Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் உறவுகள் கூட்டமைப்பின் வெற்றிக்காக உதவ முன்வரவேண்டும்

Featured Replies

தமிழ் உறவுகள் கூட்டமைப்பின் வெற்றிக்காக உதவ முன்வரவேண்டும்

Suresh.jpg

சுரேஷ். க. பிரேமச்சந்திரன் வேண்டுகோள்

அன்பார்ந்த உறவுகளே!

இலங்கையின் கிழக்கு மாகாணசபைக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியில் இருந்து ஒதுங்கிக் கொண்டது. இதனால் அரசும் அதன் அடிவருடிகளும் மாகாணசபையைத் தமது ஆளுமைக்குள் கொண்டுவந்தனர். இதனால் தமிழ் மக்கள் மேலும் மேலும் பலவழிகளில் துன்புறுத்தப்பட்டனர். இவர்களது ஆட்சியில் நூற்றுக்கணக்கான தமிழ் இளைஞர்கள் கடத்தப்பட்டு காணாமல் போயுள்ளனர். வடக்கு-கிழக்கு இணைப்பு தேவையற்றது எனும் பிரச்சாரம் இவர்களால் மேற்கொள்ளப்பட்டது. அரசியல் தீர்வு தேவையில்லை என்ற நிலை தோற்றுவிக்கப்பட்டது. பொலிஸ், காணி அதிகாரங்கள் தேவையே இல்லை என்றுகூட இவர்களால் கூறப்பட்டது. இந்நிலை மாற்றியமைக்கப்பட்டாக வேண்டும். கிழக்கு மாகாண தமிழ் மக்கள் தமிழ்த் தேசியத்தை ஆதரித்து நிற்கிறார்கள். வடக்கு-கிழக்கு இணைப்பை ஆதரித்து நிற்கிறார்கள் என்னும் ஒரு நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். வடக்காய் இருந்தாலும் கிழக்காய் இருந்தாலும் தமிழ் மக்கள் ஒரே சிந்தனையில் இருக்கிறார்கள் என்பதை மீண்டும் மீண்டும் இந்த அரசிற்கும், உலகிற்கும் உணர்த்தப்பட வேண்டும். ஆகவேதான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இத்தேர்தலில் போட்டியிடத் தீர்மானித்தது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பானது ஐந்து கட்சிகளின் கூட்டாகும். இதில் தமிழரசுக் கட்சி மிகப்பெரும்பான்மையான இடங்களில் போட்டியிடுகின்றது. ஏனைய நான்கு கட்சிகளும் 15 ஆசனங்களில் போட்டியிடுகின்றன. இவர்களையும் வெல்ல வைப்பதினூடாகத்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைக் கட்டுக்கோப்பான, உறுதியான அமைப்பாக முன்னெடுத்துச் செல்ல முடியும்.

ஐந்து கட்சிகளும் ஒரே குடை அமைப்பாக – தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாகத் தமிழ் மக்களின் ஜனநாயகப் போராட்டங்களை முன்னெடுக்க வேண்டுமாயின் இவர்கள் கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் வென்றாக வேண்டும்.

அந்த வகையில், இந்தத் தேர்தலை எதிர்கொள்வதற்கான நிதியுதவிகளை உங்களிடமிருந்து எதிர்பார்க்கின்றோம். விகிதாசாரப் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட தேர்தல் எனும் அடிப்படையில், ஒவ்வொரு வேட்பாளரும் தனக்குரிய மாவட்டம் முழுவதிலும் பிரச்சாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது. இதற்கு பல இலட்சக்கணக்கில் நிதியுதவிகள் தேவைப்படுகின்றது. ஆகவே உங்களால் இயன்ற உதவிகளைச் செய்து இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்யுமாறு பணிவுடன் வேண்டுகின்றேன்.

நன்றி.

சுரேஷ;. க. பிரேமச்சந்திரன்,

உத்தியோகபூர்வ பேச்சாளர்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

பாராளுமன்ற உறுப்பினர்,

யாழ் மாவட்டம்.

உங்களால் இயன்ற உதவிகளைச் செய்து இத்தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை வெற்றிபெறச் செய்யவும்.

line.jpg

Selvam.jpg

அ. செல்வம் அடைக்கலநாதன் வேண்டுகோள்

அன்பார்ந்த உறவுகளே!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாங்கள் எதிர்வரும் கிழக்குமாகாணத் தேர்தலில் போட்டியிடுகின்றோம். கடந்த தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடவில்லை. அதனால் இலங்கை அரசாங்கம் ஒரு தமிழரைக் கொண்டுவந்து முதலமைச்சர் பதவியில் அமர்த்திவிட்டு, எமது பூர்வீக நிலங்களையும், இராணுவத்தின் அடாவடித்;தனங்களையும், ஆக்கிரமிப்பையும் மேற்கொண்டு, எமது வரலாற்றுச் சிறப்புமிக்க பாரம்பரிய பூமிகளில் எமது அடையாளத்தையே இல்லாமல் செய்கின்ற நிலையை மேற்கொண்டுள்ளது என்பது எம் எல்லோருக்கும் தெரியும். இன்றைய காலக்கட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஏற்கனவே இலங்கை அரசாங்கம் வடக்கு-கிழக்கில் வாழ்கின்ற தமிழ் மக்கள் அடிமைகளாக்கப்பட வேண்டும், எமது வரலாறுகள் சிதைக்கப்பட வேண்டும் எனற நோக்கத்தோடுதான் தனது நிகழ்ச்சி நிரலை நடைமுறைப்படுத்தி வருகின்றது.

எமது உரிமைகளை, எமது இறையாண்மையை, வென்றெடுப்பதற்கும் எமது வாழ்வாதாரப் பிரச்சினைகளை நாங்கள் வெளியுலகிற்கு எடுத்துக் காட்டுவதற்கும் எமது செயற்பாடுகளைப் போராட்டத்தின் ஊடாகவும் முன்னெடுத்துச் செல்வதற்கு எமக்கு அங்கீகரிக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள் தேவை. எனவே கிழக்கு மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டாயம் போட்டியிட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

இன்று வடக்கு-கிழக்கில் பாரிய மனித உரிமை மீறல் சம்பவங்கள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. முள்ளிவாய்க்காலில் மிகப்பெரிய அளவில் மனித உரிமை மீறல்கள் நடைபெற்றுள்ளன என்பதை ஐ.நா. சபை நிரூபித்திருக்கின்றது.

ஐ.நா.சபை கொண்டுவந்த இலங்கைக்கு எதிரான மனித உரிமை மீறல் பிரச்சினைகள், தமிழ் மக்கள் மத்தியில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதை வெளியுலகிற்குக் காட்டுகின்ற அடையாளமாக நாம் இத்தேர்தலைப் பார்க்கின்றோம். தமிழ் மக்களுக்கு எதிராக இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட அனைத்து நடவடிக்கைகளுக்கும் தண்டனை அனுபவிக்க வேண்டும் தனது தவறுக்கான பெறுபேறுகளை அவர்கள் சந்திக்க வேண்டும் என்ற நிலையில், எமது மக்கள் ஒற்றுமையாக இருக்கிறார்கள் என்பதைத் தமது வாக்கு பலத்தோடு சர்வதேசத்திற்கு எடுத்துக்காட்டி இந்த அரசாங்கத்தின் முகத்திரையைக் கிழித்தெறியக்கூடிய வகையில் இந்தத் தேர்தலின் முடிவுகள் அமைய வேண்டும். இது சாத்தியப்பட வேண்டுமானால் நாம் கூடுதலான ஆசனங்களைப் பெறவேண்டும் என்பது எனது கணிப்பு. எனவே புலம்பெயர் உயர்வுகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அதிகூடிய ஆசனங்களைப் பெறுவதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித்தருவதற்கான உந்து சக்தியாக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கின்றேன்.

எம்மிடம் ஆற்றல் இருக்கிறது, மனோதிடம் இருக்கிறது, உடலில் வலு இருக்கிறது. ஆனால் இவை அனைத்தையும் கொண்டு செலுத்துவதற்கான நிதி ஆதாரம் எம்மிடம் இல்லாமல் இருக்கின்றது. புலம்பெயர் உறவுகள் நினைத்தால் நிச்சயமாக எமது இந்த நிலையை மாற்ற முடியும். எமக்கு உந்து சக்தியை அளிக்க முடியும். எமது மக்கள் கூடுதலான வாக்குகளைப் பதிவு செய்ய வைக்க முடியும். அவ்வாறு கூடுதலான வாக்குகள் பதியப்பட்டால் எமக்கு நிச்சயம் கூடுதலான ஆசனங்கள் கிட்டும்.

அந்த வகையில் நீங்கள் உங்களது உதவிக்கரத்தை நீட்டி எமது வெற்றிக்குப் பங்காற்ற வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். எமது உரிமைப்போராட்டத்திற்குப் பல இலட்சங்களையும் பொருளையும் வாரிவழங்கிய பெருமை புலம்பெயர் உறவுகளைச் சாரும். அந்த உதவிகளை ஒருபோதும் தாயகம் மறக்காது. அதனைப் போன்றே இந்தத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்கும் நீங்கள் உதவிக்கரம் நீட்ட வேண்டும் என்று உங்களை அன்புடன் கேட்டுக்கொள்கின்றேன். உங்களது உழைப்பும் ஊக்கமும் பொருளுதவியும் நிச்சயம் எம்மை வலுவடையச் செய்யும். எமக்கு உற்சாகத்தைக் கொடுக்கும்.

தாயகத்தில் செயலாற்றுகின்ற தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு வறுமைக்கோட்டிற்குக் கீழே வாழ்கின்ற குடும்பத்தைப் போன்று உள்ளது. ஆகவே உங்களது ஒத்துழைப்பு இல்லாமல் இத்தேர்தலை நாங்கள் முகங்கொடுப்பது கடினம். உங்களது உதவியோடு இந்த அரசாங்கத்திற்குத் தக்க பதிலடியை வழங்கி எமது இலட்சியப் பயணத்தை மிகவும் நம்பிக்கையுடன் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று கூறி உங்களிடமிருந்து நிதியுதவியை நாடி நிற்கின்றோம்.

நன்றி.

அன்புடன்

அ. செல்வம் அடைக்கலநாதன்,

இணைச் செயலாளர்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.

பாராளுமன்ற உறுப்பினர்,

வன்னி மாவட்டம்.

http://www.tnaglobal.org/

[size=1]

[/size]

[size=1]

[/size]

[size=1]

[size=3] [/size]

[size=3]

August 12, 2012

Dear Friends,

As you are aware, there is an Eastern Provincial Council Election being held on September 8, 2012. This is a provincial election, and the result won’t change many things. However, this is an important election, and the TNA is contesting it.

The Provincial Council is a powerless institution, but we must bring it under our control and we must win the Maximum Tamil seats. This will send a message to the Sri Lankan Government as well as to the International Community.

Colombo is using every resource at hand to defeat the TNA.

The TNA needs money to help Tamil voters get to the polls, and for these reasons:

1.
[size=1] [/size]
The handicapped, people affected by war, and poor people who otherwise cannot get to the polling places need help. The TNA wants provide transportation, but getting cars and buses to take Tamil voters to the polling places costs money, and the TNA does not have it.

2.
[size=1] [/size]
The TNA needs to print pamphlets and other materials to explain to Tamil voters why this election is important to them, and why they need to vote. The TNA hopes to energize the Tamil voters and raise the pro-Tamil turnout.

3.
[size=1] [/size]
TNA volunteers need to travel to the places where election work needs to be done. For instance, its about 300 KM between Trincomalee to Potuvil, and the TNA needs to take them back and forth. It costs money, and the TNA is short of money.

We are trying to raise money to win the election. We hope to raise $10,000, and we hope you will help us do it.

Please go to
to make a contribution, if you have not done so already. Every penny contributed goes directly to help the TNA win the EP Election.

Thank you.

Lovingly Yours,

Suresh K. Premachandran,

Member of Parliament, Jaffna District.

Official Spokes Person,

Tamil National Alliance (TNA)

Phone: (94) 777 36 2481

Visit us at
[/size]
[/size]

[size=1] [/size]

Edited by BLUE BIRD

[size=5]கூட்டமைப்பு கேட்பது - 10000 USD[/size]

[size=5]இதுவரை பங்களிக்கப்பட்டுள்ளது - 3511 USD[/size]

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.