நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4201 topics in this forum
-
நிர்வாணம் -முகம்மது தம்பி மரைக்கார் பாலியல் துஷ்பிரயோகம் பற்றி ஒவ்வொரு நாளும் வருகின்ற செய்திகள் கவலையளிக்கின்றன. அதிலும் குழந்தைகள், சிறுவர்கள் மற்றும் மாணவர்கள் மீது புரியப்படும் பாலியல் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் கேள்வியுறும்போது அச்சமாக உள்ளது. ஒவ்வொரு பெற்றோரும் வெளியில் செல்லும் தமது பெண் பிள்ளைகள் வீடு திரும்பும்வரை மடியில் நெருப்பைக் கட்டிக்கொண்டவர்கள் போல் அவஸ்தையுறுகின்றனர். இலங்கையில் ஒவ்வொரு 90 நிமிடத்திலும் ஒரு பெண் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாகிறாள். இது அதிர்ச்சியானதொரு தகவலாகும். 2015ஆம் ஆண்டு இந்தத் தகவலை, அப்போது அமைச்சராகப் பதவி வகித்த ரோசி சேனநாயக்க தெரிவித்திருந்தார். …
-
- 0 replies
- 522 views
-
-
ட்ரம்ப் வழியில் கோத்தா... இலங்கைப் படையினருக்கு எதிராக அநீதியான முறையில் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தி, அழுத்தம் கொடுப்பதற்கு தாம் இடமளிக்கப் போவதில்லை என்று சூளுரைத்துள்ள ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச, அவ்வாறான அழுத்தங்களைக் கொடுக்கும் சர்வதேச அமைப்புகளில் இருந்து இலங்கையை விலக்கிக் கொள்ளவும் தாம் தயங்கப் போவதில்லை என்றும் எச்சரிக்கை விடுத்திருக்கிறார். கொரோனா நெருக்கடிக்கு மத்தியில், கடந்த செவ்வாய்க்கிழமை பத்தரமுல்லவில் நடந்த போர் வீரர்கள் நாள் நிகழ்விலேயே ஜனாதிபதி இவ்வாறு கூறியிருக்கிறார். இந்தமுறை போர் வெற்றி நாள் நிகழ்வுகளை அரசாங்கம் பிரமாண்டமான முறையில் கொண்டாடுவதற்கு திட்டமிட்டிருந்தது. போர் முடிவுக்கு வந்ததில் இருந்தே, மகிந்த ராஜபக்ச ஆட்சிக்காலத்தில் ப…
-
- 0 replies
- 415 views
-
-
யேர்மனி கைல்புறோன் நகர தமிழ்மக்களால் தாயகத்தில் அல்லறும் மக்களின் துயரத்தில் பங்கெடுக்கவும் அம் மக்களின் அவலநிலையை யேர்மனிய மக்களுக்கு எடுத்துரைக்கும் முகமாகவும் கடந்த சனிக்கிழமை காலை 10 மணி தொடக்கம்ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி வரை விழிப்புநிலைப் போராட்டமும் நகரமத்தியில் யேர்மனிய மக்களுக்கான பரப்புரை நிகழ்வும் முன்னெக்கப்பட்டது. மேலதிக விபரங்களுக்கு பதிவு
-
- 0 replies
- 715 views
-
-
மிலேனியம் சவால் உடன்பாட்டின் முறிவு இலங்கை அரசாங்கத்திற்கு ஆபத்தானதா.? இலங்கை அரசியல் பரப்பில் அமெரிக்காவின் நகர்வுகளில் ஒரு பின்னடைவாககப் பார்க்கப்படும் எம்சிசி உடன்படிக்கை பற்றிய தேடல் தவிர்க்க முடியாதது. ஏறக்குறை அமெரிக்க இலங்கை உறவு முறிந்துள்ளதாகவும் ஜெனீவாவில் அமெரிக்கா புதிய தீர்மானத்தை முன்வைக்கப் போவதாகவும் தமிழ் ஊடகப்பரப்பிலும் அரசியல் வாதிகள் மத்தியிலும் வெளிப்படுத்தப்படுகிறது. அரசுகளது அரசியலில் எப்போதும் ஆழமாக பதிவுசெய்யப்படும் விடயம் நலன்சார் நடத்தையாகும். அத்தகைய நடவடிக்கைகளில் அதிக ஈடுபாடு கொண்டுள்ள தேசமாக அமெரிக்காவின் அணுகுமுறைகள் காணப்படுவது வழமையானதாகும். ஆனால் அமெரிக்கா தனது நலனுக்கு விரோதமாக எதனையும் செயல்படுத்துவதில்லை. அத்தகைய நலன்கள…
-
- 0 replies
- 378 views
-
-
இந்தியப்படை மீது போர்க்குற்ற விசாரணை வருமா..? இந்திய அமைதிப் படை இலங்கையில் தமிழர்கள் மீது நடாத்தியதும் சர்வதேச போர்க்குற்றச் செயல்தான் என்ற கோணத்தில் விசாரணைகள் உலக மன்றில் இன்னமும் ஆரம்பமாகவில்லை. இப்போது இந்தியப் படைக்கு தரக்குறைவான உணவு வழங்கியதால் இருவர் தண்டிக்கப்பட்டுள்ளார்கள், இதுபோல இந்தியப் படை செய்த தரக்குறைவான செயல்களுக்கு யார் தண்டனை வழங்குவது என்ற கேள்வி பதிலின்றிக் கிடக்கிறது. இந்த வழக்கு மேலும் விரிவுபடுத்தப்பட்டு இந்தியப் படைகள் செய்த குற்றச் செயல்களும் விசாரிக்கப்படும் நிலை வருமா என்பது ஆதங்கமாக உள்ளது. தரக்குறைவான உணவுக்கு மட்டும் தண்டனை வழங்கினால் போதுமா..? இது குறித்த செய்தி : எண்பதுகளின் பிற்பகுதியில் இலங்கையில் நிலைகொண்டிருந்…
-
- 0 replies
- 439 views
-
-
எபோலா என்ற வார்த்தையே எனக்குள் அச்சத்தையும் துயரத்தையும் ஏற்படுத்துகிறது. அந்த வார்த்தையைக் கேட்பதுகூட வெறுப்பாக இருக்கிறது. அது என்னுடைய குடும்பத்தையும் பள்ளிப் படிப்பையும் நாசமாக்கிவிட்டது. வாழ்க்கை திடீரெனத் துன்பமயமாகிவிட்டது. என்னுடன் அத்தையும் சில உறவினர்களும் இந்த வீட்டில் இப்போது இருக்கிறார்கள் என்பது மட்டுமே எனக்கு ஆறுதல். நாங்கள் ஏழைகளாக இருந்தாலும் முன்பு மகிழ்ச்சி யாக இருந்தோம். இப்போதோ நான் பீதியில் ஆழ்ந் திருக்கிறேன். எங்கள் ஊரைச் சேர்ந்த ஏராளமான மக்கள், நண்பர்கள், பல குடும்பங்கள் இந்தக் காய்ச்சலுக்குப் பலியாகிவிட்டனர், இன்னமும் இறந்து கொண்டிருக்கின்றனர். உறவினர்களை இழந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. எபோலா உண்மைய…
-
- 0 replies
- 469 views
-
-
46 ஆண்டுகள் உறக்காது போராடியவ மாவீரன் என் தம்பி என்னைத் தேடி வந்தானா? என்று நினைக்குபோது நான் பெருமைப் படுகிறேன். என்தப்பி பிரபாகரஎதை நினைப்பாரோ அதைச் சாதிப்பார் என்பதில் நான் முழுமையான நம்பிக்கை வைத்திருக்கிறேன்.அனைத்து தமிழர்களும் போர்க்குற்றவாளி ராஜபக்சவை கூண்டில் ஏற்றுவதற்கு சபதம் எடுக்கும் நாளாகப் தம்பியின் பிறந்த நாளைப் பயன்படுத்துங்கள். http://www.pathivu.com/news/35606/57//d,article_full.aspx
-
- 0 replies
- 287 views
-
-
இலங்கையின் சகல அரசியல் தலைவர்களுடனும் நட்புறவைப்பேணவிரும்பும் இந்தியா தென்னிந்திய நகரமான பெங்களுரில் இந்தியாவின் பிரபல ஆங்கில தினசரிகளில் ஒன்றான ' இந்து' வினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக கடந்தவாரம் சென்றிருந்த இலங்கையின் முன்னாள் ஜனாதிபதியும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான மகிந்த ராஜபக்ச இந்தியாவுடன் உறவுகளைக் கட்டியெழுப்பும் முயற்சிகளில் இறங்கியிருப்பதாகத் தோன்றுகின்ற சூழ்நிலையில், புதுடில்லி இலங்கைத் தலைவர்களில் தனது விருப்புக்குரியவர் என்று யாருமில்லை என்று அறிகுறி காட்டியிருப்பதுடன் சகல தலைவர்களுடனும் நட்புரிமையைப் பேணும் கொள்கையொன்றை கடைப்பிடிக்க ஆரம்பித்திருக்கிறது. ராஜபக்சவின் அரசியல் எதிரியான முன்னாள் ஜனாதிபதி சந்தி…
-
- 0 replies
- 392 views
-
-
மிக கவலைக்குரிய நிலையில் வடக்கு, கிழக்கின் கல்வித்துறை - கல்வி அமைச்சர் டலஸ் உயர்தர பரீட்சை விடயத்தில் மாணவர்களுக்கு எந்த அழுத்தமும் ஏற்படாத ஒரு தீர்மானத்தை நாங்கள் எடுப்போம். மாணவர்களுக்கு அநீதி ஏற்படாது. மாணவர்களுக்கு அழுத்தம் அதிகரிக்கும் வகையிலான தீர்மானத்தை எடுக்கவே மாட்டோம். அதனை நான் உத்தரவாத படுத்துகின்றேன். வடக்கின் கல்வி நெருக்கடியை சரியாக தீர்க்க முடியாவிடின் ஆசிரியர் பற்றாக்குறை பாடசாலைகளுக்கான வசதியின்மை என்பனவற்றை தீர்க்காவிடின் மீண்டும் ஆயுதம் ஏந்துங்கள் என்று அழைப்பு விடுப்பதாக அமைந்துவிடும் வடக்கு கிழக்கு பாடசாலைகளில் ஆசிரியர் பற்றாக்குறை வசதிகள் இன்மை என பல குறைபாடுகள் நிலவுகின்றன. எந்தப் பிரச்சினையுமின்றி ஜூலை மாதம் மூன்றாம் வாரத்…
-
- 0 replies
- 708 views
-
-
பகுதி- ௨ http://vimbamkal.blogspot.com/2008/12/part...sasination.html பகுதி- 3 http://vimbamkal.blogspot.com/2008/12/part...sasination.html
-
- 0 replies
- 1.4k views
-
-
கடந்த வாரத்தில் வடக்கை மையப்படுத்தி அமெரிக்காவில் இரண்டு முக்கிய செயற்பாடுகள் இடம்பெற்றிருந்தன. ஒன்று அமெரிக்க தூதுவர் அத்துல் கெசாப் யாழ்ப்பாணத்துக்கு பயணம் மேற்கொண்டு பல்வேறு சந்திப்புகளை நிகழ்த்தியமை. இரண்டாவது அமெரிக்க விமானப்படையின் சி-130 போக்குவரத்து விமானத்தில் வந்த அமெரிக்கப் படையினர் யாழ்ப்பாணத்தில் மேற்கொண்ட ஐந்து நாள் மருத்துவ முகாம் மற்றும் உதவிப் பணிகள். தற்போதைய நிலையில் அமெரிக்காவின் இந்த இரண்டு நகர்வுகளையும் சாதாரண விடயமாகக் கருதிவிட முடியாது. அமெரிக்காவின் பசுபிக் கட்டளைப் பீடம் தனது பரப்புக்குள் உள்ள நாடுகளில் ஆண்டு தோறும் நான்கு பெரியளவிலான மனிதாபிமான மருத்துவ உதவிப் பணிகளை மேற்கொள்வது வழக்கம். ஒப்பரேசன் பசுபிக் ஏஞசல் என்ற பெயரில் இ…
-
- 0 replies
- 647 views
-
-
இலங்கை மாகாண சபைகள் ஒழிக்கப்படுகிறதா? -கொந்தளிக்கும் அரசியல் கட்சிகள் ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக பட மூலாதாரம், PMD MEDIA படக்குறிப்பு, மைத்திரிபால சிறிசேன இலங்கை - இந்திய அரசாங்கங்களுக்கு இடையில் ஏற்படுத்திக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையில் அமல்படுத்தப்பட்ட மாகாண சபை முறைமையை இல்லாதொழிக்கும் திட்டமொன்றை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக கடந்த சில தினங்களாக அதிகம் பேசப்படுகின்றது. இந்த விடயம் தொடர்பில் பிபிசி தமிழ் பல்வேறு கோணங்களில் ஆராய்ந்தது. "எளிதான செயல் கிடையாது" மாகாண சபைகளை ரத்து செய்வது என்பது தீயுடன் விளையாடு…
-
- 0 replies
- 335 views
-
-
'மனசாட்சி உறங்கும்போது, மனக்குரங்கு ஊர் சுற்றக் கிளம்புகிறது' என்று 'பூம்புகார்' திரைப்படத்தில் வசனம் வரைந்தவர்கலைஞர். ஈழத்தின் இனப்படுகொலை நடந்தபோது ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த நம் கலைஞரின் மனசாட்சி இப்போதுதான் கண்ணுறக்கம் கலைந்து, யார் காதுகளிலும் விழாமல் மௌனமாக அழுகிறது. 'மனத்தின் அசுத்தம் பட்ட தண்ணீரே கண்ணீர்' என்று எழுதினார் ஜெயகாந்தன். 'அழுதால் கொஞ்சம் நிம்மதி' என்றார் கண்ணதாசன். வீழ்ந்துவிட்ட இனத்துக்காக அழுதாலும், தாழ்ந்துவிட்ட தன் பெருமைக்காகஅழுதாலும் அழுவது நல்லதுதான். ஆனால், கலைஞர் கண்ணீர் விடுவதோடு நிறுத்தாமல், 'விடுதலைப் புலிகளின் அவசர முடிவால் ஏற்பட்ட விளைவுகளை' விளக்கியிருக்கிறார். அந்த விளக்கத்தில் நேர்மையின் நிறமில்லை என்பதுதான், பொய்யின் நிழல் படாத நிஜம். …
-
- 0 replies
- 642 views
-
-
-
- 0 replies
- 508 views
-
-
ஈழத்தமிழர் தேசத்தின் தலைமைத்துவம் தேர்தல் அரசியற் கட்சிகளுக்கு அப்பாலானது [TamilNet, Friday, 21 January 2022, 07:24 GMT] இனவழிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு அரசான சிறீலங்கா எனப்படும் இலங்கையானது, அரசுகளுக்கான உலக ஒழுங்கு தனக்குச் சாதகமாயிருக்கும் போக்கையும், புவிசார் சமனமாக்கல் (சமநிலை பேணல் / balancing act) ஆட்டத்துக்கு ஏதுவாகத் தனக்கமைந்திருக்கும் கேந்திர முக்கியத்துவத்தையும் ஒருசேர இணைத்துப் பயன்படுத்தும் வாய்ப்பை ஓர் ஆளும் அரச தரப்பாகப் பெற்றிருக்கிறது. இனவழிப்புப் போரை நடாத்தியதுபோலப் பொருளாதார நெருக்கடியையும் அரசுகளுக்கான உலக ஒழுங்கையும் கேந்திரச் சமனமாக்கல் ஆட்டத்தையும் பயன்படுத்தி மீண்டும் எதிர்கொள்ளலாம் என்று அது முனைகிறது. ஆனால், தனக்கு ஆதரவாக உலக ஒழுங்கில் ஓர் …
-
- 0 replies
- 302 views
-
-
இலங்கை நாடாளுமன்றம் நேரலை | தமிழில் | 29-08-2022
-
- 0 replies
- 207 views
-
-
மாவீரர் நாள் மறக்க முடியாத நாள். மாவீரர் நாள் மனதில் ஆழப்பதிந்த நாள். மாவீரர் நாள் மண்ணின் நினைவுகளைக் கொண்டு வரும் நாள். தமிழீழ விடுதலைப் போராட்டம் துவண்டு போகாது. தொய்ந்து போகாது. ஓய்ந்து போகாது. ஒடுங்கிப் போகாது. அது விடுதலைப் போராட்டம். அது வீறோடு தொடரும். https://www.youtube.com/watch?feature=player_embedded&v=UnDSS5h57Gohttp://www.pathivu.com/news/35609/57//d,article_full.aspx
-
- 0 replies
- 308 views
-
-
ஐ.தே.கவுக்கும் பொதுத் தேர்தலே சாதகமானது எம்.எஸ்.எம். ஐயூப் / 2018 நவம்பர் 28 புதன்கிழமை, மு.ப. 01:40 Comments - 0 நீண்ட கால காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த, 1989ஆம் ஆண்டு முதல், 1999ஆம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளில், இந்தியாவில் ஏழு அரசாங்கங்கள் பதவிக்கு வந்தன. ஆனால், அந்த ஏழு பதவி மாற்றங்களில் ஒன்றின் போதேனும், தற்போது இலங்கையில் ஏற்பட்டுள்ளதைப் போன்ற குழப்ப நிலை ஏற்படவில்லை; அரசமைப்பு நெருக்கடி ஏற்படவுமில்லை. இந்திய காங்கிரஸ் கட்சி, 1989ஆம் ஆண்டு லோக் சபா (மக்களவை) தேர்தலின் போது, அறுதிப் பெரும்பான்மைப் பலம் பெறவில்லை. எனவே, காங்கிரஸ் தலைவர் ராஜீவ் காந்தி, ஆட்சிப் பொறுப்பை ஏற்க மறுத்துவிட்டார். எனவே, ஜனதா தள் கட்சியின் தலைவர் வி.பி.சிங், பாரத…
-
- 0 replies
- 310 views
-
-
மதஞ்சார் அறமும் மதச் சகிப்பின்மையும் Editorial / 2019 மார்ச் 07 வியாழக்கிழமை, பி.ப. 05:50 Comments - 0 மதங்களை முன்னிறுத்தி, அண்மைக்காலமாக இலங்கையெங்கும் நடந்தேறும் நிகழ்வுகள் அச்சமூட்டுவன. அவை, இயல்பான மனஎழுச்சியின் விளைவுகள் என்று கொள்ளவியலாதவாறு திட்டமிட்டு நடந்துள்ளன. இவை சில முக்கியமான கேள்விகளை எழுப்புகின்றன. எல்லா மதங்களும் ஒன்றையே போதிக்கின்றன என்று தொடர்ந்து சொல்லப்பட்டு வருகிறது. அப்படியாயின் மதங்களுக்குள் முரண்பாடுகள் ஏன் தோற்றம் பெறுகின்றன என்ற வினா முதன்மையானது. போருக்குப் பிந்தைய இலங்கைச் சூழலில், ‘பொது எதிரி உருவாக்கம்’ என்பது தோற்றம்பெறவில்லை. களத்தில் விடுதலைப் புலிகளின் முழுமையான முடிவு, இலக்கு வைப்பதற்கு எதிரியற்ற நெருக்கட…
-
- 0 replies
- 300 views
-
-
கிறைஸ்ட்சேர்ச் தாக்குதல்: பாசிசத்தின் இன்னொரு பலிபீடம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2019 மார்ச் 21 வியாழக்கிழமை, மு.ப. 11:36Comments - 0 உலகில் பாதுகாப்பான இடம் என்று எதுவுமில்லை என்பதை, கடந்தவாரம் இடம்பெற்ற நிகழ்வுகள், மீண்டும் உறுதிப்படுத்திச் சென்றுள்ளன. இனவாதமும் தீவிர வலதுசாரி நிலைப்பாடுகளும் கடந்த ஒரு தசாப்த காலமாக, அறுவடை செய்த பாசிசத்தின் இன்னொரு பலிபீடமாக, நியூசிலாந்து நாட்டில் இடம்பெற்ற நிகழ்வுகளை நோக்க வேண்டியுள்ளது. இதை எவ்வாறு புரிந்து கொள்வது? உலகில் பாதுகாப்பான நாடு என்று எந்த நாட்டைச் சொல்ல இயலும்? நேற்று கிறைஸ்ட்சேர்ச்சில் நடந்தது, நாளை இன்னோர் இடத்தில் நடக்காது என்ற உத்தரவாதத்தை, யாரால் தரவியலுவும்? நிச்சயமின்மைகளே, நிச்சயமான காலப்…
-
- 0 replies
- 352 views
-
-
அவன்ட் காட் வெட்டிய புதைகுழி கடந்த ஜனவரி 8ஆம் நாள் நடந்த ஜனாதிபதி தேர்தலை அடுத்து இடம் பெற்ற ஆட்சி மாற்றத்துக்குப் பின்னர், இலங்கையில் அதிக சர்ச்சைகளை உருவாக்கியுள்ள நிறுவனம் அவன்ட் காட் என்பதில் சந்தேகமில்லை. ஆட்சி மாற்றத்தையடுத்து, சில நாட்களில் அவன்ட் காட் நிறுவனத்தின் ஆயுதக் களஞ்சியங்களும், மிதக்கும் ஆயுதக் கப்பல்களும் சோதனையிடப்பட்டன. அங்கிருந்த ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பான வழக்குகளும் விசாரணைகளும் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன. இந்த விவகாரம் தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலர் கோட்டாபய ராஜபக்ஷவும் விசாரணைகளை எதிர்கொண்டு வருகிறார். வேறும் பல முன்னாள் இராணுவ, கடற்படை அதிகாரிகளும் இந்த நிறுவனம் பற்றிய ச…
-
- 0 replies
- 275 views
-
-
தம்புள்ள பள்ளிவாசலை இடித்தழிக்கும் நோக்குடன் பௌத்த பேரினவாதிகளால் மேற்கொள்ளப்படும் எதிர்ப்பு நடவடிக்கைகளால் சிறுபான்மை முஸ்லீம் சமூகத்தவர்கள் மேலும் கோபம் கொண்டுள்ளனர். இவ்வாறு வளைகுடா நாட்டை தளமாகக்கொண்டு வெளிவரும் Gulf News ஆங்கில ஊடகத்தில் பத்தி எழுத்தாளர் *Tariq A. Al Maeena எழுதியுள்ள சிறப்பு கட்டுரையில் தெரிவித்துள்ளார். அதனை 'புதினப்பலகை'க்காக மொழியாக்கம் செய்தவர் நித்தியபாரதி. அதன் முழுவிபரமாவது, 26 ஆண்டுகளாகத் தொடரப்பட்ட வன்முறை மிக்க, மிகப் பயங்கரமான உள்நாட்டு யுத்தமானது பல ஆயிரக்கணக்கான மக்களின் உயிர்களைப் பறித்து, அவர்களின் சொத்துடைமைகளை நாசம் செய்து முடிவுக்கு கொண்டு வரப்பட்டதைத் தொடர்ந்து சிறிலங்காவில் வாழும்…
-
- 0 replies
- 328 views
-
-
தோல்வியடைந்தவர்கள் எல்லோரும் தகுதியற்றவர்கள் அல்லர் முன்னாள் பிரதி அமைச்சர் எம்.கே.ஏ.டீ.எஸ் குணவர்தனவின் மறைவை அடுத்து, அவரது நாடாளுமன்ற ஆசனத்துக்கு முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, ஐக்கிய தேசியக் கட்சியின் தேசியப் பட்டியல் மூலமாக நியமிக்கப்பட்டமை தொடர்பாக, பலர் பல வாதங்களை முன்வைத்து, எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள். மாற்றுக் கொள்கைகளுக்கான மத்திய நிலையம், தேசியப் பட்டியலில் பெயர் இல்லாத ஒருவரை, அந்தப் பட்டியல் மூலமாக நியமித்தமை சட்ட விரோதமானது எனக் கூறி வழக்கொன்றையும் தாக்கல் செய்துள்ளது. தெரிவிக்கப்பட்டு இருக்கும் எதிர்ப்புக்கள் சில சட்ட அடிப்படையிலானவை. மற்றவை தார…
-
- 0 replies
- 382 views
-
-
அண்மைய புயற்பேரழிவு மீட்சி மற்றும் சமகால அரசியல் தொடர்பான உரையாடற் காணொளியாதலால் இணைத்துள்ளேன் நன்றி - யுரூப் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி
-
- 0 replies
- 191 views
-
-
விடுதலைப் புலிகள் அமைப்பிலிருந்து கருணா விலகிய சம்பவம் தொடர்பாக பல விடயங்கள் காணப்படுகின்றன். கிழக்கு மாகாண மக்கள் மத்தியிலே யாழ். ஆதிக்கத்திற்கு எதிராக காணப்படும் எதிர் உணர்வுகள் காலப் போக்கில் மாறும் இயல்பைக் கொண்டுள்ளனவா? அல்லது மேலும் கடினமாகும் போக்கினைக் கொண்டுள்ளதா? என்பவற்றினை ஆராய்வதற்கு இவ் விபரங்கள் அவசியமாகின்றன. அது மட்டுமல்லாமல் வடக்கு, கிழக்கு இணைப்பு தொடர்பாக தமிழ் அரசியல் தலைமைகள் வற்புறுத்தி வருகின்ற போதிலும், கிழக்கு மக்கள் மனதில் காணப்படும் நியாயமான சந்தேகங்கள் என்ன? என்பதை அறிவதற்கு இவை அவசியமாகின்றன. ஒருவேளை இத் தகவல்கள் ஏற்கெனவே அறிந்தவையாக இருப்பினும் வெளிநாட்டவரால் அவை எவ்வாறு நோக்கப்படுகின்ற…
-
- 0 replies
- 274 views
-