Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தோல்வி நிலையென நினைத்தால் ....

Featured Replies

தோல்வி நிலையென நினைத்தால் ....

கடந்து சென்ற 2009 மே மாதத்தில், ஈழத்தமிழர்களின் விடுதலைப்போராட்டம் ஒரு பெரிய பின்னடைவைச் சந்தித்தது.

எனினும் அந்த விடுதலைப்போராட்டம் தோற்றுவிட்டது என்பது அதன் கருத்தல்ல.ஏனெனில் ஒரு விடுதலைப்போராட்டம் அது

அடையவேண்டிய குறிக்கோளை அடையும்வரை முடிந்துவிட்டதாகக்கருதமுடியாது.அதனுடைய பாதையில் அது பல பின்னடைவுகளைச்

சந்திக்கலாம்.அவற்றை எவரும் தோல்வியாகவோ அல்லது எல்லாம் முடிந்துவிட்டதாகவோ எடுத்துக்கொள்வதில்லை.மேலும் 'விடுதலை'

என்பது எல்லா மனிதர்களினதும் பிறப்புரிமை,அடிப்படை உரிமை.எந்த மனிதரும் அடிமைத்தனத்தை விரும்பி ஏற்றுக்கொண்டதாக

வரலாறு இல்லை.எல்லா மனிதரும் தம்மால் இயன்ற வழிவகைகள் மூலம் விடுதலையைப்பெறவே முயன்றுகொண்டிருக்கிறார்கள்.

ஈழத்தமிழர்களும் அதற்கு விதிவிலக்கானவர்கள் அல்ல.

முதலில் விடுதலைப்போராட்டம் என்றால் என்ன என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். நீண்டகாலமாக அடிமைவாழ்வு

வாழ்ந்து அதற்குப் பழகிவிட்ட நம்மவர்களுக்கு அதன் மகிமை புரிவதில்லை.வெகுவிரைவாகவே மனவிரக்திக்கும் மனச்

சோர்வுக்கும் இடம் கொடுத்துவிடுகிறோம். ஆனால் நாம் புலம்பெயர்ந்துள்ள மேற்குநாடுகளில் வாழும் மக்களோ விடுதலையை

தம் உயிரினும் மேலானதாகக் கருதுகிறார்கள். அவர்களுடைய வரலாற்றிலிருந்து ஓர் உதாரணத்தைப் பார்ப்போம்.

ஸ்பார்ட்டகஸ்[spartacus] என்பவர் உரோமப்பேரரசை எதிர்த்துக் கிளர்ச்சிசெய்த அடிமைகள் கூட்டத்தினரின்

தலைவர்.அப்போது உரோமப்பேரரசு மிகுந்த வலிமையோடு இருந்தது. எனவே அதனை எதிர்ப்பவர்கள் எவரும்

அழித்தொழிக்கப்படுவார்கள் என்பது ஸ்பார்ட்டகஸ்க்கு தெளிவாகவே தெரியும். அதைப்பற்றிக் கவலைப்படாத

அவர் தமது போராட்டநோக்கங்கள்பற்றி பின்வருமாறு விளக்குகிறார்:

" It is a principled rebellion on behalf of freedom, so even if they lose and all are killed, their fight will not have been in vain since

they will have asserted their unconditional commitment to freedom -- in other words, their act of rebellion itself, whatever

the outcome, already counts as a success, insofar as it instantiates the immortal idea of freedom. "

[ 'Living in the End Times' by Slavoj Zizek; Verso - 2010; p.xiv - xv]

"இது விடுதலைக்காக மேற்கொள்ளப்படும் கொள்கை அடிப்படையிலான கிளர்ச்சி. எனவே அவர்கள்

தோல்வியடைந்து, எல்லோரும் கொல்லப்பட்டாலும்கூட அவர்களின் போராட்டம் என்பது வீணானது அல்ல.

ஏனெனில் அவர்களின் விடுதலைக்கான நிபந்தனையற்ற அர்ப்பணத்தை போராட்டத்தின்மூலம் அவர்கள்

வலியுறுத்தியுள்ளனர். வேறுசொற்களில் கூறினால், அவர்களின் இந்தக்கிளர்ச்சி என்ற செயற்பாடு, அதன்

விளைவுகள் என்னவாகினும், அது விடுதலை என்ற தெய்வீகக்கருத்தை மெய்ப்பிப்பதாக அமைவதினால்,

ஏற்கனவே வெற்றியைப் பெற்றுவிட்டதாகவே கருதப்படவேண்டும்."

விடுதலைக்கான நிபந்தனையற்ற அர்ப்பணம்[unconditional commitment to freedom], விடுதலையென்ற

தெய்வீகக்கருத்து[immortal idea of freedom] எனக்குறிப்பிடுவதின்மூலம் விடுதலையின் மகிமையையும்,

அதற்கு மேற்குநாட்டவர்கள் கொடுக்கும் மதிப்பு,மரியாதை என்பவற்றையும் நாம் புரிந்துகொள்ளலாம்.

இதற்கு மேலும் வலுவூட்டுவதாக அமைகிறது அமெரிக்கக்கவிஞர் வால்ற் விற்மனின் பின்வரும் வரிகள்:

" இன்னும் துணிந்து நில் எனது சகோதரனே, எனது சகோதரியே !

தொடர்ந்து செல் ---- எது நடப்பினும் விடுதலைக்கான பணியைச்செய்

ஒன்றிரண்டு தோல்விகளால் அல்லது எத்தனை தோல்விகளாலும் அடக்கப்படும் ஒன்றல்ல விடுதலைவேட்கை

மக்களின் புறக்கணிப்பால் அல்லது மக்களின் நன்றிமறத்தலால் அல்லது நம்பிக்கைத்துரோகத்தால் இழக்கப்படும் ஒன்றல்ல,

அதிகாரம்,இராணுவம்,பீரங்கிக்குண்டுகள்,கெடுபிடிச்சட்டங்கள் என்பவற்றின் பிடிக்குள் அகப்பட்டு அழிவதல்ல விடுதலைஉணர்வு.

நாம் நம்பும் அது எல்லாக்கண்டங்களிலும், எப்போதும், மறைவாகக் காத்திருக்கிறது. அது எவரையும் துணைக்கு அழைக்காது,

எந்த வாக்குறுதியும் வழங்காது,அமைதியாக ஆரவாரமின்றி அமர்ந்திருக்கிறது. நம்பிக்கையுடனும் தன்னுறுதியுடனும்

அது பொறுமையுடன் காத்திருக்கிறது. தனக்கான காலம் கனிந்து வருவதற்காக அது காத்திருக்கிறது."

" Courage yet, my brother or my sister !

Keep on --- Liberty is to be subserved whatever occurs;

That is nothing that is quelled by one or two failures, or any number of failures,

Or by the indifference or ingratitude of the people, or by any unfaithfulness,

Or the show of the tushes of power, soldiers, cannon, penal statutes.

What we believe in waits latent forever through all the continents,

Invites no one,promises nothing, sits in calmness and light, is positive

and composed, knows no discouragement,

Waiting patiently, waiting its time.

---------------- Walt Whitman [1819 -- 1892 ]

விடுதலை என்பது மனிதனின் பிறப்புரிமை என்பதினால் அதனை அடைவதற்கான அவனின் முயற்சிகள்

தொடர்ச்சியானதாகவே இருக்கும். அதாவது எந்தப் பின்னடைவுகள் ஏற்பட்டாலும் அதற்கான முயற்சியை

அவன் கைவிடப்போவதில்லை.இதனைப்புரிந்துகொள்ள ஓர் உதாரணத்தைப் பார்ப்போம். பொதுவாக எல்லா

மனிதர்களும் தம்வாழ்வில் மகிழ்ச்சியாக,வசதியாக வாழக் கூடுதலானபணத்தைச் சேர்க்கவேண்டுமென

நம்புகின்றனர். அதற்காக மிகத்தீவிரமான முயற்சிகளில் ஈடுபடுகின்றனர். கவிஞர்

சுப்பிரமணியபாரதியார் கூறுவதுபோல,"வேர்ப்பவேர்ப்பப் பொருள் செய்வதொன்றையே மேன்மை

கொண்ட தொழிலென" நம்பி உழைக்கின்றனர்.அதில் நமக்குப் பின்னடைவோ, தோல்வியோ ஏற்பட்டால்

நாம் பொருள் சேர்க்கும் முயற்சிகளைக் கைவிடுகிறோமா? கிடையவே கிடையாது. எல்லோர்

வாழ்விலும் முதன்மைப்படுத்தும் முக்கிய முயற்சியாக அதுவே தொடர்ந்தும் இருந்து

வருகிறது.

இவ்வாறு பணம்சேர்க்கும் முயற்சிகளில் நமக்கு இருக்கும் தீவிர ஈடுபாட்டைப்பற்றி சுவாமி

விவேகானந்தர் பின்வருமாறு கூறுகிறார்:

" How some people give all their energies,time,brain,body and everything, to become rich! They have no time for

breakfast! Early in the morning they are out and at work! They die in the attempt -- ninety percent of them -- and

the rest, when they make money, cannot enjoy it. That is grand! I do not say it is bad to try to be rich.It is

marvellous, wonderful! Why,what does it show? It shows that one can have the same amount of energy and

struggle for freedom as one has for money."

[The Complete Works of Swami Vivekananda -Volume V = Advaita Ashrama, Kolkata 700 014 = 2003; page- 252.]

"செல்வந்தராகவேண்டுமென்பற்காக எப்படிச் சில மனிதர்கள் தங்களுடைய முழுஆற்றல்கள்,

காலம்,அறிவு,உடல்உழைப்பு, என்பவற்றை எல்லாம் பயன்படுத்துகிறார்கள்! காலையுணவு

உண்பதற்கே அவர்களுக்கு நேரமிருப்பதில்லை!அவர்கள் அதிகாலையிலேயே வெளியே சென்று

உழைக்கத்தொடங்குகிறார்கள். அந்த முயற்சி காரணமாகவே அவர்களில் தொண்ணூறு சத

வீதமானோர் இறந்துவிடுகின்றனர். மிகுதியானோர் பணத்தைச் சேர்த்தபின்பு அதனை அனுபவிக்க

முடியாத நோயாளிகளாகிவிடுகின்றனர். அது மகிமையானது. பணக்காரராக முயற்சிசெய்வது

கெட்டதென நான் கூறவில்லை. அது சிறப்பானது, அற்புதமானது. எதற்காக, அது எதைக்காட்டுகிறது?

பணம் சேர்ப்பதற்குக் காட்டும் அதே அளவானஆற்றலையும்,போராட்டகுணத்தையும் ஒருவர்

விடுதலை பெறுவதற்காகவும் மேற்கொள்ளலாம் என்பதையே அது காட்டுகிறது."

சுவாமி விவேகானந்தர் கூறுவதுபோல் செல்வந்தராக முயற்சிப்பது தவறானது அல்ல. அதில் நாம்

கவனிக்கவேண்டியது அதற்காக நாம் மேற்கொள்ளும் தீவிர ஈடுபாட்டுடன்கூடிய முயற்சி என்பதே. நமது

முன்னோர், நாம், நமது பிற்சந்ததியினர் என்ற எல்லோரும் இந்தப் பணம்சேர்க்கும் முயற்சியையே

முதன்மைப்படுத்தவேண்டும் என்ற ஒன்றுபட்ட கருத்து நம்மவர்களிடையே ஆழமாகவேரூன்ற

வைக்கப்பட்டுள்ளது. நமது பிள்ளைகள் அதில் பின்தங்கிவிடக்கூடாதென அதற்கான கல்வி,

பயிற்சிகளைப் பெறவைக்கிறோம். எத்தகைய பின்னடைவுகள்,தோல்விகள் ஏற்பட்டாலும்,

முயற்சிகளைக் கைவிடாது, விடாமுயற்சி செய்யவேண்டுமென எதிர்பார்க்கிறோம்.

எனவே சுவாமி விவேகானந்தர் சுட்டிக்காட்டுவதுபோல் அந்தவகையான ஆற்றல்

மிகுந்த முயற்சிகளையும்,போராட்டகுணம் மிகுந்த முனைப்பையும் இந்தத்தேசவிடுதலை

என்ற உன்னதகுறிக்கோளையடைய நாம் மேற்கொண்டால் என்ன? நமது ஏனைய

வாழ்க்கைமுயற்சிகளுடன் இந்த தேசவிடுதலை முயற்சியையும் ஒருபகுதியாகச் சேர்த்துக்

கொண்டால் என்ன? மேலும் சுவாமிஜி விளக்குவதுபோல் பணம்சேர்ப்பதில் தீவிர

முயற்சிசெய்வோர் அதனால் இறந்துபடுகிறார்கள் அல்லது அதனை அனுபவிக்கமுடியாத நோயாளி

களாகி விடுகிறார்கள்.அதாவது இறுதியில் அவர்கள் இன்பத்தையோ,நிறைவையோ பெறுவதாக இல்லை.

ஆனால் தேசவிடுதலை போன்ற உன்னதங்களுக்காக உழைப்பவர்கள் தமக்கும்,தம் மக்களுக்கும்,

பிற்சந்ததியினருக்கும் பெருவாழ்வைப்பெற முயன்றவர்களாகிப் போற்றப்படுவார்கள்.

விடுதலை என்ற தெய்வீகக்கருத்துடன் வாழ்பவர்களாகி வரலாற்றில் இடம் பெறுவார்கள்.

மேற்குநாட்டினர்மட்டும்தான், தோல்வி, பின்னடைவுகள் கண்டு துவண்டுவிடாமல் போராட்டத்தைத்

தொடரவேண்டுமெனக் கூறுகிறார்கள் என்பதல்ல. இந்தியவிடுதலைப்போரில் பங்குகொண்ட

கவியரசர் இரவீந்திரநாத தாகுர் அவர்களும் இதேகருத்தை வலியுறுத்துவதை நாம் கவனிக்கவேண்டும்.

அவர் தமது " பறவையே இதுகேள் " என்ற பாடலில் [இணைப்பு கீழே தரப்பட்டுள்ளது ], "உளம் பதறாதே,

சிறகை ஒடுக்கிச் சிதைந்து அழியாதே " என்கிறார். அதாவது, உன்னுடைய இலக்கைச் சென்றடையும்வரை

தொடர்ந்து பறந்துகொண்டேயிரு; உளம் பதறி சிறகைஒடுக்கிச் சிதைந்து அழிந்து போகாதே என்று அக்கவிதையில்

மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறார். எனவே தமிழர்களாகிய நாமும் சோர்வுமனப்பான்மையிலிருந்து விடுபட்டு

புத்துணர்வும் ஓர்மமும் கொண்டவர்களாக நம் விடுதலைப்போராட்டத்தைத் தொடரவேண்டும்.

தாயகத்தில் நம் மக்கள் மிகமோசமான அடக்குமுறைகளுக்கு ஆளாக்கப்பட்டிருக்

கிறார்கள். அவர்களது குரல்கள் மௌனிக்கப்பட்டிருக்கின்றன. எனவே நமது தேச

விடுதலைப்போராட்டம் என்பது முற்றுமுழுதாக புலம்பெயர் ஈழத்தமிழர்களிடம்தான் ஒப்படைக்-

கப்பட்டிருக்கிறது.புலம்பெயர்தமிழர்களின் தவிர்க்கமுடியாத வரலாற்றுக்கடமையாக அது

நமக்கு அமைந்துள்ளது. எனவே புலம்பெயர்தமிழர்கள், தமிழ்நாட்டுத்தமிழர்களின் ஆதரவை

யும் பெற்று, போராட்டத்தைத் தொடரவேண்டும்.நாம் புலம்பெயர்ந்துள்ளநாடுகளின் சட்டங்களுக்கு

அமைவான, அமைதிவழியில்,சனநாயகவழிமுறைகளில், நம் போராட்டம் தொடரவேண்டும்.சர்வதேச

சமூகத்தின் மனச்சாட்சியைத் தட்டியெழுப்புவதாக அது அமையவேண்டும்.அண்மைக்காலங்களில் மத்தியகிழக்கு

நாடுகளில் நடந்த மக்கள் கிளர்ச்சி,புரட்சிகளைப் பாருங்கள்! முப்பது,நாற்பது ஆண்டுகளுக்குமேலாக

அடக்குமுறை ஆட்சிக்குட்பட்டிருந்த மக்களின் புரட்சி அங்கு இடம்பெற்றது. மத்தியகிழக்கை

நன்குஅறிந்த ஓர் ஊடகவியலாளர் குறிப்பிட்டதுபோல் அந்தமக்கள் 'பயம்' என்பதை எங்கோ

தொலைத்துவிட்டார்கள்.அவர்களிடமிருந்த பயம் செத்துவிட்டது.அதுபோன்றே எதிர்காலத்தில்

ஈழத்தமிழர்களுக்கும் ஏற்படலாம்.இவற்றையெல்லாம் வெகுஉன்னிப்பாக நம் இளம்

தலைமுறையினர் கவனிக்கவேண்டும். விழிப்புணர்வுமிகுந்த சமூகமாக நாம் மாற

வேண்டும்.விடுதலைகிடைக்கும்வரை விடுதலைக்கான போராட்டம் தொடரவேசெய்யும்,அதில்

இடைநிறுத்தம் என்பது இல்லை, என்ற தெளிவும் உணர்வும் கொண்டவர்களாகச்

சேர்ந்துசெயற்படுவோம்.குறிப்பாக, புலம்பெயர்நாடுகளிலுள்ள நம் இளம்தலைமுறையினர் --

வேறுபட்ட ஐரோப்பியமொழிக்கல்வியும் ஆற்றல்களும் கொண்டவர்கள் -- இணைந்து

செயற்படவேண்டும். முதலில் சிறுதொகையினர் செயற்பட்டு வழிகாட்ட, பின்னர் ஏனையோரும்

சேர்ந்து செயற்படலாம்.

பறவையே இது கேள்

திக்கற்றவருக்கு தெய்வமே துணை

உண்மையில் சுவாமி விவேகானந்தரின் கருத்துக்கள் (பேச்சுக்கள்) பலவும் ஒரு மனிதனை ஆற்றல், செயல் வல்லமை உடையவனாக மாற்ற வல்லது. அவர் கொழும்பு, கண்டி, யாழ்ப்பாணத்தில் கூட மக்களை கவர்ந்த சொற்பொழிவுகள் செய்ததாக கூறுகிறார்கள்.

ஆனால் அவரால் 100 வருடங்களுக்கு முன்னர் மக்கள் சேவைக்காக தாபிக்கப்பட்ட ராமக்ருஷ்ண மிசனை சேர்ந்த பெரும்பாலான சாமியார்கள், கடந்த 100 வருடத்தில் கழுதை தேய்ந்து கட்டெறும்பான மாதிரி - போலிச் சாமியார்களாக மாறிக் கொண்டிருப்பதை இன்று காணலாம்.

ராமக்ருஷ்ண மிசனை சேர்ந்த பெரும்பாலான இன்றைய சாமியார்கள், பெயருக்கு சிறு சிறு சேவைகளை செய்து காட்டி, புலம் பெயர் மக்களிடம் பெருமளவு பணத்தை பெற்று, சொகுசான வாழ்க்கை வாழ்வதுடன், இன்று "ராமகிருஷ்ண மதம்" என்று புதிய மதத்தை உருவாக்கி வருவதாகவும், இதுக்கு சைவ மக்களே இரையாகின்றனர். சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கின்றனர். இவர்கள் சைவ தமிழ் கலாசாரத்தை சிதைப்பதுடன், வட இந்திய கலாசாரத்தை மக்கள் மத்தியில் திணிக்கின்றனர்.

இவர்களில் சிலர் தமிழினப் படுகொலைகளை மேற்கொண்ட இந்தியப் பயங்கரவாதிகளின் முகவர்களாக செயற்பட்டு வருவது ஏற்கனவே தெரிந்த விடயம். மட்டக்களப்பில் அண்மையில் இறந்த ஒரு ஈழத்து ராமக்ருஷ்ண மிஷன் சாமியார் இந்த இந்திய போலிச் சாமியார்கள் சிலரது சுயரூபங்களை பலரிடம் உடைத்ததை மட்டக்களப்பு மக்கள் பலர் அறிவர்.

பொம்பிளைப் பொறுக்கி போலிச் சாமியார் நித்தியானதாவும் ராமகிருஷ்ண மிசனால் உருவாக்கப்பட்டவர் தான். கொழும்பில் மிக நீண்டகாலமாக இருக்கும், தமிழ் பேசும் ஒரு வட இந்திய போலிச் சாமியும் பொம்பிளைகளின் பின்னால் அலைபவராம். இதனால் மட்டக்களப்பில் இருந்து துரத்தப்பட்டு - இப்போது கொழும்பில் பல பொம்பிளைகளின் பின்னால் அலைகிறாராம்.

எனவே விவேகானந்தர் போன்ற பெரியவர்களின் பெயர்களை பயன்படுத்தி தமிழ் மக்களை அழிக்கும் அனைத்து இந்திய போலி சாமியார்களின் வேஷங்களும் கலைக்கப்படவேண்டும்.

புலம் பெயர் தமிழரும் இத்தகைய தமிழின விரோத நிறுவனங்களுக்கு, தமிழினப் படுகொலையாளர்களுடன் தொடர்புகளை பேணும் நிறுவனங்களுக்கு ஏமாந்து பணம் அனுப்புவதை முற்றிலும் நிறுத்த வேண்டும்.

இந்தப் போலிகள் தமிழ் மக்களுக்கு செய்யும் சேவைகளை விட, ஏற்படுத்தும் கண்ணுக்கு உடன் தெரியாத அழிவுகள் பல நூறு மடங்காகும்.

களைகளை களைவது எமது வெற்றிக்கு அவசியம்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.