நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
ஒரு கூர்வாளின் நிழலில் தமிழினி முன்வைக்கும் அரசியலும் படிப்பினையும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் மகளிர் அரசியற்துறைப் பொறுப்பாளர் தமிழினி (சிவகாமி ஜெயக்குமரன்) எழுதிய 'ஒரு கூர்வாளின் நிழலில்' என்கிற நூல், தமிழ்த் தரப்பின் ஒரு சில பகுதியினர் மத்தியிலும் தென்னிலங்கையிலும், இந்தியாவிலும் சற்று கவனம் பெற்றிருக்கின்றது. மூன்று தசாப்த காலம் நீண்ட தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டங்களில், முதன்மைத் தரப்பாக கோலொச்சிய தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் முக்கியஸ்தராக இருந்த தமிழினி, அந்தப் போராட்டத்தின் சில பக்கங்கள் தொடர்பில் தன்னுடைய எண்ணப்பாடுகளை எழுதும் போது கவனம் பெறுவது இயல்பானது. விடுதலைப் புலிகள் அமைப்பு, ஆயுத ரீ…
-
- 0 replies
- 290 views
-
-
உக்ரேன் விமான விபத்து: ஏவுகணை தாக்கியும் 19 வினாடிகள் நீடித்த விமானிகளின் உரையாடல்! ஈரானால் தவறுதலாக சுட்டு வீழ்த்தப்பட்ட உக்ரேனின் பயணிகள் விமானத்தை, முதல் ஏவுகணை தாக்கிய பிறகும், விமானிகளுக்கு இடையே 19 வினாடிகள் உரையாடல்கள் நீடித்ததாக ஈரானின் விமானப் போக்குவரத்து அமைப்பு தெரிவித்துள்ளது. ஈரான் விமானப் போக்குவரத்து அமைப்பின் தலைவர் கேப்டன் சங்கானே இதுகுறித்து கூறுகையில், ‘முதல் ஏவுகணை விமானத்தை தாக்கிய பின்னும் 19 வினாடிகள் வரை இரண்டு விமானிகள் மற்றும் அவர்களின் வழிகாட்டி ஆகியோரிடையே உரையாடல் நடந்தது. அதற்கு 25 வினாடிகளுக்கு பிறகு இரண்டாவது ஏவுகணை விமானத்தைத் தாக்கியது அவர்கள் கடைசி வினாடிகள் வரை விமானத்தை இயக்கி வந்துள்ளனர். 19 வினாடிகளுக்கு பிறகு இந்…
-
- 0 replies
- 290 views
-
-
ஐரோப்பிய மின்சார நெருக்கடி: இலங்கைக்கான படிப்பினைகள் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ இலங்கை மக்களின் பொருளாதார நெருக்கடிக்கு, முக்கிய பங்களித்தவற்றில் ஒன்று மின்சார நெருக்கடி. இலங்கையின் மின்சார நெருக்கடிக்கு, தற்காலிகமான தீர்வு எட்டப்பட்டுள்ள போதும், இது நிரந்தரமானதோ நீண்டகாலத்துக்கு நிலைக்கக்கூடியதோ அல்ல; எப்போது வேண்டுமானாலும் இன்னொரு மின்சார நெருக்கடி ஏற்படக்கூடும் எனும் நிலையிலேயே, நாடு இயங்குகிறது. சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளுக்கு உட்பட்டு, ஒரு சரணாகதிப் பொருளாதார மாதிரியை நோக்கியே, இலங்கை நகர்ந்து கொண்டிருக்கிறது. தனியார் மயமாக்கலை உந்தித் தள்ளுகின்ற நவதாராளவாத பொருளாதார அடிப்படைகள் குறிவைக்கின்ற துறைகளில், மின்சாரம் முதன்மையானது. தொழில்நுட்ப…
-
- 0 replies
- 290 views
-
-
அகிலன் இலங்கைக்கான விஜயத்தின் இறுதியில் சீன அமைச்சர் டில்லிக்குச் சொன்ன செய்தி: இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையிலான பிராந்திய வல்லாதிக்கப் போட்டிக் களத்தில் இலங்கை எந்தளவுக்கு மாட்டிக் கொண்டிருக்கின்றது என்பதை சீன வெளிவிவகார அமைச்சரின் கடந்த வார இலங்கை விஜயத்தின் போது தெளிவாக உணர முடிந்தது. இந்தியாவின் அழுத்தங்களுக்காக, இலங்கை மீதான தமது பிடியை எந்தளவுக்கும் விட்டுக்கொடுக்கத் தாம் தயாராகவில்லை என்பதை இதன்போது சீன வெளிவிவகார அமைச்சர் உணர்த்தியிருக்கின்றார். இதற்கு புதுடில்லி எவ்வாறு எதிர்வினையாற்றப் போகின்றது என்பது தான் இப்போதுள்ள கேள்வி. இலங்கைக்கு கடந்த வாரம் அதிரடியான விஜயம் ஒன்றை மேற்கொண்டிருந்த சீன வெளிவிவகார அமைச்சர் வாங் யீ தனது விஜயத்தின் இறுதியில் தெ…
-
- 0 replies
- 290 views
-
-
ஜனநாயகம் அல்லது சர்வாதிகாரம் ; இலங்கையர்களுக்கு முன்னாலுள்ள தெரிவு அமீர் அலி உரிய காலத்துக்கு முன்கூட்டியே பாராளுமன்றத்தை கலைத்த ஜனாதிபதியின் செயல் அரசியலமைப்புக்கு முரணானது என்று தீர்ப்பளிக்க உச்சநீதிமன்றம் தவறும்பட்சத்தில் பொதுத்தேர்தல் நடைபெறுமேயானால், இலங்கை வாக்காளர்கள் வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும்போது அவர்கள் முன்னால் ஒரேயொரு கேள்வியே இருக்கும். ஜனநாயகமா அல்லது சர்வாதிகாரமா? சுதந்திரத்துக்குப் பின்னரான இலங்கையின் வரலாற்றிலே வேறு எந்தவொரு பொதுத்தேர்தலுமே இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த அல்லது நெருக்கடியான தெரிவை மக்கள் முன்னிலையில் வைத்ததாகக் கூறுவதற்கில்லை.நாகரிக உலகில் ஒரு ஜனநாயக நாடு என்ற இலங்கையின் பெயரும் பொருளாதார சுபிட்சத்துட…
-
- 0 replies
- 289 views
-
-
மணிப்பூர் வன்முறையும், மக்களாட்சி விழுமியங்களும் Jul 31, 2023 07:00AM IST ஷேர் செய்ய : ராஜன் குறை மணிப்பூரில் இரண்டு மாதங்களில் ஓர் உள்நாட்டுப்போரே நடந்தாற்போல சூழ்நிலை உருவாகிவிட்டது. முதலில் பொதுவாக வடகிழக்கு மாநிலங்களுடன் கணிசமான உறவு எதுவும் இல்லாத மைய இந்திய மாநிலங்கள் சாதாரணமாக கலவரச் செய்திகளை உச்சுக்கொட்டி கேட்டுக்கொண்டிருந்தார்கள். ஆனால், திடீரென பெண்களுக்கெதிரான பாலியல் வன்கொடுமை காட்சிகளடங்கிய சில காணொலிகள் பரவியதில் இந்திய சமூகம் பெருமளவில் அதிர்ச்சியுற்றது. இந்தக் காணொலிகளெல்லாம் சமூக ஊடகங்களில் பரவுவதால் நேரடியாக மக்களிடம் போய் சேர்ந்தன. அது பரவலாக மக்களிடையே அறச்சீற்றத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தின. ஏன் மணிப்பூர் அரசும், ஒன்றி…
-
- 0 replies
- 289 views
-
-
போதை அரசியல் முகம்மது தம்பி மரைக்கார் / 2019 பெப்ரவரி 26 செவ்வாய்க்கிழமை, மு.ப. 01:14Comments - 0 போதைப் பொருள்களின் கூடாரமாக நாடு மாறிவிட்டதோ என்கிற அச்சம் ஏற்பட்டுள்ளது. திரும்பும் திசையெல்லாம் படையினர் வசம், போதைப் பொருள்கள் சிக்கிக் கொண்டிருக்கின்றன. கைப்பற்றப்படும் போதைப் பொருள்களின் எடை ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றன. சனிக்கிழமை இரவு 294 கிலோகிராம் ஹெரோயின் போதைப்பொருளைப் படையினர் கைப்பற்றியிருந்தனர். இதுதான், இலங்கையில் ஒரே தடவையில் கைப்பற்றப்பட்ட அதிக எடையுடைய ஹெரோயின் போதைப்பொருளாகும். இதன் பெறுமதி 300 மில்லியனுக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதன்போது, இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் இருவரும் முஸ்லிம்கள். …
-
- 0 replies
- 289 views
-
-
ரணிலையும் இணைத்தே எமது அடுத்த ஆட்சி: உறுதியாக கூறுகிறார் ராஜித பொ.ஜ.முவும் சு.கவும் இணையாது; எமது கூட்டணியில் மைத்திரியையும் உள்ளீர்க்க தயார் கூட்டமைப்பு எமது கூட்டணியில் இணையாது; விக்கி தரப்பு சிந்தித்து தீர்மானிப்பதே சிறந்தது ஜனாதிபதித் தேர்தல் திட்டமிட்டபடி நடைபெற வுள்ளதோடு, நாம் பரந்துபட்ட கூட்டணியை அமைத்து புதிய வேட்பாளரை நிறுத்தவுள்ளோம். எமது தரப்பில் வேட்பாளர் குறித்து பிரச்சினைகள் இல்லை. கரு, சஜித், நான், சம்பிக்க என நீண்ட பட்டியல் உள்ளது. எவ்வாறாயினும் எமது அடுத்த ஆட்சி ஞானம் நிறைந்த தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவையும் இணைத்ததாகவே அமையும் என்று சுகாதார,போசனைகள் சுதேச மருத்துவத்துறை அமை…
-
- 0 replies
- 289 views
-
-
படத்தின் காப்புரிமைGETTY IMAGES பாகிஸ்தான் முன்னாள் அதிபரும் ராணுவத் தளபதியுமான ஜெனரல் பர்வேஸ் முஷாரஃபுக்கு கடந்த வாரம் தேச துரோக வழக்கு ஒன்றில் மரண தண்டனை விதிக்கப்பட்டது அந்த நாட்டின் ராணுவம் மற்றும் நீதித்துறை இடையே மோதலை உருவாக்கியுள்ளது. அரசின் நிர்வாகத்தில் ராணுவத்தின் தலையீடு அதிகம் இருப்பதாக ராணுவம் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு நடந்த அந்த நாட்டில் நீண்ட காலமாக குற்றச்சாட்டு நிலவுகிறது. 2007ல் அரசமைப்பை மீறி அவசர நிலையை பிரகடனப்படுத்தி தேச துரோகம் செய்ததாக அவர் மேல் குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. பாகிஸ்தான் அரசியலமைப்பின் பிரிவு 6ன்படி நாட்டின் அரசியலமைப்பு அமலாவதை தடுக்கும் வகையில் செயல்படவோ, தற்காலிகமாக நீக்கவோ அல்லது நிறுத்திவைக்கவோ முற்பட்டால் அவர்கள…
-
- 0 replies
- 289 views
-
-
யாரையும் பகைக்க விரும்பவில்லை ; இரா.சம்பந்தன் புதிய அரசியல் சாசனத்தின் ஊடாக அரசியல் தீர்வொன்றை அடைவதற்கான நம்பிக்கை எமக்குள்ளதோடு அதுகுறித்து சிந்திப்பவர்களுடன் தொடர்புகளை பேணிவருகின்றோம். இலக்குகளை அடைவதற்காக அனைவரையும் ஒன்றிணைத்து பயணக்க விரும்புகின்றோம். நாங்கள் யாரையும் பகைக்க விரும்பவில்லை என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும், எதிர்க்கட்சித்தலைவருமான இரா.சம்பந்தன் வீரகேசரிக்கு வழங்கிய விசேட செவ்வியின்போது குறிப்பிட்டார். அவர் வழங்கிய அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- அரசியல் நெருக்கடிகளின் ஏற்பட்டுள்ள தற்போதைய சூழலில் தீர்மானிக்கும் சக்தியாகவிருக்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேசிய கட்சிகளுடனான அனுகுமுறைகள் கடுமையான விமர்சனத்…
-
- 2 replies
- 289 views
-
-
தாம் வெற்றி பெறுவதற்காகவன்றி மற்றவர்களை தோற்கடிக்க போட்டியிடுபவர்கள் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 செப்டெம்பர் 15 ஞாயிற்றுக்கிழமை, பி.ப. 07:14 நாட்டில் எல்லோரது கவனமும் ஜனாதிபதித் தேர்தல் பக்கம் திரும்பியிருக்கும் நிலையில், கடந்த வாரம் அதனோடு தொடர்புடைய இரண்டு முக்கிய செய்திகள் வெளியாகின. கடந்த 5ஆம் திகதி வியாழக்கிழமை, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையிலான ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும், ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர் ஒருவரை நிறுத்தப் போவதாக அக்கட்சியின் பொதுச் செய்லாளர் தயாசிறி ஜயசேகர தேர்தல்கள் ஆணையகத்திடம் அறிவித்திருந்தார். அது தான் அவற்றில் முதற்செய்தி. தாமும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட விரும்புவதாக, ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும் பிரதமருமான ர…
-
- 0 replies
- 289 views
-
-
காணொளி : வடக்கு மாகாணத் தேர்தல் முடிவுகள் ,தமிழர்களின் வெற்றியா? ராஜபக்சேயின் சூழ்ச்சியா?... பகுதி-1 பகுதி-2 பகுதி-3 http://akkinikkunchu.com/new/index.php?option=com_content&view=article&id=9512:2013-10-08-12-55-26&catid=1:latest-news&Itemid=18
-
- 1 reply
- 289 views
-
-
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்புதிதெடுத்தல் நிகழ்வு! நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தில் நெற்புதிதெடுத்தல் (அறுவடை) நிகழ்வு இன்று திங்கட்கிழமை காலை இடம்பெற்றதுள்ளது தைப்பூச தினத்துக்கு முதல் நாள் கொண்டாடப்படும் ‘புதிர் தினம்’ எனும் இந்த பாரம்பரிய நிகழ்வில் கோவில் அறங்காவலரும் சிவாச்சாரியாரும் முதலாவது புதிரை அறுவடை செய்ய ஆலயத்துக்கு சொந்தமான மறவன்புலவில் உள்ள வயலுக்குச் செல்வார்கள். அந்த வயலில் பூஜை வழிபாட்டுடன் அறுவடை செய்யும் நெல்லில் இருந்து அமுது தயாரித்து நல்லூர் கந்தசுவாமிக்கு படையல் வைத்து பூசைகள் செய்வது வழக்கம். அவ்வாறே இம்முறையும் இடம்பெற்ற படையல் பூஜைகளை தொடர்ந்து பக்தர்களுக்கும் அமுது வழங்கப்பட்டது. இவ்வழிபாட்டு முறை நல்லூர் கந்தசுவாமி கோயிலின்…
-
-
- 2 replies
- 289 views
-
-
ராஜபக்ச தரப்புக்கு முகம் கொடுப்பதற்கு தமிழ் தேசத்தை தயார்படுத்தவேண்டும்-கஜேந்திரகுமார் நேர்காணல் August 10, 2020 ரொஷான் நாகலிங்கம் ஜனாதிபதி கோதபாய ராஜபக்ஷவுடைய அரசியல் பண்புகள் அனைத்தும் சிங்கள இனவாத அடிப்படையில் தமிழ் இன விரோத அடிப்படையிலும் அமைந்திருக்கும் என்பது அனைவரும் அறிந்த விடயம். அப்படிப்பட்ட பண்புகளைக் கொண்ட நபர் பாராளுமன்றத்தில் 2/3 பெரும்பான்மையை பெற்றுள்ள நிலைமையில் ஒரு பெண்ணை ஆணாக்குவது ஆணை பெண்ணாக்குவது தவிர மற்ற அனைத்தையும் அவர் ஒரு தலைப்பட்சமாக சாதிக்கலாம் என தெரிவித்துள்ள தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம்இ வரப்போகும் இந்த சுனாமிக்கு முகம் கொடுப்பதற்கு தமிழ் தேசம் தன்னை தயார்படுத்த வேண்டும் என்றும…
-
- 0 replies
- 289 views
-
-
மாட்டிக்கொண்ட இரா.துரைரத்தினமும் சாட்டை சுற்றியவர்களும்! ஈழத்தின் சிரேஷ்ட ஊடகவியலாளர்களில் ஒருவரும், இணையத்தளமொன்றின்; ஆசிரியருமான இரா.துரைரத்தினம், அண்மையில் 'சாதி' வசை பொழிந்து சிக்கலுக்குள் மாட்டிக் கொண்டார். யாழ். பல்கலைக்கழகம், மாணவர்கள் மற்றும் கல்விசார் ஊழியர்களுக்கான புதிய ஆடைக்கட்டுப்பாடு விதிகளை கடந்த வாரத்தின் ஆரம்பத்தில் விடுத்திருந்தது. இது தொடர்பில் பேஸ்புக்கில் இடம்பெற்ற விமர்சன உரையாடலொன்றின் போது, ஆடைக்கட்டுப்பாட்டுக்கு ஆதரவாக கருத்து வெளியிட்ட இரா.துரைரத்தினம், விவாதத்தின் போக்கில் தமிழகத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், எழுத்தாளருமான து.ரவிக்குமாரை நோக்கி சாதி வசை பொழிந…
-
- 0 replies
- 289 views
-
-
இந்தியாவை இலக்கு வைத்து இலங்கையில் கால் பதிக்கிறதா சீனா? தமிழர்களைப் பதறவைக்கும் சீன ஆக்கிரமிப்பு தீபச்செல்வன் ஈழத் தீவு முழுவதும் ஈழத் தமிழர்கள் பரந்து வாழ்ந்தார்கள் என்பதற்கு ஈழத்தின் நாற்புறமும் உள்ள சிவாலயங்கள் சாட்சியாக இருக்கின்றன. ஈழத்தின் பஞ்ச ஈச்சரங்கள் எனப்படும் இந்தக் கோயில்கள் பல்லவர் காலத்தில் நாயன்மார்களால் பாடல் பெற்றவை. அவற்றின் வரலாறு கிறிஸ்துவுக்கு முந்தைய தொன்மைக்கும் முந்தையவை. வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் ஈழத்தில் வாழ்ந்த ராவணன் என்ற தமிழ் மன்னன், சிவபக்தனாக இருந்திருப்பதும் தொன்மையின் ஆதாரமாகும். இப்படிப்பட்ட தொன்மையைக் கொண்ட ஈழத் தமிழ் மக்கள் இன்றைக்கு தாம் எஞ்சியுள்ள வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தின் வாழ்வுரிமையை, ஆட்சியுரிமையைக்…
-
- 1 reply
- 288 views
-
-
ரஞ்சன் அருண்பிரசாத் பிபிசி தமிழுக்காக 2 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையில் மூன்று தசாப்த கால யுத்தத்தை நிறைவு செய்த தருணத்தில், பாதுகாப்பு செயலாளராக கடமையாற்றிய கோட்டாபய ராஜபக்ஷ, தற்போது நாட்டின் ஜனாதிபதியாக பதவி வகித்து வருகிறார். கோட்டாபய ராஜபக்ஷ 2019ம் ஆண்டு ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருந்த சந்தர்ப்பத்திலேயே, கோவிட் பரவல் உலகம் முழுவதும் தாக்கத்தை செலுத்த ஆரம்பித்திருந்தது. இந்த நிலையில், கோவிட் பரவல் காரணமாக 2020ம் ஆண்டு நடைபெற்ற ஐநா பொதுச் சபைக் கூட்டத்தில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கலந்துகொள்ளவில்லை. எவ்வாறாயினு…
-
- 0 replies
- 288 views
-
-
மீண்டும் களத்தில் இறங்கும் சந்திரிகா By T. SARANYA 29 SEP, 2022 | 12:26 PM ரொபட் அன்டனி பொருளாதார பிரச்சினைகளுக்கு மத்தியிலும் நாட்டின் அரசியல் களம் சூடு பிடித்துக் கொண்டே செல்கிறது. அரசியல் ரீதியான காய் நகர்வுகள், அரசியல் வியூகம் அமைக்கும் முயற்சிகள், முகாம் அமைக்கும் செயற்பாடுகள், அடுத்த தேர்தலை நோக்கிய கூட்டணிகள் என்பன வலுவாக அரசியல் களத்தில் இடம்பெற்றுக் கொண்டிருப்பதை காண முடிகிறது. இலங்கையில் எப்போதும் அரசியல் களம் சூடு பிடித்துக் கொண்டு இருக்கின்றமை வழமையாகிவிட்டது. இலங்கை மட்டுமன்றி தெற்காசிய நாடுகளிலேயே இவ்வாறு அரசியல் களம் எப்போதும் சூடாக இருப்பதே பொது…
-
- 1 reply
- 288 views
-
-
சோபாவும் சுயாதிபத்தியமும் : அமெரிக்க - இலங்கை உடன்படிக்கைகள் குறித்த விசனங்கள் ஏன்? (பி.கே.பாலசந்திரன்) அமெரிக்காவுடன் படைகளின் அந்தஸ்த்து உடன்படிக்கை (Status of Forces Agreement – SOFA) கைச்சாத்திடும் தறுவாயில் இலங்கை இருக்கிறது.மிகவும் சர்ச்சைக்குரியதாக நோக்கப்படுகின்ற இந்த உடன்படிக்கை கொள்கையளவில் இலங்கையை இலட்சக்கணக்கான அமெரிக்கப் பாதுகாப்புப் படைகளினதும், பாதுகாப்புத் திணைக்களத்தின் அதிகாரிகள் மற்றும் கொந்தராத்துக்காரர்களின் மகிழ்ச்சியானதொரு வேட்டைக்களமாக மாறிவிடக்கூடும் என்று மூலோபாய விவகாரங்களில் நிபுணத்துவம் பெற்றவர்கள் கூறுகிறார்கள். தயாராகிக் கொண்டிருக்கும் இன்னுமொரு சர்ச்சைக்குரிய உடன்படிக்கை மிலேனியம் சவால் கூட்டுத்தாபனத்திடமிருந்து (…
-
- 0 replies
- 288 views
-
-
`குளிர்காலங்களில் மீண்டும் கொரோனா.. 2022 வரை சமூக இடைவெளி!’ - ஹார்வர்டு ஆய்வு செல்வதென்ன? கொரோனாவை முற்றிலும் ஒழிக்க 2022 வரை சமூக இடைவெளியைக் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனப் புதிய ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட உலகம் முழுவதும் கொரோனா வைரஸால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தற்போதைய நிலவரப்படி சர்வதேச அளவில் வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 19,98,535- ஆகவும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,26,612 - ஆகவும் உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாகப் பல நாடுகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தாலும் மக்கள் வெளியில் நடமாடுவது குறைந்தபாடில்லை. குறிப்பாக இந்தியாவின் சில பகுதிகள…
-
- 0 replies
- 288 views
-
-
தேசிய பட்டியல்; சந்தர்ப்பவாதிகளை அடையாளம் காணும் தருணம் August 10, 2020 இலங்கையின் ஒன்பதாவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் நடைபெற்று முடிந்திருக்கிறது. மக்கள் தமது தீர்ப்பை வழங்கி தமது பிரதிநிதிகளைத் தெரிவு செய்து உள்ளார்கள். இப்போது தலைவர்கள் தமது தீர்ப்பின் மூலம் தமக்கான பிரதிநிதிகளைத் தெரிவு செய்து கொள்ளும் சந்தர்ப்பம். அந்த சந்தர்ப்பம் எத்தனை சந்தர்ப்பவாத தலைவர்களை அம்பலப்படுத்தியுள்ளது என்பதே இந்தவார அவதானமாக உள்ளது. முதலாவது தேசிய பட்டியல் உறுப்பினர்களை வெளியிட்டு ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுன தாங்கள்தான் ஆட்சியாளர்கள். அதற்கான தலைமை தங்களிடம் இருக்கிறது என்பதை நிரூபித்து உள்ளார்கள். ஆகஸ்ட் 6 பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் வந்ததும் ஆகஸ்ட் 7 பெரமுன க…
-
- 0 replies
- 288 views
-
-
இணை அனுசரணையுடன் பிரேரணை நிறைவேறியமை தமிழ் மக்களுக்கு வெற்றியே - சுமந்திரன் எம்.பி. பிரத்தியேக செவ்வி இலங்கை அரசாங்கம் பொறுப்புக்கூறலைச் செய்வதற்காக சர்வதேச மேற்பார்வைக்கான கால எல்லையை அடுத்த இரண்டு வருடங்கள் நீடித்து பிரித்தானியா தலைமையில் கொண்டுவரப்பட்ட பிரேரணை நிறைவேற்றப்பட்டமையானது தமிழ் மக்களுக்கு கிடைத்த வெற்றியாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், இலங்கை தமிழரசுக்கட்சியின் வெளிவிவகாரங்களுக்கான செயலாளரும், யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் தெரிவித்தார். ஜெனீவா மனித உரிமைகள் பேரவையின் 40 ஆவது கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காகச் சென்றிருந்த அவர் நாடு திரும்ப…
-
- 0 replies
- 287 views
-
-
அம்பாறையில் மிகவும் திட்டமிட்டவகையில் ஆரம்பிக்கப்பட்டு கண்டி மாவட்டத்தில் நடந்துமுடிந்த கலவரங்கள் இரண்டு வருடங்கள் பூர்த்தியடைந்த நிலையில், மறந்துபோனதனை மீட்டுப் பார்பதுதான் இந்த கட்டுரையாகும். கண்டி மாவட்டத்தில் முற்றாக எரிக்கப்பட்ட தங்கள் வியாபாரத் தளங்களை மீளவும் கட்டியெழுப்பும் பணிகளை முஸ்லிம் வர்த்தகர்கள் துவங்கியபோது முதற்கட்டமாக அரசாங்கம் ஒரு லட்சம் ரூபாய் தருவதாகவும், இழப்பீட்டினை மதிப்பீடு செய்ததன் பின்பு உரிய நிவாரண உதவிகளைச் செய்வதாகவும் அறிவித்திருந்தது. அரசாங்கத்தினால் அறிவிக்கப்பட்ட இந்த இழப்பீட்டு தொகையானது எரியூட்டப்பட்டதை சுத்தப்படுத்தும் வேலைக்கே போதாமலிருந்தது. அன்று பல பள்ளிவாசல்கள் முழுமையாகச் சேதமடைந்…
-
- 0 replies
- 287 views
-
-
இழுபறிகள் மூலம் தோற்கடிக்க திட்டம்: அமைச்சர் சம்பிக்க செவ்வி ஜனாதிபதித் தேர்தலை பிற்போடுவதற்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது. எமது அணியை தோற்கடிக்கச் செய்வதற்காகவே திட்டமிட்டு இழுபறியான நிலைமைகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஆகவே ஐ.தே.க தாமதிக்காது வேட்பாளரை பெயரிட வேண்டும். இந்த விடயத்தில் தொடர்ந்தும் காலம் தாழ்த்த முடியாது என்று பெருநகர மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய செவ்வியின் போது தெரிவித்தார். அச்செவ்வியின் முழுவடிவம் வருமாறு, கேள்வி:- ஜனநாயக தேசிய முன்னணியை உருவாக்குவதற்கான பணிகள் எவ்வளவு தூரம் நிறைவடைந்துள்ளன? …
-
- 0 replies
- 287 views
-
-
வடக்கில் இருந்து முஸ்லிம்கள் ஏன் அகற்றப்பட்டனர் ; முஸ்லிம்கள் மீதான பிரபாகரனின் நிலைப்பாடு ; ஐ.எஸ். அச்சுறுத்தல் குறித்து கருணா அம்மான் தெரிவித்துள்ளது ! வடக்கு முஸ்லிம்களை பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காகவே அவர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டார்கள். முஸ்லிம் தலைமைகளையோ மக்களையோ தண்டிப்பதைக் கூட விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் ஏற்றுக்கொண்டிருக்கவில்லை. அதனை அவர் கொள்கையாக ஏற்று இறுதிவரையில் உறுதியாக இருந்தார். எனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு ஏப்ரல் 11இல் அறிவிக்கப்பட்டிருந்தது. சர்வதேச ஒத்துழைப்புடன் தீவிரவாத தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதால் அதுகுறித்த முழமையான விடயங்களை கண்டறியாத வரையில் இலங்கைக்கு தீவிரவாத அச்சுறுத்தல் தொடரும் நிலைமையே உள்ளது என…
-
- 0 replies
- 287 views
-