காசு வாங்கியவர்கள் எல்லாம் தங்களுக்குத்தான் ஓட்டு போட்டிருப்பார்கள் என நம்புகிறது ஆளுங்கட்சி.ஆனால் பல இடங்களில் காசையும் வாங்கிக்கொண்டு,ஓட்டையும் மாற்றிப்போட்டிருக்கிறார்கள்.ஏன் இப்படி என்று கேட்டால் பின்ன என்னங்க..?ஓட்டுக்கு குறைந்தது ஆயிரமாவது கொடுப்பாங்கன்னு மக்கள் நினைச்சிருந்தாங்க..ஆனா 200 தான் கொடுத்தாங்க..அதுவும் சில இடங்களில் 100 தான்.சில இடங்களில் மேலே இருந்து வந்த பணத்தை கட்சிக்காரர்களே அமுக்கி,அதுலியும் ஊழல் பண்ணிட்டாங்க..அதனால பணம் கொடுத்த பார்ட்டிகள் மேல மக்கள் கடுப்பாகி மாத்தி குத்தி இருக்காங்க..ஆக,சொந்த காசுலியே சூனியம் வெச்சிகிட்டாங்க..என்று சொல்கிறார் விருது நகர்காரர் ஒருவர்.(அதானே இவனுக இவ்வளவு மூட்டை மூட்டையா கொள்ளையடிச்சிட்டு நமக்கு 100 ரூபாய் கொடுக்குறானுக..பிச்சைக்காசு 100 ரூபாயை எத்தனை தடவை அசால்ட்ட டாஸ்மாக் ல தூக்கி வீசியிருக்கோம்..ஒரு நாள் டாஸ்மாக் செலவுகு ஆகுமாடா.. உங்க காசு...அப்பவும் 200 கொடுத்துட்டு ஜெயிக்கணும்னு அல்ப ஆசை....இருங்கடே அந்தம்மா வந்து கதற கதற ...ஒவ்வொருத்தனையா...ஆப்படிக்க போகுது...).
கிராமப்புறங்களை..பொறுத்தவரை சாதனை திட்டங்களால் தி.மு.க அணிக்கு வாக்குகள் விழுந்து இருப்பதை ஊகிக்க முடிகிறது.ஆனால் அ.தி.மு.கவின் இந்த இழப்பை தே.மு.தி.க வின் செல்வாக்கு சரிகட்டுவதால் திட்டங்களும் தி.மு.க வுக்கு சாதகமாக இருக்கும் என திட்டமாக சொல்ல முடியவில்லை...
மதுரை இன்ஸ்பெக்டர் ஒருவர் கூறும்போது.பெண்களில் அதிகம் பேர் இந்தமுறை ஓட்டுப்போடுவதை பார்க்க முடிகிறது..அவர்கள்,கரண்ட் கட்டையும்,விலைவாசி உய்ர்வையும் சரி பண்ண முடியாதவங்க..மறுபடி வந்து என்ன சாதிக்க போறாங்களாம்..?என பேசிக்கொள்வதும் பார்க்க முடிந்தது என்றார்...
சென்னையில் பெரும்பணக்காரர்களும் ,பெரிய பதவிகளில் இருப்பவர்களும்,படித்தவர்களும் இந்த முறை அதிக அளவில் ஓட்டுபோடுவதை பார்க்க முடிந்தது...இவர்கள்,2000 ரூபாயில் டிவியும்...ஒரு ரூபாய்க்கு அரிசியும் கொடுத்துட்டு இவங்க அடிச்ச கொள்ளை வியாபாரத்தை பார்த்தீங்களா என ஸ்பெக்ட்ரம் விவகாரத்தை பேசுகிறார்கள்...