய்வுத்துறை கண்காணித்து வருகின்றது. அதை அவர்கள் நேரடியாகவும் செய்கிறார்கள்; மறைமுகமாகவும் செய்கின்றார்கள். அச்சுறுத்தலாகவும் செய்கின்றார்கள்; நாகரீகமாகவும்செய்கின்றார்கள். எதுவாயினும் , தமிழ்மக்களைக் கண்காணிக்க வேண்டும் என்ற அரசாங்கத்தின் நிகழ்ச்சிநிரலில் மாற்றம் இல்லை. ஆயுதமோதல்கள் முடிவுக்கு வந்தபின்னரும் நிலைமை அப்படித்தான் இருக்கிறது. தமிழ்மக்களை தொடர்ச்சியாகக் கண்காணிப்புக்குள…

  10. தமிழ்த் தேசியத்தை சிதைப்பதற்கான தந்திரோபாயங்கள் என்.கே அஷோக்பரன் தேசம், மற்றும் தேசியம் என்றால் என்ன என்பது மிகப்பெரியதொரு ஆய்வுப்பரப்பு. இவற்றை வரவிலக்கணப்படுத்துவது கூட சுலபமான காரியங்கள் அல்ல. புலமைத்தளத்தில் அகநிலை வரவிலக்கணங்கள், புறநிலை வரவிலக்கணங்கள் என்று பல வரவிலக்கணங்களைப் பலரும் வழங்கியிருக்கிறார்கள். என்னுடைய முன்னைய பல பத்திகளில் இவை பற்றி விரிவாகப் பேசியிருக்கிறேன். அது என்ன புறநிலையில் அணுகும் வரைவிலக்கணம்? தேசம் என்ற சொல்லை வரைவிலக்கணம் செய்த சோவியத் யூனியனின் கொம்யூனிஸ சர்வாதிகாரி ஜோசப் ஸ்டாலின், “வரலாற்று ரீதியாகக் கட்டமைந்த, பொதுவான மொழி, பொதுவான பிரதேசம், பொதுவான பொருளாதார வாழ்க்கை, பொதுக் கலாசாரத்தினூடாக வௌிப்படும் பொதுவான உளவியலமைப்பு …

  11. இலங்கையின் சக்தித்துறைக்குள் சீனா !!! இலங்கையின் ஒட்டுமொத்த வெளிநாட்டுக் கடனான 51 பில்லியன் டொலர்களுக்கும் அதிகாமான தொகையில் சீனாவுக்கு 12சதவீதம் நிலுவை காணப்பட்டுக்கொண்டிருக்கிறது. இந்நிலையில் தான், இலங்கையில் சக்திவளத்துறைக்குள் சீனா பிரவேசித்திருக்கின்றது. இந்த நிலைமையானது, இலங்கை ஒட்டுமொத்தமாக சீனாவின் பிடிக்குள் சென்றுவிடும் என்ற அச்சமான சூழலை தோற்றுவித்திருக்கின்றது. இதனால் இறைமையுள்ள இலங்கையின் எதிர்காலம் எவ்வாறு அமையப்போகின்றது என்பது தொடர்பில் பல்வேறு வாதப்பிரதிவாதங்கள் நடைபெற்று வருகின்றன. முன்னதாக கடந்த மாதம், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சின் செயலாளர் எம்.பி.டி. யூ.கே. மாபா பதிரனவும் சினோபெக் நிறுவன எரிபொருள் உற்பத்தி …

  12. நேட்டோ பிளஸ் அணியில் இணையும் இந்தியா? வடக்குக் கிழக்கு பௌத்த மயமாக்கலின் பின்னணிகள் இந்தோ - பசுபிக் பிராந்தியப் பாதுகாப்பு மற்றும் ரசிய - உக்ரெயன் போர் ஆகிய விவகாரங்களில் அமெரிக்க - இந்திய அரசுகளிடையே நீடித்துக் கொண்டிருக்கும் பனிப்போரும் இரு நாடுகளினதும் உறவுக்குரிய இணக்க முயற்சிகளும் புவிசார் அரசியல் - பொருளாதார விடயங்களில் எவருக்குமே பயனில்லாத ஒன்றாகவே தென்படுகின்றன. குறிப்பாகத் தேசிய விடுதலை கோரி நிற்கும் பலஸ்தீனியர்கள் ஈழத்தமிழர்கள் மற்றும் குர்திஸ் இன மக்களின் அரசியல் உரிமைகளுக்கு விரோதமாகவே இச் செயற்பாடுகள் காணப்படுகின்றன. பிரதமர் மோடியை …

    • 0 replies
    • 462 views
  13. ‘லிபரேஷன் ஒபரேஷன்’ : 36 ஆண்டுகளுக்கு முன் இராணுவம் நடத்திய முதல் போர்! Posted on June 2, 2023 by தென்னவள் 18 0 நாட்டின் இறுதிக்கட்ட போரில் செய்யப்பட்ட இனப் படுகொலைகளையும், போரில் உயிர் நீத்தவர்களையும் நினைவுகூரும் பல நிகழ்வுகளை கடந்த மே மாதம் பல்வேறு இடங்களில், குறிப்பாக, வடக்கு, கிழக்கு பிரதேசங்களிலும், புலம்பெயர் தேசங்களில் தமிழர்கள் செறிந்து வாழும் பகுதிகளிலும் இடம்பெற்றது. யுத்தம் முற்றுப்பெற்று 14 ஆண்டுகள் நிறைவடைந்துவிட்ட நிலையில், போர் முரசு கொட்டப்படுவதற்கு முதற்புள்ளி இடப்பட்டது எப்போது, யாரால் என்பதை அறியாத தரப்பினருக்கே இந்த பதிவு. ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவே 1987 மே 26 அன்று முதல் முதலாக யுத்தத்தை ஆரம்பித…

  14. தமிழ் தேசியம் ஒரு தோல்வி வாதமா? -யதீந்திரா சில தினங்களுக்கு முன்னர் விக்கினேஸ்வரன் கூறியதான ஒரு தகவல் சர்ச்சைகளை ஏற்படுத்தியிருந்தது. அதாவது, விக்கினேஸ்வரன் ஒருவரின் சாதியை கேட்டதாகக் கூறி, அவர் தொடர்பில் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டிருந்தன. ஒரு படித்த மனிதர் இவ்வாறு கேட்கலாமா – இவரை அரசியலுக்கு கொண்டுவந்தவர்கள் தவறிழைத்துவிட்டனர், என்றவாறு விக்கினேஸ்வரனை பலரும் சமூக ஊடங்களில் விமர்சித்திருந்தனர். ஆனால் விக்கினேஸ்வரன் தான் சாதியை கேட்டதை மறுக்கவில்லை. அது பல வருடங்களுக்கு முன்னர் தனிப்பட்ட உரையாடல் ஒன்றின் போது, கேட்கப்பட்ட விடயம், இப்போது அரசியல் நோக்கத்திற்காகவே அது தொடர்பில் பேசுகின்றனர் – என்று விக்கினேஸ்வரன் பதிலளித்திருக்க…

  15. ஒரு பொது நினைவுச்சின்னத்தை ஏன் உருவாக்க முடியாது? நிலாந்தன். adminJune 4, 2023 சுதந்திரப் பூங்கா-Freedom Park- தென்னாபிரிக்கா போரில் உயிர்நீத்த அனைவருக்குமாக ஒரு பொதுவான நினைவுச் சின்னத்தை உருவாக்கப் போவதாக அரசாங்கம் அறிவித்திருக்கிறது. தமிழ்க் கட்சிகளில் சில அதை எதிர்க்கின்றன; சில அதை ஆதரிப்பதாகத் தெரிகின்றது. போரில் உயிர் நீத்த எல்லாருக்குமான நினைவுச் சின்னம் என்பது உலகில் ஏற்கனவே பல நாடுகளில் உண்டு. குறிப்பிட்ட நாட்டில் அல்லது குறிப்பிட்ட பிரதேசத்தில் போரில் உயிர்நீத்த அனைவருக்குமானதாக அது அமையும். அதற்கு முகம் இருக்காது. ஆளடையாளம் இருக்காது. அது போர் வெற்றியையும் பிரதிபலிக்காது; தோல்வியையும் பிரதிபலிக்காது. குறிப்பாக, நிலைமாறுகால நீதியின் ஒ…

  16. கஜேந்திரகுமாரின் சிறப்புரிமைகள் மீறப்பட்டன? நிலாந்தன். படைப்புலனாய்வாளர்கள் அரசியல் கூட்டங்கள் ஊர்வலங்களுக்கு வருவது கடந்த 14 ஆண்டு கால தமிழரசியலில் புதியது அல்ல. ஏன் தென்னிலங்கையில் இடம்பெற்ற தன்னெழுச்சி போராட்டங்களின் பின் அங்கேயும் நிலைமை அப்படித்தான் காணப்படுகிறது.பொதுவாக படைப்புலனாய்வுத்துறை எதிர்க்கட்சிகளின் கூட்டங்கள் மற்றும் நடவடிக்கைகளை புலனாய்வு செய்வதற்கு மாறு வேடங்களிலும் வரும். அல்லது வெளிப்படையாகவும் வரும் 2009க்கு பின் யாழ்ப்பாணத்தில் நடக்கும் கூட்டங்களில்,ஏன் இலக்கிய கூட்டங்களில்கூட படைப்புலனாய்வுத்துறை வெளிப்படையாக தன் புலனாய்வு நடவடிக்கைகளை முன்னெடுப்பது உண்டு.வொய்ஸ் ரெக்கோர்டரை வெளிப்படையாகவே அங்குள்ள ஒலிபெருக்கி பெட்டிகளின் மீது வைப்பதுண்டு. ஊர்வலங…

  17. கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன் ++++++++++++++++++++++++++++++++++++++ “தேர்தலை நடத்துவதன் ஊடாக இலங்கை மக்களின் இறையாண்மை அதிகாரத்தை உறுதிப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபையின் அதிகரித்த ஈடுபாட்டின் அவசியத்தை எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்”-இது இன்றைய பத்திரிகை செய்தி. இலங்கை மக்களின் (சிங்கள மக்களின்) இறையாண்மையை பாதுகாக்க ஐ.நா.தலையீடு வேண்டுமென சஜித் கேட்கலாம். அதனால், இந்த நாட்டின் இறைமைக்கு பங்கம் ஏற்படாது.ஜே.வி.பிக்கெதிரான இராணுவ நடவடிக்கையில் சிங்கள மக்கள் கொல்லப்படுவதற்கெதிராக மனித உரிமையை நிலை நாட்டக்கோரி மகிந்த ஐ.நா.செல்லலாம். அதனால் இலங்கையின் இறைமை,கீர்த்தி? பாதிக்கப்படாது. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் நேர்மையான நீதி விசாரணை வேண்…

  18. தமிழர்களின் அரசியல் உரிமை நீக்கமும் சர்வதேச முதலீட்டாளர்களை அழைக்கும் உத்தியும் -பிராந்தியப் பாதுகாப்பை மையப்படுத்தி அமெரிக்க – இந்திய மற்றும் அவுஸ்தி ரேலிய அரசுகளுக்கு ரணிலின் அணுகுமுறை கோபத்தை ஏற்படுத்தினாலும் அதனை வர்த்தகச் செயற்பாடுகள் அல்லது கடன் திட்டங்கள், நிதி நன்கொடைகள் மூலம் இலங்கையை தமக்குரிய வாறு மாற்றிவிடும் வாய்ப்புகள் உண்டு- அ.நிக்ஸன்- சர்வதேச நாணய நிதியத்திடம் இருந்து உதவிகள் பெற்றுள்ள நிலையிலும், மேலும் கடனுதவிகளை எதிர்பார்க்கும் பின்னணியிலும் இலங்கை தமது வர்த்தகச் செயற்பாடுகளை விரிவுபடுத்தும் திட்டங்களை வகுத்து வருகின்றது. ஜெனீவா மணித உரிமைச் சபையில் இலங்கை குறித்த த…

  19. ஆக்கிரமிப்பும் அரசியலும் சமயமும்-பா.உதயன் அன்பையும் அறத்தையும் அழகிய காதலையும் தர்மத்தையும் தார்மீகத்தையும் சமாதானத்தையும் சமத்துவத்தையும் போதிக்கும் மதங்கள் மதம் கொண்ட மனிதர்களினால் வன்முறையும் வெறுப்பும் வேறுபாடும் மனிதப் படுகொலையும் அரசியலும் ஆக்கிரமிப்புமாக எல்லாமே தலை கீழாக கிடக்கிறது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பாரளுமன்ற உறுப்பினர் கஜேந்திரனுக்கு மட்டும் தான் கட்டக் கூடாது வட கிழக்கில் புத்த விகாரையா. காணவில்லையே மக்களை இவர் பின்னால். ஐந்து பேரைக் கூட அவர் பின்னால் காணோமே இருந்த போதும் இத்தனை அடக்கு முறைக்கு பின்னும் பிழை சரிகளுக்கு பின்னால் இவன் மட்டும் தனியப் போராடுகிறானே இதுற்கும் ஒரு துணிவு வேண்டும். எந்தப் போராட்டமாக இ…

    • 0 replies
    • 360 views
  20. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தனது அணுகுமுறையை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan.com யாழ்ப்பாணம், வலிகாமம் வடக்கு, தையிட்டி பகுதியில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள புத்த விகாரையை அகற்றுமாறு வலியுறுத்தி, மே மாத ஆரம்பத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியினர் சிறிய ஆர்ப்பாட்டமொன்றை நடத்தியிருந்தனர். போராட்டம் ஆரம்பமான காலப் பகுதியானது, வெசாக் நிகழ்வுகள் இடம்பெற்ற காலப்பகுதியாகும். எட்டரை ஏக்கர் காணியில் இராணுவத்தினரால் ‘திஸ்ஸ விகாரை’ என்ற இந்தப் புத்த விகாரை தையிட்டியில் அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான முடிக்கலசம் வைக்கும் நிகழ்வு, ஏப்ரல் மாதம் 27ஆம் திகதி நடைபெற்றதாக அறியக் கிடைக்கிறது. ஆனால், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின…

  21. சீனாவின் கனவை இந்தியா தகர்த்துவிட்டதா? இலங்கைக்குள் தங்களுடைய கால்களை நன்றாக ஊன்றிக்கொள்வதில், அண்டைய நாடான இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் கடுமையான போட்டிகள் நிலவுகின்றன. இவ்விரு நாடுகளிடமும் அரசாங்கங்கள் கடன்களை வாங்கி குவித்துள்ளமையால், அவ்விரு நாடுகளும் முன்வைக்கும் யோசனைகளுக்கு தலையசைக்க வேண்டிய நிர்ப்பந்தமே இலங்கைக்கு ஏற்பட்டுள்ளது. சீனா பெருந்தொகை கடனை கொடுத்திருந்தாலும், அண்டைய நாடான இந்தியா, இலங்கை எப்போதெல்லாம் பாதிக்கின்றதோ, அப்போதெல்லாம் உதவி ஒத்தாசைகளை நல்கி இருக்கின்றது. எதிர்காலங்களிலும் அவ்வாறான உதவிகளை நாம் இந்தியாவிடம் இருந்து எதிர்பார்க்கமுடியும். இதனை உறுதிப்படுத்தும் வகையில்தான், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய…

    • 2 replies
    • 694 views
  22. தையிட்டியில் தனித்து நின்று போராடுவது! நிலாந்தன்! தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராகத் தீவிரமாகப் போராடி வருகிறது. ஏனைய கட்சிகளை விட இந்த விவகாரத்தை அதிகம் கொதி நிலையில் வைத்திருப்பது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தான். ஆனால் சிங்கள பௌத்த மயமாக்கலுக்கு எதிராக அக்கட்சி அண்மை காலங்களில் முன்னெடுக்கும் போராட்டங்கள் போதிய அளவுக்கு மக்கள் மயப்படாதவை. அது அனேகமாக கட்சி பிரமுகர்களின் போராட்டம்தான். எனினும் அந்த ஒரு கட்சிதான் களத்தில் தனித்து நிற்கின்றது. சில சமயங்களில் அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான கஜேந்திரன் தனித்து நிற்கின்றார். அவர் ஒரு மக்கள் பிரதிநிதி. இருபதாயிரத்துக்கும் குறையாத மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர். ஒரு மக்கள் பிரதிநிதி தன…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.