நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
மு.க.ஸ்டாலின் தமிழ் இனத் தலைவரா?! மின்னம்பலம்2022-05-26 மே மூன்றாவது வாரத்தில் நடந்த நான்கு முக்கியமான நிகழ்வுகள் தமிழ்நாடு அரசு, தமிழ்நாடு முதல்வர் மு. க. ஸ்டாலின் பற்றி சர்வதேச அளவில் பேச வைத்திருக்கின்றன. பேரறிவாளனை கட்டியணைத்த ஸ்டாலின் முதல் நிகழ்வு மே 18 ஆம் தேதி ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு 30 ஆண்டுகள் சிறை தண்டனை அனுபவித்த பேரறிவாளன் உச்ச நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தின் பேரில் விடுதலை செய்யப்பட்டார். அவரது விடுதலையை திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ் கடுமையாக எதிர்த்த நிலையில்... தன்னை சந்திக்க வந்த பேரறிவாளனை கட்டியணைத்து தனது உடல் மொழி மூலம் தன் உணர்வை வெளிப்படுத்தினார் ஸ்டாலின். இந்த காட்சி உலக…
-
- 0 replies
- 223 views
-
-
சம்பந்தனிடம் சில கேள்விகள் May 25, 2022 — தம்பியப்பா கோபாலகிருஷ்ணன் — ‘தீர்வை வென்றெடுக்க ரணிலுடன் பேசுவோம்’ என்ற முன்பக்கத் தலைப்பிட்டுத், “தமிழ் மக்களின் பிரச்சினைகளை நன்கு புரிந்துகொள்ளக் கூடியவர்தான் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க. எனவே அவருடன் பேச்சு நடத்தி, தமிழர் பிரச்சினைக்கு அரசியல் தீர்வைப் பெற்றுக்கொள்ள முயற்சி எடுக்கப்படும்” -இவ்வாறு தமிழ்த் தேசியக்கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார் எனக் ‘காலைக்கதிர்’ மின்னிதழ் 16.05 2022 மாலைப் பதிப்பு செய்தி வெளியிட்டுள்ளது. இரா.சம்பந்தனின் கவனத்திற்குச் சில விடயங்களையும் வினாக்களையும் இப்பத்தி சமர்ப்பிக்க விரும்புகிறது. * தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முழுமையான ஆதரவுடன் –…
-
- 0 replies
- 551 views
-
-
அமெரிக்கா: உலகின் மிகப்பெரிய கொலைகார துப்பாக்கி தேசம் மே 25, 2022 –இ.பா.சிந்தன் வீட்டில் தனது பாட்டியை சுட்டுக் கொன்றுவிட்டு, அருகிலிருந்த தொடக்கப் பள்ளியில் 19 குழந்தைகளையும், ஓர் ஆசிரியரையும் சுட்டுக் கொன்ற அமெரிக்க இளைஞனின் செயல், உலகையே அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. உலகிலேயே மிகவும் ஆபத்தான பயங்கரவாத நாடு எதுவென்று கேட்டால் நாம் எதையெதையோ யோசிப்போம். ஆனால் உண்மை என்ன தெரியுமா? அது அமெரிக்காவைத் தவிர வேறில்லை. அதற்கு மிகமுக்கியமான காரணம் என்னவென்றால், அமெரிக்காவைப் பொறுத்தவரையில் தனக்குப் பிடிக்காதவர்களைக் கொல்லவேண்டும் என்றால், காவல்துறையினரும் துப்பாக்கியைக் கையில் எடுக்கலாம், காவல்துறையில் இல்லாத மக்களில் ஒருவரும் துப்பாக்கியைத் த…
-
- 0 replies
- 219 views
-
-
இரஷ்ய-உக்ரைன் போர் : இரஷ்யாவுக்கு எதிரான அமெரிக்காவின் பதிலிப் போரும் உலகப் போர் அபாயமும் ! May 23, 2022 – பாகம் 1 கடந்த பிப்ரவரி 24-ம் தேதி, ‘நவ நாஜிக்களை ஒழிப்பதற்கான சிறப்பு இராணுவ நடவடிக்கை’ என்ற பெயரில் உக்ரைன் மீது போர் தொடுத்தது இரஷ்யா. இரண்டு மாதங்கள் ஆகின்றன, போர் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இரஷ்யாவிற்கு எதிராக பொருளாதாரத் தடைகளை விதிப்பது, உக்ரைனுக்கு ஆயுதங்களை வழங்குவது, இரஷ்யாவிற்கு எதிரான பொய்ப் பிரச்சாரங்களைக் கட்டவிழ்த்துவிடுவது-நெருக்கடி கொடுப்பது, இரஷ்யாவிற்கு எதிரான நாடுகளை ஒன்றிணைக்க முயற்சிப்பது உள்ளிட்ட பல வழிமுறைகளின் மூலம் உக்ரைனுக்கு வெளியிலிருந்து இப்போரை அமெரிக்காவே நடத்திக் கொண்டிருக்கிறது. இரஷ்யாவும் சரி, உக்ரைன் மற்றும்…
-
- 1 reply
- 284 views
-
-
இலங்கையில் ராஜபக்ச வம்சத்தின் வீழ்ச்சி பற்றிய உள்வீட்டு தகவல்கள்? இரு வலுவான சகோதாரர்கள் மத்தியிலான உறவு எவ்வாறு முறிவடைந்தது-அவர்கள் எப்படி நாட்டையும் வீழ்ச்சி பாதைக்கு இட்டுச்சென்றனர் வோசிங்டன் போஸ்ட்- தமிழில் – ரஜீவன் – பிரதமருடன் காணப்பட்ட அவரது உறவினரான உதயங்கவீரதுங்கவும் குடும்ப உதவியாளரும் இராணுவத்தில் உள்ள கோத்தபாய ராஜபக்சவின் ஆதரவாளர்கள் வேண்டுமென்றே தங்களை காப்பாற்றுவதை தாமதித்தனர் ஆறு மணித்தியாலங்களின் பின்னரே வந்தனர் என வோசிங்டன் போஸ்டிற்கு தெரிவித்தனர். – மகிந்த குடும்பத்தினர் மன்றாடிய போதிலும் இராணுவத்தினர் இரவு 11 மணிவரை உதவிக்கு விரையவில்லை – இராணுவத்தினர் வேண்டுமென்றே உதவிக்கு வருவதை தாமதித்தனர் என்பதை மகிந்த புரிந்துகொண்டுள்ளார் என தெரி…
-
- 0 replies
- 462 views
-
-
முள்ளிவாய்க்கால் நினைவுகளுக்கு… அ.சி.விஜிதரன் பதின்மூன்று வருடங்கள் கடந்து போயுள்ளன. முள்ளிவாய்க்காலின் பெரும் துயரம், கனத்த உணர்வு காலங்களின் கடத்தலிலும் மாறாத பெரும் ஊணாகவே இருக்கிறன. எத்தனை காலங்கள் கடந்தாலும் மறக்க முடியாத பெரும் அவலத்தின் நினைவுகள் அவை. மனிதம் என்ற வார்த்தையின் எல்லா அர்த்தங்களும் துப்பாக்கிச் சன்னங்களால் சிதைத்துப் போடப்பட்ட நாட்கள் அவை. இதுவரை மனித இனம் என்று தங்களை அர்த்தப்படுத்திக் கொள்ளும் மனிதர்கள் செய்த கொடும் செய்கைகளில் ஒன்றாக மாறிப் போயிருக்கிறது முள்ளிவாய்க்காலில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட இனப்படுகொலை. சரியாகச் சொன்னால் இன்னும் அதன் வீச்சங்களில் இருந்து நாற்றம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கிறது. பெரும் அழிப்பில் சிக…
-
- 0 replies
- 478 views
-
-
ரணில் அதிர்ஸ்டசாலியா, இல்லையா? May 22, 2022 — கருணாகரன் — இலங்கையில் மிக அதிர்ஷ்டசாலியான ஒரு மனிதர் என்றால் அது ரணில் விக்கிரமசிங்கதான். யாருமே எதிர்பார்த்திருக்காத வகையில் பிரமராகியிருக்கிறார். ஹொலிவூட் சினிமாக்களில் வருவதைப்போல தனியொருவராக – ஒற்றை ஆளாக – நின்று ஆட்சி அமைத்திருக்கிறார். அவருடைய அமைச்சரவையில் இடம்பெறுகின்றவர்களும் இடம்பெறப் போகின்றவர்களும் வெவ்வேறு கட்சிகளைச் சேர்ந்தவர்கள். இதுவரையும் அவரைக் கடுமையாக எதிர்த்தவர்கள், எதிர்ப்பவர்கள். அவரையும் அவருடைய ஆட்சியையும் ஆதரிக்கப் போகின்றவர்களும் கூட எதிர்த் திசையில் நிற்பவர்களே. எவராலும் எதுவுமே செய்ய முடியாது என விதி வேறு விதமாக விளையாடத் தொடங்கியிருக்கிறது. இதனால் ரணில் வி…
-
- 1 reply
- 237 views
-
-
ரணிலுக்கு உதவி செய்யும் ஜப்பானும் இரண்டாம் உலக போரும் - இந்தக் கதை தெரியுமா? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை பொருளாதார நெருக்கடியில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் பல்வேறு நாடுகள் உதவிக் கரம் நீட்டியுள்ளன. இலங்கை பொருளாதார நெருக்கடியை சந்திக்க ஆரம்பித்த தருணத்தில், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உதவிகளை செய்திருந்தாலும், ஜப்பான் அந்த சந்தர்ப்பத்தில் பெரிதும் உதவி கரம் நீட்டவில்லை. எனினும், ஜப்பான் தற்போது உதவி கரம் நீட்ட முன்வந்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி…
-
- 0 replies
- 298 views
- 1 follower
-
-
தீவிரவாதத்துக்கான ஊக்குவிப்பா பேரறிவாளன் விடுதலை? கே.சந்துரு தமிழ் மக்களால் 1971-க்குப் பிறகு முற்றிலுமாகப் புறக்கணிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி மீண்டும் ஒரு கோமாளித்தனமான வேலையில் ஈடுபட்டுள்ளது. பேரறிவாளனை உச்ச நீதிமன்றம் விடுவித்த தீர்ப்புக்கு எதிராக காங்கிரஸ் தொண்டர்கள் வாயில் துணியைக் கட்டிக்கொண்டு ஒரு மணி நேரம் மௌன எதிர்ப்பு தெரிவிப்பார்கள் என்று அக்கட்சியால் வெளியிடப்பட்ட அறிவிப்பு அரசியல் அபத்தம்! இது தவிர, அவர்களது ‘செய்தித் தொடர்பாளர்’ என்ற பெயரில் இயங்கும் அமெரிக்கை நாராயணன் உதிர்க்கும் முத்துகள் யாவும் காது கொடுக்க சகித்தாவை. இந்தத் தீர்ப்பை பயங்கரவாதத்திற்கும், பணநாயகத்திற்கும் கிடைத்த வெற்றி என்று கூறியதோடு, தமிழ் மக்கள் அடைந்திருக்கும் தோல…
-
- 2 replies
- 495 views
-
-
இலங்கை நெருக்கடி: பணவீக்கம் விரைவில் 40 சதவீதமாக அதிகரிக்கும் - மத்திய வங்கி ஆளுநர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க (இன்றைய (மே 20) இலங்கை நாளிதழ்கள், செய்தி இணையதளங்களில் வெளியான செய்திகள் சிலவற்றை இங்கே தொகுத்து வழங்குகிறோம்) இலங்கையில் இந்தாண்டு நாட்டின் பொருளாதார வளர்ச்சி வீதமானது மிகவும் மந்தகரமான நிலையிலேயே காணப்படும் என்றும் தற்போது 30 சதவீதமாகக் காணப்படுகின்ற பணவீக்கம் எதிர்வரும் சில மாதங்களில் 40 சதவீதமாக அதிகரிக்கும் என்றும் மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளதாக, 'வீரகேசரி' நாளிதழ் செய்தி வெளிய…
-
- 1 reply
- 429 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 268 views
- 1 follower
-
-
-
- 0 replies
- 391 views
- 1 follower
-
-
அவர்கள் அழிக்க விரும்பும் ரத்தச்சிவப்பு கையெழுத்து சரி, கங்கிரஸ் தான் ராஜீவைக் கொன்று விட்டார்களே எனும் கோபத்தில் விடுதலை செய்யவில்லை, இந்த பாஜகவுக்கு என்ன பிரச்சனை என சிலர் கேட்கிறார்கள். நியாயமான கேள்வி. ஆனால் இதைக் கேட்பவர்கள் காங்கிரஸுக்கும் பாஜகவுக்குமான ஒற்றுமைகளைப் பற்றி யோசிக்க வேண்டும். காந்தியின் காலத்தில் இருந்தே இந்துத்துவர்கள் மத்தியில் இரண்டு பிரிவுகள் இருந்தனர். ஒரு தரப்பு அமைதி வழியில் இந்து ராஜ்ஜியத்தை தோற்றுவிக்க முயன்றனர்; மற்றொரு தரப்பினர் வன்முறையை விரும்பினர். முதலாவது தரப்பினர் காந்தியுடன் இணைந்து பணியாற்றினர், ஆனால் காங்கிரஸுக்கு வெளியே இருந்து கொண்டு. இவர்களை காந்தி அங்கீகரித்து …
-
- 1 reply
- 310 views
- 1 follower
-
-
இலங்கை முள்ளிவாய்க்காலில் எங்கும் காணப்படும் ராணுவத் தடுப்புகள், துணிச்சலான பெண்கள் - செய்தியாளரின் குறிப்பு எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் படக்குறிப்பு, முள்ளிவாய்க்காலையும் முல்லைத்தீவையும் இணைக்கும் வட்டுவாகல் பாலத்தில் ராணுவச் சோதனை முள்ளிவாய்க்காலில் இப்போது போர் எதுவும் நடக்கவில்லை. ஆனால், எங்கு திரும்பினாலும் ராணுவத்தைப் பார்க்க முடிகிறது. ராணுவ முகாம்கள், கண்காணிப்புக் கோபுரங்கள், சாலைச் சோதனைச் சாவடிகள் என ஏதாவது ஒரு வகையில் குறைந்தது 5 இடங்களிலாவது துப்பாக்கி ஏந்திய ராணுவத்தினரைக் கடந்து செல்ல வேண்டியிருக்கிறது. முள்ளிவா…
-
- 0 replies
- 311 views
- 1 follower
-
-
பற்றி எரிகிறது இலங்கை! சரியாக 13 ஆண்டுகளுக்கு முன் தமிழர்களின் வயிறும் வாழ்வும் உடம்பும் உடைமைகளும் பற்றி எரிந்த அதே மே மாதம் இதோ அதற்கெல்லாம் காரணமான இராசபக்சவின் வீடு தீப்பற்றி எரிந்திருக்கிறது! தமிழர்கள் குழந்தை குட்டியுடன் கொத்துக் கொத்தாகச் செத்து விழுந்ததைப் பால்சோறு பொங்கிக் கொண்டாடிய சிங்கள மக்களின் வயிறு இன்று பசித் தீயால் எரிகிறது! ஆனால் இவற்றையெல்லாம் பார்த்து மகிழும் அளவுக்குக் கொடூர மனம்தான் நமக்கு வாய்க்கவில்லை. சிலர் இதைக் கடவுளின் தீர்ப்பு என்கிறார்கள். எனக்கு அதில் நம்பிக்கை இல்லை. ஒரு நிமையம் (minute) நீங்கள் உங்களைக் கடவுளாக நினைத்துக் கொள்ளுங்கள்! இப்படி ஓர் இனப்படுகொலை நடக்கும் நேரத்தில் நீங்கள் என்ன செய்வீர்கள்? உடனே மக்களைக் காப்பாற்ற…
-
- 3 replies
- 609 views
-
-
கலாநிதி அகிலன் கதிர்காமரின் உரையும், அண்மித்த இலங்கை நெருக்கடிகளும்! - ஜோதிகுமார் - - ஜோதிகுமார் - 15 மே 2022 இன்றைய, இலங்கையின் வரலாறு காணாத பொருளாதார நெருக்கடி, தற்போதைய எதிர்ப்பலைகளுக்கு எதிராக அவசர கால சட்டத்தை அமுல்படுத்தும் மாபெரும் அரசியல் நெருக்கடிகளுக்கு இட்டு சென்றுள்ளது. எதிர்ப்பலைகள், அவசரகால சட்டம், ராணுவமயம், சுடுவதற்கான உத்தரவு – என தொடர்ந்த அரசியல் சுவாத்தியம் - இப்போது ரணிலின் பதவியேற்புடன் தன் முதற்கட்டத்தை நிறைவு செய்துள்ளது. இம்முதற்கட்டம் எவ்வழியில் தன் இரண்டாம் கட்டத்தை எய்தும் என்பது கேள்வி குறியாகவே இருக்கின்றது. இந்நெருக்கடியானது, கடந்த காலத்தின் 1953 இன் பொருளாதார நெருக்கடியுடனும் அதையொட்டி எழுந்த 1953 இன் ஹர்…
-
- 0 replies
- 319 views
-
-
historical mistake of the tigers - lessons to be learnt by india on the recent sri lankan crisis நன்றி - யூரூப்
-
- 8 replies
- 894 views
-
-
இலங்கை நெருக்கடி:“ரூபாவின் மதிப்பு மேலும் சரியும், மின்வெட்டு அதிகரிக்கும் – புள்ளி விவரங்களுடன் விளக்கிய ரணில் விக்ரமசிங்க 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த காலங்களை விடவும், மிக மோசமான காலத்தை, குறுகிய காலத்திற்குள் இலங்கை எதிர்கொள்ளவுள்ளது என இலங்கை பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். இலங்கையின் புதிய பிரதமராக பொறுப்பேற்ற பிறகு ரணில் விக்ரம்சிங்க இன்று நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். அப்போது இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள சவால்கள் குறித்து மிக விரிவாக புள்ளிவிவரங்களுடன் பேசினார். அவர் ஆற்றிய உரை பின் வருமாறு. வணக்கம், கடந்த வியாழக்கிழமை நான் பிரதமர் பதவியை…
-
- 6 replies
- 382 views
- 1 follower
-
-
புதிய மீட்பர்? May 15, 2022 — கருணாகரன் — நாட்டில் ஏற்பட்டிருக்கும் அரசியல், பொருளாதார நெருக்கடிக்களுக்கு மத்தியில் ரணில் விக்கிரமசிங்க புதிய பிரதமராகப் பொறுப்பேற்றுள்ளார். ரணிலின் பதவியேற்பு அமெரிக்காவுக்கும் இந்தியாவுக்கும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இதனை இலங்கையில் உள்ள அமெரிக்கத் தூதரும் இந்தியத் தூதரும் வெளிப்படுத்தியுள்ளனர். இந்தியத் தூதர் கோபால் பாக்லே ரணிலை நேரில் சந்தித்து வாழ்த்துச் சொல்லியிருக்கிறார். அமெரிக்கத் தூதர் ஜூலி சுங் ட்விற்றரில் உற்சாகமான முறையில் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். கூடவே IMF வின் உதவியோடு நீண்டகால அடிப்படையில் இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்குத் தீர்வு காணமுடியும் என்றும் சொல்லியிருக்கிறார். ஆகவே இந்திய, அமெர…
-
- 0 replies
- 227 views
-
-
“அண்ணாமலை என்ன, அமித்ஷா இலங்கைக்கு வந்தாலும் பலிக்காது!” திறந்த பொருளாதாரக் கொள்கைக்கு எதிர்ப்பு, சுயச்சார்புப் பொருளாதாரக் கொள்கை என்பதில் எல்லா இயக்கங்களும் உறுதியாக இருந்தன. 12 May 2022 6 AM 1997-ல் தன் முதல் சிறுகதையை எழுதிய ஷோபாசக்தி, எழுத்துலகில் கால்நூற்றாண்டுப் பயணத்தைக் கடந்திருக்கிறார். தன் புதிய நாவல் பணிக்காகத் தமிழகம் வந்தவரைச் சந்தித்து இலங்கையின் தற்போதைய நிலை, இலக்கியம், சினிமா என்று பல தளங்களில் கேள்விகளை முன்வைத்தேன். ``இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி பற்றி என்ன நினைக்கிறீர்கள்?’’ ``இது ஏற்கெனவே எதிர்பார்த்த ஒன்றுதான்.இலங்கையின் இடதுசாரி அறிஞர்கள் இதுகுறித்துத் தொடர்ச்சியாக எச்சரித்து வந…
-
- 2 replies
- 432 views
-
-
ரணிலின் இலங்கை அரசியலில் மிகவும் துரதிஷ்ட்டம் மிக்க நபர். ஒவொரு முறையும் பிரதமராகி, பதவியில் இருக்கும் ஜனாதிபதியுடன் முரண்பட்டு பதவி இழக்கும் ஒரு மனிதர். கடந்த தேர்தலில், மக்களால் முழுவதுமாக நிராகரிக்கப்பட்ட நிலையில், விகிதாசார முறைமையில், நாடு முழுவதும் விழுந்த கொஞ்ச வாக்குகளினால் கிடைத்த ஒரேயொரு நியமன சீட் மூலம் எம்பியாகி இன்று கட்சி பலமே இல்லாமல், பலவீனமான நிலையில், அதே போல் மிகவும் பலவீனமான நிலையில் உள்ள ஜனாதிபதியுடன் ஒரு இரகசிய ஒப்பந்தம் செய்து கொண்டு பிரதமர் ஆகிறார். இது, குருடன் சுமக்கும் நொண்டி வழிகாட்டி ஊர் போற கதை. எல்லோரும் ஏறி விழுந்த குதிரையில், சக்கடதார் ஏறுறார். கவுண்டு விழத்தான் போறார். அவருக்கு, இழக்க எதுவும் இல்லாதால் முயல்…
-
- 4 replies
- 612 views
-
-
தமிழ் மக்களை... மூளையே, இல்லாதவர்கள் என்று... நினைத்து விட வேண்டாம். “புலிகள் தமிழ் மக்களை சித்திரவதை செய்தனர்” என்றீர்கள் “புலிகள் தமிழ் மக்களை சுட்டுக் கொன்றனர்” என்றீர்கள் “சிங்கள ராணுவத்தால் கொல்லப்பட்ட தமிழர்களைவிட புலிகளால் கொல்லப்பட்ட தமிழர் அதிகம்” என்றுகூட கூறினீர்கள். அதனால் “புலிகளிடமிருந்து தமிழ் மக்களை விடுவிப்பதற்காகவே யுத்தம் செய்தோம்” என்று கூறினீர்கள். சரி. அப்படியென்றால் “புலிகள் இப்போது இருந்தால் நல்லாய் இருக்குமே” என்று தமிழ் மக்கள் நினைப்பதற்கு என்ன காரணம்? அல்லது யார் காரணம்? ஒருபுறம் புலிகள் அனைவரும் அழிக்கப்பட்டுவிட்டதாக போர் வெற்றி விழா கொண்டாடுகிறீர்கள். மற…
-
- 0 replies
- 255 views
-
-
இலங்கை நெருக்கடி: ரணில் நாடாளுமன்றத்தில் தனித்து விடப்படுவாரா? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை அரசியலில் நாளுக்கு நாள் மாற்றங்கள் ஏற்பட்டு வரும் வேளையில், மிகப்பெரிய திருப்பமாக நாடாளுமன்றத்தில் தனி ஒரு உறுப்பினராக இருந்து வரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, நாட்டின் பிரதமர் ஆகியிருக்கிறார். 69 லட்சம் வாக்குகளை பெற்றவர்களுக்கு இன்று நாட்டை முன்னோக்கி கொண்டு செல்ல முடியாத நிலையை எதிர்நோக்கிய நிலையில், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ கடந்த 9ஆம் தேதி பதவி விலகினார். இந்த நிலையில், …
-
- 1 reply
- 284 views
- 1 follower
-
-
இலங்கை நெருக்கடியும் புதிய தலைமையும்: இந்தியாவுக்கு இது ஏன் முக்கியம்? சரோஜ் சிங் பிபிசி செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியிருக்கும் வேளையில் அங்கு புதிய பிரதமராக பதவியேற்றிருக்கும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தமது ஆதரவையும் வாழ்த்துக்களையும் தெரிவித்திருக்கிறது இந்தியா. அவரது தலைமையிலான அரசுடன் தொடர்ந்து இந்தியா பணியாற்றும் என்று அறிவித்திருக்கிறார் கொழும்பில் உள்ள இந்திய தூதர். அடிப்படையில் இந்தியாவையும்,இலங்கையையும் நாம் ஒப்பிடமுடியாது. காரணம், பொருளாதாரத்தைப் பொருத்தவரையில் இலங்கை மிகவும் சிறிய நாடு. மக்கள்தொகையும்…
-
- 0 replies
- 258 views
- 1 follower
-
-
மஹிந்த மூட்டிய தீ..! ராஜபக்சாக்கள் ஆடுவது சதுரங்கம்..! எதிரணி ஆடுவது உதைபந்து…!! May 10, 2022 — அழகு குணசீலன் — பொருளாதாரமே அனைத்தையும் நிர்ணயிக்கின்றது. இதற்கு அரசியலும் விலக்கல்ல. அரசியல் வியாபாரமாகிப் போனதினாலோ என்னவோ மரபு ரீதியான அரசியல் கோட்பாடுகளை விடவும் பொருளாதாரக் கோட்பாடுகள் இன்றைய அரசியலுக்கு அதிகம் பொருந்திப்போகின்றன. பொருளாதாரக் கோட்பாடுகளில் தனியார் நிறுவனங்களில் இலாப -நட்டக்கணக்கை மதிப்பிட பயன்படுத்தப்படும் கோட்பாடுகளில் ஒன்று விளையாட்டுத்தத்துவம். போட்டி நிறுவனங்கள் ஆகக்கூடிய இலாபத்தை எதிர்பார்ப்பது வழக்கம். அது போன்று கட்சிகளின் அரசியல் இலாப எதிர்பார்ப்பும் அமைந்துவிடுகிறது. அந்த ஆகக்கூடிய இலாபத்தில் குறைந்…
-
- 0 replies
- 248 views
-