Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வலியின்றி வரலாறில்லை

Featured Replies

கட்டாக்காலி நாய்பிடிகாரர் போல பல்கலை மாணவர்களை நடுறோட்டில் வைத்து அடித்து, விரட்டிய பின்னரும் கூட ஆட்சியாளர்களின் வெறி அடங்கிய பாடாகத் தெரியவில்லை.


பிரச்சினைக்கான வேர்களைப் பிடுங்குவதன் மூலம் பல்கலை மாணவருக்கு பயம் காட்டும் பாணியில் அதிகார ஏவலாளிகள் இறங்கிவிட்டார்கள்.

 

போர் முடிவுக்கு வந்து புலிகளைஒழித்து விட்டதாக அரசு அறிவித்த பின்னரும் அதற்கான தலையிடிகள் வெவ்வேறு ரூபங்களில் தொடரவே செய்தன. சனல்4 தொலைக்காட்சி வெளியிட்ட காணொலிகள், புலம்பெயர் தமிழர் ஆர்ப்பாட்டங்கள், ஐ.நாஅறிக்கைகள், ஜெனிவாத்தீர்மானம் என்று ஓயாது அலைக்கழிக்கப்பட்டுக் கொண்டிருந்த பேரினவாதிகளுக்கு யாழ்.பல்கலை மாணவர்களும் தீராத் தலைவலியாக மாறியிருந்தார்கள்.


குறிப்பாக கார்த்திகை27 இல் எப்படியேனும் பல்கலையில் மாவீரர் சுடர் ஒளிர்ந்தேதீரும். மாணவர்கள் சுடர் ஏற்றுவார்கள் என்று படையினருக்கும் நன்கு தெரியும். கண்களில் விளக்கெண்ணையை விட்டுக்கொண்டு, பல்கலைச்சூ ழலில் சீருடைகளுடனும், சிவிலுடையிலும் அவர்கள் சுற்றத் தொடங்கிவிடுவார்கள். மாணவர் தலைவர்களை மறைமுகமாகமிரட்டுவார்கள்.

 

இராமநாதன் வீதியில் சோதனை அதிகரித்திருக்கும். அப்படியிருந்த போதும் , எப்படியோ படைகளின் தலையைச்சுற்றிவிட்டு, பல்கலைக்கழக சுற்றாடலில் மாவீரநாள் சுவரொட்டிகள் முளைத்திருக்கும். கார்த்திகை 27 இல் சரியாக 6.05க்கு தீபம்ஒளிரும். செல்போனிலிருந்து  சாவினை தோள் மீது தாங்கிய சந்தனப்பேழைகள் பற்றிய பாடல் பரவும்.


ஆமிகாரருக்கும் மாவீரர் நாள் கொண்டாட வேணுமெண்டு விருப்பம். அதுதான் சுடர் ஏத்துற இடத்தில வந்து நிண்டு தங்கடபங்குக்கு அஞ்சலி செலுத்திட்டு போறாங்கள் போல என்று படையினரின் தோல்விமுகத்துக்கு முன்னால் சனங்கள் நக்கலாக இவ்வாறு சொல்வதுண்டு. எவ்வளவு காலத்துக்குத்தான் சற்றும் மனந்தளராத விக்கிரமாதித்தன் போல படையினர் தலையைத் தொங்கப்போட்டுக் கொண்டு திரும்ப முடியும்.

 

இந்தமுறை வழமைபோன்று அணில் ஏறவிட்ட நாய்களாக திரும்புவதற்கு அவர்களுக்கு மனம் இருக்கவில்லை. "போரில் எவன் முந்துகிறானோ அவனுக்கே வெற்றிக்கான வாய்ப்பு அதிகம்." புலிகளின் தலைவர் அடிக்கடி உச்சரிக்கும் இந்த வார்த்தையினை மாவீரர் நாளில் தங்கள் மனதில் இருத்திய படையினர் மாலை 6 மணிக்குச் சற்று முன்னதாக பல்கலைக்கழகத்தினுள்ளும் மாணவர் விடுதிக்குள்ளும் பாய்ந்தனர்.


தாங்கள் முன்னரே புகுந்துவிட்டதால் இந்தமுறை மாவீரர் சுடரை மாணவர்கள் ஏற்றமுடியாது என்று

படைத்தரப்பு மனக்கணக்குப் போட்டது. ஆனால் படையினரின் இத்தகைய அத்துமீறலை மாணவர்கள் எதிர்பார்த்திருக்க வேண்டும்போலும். அவர்கள் தங்கள் கண்களுக்கு முன்னாலேயே படைகளின் முகத்தில் கரி படர்வதைப் பார்க்க விரும்பினர். பறந்தது "எஸ்.எம்.எஸ்." ஆண்கள் விடுதியில் படைகள் "பேன் பார்த்துக்கொண்டிருக்க" பெண்கள் விடுதியில் ஒளிர்ந்தன தீபங்கள்.

 

இந்த அவமானத்தை அவர்களால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. அதன் பின்னர் வெறி வந்தவர்கள் போல பெண்கள் விடுதிக்குள்ளும் பாய்ந்தார்கள்.  கண்ணில்பட்ட எல்லோரையும் பந்தாடினார்கள். பத்திரிகையாளர்களும் தப்பவில்லை. துப்பாக்கி முனையில் மாணவிகளை மிரட்டினார்கள்.


மாணவர் விடுதிக்குள் வேண்டா விருந்தாளிகள் நுழைந்ததைக் கண்டித்து அடுத்த நாள் நடந்தது ஆர்ப்பாட்டம். பதாகைகளுடன் மாணவர்கள் வீதியில் காலடி வைத்தபோது அதிகார ஏவலாளிகளால் அதைத் தாங்க முடியவில்லை. கொட்டன்களோடும், கொடுந் துவக்குகளோடும் சட்டென்று பாய்ந்தன படைகள். நட்ட நடு வீதியில் கொட்டுண்ட நெல்மணிச் சிதறல்கள் ஆகினர் மாணவர்.

 

ஆண் என்றும் பெண் என்றும் பாராது மூர்க்கத்தின் ஆவேசம் தொடர்ந்தது வீதியில். அனாதைகளாய் பாடப்புத்தகங்கள் படபடத்துக்கொண்டு இருந்தன. தமது இணையைத் தொலைத்துவிட்டு குவிந்து கிடந்தன ஒருநூறு ஒற்றைச் செருப்புகள். மீண்டும் ஒரு முள்ளிவாய்க்கால் மனத்திரையில்.


மாணவர்களைக் காக்கவேண்டிய மேய்ப்பர்கள் வரவே இல்லை. இளஇரத்தங்கள் துடித்தன, உடம்பெங்கும் தளிம்புகள் வலித்தன. வகுப்புப் புறக்கணிப்புக்கு விடுக்கப்பட்டது அழைப்பு. ஒரு மகத்தான எழுச்சிக்கான விதைப்பொன்று நடந்துகொண்டிருப்பதை மோப்பம் பிடித்துவிட்டது அரசு. விட்டால் நிலைமை பெரும் புரட்சியை உருவாக்கிவிடும் என்ற கலக்கம் அதிகாரத்தின் அடிவயிற்றில் உதித்தது. புரட்சியைக் கருச்சிதைவு செய்வது என்று முடிவாயிற்று.

 

மாணவர்களுக்கு வழி காட்டியவர்கள் அல்லது முன்னின்று அடி வாங்கியவர்கள் குறிவைக்கப்பட்டார்கள்.  "பெற்றோல் குண்டு வீசினார்கள். சுவர் ஒட்டி ஒட்டினார்கள்." இன்னும் புனைவுகளால் உருவான கைவிலங்குகள் மாணவர்களின் கைகளில் பிணைக்கப்பட்டன. மாணவர் எழுச்சியின் மையப் புள்ளிகள் அவர்கள்தான் என்று நம்பியது. புள்ளிகள் இருந்தால் தானே கோலம் வரைய முடியும்.


அழித்துவிட்டால் அவ்வளவுதான். அதுதான் அவர்களின் திட்டம். புள்ளிகளை அழிப்பது என்பது இப்போதைக்குச் சாத்தியமற்றது. அமெரிக்கா உள்ளிட்ட எல்லா நாடுகளும் கண்கொத்திப் பாம்புகளாகி விட்டன. ஒரு சின்ன அசைவும் அவர்களின் பார்வையில் இருந்து தப்ப முடியாது. மாணவர்களுக்கு ஓரு "பழைய பாணியில்' ஏதேனும் செய்துவிட்டால் ஜெனிவாவில் தொங்கிக்கொண்டு இருக்கும் சுருக்குக் கயிறு இன்னும் இறுகிவிடும்.

 

அழிப்பதற்குப் பதிலாக கொஞ்சம் அடக்கிவைப்போம் அல்லது அதட்டி வைப்போம் என்ற நினைப்பிலேயே மாணவர்கள் பயங்கரக் குற்றவாளிகளாக சித்திரிக்கப்பட்டனர்.
 

நடுச்சாமத்தில் நாயின் குரைப்பொலிகளை மிதித்துக்கொண்டு சப்பாத்துக் கால்கள், பாடப்புத்தகம் ஏந்தியவர்களைப் பெற்றோரிடம் இருந்து பிரித்து எடுத்து விலங்கிட்டு இழுத்துச் சென்றனர்.


அன்றைய கொடும் இருளில்  விலங்கிட்டுத் தூக்கிச்சென்ற தங்கள் பிள்ளைகளை முழுவதும்  காலன் நெருங்கிவிடக் கூடாது என்று கண்ணீரால் மன்றாடினர் பெற்றோர். அவர்களின் வீடுகள் கண்ணீர் வெள்ளத்தில்  மிதந்துகொண்டு இருந்தன. விடிகாலையில் ஓடிச்சென்றார்கள். சிறைக்கம்பிகளுக்குப் பின்னால் விலங்கிடப்பட்ட நிலையில் தம் பிள்ளைகள் உயிரோடு இருப்பதைக் கண்ட பின்னரே அவர்களுக்கு போன உயிர் மீள வந்தது.

 

மாணவர்கள் எழுச்சியை நாலு பேரைக் கைது செய்வதன் மூலம் ஒடுக்கிவிடலாம் என்று அதிகாரம் கணக்குப் போடுகிறது. ஆனால் உண்மை அதுவல்ல. வரலாறின் ஏராளமான செந்நிறப் பக்கங்கள் மாணவர் புரட்சிகளாலேயே நிறைந்து இருக்கின்றன. ஆட்டம் போட்ட கொடும் அரசுகளின் அச்சாணிகள்கூட ஆட்டம் கண்டன.


மாணவர் புரட்சிகளால் வீடுவந்து சேராது என்று எண்ணிய சிறுபிள்ளையின் வேளாண்மைகள் நாட்டின் தலைவிதியை மாற்றியது கண்கூடு. பிரான்ஸ், சீனா, ரஷ்யா என்று மாணவர்களின் புரட்சிகள் அந்த நாட்டு மக்களின் விடியலுக்கான முதல் அத்தியாயங்கள் விரிந்து இருந்தன. அங்கும் அதிகாரம் எழுச்சியின் மையப்புள்ளிகளைக் கருவறுத்தது ஒவ்வொரு புள்ளிகளும் விழவிழ, ஓராயிரம் புள்ளிகள் உற்பவிக்கத் தொடங்கின.

 

 

ஒளி உள்வரும் துவாரம் ஒன்றை அடைத்துவிட்டதாக அதிகாரம் நிம்மதி கொண்டு நிமிர்கையில் அதைவிடவும் பன்மடங்கு பெரிய துவாரங்கள் தோன்றியிருக்கும்.

 

அதிகாரத்தின் தோள்களில் ஆயுதங்களோடு முளைத்த ஆயிரமாயிரம் கரங்களாலும் மாணவர் சக்தி என்ற ஆதவனை மறைக்கவோ அழிக்கவோ முடியவில்லை.


கடைசியில் அதிகாரத்தின் கரங்கள் புரட்சியின் வெம்மையில் பொசுங்கியதாகவே வரலாறு எழுதிச்

செல்கிறது. வரலாற்றுக்கு எல்லாமே தெரியும். ஒன்றைத் தவிர, அது மன்னித்தல் என்பதுதான்.

ரமணா' படத்தில் வருகிற விஜயகாந்துக்கு மட்டுமல்லாமல் வரலாற்றுக்கும் "தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை மன்னிப்பு." வரலாற்றை மறந்துவிட்டு  முன்னைய காலத் தவறுகளிலிருந்து பாடம் படிக்காமல் மீளவும் அதேதவறுகளைச் செய்தவர்கள், செய்பவர்கள் வரலாற்றின் இரக்கப் பார்வைக்குள் எட்டுவதில்லை. அவர்களை காலவெள்ளத்தில் தூசிகளாக்கி விடுவதுதான் வரலாறு தரும் பரிசாக இருக்கிறது.
 

வலியின்றி வரலாறு இல்லை. வலிகள் எல்லாம் விடிவுகளுக்கானவை.


புதிய பிறப்பின் தொடக்கம் வலிதான். எந்த விலங்கிடலாலும் புரட்சிக்கு சிறையிடப்பட்டதில்லை. (இது பல்கலைக்கழக மாணவர்களை உசுப்பேற்றுவதற்காக எழுதப்படும் பத்தி அல்ல. உலகின் வரலாற்றுப் பாதையில் கடக்கப்பட்ட கணங்களின் அனுபவங்களிலிருந்து பிறந்த வார்த்தைகள் மாத்திரமே உண்மையின் ஒளிக்காக ஏங்குகின்ற சொற்கள். அவ்வளவுதான்) மீண்டும் ஒருமுறை வரலாற்றின் பக்கங்களில் மலம் கழித்துவிட்டு, அதிகாரம் மமதையுடன் மாணவர் எழுச்சியின் நான்கு புள்ளிகளைப் பதுக்க நினைக்கிறது.

 

ஆனால், ஒன்று நூறாகி, நூறு ஆயிரமாகி, ஆயிரம் இலட்சமாகி அந்தப் புள்ளிகள் விரிவடையப் போவது அதிகாரத்துக்குத் தெரியவேயில்லை. மமதையால் பார்வையற்றுப் போன அதிகாரத்தின் முன்னால் சிரித்தபடி தீர்ப்பிடக் காத்திருக்கிறாள் வரலாறு என்ற "கண்டிப்பான கிழவி.'

 

http://onlineuthayan.com/News_More.php?view=essay_more&id=2378742503236786

கிட்டுவைக் கொலை செய்வதற்கான எமது திட்டம் தனிநபர் பயங்கரவாதமே

தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) போராளிகளை கொன்றொழித்து தமிழீழ விடுதலை இயக்கத்தை (TELO) அழித்தொழிப்பதில் "வெற்றி" பெற்றிருந்த தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) தமது ஜனநாயக மறுப்பையும் பாசிசத்தன்மை கொண்ட போக்கையும் வெளிப்படுத்திக் கொண்டிருந்த அதேவேளை அத்தகைய செயற்பாடுகளை சமூகத்தின் அனைத்துப் பகுதியினர் மீதும் தொடர்வதை நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். ஆனால் ஈழவிடுதலைப் பேராட்டத்தின் மீதும் மக்கள் மீதும் உண்மையான அக்கறை கொண்டவர்களும் ஜனநாயக, முற்போக்கு சக்திகளும் தமிழீழ விடுதலைப் புலிகளின்(LTTE) ஜனநாயக மறுப்புக்கும் பாசிசப் போக்குக்கும் எதிராகப் போராட முன்வந்தனர். தமிழீழ விடுதலை இயக்க (TELO) அழிப்பைக் கண்டித்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (EPRLF) யாழ்ப்பாணத்தில் கண்டன ஊர்வலத்தை மேற்கொண்டது. தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE)ஜனநாயக விரோத, மனித உரிமை மீறல்களைக் கண்டித்தும் ஜனநாயகத்தை வலியுறுத்தியும் பல்வேறு அமைப்புக்கள் அறிக்கைகளை வெளியிட்டன. யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்குள் தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE) மேற்கொள்ளப்பட்ட அத்துமீறிய செயற்பாடுகளைக் கண்டித்தும், ஜனநாயக விரோதப் போக்கைக் கண்டித்தும் "யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் குழு"வினர் தமது துண்டுப்பிரசுரத்தை வெளியிட்டிருந்தனர்.

தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) அனைத்து ஜனநாயக விரோத செயல்களுக்கும் பாசிசப் போக்குக்கும் எதிராக வெகுஜன போராட்டங்களும் மாணவர் போராட்டங்களும் வெளிப்பட்டுக் கொண்டிருந்தன. ஆனால் ஆயுதபலத்துடன் திகழ்ந்த தமிழீழ விடுதலை இயக்கத்தையே (TELO) அழித்து "வெற்றிக்கொடி" நாட்டிவிட்டிருந்த தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு (LTTE) இத்தகைய ஊர்வலங்கள், போராட்டங்கள், அறிக்கைகள் போன்ற வெகுஜனப் போராட்டங்கள் எதுவும் ஒரு பொருட்டாக இருக்கவில்லை. மாறாக, தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE)தமது குறிக்கோளில் - ஜனநாயகத்தை மறுத்தல், தாமல்லாத அனைத்தையும் அழித்தொழித்தல் என்ற குறிக்கோளில் - தமது முழுக்கவனத்தையும் செலுத்தத் தொடங்கியிருந்தனர். ஈழவிடுதலைப் போராட்டத்தில் பெரும் பங்காற்றிக் கொண்டிருந்த யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் மத்தியிலிருந்து எழுந்துவரும் ஜனநாயக மறுப்புக்கு எதிரான போராட்டத்தை முளையிலேயே கிள்ளி எறிந்து தமது ஆதிக்கத்தைக் கொண்டுவருவதற்கான செயற்பாடுகளில் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) இறங்கினர்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஜனநாயகத்திற்கான போராட்டங்களையும், ஜனநாயகம் குறித்த கருத்துக்களையும் கண்டு அச்சம் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுக்கு தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE) எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன் மாணவர் போராட்டங்களில் ஈடுபடுவோர் மிரட்டல்களுக்கும் உள்ளானார்கள். ஆனால் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) மிரட்டல்களுக்கும் எச்சரிக்கைகளுக்கும் அஞ்சாமல் தமது போராட்டத்தை முன்னெடுத்துச் சென்றனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டம் தமக்கு விடுக்கப்படும் ஒரு சவாலாகவே தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) கணித்திருந்தனர்,

ராக்கிங்கில் ஈடுபட்டார்கள் என்ற எவ்வித ஆதாரமுமற்ற கூற்றின் அடிப்படையில் மலையக மற்றும் கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த பல்கலைக்கழக மாணவர்கள் விசாரணைகள் எதுவுமின்றி தமிழீழ விடுதலைப் புலிகளால் மிக மோசமாகத் தாக்கப்பட்டனர். இத்தாக்குதலுக்குள்ளான மலையக மற்றும் கிழக்கு மாகாண மாணவர்கள் தங்களுக்கு பாதுகாப்பு இல்லாத இவ்வாறான சூழலில் கல்வியைத் தொடர முடியாது என்று அஞ்சி, அவர்கள் தாங்கள் வேறு தென்னிலங்கை வளாகங்களுக்கு மாறிச் செல்வதே பாதுகாப்பானது என மற்றைய மாணவர்களோடு தங்களுக்கு நேர்ந்த கதி பற்றி தெரிவித்தனர். குறிப்பிட்ட மலையக மற்றும் கிழக்கிலங்கை மாணவர்களின் மேல் நடாத்தப்பட்ட இத்தாக்குதலின் விளைவாய் மலையக கிழக்கிலங்கை மாணவர்கள் இடம்மாறி செல்ல வேண்டியதில்லை. அவர்களது கல்வியை அவர்கள் எந்த அச்சமுமின்றி யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திலேயே தொடர வேண்டும். அது அவர்களது உரிமை. இந்த உரிமைக்காக போராடுவோம் என்று ஏனைய சக மாணவர்கள் அமைத்த குழுவுக்கு தலைமை தாங்கியவர் விஜிதரன். இந்த தாக்குதலுக்குள்ளான யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் சார்பில் அதனை எதிர்த்து நிற்பதற்கு அப்போதிருந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் மன்றம் மறுத்தபடியால் அதற்கு வெளியே கூட்டப்பட்ட மாணவர் போராட்டக் குழுவுக்கு தலைமை தாங்கிய வர்த்தகபீட மாணவனான மட்டக்களப்பைச் சேர்ந்த அருணகிரிநாதன் விஜிதரன் எவருக்கும் தெரியாதவாறு கடத்திச் செல்லப்பட்டிருந்தார்.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் அருணகிரிநாதன் விஜிதரன் கடத்திச் செல்லப்பட்டமையை எதிர்த்துக் கிளம்பிய வெகுஜனப் போராட்டங்கள் எழுச்சி கொண்டு யாழ்ப்பாண குடாநாடெங்கும் பரவின. பொதுமக்கள் கண்டன ஊர்வலங்கள், மறியல் போராட்டங்கள் என தமது எதிர்ப்புக்களை காட்டி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கு ஆதரவாக அணிதிரண்டனர். பாடசாலை மாணவர்கள் மறியல் போராட்டம், ஊர்வலம், வகுப்புக்களைப் பகிஸ்கரித்தல் போன்ற போராட்ட வடிவங்களினூடு தமது எதிர்ப்புக்களை வெளிப்படுத்தி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் போராட்ட முன்னெடுப்புக்கு மிகுந்த எழுச்சியோடு ஆதரவளித்தனர். பொதுமக்கள், மாணவர்கள், பொதுநிறுவனங்கள், சங்கங்கள் என திரண்ட ஆதரவினால் எழுச்சிபெற்ற இப்போராட்டங்கள் தமிழீழ விடுதலைப் புலிகளினதும் (LTTE) ஏனைய ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்ளினதும் படுகொலைகள், ஜனநாயக மறுப்புக்கள், கடத்தல், கொள்ளைச் சம்பவங்கள், இயக்க அழிப்புக்கள் போன்ற அனைத்து நடவடிக்கைகளுக்கும் எதிராகவே அமைந்திருந்தன. மக்களின் எழுச்சி கண்டு அச்சம் கொண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) ஆத்திரம் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் போராட்டத்தில் முன்னணியில் இருந்த மாணவர்கள் மரணதண்டனைக்குரியவர்கள் என்ற மிரட்டலை நோக்கி சென்றிருந்தது.

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் ஒழுங்கு செய்யப்பட்ட பகிரங்கக் கூட்டத்தில் மட்டக்களப்பிலிருந்து வந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் அருணகிரிநாதன் விஜிதரனுடைய பெற்றோர் அனைத்து மாணவர்கள் மத்தியிலும் தமது மகனை விடுவித்துத் தரும்படி மிகவும் தாழ்மையுடனும் மன்றாட்டமாகவும் வேண்டிக் கொண்டனர். யாழ்ப்பாண குடாநாடு முழுவதும் இராணுவப் பிரசன்னமே இல்லாது ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களின் முற்றுமுழுதான கட்டுப்பாட்டில் இருந்தவேளை அருணகிரிநாதன் விஜிதரன் ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களில் ஏதோ ஒன்றினால்தான் கடத்தப்பட்டிருக்க முடியும்.

அருணகிரிநாதன் விஜிதரன்,  பகிடிவதையில் ஈடுபட்டார்கள் என்ற எவ்வித ஆதாரமுமற்ற கூற்றின் அடிப்படையில், தமிழீழ விடுதலைப் புலிகளால் தாக்கப்பட்ட மாணவர்களுக்கு குரல் கொடுக்கும் முகமாக உருவாக்கப்பட்ட மாணவர் குழுவிற்கு தலைமை தாங்கினார் என்பதற்காக தமிழீழ விடுதலைப் புலிகளே (LTTE) அருணகிரிநாதன் விஜிதரனை கடத்தியிருக்கலாம் என பலத்த சந்தேகம் நிலவியது. எனினும் அருணகிரிநாதன் விஜிதரனை விடுவித்துத் தரும்படி பொதுமக்களினதும் மாணவர்களினதும் கோரிக்கை எல்லா இயக்கங்களையும் நோக்கியே முன்வைக்கப்பட்டது. இந்தக் கோரிக்கைகள் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் தயாரிக்கப்பட்டாலும் ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்கள் மீதான பொதுமக்களின் அதிருப்திகளையும் வெளிப்படுத்தியதோடு மக்களின் ஜனநாயக உரிமைகளுக்கானதாகவே இருந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் விசாரிக்கப்படுவதாகவிருப்பின் பல்கலைக்கழக நிர்வாகத்தின் அனுமதியின் அடிப்படையில் விசாரிக்கப்பட வேண்டும், அவர்கள் மேலுள்ள குற்றங்கள் என்னவென்பது அறிவிக்கப்பட வேண்டும் என்பது போன்ற மாணவர்களின் உரிமைகளையும் உள்ளடக்கியிருந்தது. இவைகளை மக்களுக்கும் மாணவர்களுக்கும் உறுதிப்படுத்துமாறு அனைத்து ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்கும் விடுக்கப்பட்ட கோரிக்கையானது தழிழீழ விடுதலைப் புலிகளைப் (LTTE) பொறுத்தவரை சாவுமணியாகவே ஒலித்தது.

இதனால் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் அருணகிரிநாதன் விஜிதரன் கடத்திச் செல்லப்பட்டமை யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் முறுகல் நிலையைத் தோற்றுவித்துவிட்டிருந்தது. யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் அருணகிரிநாதன் விஜிதரனை விடுதலை செய்யக்கோரி யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் போராட்டத்தில் இறங்கினர். யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் அருணகிரிநாதன் விஜிதரனை விடுதலை செய்யக்கோரி சாகும்வரை உண்ணாவிரதம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆரம்பமானது.

018.jpg

பூநகரியைச் சேர்ந்த யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் விமலேஸ்வரன் தலைமையில் ஆரம்பிக்கப்பட்ட இப்போராட்டத்தில் குகன்,செல்வநாயகம், அவ்வை, விஜயகுமாரி உட்பட ஜனநாயகத்துக்காகக் குரல்கொடுக்கும் பல்கலைக்கழக மாணவர்கள் அனைவரும் இணைந்து கொண்டிருந்தனர். யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஜனநாயகத்திற்கான மாணவர் போராட்டம் முல்லைத்தீவு உட்பட ஏனைய மாவட்டங்களுக்கும் பரவத் தொடங்கியது. இலங்கை அரசின் ஜனநாயக மறுப்புக்கும் இனவொடுக்குமுறைக்குமெதிரான போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் எப்படி முன்னணிப்பாத்திரம் வகித்திருந்தனரோ அதேபோல் இப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளினதும் (LTTE) அனைத்து ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களினதும் ஜனநாயக மறுப்புக்கும் எதிரான போராட்டத்தில் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் முன்னணிப் பாத்திரம் வகிக்கலானார்கள்.

096.jpg

086.jpg

041.jpg

136.jpg

138.jpg

070.jpg

016.jpg

தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) ஜனநாயக மறுப்புக்கும், பாசிசப் போக்குக்கும் எதிராக வெகுஜனப் போராட்டங்களும் மாணவர் போராட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருந்தவேளையில் "தீப்பொறி" செயற்குழு கூடியது. தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE) தமிழீழ விடுதலை இயக்கம் (TELO) அழிக்கப்பட்டமை, யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவன் அருணகிரிநாதன் விஜிதரன் கடத்தல், யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களின் ஜனநாயகத்துக்கான போராட்டம் என்பன குறித்து "தீப்பொறி" செயற்குழுவுக்குள் விவாதம் ஆரம்பமானது. குறிப்பாக, ஈழவிடுதலைப் போராட்டத்தின் எதிர்காலத்தில் முற்போக்கு, ஜனநாயக சக்திகள் தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) எப்படி முகம் கொடுத்து முன்னேறுவது என்பது குறித்து கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.

தமிழீழ விடுதலை இயக்கப் போராளிகளைக் (TELO) கொன்றொழித்து அவர்களை தெருக்களில் எரியூட்டி கொலைவெறித்தனம் புரிந்தமை, தமது கருத்துக்கு மாற்றான கருத்தாளர்களையும் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடுபவர்களையும் கொலைசெய்தல் போன்ற அனைத்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) பாசிசப் போக்கின் வெளிப்பாடே என "தீப்பொறி" செயற்குழுவில் அனவைரும் கருத்துத் தெரிவித்திருந்தனர். இத்தகைய பாசிசப் போக்கு ஈழவிடுதலைப் போராட்டத்தில் ஏனைய ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களை அழிப்பதை நோக்கியதான ஆபத்தானதொன்று எனவும், இப்பாசிசப் போக்கை முற்போக்கு சக்திகளாகிய நாம் முகம் கொடுத்து முன்னேறவேண்டியதொன்றென்றும் "தீப்பொறி" செயற்குழு இனம்கண்டது.

இப்பொழுது எம்முன் எழுந்த கேள்வி என்னவெனில் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) பாசிசப் போக்கை எப்படி எதிர்கொண்டு முன்னேறுவது என்பதாக இருந்தது. தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) ஜனநாயக விரோத, பாசிசப் போக்கை அம்பலப்படுத்த வேண்டும் என்ற கருத்தை "தீப்பொறி" செயற்குழுவில் அங்கம் வகித்த அனைவரும் முன்வைத்தபோதும் அத்தகையதொரு செயற்பாட்டை பகிரங்கமாக முன்னெடுத்க முடியாது என்பதையும் நாம் உணர்ந்திருந்தோம். ஏனெனில், தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) கொலைக்கரங்களின் முன் பகிரங்கமாக அவர்களை விமர்சிப்பது நாம் தற்கொலை செய்வதற்கு ஒப்பான செயலே.

தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) அம்பலப்படுத்துவது அவர்களது ஜனநாயக விரோத, பாசிசப் போக்கை அம்பலப்படுத்துவது குறித்து இரண்டுவிதமான கருத்துக்கள் "தீப்பொறி" செயற்குழுவுக்குள் முன்வைக்கப்பட்டன. நாம் தளத்திலேயே தங்கியிருந்து, குறிப்பாக யாழ்ப்பாணத்திலேயே தங்கியிருந்து இரகசிய செயற்பாடுகள் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) அரசியல்ரீதியாக அம்பலப்படுத்துவதென்றும், தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) ஜனநாயக விரோத, பாசிசப் போக்குகளை அம்பலப்படுத்தும் துண்டுப்பிரசுரங்களை யாழ்ப்பாணதிலேயே றோனியோ இயந்திரத்தின் உதவியுடன் அச்சிட்டு இரகசியமாக மக்கள் மத்தியில் விநியோகிப்பதென்றும் ஒரு கருத்து முன்வைக்கப்பட்டிருந்தது. நாம் தளத்திலேயே தங்கி நிற்கவேண்டும் என்பதற்கு ஆதரவாக, கடந்தகாலத்தில் ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்கள் தவறான போக்கில் சென்றமைக்கு மக்களிலிருந்து அந்நியப்பட்டு இந்தியாவில் தங்கியிருந்தது தான் காரணம் என்று வாதிக்கப்பட்டது.

எமது அமைப்பின் உறுப்பினர்கள் சிலரையும் எமது செயற்பாடுகள் சிலவற்றையும் வடக்கு-கிழக்குக்கு வெளியே, குறிப்பாக தென்னிலங்கைக்கு அல்லது இந்தியாவுக்கு நகர்த்துவதன் மூலம் ஒரு பத்திரிகையை வெளிக்கொண்டு வருவதுடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) ஜனநாயக விரோத, பாசிசப் போக்குகளை அரசியல் ரீதியாக அம்பலப்படுத்தி துண்டுப்பிரசுரங்களை வெளிக்கொணர்வது அவசியம் என்ற கருத்து என்னால் முன்வைக்கப்பட்டிருந்தது. காரணம், நாம் புளொட்டில் செயற்பட்ட காலங்களிலும் சரி, "தீப்பொறி"க் குழுவாகச் செயற்பட்ட காலங்களிலும் சரி, மக்களாலும் தமிழீழ விடுதலைப் புலிகளாலும் (LTTE) நன்கு அறியப்பட்டவர்களாக இருந்தோம். இதனால் நாம் யாழ்ப்பாணத்தில் தங்கியிருந்து இரகசிய செயற்பாடுகளில் ஈடுபடுவதென்பது தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE) இலகுவாக இனம்காணப்படுவதற்கும், எம்மை அழித்தொழிப்பதற்குமே ஏதுவாக அமையும். எனவே, நாம் மக்களிடமிருந்து அந்தியப்படாமல் மக்கள் மத்தியிலேயே இருக்கவேண்டும் எனக் கூறிக்கொண்டு, யாழ்ப்பாணத்துக்குள்ளேயே எமது செயற்பாடுகளை குறுக்கிக் கொண்டவர்களாய் திட்டமிடுவதானது உண்மையிலேயே ஒரு இரகசிய செயற்பாடாக இருக்கமுடியாது என்பதோடு ஆபத்து நிறைந்ததொன்றுமாகும்.

ஏனைய ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்கள் மக்கள் மத்தியிலிருந்து அந்நியப்பட்டு இந்தியாவில் தமது செயற்பாடுகளை குறுக்கிக் கொண்டதால்தான் தவறான போக்குக் கொண்டவையாக விளங்கின என்ற வாதமும் கூட முழுமையாக ஏற்றுக்கொள்ளக் கூடியதொன்றல்ல. ஏனெனில் அனைத்து ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களின் தவறானது வெறுமனே மக்களிலிருந்து அந்நியப்பட்டு இந்தியாவில் தங்கியிருந்ததால் மட்டும் ஏற்பட்டதொன்றல்ல. மாறாக, அனைத்து ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்கள் மத்தியிலும் காணப்பட்ட அரசியல் வறுமையே அவற்றின் தவறான போக்குகளுக்கான பிரதான காரணியாக விளங்கியிருந்தது.

தளத்தில் இருந்தவாறே தமிழீழ விடுதலைப் புலிகளை (LTTE) அரசியல்ரீதியில் அம்பலப்படுத்துவது என "தீப்பொறி" செயற்குழுவின் பெரும்பான்மை முடிவெடுத்தது. அத்துடன் தமிழீழ விடுதலை இயக்க (TELO) போராளிகளை யாழ்ப்பாணத்தில் கொன்றழிக்க தலைமை தாங்கிய தமிழீழ வீடுதலைப் புலிகள் (LTTE) இயக்கத்தின் யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளர் கிட்டுவை (சதாசிவம் கிருஸ்ணகுமார்) தொடர்ந்தும் இத்தகைய நடவடிக்கைகளை செய்ய அனுமதிக்கப்போகின்றோமா என்ற கேள்வி காந்தனால் (ரகுமான் ஜான்) "தீப்பொறி" செயற்குழுவில் எழுப்பப்பட்டது.

தமிழீழ விடுதலை இயக்க (TELO) போராளிகள் மீது கொடூரம் புரிந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளர் கிட்டுவை (சதாசிவம் கிருஸ்ணகுமார்) நாம் விட்டுவைப்பது எதிர்காலத்தில் எமக்கும் கூட ஆபத்தானது என்று கருத்து முன்வைக்கப்பட்டது. எனவே கிட்டுவை (சதாசிவம் கிருஸ்ணகுமார்) கொலை செய்வதுதான் எமக்கிருக்கும் ஒரேவழி என வாதிக்கப்பட்டது. காந்தனின் (ரகுமான் ஜான்) இக்கருத்தை செயற்குழுவில் சிலர் ஆதரித்துப் பேசியதுடன் சிலர் இத்தகையதோர் நடவடிக்கை தேவையானதுதானா எனக் கேள்விகள் எழுப்பினர். காந்தனால் (ரகுமான் ஜான்) முன்வைக்கப்பட்ட கருத்துடன் இது குறித்து "தீப்பொறி" செயற்குழுவுக்குள் விவாதம் சூடுபிடிக்கத் தொடங்கியது.

தமிழீழ விடுதலை இயக்கத்தை (TELO) அழிப்பதில் தலைமை வகித்த தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளர் கிட்டுவை (சதாசிவம் கிருஸ்ணகுமார்) கொலை செய்வதுதான் எதிர்காலத்தில் எமக்கு வரவிருக்கும் ஆபத்தைத் தவிர்ப்பதற்கான ஒரே வழி என்ற கருத்தானது "தீப்பொறி" செயற்குழுவில் அங்கம் வகிப்பவர்கள் பலர் பிரச்சனைகளை அரசியல் ரீதியாக ஆரோக்கியமாகப் பார்க்கத் தவறுகின்றனர் என்பதை எடுத்துக் காட்டியது.

நாம் புளொட்டிலிருந்து (PLOTE) வெளியேறிய பின் உமாமகேஸ்வரனைக் கொலை செய்வதற்கான திட்டமும், உமாமகேஸ்வரனைக் கொலை செய்வதற்கு தலைமைதாங்கிச் செல்வதற்கு "தீப்பொறி" செயற்குழுவால் நியமிக்கப்பட்ட கண்ணாடிச்சந்திரன் "தீப்பொறி"க் குழுவிலிருந்து வெளியேறியபோது கண்ணாடிச்சந்திரன் உமாமகேஸ்வரனைக் கொலைசெய்வது குறித்த இரகசியத்தைப் பகிரங்கப்படுத்தினால் கண்ணாடிச்சந்திரனை என்ன செய்வது என்று செயற்குழுவில் எழுப்பப்பட்ட கேள்வியும், இப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளர் கிட்டுவை (சதாசிவம் கிருஸ்ணகுமார்) கொலை செய்வது குறித்த செயற்குழு அங்கத்தவர்களின் கருத்துக்கள் என்பனவெல்லாம் நாம் எத்தகையதொரு அமைப்பை உருவாக்க முற்படுகிறோம், எத்தகையதொரு அரசியல் கண்ணோட்டத்தை நடைமுறையில் கொண்டவர்களாக இருக்கிறோம் என்பதை ஐயத்திற்கிடமின்றி எடுத்துக் காட்டியிருந்தன.

நாம் புளொட்டில் (PLOTE) செயற்படும்போது தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) தனிநபர் பயங்கரவாத நடவடிக்கைகள் ஒவ்வொன்றையும் ஈவிரக்கமின்றி விமர்சித்து வந்ததோடு அத்தனிநபர் பயங்கரவாதம் ஒரு புரட்சிகரப் போராட்டவழிமுறைக்கு எதிரானதென்பதையும், தனிநபர் பயங்கரவாத போராட்ட வழிமுறைகள் ஒரு போராட்டத்தின் வெற்றிக்கு வழிகோலாது என்பதுடன் சமுதாயத்தில் எந்தவிதமான மாற்றத்தையும் ஏற்படுத்தப்போவதில்லை என்றும் கூறி வந்தோம். இதே தனிநபர் பயங்கரவாதத்தையும் அராஜகத்தையும் புளொட்டின் (PLOTE) செயலதிபர் உமாமகேஸ்வரன் தனது அரசியலாகக் கொண்டபோது புளொட்டிலிருந்து (PLOTE) வெளியேறி உமாமகேஸ்வரனின் எதிர்ப்புரட்சிகர அரசியலை விமர்சித்த நாம் புரட்சிகர அரசியலை மேற்கொள்ளப் போவதாகவும் புரட்சிகர அமைப்பை உருவாக்கப் போவதாகவும் கூறினோம். ஈழவிடுதலைப் போராட்ட வரலாற்றின் ஆரம்ப காலத்திலிருந்து ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்குள் தொடர்ந்துவந்து கொண்டிருந்த தனிநபர் பயங்கரவாதத்தையும், சுத்த இராணுவக் கண்ணோட்டத்தையும், எதிர்ப்புரட்சி அரசியலையும் கடந்து சென்று ஒரு புரட்சிகர அமைப்பை உருவாக்குவதற்காகவே எமது கடந்தகாலத தவறுகளை நாம் சுயவிமர்சனம் செய்திருந்தோம். ஈழவிடுதலைப் போராட்ட இயக்கங்களின் எதிர்ப்புரட்சிகர அரசியலை விமர்சித்த நாம் புரட்சிகர அரசியலை நோக்கி முன்னேற முயன்றோம். இதனடிப்படையில் நாம் அனைவரும் அரசியல் நூல்களைக் கற்கத் தொடங்கி அரசியல்ரீதியில் எம்மை வளர்த்துக் கொண்டிருந்த அதேவேளை "அரசியலும் இராணுவமும்" என்று சிறு கையடக்க தொகுப்பையும் கூட வெளியிட்டிருந்தோம்.

ஆனால் இபபொழுதோ "தீப்பொறி" செயற்குழுவில் அங்கம் வகித்தவர்கள் பலரின் கருத்துக்களும் "தீப்பொறி" செயற்குழுவின் தொடர்ச்சியான முடிவுகளும் நடைமுறையில் நாம் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) மற்றும் புளொட்டினால் (PLOTE) பின்பற்றப்பட்டு வந்த தனிநபர் பயங்கரவாதம் என்கின்ற அதே பாதையில் கால்பதிக்கத் தொடங்கிவிட்டதையே காட்டி நின்றது. உமாமகேஸ்வரனைக் கொலை செய்வதற்கான செயற்குழுவின் திட்டம், கண்ணாடிச் சந்திரன் உமாமகேஸ்வரன் கொலைத்திட்டம் பற்றிய இரகசியத்தை வெளியிட்டால் கண்ணாடிச்சந்திரனை என்ன செய்வதென்ற கேள்வி என்பனவற்றுக்கூடாக இப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளர் கிட்டுவைக் (சதாசிவம் கிருஸ்ணகுமார்) கொலைசெய்வதற்கான திட்டம் என நாமும் கூட தனிநபர் பயங்கரவாதம் என்ற சகதிக்குள் அல்லவா கால்பதித்து நிற்கின்றோம். ஆம், நாம் வரலாற்றில் மீண்டும் தவறிழைக்கின்றோம் என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது.

இத்தனை வருடகால ஈழவிடுதலைப் போராட்டத்தின் கொடிய, கசப்பான அனுபவங்களுக்கும் இழப்புக்களுக்கும் பின்பும் மீண்டும் தவறானதொரு பாதையை - அழிவுப் பாதையை - தேர்ந்தெடுக்கப்போகின்றோமா அல்லது சரியானதொரு பாதையை – புரட்சிகரப் பாதையை – தேர்ந்தெடுக்கப் போகின்றோமா என்பதை நாம் தீர்மானிக்க வேண்டியவாகளாக இருந்தோம்.

உமாமகேஸ்வரனைக் கொலை செய்வதற்கான திட்டத்தின் போதும், அத்திட்டத்தை "தீப்பொறி" குழுவிலிருந்து வெளியேறிவிட்டிருந்த கண்ணாடிச்சந்திரன் பகிரங்கப்படுத்தினால் என்னசெய்வது என்று செயற்குழுவில் கேள்வி எழுப்பப்பட்ட போதும் நாம் தவறுவிடுகிறோம் என்பதை உணர்ந்திருந்தும் "தீப்பொறி" செயற்குழுவில் எனது கருத்தை தெரிவிக்காமல் மௌனமாக இருந்ததன் மூலம் பெரும் தவறிழைத்திருந்தேன்.

ஆனால் இப்பொழுது "தீப்பொறி" செயற்குழுவுக்குள் தொடர்ந்து கொண்டிருக்கும் தவறான போக்குகளை நிறுத்தவேண்டி செயற்குழுவுக்குள் காந்தனால் (ரகுமான் ஜான்) முன்வைக்கப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE)யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளர் கிட்டுவை (சதாசிவம் கிருஸ்ணகுமார்) கொலை செய்ய வேண்டும் என்ற தவறான ஒரு கருத்துக்கெதிராக, தவறானதொரு அரசியலுக்கெதிராகப் பேசவேண்டியவனாக இருந்தேன்.

தமிழீழ விடுதலை இயக்கப் (TELO)போராளிகளைக் கொன்றழிக்கத் தலைமை தாங்கிய தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளர் கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார்) எதிர்காலத்தில் எம்மைக் கொன்றழிக்கலாம் என்பதற்காக கொலை செய்யவேண்டும் என்ற கருத்து தவறானது என்று "தீப்பொறி" செயற்குழுவில் வாதிட்டேன். எம்மை முற்போக்காளர்களாகக் இனம்காட்டிக்கொண்டு, புரட்சிகர அமைப்பொன்றை உருவாக்கப் போவதாகக் கூறிக்கொண்டு தனிநபர்களை கொலை செய்வதன் மூலம் ஈழவிடுதலைப் போராட்டத்திலோ அல்லது சமுதாயத்திலோ மாற்றத்தை ஏற்படுத்தலாம் என்று கருதுவதானது தனிநபர் பயங்கரவாதமேதான் என்றேன். தமிழீழ விடுதலைப் புலிகளால் (LTTE) மேற்கொள்ளப்பட்ட தமிழீழ விடுதலை இயக்க (TELO) அழிப்பானது கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார்) என்ற தனி நபரின் முடிவோ அல்லது நடவடிக்கையோ அல்ல, தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) என்ற ஒரு இயக்கத்தின் அரசியல் போக்காகவே இது இனம் காணப்பட வேண்டும். எனவே, நாம் செய்ய வேண்டியது தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) அரசியலை - தனிநபர் பயங்கரவாதமும், சுத்த இராணுவக் கண்ணோட்டமும், பாசிசப் போக்குக்ம் கொண்ட அரசியலை - மக்கள் மத்தியில் அம்பலப்படுத்த வேண்டும், மக்களை அணி திரட்டி அதற்கு எதிராகப் போராட வைக்க வேண்டும். இதன் மூலமே தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) என்ற இயக்கத்தை அரசியல் ரீதியில் பலம்மற்றதாகச் செய்வதுடன் அவர்களது ஜனநாயக விரோத பாசிசப் போக்கை முடிவுக்குக் கொண்டுவர முடியுமே தவிர ஒரு இயக்கத்தின் தனியொரு நபரை - கிட்டுவை - அல்லது நபர்களை படுகொலை செய்வதன் மூலமாக அல்ல. அத்துடன் புளொட்டிலிருந்து (PLOTE) வெளியேறி "தீப்பொறி"க் குழுவாக செயற்பட ஆரம்பித்த நாம், எமது கொள்கையை உருவாக்காமல், அந்தக் கொள்கையின் அடிப்படையில் ஒரு வேலைத்திட்டத்தை முன்வைக்காமல், எதிர்காலம் பற்றிய திட்டம் எதுவும் எம்மிடமில்லாமல் இருக்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளர் கிட்டுவைக் (சதாசிவம் கிருஸ்ணகுமார்) கொலை செய்வதான கருத்து தவறானது மட்டுமல்ல எம்மால் முன்னெடுக்கப்படக் கூடாதது என்று வாதிட்டேன்.

நீண்ட விவாதம் தொடர்ந்து கொண்டிருந்தது. "தீப்பொறி" செயற்குழுவில் அங்கம் வகித்தவர்கள் தமது கருத்துக்களையும் வாதங்களையும் முன்வைத்துக் கொண்டிருந்தனர். "தீப்பொறி" செயற்குழுவில் பெரும்பான்மையானவர்களின் கருத்து தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளர் கிட்டு (சதாசிவம் கிருஸ்ணகுமார்) கொல்லப்பட வேண்டும் என்பதற்கு ஆதரவாகவே இருந்தது.

ஈழ விடுதலைப் போராட்ட இயக்கங்களுக்குள்ளும், ஈழவிடுதலைப் போராளிகள் மத்தியிலும் காணப்பட்ட அரசியல் வறுமை தனிநபர் பயங்கரவாதத்தையும், சுத்த இராணுவக கண்ணோட்டத்தையும் நோக்கி இட்டுச்சென்றது என்பதுதான் உண்மை. ஆனால் புரட்சிகர அரசியலைக் கற்றுக்கொண்டிருந்த நாம், அரசியல் ரீதியாக வளர்ச்சியடைந்து கொண்டிருந்த நாம், எம்மை முற்போக்காளர்கள் என்று கூறிக்கொண்டு இப்பொழுது தனிநபர் பயஙகரவாதம் என்ற பாதையை நோக்கி சென்று கொண்டிருந்தோம். நாம் சொல்லளவில் தனிநபர் பயங்கரவாதத்தை எதிர்ப்பவர்களாகவும், நடைமுறையில் தனிநபர் பயங்கரவாதத்தைப் பின்பற்றுபவர்களாகவும் காணப்பட்டோம். "தீப்பொறி" செயற்குழுவின் விவாதத்தின் முடிவில் தமிழீழ விடுதலைப் புலிகளின் (LTTE) யாழ்ப்பாண மாவட்ட பொறுப்பாளர் கிட்டுவை (சதாசிவம் கிருஸ்ணகுமார்) கொலை செய்வது என்ற திட்டம் செயற்குழுவில் பெரும்பான்மை அங்கத்தவர்களால் முடிவானது. ஆனால் இத்திட்டமானது "தீப்பொறி" செயற்குழு அங்கத்தவர்கள் தவிர்ந்த கீழணி அங்கத்தவர்கள் எவருக்கும் தெரிவிக்கப்பட்டிருக்கவில்லை.

(தொடரும்)

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.