நிகழ்வும் அகழ்வும்
செய்தியின் பின்னணி | செய்தி ஆய்வு | செய்தி பற்றிய கருத்துகள்
நிகழ்வும் அகழ்வும் பகுதியில் செய்தியின் பின்னணி, செய்தி ஆய்வு, செய்தி பற்றிய கருத்துகள் இணைக்கப்படலாம்.
செய்திகள் பற்றிய ஆய்வுகள், பத்திகள், யாழ்கள உறுப்பினர்களின் அலசல்கள், கருத்துக்கள், கருத்துப்படங்கள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
4195 topics in this forum
-
மோசமான திரைப்படத்திற்கான எதிர்மறை விமர்சனம் - யமுனா ராஜேந்திரன் உலக வரலாற்றில் செப்டம்பர் 11 என்பது உலகின் அரசியல் வரைபடத்தை மாற்றிய ஒரு நாள். அன்றுதான் நியூயார்க்கின் இரட்டைக் கட்டிடங்கள் சரிந்து வீழ்ந்தன. ஈராக், ஆப்கானிஸ்தானைத் தொடர்ந்து அரபு நாடுகளில் ஜனநாயகத்தை ஏற்றுமதி செய்வது எனும் திட்டம் அதன் பின்புதான் ஜோர்ஜ் புஸ்ஸினால் பிரகடனப்படுத்தப்பட்டது. அதே செப்டம்பர் 11 ஆம் திகதிதான், பணிரெண்டு ஆண்டுகளின் பின் எகிப்தில் அமெரிக்கத் தூரதகத்திற்கு முன்பாக சகோதரத்துவ இஸ்லாம் இயக்கம் தீர்க்கதரிசி முகமதுவுக்கு எதிரான இன்னசென்ஸ் ஆப் முஸ்லீம்ஸ் படத்திற்கு எதிரான கண்டன ஆரப்பாட்டத்தை நடத்தியது. அதே செப்டம்பர் 11 ஆம் திகதிதான் லிபியாவின் பென்காசியிலும் அமெரிக்…
-
- 0 replies
- 795 views
-
-
[size=4] ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைக் கூட்டத்தொடர்கள் இடம்பெறும் போதெல்லாம் தமிழர்க்கான தீர்வுத் திட்டம் கிடைக்கும் என்பதற்கப்பால், ஒன்றரை இலட்சம் தமிழர்களைப் படுகொலை செய்த சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக உலகளாவிய போர்ச் சட்டத்தின் முன் தீர்ப்பு எப்போது வழங்கப்படும் என்பதையே தமிழர்களைப் பொறுத்த வரையில் எதிர்பார்ப்பாகவுள்ளது.[/size][size=4] ஆனால், ஒவ்வொரு கூட்டத்தொடர்களின் இறுதி முடிவானது ஏமாற்றத்தையே கொடுக்கிறது. போர் முடிவடைந்து மூன்றாண்டுகள் நிறைவடைந்துள்ள போதிலும், வடக்கு கிழக்கு பகுதிகளில் மனித குலத்திற்கெதிரான குற்றச் செயல்கள் குறைந்ததாகத் தெரியவில்லை. நாளுக்கு நாள் ஒரு சடலமாவது மீட்ககப்படுவதாகவே செய்திகள் தெரிவிக்கின்றன. அவ்வாறு மீட்கப்படும் சடலத்திற்குக் க…
-
- 0 replies
- 692 views
-
-
பி.கே.பாலச்சந்திரன் அரசியலமைப்புக்கான 20ஆவது திருத்த வரைவுக்கு ஆளும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுக்குள்ளும் அதன் நேச அணிக் கட்சிகள் மத்தியிலும் கிளம்பிய பல்வேறு எதிர்ப்புகளை தொடர்ந்து அந்த வரைவை மீள்பரிசீலனை செய்வதற்கு பொதுஜன பெரமுன தீர்மானித்தது. அந்த வரைவுக்கு ஆட்சேபங்களின்றி அமைச்சரவை அங்கீகாரத்தை வழங்கியதுடன் வர்த்தமானியிலும் கூட பிரசுரிக்கப்பட்டிருந்தபோதிலும், அது பொதுவெளிக்கு வந்ததும் பொதுஜன பெரமுன உள்ளும் அதன் தலைமையிலான கூட்டணிக்குள்ளும் எதிரணி மற்றும் ஊடகங்கள் மத்தியிலும் மிகவும் கடுமையான எதிர்ப்புகளை சந்திக்கவேண்டி வந்தது. இதன் மூலமாக அந்த வரைவில் இருக்கக்கூடிய சர்ச்சைக்குரிய அம்சங்களை ஆராய்ந்து தனக்கு அறிக்கையொன்றை சமர்ப்பிப்பதற்கு பிரதமர் மகிந்த ராஜபக்ச குழுவொன…
-
- 0 replies
- 403 views
-
-
ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் கவுன்சிலில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், உண்மையிலேயே அந்த நடவடிக்கை அந்நாட்டில் மனித உரிமைகள் பாதுகாப்புக்கு உதவுமா என பரவலாக பேசப்பட்டு வருகிறது. அந்த தீர்மானத்தால் இலங்கை எதிர்கொள்ளும் பிரச்னைகள் குறித்து இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளரும், சட்டத்தரணியுமான அம்பிகா சற்குணநாதனிடம் பிபிசி தமிழ் பேசியது. "ஐ.நா தீர்மானமானது, இலங்கையில் மனித உரிமை பாதுகாப்பை மேலும் முன்னோக்கி கொண்டு செல்வதற்கான யோசனையாகவே பார்க்கிறேன். …
-
- 0 replies
- 507 views
-
-
டெல்லி வரும் இலங்கை அதிபர் ராஜபக்சேவுடன் ஏர்டெல் செல்போன் நிறுவனம் வர்த்தக ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட திட்டமிட்டுள்ளது. இதை எதிர்த்து கோவை ஏர்டெல் அலுவலகம் முன்பு நாம் தமிழர் இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50 பேரை போலீசார் கைது செய்தனர். ஆர்ப்பாட்டத்தில் நாம் தமிழர் இயக்கத்தினர் பேசியதாவது, ஃபிக்கி அமைப்பின் தலைவராக உள்ளவர் ராஜன் பார்த்தி மிட்டல். இவருடைய நிறுவனம்தான் ஏர்டெல். இந்த ஏர்டெல் நிறுவனம் இலங்கை அரசுடன் கைகோர்த்து தனது வணிக நலன்களை மேம்படுத்திக்கொண்டு வருகிறது. ஃபிக்கி, இலங்கையை புதிய நாடு என்றும், வர்த்தக விரிவுபடுத்தலுக்கும், முதலீட்டிற்கும் வாய்ப்பளிக்கும் உற்சாகமாக நாடு என்றும் வர்ணித்துள்ளது. உலகமே…
-
- 0 replies
- 808 views
-
-
மிருகபலியும் பெரஹெரக்களில் யானைகளும் Gopikrishna Kanagalingam / இந்து ஆலயங்களில், சடங்குகளுக்காக மிருகங்களைப் பலிகொடுப்பதைத் தடைசெய்வதற்காக, இந்து சமய விவகார அமைச்சுச் சமர்ப்பித்த அமைச்சரவைப் பத்திரத்துக்கு, அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது என்ற செய்தி, நேற்று முன்தினம் (11) எம்மை எட்டியிருந்தது. இச்செய்தி வெளியானதும், இதை எப்படி ஆராய்வது என்பதில் குழப்பம் நிலவியதென்பது உண்மை தான். ஏனென்றால், இந்து ஆலயங்களில் மிருகபலிகளைத் தடைசெய்யுமாறு, இந்து அமைப்புகளும் இந்து ஆலயங்களில் சிலவும், தொடர்ச்சியான வேண்டுகோள்களை விடுத்து வந்தன. ஆகவே, அவர்களைப் பொறுத்தவரை, அவர்களின் கோரிக்கைகள் மதிக்கப்பட்ட ஒரு விடயமாக இது அமைந்திருக்கிறது. …
-
- 0 replies
- 378 views
-
-
பொறுப்பு கூறப்போவது யார்? நாட்டில் இடம்பெற்ற தொடர் குண்டு தாக்குதல்களில் பலியானோரின் எண்ணிக்கை 310 ஐ தாண்டியுள்ளது. காயமடைந்தோரில் 500 க்கும் மேற்பட்டோர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தமது உறவுகளை இழந்த குடும்பத்தினர் மீளாத் துயரத்தில் உறைந்துபோய் உள்ளனர். உயிர்த்த ஞாயிறு தினத்தன்று நடைபெற்ற இந்த மிலேச்சத்தனமான தாக்குதல் சம்பவமானது நாட்டின் வரலாற்றில் கறுப்புப் புள்ளியாக அமைந்திருக்கிறது. மிலேச்சத்தனமான குண்டுத் தாக்குதல்களையடுத்து ஏற்பட்ட பதற்ற நிலையை தணிப்பதற்கும் மேலும் வன்முறைகள் வெடிக்காது தடுப்பதற்கும் அரசாங்கமானது ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுத்துள்ளது. இந்த செயற்பாடானது பாராட்டத்தக்கதாகவே அமைந்திருக்கிறது. குண…
-
- 0 replies
- 574 views
-
-
அடுத்த மின் செயலிழப்புக்கு வழிகோலப்படுகிறதா? கனகலிங்கம் கோபிகிருஷ்ணா இந்த ஆண்டில் மாத்திரம், இரண்டு தடவைகள் மின் செயலிழப்பு ஏற்பட்டு, முழு நாடுமே இருளில் மூழ்கியிருந்தது. இந்த நிலைமையால், நாடு முழுவதுமே - குறிப்பாக கொழும்பு போன்ற நகரப்பகுதிகள் - ஸ்தம்பிக்குமளவுக்கு ஏற்பட்டிருந்தது. அந்த இரண்டு மின் செயலிழப்புகளுமே, அரசாங்கத்தினுடையதோ அல்லது மின்சார சபையினுடையதோ நேரடியான தவறின் காரணமாக ஏற்பட்டவையன்று. மாறாக, பல்வேறுபட்ட இணைந்த காரணிகள் காரணமாகவே ஏற்பட்டிருந்தன. இறுதியாக ஏற்பட்ட மின் செயலிழப்பு, பியகம உப மின்நிலையத்தில் ஏற்பட்ட உபகரணப் பழுது காரணமாகவே ஏற்பட்டிருந்தது. அந்த உப மின்நிலையத்தில் காணப்பட்ட மின்மாற்றி, சும…
-
- 0 replies
- 211 views
-
-
இனி தமிழினம் கடைத்தேறுவதற்கான வழி, கண்ணுக்கெட்டிய தூரம் வரை தட்டுப்படவில்லை. முள்ளிவாய்க்கால் கொடுமை இன்னும் நூறுமுறை நடந்தாலும், அதை அனுபவித்துத்தான் தீரவேண்டும் போலிருக்கிறது! தன் சொந்த இனத்தில் விழுந்த பிணங்களையே விற்றுப் பிழைக்கும் கூட்டம்... நாடெங்கும்-உலகெங்கும் இருக்கிறது. முள்ளிவாய்க்கால் கொடுமையால் ஏற்பட்ட வேதனையைக் காட்டிலும், இன்று நடக்கும் ஏமாற்று வேலைகள்& கபட நாடகங்கள் நமக்கு அதிக வேதனை தருகின்றன. தமிழ்ச்சாதியின் புல்லுருவிகள், காட்டிக் கொடுக்கும் கயவாளி மக்கள், இன்று ஆங்காங்கே தோன்றியிருக்கிறார்கள். காந்தி தேசம் கள்ள தேசமாகவும் & புத்த தேசம் (சிங்கள தேசம்) யுத்த தேசமாகவும் இருக்கின்றன. இனியும் அப்படித்தான் இருக்கும். யூத இனத்துக்குப் ப…
-
- 0 replies
- 654 views
-
-
சென்னை கோயம்பேட்டில் தனித்து விடப்பட்ட பதினேழு வயது பெண்ணை பத்திரமாக மீட்டது புதிய தலைமுறை
-
- 0 replies
- 433 views
-
-
மாகாணசபைத்தேர்தல் வடக்கு,கிழக்கு தமிழ், முஸ்லிம் கட்சிகளுக்கு அதிகளவுக்கு அனுகூலமானது - ஜெஹான் பெரேரா 000000000000 துரதிர்ஷ்டவசமாக,சேதன விவசாய பிரச்சனைகள் மற்றும் ஆசிரியர்களின் வேலைநிறுத்தத்தால் ஏற்படும் பிரச்சனைகளைகருத்தொருமைப்பாடு மூலம் தீர்க்கப்படுவதற்கான அறிகுறிகள் இல்லை 000000000000000000 ஜே ர்மனியைப் போன்ற பொருளாதார ரீதியாக முன்னேறிய நாடுகளில் கூட,சேதன உணவுக்கு அதிக கிராக்கி உள்ளது, அதன் விவசாய நிலத்தில் 10 சதவீதத்தை மட்டுமே இ ரசாயனம் இல்லாத விவசாயத்திற்காக அந்நாடு ஒதுக்கியுள்ளது. மேலும் உலகின் தூய்மையான நாடுகளில் ஒன்றாக அறியப்படும் சுவிட்சர்லாந்துகூட , சமீபத்தில்சர்வஜனவாக்கெடுப்பில் பூச்சிக்கொல்லிகளை தடை செய்வது நடைமுறைச்சாத்தியமற்றதுஎன்று …
-
- 0 replies
- 373 views
-
-
ரணிலுக்கு உதவி செய்யும் ஜப்பானும் இரண்டாம் உலக போரும் - இந்தக் கதை தெரியுமா? ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இலங்கை பொருளாதார நெருக்கடியில் பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கும் இந்த சந்தர்ப்பத்தில் பல்வேறு நாடுகள் உதவிக் கரம் நீட்டியுள்ளன. இலங்கை பொருளாதார நெருக்கடியை சந்திக்க ஆரம்பித்த தருணத்தில், இந்தியா, சீனா உள்ளிட்ட நாடுகள் உதவிகளை செய்திருந்தாலும், ஜப்பான் அந்த சந்தர்ப்பத்தில் பெரிதும் உதவி கரம் நீட்டவில்லை. எனினும், ஜப்பான் தற்போது உதவி கரம் நீட்ட முன்வந்துள்ளது. இலங்கையில் பொருளாதார நெருக்கடி…
-
- 0 replies
- 297 views
- 1 follower
-
-
கோட்டா கோகமவுடன்... பேசுவது – நிலாந்தன். “மருத்துவர் ஷாபி சிகாப்தீனை அவருடைய மத அடையாளம் காரணமாக துன்புறுத்தியதில் ஒரு பங்கை வகித்த அதே மருத்துவ கட்டமைப்புக்கு தனது சம்பள நிலுவையை திரும்பிக் கொடுத்ததன் மூலம் எல்லாவற்றுக்குள்ளும் அதிகம் அன்பான ஒரு சமிக்ஞையை வெளிப்படுத்தியிருக்கிறார்.இன்றைய பொசன் போயா நாளில் அவர் எங்களுக்கு பகவான் புத்தரின் செய்தியை அனுப்பியிருக்கிறார்”….. இவ்வாறு ருவிற்றரில் பதிவிட்டிருப்பவர் பேராசிரியர் சரோஜ் ஜெயசிங்க.கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தில் சேவையாற்றி ஓய்வுபெற்ற ஒரு மருத்துவ நிபுணர். மருத்துவர் ஷாபி சிகாப்தீன் குருநாகல் போதனா மருத்துவமனையில் மகப்பேற்று நிபுணராக இருந்தவர். குருநாகல் போதனா வைத்தியசாலையில் சட்டவிரோத கருத்தடை …
-
- 0 replies
- 237 views
-
-
மீண்டும் பிறப்பாய் ‘தல பூட்டுவா’ “இன்பமாக வாழ விரும்புகிற உயிர்களை ஒருவர், தன் சுகத்தை மட்டும் விரும்பித் தண்டித்துத் துன்புறுத்தினால், அப்படிப்பட்டவர் இறந்த பிறகு சுகம்பெற மாட்டார்” தர்ம போதனையில், தண்டனை எனும் அதிகாரத்தில் இவ்வாறுதான் குறிப்பிடப்பட்டுள்ளது. அவ்வாறான போதனைகளும் நற்சிந்தனைகளும், ஞாயிற்றுக்கிழமைகளிலும் போயா தினங்களிலும், மிகவும் அழுத்தமாகப் போதிக்கப்படுகின்றன. பௌத்த விகாரைகளில் மட்டுமன்றி, மத வழிபாட்டுத் தலங்களிலும் ஏனைய ஸ்தானங்களிலும் தர்மம் போதிக்கப்பட்டாலும், நாட்டில் இடம்பெறுகின்ற சம்பவங்களைப் பார்க்கின்றபோது, அந்தப் போதனைகளின்படி மக்கள் நடக்கிறார்களா என்ற சந்தே…
-
- 0 replies
- 834 views
-
-
அசாத் மௌலானா! சாட்சியா சந்தேக நபரா? September 15, 2023 (மௌன உடைவுகள் – 44) — அழகு குணசீலன் — தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் ஊடகப்பேச்சாளர் அசாத்மௌலானா சுவிஸில் அரசியல் தஞ்சம் கோரியிருக்கின்ற குசுகுசுப்பு செய்தியை சனல் 4 உத்தியோகபூர்வமாக அம்பலப்படுத்தியிருக்கிறது. இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் தொடர்பான சனல் 4 ஆவணப்படத்தில் குண்டுத்தாக்குதலில் தனது தொடர்பு எந்தளவுக்கு இருந்தது, யாரெல்லாம் தாக்குதலின் பின் புலத்தில் இருந்தார்கள் , தான் யாரால் நெறிப்படுத்தப்பட்டேன், தனக்கு தெரிந்தவை எல்லாம் எவை என்ற தகவல்களை அடுக்கியிருக்கிறார் அசாத். ஆக, மொத்தத்தில், “நான் சொல்வதெல்லாம் உண்மை. உண்மையைத்தவிர வேறில…
-
- 0 replies
- 201 views
-
-
காந்தியின் முதல் அகக்குரல் ஒலித்த தருணம் சுவாரசியமானது: 15 பிப்ரவரி 1918. அகமதாபாத் துணி ஆலை தொழிலாளர்களின் வேலை நிறுத்தம் ஒன்றை காந்தி வழிகாட்டி நடத்திக்கொண்டிருந்தார். 22 நாட்களாக நடந்த வேலை நிறுத்தத்தில் தொழிலாளர்கள் இயக்கம் தொடக்கத்தில் எடுத்துக்கொண்ட நிலைப்பாடுகளிலிருந்து பின்னடைவதை காந்தி உணர்ந்தார். “அன்று காலை தொழிலாளர் தலைவர்களுடன் நான் பேசியபோது என்னை அறியாமலே என் வாயிலிருந்து வார்த்தைகள் அவையாகவே வெளிவந்தன: ஒரு முடிவு காணும் வரை தொழிலாளர்கள் தொடர்ந்து போராடவேண்டும். அதற்கு இணைங்கி இணையவேண்டும். அதுவரை நான் உணவைத் தொட மாட்டேன்.” அதற்குப் பின்னரும் அவர் செய்த பல உண்ணா விரதப் போராட்டங்கள் இந்த ‘அகக்குரல்’ இட்ட ஆணையின்படி அவர் செய்த முடிவுகளே ஆகும். இந்…
-
- 0 replies
- 986 views
-
-
தற்கொலை தாக்குதல்கள் குறித்து இலங்கை தெரிந்திருந்தும் தடுக்காதது ஏன் ? மிகவும் இரகசியமான அந்த ஆவணம் அனைத்து விடயங்களையும் தெளிவாகக்குறிப்பிட்டிருந்தது: பெயர்கள்,முகவரிகள்,தொலைபேசி இலக்கங்கள் உட்பட அனைத்து முக்கிய விபரங்களையும் உள்ளடக்கியிருந்தது. சந்தேக நபர் ஒருவர் நள்ளிரவில் தனது மனைவியைச் சந்திப்பது குறித்தும் அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இடம்பெற்று 359 பேர் கொல்லப்படுவதற்கு முந்தைய நாட்களில் இலங்கையின் பாதுகாப்புப் படையினர் அதிகம் அறியப்படாத தேசிய தௌஹீத் ஜமா அத் என்ற அமைப்பின் சிறிய குழுவை உன்னிப்பாக கண்காணித்து வந்தனர். இந்தக் குழுவினரே சர்வதேச உதவி…
-
- 0 replies
- 560 views
-
-
-
- 0 replies
- 712 views
-
-
ஐ.நா.வின் கள்ள மௌனம்! சொந்த ரத்தம் ஈழத்தில் சாகிறது. அதைத் தடுத்து நிறுத்துங்கள்' என்று குரல் கொடுத்தால், ஆம் என்றோ இல்லை என்றோ எந்தப் பதிலும் சொல்லாமல் கள்ள மௌனம் சாதிக்கிறது. இந்திய ஏகாதிபத்தியம் என்று குற்றஞ்சாட்டினான் தமிழகத்தின் நெருப்புப் பொறி முத்துக்குமார். இந்திய அரசும் காங்கிரஸும் சாதித்தது கள்ள மௌனம் என்றால், தி.மு.க. சாதித்தது என்ன மௌனம்? கலைஞருக்கே வெளிச்சம்.தி.மு.க.காங்கிரஸ் வேட்பாளர்களுக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி, கலைஞரின் பேனாவுக்குக் கிடைத்த வெற்றி என்று புளகாங்கிதமடைகிறார், வெற்றி வீரர் (!) ப.சிதம்பரம். ஈழத்தமிழர்களின் துயரத்துக்கு முடிவுகட்டுவதில்மட்டும் கலைஞரின் பேனா தோல்வியடைந்தது எப்படி? மன்மோகனுக்கு மனு எழுதி மனு எழு…
-
- 0 replies
- 486 views
-
-
புதிய தேர்தல் முறையை உருவாக்குவது குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்படும் - இளைஞர்கள் முன்னிலையில் ஜனாதிபதி Published By: NANTHINI 19 FEB, 2023 | 05:27 PM தேர்தலின்போது வேட்பாளர் ஒருவர் அதிக பணம் செலவழிக்க வேண்டிய அவசியம் ஏற்படாத வகையில், தேர்தல் முறையை உருவாக்குவது குறித்து ஆராய குழுவொன்று நியமிக்க எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் தொடர்பாக இளைஞர் குழுவொன்றுடன் அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடந்த சந்திப்பில் ஜனாதிபதி இதனை குறிப்பிட்டார். அரசாங்கத்தின் கொள்கைகள் தொடர்பில் இந்த இளைஞர்கள் குழு நாட்டின் பி…
-
- 0 replies
- 812 views
- 1 follower
-
-
போதைப்பொருள் வியாபாரமும் மரண தண்டனையும் எம்.எஸ்.எம். ஐயூப் / 2019 பெப்ரவரி 13 புதன்கிழமை, மு.ப. 12:56 Comments - 0 பிரதி அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வடக்கில் போதைப் பொருள் பரவுவது தொடர்பாக, தென் பகுதி அரசியல்வாதிகளைக் குறைகூறி, ஓரிரு நாள்கள் மட்டுமே சென்றிருந்த நிலையில், இலங்கையில் பெயர் பெற்ற பாதாள உலகத் தலைவர்களில் ஒருவராகவும் போதைப்பொருள் கடத்தல்காரனுமாகிய மாகந்துரே மதுஷ் என்றழைக்கப்படும் சமரசிங்ஹ ஆராச்சிகே மதுஷ் லக்ஷித்த என்பவனும் அவனது முக்கிய சகாக்களுமாக 30 பேருக்கு மேற்பட்டவர்கள், டுபாயில் நட்சத்திர ஹோட்டலொன்றில் கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த ஐந்தாம் திகதி நடைபெற்ற, மதுஷின் மகனின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போதே, இவர்கள் கைது செய்யப்பட்டனர். …
-
- 0 replies
- 728 views
-
-
மீண்டும் ஒரு சிறிலங்கா-இந்தியா கூட்டுத்தயாரிப்பில் நாடகம் ஒன்று அரங்கேற்றப்பட உள்ளது. போரிற்கு பின்னரான தமிழர்களது வாழ்வைப் பற்றி ஆய்வு செய்யவென இந்தியாவில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு வரும் 16ம் திகதி சிறிலங்கா புறப்பட்டுச் செல்ல உள்ளது. இந்தியா பாராளுமன்ற எதிர்க் கட்சி தலைவியான பா.ஜ.க. தலைவர் சுசுமா சுவராச் தலைமையில் 15 பாராளுமன்ற உறுப்பினர்கள் இந்த நாடகத்தில் நடிகர்களாக பங்கேற்கின்றனர். தமிழர்களது நலனில் அதிதீவிர அக்கறையும் பாசமும் கொண்ட தி.மு.க. காங்கிரசு மார்சிட் கம்யுனிட்டு கட்சிகளைச் சேர்ந்த தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்களும் இந்த நாடகக் குழுவில் இடம்பெற்றுள்ளனர். முள்ளிவாய்க்காலில் தமிழர்கள் கூண்டோடு கொன்று புதைக்கப்பட்டு மூன்று வருடங்கள் மு…
-
- 0 replies
- 595 views
-
-
[size=4]ஜூலை 1983 சம்பவம் என்று இலங்கை அதைப் பதிவு செய்திருக்கிறது. இலங்கை தமிழர்களுக்கு இது கறுப்பு யூலை (கருப்பு ஜீலை). திருநெல்வேலியில் எல்.டி.டி.ஈ. நிகழ்த்திய தாக்குதல் சம்பவத்துக்குப் பதிலடியாக நிகழ்த்திய வன்முறைச் செயல் என்று ஒரு காரணம் சொல்லப்படுகிறது. சிங்களர்களின் திட்டமிட்ட, ஒருங்கிணைக்கப்பட்ட மிருகத்தனம் என்று மட்டுமே அதை அழைக்க முடியும்.[/size] [size=1] [size=4]அரசாங்கத்தின் ஆசிர்வாதத்தைப் பெற்றுக்கொண்டு ஜீலை 24 அன்று ஆரம்பித்தார்கள். மொத்தம் ஏழு நாள்கள். தமிழன் என்று ஓர் இனமே இருக்கக் கூடாது என்னும் உக்கிரம் அவர்களிடம் தெரிந்தது. அந்த ஏழு நாள்களில் எத்தனை லிட்டர் பெட்ரோல் செலவானது என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தால், எத்தனை தமிழர்கள் இறந்துபோயிருப்பார்கள் எ…
-
- 0 replies
- 982 views
-
-
‘வாழ்க்கையில் துயரங்களை மட்டுமே கடந்துவந்ததால, இந்த வெற்றியும் சந்தோஷமும் எனக்கு வரமா இருக்கு. கண்கள் மின்னுகின்றன பரிதாவுக்கு. விஜய் டி.வி ‘சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் இரண்டாம் இடம்பிடித்த வெற்றியாளர்! அப்பா, அம்மா எனக்கு வெச்ச பேர், பிரேமலதா. சிதம்பரத்துல மிடில் கிளாஸ் ஃபேமிலி. மியூசிக் கிளாஸ் எல்லாம் போனதில்லைன்னாலும், கேள்வி ஞானத்தால ஸ்கூல்ல படிக்கும்போதே நல்லா பாடுவேன். மியூசிக் தெரிஞ்ச என் கிளாஸ் டீச்சர் கொஞ்சம் இசை கத்துக்கொடுத்தாங்க. எங்கப்பா முயற்சியால சில கச்சேரிகளில் பாடும் வாய்ப்பும் கிடைச்சது. ப்ளஸ் டூ முடிச்சதும் அண்ணாமலை பல்கலைகழகத்துல அஞ்சு வருஷ டிப்ளோமா இன் மியூசிக் கோர்ஸில் சேர்ந்தேன். அங்க என்கூடப் படிச்ச முகமது இக்பாலும் நானும் காதலிச்…
-
- 0 replies
- 342 views
-
-
-
- 0 replies
- 255 views
- 1 follower
-