Jump to content

கருத்துக்களக் குழுமங்கள்


Recommended Posts

பதியப்பட்டது

அடிப்படைக் குழுமங்கள்

[கருத்துகள நோக்கர்கள்]

இவர்கள் யாழ் கருத்துக்களத்தில் உறுப்பினர்களாக இணையாது, பார்வையாளர் மட்டத்தில் மட்டும் இருப்பவர்கள் - கருத்துக்களத்தில் இணைக்கப்படும் ஆக்கங்களை வாசிப்பவர்கள்.

இவர்களுக்கு "யாழ் உறவுகள்" பகுதியில், "யாழ் செயலரங்கம், யாழ் நாற்சந்தி" ஆகிய பிரிவுகளைப் பார்ப்பதற்கும், வாசிப்பதற்கும், எழுதுவதற்குமான அனுமதி இல்லை.

மற்றும் "யாழ் உறவுகள்" பகுதியில், "யாழ் தரவிறக்கம்" பிரிவினைப் பார்ப்பதற்கான அனுமதி உள்ளது - ஆனால் வாசிப்பதற்கும், எழுதுவதற்குமான அனுமதி இல்லை.

அதேபோல் ஏனைய அனைத்துப் பகுதிகளையும் பார்ப்பதற்கும், வாசிப்பதற்கும் அனுமதி உள்ளது - ஆனால் புதிய தலைப்பினைத் தொடங்குவதற்கும், ஏற்கனவே உள்ள தலைப்புக்கு பதில் எழுதுவதற்கும் அனுமதி இல்லை.

[விண்ணப்பித்தோர்]

இவர்கள் யாழ் கருத்துக்களத்தில் இணைவதற்கு விண்ணப்பித்தவர்கள். கருத்துக்களத்தில் பதிவு செய்தபின் இவர்களுக்கு - இவர்கள் பதிவு செய்யும்போது கொடுத்த மின்னஞ்சல் முகவரிக்கு ஒரு உறுதிப்படுத்தல் மின்னஞ்சல் அனுப்பப்படும். அந்த மின்னஞ்சலில் உள்ள தொடுப்பை அழுத்துவதன் மூலம், தாம் கருத்துக்களத்தில் பதிவு செய்தமையை உறுதிப்படுத்திக்கொள்ளலாம். அதன் பின்னர் கருத்துக்கள நிர்வாகத்தால் அவர்களது விண்ணப்பம் ஏற்கப்பட்டு, யாழ் கருத்துக்கள உறுப்பினர்களாக அனுமதிக்கப்படுவர்.

[புதிய உறுப்பினர்கள்]

இவர்கள் யாழ் கருத்துக்களத்தில் புதிதாக இணையும் உறுப்பினர்கள். அதாவது, பதிவு செய்தவர்களின் விண்ணப்பம் ஏற்கப்பட்டு அனுமதிக்கப்பட்ட உறுப்பினர்கள்.

இவர்களுக்கு "யாழ் இனிது" பகுதியில் உள்ள "யாழ் அரிச்சுவடி, யாழ் உறவோசை" ஆகிய பிரிவுகளில் மட்டுமே புதிய தலைப்பினைத் தொடங்குவதற்கும், ஏற்கனவே உள்ள தலைப்புக்கு பதில் எழுதுவதற்கும் அனுமதி உள்ளது.

அது தவிர "யாழ் உறவுகள்" பகுதியில், "யாழ் செயலரங்கம், யாழ் நாற்சந்தி, யாழ் தரவிறக்கம்" ஆகிய பிரிவுகளைப் பார்ப்பதற்கான அனுமதி உள்ளது - ஆனால் வாசிப்பதற்கும், எழுதுவதற்குமான அனுமதி இல்லை.

அத்தோடு, ஏனைய அனைத்துப் பகுதிகளையும் பார்ப்பதற்கும், வாசிப்பதற்கும் அனுமதி உள்ளது. ஆனால் புதிய தலைப்பினைத் தொடங்குவதற்கும், ஏற்கனவே உள்ள தலைப்புக்கு பதில் எழுதுவதற்கும் அனுமதி இல்லை.

[கருத்துக்கள உறவுகள்]

யாழ் கருத்துக்களத்தில் புதிதாக இணைந்து, "யாழ் இனிது" பகுதியில் உள்ள "யாழ் அரிச்சுவடி" பிரிவில் தமது அறிமுகத்தையும் (கட்டாயம்), "யாழ் உறவோசை" பிரிவில் யாழ் இணையம் பற்றிய கருத்துக்களையும் (விரும்பின்) எழுதிய பின்னர், கருத்துக்கள நிர்வாகத்தால் முடிவெடுக்கப்பட்டு வழங்கப்படும் அங்கத்துவ நிலை.

இவர்களுக்கு ஏனைய அனைத்துப் பகுதிகளிலும் பார்ப்பதற்கும், வாசிப்பதற்கும், எழுதுவதற்குமான முழுமையான அனுமதி உள்ளது. "யாழ் இனிது" பகுதியில் உள்ள "யாழ் முரசம்" பிரிவில் புதிய தலைப்பினைத் தொடங்குவதற்கான அனுமதி இவர்களுக்கு இல்லை. அப் பிரிவில் கருத்துக்கள நிர்வாகத்தினர் மட்டுமே புதிய தலைப்பினைத் தொடங்க முடியும்.

கருத்துக்கள உறவுகள் நிலையில் இருப்பவர்கள் தாங்கள் எழுதும் கருத்துக்களில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான அனுமதி உள்ளது. ஒருவர் தான் எழுதிய கருத்தில் உள்ள இலக்கணப் பிழைகளை (எழுத்துப்பிழை, சொற்பிழை, வசன அமைப்புப் பிழை) திருத்துவதற்கும், தான் எழுதிய கருத்தில் மேலதிக ஆவணங்களை இணைப்பதற்கும் இதனைப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஒருவர் தனது கருத்தை எழுதியதன் பின் - மற்றவர்கள் அவரின் கருத்துக்களுக்கு பதிலளிக்காத வரை - அவர் தன் கருத்தில் திருத்தம் செய்வதற்கான அனுமதி உள்ளது. ஆனால், எழுதப்பட்ட கருத்துக்கு ஏனையவர்கள் பதிலெழுதிய பின்னர் - அந்தக் கருத்தை முற்றாக நீக்குவதற்கோ, அந்தக் கருத்தின் உள்ளடக்கப் பொருளை மாற்றுவதற்கோ அனுமதியில்லை. (எனவே, ஒரு கருத்தை எழுதுவதற்கு முதல் சிந்தித்து எழுதவும்.)

[கருத்துக்கள நிர்வாகம்]

யாழ் இணைய பொறுப்பாளர்களால் கருத்துக்களத்தை மட்டுறுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இவர்கள். கருத்துக்களத்தின் அனைத்துப் பகுதிகளையும் பார்வையிடவும், வாசிக்கவும், புதிய தலைப்பைத் தொடங்கவும், பதில் கருத்தெழுதவும், அனைத்து உறுப்பினர்களதும் கருத்துக்களை மட்டுறுத்தவும் முடியும்.

கருத்துக்கள உறவுகள் குழுமத்துள் இணைக்கப்படுவதற்கான நிபந்தனைகள்:

புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணையும் உறுப்பினர்கள் "யாழ் இனிது" பகுதியில் உள்ள "யாழ் அரிச்சுவடி" பகுதியில் தம்மைப் பற்றிய அறிமுகத்தை விளக்கமாக முன்வைக்கவேண்டும். அதாவது "யாழ் அரிச்சுவடி" பகுதியில் புதிய தலைப்பு ஒன்றினை தொடங்கவேண்டும். தமிழில் தட்டச்சு செய்து எழுதத் தெரியாதவர்கள், தமது அறிமுகத் தலைப்பில் எழுதிப் பழகலாம்.

அறிமுகம் என்றதும் உங்கள் பற்றிய தனிப்பட்ட விபரங்களைத் தரவேண்டும் என்று கட்டாயமல்ல. ஆனால், ஓரு வரி அறிமுகமாக அல்லாமல் விரிவான அறிமுகமாக அது அமைதல் வேண்டும். உதாரணமாக: நீங்கள் யாழ் இணையத்தை எப்படி, எப்போது அறிந்துகொண்டீர்கள், யாழ் இணையத்தில் உறுப்பினராக இணைந்தமைக்கான காரணம், உங்கள் ஆர்வங்கள், யாழ் கருத்துக்களத்தில் உங்களுக்கு பிடித்த பிரிவுகள் போன்றவை பற்றி எழுதலாம்.

"யாழ் அரிச்சுவடி" பகுதியில் அறிமுகத்தை எழுதுவதும், அத்தலைப்பில் சக கருத்துக்கள உறுப்பினர்களுடன் கருத்தாடல் செய்வதுவும், ஏனைய உறுப்பினர்களோடு ஒரு புரிந்துணர்வை ஏற்படுத்திக்கொள்ளவும், அறிமுகத்தைப் பெற்றுக்கொள்ளவும் உதவும்.

அதேபோல், கருத்துக்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் அடுத்த நிலை அங்கத்துவம் வழங்கப்படமாட்டாது. எழுதப்படும் கருத்துக்களின் அடிப்படையிலேயே "கருத்துக்கள உறவுகள்" என்ற குழுமத்தில் சேர்த்துக்கொள்வது பற்றி "கருத்துக்கள நிர்வாகத்தால்" தீர்மானிக்கப்படும். குறிப்பாக, தமது அறிமுகத் தலைப்பில் தமிழில் எழுதுகிறார்களா, ஏனைய கருத்துக்கள உறவுகளோடு பண்போடும், நட்போடும் பழகுகிறார்களா போன்ற விடயங்கள் முதன்மையாகக் கவனிக்கப்படுகின்றன.

கருத்துக்கள உறவுகள் குழுமத்துள் இணைக்கப்படுவதற்கு பரிந்துரைத்தல்:

அறிமுகப் பகுதியில் எழுதியதன் பின் தான் ஏனைய பகுதிகளுக்கு அனுமதி தரப்படும் என்பது - ஒரு பாதுகாப்பு ஏற்பாட்டுக்காகவும், வம்பு செய்ய வருபவர்களைத் தடுப்பதற்காகவும், தமிழில் தட்டச்சு செய்து எழுத முடியாதவர்கள் முதலில் தட்டச்சு செய்து பழகுவதற்காகவும் தான். யாராவது ஏற்கனவே யாழ் கருத்துக்களத்தில் உள்ள உறுப்பினர்கள் தங்கள் நண்பர்களை பரிந்துரைத்தால் - அவர்களுக்கு தமிழில் தட்டச்சுவதில் எதுவித சிக்கலும் இல்லை என்றால் - உடனடியாக அனுமதி வழங்கப்படும்.

அப்படி உங்கள் நண்பர்களைப் பரிந்துரைக்க விரும்புவோர் எமக்கு (கருத்துக்கள நிர்வாகத்தினருக்கு) தனிமடலில் தெரிவித்தால், நாம் அதனை பரீசீலனை செய்து "கருத்துக்கள உறவுகள்" குழுமத்துள் இணைத்துவிடுவோம்.

Posted

செயல்நிலைக் குழுமங்கள்

[செய்திக் குழுமம்]

யாழ் இணைய பொறுப்பாளர்களால் யாழ் இணையத்தின் செய்திப்பிரிவை ஒருங்கமைப்பதற்காகவும், ஒழுங்கமைப்பதற்காகவும், செய்தி தொடர்பான ஆக்கங்களை உருவாக்குவதற்காகவும், அது தொடர்பான முயற்சிகளை மேற்கொள்வதற்காகவும் உருவாக்கப்பட்ட குழுமம். இவர்களின் முயற்சியின் பயனாய் வாரம் ஒரு கருத்துப்படமும், வாரம் ஒரு செய்தி அலசலும் யாழ் இணையத்தில் இடம்பெற்றுவருவது குறிப்பிடத்தக்கது.

இக் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர்: கறுப்பி

[ஒஸ்ரேலிய குழுமம்]

நாடுகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட முதல் யாழ் இணையக் குழுமம் இது. ஒஸ்ரேலியாவிலிருந்து கருத்தெழுதும் உறுப்பினர்கள் இக் குழுமத்தில் இடம்பெற்றுள்ளார்கள். யாழ் இணையம் சார்பாக ஒஸ்ரேலியாவில் சில முயற்சிகளை மேற்கொள்வதும், ஒஸ்ரேலியாவில் இருந்து புதிய உறுப்பினர்களை கருத்துக்களத்தில் இணைப்பதுவும், யாழ் இணையத்தை விளம்பரப்படுத்துவதும் இக்குழுமத்தின் செயற்பாடுகளில் சிலவாகும்.

இக் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர்: தூயா

* ஒஸ்ரேலியாவில் இருக்கும் உறுப்பினர்கள் இக் குழுமத்தில் இணைவதில் ஆர்வமிருப்பின், தூயாவுடன் தனிமடலூடாகத் தொடர்புகொள்ளவும்.

[ஒரு பேப்பர் குழுமம்]

ஒரு பேப்பருடன் ஊடகத் தொடர்பைப் பேணவும், ஒரு பேப்பர் இதழில் யாழ் இணையத்தில் இடம்பெறும் ஆக்கங்களை பிரசுரிப்பது தொடர்பாக ஒழுங்கமைப்புகளை மேற்கொள்ளவும், யாழ் இணையத்தின் செய்திக் குழுமம் சார்பில் ஒரு பேப்பரில் செய்யப்படவிருக்கும் சிறப்புப் பக்கமான "விரியம்" தொடர்பான கருத்தாடலை நடாத்தவும் இந்தக் குழுமம் உருவாக்கப்பட்டுள்ளது.

இக் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர்: குறுக்காலபோவான் ("விரியம்" தொடர்பான), வலைஞன்

[நேசக்கர அமைப்பு]

கருத்துக்கள உறவு Danklas ஆல் மேற்கொள்ளப்பட்ட முயற்சியின் அடிப்படையில் உருவானதே இந்த நேசக்கர அமைப்பு. தாயக மக்களுக்கான தெரிந்தெடுக்கப்பட்ட சில சிறு உதவித் திட்டங்களை ஒருங்கமைப்பதற்கும், ஒழுங்கமைப்பதற்குமான குழுமம் இது. இத்திட்டத்திற்கு பங்களிப்பு செய்வோரோ இக் குழுமத்தின் உறுப்பினர்களாக உள்ளனர்.

இக் குழுமத்தின் ஒருங்கிணைப்பாளர்: டங்கிளஸ், சாத்திரி

* நேசக்கர அமைப்பின் செயற்திட்டங்களில் இணைந்து பங்களிக்க விரும்புவோர் Danklas அல்லது sathiri உடன் தனிமடலூடாகத் தொடர்புகொள்ளவும்.

மேலே குறிப்பிடப்பட்டுள்ள நான்கு குழுமங்களும், யாழ் இணையத்தில் இடம்பெறும் சில செயற்திட்டங்களின் அடிப்படையில் அமைக்கப்பட்ட குழுமங்கள் ஆகும். இந்தக் குழுமங்களுக்கான சிறப்புப் பிரிவுகள் யாழ் இணையக் குழுமம் என்கிற பிரிவின் கீழ் தனித் தனியாக உருவாக்கப்பட்டுள்ளன. இக்குழுமங்களுக்கான சிறப்புப் பிரிவுகளை கருத்துக்கள உறவுகள் அனைவரும் பார்க்கமுடியும். ஆனால், அதற்குள் இருக்கும் ஆக்கங்களை வாசிக்க முடியாது. அந்தந்தக் குழுமங்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே அந்தந்த சிறப்புப் பிரிவுகளைப் பார்வையிடவும், வாசிக்கவும், கருத்துக்களை எழுதவும் அனுமதி உள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

    • இதுக்குள்ளை என்னுடையநண்பன் ஒருவரும் உள்ளார். அத்தான் இங்கைதான் வெலை செய்யிறார் என்னவென்று கேட்டுப்பாப்பம்
    • 👍................ நல்ல ஒரு முடிவும், முன்னுதாரணமும்............ நாமலே பட்டம் இல்லாவிட்டால் சபாநாயகர் பதவி விலக வேண்டும் என்று சொன்னதைத் தான் ஜீரணிப்பது கொஞ்சம் கஷ்டமாக இருக்கின்றது...................🤣.  
    • 'தன் வினை தன்னைச் சுடும்..................' என்று கதை போகுதே...........🤣. இந்தப் பொறியியலாளர்கள் சிலர் அநுரவை தீவிரமாக ஆதரித்திருந்தனர். இளங்குமரன் கூட அங்கே தான் வேலையில், ஒரு ஊழியராக, இருந்தார்............. இந்த துறைக்கு பொறுப்பான அமைச்சர் கூட இவர்களில் சிலருடன் ஒன்றாக வகுப்பில் இருந்தவரே..........😜.
    • 👍...................... இங்கு பலவகையான பட்டம் வழங்கும் பல்கலைகள், நிறுவனங்கள், நீங்கள் சொல்வது போலவே, இருக்கின்றன.  அனுபவங்களை, வேறு ஆற்றல்களை பட்டங்களாக மாற்றும் விளம்பரம் ஒன்றை சில மாதங்களின் முன்னர் இலங்கையிலும் பார்த்தேன். உதாரணமாக, சில கவிதைகள் எழுதி, யாராவது நாலு பேர்கள் அதை ஒத்துக் கொண்டிருந்தால் கூட, ஒரு கலாநிதிப் பட்டம் அவர்களிடம் வாங்கிக் கொள்ளலாம். கௌரவப் பட்டங்கள் வேறு இருக்கின்றன. இதை தமிழ்நாட்டில் தாராளமாகவே கொடுப்பார்கள். இங்கிருக்கும் சில நடன ஆசிரியைகள் கலாநிதிகளே. 'டாக்டர்' என்றே அழைப்பிதழ்களில் போட்டுக் கொள்வார்கள். நேர்முகத் தேர்வுகளிற்கு வருகின்றவர்கள் எந்த நாடு என்றாலும், அவர்களின் விபரத்தை பார்க்கும் போது, அவர் எந்த பல்கலையில் இருந்து வருகின்றார் என்று தெரிந்தவுடனேயே, உள்ளுக்குள் ஒரு கணக்கு ஓடும். ஐஐடிக்கும், அண்ணா பல்கலைக்கும், ஆண்டாள் அழகர் கல்லூரிக்கும் பாரிய வேறுபாடுகள் இருக்கின்றன. ஹார்வார்ட்டிற்கும், கலிஃபோர்னியா பல்கலைக்கும், ஃபீனிக்ஸ் பல்கலைக்கும் அதே போலவே.  ஒரு சிலர் விதிவிலக்காகவும் இருப்பார்கள். நான் இங்கு படிக்கும் காலத்தில், ஜோர்டானில் இருந்து இங்கு வந்த ஒரு பாலஸ்தீனியனுடன் நல்ல நட்பு இருந்தது. அசத்தலான திறமையும், அர்ப்பணிப்பும் உள்ளவன். ஆனால் அவனால் அன்று பெரிய பல்கலை ஒன்றுக்குள் நுழைய முடியவில்லை. ஒரு சிறு பல்கலையிலேயே கலாநிதிப் பட்டம் பெற்றான். ஆனால் இன்று அவன் ஒரு பெரிய பல்கலையில் பேராசிரியராக நல்ல பெயருடன் இருக்கின்றான்...........👍.          
    • யாழ்ப்பாணத்தில் பெரும் சர்ச்சைக்கு உள்ளாகி இருக்கும் சோலார் அனுமதி வழங்கல் தொடர்பில் இலங்கை மின்சார சபையின் யாழ்ப்பாணப் பிராந்தியப் பொறியியலாளர் அலுவலகம் தவறிழைத்திருப்பதாகக் குறிப்பிட்டுள்ள இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, பாதிக்கப்பட்ட பாவனையாளருக்கு உடனடியாக நீதி வழங்குமாறும் பணித்திருக்கிறது. மேலும், பாவனையாளர் ஒருவருக்கு இணைப்பு அனுமதி வழங்குவதற்காகப் பாவனையாளரிடமிருந்து பணம் அறவிடப்பட வேண்டும் எனக் குறிப்பிடப்படும் உள்ளக சுற்று நிருபங்கள் அல்லது பொது நடைமுறைகள் மற்றும் ஆவணங்கள் ஏதுமிருப்பின் அது பற்றித் தங்களுக்கு அறியத்தருமாறும் இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் பாவனையாளர் விவகாரங்களுக்கான பணிப்பாளர் யசந்த ரதுவிதான இலங்கை மின்சார சபையின் பிரதம பொறியியலாளரைக் கடிதம் மூலம் கேட்டுள்ளார்.   யாழ்ப்பாணம் - சுன்னாகம் வாரியப்புலம் பகுதியைச் சேர்ந்த மின் பாவனையாளர் ஒருவர் 2023 ஆண்டு விண்ணப்பித்த போது,  அவருக்கு அனுமதி வழங்காமல், 2024 ஆம் ஆண்டு விண்ணப்பித்த அதே இடத்தைச் சேர்ந்த மற்றொருவருக்குச் செல்வாக்கின் அடிப்படையில் பூர்த்தி செய்யப்படாத கட்டடத்துக்கு அனுமதி வழங்கியமை தொடர்பாகச் செய்யப்பட்ட முறைப்பாட்டை அடுத்து, அவருக்கு அனுமதியை வழங்குமாறு பணிக்கப்பட்ட பின்னரும், இணைப்புக்காக ரூபா 11 இலட்சம் செலுத்துமாறு கோரியமையை ஆதாரங்களுடன் மேன்முறையீடு செய்ததை அடுத்தே இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு, யாழ்ப்பாணம் பிராந்திய மின் பொறியியலாளருக்கு இவ்வாறு பணித்திருக்கிறது.   சுன்னாகத்தில் அமைந்துள்ள யாழ்ப்பாணம் பிராந்திய மின் பொறியியலாளர் அலுவலகத்தில் சோலார் அனுமதி பெறுவதற்காக விண்ணப்பிப்பவர்களில் பலருக்கு அனுமதி வழங்கப்படாமை, அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு மீற்றர் பொருத்துவதில் பாரபட்சம் காட்டுதல் போன்ற முறைகேடுகள் குறித்து இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்துக்கும், மின் சக்தி வலு அமைச்சுக்கும், இலங்கைப் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கும் இது வரை பல முறைப்பாடுகள் கிடைத்திருந்தன.   எனினும், இலங்கை மின்சார சபை அவற்றைக் கண்டும் காணாமல், முறையற்ற விதத்தில் பல அனுமதிகள் வழங்கப்பட்டமை தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தின் கவனத்தக்குக் கொண்டு வரப்பட்டதையடுத்து பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடியாக அனுமதியை வழங்குமாறு உத்தரவிடப்பட்ட போதும், பிராந்திய மின் பொறியியலாளர் அவை குறித்துக் சிறிதும் கவனமெடுக்காமல் தொடர்ந்தும் முறையற்ற விதத்தில் சோலார் அனுமதிகளை வழங்கி வந்துள்ளார். அதைவிட, அனுமதி வழங்கப்பட்டவர்களுக்கு மீற்றர்களைப் பொருத்துவதிலும் முறைகேடாக நடந்து கொண்டுள்ளார் என்று பாவனையாளர்கள் பலர் முறைப்பாடு செய்துமிருந்தனர். இதேநேரம் -  இணைப்புக்கான அனுமதி வழங்கல் தொடர்பில் சுயாதீன விசாரணை ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்று மின்வலுசக்தி அமைச்சரிடம் 11 ஆம் திகதி நேரடியாகவும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில், அனுமதிக்கு விண்ணப்பித்த ஒழுங்கு, அனுமதிக்காகப் பணம் செலுத்திய ஒழுங்கு, அனுமதி வழங்கப்பட்ட ஒழுங்கு உட்பட முறைகேடுகள் நடந்துள்ளன என்பதை உறுதிப்படுத்தக் கூடிய தகவல்களை இலங்கை மின்சார சபையிடமிருந்து தகவல் அறியும் சட்டத்தின் ஊடாக வாடிக்கையாளர்கள் பலர் கேட்டிருந்த போதிலும், இது வரை அத்தகைய தகவல்கள் எவையும் வழங்கப்படவில்லை என்பதுவும் குறிப்பிடத்தக்கதாகும். https://tamil.adaderana.lk/news.php?nid=197232
  • Our picks

    • "முதுமையில் தனிமை [Senior Isolation]"/பகுதி: 01
      உலகத்தின் சனத்தொகை ஒவ்வொரு ஆண்டும் கூடிக் கொண்டு போகிறது. இத்தகைய சனத்தொகை அதிகரிப்பில் முதியோரின் அதிகரிப்பு வேகமானதாக உள்ளது என்பதை புள்ளி விபரங்கள் எடுத்தியம்புகின்றன. 2021 ம் ஆண்டளவில் உலக சனத் தொகையில் ஏறத்தாள கால் பங்கினர் (23%) 60 வயதிற்கு மேற்பட்டோராய் இருப்பர் என எதிர்வு கூறப்பட்டுள்ளது. ஆனால் முதியோர் என்றால் என்ன ? மக்களில் வயதில் மூத்த, நீண்ட நாள் வாழுபவரையும் [elderly people] மற்றும் நல்ல உலக அனுபவம், பலவகைக் கல்வி முதலான தகுதிகளைக் கொண்ட அறிவில் பெரியவர்களையும் [persons of ripe wisdom] முதியோர் என பொதுவாக குறிப்பிடுவர். இதில் நாம் முன்னையதைப் பற்றி மட்டும் இங்கு ஆராய உள்ளோம்.
        • Like
      • 4 replies
    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.