அரசியல் அலசல்
அரசியல் | ஆய்வுக் கட்டுரைகள் | உலகம் | ஈழம்
அரசியல் அலசல் பகுதியில் அரசியல், ஆய்வுக் கட்டுரைகள், உலகம், ஈழம் சம்பந்தமான நீண்ட பதிவுகள், பத்திகள் இணைக்கப்படலாம்.
9329 topics in this forum
-
உலக பொருளாதார நெருக்கடி: பழி ஓரிடம்; பாவம் இன்னோரிடம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ உலகளாவிய ரீதியில் பணவீக்கம் அதிகரித்துள்ளது. அது ‘சுனாமி’ மாதிரி, தொடர்ச்சியாகப் பல நாடுகளைத் தாக்கிய வண்ணமுள்ளது. பணவீக்கத்துக்கு ஆளாகும் ஒவ்வொரு நாட்டிலும், பொருளாதார சீர்கேடு உருவாக்குகிறது. இது பல சந்தர்ப்பங்களில் கடுமையான அரசியல் நெருக்கடிக்கு வழிசெய்கிறது. எரிசக்தி விலைகளின் அதிகரிப்பு, ஐரோப்பா எங்கும் எதிர்ப்பலைகளைத் தோற்றுவித்துள்ளது. எரிசக்தியின் அதிக விலை அதிகரிப்புக்கு எதிரான தொடர்ச்சியான போராட்டங்கள், பெல்ஜியம் முதல் செக் குடியரசு வரை நடத்தப்பட்டுள்ளன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, பிரான்ஸ் மக்கள், பெட்ரோல் நிலையங்களில் பெட்ரோல் வாங்க நீண்ட வரிசையில் கா…
-
- 0 replies
- 742 views
-
-
ஓராண்டுக்குள் ரணில் தீர்வு தருவாரா? எக்க ராஜ்ய? – நிலாந்தன். அடுத்த ஓராண்டுக்குள் இனப்பிரச்சினைக்கான தீர்வை கண்டுபிடிக்க போவதாக ரணில் விக்கிரமசிங்க கூறியிருக்கிறார். கூட்டமைப்பின் பேச்சாளர் அதை வரவேற்றிருக்கிறார். அதே சமயம் தமிழ் தேசிய மக்கள் முன்னணி அதை எதிர்த்திருக்கிறது.ரணிலும் கூட்டமைப்பும் மீண்டும் “எக்க ராஜ்ய” என்ற தீர்வைக் கொண்டுவர முயற்சிப்பதாக விமர்சித்திருக்கிறது. முன்னாள் சமாதான தூதுவர் எரிக்.சூல் ஹெய்ம் அண்மையில் கொழும்புக்கு வந்திருந்தார். அவர் ஜனாதிபதியின் காலநிலை ஆலோசகராக பொறுப்பை ஏற்றிருப்பதாக செய்திகள் கூறுகின்றன. ஆனால் அவருடைய வருகையின் உள்நோக்கம் அரசியல் தீர்வு சம்பந்தப்பட்டது என்ற ஊகம் பரவலாக உண்டு. 2015 ஆம…
-
- 2 replies
- 354 views
-
-
இந்தியாவும் தெற்காசிய புவிசார் அரசியலும்! தெற்காசியாவின் புவிசார் அரசியல் நெருக்கடிக்கு மத்தியில் இந்தியாவின் முக்கியத்துவம் அவசியமானதாக கருதப்படுகிறது. அதிகரித்து வரும் பிராந்திய கொந்தளிப்புக்கு மத்தியில், இந்தியாவுக்கு கடினமான பணி உள்ளது. அதன் பொருளாதார அடிப்படைகள் வலுவாக இருப்பதையும், அது தொடர்ந்து மேல்நோக்கி வளர்ச்சிப் பாதையில் செல்வதையும் முதலில் உறுதி செய்ய வேண்டும். தெற்காசியா எப்போதும் ஒரு கொந்தளிப்பான பகுதியாக இருந்து வருகிறது. உலக மக்கள்தொகையில் நான்கில் ஒரு பகுதியினருக்கு இடையே, மற்றும் அரசுகளுக்கு இடையேயான போட்டிகளுடன் கூடிய ஒரு பிராந்தியமாக இது இருக்கிறது. இந்த பிராந்தியத்தில் அரசியல் மற்றும் பொருளாதார சவால்கள் மற்றும் அந்நிய சக்திகளின் தலையீடுகள்…
-
- 0 replies
- 333 views
-
-
போதைப் பொருளைத் தடுக்க ஒரு படைப்பிரிவு? – நிலாந்தன். October 30, 2022 “வடக்கில் இராணுவத்தினரால் நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது கஞ்சா தொகையாகக் கைப்பற்றப்பட்டது. இந்தியாவிலிருந்து யாழ்ப்பணப் பகுதிக்கு மிகவும் பிரமாண்டமான முறையில் போதைப்பொருள் கடத்தல்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் இளம்சந்ததியினரும் அவற்றிற்கு அடிமையாகின்ற தன்மையானது வெகுவாக அதிகரித்துள்ளது. அந்த வகையில் இந்த துர்ப்பாக்கிய நிலையினை இல்லாதொழிப்பதனை நோக்கமாகக் கொண்டு யாழ். பாதுகாப்புப் படைகளின் கட்டளைத்தளபதி மேஜர் ஜெனரல் சந்தன விஜேயசுந்தர அவர்களினுடைய தலைமையில் விசேட படைப் பிரிவானது உருவாக்கப்பட்டு விசேட சோதனை நடவடிக்கைகள் மற்றும் சுற்றிவளைப்புக்கள் மேற்கொள்ளப்பட்டு அதன…
-
- 0 replies
- 285 views
-
-
புவிசார் - அரசியல், புவிசார் - பொருளாதாரம் சீனாவுக்குப் புத்துயிர் கொடுக்கும் இந்தியா தேச நலன் என்ற போர்வையில் ஈழத்தமிழர் விவகாரத்தை ஓரக் கண்ணால் பார்க்கும் டில்லி ரசிய - உக்ரெயன் போர்ச் சூழலில், ரசியாவைத் தனிமைப்படுத்த ஐரோப்பிய நாடுகள் எடுத்துள்ள கடும் முயற்சிகளுக்கு மத்தியில், சீனா தனித்து நின்று ரசியாவுக்குத் தேவையான ஆதரவை வழங்கி வருகின்றது. ஆனால் இதுவரையும் சீனா ரசியாவுக்கு ஆயுதங்கள் எதனையும் வழங்காத சூழலில், ரசியாவை ஐரோப்பிய மற்றும் மேற்குலக நாடுகள் முன்னிலையில் தனித்துவம் மிக்கதாகக் காண்பிக்கவே சீனா முற்படுகின்றது. அமெரிக்க எதிர்ப்பு நாடுகளின் ஒத்துழைப்பைப் பெற்று உலக அரசியல் …
-
- 0 replies
- 257 views
-
-
ஒரு கட்சி அரசு நிலையில் இருந்து ஒரு தலைவர் அரசு என்ற நிலை நோக்கி......! 26 OCT, 2022 | 07:07 AM சீன ஜனாதிபதி சி ஜின்பிங் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் தாபக தலைவர் மாவோ சேதுங்கிற்கு பிறகு ஆயுட்காலத்துக்கு நாட்டை ஆட்சிசெய்யக்கூடிய வாய்ப்புடன் முன்னென்றும் இல்லாத வகையில் முன்றாவது பதவிக்காலத்துக்கு கடந்த ஞாயிற்றுக்கிழமை (அக்.16) தெரிவாகியதன் மூலம் வரலாறு படைத்திருக்கிறார்.உலகில் ஆட்சியாளர்கள் தங்களது பதவிக்காலங்களை நீடிப்பதில் ஆர்வம் காட்டுகின்ற அதேவேளை அவர்களின் அதிகாரங்கள் குறைக்கப்படவேண்டும் என்று மக்கள் ஆரவாரமாக வேண்டுகின்ற சூழ்நிலையில் சீன ஜனாதிபதியின் செயல் வரலாற்றின் முன்னோக்கிய போக்காக அன்றி பின்னோக்கிய போக்காகவே பெரும்பாலும் கருதப்படும்.…
-
- 1 reply
- 677 views
- 1 follower
-
-
22 ஆவது திருத்தத்தை சாத்தியமாக்கிய இரு தரப்பு இணக்கப்பாடு நீடிக்க வேண்டும் 25 OCT, 2022 | 07:43 AM கலாநிதி ஜெகான் பெரேரா அரசியலமைப்புக்கான 22 வது திருத்த நிறைவேற்றம் ஒரு அதிர்ச்சி போன்று வந்தது.முதலில் இந்த திருத்தம் மீதான பாராளுமன்ற விவாதத்தை பின்போடுவதற்கு தீர்மானிக்கப்பட்டபோது அண்மைய எதிர்காலத்தில் அது மீண்டும் விவாதத்துக்கு எடுக்கப்படாது அல்லது எடுக்கப்பட்டாலும் நிறைவேற்றப்படாது என்றே தோன்றியது. அரசாங்க உறுப்பினர்களுக்கும் எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கும் இடையே இரு சர்ச்சைக்குரிய வாடயங்களில் கருத்து வேற்றுகை இருந்தது.கட்சிகளுக்கு இடையில் மாத்திரமல்ல கட்சிகளுக்குள்ளும் கருத்துவேறுபாடுகள் நிலவின. முதலா…
-
- 0 replies
- 173 views
- 1 follower
-
-
‘தமிழரசுக்கட்சி மட்டுமா தவறிழைத்தது?’ October 28, 2022 — கருணாகரன் — “தமிழரசுக் கட்சி மட்டுமா தவறிழைத்துள்ளது?எதற்காக அதை இப்படிப் போட்டுத் தாக்கியிருக்கிறீங்கள்? தந்தை செல்வா காலத்திலிருந்து இன்று வரை அது சந்தித்த சோதனைகள் கொஞ்சமல்ல. இருந்தாலும் அதைத்தானே தமிழ் மக்கள் இன்னும் ஆதரிக்கிறார்கள்! இதை எப்படி உங்களால் மறுக்க முடியும்? தமிழரசுக் கட்சியுடன் கூட்டு வைத்துக் கொண்டதால்தான் தமிழ்க்காங்கிரஸ் பிழைத்தது. இதை மிகப் பெரிய கெட்டிக்காரரான ஜீ.ஜீ. பொன்னம்பலமே புரிந்து கொண்டு செயற்பட்டார். இதன் விளைவாக உருவானதே தமிழர் விடுதலைக் கூட்டணி. ஜீ.ஜீ. பொன்னலம்பலத்துக்கு விளங்கியது குமார் பொன்னம்பலத்துக்கும் விளங்கவில்லை. கஜேந்திரகுமார் பொன்னம்பலத்துக்கும் வ…
-
- 0 replies
- 292 views
-
-
புலம்பெயர் மக்களின் உதவி: இன்னும் எவ்வளவு காலத்துக்கு? தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ புலப்பெயர்வு ஏற்படுத்திய முக்கியமான விளைவுகளில் ஒன்று, இலங்கையில் இருக்கின்ற உறவுகளுக்கான தொடர்ச்சியான நிதியுதவியை சாத்தியப்படுத்தியமை ஆகும். கடந்த அரைநூற்றாண்டாக, இச்செயற்பாடு தொடர்ந்த வண்ணம் உள்ளது. இலங்கையின் வடக்கு - கிழக்கு பகுதிகள், முழுமையாக இந்த வெளிநாட்டு உதவியால் பயன் அடைந்தன என்று சொல்லவியலாது. ஆனால், வடக்கு - கிழக்கின் பொருளாதார இயங்கியலில், நாட்டுக்குள் வருகின்ற பணம் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த வெளிநாட்டுப் பணம், குறிப்பாக வடக்கில் பல்வேறுபட்ட தாக்கங்களை கடந்த ஒரு தசாப்த காலத்தில் ஏற்படுத்தி இருக்கிறது. இன்றுவரை விரிவாக ஆய்வுக்குட்படாத ஒன்றாகவே இது இருக்கிறது. …
-
- 15 replies
- 1.3k views
- 2 followers
-
-
ரிஷி சுனக்; நிறவெறிக்கு எதிரான குறியீடு அல்ல புருஜோத்தமன் தங்கமயில் பிரித்தானியாவின் புதிய பிரதமராக ரிஷி சுனக் பதவியேற்று இருக்கின்றார். சூரியன் அஸ்தமிக்காத அகண்ட கொலனித்துவ ஆட்சியை, நூற்றாண்டுகளாக செலுத்திய பிரித்தானியாவுக்கு, வெள்ளையர் அல்லாத இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் இப்போது பிரதமர் ஆகியிருக்கிறார். கறுப்பினத்தவரான பராக் ஒபாமா, அமெரிக்காவின் ஜனாதிபதியானார். அதுவும் அவர் இரண்டு தடவைகள் ஜனாதிபதியாகத் தெரிவாகி, பெரிய நெருக்கடிகள் இன்றி ஆட்சி செலுத்தினார். ஆனால், ஒபாமா போன்று ரிஷி சுனக்கால், நெருக்கடிகள் அற்ற ஆட்சியை கொண்டு செலுத்திவிட முடியாது. பிரித்தானியாவின் பொருளாதாரம் பாரிய வீழ்ச்சியைச் சந்தித்திருக்கின்ற நிலையில், அவர் பிரதமர் பதவிக்கு வ…
-
- 0 replies
- 287 views
-
-
13ஆவது திருத்தத்தின் கடந்த காலமும் எதிர்காலமும் Veeragathy Thanabalasingham on October 25, 2022 Photo, AP Photo, Eranga Jayawardena திருத்தத்தை மீள்பேச்சுவார்த்தைக்கு உட்படுத்தி புதிய உடன்படிக்கையொன்றை செய்யவேண்டும் என்று இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கடந்தவாரம் தெரிவித்த கருத்து குறித்து ஒரு பார்வை இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட புதுடில்லியில் பதவியேற்பதற்கு கடந்த வருட பிற்பகுதியில் செல்வதற்கு சில மாதங்கள் முன்னதாக இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வளர்ப்பதற்கான ஒரு ‘செயற்திட்ட நகர்வு வரைவு’ ஒன்றை அன்றைய ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவிடம் கையளித்தார். இரு தரப்பு உறவுகளை ‘பர…
-
- 0 replies
- 333 views
-
-
ராஜபக்ஷர்கள் என்ன செய்யப் போகிறார்கள்? என்.கே அஷோக்பரன் Twitter: @nkashokbharan முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, மக்கள் எழுச்சியைக் கண்டு பயந்து, நாட்டை விட்டு ஓடிப் போய், தனது ஜனாதிபதி பதவியை இராஜினாமாச் செய்து, மூன்றரை மாதங்களாகப் போகின்றது. கோட்டாவுக்கு முதலே மஹிந்த, பசில், சமல், நாமல், சசீந்திர என மற்றைய ராஜபக்ஷர்களும் தமது பதவிகளை இராஜினாமாச் செய்திருந்தனர். கோட்டா நாட்டை விட்டு ஓடியதிலிருந்தே, பொதுவௌியில் பெருமளவுக்கு அமைதிகாத்த ராஜபக்ஷர்கள் தற்போது, கொஞ்சம் கொஞ்சமாக அரசியல் கூட்டங்களை நடத்தி, தமது இருப்பைத் தக்க வைப்பதற்கான அடுத்தகட்ட காய்நகர்த்தலுக்காக களநிலைவரத்தை பரிசீலித்து வருகிறார்கள். இந்தக் கூட்டங்களுக்கு, அவர்கள் வைத்துள்ள பெயர் …
-
- 0 replies
- 721 views
-
-
இந்திய உயர்ஸ்தானிகரின் வட, கிழக்கு விஜயம் சொல்லும் தெளிவான செய்தி! இந்தியா ஓர் இரட்டை சகோதரராக, குறிப்பாக தேவைப்படும் சகல சந்தர்ப்பங்கள் உட்பட எப்பொழுதும், இலங்கைக்கு துணை நிற்குமென்று இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லே தெரிவித்துள்ளார். இம்மாதத்தின் முதல் வாரத்தில் கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் செய்திருந்த அவர், திருகோணமலையில் வைத்து இந்தக் கருத்துக்களை வெளிப்படுத்தி நம்பிக்கையை மீண்டும் அளித்ததோடு, தெளிவான செய்தியையும் வெளிப்படுத்தியுள்ளார். அவருடைய சந்திப்புக்களும், கரிசைனகளும் இந்தியா, தமிழ் பேசும் சமூகங்கள் உட்பட ஒட்டுமொத்த இலங்கையின் மீதும் எவ்வளவு தூரம் ஆழமான கரிசைனையைக் கொண்டிருக்கின்றது என்பதை அப்பட்மாக வெளிப்படுத…
-
- 0 replies
- 332 views
-
-
காணாமல்போன பிள்ளைகளுக்கு தீர்வுகிடைக்கும் வரை எமக்கு தீபாவளி இல்லை - காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் By VISHNU 24 OCT, 2022 | 04:20 PM K.B.சதீஸ் காணாமல் போன பிள்ளைகளுக்கு தீர்வு கிடைக்கும் வரை எமக்கு தீபாவளி இல்லை என காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் இன்று தெரிவித்தனர். வவுனியாவில் பிரதான தபாலகத்திற்கு அருகாமையில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் வடக்கு கிழக்கில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தீபாவளி திருநாளான இன்று தமது பிள்ளைகளும், உறவுகளும் காணாமல் ஆக்கப்பட்ட நிலையில் அவர்களுக்கான நீதி கோரி கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன்போது கருத்து தெரிவிக்கையில், நமது சைவ மதத்தில், இது கிருஷ்ணர…
-
- 1 reply
- 346 views
- 1 follower
-
-
இதற்கு மேலுமா நம்புவது ? By DIGITAL DESK 5 24 OCT, 2022 | 12:20 PM சத்ரியன் அரசதரப்பு சட்டத்தரணியாகப் பணியாற்றிய முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர், எம்.எம்.சுஹைர் அண்மையில் ஆங்கில நாளிதழ் ஒன்றில் எழுதியிருந்த விருந்தினர் பத்தி ஒன்றில் குறிப்பிட்டிருந்த விடயங்கள், ஆங்கில ஊடகங்களில் அதிகம் கவனத்தைப் பெற்றிருந்தது. அவரது அந்த பத்தியில், ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக, புதிய விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், அதற்கு வெளிநாட்டுப் புலனாய்வு நிறுவனங்களின் உதவிகள் பெறப்படவுள்ளதாகவும், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னக்கோன், பாராளுமன்றத்தில் அறிவித்திருப்பதை மையப்படுத்தி, பல கேள்விகளை எழுப்பிய…
-
- 0 replies
- 515 views
- 1 follower
-
-
இலங்கையில் அதிகரிக்கும் எய்ட்ஸ் நோய் பாதிப்புகள் - திட்டப்பணிப்பாளர் புதிய எச்சரிக்கை ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NATIONAL STD-AIDS CONTROL PROGRAMME TEAM இலங்கையில் எச்.ஐ.வியினால் பாதிக்கப்படும் இளைஞர், யுவதிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தேசிய பாலியல் நோய் மற்றும் எயிட்ஸ் ஒழிப்பு திட்டம் தெரிவித்துள்ளது. இந்த திட்டத்தின் பணிப்பாளர் டொக்டர் ரசாஞ்சலி ஹெட்டியாராட்ச்சி, பிபிசி தமிழுக்கு இதனைக் குறிப்பிட்டார். எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான பெரும்பாலான இளைஞர், யுவதிகள் தற்போது சிகிச்சைகளுக்காக வருகைத் தருவதாகவும் அவர் கூற…
-
- 0 replies
- 207 views
- 1 follower
-
-
ஐ.நா தீர்மானத்துக்கு பின்னரான தமிழர்களின் செயற்திட்டம் எவ்வாறு அமைய வேண்டும்? வி. உருத்திரகுமாரன்
-
- 0 replies
- 274 views
-
-
வடக்கை இரையாக்கும் 'போதைப்பொருள்' : 23 வயது இளைஞனின் சாட்சியம் - நேரடி ரிப்போர்ட் By NANTHINI 19 OCT, 2022 | 09:27 PM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையின் வடக்கு மாகாணம் உள்நாட்டு போரின்போது இழந்தவை ஏராளம். ஆனால், அதனை விட பன்மடங்கு இழப்புகளை போரற்ற இன்றைய சூழலில் வட மாகாணம் இழந்து வருகிறது. சமூக ஆர்வலர்களின் கண்களுக்கு இவை மறைந்து கிடக்கின்றமை கவலையளிக்கின்றது. 'போதைப்பொருள்' முழு வடக்கையும் ஆக்கிரமித்துள்ளது. இதனால் அடுத்த சந்ததியினரை இழக்கும் நிலையில் இந்த மாகாணம் உள்ளது. பிள்ளைகளை போதைப்பொருளில் இருந்து பாதுகாக்க முடியாமல், எத்தனையோ தாய்மார்கள் கண்ணீர் விடுகின்றனர். மறுபுறம் போதைக்கு அடிமையான தன…
-
- 0 replies
- 313 views
- 1 follower
-
-
புனர்வாழ்வுப் பணியகச் சட்டமூலமும் 22ஆவது திருத்தமும்! நிலாந்தன். கடந்த வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தில் 22 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. அதற்கு முதல் நாள் வியாழக்கிழமை நாடாளுமன்றத்தில் சபாநாயகர் உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானம் ஒன்றை வெளியிட்டார்.அது கடந்த செப்டம்பர் மாதம் 23ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட ஒரு சட்டமூல வரைபு தொடர்பானது. அச்சட்ட மூல வரைபு புனர்வாழ்வு பணியகத்துக்கானது.அதை சவால்களுக்கு உட்படுத்தி, உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான உச்ச நீதிமன்றத்தின் வியாக்கியானத்தையே சபாநாயகர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார். புனர்வாழ்வு பணியகச் சட்டமூல வரைபில் சில பகுதிகள் அரசியலமைப்புக்கு முரணானவை என்று உச்ச நீதி…
-
- 0 replies
- 322 views
-
-
வரியைக் கட்டு அல்லது வரிசையில் நில் Nillanthan கொழும்பில் உள்ள முன்னணி ஆங்கில வாரப்பத்திரிகை ஒன்றின் ஊடகவியலாளர் என்னிடம் கேட்டார்…”யாழ்ப்பாணத்தில் ஓட்டோ மாபியாக்களை யார் கட்டுப்படுத்துவது?”என்று.அண்மையில் அவர் யாழ்ப்பாணத்துக்கு வந்த பொழுது சிறிய தூரத்துக்கு அதிக தொகை பணத்தை அவர்கள் கேட்டதாகவும் அவர் முறையிட்டார்.ஆனால் கொழும்பில் குறுந்தூரங்களுக்கு ஆகக் குறைந்தது 120 ரூபாய்களும்,அதற்கு மேற்பட்ட தூரங்களுக்கு மீற்றர் கணக்கின்படி காசு அளவிடப்படுவதாகவும் அவர் சொன்னார்.”யாழ்ப்பாணத்தில் முச்சக்கர வண்டிகளில் ஏன் மீற்றரைப் பொருத்தக் கூடாது?” என்றும் கேட்டார்.அதுமட்டுமல்ல “பிக்மி” போன்ற நிறுவனங்கள் யாழ்ப்பாணத்திற்கு வர முயற்சித்த போதும் அதனை முச்சக்கர வண்டி ஓ…
-
- 0 replies
- 310 views
-
-
மாறி வரும் உல அரசியல் ஒழுங்கில் சீன நகர்வுக்குள் முடங்கும் இந்தியா- சுயமரியாதையையும் இழந்தது மேற்கின் அணுகுமுறையில் பகைமை நாடுகளான இந்தியா -பாக்கிஸ்தான், ஈரான் - சவுதியை இணைக்கும் சீன உத்தி புதுப்பிப்பு: ஒக். 22 22:24 உலக அரசியல் ஒழுங்கில் பிராந்திய நாடுகளிடையே ஏற்படுகின்ற போட்டிகள் மற்றும் முரண்பாடுகளை தீர்த்துத் தமது புவிசார் அரசியல் - புவிசார் பொருளாதார நலன்களை மையமாகக் கொண்டு அமெரிக்கா போன்ற மேற்குலகமும் ஐரோப்பிய நாடுகளும் மேற்கொண்டு வந்த காய் நகர்த்தல்களைத் தற்போது சீனா தனதாக்கி வருகின்றது. உஸ்பெகிஸ்தான் தலைநகர் சமர்கண்ட் நகரில் செப்ரெம்பர் மாதம் நடைபெற்ற சங்காய் ஒத்துழைப்பு உச்சி மாநாட்ட…
-
- 0 replies
- 364 views
-
-
இலங்கையில் ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் செல்வாக்குப் பெறுகிறதா? ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,MAHINDA RAJAPAKSA'S MEDIA இலங்கையில் இடம்பெற்ற 30 வருட யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்ததன் ஊடாக, சிங்கள மக்கள் மத்தியில் அசைக்க முடியாத ஆட்சியாளர்கள் என எண்ணிய ராஜபக்ஷ குடும்பத்தை, நாட்டு மக்கள் ஒன்றிணைந்து போராட்டத்தின் ஊடாக அதிகாரத்தில் இருந்து அகற்றினர். ஆனால் தற்போது கட்சிப் பொதுக் கூட்டங்கள், பொது நிகழ்ச்சிகள் வாயிலாக அவர்கள் மக்களைச் சந்தித்து வருகின்றனர். இது ராஜபக்ஷ குடும்பம் மீண்டும் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்கான அறிகுறியா? இலங்கை எதிர்நோக்கியுள்ள பொருளாதார நெருக்கடிக்கு, ராஜபக்ஷ க…
-
- 1 reply
- 227 views
- 1 follower
-
-
தமிழரசுக் கட்சியின் எதிர்காலம்? October 21, 2022 — கருணாகரன் — “தமிழரசுக் கட்சியின் எதிர்காலம் எப்படியிருக்கும்?” -இந்தக் கேள்வி இப்பொழுது பலமாக எழுந்துள்ளது. இதற்குச் சில காரணங்களுண்டு. அதனால் தமிழ் மக்களுக்கான நிகழ்கால– எதிர்கால அரசியலை வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்லக் கூடிய கொள்கையும் திறனும் அர்ப்பணிப்பும் உண்டா? என்ற சந்தேகம் எழுந்துள்ளமையாகும். முன்பும் சரி, இப்பொழுதும் சரி தமிழரசுக் கட்சியினால் தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் எதற்கும் தீர்வைக் காண முடிந்ததில்லை. (அப்படி ஏதாவது ஒரு விடயத்தில் அது தீர்வைக் கண்டிருந்தால் அதை யாரும் குறிப்பிடலாம்). ஒரு நீண்டகால அரசியற் கட்சி என்ற வகையிலும் அதிகமான காலம் தமிழ் மக்களுடைய ஆதரவைப…
-
- 0 replies
- 378 views
-
-
ராஜபக்ஷர்களின் மீள்வருகைக்கான கட்டியம் புருஜோத்தமன் தங்கமயில் ராஜபக்ஷர்களை நாட்டின் காவலர்களாக முன்னிறுத்தும் பேரணிகளை, பொதுஜன பெரமுன மீண்டும் நடத்தத் தொடங்கிவிட்டது. அடுத்த ஆண்டு ஆரம்பத்தில், உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் நடைபெற இருக்கின்றது. அந்தத் தேர்தலோடு ஆரம்பிக்கும் தேர்தல் திருவிழா, மாகாண சபைத் தேர்தல், ஜனாதிபதி தேர்தல், பொதுத் தேர்தல் என்று, எதிர்வரும் இரண்டு ஆண்டுகளுக்கு களைகட்டப் போகின்றது. அதைக் கருத்தில் கொண்டு ராஜபக்ஷர்கள், தங்களை மீண்டும் நிலைநிறுத்தும் வேலைகளை ஆரம்பித்து இருக்கிறார்கள். ராஜபக்ஷர்களை வீட்டுக்குச் செல்லுமாறு முழு நாடும் கொந்தளித்து அடங்கி, சில மாதங்களே ஆகின்றன. கோட்டாபய ராஜபக்ஷ நாட்டை விட்டுத் தப்பியோடி, ஜ…
-
- 0 replies
- 298 views
-
-
உக்ரெய்ன் – ரசிய மற்றும் ஈழத்தமிழர் விவகாரம்- இரட்டைத் தன்மையைப் பின்பற்றும் இந்தியா –சிக்கலான வாக்கெடுப்புகளில் நடுநிலை வகிப்பது அல்லது வாக்கெடுப்பில் கலந்துகொள்வதைத் தவிர்ப்பது என்பது இந்தியாவின் நிலைப்பாடு. சிறிய நாடான இலங்கைத்தீவு விவகாரத்தில்கூட இரட்டைத் தன்மை என்றால், ஈழத்தமிழ் இனம் சார்ந்த தேவையற்ற கற்பனையான அச்சநிலை புதுடில்லிக்கு இருக்கின்றது என்பதே அதன் பொருள்– -அ.நிக்ஸன்- ரசிய – உக்ரெய்ன் போரில் இதுவரை நாளும் மௌனமாக இருந்த இந்தியா தற்போது வாய்திறப்பது போன்று பாசாங்கு செய்கிறது. உக்ரெய்னில் கைப்பற்றப்பட்ட நான்கு பிராந்தியங்களில் கடந்த மாதம் வாக்கெடுப்பு நடத்திய ரசியா, அந்தப் பகுதிகளை தனது நாட…
-
- 0 replies
- 305 views
-