Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹெய்டி - விசாரணைக்கு ஐ.நா உத்தரவு!

Featured Replies

ஹெய்டியில் இடம்பெற்ற சிறுவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த விசாரணைக்கு ஐ.நா உத்தரவு!

ஹெய்டியில் அமைதி காக்கும் பணியில் ஈடுபட்டுள்ள ஐக்கிய நாடுகள் சபை அமைதி காக்கும் படையினர், சிறுவர்கள் மீது மேற்கொண்ட பாலியல் துன்புறுத்தல்கள் குறித்த விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபை உத்தரவிட்டுள்ளது.

ஜெனிவாவில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனிதவுரிமைகள் ஆணைக்குழுவின் கூட்டத் தொடரில் இவ்விவகாரம் குறித்த அறிக்கை சமர்பிக்கப்படவுள்ள நிலையில், இந்த விசாரணைக்கான உத்தரவிடப்பட்டுள்ளது.

ஹெய்டியில் ஐக்கிய நாடுகள் சபை அமைதி காக்கும் படையில் அங்கம் வகித்திருந்த சிறிலங்காவின் மூன்று அதிகாரிகள் உட்பட 114 படைத்தரப்பினர் மீது சிறுவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டு கடந்த வருடம் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருந்தனர்.

ஐக்கிய நாடுகள் சபை அமைதி காக்கும் படைத்தரப்பினர் மீதான குற்றச்சாட்டுக்கள் அமைதி காக்கும் படையில் அங்கம் வகிக்கும் அந்தந்த நாடுகளின் உள்நாட்டு நீதிமன்றத்திலேயே விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என ஐக்கிய நாடுகள் சபை அண்மையில் தெரிவித்திருந்தது. இந்நிலையில், சிறுவர்கள் மீதான பாலியல் முன்புறுத்தல் குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான ஐக்கிய நாடுகள் சபை அமைதி காக்கும் படையில் அங்கம் வகித்த உக்கிரேய்ன் நாட்டு படையினர் ஐவரை அந்நாட்டு நீதிமன்றம் விடுவித்த நிலையிலேயே, இவ்விவகாரம் ஹெய்டியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருந்தது.

ஹெய்டியில் உள்ள ஊடகங்கள் மற்றும் பெண்கள் அமைப்புகள் தெரிவித்த கடுமையான கண்டனங்களைத் தொடர்ந்து, இவ்விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் சபை உத்தரவிட்டுள்ளதாக ஹெய்டியின் Alert Press எனும் ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிறுவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுக்கள் காரணமாக ஹெய்டியில் இருந்து இலங்கைக்கு திருப்பி அனுப்பபட்ட படைத்தரப்பினர் மீது சிறிலங்கா அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளதா என்பது பற்றி செய்திகள் எதுவும் இதுவரை வெளிவிரவில்லை என Alert Press தெரிவித்துள்ளது.

அத்துடன், ஐக்கிய நாடுகள் சபையினால் தற்போது அறிவிக்கப்பட்டுள்ள இவ்விசாரரணையின் போது சிறுவர்கள் மீதான பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்ட அனைத்து நாட்டு படைத்தரப்பினர் மீதும் விசாரணைகள் மேற்கொள்ளப்படும் என Alert Press மேலும் குறிப்பிட்டுள்ளது.

http://www.ponguthamil.com/showcontentnews.aspx?sectionid=1&contentid=16dd3929-2973-450b-8752-882bd282b332

  • தொடங்கியவர்

to: ngochr@ohchr.org

cc: info@commonwealth.int; info@amnesty.ca; colombo@unicef.org; secretariat@ncca.org.au; secretary@unicef.ca; info@amnesty.org.uk; den@un.org; secrt@ohchr.org; idp@ohchr.org; srilanka@hrw.org; secretary@unicef.org

Subject : Haiti: UN opens probe into cases of alleged child sexual exploitation

Hon. Ms. Navanethem Pillay

High Commissioner for Human Rights, UN.

Dear Madam,

UN has taken the responsibility to deal with allegations into two cases of sexual exploitation of children.

One of the contributing countries, Sri Lanka, has a long record of this kind of abuses and have gone far too long unpunished, let alone being independently investigated. Only an independent investigation by UN can not only bring justice, but also prevent this happening on a daily basis in countries like Sri Lanka.

I sincerely thank UN for taking this courageous step in the right direction.

Thanks,

  • தொடங்கியவர்

ஐ.நா. அமைதிகாக்கும் பணிக்கான ஆலோசனை குழுவில் சவேந்திர சில்வா

ஐ.நா.வுக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிட பிரதிநிதியான மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா, அமைதிகாக்கும் செயற்பாடுகளுக்கான ஆலோசனைக் குழுவுக்கு ஐ.நா.செயலாளர் பான் கீ மூனினால் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

ஐ.நா. அமைதிகாக்கும் நடவடிக்கைகளுக்கு படைகளை அனுப்பும் நாடுகளுக்கான கொடுப்பனவுகள் மற்றும் ஏனைய விவகாரங்கள் தொடர்பாக ஆலோசனை வழங்குவதற்காக இந்நியமனம் வழங்கப்பட்டுள்ளது.

அமைதிகாக்கும் செயற்பாடுகள் தொடர்பாக இத்தகைய பதவியொன்றுக்கு இலங்கையர் ஒருவர் தெரிவுசெய்யப்பட்டமை இதுவே முதல் தடவையாகும்.

மேற்படி குழுவில் ஆசிய- பசுபிக் நாடுகளை மேஜர்ஜெனரல் சவேந்திர சில்வா பிரதிநிதித்துவப்படுத்தவுள்ளார்.

http://www.tamilmirror.lk/2010-07-14-09-13-23/34999-2012-01-26-18-14-53.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.