அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9211 topics in this forum
-
‘தியாகம்’ செய்கிறாரா சோனியா? எம். காசிநாதன் தி.மு.க - காங்கிரஸ் கூட்டணியில் திடீரென்று ‘அறிக்கைப் போர்’ வெடித்துள்ளது. தமிழ்நாட்டில் நடைபெற்ற ஊரக உள்ளூராட்சித் தேர்தலில், தி.மு.க பெரும்பான்மையான இடங்களில் வெற்றி பெற்றதும், இந்தக் குழப்பம் தொடங்கியுள்ளது. 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்குப் பிறகு, 2014 தவிர மூன்று சட்டமன்றப் பொதுத் தேர்தல்களிலும் மூன்று நாடாளுமன்றத் தேர்தல்களிலும் கூட்டணியாகப் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சிக்கும், தி.மு.கவுக்கும் திடீரென்று பிரச்சினை வர, உள்ளூராட்சித் தேர்தல் இடப் பங்கீட்டுப் பிரச்சினை மட்டுமே காரணமா என்பதை நம்ப இயலவில்லை. மூன்று சட்டமன்றத் தேர்தல்களையும் முதல…
-
- 0 replies
- 848 views
-
-
‘தூறலும் நின்று போச்சு’ தற்போது புலம்பெயர் தமிழ் உறவுகள் பலர், ஊரில் உலாவுகின்றார்கள். விசாரித்ததில், அவர்களுக்கு இப்போது அங்கு விடுமுறை நாள்களாம். இவ்வாறாக, பள்ளித்தோழன் ஒருவன் பல வருடங்களுக்குப் பின்னர் சந்தித்தான். “உங்களுக்கு என்ன, நீங்கள் வெளிநாட்டுக்காரர்...” என்று வெடியைக் கொழுத்திப் போட்டேன். “என்ன, சும்மா வெளிநாடுதான்; நிறத்தால், அங்கு நாங்கள் இரண்டாம் இடம்; இனத்தால், இங்கு நாங்கள் இரண்டாம் இடம்” எனப் பொரிந்து தள்ளினார். அர்த்தம் பொதிந்த இவ்வாக்கியங்கள், நாட்டின் அரசமைப்பு முறை ஊடாக, ஓர் இனம் பாதுகாக்கப்படவில்லை; பேணப்படவில்லை என்பதையே சுட்டிக் காட்டுகின்றது. ஒரு நாட்டில் காணப்படுகின்ற …
-
- 0 replies
- 470 views
-
-
‘நன்மை தரும் சர்வாதிகாரி’ எனும் மாயை அண்மைய ஆண்டுகளாக உலகளவில் ‘ஸ்தாபன எதிர்ப்பு’ (anti-establishment) மனநிலை, மக்களிடம் மேலோங்கி வருவதை, அவதானிக்கக் கூடியதாக இருக்கிறது. அது என்ன ‘ஸ்தாபன எதிர்ப்பு’? காலங்காலமாக அரசியலிலும் ஆட்சி அதிகாரத்திலும், ஆதிக்கம் செலுத்தி வரும் தரப்பே, இங்கு ‘ஸ்தாபனம்’ எனப்படுகிறது. இந்தத் தரப்பே, அரசியலில் உயரடுக்காகின்றனர். இந்த உயரடுக்குக்கு எதிரான அரசியல்தான், ‘ஸ்தாபன எதிர்ப்பு’ அரசியல் என்றாகிறது. இந்த ‘ஸ்தாபன எதிர்ப்பு’ அரசியல், “நாம் எதிர் அவர்கள்” என்ற பெருந்திரள்வாத பகட்டாரவாரம் மூலம், மக்களிடம் கொண்டுபோய்ச் சேர்க்கப்படுகிறது. இதன் மூலதனம், இயல்பிலேயே மக்களுக்குள்ள ‘ஸ்தாபன அரசியல்’ மீதான அதிருப்தியாகும். “இவர்களே …
-
- 0 replies
- 471 views
-
-
‘நல்லாட்சி’யின் நாட்கள் எண்ணப்படுகின்றனவா? இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு எதிர்வரும் ஜனவரி 8ஆம் திகதியுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியடைய உள்ள சூழலில், புதிய அரசாங்கம் மக்களுக்குக் கொடுத்த வாக்குறுதிகள் எதனையும் நிறைவேற்றத் தவறியதினால் நாடு பெரும் நெருக்கடியை எதிர்நோக்கி நிற்கிறது. அதன் காரணமாக ஆட்சியில் பங்காளிகளாக உள்ள இரண்டு பிரதான கட்சிகளான ஐக்கிய தேசியக் கட்சிக்கும், சிறீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையிலான முரண்பாடுகளும் நாளுக்கு நாள் கூர்மையடைந்து வருகின்றன. குறிப்பாக, அரசாங்கத்தின் தவறான பொருளாதாரக் கொள்கைகளினாலும், செயலற்ற தன்மையினாலும், பணவீக்கம் மோசமாக அதிகரித்து, விலைவாசிகள் கட்டுக்கடங்காத நிலையை எட்டியுள்ளன. இது சாதாரண மக்களின் வாங்கும் …
-
- 0 replies
- 486 views
-
-
‘நாடகம் விடும் நேரம்தான் உச்ச காட்சி நடக்குதம்மா’ என்.கே. அஷோக்பரன் மஹிந்த ராஜபக்ஷவை பிரதமர் பதவியிலிருந்து விலகச்செய்துவிட்டு, எல்லாக் கட்சிகளில் இருந்தும் ஆதரவைப் பெற்று, ஓர் அரசை அமைக்க, ஜனாதிபதி கோட்டா துடித்துக்கொண்டிருப்பதை அறிக்கைகள் சுட்டி நிற்கின்றன. மறுபுறத்தில், “நான் ஒருபோதும் பிரதமர் பதவியிலிருந்து விலகப்போவதில்லை; வேண்டுமானால் என்னைப் பதவி நீக்கவும்” என வௌிப்படையாகவே சவால் விட்டிருக்கிறார் மஹிந்த. ஏற்கெனவே பசில், சமல், நாமல் ஆகிய ராஜபக்ஷர்கள், தங்கள் அமைச்சரவைப் பதவிகளிலிருந்து விலகியுள்ள நிலையில், இன்றைய அமைச்சரவையைப் பொறுத்தவரையில் கோட்டாவும் மஹிந்தவும் ஆகிய இரண்டு ராஜபக்ஷர்கள் மட்டுமே அமைச்சரவையில் அங்கம் வகிக்கிறார்கள். இதில் மஹிந்த…
-
- 0 replies
- 574 views
-
-
‘நாடு அநுராவோடு, ஊர் எங்களோடு’- சுமந்திரனின் சுலோகம் உள்ளூராட்சி தேர்தல்களில் தமிழ் மக்களிடம் எடுபடுமா ? March 9, 2025 — வீரகத்தி தனபாலசிங்கம் — நீண்டகாலமாக தாமதிக்கப்பட்ட உள்ளூராட்சி தேர்தல்களுக்கான வேட்பாளர் நியமனப் பத்திரங்களை தேர்தல்கள் ஆணைக்குழு கோரியிருக்கிறது. அரசியல் கட்சிகளும் குழுக்களும் மார்ச் 17 ஆம் திகதி தொடக்கம் 20 ஆம் திகதி வரை நியமனப் பத்திரங்களை கையளிக்கலாம். அனேகமாக மே மாத முற்பகுதியில் உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் ஜனாதிபதி தேர்தலிலும் பாராளுமன்ற தேர்தலிலும் தோல்வி கண்ட அரசியல் கட்சிகள் மீண்டும் ஒரு தேர்தலுக்கு முகங்கொடுக்கக்கூடிய அளவுக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ளக் கூடிய வலுவுடன் இல்லை என்ற போதிலும்,…
-
- 1 reply
- 351 views
-
-
‘நாட்டுக்காக ஒன்றிணைவோம்’; நல்ல நாடகம் காரை துர்க்கா / 2019 ஜூன் 18 செவ்வாய்க்கிழமை, மு.ப. 03:05 Comments - 0 ஒவ்வொரு தேசங்களும் தங்களது மக்கள் நலன் கருதி, பல்வேறு அபிவிருத்தித் திட்டங்களை நடைமுறைப்படுத்துவது உலக வழமை. நம் நாட்டிலும் காலத்துக்குக் காலம், அபிவிருத்தித் திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. மக்களைக் கவரக் கூடிய வகையில் வண்ணமயமான வார்த்தை ஜாலங்களுடன் அவை நடைமுறைக்கு வருகின்றன. அவற்றுக்கெனப் பொதுவான நோக்கங்கள் பல இருந்தாலும், தமிழர் பிரதேசங்களில் நடைமுறைக்கு வரும்போது, சில மறைமுக நோக்கங்களையும் தன்னகத்தே கொண்டிருந்தன; கொண்டிருக்கின்றன; கொண்டிருப்பன என்பதே உண்மை. அந்த வகையில், மக்களின் பிரச்சினைகளை வினைதிறனான முறையில் இனங்க…
-
- 0 replies
- 793 views
-
-
‘நிர்பயா’ தூக்கும் டெல்லி தேர்தலும் எம். காசிநாதன் இந்தியாவின் தலைநகரான டெல்லி சட்டமன்றத் தேர்தல் மிகப் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 70 சட்டமன்றத் தொகுகளில் நடைபெறும் அனல் பறக்கும் பிரசாரத்துக்கு மத்தியில் வெற்றி முதலமைச்சராக இருக்கும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கா அல்லது பிரதமராக இருக்கும் நரேந்திர மோடிக்கா என்ற எதிர்பார்ப்புக் கிளம்பி இருக்கிறது. தலைநகரில் தேசியக் கட்சிகளான காங்கிரஸ் கட்சி, பாரதிய ஜனதாக் கட்சி ஆகியவற்றைப் பின்னுக்குத் தள்ளி, 2013இல் ஆட்சியை பிடித்தவர் அரவிந்த் கெஜ்ரிவால். 2009இல் இரண்டாவது முறையாக நாடாளுமன்றத் தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சியின், ஆட்சியில் நடைபெற்ற ஊழலா…
-
- 0 replies
- 442 views
-
-
‘நீயுமா புரூட்டஸ்?’ புதிய அரசமைப்பு தொடர்பாக சிங்கள அரசியல் தலைமைகளுக்கு மத்தியில் இருந்தும், பௌத்த மத பீடங்களில் இருந்தும், முரண்பட்ட கருத்துகள் வெளியிடப்பட்டு வந்தாலும், சாதாரண சிங்கள மக்களின் மனோநிலை என்ன என்பது இதுவரை சரியாகத் தெரியவரவில்லை. சாதாரண சிங்கள மக்கள், ஓர் அரசமைப்பு மாற்றத்தின் தேவையை உணர்ந்து கொண்டிருக்கிறார்களா, அதிகாரங்கள் பகிரப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டை ஏற்றுக் கொண்டிருக்கிறார்களா, தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வு காணப்பட்டு, நாட்டில் அமைதியான சூழல் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற கருத்தைக் கொண்டிருக்கிறார்களா? என்பது இன்னமும் தெளிவாகவில்லை. ஜனாதிபதி தேர்தலிலும், நாடாளுமன்…
-
- 0 replies
- 376 views
-
-
‘நீரோ மன்னன் பிடில் வாசித்த கதை’ Editorial / 2019 மே 30 வியாழக்கிழமை, மு.ப. 05:30 Comments - 0 -இலட்சுமணன் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக் குழு இணைத்தலைவர் நியமனம் தொடர்பாக, தற்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் பெரும் சர்ச்சைகள் எழுந்துள்ளன. இதில், மாவட்ட அபிவிருத்திக் குழு இணைத்தலைமை விடயம் தொடர்பில், வியாழேந்திரன் மாவட்டச் செயலாளரிடம் கேட்பதை விடுத்து, ஜனாதிபதியிடம் தான் கேட்க வேண்டும் என்ற கருத்துகள் முக்கியத்துவம் பெறுகின்றன. உள்ளக, உள்நாட்டலுவல்கள், மாகாணசபை மற்றும் உள்ளூராட்சிகள் அமைச்சு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் பிரகாரம், மட்டக்களப்பு மாவட்டத்தில் எந்தவொரு தமிழரும் ஒருங்கிணைப்பாளர் குழுத் தலைவராக நியமனம் பெற வாய்ப்பு இல்லை. ஏ…
-
- 0 replies
- 799 views
-
-
‘நேர் கொண்ட பார்வை’ காரை துர்க்கா / 2019 ஓகஸ்ட் 13 செவ்வாய்க்கிழமை, பி.ப. 12:53 Comments - 0 நாங்கள், பாடசாலையில் கல்வி கற்ற காலம்; அன்று தமிழ்ப் பரீட்சை; ‘நான் விரும்பும் பெரியார்’ பற்றி எழுதுமாறு கட்டுரை எழுதும் பகுதியில் கேட்கப்பட்டிருந்தது. உடனடியாகவே, ‘நான் விரும்பும் பெரியார் மஹாத்மா காந்தி’ எனத் தொடங்கி, விரல்கள் எழுதிச் சென்றன. அவ்வாறாக, இலங்கைத் தமிழர்களின் மனங்களில் இந்தியப் பெரியார்கள் கொலுவீற்றிருந்தார்கள். இலங்கை சுதந்திரமடைந்த காலந்தொட்டே, தமிழர்கள் மீதான பேரினவாதத்தின் கொடூரக் கரங்கள் நீளத் தொடங்கிவிட்டன. எனவே, இதிலிருந்து இந்தியா எங்களைப் பாதுகாக்கும் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை, காலங்காலமாகவே இலங்கைத் தமிழ் மக்கள் மனங்களில் குடிகொண்ட…
-
- 1 reply
- 773 views
-
-
‘பட்டலந்த அறிக்கை’ என்னும் ‘பூமராங்’ முருகானந்தம் தவம் ஜே .வி.பியினரின் (மக்கள் விடுதலை முன்னணி) ஆயுதக் கிளர்ச்சியை அடக்கி ஒடுக்கவென 1988, 1989களில் நடத்தி செல்லப்பட்டதாகக் கூறப்படும் ‘பட்டலந்த வதை முகாம்’ தொடர்பான ‘பட்டலந்த அறிக்கை’ 25 வருடங்களின் பின்னர், தூசி தட்டப்பட்டு வெளியே எடுக்கப்பட்டு தற்போதைய ஜே.வி.பி., என்.பி.பி. அரசினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நாள் விவாதம் நடத்தப்படவுள்ள நிலையில், அந்த அறிக்கை தொடர்பில் இலங்கையில் மீண்டும் ஒரு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது. ஜனாதிபதியாக ரணசிங்க பிரேமதாச ஆட்சி புரிந்த காலத்தில், இளைஞர் விவகார, தொழில் வாய்ப்புக்கள் அமைச்சராகவும், பின்னர் கைத்தொழில் அமைச்சராகவும் இருந்த ரணில் வ…
-
- 0 replies
- 244 views
-
-
‘பதினாறும் பெற்று, பெருவாழ்வு வாழ்க’ காரை துர்க்கா / 2020 மார்ச் 17 தமிழ் மக்களது விடுதலைக்கான ஆயுதப் போராட்டம், 2009ஆம் ஆண்டு மே மாதம் மௌனம் கண்டது. அதன் பின்னரான, ஓராண்டு காலம் நிறைவு பெறுவதற்குள் (08 ஏப்ரல் 2010) 14ஆவது நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது. அந்தத் தேர்தலில், தமிழ்த் தேசிய கூட்டமைப்பு 13 ஆசனங்களையும் தேசிய பட்டியல் மூலமாக ஓர் ஆசனத்தையும் பெற்று, மொத்தமாக 14 ஆசனங்களைக் கைப்பற்றிக் கொண்டது. அதன் பின்னர், 15ஆவது நாடாளுமன்றத் தேர்தல், 2015 ஓகஸ்ட் மாதம் 17ஆம் திகதி நடைபெற்றது. அதில் கூட்டமைப்பு, 14 ஆசனங்களையும் தேசிய பட்டியல் மூலமாக, இரண்டு ஆசனங்களையும் பெற்று, மொத்தமாக 16 ஆசனங்களைக் கைப்பற்றியது. இதற்கிடையே, 2010ஆம் ஆண்டு நாடாளுமன்றத் த…
-
- 0 replies
- 1.1k views
-
-
‘பந்தை’ விளையாட தயாராகும் உயர்நீதிமன்றம் தமிழகத்தில் உள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசாங்கத்தின் தலைவிதியை சென்னை உயர்நீதிமன்றம் வருகின்ற செப்டெம்பர் 20 ஆம் திகதி முடிவு செய்யப் போகிறது. அரசியலில் “புயல்” வீசுவது மட்டுமல்ல- “பூகம்பமும்” சேர்ந்து நிகழுமோ என்ற சூழல் தமிழக அரசியலில் ஏற்பட்டிருக்கிறது. “ஒரு வாரத்துக்குள் ஆட்சியைக் கவிழ்ப்பேன்” என்று பகிரங்கமாக அறிவித்திருக்கிறார் சசிகலாவின் தலைமையிலான அ.தி.மு.கவை தற்போது வழி நடத்தும் டி.டி.வி.தினகரன். “சட்டம் மூலமும், மக்கள் மன்றம் மூலமும் இந்த ஆட்சி வீழ்த்தப்படும்” என்று அறைகூவல் விடுத்திருக்கிறார் தி.மு.க செயல் தலைவர் மு.க.ஸ்டாலின். “எங்கள…
-
- 0 replies
- 615 views
-
-
‘பழைய குருடி கதவைத் திறவடி’ நீண்டகாலமாக நாம் பயணித்த ஒரு வழி, இனிமேல் சரிப்பட்டு வராது என்று முடிவெடுத்து, அைத விட்டுவிட்டு வந்து, மாற்று வழியைத் தேர்ந்தெடுத்த பின்னர், மாற்று வழியை விடப் பழைய வழியே பரவாயில்லை என அங்கலாய்த்து, மீண்டும் பழைய வழியை நோக்கித் திரும்புதலை, ‘பழைய குருடி கதவைத் திறவடி’ என்று சொல்லலாம். இவ்வாறான மீளத் திரும்புகைகள், அரசியலிலும் எப்போதாவது நடக்கின்றன. அந்த அடிப்படையிலேயே, அரசாங்கம் மீண்டும் பழைய தேர்தல் முறைமையின் கீழ், மாகாணசபைத் தேர்தலை நடாத்த முனைகின்றது. புதிய தேர்தல் முறைமையின் கீழ், மாகாணசபைத் தேர்தலை நடாத்துவதற்கு ஏதுவாக, எல்லை மீள்நிர்ணய அறிக்கையை,…
-
- 0 replies
- 918 views
-
-
‘பாவம் தமிழ் மக்கள்’ - இலட்சுமணன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம். ஏ. சுமந்திரன், கடந்த வாரம் “தமிழ்க் கட்சிகள் அனைத்தும், ஓரணியில் திரளவேண்டும்; இங்கிருந்து வெளியேறிச் சென்றவர்கள், மீண்டும் ஒன்றிணைய வேண்டும். கூட்டமைப்பு எவரையும் வெளியேற்றவில்லை” எனப் பகிரங்கமாக அழைப்பு விடுத்திருந்தார். இந்த அறிவிப்பானது, தமிழ் மக்களைப் பொறுத்தவரையில், உண்மையில் மகிழ்ச்சி தரக்கூடியது தான். ஆயினும், இவ்வறிவிப்பின் உண்மைத் தன்மை குறித்து, சந்தேகம் எழுவதற்கான வாய்ப்புகளும் காணப்படுகின்றன. இந்த அழைப்பு, இதயசுத்தியுடனானதா என்பது தொடர்பாகத் தமிழ் மக்கள், தமக்குள் தாமே கேள்வி எழுப்பி வருகின்றார்கள். ஏனெனில், இந்த அறிவிப்பைக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனோ, செயலா…
-
- 1 reply
- 1.2k views
-
-
‘பிக் பொஸ்’ விடுதலைப் புலிகளின் அழிவுக்குப் பின்னரும் அரசியல் ரீதியாக தமிழ் மக்கள் இன்னும் பலமிழக்காமல் இருக்கின்றார்கள். ‘தமிழ் தேசியக் கூட்டமைப்பு’ என்கிற பெயரில், தமிழர் கட்சிகளில் கணிசமானவை ஒற்றுமைப்பட்டு இயங்கி வருகின்றமைதான் அந்தப் பலத்துக்குக் காரணமாகும். முஸ்லிம்களிடத்தில் இவ்வாறானதொரு அரசியல் பலம் இப்போது இல்லை. அஷ்ரப்பின் மரணத்துடன் தமது அரசியல் பலத்தைக் கிட்டத்தட்ட முஸ்லிம் சமூகம் இழந்து விட்டது. அஷ்ரப்பின் காலகட்டத்தில், அவர் தலைமை வகித்த முஸ்லிம் காங்கிரஸில் இருந்த பலரும், அவரின் மரணத்தின் பிறகு, முஸ்லிம் காங்கிரஸிலிருந்துமெல்ல மெல்லப் பிரிந்து, தனித்தனியான அரசியல் செயற்பாட்டுக்குள் நுழை…
-
- 0 replies
- 534 views
-
-
‘பிக் பொஸ்’ வீடாக மாறிவிட்டதா வடக்கு மாகாண சபை? இந்தியத் தொலைக்காட்சிகளில் இது ‘பிக் பொஸ்’ (BiggBoss)காலம். தமிழில் ஒளிபரப்பாகும் ‘பிக் பொஸ்’ நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குகின்றார். தெலுங்குப் பக்கம் ஜூனியர் என்.டி.ஆரும், ஹிந்தியில் 11வது தடவையாக சல்மான் கானும் தொகுத்து வழங்கப் போகிறார்கள். வெளித்தொடர்புகள் ஏதுமற்ற ஒரு வீட்டுக்குள் பல தளங்களிலும் இயங்கும் பத்துக்கு மேற்பட்டவர்களை வசிக்கவிட்டு, அவர்களுக்கிடையிலேயே நிகழும் ஊடாடல்கள் மற்றும் போட்டிகளை மையப்படுத்தி 100 நாட்களுக்கு நீட்டி நிகழ்ச்சியை முடிப்பார்கள். குறித்த நிகழ்ச்சி, தெளிவான திரைக்கதையோடு வடிவமைக்கப்பட்டாலும், அதன் ஒளிபரப்பின் போது, தோற்றுவிக்கப்படும்…
-
- 0 replies
- 507 views
-
-
‘பிச்சை வேண்டும்; நாயைப்பிடி’ -இலட்சுமணன் விடுதலைப்புலிகள் அமைப்பிலிருந்து கருணா பிரிவு; கருணா இலண்டனில் கைது; பிள்ளையான் தரப்பின் ஆதிக்கம்; கிழக்கு மாகாணம் பிரிப்பு; சிவநேசதுரை சந்திரகாந்தன் கிழக்கு மாகாணத்தின் முதல் முதலமைச்சர்....... இவையெல்லாம் நடந்து முடிந்ததுக்குப் பிறகு, தற்போது கிழக்கு மாகாண சபைக்கான மூன்றாவது தேர்தல் நடைபெறவிருக்கின்றது. கிழக்கு மாகாணத்தில், தமிழ் அரசியல் கட்சிகள் பிரிந்து தேர்தலில் போட்டியிட்டால், தமிழ் முதலமைச்சர் பதவி பறிபோகும் என்கிற கருத்துகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. உள்ளூராட்சித் தேர்தலின் போது, வீதியால் போனவரையும் பிடித்துப் போட்டியிட வைத்த நிலைமை இருந்தது.…
-
- 0 replies
- 421 views
-
-
‘பிணங்களோடு வாழ்’ “பிணங்களோடு வாழ்” என்று உங்களுக்குக் கட்டளையிடப்படுகிறது. இதற்கு நீங்கள் சம்மதிப்பீர்களா? அரிச்சந்திர மகாராஜா, சுடுகாட்டில் பணிசெய்தார் என்பதற்காக, நீங்களும் அப்படிச் செய்யத் தயாரா? சிவபெருமான் சுடலைப் பொடியைப் பூசுகிறார். ஆகவே, நீங்கள் அப்படிச் சுடலைச் சாம்பரைப் பூசுவீர்களா? இப்படியெல்லாம் ஏன் கேட்க வேண்டியிருக்கிறது என்றால், புத்தூர் மேற்கு கலைமதி சனசமூக நிலையத்துக்கு அண்மையில் இருக்கும் மக்களை, “பிணங்களோடு கூடி வாழுங்கள். பிணங்கள் எரிக்கப்படும் புகையைச் சுவாசித்து இன்புறுங்கள். மயானமும் உங்களுடைய வீடும் ஒன்றாக இருப்பதில் என்ன பிரச்சினை? எரியும் பிணத்தைப் பார்த்துக்கொண்டே நீங்கள் தூங்கலாம், …
-
- 0 replies
- 591 views
-
-
‘பித்துப் பிடித்த பிக்கு’ நிலைமை: சிங்கள – பௌத்தவாதத்தின் இழிந்த பக்கமாக பொதுபலசேனா ஒரு நீண்ட அரசியல் கயிற்றில் பிணைக்கப்பட்டிருந்ததாகக் காணப்பட்ட, இந்த காட்டுமிராண்டி பௌத்த பிக்குகள், கட்டுப்பாடு இழந்து போயுள்ளனர். அவர்கள் தடுத்து நிறுத்தப்படல் வேண்டும். ஆனால், பொதுபலசேனா போன்ற குழுக்கள் பிரதிநிதித்துவம் செய்ய வந்துள்ள நிலைமை பிரதிபலிக்கின்ற சிக்கலான நிலையின் மீது ஒரு கடுமையான பார்வையைச் செலுத்துவதும் கூட அதிகளவுக்கு அவசியமாகின்றது. இது ஒன்றும் வேடிக்கை விநோதக் காட்சியல்ல, இது போருக்குப் பிந்திய இலங்கையின் அப்பட்டமான ஒரு நெறிமுறைப் பிறழ்வாகும்; அத்தோடு பொதுபலசேனா ஒரு சில மாத காலங்களிற்குள் அழிந்து போய்விடும் என எதிர்வு கூறிய வணக்கத்திற்குரிய. தம்பர அமில தேரர் (ம…
-
- 0 replies
- 599 views
-
-
‘புலிப் பூச்சாண்டி’யை நம்பிய அரசியல் போர் முடிவுக்கு வந்த ஒன்பதாவது ஆண்டை நினைவு கூரும் வகையில், நாடாளுமன்ற வளாகப் பகுதியில் உள்ள படையினருக்கான நினைவுத் தூபியில் நடந்த அஞ்சலி நிகழ்வில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உரையாற்றியிருந்தார். “ஒன்பது ஆண்டுகளுக்கு முன்னர் தீவிரவாதத்தைத் தோற்கடித்த போதும், இன்னமும் அவர்களின் கொள்கையைத் தோற்கடிக்க முடியவில்லை. நாட்டைப் பிளவுபடுத்தும் நோக்கத்துடன், தீவிரவாதிகள் வெளிநாடுகளின் அணி திரளுகிறார்கள். நான், அண்மையில் இலண்டனுக்குப் பயணம் மேற்கொண்டபோது, போராட்டம் நடத்தினார்கள்” என்று அப்போது கூறியிருந்தார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்தக் கர…
-
- 0 replies
- 618 views
-
-
‘பேரினவாதமும் தேசியவாதமும்’ – லோகன் பரமசாமி Oct 01, 2018 உலகிலேயே மிகவும் வலிமைமிக்க அரசியல் சக்தி எது என்ற கேள்வியுடன் சர்வதேச உறவுகள் குறித்து தலைசிறந்த மேலைத்தேய ஆய்வாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் ஸ்டீபன் வோல்ற் என்பவர் 2011ஆண்டில் Foreign Policy என்ற சஞ்சிகையில் கட்டுரை ஒன்றை எழுதி இருந்தார். அந்த கட்டுரையிலே உலகில் தற்போது அரசியல் செல்வாக்குமிகுந்த அம்சங்கள் பலவற்றை எடுத்துக் கூறுகிறார். சமயம்சார்ந்த அரசியலா? அல்லது மனித உரிமை சார்ந்த அரசியலா? அல்லது இணையத்தளத்தால் பலம்பெற்றுள்ள டிஜிற்ரல் தொழில்நுட்பமா? இவை எல்லாவற்றையும் விட நாடுகள் பாதுகாப்புக்கான மிகப்பெரும் ஆயுதமாகப் பயன்படுத்தும் அணு ஆயுத பலமா? எது இன்றைய உலகில் மிகவும் செல்வாக்குமிக்க அரசியல…
-
- 0 replies
- 621 views
-
-
‘பொங்கலுக்குப் பிறகு, யாழ்ப்பாணம் வரப்போறம்’ காரை துர்க்கா / 2020 ஜனவரி 14 யாழ்ப்பாணம், திருநெல்வேலி வழியாக, கடந்த மாதம் சென்று கொண்டிருந்த போது, திடீரென மழை கொட்டியது. அவ்வேளையில், வீதி ஓரமாக இருந்த கடையில் தரித்து நிற்கும் எண்ணத்துடன் ஒதுங்கும் போது, அவ்வாறு வேறு சிலரும் ஒதுங்கினார்கள். அவர்களில், நடுத்தர வயதுடைய ஒரு தம்பதியும் அடங்குவர். மழையின் இரைச்சலுக்கு மத்தியிலும் அருகில் நின்ற அத்தம்பதிகளின் உரையாடல் காதுகளில் விழுந்தது... அந்தத் தம்பதி, யாழ்ப்பாணம் தீவுப் பகுதியைச் சேர்ந்தவர்கள்; கணவன், மனைவி இருவரும் அரசாங்க உத்தியோகத்தர்கள்; அவர்களுக்கு இரு பிள்ளைகள்; இருவரும் பாடசாலை செல்பவர்கள்; அவர்களின் பிள்ளைகளின் கல்வியை முன்னிட்டு, அடுத்த ஆண்…
-
- 0 replies
- 1.1k views
-
-
‘பொதுச்சபை’ நகர்வை ‘சிவில் சமூக அமையம்’ தரும் படிப்பினைகளின் கண்கொண்டு நோக்குதல் [TamilNet, Friday, 30 August 2024, 09:08 GMT] இந்தியத் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களாயிருந்த எம். கே. நாராயணன் (2005-2010), சீவ்சங்கர் மேனன் (2010-2014) இருவரின் கட்டளையேற்றுத் தடம்புரண்டிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த தலைவரான காலஞ்சென்ற இரா. சம்பந்தனின் மூலோபாய அச்சுத் தவறிய அரசியலின் விளைவாக 2010 ஆம் ஆண்டில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தோன்றியது. மறுபுறம், தேர்தல் அரசியலுக்கு அப்பாற்பட்ட சமூக முன்னெடுப்புகளாக ‘தமிழ் சிவில் சமூக அமையம்’, ‘தமிழ் மக்கள் பேரவை’ என்பவை 2013-2014 காலகட்டத்தில் தோன்றின. நாளடைவில், கட்சி அரசியல் உள்ளிட்ட பல காரணிகளால் அந்தச் சமூக முன்னெடுப்புகள் தேக்க…
-
- 1 reply
- 274 views
-