நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4196 topics in this forum
-
ஜனாதிபதி தேர்தலுக்கான தினத்தை தீர்மானிக்கலாம் : மீண்டும் கூட்டரசு மஹிந்த - மைத்திரி இணைந்தால்.. : - பாலிதவின் அதிரடி கருத்து எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு பின்னர் ஜனாதிபதி தேர்தலை நடத்துவதற்கான தினத்தினை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானிக்க முடியும். மைத்திரிபால சிறிசேனவும், மஹிந்த ராஜபக்ஷவும் கூட்டிணைவார்களானால் மீண்டும் மஹிந்தவின் குடும்பத்தவர்களின் அதிகாரமே வலுக்கும். 2015 இல் மக்கள் கூட்டு அரசாங்கத்திற்கு வழங்கிய ஆணை உயிர்ப்புடன் உள்ள நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்களை இணைத்து மீண்டும் கூட்டு அரசாங்கம் முன்னெடுக்கப்படும் என்று புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித்த ரங்கே பண்டார வீரகேசரிக்கு…
-
- 0 replies
- 327 views
-
-
ஆட்டுவித்தல் மொஹமட் பாதுஷா / 2019 ஜனவரி 04 வெள்ளிக்கிழமை, மு.ப. 02:32 இனங்கள், சாதிகள், மதங்களுக்கு இடையிலான நல்லுறவைக் குலைத்து, குழம்பிய குட்டையில் மீன்பிடிக்கும் முயற்சிகள், உலகெங்கும் நூற்றாண்டுகளாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றன. இலங்கையும் இந்தப் பொது ஒழுங்குக்குள் உள்வந்து, பல தசாப்தங்கள் ஆகிவிட்டன. கடந்த நூறு வருடங்களாக, இலங்கையில் இனவாதம் ஏதோவோர் அடிப்படையில் இருந்து வந்திருக்கின்றது. சிலவேளைகளில் அதிகாரத்தில் உள்ளவர்களால் ஊட்டிவளர்க்கப்பட்டதாயும் ஆசீர்வதிக்கப்பட்டதாயும் இனவாத சக்திகள் இருந்திருக்கின்றன. அதற்குப் பிறகு, அந்தச் சக்திகள் தாமாகவே, நிழல் அதிகாரங்களைப் பெற்றுவிட்டதாகவே சொல்ல முடியும். அதாவது, இன்றைய காலப் பகுதியில், க…
-
- 0 replies
- 1k views
-
-
நாம் விரும்பிப் பருகும் தேநீரில் இரத்தம் Editorial / 2019 ஜனவரி 02 புதன்கிழமை, மு.ப. 07:14 - ஜெரா இரத்தினபுரி மாவட்டத்தின் கஹவத்த பகுதியில் இருக்கிறது, எந்தானை (அல்லது எந்தான) எனும் லயன். லயன் எனப்படுவது, தோட்டத் தொழிலாளர்கள் குடியமர்த்தப்பட்டிருக்கும் நெருக்கமான குடியிருப்புத் தொகுதியைக் குறிக்கும். இந்த லயனில், மலையகத் தமிழர்கள் மட்டுமே வாழ்கின்றனர். மலையகத் தமிழர் யார்? “மலையகத் தமிழர் என்போர், இலங்கையின் பெருந்தோட்டப் பயிர்ச்செய்கைக்காகத் தென்னிந்தியாவிலிருந்து கூலித் தொழிலுக்காக அழைத்து வரப்பட்ட தமிழர்களை மட்டுமே குறிக்கும். பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கிய நிலையில், போதிய கல்வி பெறமுடியாத அரசியல் அழுத்தங்களுக்கு கீழ் வாழ்பவர்கள்…
-
- 1 reply
- 483 views
-
-
செயற்கை அனர்த்தங்களுக்கு தீர்வு? Editorial / 2019 ஜனவரி 03 வியாழக்கிழமை, மு.ப. 12:39 -இலட்சுமணன் 2019இல் இருந்தாவது, ஒற்றுமையாக எமது உரிமைகளை பெறுவதற்கும், பிரதேசம் அபிவிருத்தி அடைவதற்கும், நலிவுற்ற எமது மக்களுக்குச் சமூகப்பணி செய்வதற்கும் உறுதியேற்போமாக என்ற விதமான கருத்துகள், சிந்தனைகள் மக்கள் மத்தியில் முனைப்புப் பெற்றும் முக்கியத்துவம் பெற்றும் வருகின்றன. இலங்கையைப் பொறுத்த வரையில், வருடத்தின் இறுதிப்பகுதி அனர்த்தங்களின் அவலங்களை நினைவுகூர்வதான காலம் என்றாகிவிட்டது. 2004ஆம் ஆண்டு டிசெம்பர் 26இல் ஏற்பட்ட, சுனாமி அனர்த்தமானது மிக கொடூரமான அழிவுகளை ஏற்படுத்தியிருந்தது. நமது நாட்டில் சுனாமி ஏற்படுவதற்கு முன்னர், அனர்த்தம் தொடர்பான பாதுகாப…
-
- 0 replies
- 330 views
-
-
முல்லைத்தீவு எனும் போராட்ட பூமி Editorial / 2019 ஜனவரி 02 புதன்கிழமை, மு.ப. 04:11 - கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இலங்கையின் வடக்குப் பகுதி, பல்வேறு விடயங்களுக்காகப் பெயர்போனது. ஒரு காலத்தில், அறிவியலாளர்களைத் தோற்றுவித்த பகுதியாகவும், தமிழர் உரிமைகளுக்கான போராட்டத்தில் முன்னின்ற பகுதியாகவும், வடக்குக் காணப்பட்டது. ஆனால், 2009ஆம் ஆண்டு இறுதி யுத்த அவலங்கள், அதன் பின்னரான பொருளாதாரப் பிரச்சினைகள், நுண்கடன் பிரச்சினைகள், கடும் வரட்சி என, அவல பூமியாக வடக்கு மாறியிருப்பதாகவே தெரிகிறது. இந்த அவலங்களுக்கெல்லாம் முடிவில்லை என்பதைப் போலத் தான், வடக்கில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கும் அமைந்திருக்கிறது. வடக்கின் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களைப் பிரதானமாகவும்,…
-
- 0 replies
- 991 views
-
-
சிலை உடைப்பால் யாருக்கு நன்மை? எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 ஜனவரி 02 புதன்கிழமை, மு.ப. 02:12 இஸ்லாம், முஸ்லிம்களுக்கு சிலை வணக்கத்தை தடை செய்துள்ளது. ஆனால், சிலை வணக்கத்தை ஏற்றுக் கொண்டுள்ள பௌத்தர்கள், இந்துக்கள், கத்தோலிக்கர்கள் மீது, அந்தக் கொள்கையைத் திணிக்க, இஸ்லாம், முஸ்லிம்களுக்குப் போதிக்கிறதா என்பது, அண்மையில் மாவனல்லையில் இடம்பெற்ற சம்பவங்களை அடுத்து, சிலர் எழுப்பிய கேள்விகளில் ஒன்றாகும். கடந்த வாரம், மாவனல்லை அருகே உள்ள ஹிங்குல பிரதேசத்தில், பல இடங்களில் வைக்கப்பட்டிருந்த புத்தர் சிலைகள், இரவோடு இரவாக சேதமாக்கப்பட்டு இருந்தன. அது தொடர்பாக, ஆறு முஸ்லிம்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், இரண்டு பேர் தேடப்பட்டு வருவதாகவும் செய்திகள் கூறின. …
-
- 0 replies
- 864 views
-
-
ஊர்காவற்படை நியமனம்- ஆசிரியர் பணிக்கானதுவா? பதிவேற்றிய காலம்: Jan 1, 2019 உறுதியாக இல்லாத ஆரம்பக் கல்வியானது அத்திவாரம் இல்லாத கட்டடத்தைப் போன்றது. அதேபோல் ஆரம்பக் கல்வி திடமாக இல்லாத வரையில் மாகாணத்தின் கல்வியை வளர்க்க முடியாது. எனவே வடக்கில் இருந்து சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் முன்பள்ளி கள் அகற்றப்பட்டே ஆகவேண்டும் என மூத்த கல்வியலாளர்கள் கோருகின்றனர். இலங்கையின் கல்வித் தரத்தில் வடக்கு மாகாண கல்வியே இறுதி இடத்தில் உள்ளது. அதிலும் கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்கள் மிகவும் பின்தங்கியே உள்ளன. இதற்கு மாவட்டக் கல்வித் தரத்தில் உள்ள குறைபாடுகளே காரணம் என நீண்டகாலமாகவே சுட்டிக்காட் ட…
-
- 0 replies
- 494 views
-
-
பொன்னான சந்தர்ப்பத்தை நழுவவிட்டுவிட்டார் சம்பந்தன் நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் பதவியை சம்பந்தன் பெற்றுக்கொண்டமை பொன்னான சந்தர்ப்பமாகும். முழு நாட்டினை பிரதிநிதித்துவப்படுத்தி அரசாங்கத்திற்கு எதிராக செயற்பாடுகளை முன்னெடுத்திருப்பாராயின் சிங்கள மக்கள் மத்தியில் நாயகனாக வலம்வந்திருப்பார். ஆனால் அந்தச் சந்தர்ப்பத்தினை முழமையாக நழுவ விட்டுவிட்டார் என பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் தெரிவித்தார். வீரகேசரிக்கு வழங்கிய செவ்வியிலேயே பாராளுமன்ற உறுப்பினர் அத்துரலிய ரத்ன தேரர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அச்செவ்வியின் முழு வடிவம் வருமாறு, கேள்வி:- நாட்டில் அரசியல் நெருக்கடியொன்று ஏற்பட்டு சற்று ஓய்ந்திருக்கின்ற நிலையில் தற்போதுள்ள அரசியல் நிலைமைக…
-
- 0 replies
- 890 views
-
-
-
- 3 replies
- 967 views
-
-
எம்.எஸ். எம். ஜான்ஸின் - ரிஷாத் பதியுதீன் அவர்களுக்கு கைத்தொழில் , வர்த்தகம், கூட்டுறவு அபிவிருத்தி போன்ற அமைச்சுக்களுடன் நீண்டகால இடம்பெயர்த்தோருக்கான மீள்குடியேற்ற அமைச்சும் வழங்கப் பட்டிருப்பது யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான ஒரு விடயமாகும். நீண்ட கால இடம்பெயர்ந்த முஸ்லிம்களின் மீள்குடியேற்ற மற்றும் முஸ்லிம்களில் உடைந்த வீடுகள் மற்றும் பள்ளிவாசல் சொத்துக்கள் பொது சொத்துக்கள் என்பவற்றின் மீள் நிர்மானத்துக்கானதும் மேலும் மீளக் குடியேறும் முஸ்லிம்களுக்கான வாழ்வாதாரம் என்பவற்றையும் வழங்குவதற்காக உருவாக்கப் பட்டுள்ள இந்த அமைச்சு பல்வேறு வேலைத் திட்டங்களை யாழ் கிளிநொச்சி மாவட்டங்களில் செய்ய வேண்டியுள்ளது. யாழ்ப்பாணத்தைப் பொறுத்…
-
- 5 replies
- 1.1k views
-
-
சிந்துவாசினி பிபிசி செய்தியாளர் படத்தின் காப்புரிமை BBC/DEBALIN ROY Image caption சஞ்சாலி `வரலாற்றில் முதன்முதலாக எரிக்கப்பட்ட பெண் யார்? எனக்குத் தெரியாது ஆனால் கடைசியாக எரிக்கப்பட்ட பெண்ணாக யாராக இருப்பார் என்பது தான் என்னுடைய கவலை கடைசியாக எரிக்கப்பட்டது யாராக இருக்கும்?' - சஞ்சாலியின் தாயார் அனிதாவின் அழுகுரலைக் கேட்டபோது, ராமசங்கர் `வித்ரோஹி'யின் வரிகள் என் மனதில் தோன்றின…
-
- 2 replies
- 929 views
-
-
திடீர் வெள்ளத்தால் திணறிய கிளிநொச்சி முல்லைத்தீவு – மு.தமிழ்ச்செல்வன் December 28, 2018 கடந்த 21 ஆம் திகதி கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் பெய்த கடும் மழை காரணமாக மாவட்டங்களின் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. கால நிலை மாற்றம் தொடர்பான அறிவித்தல் வெளியிடப்பட்டிருந்த போதும் 365 மில்லி மீற்றருக்கு மேல் மழை பெய்யும் என்ற எதிர்பார்ப்பு எவரிடமும் இருந்திருக்கவில்லை. 21 ஆம் திகதி இரவு முதல் பெய்த கடும் மழை காரணமாக கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களில் உள்ள அனைத்து குளங்களும் நிரம்பி வழிந்தது. பாரியளவிலான நீர்ப்பாசன குளங்கள் முதல் சிறிய நீர்ப்பாசன குளங்கள் வரை வழமைக்கு மாறாக நிரம்பி வழிந்தது. ஊருக்குள் காணப்பட்ட வாய்க்கால்கள், கால்வாய்கள் என …
-
- 0 replies
- 571 views
-
-
2018: கடந்து போகும் காலம் தெ. ஞாலசீர்த்தி மீநிலங்கோ / 2018 டிசெம்பர் 27 வியாழக்கிழமை, பி.ப. 05:38Comments - 0 இன்னோர் ஆண்டு எம்மைக் கடந்து போகிறது. முந்தைய ஆண்டுகளைப் போலவே, இவ்வாண்டும் ஏராளமான அல்லல்களையும் ஆச்சரியங்களையும் தந்துவிட்டு அப்பால் நகர்கிறது. இதன் தாக்கம், இனிவரும் ஆண்டுகளிலும் செல்வாக்குச் செலுத்தும் என்பதில் ஐயமில்லை. இது, இவ்வாண்டை எவ்வாறு நினைவுகூருவது என்ற வினாவை எழுப்புகிறது. இந்த ஆண்டு, உலக அரசியல் அரங்கில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? இவ்வாண்டில், உலக அரசியல் அரங்கில் செல்வாக்குச் செலுத்தக்கூடிய நிகழ்வுகள் ஏதாவது நடைபெற்றுள்ளனவா ஆகிய இரு கேள்விகளுடன், இவ்வாண்டின் இறுதிக் கட்டுரைக்குள் நுழைகின்றேன். இவ்வாண்டை எதிர்கூறி, நான…
-
- 0 replies
- 396 views
-
-
எதிர்க்கட்சித் தலைவர் பதவி எம்.எஸ்.எம். ஐயூப் / 2018 டிசெம்பர் 27 வியாழக்கிழமை, பி.ப. 01:32 இரண்டு மாதங்களுக்கு முன்னர், உருவாகிய அரசமைப்பு, அரசியல் நெருக்கடிகளில், அரசமைப்பு நெருக்கடி பெருமளவில் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட போதிலும், அரசியல் நெருக்கடி தொடருகிறது. இதனால் மக்களின் பிரச்சினைகள் தொடர்ந்தும் மறக்கப்பட்டு வருகின்றன. அரசியல்வாதிகள், தற்போது நிலவி வரும் அதிகாரப் போட்டி பற்றியே, கவனம் செலுத்தி வருகிறார்கள். எனவே, அதிகாரப் போட்டி விடயத்தில், புதுப்புது பிரச்சினைகளை உருவாக்கி வருகிறார்கள். எனவே, ஊடகங்களும் அவற்றைப் பற்றியே கவனம் செலுத்த வேண்டியதாக உள்ளது. ஒக்டோபர் 26ஆம் திகதி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அப்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங…
-
- 0 replies
- 322 views
-
-
இதுவும் காணாமல் போகுமா? - வவுணதீவுப் பிரதேச கொலைச்சம்பவம் பற்றிய அலசல் Editorial / 2018 டிசெம்பர் 27 வியாழக்கிழமை, பி.ப. 01:01 Comments - 0 -அதிரதன் யாரிடத்தில் கையை நீட்டுகிறோம் என்று தெரியாமலேயே, ஆர்ப்பாட்டங்களும் போராட்டங்களும் நடைபெறுகின்றன. கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டம், வவுணதீவுப் பிரதேசத்தில் கடந்த நவம்பர் மாத இறுதி (30.11.2018) நாளன்று, கொடூரமான கொலைச்சம்பவம் இடம்பெற்றிருந்தது. அதைத் துப்பாக்கிச் சூடு என்பதா, குத்து வெட்டுக் கொலை என்பதா, எல்லாம் முடிவு காணப்படாத விடயமாகத்தான் தொடர்கிறது. காலி, அம்பாறை மாவட்டங்களைச் சேர்ந்த இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள், காவல் கடமையில் இருந்தபோது, உயிர் பறிக்கப்பட்டிருக்கிறார்கள். இந…
-
- 0 replies
- 686 views
-
-
சுனாமி என்னும் ஆறாவடு- தொகுப்பு- குளோபல் தமிழ் விசேட செய்தியாளர் December 26, 2018 வழமைக்கு மாறான காலநிலை. மேகங்கள் இருண்டு போயிருந்தன. இந்தோனேசிய சுமாத்திராத் தீவின் வடமேல் ஆழ்கடலில் ஏற்பட்ட புவினடுக்கத்தினால் பொங்கியெழுந்த பேரலை இந்து சமுத்திரத்தின் கரையோரப் பிரதேசங்களை தாக்கியது. தெற்கு மற்றும் தென் கிழக்காசிய நாடுகளில் இரண்டரை லட்சத்திற்கும் மேற்பட்டோரைக் காவு வாங்கியது. அந்தக் கொடுந் துயரம் நடந்தேறி இன்றுடன் 14 ஆண்டுகள் கடந்து விட்டன. ஆனாலும் சுனாமியின் வடுக்கள் ஆறவில்லை. சுனாமி, தாய்லாந்து, இந்தோனேசியா, மலேசியா, இந்தியா இலங்கை உள்ளிட்ட பல நாடுகளில் பேரழிவை ஏற்படுத்தியது. வடக்கு கிழக்கைப் பொறுத்தவரையில் மூன்றில் இரண்டு பகுதி கடற்கரை சுன…
-
- 1 reply
- 626 views
-
-
பிரசாந்த் சாஹல் உண்மை கண்டறியும் குழு, பிபிசி படத்தின் காப்புரிமை AFP Image caption ரோஹிஞ்சா…
-
- 0 replies
- 564 views
-
-
சுயாதீனமான நீதித்துறை ; ஜனநாயகத்துக்கான தஞ்சம் அமீர் அலி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினாலும் அவரது கூட்டத்தினாலும் மேற்கொள்ளப்பட்ட அரசியலமைப்புச் சதிமுயற்சியினால் அச்சுறுத்தலுக்குள்ளான ஜனநாயகம் அழிவின் விளிம்பில் இருந்து ஒரு சில வாரங்களுக்கு முன்னர்தான் காப்பாற்றப்பட்டது. அமைதியாக ஆனால் தீர்க்கமான முறையில் பொதுமக்களிடமிருந்து வெளிப்பட்ட எதிர்ப்பும் நீதித்துறையின் குறிப்பாக பெருமதிப்புக்குரிய உச்சநீதிமன்ற நீதிபதிகளின் சுயாதீனமான செயற்பாடுகளும் சேர்ந்தே அவ்வாறு ஜனநாயகத்தைப் பாதுகாத்தன. நீதித்துறையின் மீதான ஜனாதிபதியின் வெறுப்பு உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பைத் தரங்குறைத்து அவர் வெளியிட்ட கருத்தின் மூலமாக வெளிவெளியாகத் தெரிந்தது. அதாவது தனக்கும் உ…
-
- 0 replies
- 420 views
-
-
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பாதிப்பிற்கு காரணம் மஹிந்த ;விஜித் விஜதமுனி சொய்சா ஜனவரி எட்டாம் திகதி அரசியல் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் எதிர்பார்ப்புடன் கூட்டு அரசாங்கத்தினை ஸ்தாபித்திருந்தாலும் அதில் தோல்வியடைந்து விட்டோம் என ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு ஆதரவளித்து பாராளுமன்றத்தில் ஆளும் வரையில் அமர்ந்த முன்னாள் அமைச்சரும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களில் ஒருவருமான பாராளுமன்ற உறுப்பினர் விஜித் விஜிதமுனி சொய்ஸா வீரகேசரிக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியின்போது தெரிவித்தார். கேள்வி:- தங்களுடைய தந்தையார் முதல் தாங்கள் வரையில் சுதந்திரக் கட்சிக்காரர்களாக செயற்பட்டு வந்திருந்த நிலையில் திடீரென கடந்த செவ்வாயன்று(18) ஐக்கிய தேசியக…
-
- 0 replies
- 733 views
-
-
இது இந்தியாவை மட்டுமே பாதிப்பதல்ல. நம்மூரிலும் இருக்கும். நமக்கு தெரியாது.
-
- 0 replies
- 362 views
-
-
கொழுத்த அமைச்சுகளும் நலிவடைந்த சமூகமும் மொஹமட் பாதுஷா / 2018 டிசெம்பர் 21 வெள்ளிக்கிழமை, மு.ப. 01:34 சிலரது மனக்கணக்குகள் எல்லாம் பிழையாகிப் போக, அரசியல் களநிலைவரங்கள் முற்றுமுழுதாகத் தலைகீழாக மாறியுள்ளதைக் காண்கின்றோம். பொதுவாக, மனித வாழ்க்கையில் மட்டுமல்ல, அரசியலிலும் எதுவும் எந்தநொடியிலும் மாறலாம்; யாரும் யாருக்கும் நண்பனாகவோ, எதிரியாகவோ ஆகலாம் என்பதற்குக் கடந்த தசாப்தத்தின் மிகச் சிறந்த அனுபவத்தையே இலங்கை மக்கள் கடந்த இரு மாதங்களாகப் பெற்றிருக்கின்றனர். ஓர் அந்தி மாலைப் பொழுதில், பதவியிறக்கப்பட்ட ரணில் விக்கிரமசிங்க, மீண்டும் பிரதமராக நியமிக்கப்பட்டிருக்கின்றார்; தன்பாட்டில் இருந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்குப் பிரதமர் பதவி காட…
-
- 0 replies
- 420 views
-
-
தமிழரசுக்கட்சிக்குள் பிடுங்குப்பாடு: கொழும்பில் சொல்லி அபிவிருத்தி திட்டத்தை நிறுத்துவோம் என்றும் எச்சரிக்கை! December 20, 2018 வடமாகாணசபைக்கு எதிராக பரப்புரை, குழப்பத்தில் அண்ணன்-தம்பியாக செயற்பட்ட தமிழரசுக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவன் மற்றும் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சயந்தன் ஆகியோருக்கிடையில் முரண்பாடு முற்றியுள்ளது. பகிரங்கமாக மோதிக்கொள்ளும் அளவில் இந்த முரண்பாடு உச்சமடைந்துள்ளது. இந்த மோதலால், பல உள்வீட்டு சமாச்சாரங்கள் பகிரங்கமாகி வருகின்றன. இரண்டு தரப்பு மோதலையடுத்து, தென்மராட்சி அபிவிருத்தி திட்டங்களில் கவனத்தை செலுத்த ஆரம்பித்துள்ளார் ஈ.சரவணபவன். இது, தென்மராட்சி அமைப்பாளர் கே.சயந்தனை மேலும் சீண்டியுள்ளது. இதனால் மோதல் உக்…
-
- 0 replies
- 410 views
-
-
ஓய்ந்தது அரசமைப்பு நெருக்கடி; ஓயாத அரசியல் நெருக்கடி எம்.எஸ்.எம். ஐயூப் / 2018 டிசெம்பர் 19 புதன்கிழமை, மு.ப. 01:30 Comments - 0 ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி, ரணில் விக்கிரமசிங்கவை பிரதமர் பதவியிலிருந்து நீக்கிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, “ரணில் மீண்டும் பிரதமரானால் நான் ஒரு மணித்தியாலமேனும் பதவியில் இருக்க மாட்டேன்” என்று கூறினார். மற்றுமொரு முறை அவர், “நாடாளுமன்றத்தில் 225 பேரும் விரும்பினாலும் நான், ரணில் விக்கிரமசிங்கவை பிரதமராக நியமிக்கப்போவதில்லை” எனக் கூறினார். ஆனால், இப்போது அவரே, ரணில் விக்கிரமசிங்கவை மீண்டும் பிரதமராக நியமித்து, அவரோடு அரசாங்கத்தை நடத்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஒக்டோபர் 26ஆம் திகதி, பிரதமராக நியமிக்கப்பட்ட முன்னாள…
-
- 0 replies
- 841 views
-
-
ஒருநாள் கப்டன் லலித் ஹேவா என்னை அழைத்தார். மண்வெட்டியை விரைந்து எடுத்துவருமாறு கட்டளையிட்டார். அவர் குறிப்பிட்டபடியே மண்வெட்டியை எடுத்துக் கொண்டு அவர் இருக்கும் இடம் நோக்கி நகர்ந்தேன். நான் அவ்விடத்தை அடைந்தபோது, அங்கு ஆடையின்றி பெண் ஒருவர் நிர்வாணக் கோலத்தில் நின்றார். கப்டன் ஹேவா அந்தப் பெண்ணை மானபங்கப்படுத்தினார். பின்பு நான் எடுத்துவந்த மண்வெட்டி மற்றும் அங்கிருந்த இன்னும் சில ஆபத்தான பொருள்களைக் கொண்டு அந்தப் பெண்ணையும் அவருடைய துணைவரையும் தாக்கிக் காயப்படுத்தினார்.இருவரும் அந்த இடத்திலேயே சாவடைந்தனர்.அவர்கள் இருவரும் முன்பு முகாமுக்கு அழைத்துவரப்பட்டவர்கள்.” …
-
- 0 replies
- 851 views
-
-
2019 தேர்தல் பிரசார வியூகத்தை மாற்றுவாரா பிரதமர் நரேந்திர மோடி? எம். காசிநாதன் / 2018 டிசெம்பர் 17 திங்கட்கிழமை, பி.ப. 09:33 ஐந்து மாநில தேர்தல்கள், மத்தியில் ஆளும் பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பாரதிய ஜனதாக் கட்சி (பா.ஜ.க.) அரசாங்கத்துக்கு அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளது. ஐந்திலும் ஆட்சி அமைக்க முடியாமல், நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்கும் நேரத்தில், பா.ஜ.க தவித்தாலும், “வட இந்தியாவின் இதயம்” என்று சொல்லப்படும் மத்திய பிரதேசம், ராஜஸ்தான், சத்திஸ்கர் மாநிலங்களில் பா.ஜ.க ஆட்சி அமைக்க முடியாமல் போனமை மிகப்பெரிய இழப்பாக மாறியிருக்கிறது. தேர்தல் முடிவுகள், சற்று பா.ஜ.கவுக்கு ஆறுதல் கொடுக்கும் வகையில், ஆட்சி அமைக்கும் காங்கிரஸ் கட்சிக்கு மிக அருகில்…
-
- 0 replies
- 356 views
-