Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஆவணப்படுத்தலை ஊக்குவித்தல்

Featured Replies

Bookcover_01_99640_200.jpg

[size=4]முள்ளிவாய்க்கால் தமிழினஅழிப்பு ஈழத்தமிழர் வரலாற்றில் இடம்பெற்ற மிகச்சோகமான நிகழ்வாகும்.

அந்த நிகழ்விலிருந்து நாமும், நமது பிற்சந்ததியினரும் கற்றுக்கொள்ளவேண்டிய பாடங்கள் பலவாகும்.

அதற்கு புலம்பெயர்ந்த நாடுகளிலுள்ள கற்றறிந்த, புலமைமிக்க தமிழர்களின் பங்களிப்பு, ஈடுபாடு என்பவை

மிகமிகமுக்கியமாகும். எம்மவர்களின் எதிர்காலநல்வாழ்வு, விடுதலை, விமோசனம் என்பன அத்தகைய

செயற்பாடுகளை வேண்டிநிற்கிறது.

நாமும் நமது பிற்சந்ததியினரும், உள்ஊக்கமும் விழிப்புணர்வும்கொண்ட சமூகமாக உருவெடுக்க நமது

வரலாற்றில் இடம்பெற்ற மிகமோசமான இந்தநிகழ்வை உரியமுறையில் ஆவணப்படுத்திப் பேணுவது நம்

தலையாய கடமையாகும்.புலம்பெயர்தமிழர்கள் தாம் வாழ்ந்துவரும் மேலைநாட்டின்மக்கள், எப்படித் தம்

வரலாற்றுநிகழ்வுகள் சம்பந்தப்பட்ட எல்லாவற்றையும் பேணிப்பாதுகாக்கின்றனர், அவற்றைக் கொண்டாடு-

வதின்மூலம் நினைவுகளைப் புதிப்பித்து தம் பிற்சந்ததியினரிடம் ஒப்படைக்கின்றனர் என்பதை நாம் கவனிக்கலாம்.

நாம் அந்தப்பண்புகளை அவர்களிடமிருந்து கற்றுக்கொள்ளவேண்டும். நம் இளம்தலைமுறையினருக்கும் கற்றுக்

கொடுக்கவேண்டும். அந்தவகையில் நமது முள்ளிவாய்க்கால் தமிழினஅழிப்பை நாம் பல்வேறுவழிகளிலும்

ஆவணப்படுத்திப் பதிவுசெய்தல் வேண்டும். அந்தவகையில் இங்கிலாந்தின் சனல் 4 தொலைக்காட்சியின்

"கொலைக்களங்கள்" , ஐ.நா.பணியாளராகிய Gordon Weiss அவர்களின் "The Cage " என்ற நூல், அண்மையில்

வெளியிடப்பட்ட பிபிசி நிருபர் Frances Harrison அவர்களின் " Still Counting the Dead "

என்பன குறிப்பிடத்தக்கன. எனினும் இவர்கள் எல்லோரும் வெளியாட்கள். தாம் பல்வேறு வழிகளில் பெற்ற

தகவல்கள், சில நேரடிஅனுபவங்களைக்கொண்ட அவர்களின் கண்ணோட்டத்துடன் உருவாக்கப்பட்டவை அவை.

எனினும் இந்த இனஅழிப்பினால் நேரடியாகப்பாதிக்கப்பட்ட, அந்த இறுதிக்கால அவலவாழ்வில் பங்குகொண்டு,

துன்பப்பட்ட ஈழத்தமிழ்மக்களின் சாட்சியங்கள், அவர்களின் பார்வையில், கன்ணோட்டத்தில், பதிவுசெய்யப்படல்

முக்கியமானது. அந்தவகையில் முதல் ஆவணப்படுத்தலாக வெளிவந்திருப்பது கலாநிதி N மாலதி அவர்களின்

" A Fleeting Moment in My Country: The Last Years of the LTTE De-Facto State" என்ற நூலாகும்.

"Can the readers who did not experience this imagine

what it is like to watch the complete destruction of one’s

country: the physical destruction, the destruction of the

governance structures, the complete dispersal of its

people, and massacres on a massive scale? Has there

ever been such complete destruction of a country in

history? The only reason why it is not seen as such is

because my country was only in the minds of its people,

but was not recognized by the global system of

states." [ N. Malathy ]

இதனை அனுபவித்து அறியாத வாசகர்களினால் அதனைக் கற்பனை செய்யமுடியுமா? அதாவது ஒருவருடைய

நாட்டினை முற்றாக அழித்தலைப் பார்த்தல். அதனை ஆள்வதற்கான கட்டுமானங்களை அழித்தல்; அதன் மக்களை

முற்றாகச் சிதறடித்தல்; மிகப்பெரிய அளவிலான மக்கள்கொலைகள்; -- வரலாற்றில் எப்போதாவது ஒருநாடு

இத்தகைய முற்றான அழித்தலுக்கு உட்பட்டிருக்கிறதா? எமது நாடு அதன் மக்களின் மனத்தில் மட்டும்தான்

இருந்திருக்கிறது. ஆனால் அது பூகோள அரசுகளின் அமைப்பினால் அங்கீகரிக்கப்படவில்லை. அதனால்தான்

அதன் அழிவு பெரிதாகக் கொள்ளப்படவில்லை.

நம்மவர் என்பதினால் அவர் அந்த உணர்வுகளோடு மேலேயுள்ள வினாக்களை எழுப்புகிறார். எனவே அவர் சொல்ல

விரும்பும் செய்திகளை, ஊட்டவிரும்பும் உணர்வுகளை நாம் பெற்றுக்கொள்ளவேண்டும். ஏனைய மக்களிடமும்

அவை சென்றடையவேண்டும். அதற்கு அவர் எழுதிய இந்த நூலை நாமும் வாங்கி வாசிப்பதுடன் ஏனையோரையும்

வாங்கி வாசிக்கும்படி தூண்டவேண்டும். நூலாசிரியரின் இந்த முன்மாதிரிமுயற்சிக்கு ஊக்கம் கொடுக்கவேண்டியது

நம் கடன். அவரே குறிப்பிடுவதுபோன்று " ஒருமக்கள் கூட்டம் செழுமையுடன் தொடர்ந்து வாழ்வதற்கு அதன்

வரலாற்றைப் பதிவுசெய்தல் முக்கியமான அம்சமாகும்" [ Recording history is an important aspect of the survival

of a people ]. மாவீரர்களுக்கு வணக்கமும் அஞ்சலியும் செலுத்தும் இந்தக் காலப்பகுதியில்

இந்த நூலும் அதன் கருத்துகளும் நம்மவர்களிடையே பரவலாகச் சென்றடைதல் சிறப்பானது. கீழே தரப்பட்டுள்ள

இணைப்புகளில் நூலைப்பெறுவதற்கான உதவிக்குறிப்புகள் -- விபரங்கள் -- தரப்பட்டுள்ளன.

இந்த நூலின் தமிழ்வடிவத்தை இந்த ஆண்டு முடிவில், தமிழ்நாட்டில் கோயமுத்தூர் 'விடியல் பதிப்பகம்'

வெளியிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Review #2: “A Fleeting Moment in My Country by Gogol G, Sept.24, 2012

Review of “A Fleeting Moment in My Country” September 21, 2012

Malathy’s ‘Fleeting Moment’ a testimonial to earne.. 20- 08- 12

Tamils de-facto state chronicled in new book 04-08-2012

A Fleeting Moment in My Country: The Last Years of the LTTE De-Facto State / 12 July 2012 [/size]

Edited by மகம்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.