Leaderboard
-
தமிழ் சிறி
கருத்துக்கள உறவுகள்280Points88426Posts -
goshan_che
கருத்துக்கள உறவுகள்134Points19374Posts -
ஏராளன்
கருத்துக்கள உறவுகள்132Points32768Posts -
ஈழப்பிரியன்
கருத்துக்கள உறவுகள்119Points20204Posts
Popular Content
Showing content with the highest reputation since 12/27/25 in all areas
-
யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
புதன் கிழமை இறுதிக் கிரியைகள் நடைபெறும் இடத்திற்குக் கிடைக்கக் கூடியவாறு இறுதிச் சடங்கு மலர் கொத்து ஒன்று யாழ் கள உறவுகள் சார்பாக அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.11 points
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2026
போட்டியில் கலந்து கொண்டு பரிசில்களைப் பெற உடனே களத்தில் இறங்குங்கள். @மோகன் @இணையவன் @நிழலி @நியானி @கிருபன் @nunavilan @தமிழ் சிறி @ஏராளன் @யாயினி @ஈழப்பிரியன் @நிலாமதி @பெருமாள் @நன்னிச் சோழன் @Justin @vaasi @விளங்க நினைப்பவன் @குமாரசாமி @goshan_che @island @விசுகு @நெடுமாறன் @வாத்தியார் @nedukkalapoovan @சுவைப்பிரியன் @suvy @Kavi arunasalam @வாலி @நந்தன் @Kandiah57 @உடையார் @nochchi @புலவர் @ragaa @kandiah Thillaivinayagalingam @satan @புங்கையூரன் @ரசோதரன் @ரஞ்சித் @Sasi_varnam @Sabesh @Maruthankerny @புரட்சிகர தமிழ்தேசியன் @அனைவருக்கும் ✨🎉10 points
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
கீழ்கண்ட திரியில் ஆலோசித்து ஏற்று கொண்ட வேலைத்திட்டத்தின் அடிப்படையில் செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான திரி. பிகு இதை கேணல் சங்கர் ஞாபகார்த்த அடிப்படை வசதி திட்டம் என பெயர் சூட்ட விரும்புகிறேன்ழ் புலத்தில் மிகபெரிய வசதி வாய்ப்பை உதவி விட்டு நாடு திரும்பிய முதலாவது வான்படை சிறப்புத்தளபதி கேணல் சங்கர் பெயரலால் இதை செய்வதில் அனைவரும் உடன்படுவீர்கள் என நம்புகிறேன். மாற்று கருத்து இருப்பின் தெரியப்படுத்தவும்.9 points
-
முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
8 points
- யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
மனைவியின் மறைவுக்கு கருத்துக்களத்திலும் தனி மடல்கள் மூலமாகவும் தொலைபேசி மூலமாகவும் ஆறுதலளித்த அனைத்து யாழ் உறவுகளுக்கும் நன்றி.7 points- பராசக்தி - சுப.சோமசுந்தரம்
6 pointsபராசக்தி - சுப.சோமசுந்தரம் இது பராசக்தி படத்தின் விமர்சனப் பார்வை அல்ல. அப்படம் ஏற்படுத்திய பரபரப்பு பற்றியது. தற்போது வெளியாகியுள்ள புதிய 'பராசக்தி' திரைப்படம் பெரும் வரவேற்பையும், சிலரிடம் ஏதோ அரசியல் காரணங்களுக்காக வெறுப்பையும், சில தரமான திரை விமர்சகர்களிடமிருந்து அரசியல் கலக்காத விமர்சனப் பார்வைகளையும் பெற்று சமூக வலைத்தளங்களைப் பரபரப்பாக்கி விட்டது. பெயர் ராசியோ என்னவோ, பழைய பராசக்தியும் அக்காலத்தில் அரசியல் களத்தில் சூடேற்றியது. 1930 களிலேயே சூடு பிடித்த இந்தி எதிர்ப்புப் போராட்டம் 1950 களின் இறுதியிலும் 1960 களிலும் தீப்பிடித்துப் பரவியதை ஓரளவு தொட்டுக் காட்டிப் பெரும் வெற்றி கண்டுள்ளது தற்போது வெளிவந்துள்ள பராசக்தி. இந்தி எதிர்ப்பு அல்ல, இந்தித் திணிப்பு எதிர்ப்பாக்கும் எனும் பம்மாத்து எனக்கு அவசியமில்லை என்று நினைக்கிறேன் - நாங்கள் பார்ப்பனர்க்கு எதிரி அல்ல, பார்ப்பனியத்திற்கே எதிரி என்பது போல. தணிக்கைத் துறையைச் சரிக்கட்டவும், ஏதோ நாகரிகம் கருதியும் 'தமிழ் வாழ்க' முழக்கத்தை மட்டுமே படம் முன்னெடுத்துள்ளதை என்னைப் போன்றோரால் புரிந்து கொள்ள முடிகிறது. பாசிசத்திற்கு மட்டும்தான் பம்மாத்து தேவையா என்ன ? அறிஞர் அண்ணா போன்று சமூகத்திற்கு நன்மையாற்ற நினைக்கும் கொள்கைச் சான்றோர்க்கும் பம்மாத்து தேவைப்படவே செய்தது. இறை மறுப்பாளரான அண்ணா 'ஒருவனே தேவன்' என்று ஏற்றுக் கொண்டதற்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும் ? மனோன்மணீயம் சுந்தரனாரின் பாடலைத் தமிழ் மொழிவாழ்த்து ஆக்கிய கலைஞர் கருணாநிதி அப்பாடலில், ஆரியம் (சமஸ்கிருதம்) வழக்கழிந்து ஒழிந்து சிதைந்தது பற்றிய வரியினை நீக்கியதும் அவ்வாறுதானே ? இவை அரசியல் நாகரிகம் என்று சொல்லிக் கடந்து செல்லும் பக்குவம் பகுத்தறிவாளரிடம் உண்டு. ஆனாலும் 'இந்தி ஒழிக, தமிழ் வாழ்க !' என்று அன்றைய முழக்கம் சேர்ந்தேதான் ஒலித்தது, சரியாக ஒலித்தது என்பதை இங்கு பதிவு செய்யவே விழைகிறேன். இந்தி எதிர்ப்புப் போராட்டம் பற்றி ஏதுமறியாத இளம் தலைமுறையினர் இதனையும் தெரிந்து கொள்ள வேண்டும். நிற்க. சங்கிகளும், யாரோ வேறொரு கதாநாயகனைத் தெய்வமாய் வழிபடும் ரசிகக் கண்மணிகளும் பராசக்தி படத்தைப் பற்றி கன்னா பின்னாவென்று பதிவு செய்வதைப் புறந்தள்ளி விடலாம். அவர்களை ஆட்டத்துக்கே சேர்த்துக் கொள்ள வேண்டியதில்லை. உலக சினிமா இலக்கணமெல்லாம் பேசி அந்த அளவுகோலை இந்தப் படத்திற்கு வைத்துப் பேசும் தரமான சினிமா விமர்சகர்களுக்கு நாம் சொல்ல வேண்டியது, "உங்களின் நிலைப்பாட்டிற்குப் பெயர் அறிமடம் (அறிந்தும் அறியாதார் போல் செயல்படுதல்). இது ஒரு வணிக நோக்கிலான சினிமா. மொழிக் கொள்கை கூட படம் எடுத்தவர்களுக்கு வணிக நோக்கில் அமைந்த ஒன்றாகவே இருக்கலாம். ஆனால் மொழிப்போரைப் பற்றி ஏதுமறியாத, வாசிப்பு அதிகம் இல்லாத பெரும்பாலான இளைய தலைமுறையைச் சென்றடைந்து விட்டது இப்படம். பலருக்கு சரியாக மொழி உணர்வைக் கடத்தி இருக்கிறது. அவ்வளவே !". அடுத்து, இதனைத் தங்களுக்கு எதிரான படமாக நினைக்கும் காங்கிரஸ்காரர்களுக்கு : ஐயா ! உங்கள் காங்கிரஸ் என்பது அந்தப் பழைய காங்கிரஸிலிருந்து பிரிந்து, அது ஒன்றுமில்லாமல் ஆனபின் 'இனி இதுதான் காங்கிரஸ்' என்று ஆன ஒன்று. எனவே 'படத்தில் காட்டப்பட்டது பழைய சித்தாந்தங்களுடன் திகழ்ந்த காங்கிரஸ். நாங்கள் இந்தியாவின் பன்முகத்தன்மையை நன்கு உணர்ந்த புதிய காங்கிரசாக்கும்' என்று சொல்லி நீங்கள் கடந்து சென்றிருக்கலாம். அன்றைய முதலமைச்சர் பக்தவத்சலம் இந்திக்குப் பெரிய ஆதரவாளராயிருந்து மொழிப் போராளிகளை ஆங்காங்கே சுட்டுத் தள்ளியது நிஜம். அடுத்த தேர்தலில் காமராஜரை மக்கள் தோற்கடித்ததற்கும் பெரும் பங்களிப்புச் செய்தவர் பக்தவத்சலம். அவரை உள்ளது உள்ளவாறு படத்தில் காட்டியதற்கு இன்றைய காங்கிரஸ்காரர்களுக்குக் கோபம் வரவேண்டிய அவசியம் இல்லை. இந்திரா காந்தி அம்மையாரைக் காட்டிய விதத்திலும் பெரும் தவறு இருப்பதாகத் தெரியவில்லை. அன்று வடக்கில் இருந்த தலைவர்கள் எவரும் மொழிப்போரில் நம்முடைய நிலையைப் புரிந்து கொள்ளத் தயாராக இல்லை என்பது நமது முகத்திலறையும் நிதர்சனம். இறுதியாக தற்போது சிறிய சர்ச்சைக்கு உள்ளானது என்னவென்றால் பராசக்தி படக்குழு டெல்லியில் மோடி தலைமையில் நிகழ்ந்த பொங்கல் விழாவில் பங்கேற்றது. தமிழ்த் திரையுலகில் எத்தனையோ பேர் இருக்க, இப்படக் குழுவை பாஜக அழைத்ததும் இவர்கள் அதில் கலந்து கொண்டதும் ஒரு வேடிக்கை அரசியலாகத் தெரிகிறது; கேவலமான அரசியலாகவும் இருக்கலாம். ஆனால் தமிழ் கூறும் நல்லுலகம் இவ்வாறான நிகழ்வுகளை உதாசீனப்படுத்திக் கடந்து செல்ல வேண்டும். படம் தமிழ்ச் சமூகத்திற்கு நல்ல செய்தியைத் தந்தது என்பதோடு நிறுத்த வேண்டும். படக்குழுவினரை நிஜ வாழ்விற்கு அழைத்து வந்து நாயகர்களாக ஆக்க வேண்டிய அவசியமில்லை. இயக்குனர் சுதா கொங்கரா மற்றும் நாயகன் சிவகார்த்திகேயன் தாங்கள் திராவிட இயக்கத்தினர் என்றோ குறைந்தபட்சம் தமிழ் உணர்வாளர் என்றோ கூறிக் கொள்ளவில்லை. பாஜக நாளைக்கே இவர்களை அழைத்து ஒரு இந்தி ஆதரவுப் படத்தை எடுக்கச் சொன்னால், "நீ காசு குடு மாமே ! மத்ததை நாங்க பாத்துக்குறோம்" என்று இவர்கள் ஆனந்தக் கூத்தாடலாம். இதை விட இவர்களிடம் பெரிதாக ஏன் தமிழ்ச் சமூகம் எதிர்பார்க்க வேண்டும் ? இது விஷயத்தில் பாசிச பாஜகவை வேண்டுமானால் கடுமையாக விமர்சிக்கலாம். அவ்வளவுதான். சுமார் ஒன்றரை வருடங்களுக்கு முன்பு வெளிவந்த 'ரகு தாத்தா' திரைப்படமும் ரசிக்கும் படியாக இருந்தது. இதுவும் இந்தி எதிர்ப்புப் போராட்ட காலத்தின் பின்னணியில் உருவான கதை. ஆனால் இது அப்போது நிகழ்ந்த வரலாற்றைக் கூற வரவில்லை. மாறாக, பெண்ணியம் பேசும் கதையில் கதாபாத்திரங்கள் இந்தி எதிர்ப்பைப் பதிவு செய்தன. பராசக்தி திரைப்படம் போன்று ரகு தாத்தா பரபரப்பாகப் பேசப்படாததற்கு எத்தனையோ காரணங்கள் இருக்கலாம் - கீர்த்தி சுரேஷ் தவிர நட்சத்திர நடிகர்கள் இல்லாமையும், முழுமையான வணிக நோக்கில் இளையோரைக் கவரும் உத்திகள் இல்லாமையும் அவற்றில் சில. எது எப்படியோ, இது போன்று தமிழரின் தன்னுணர்வை விழிப்புறச் செய்யும் திரைப்படங்கள் அவ்வப்போது திரையில் தோன்றுவது அவசியமாகிறது. சுதந்திரப் போராட்டம் நாட்டு விடுதலைக்கானது என்றால் மொழிப்போர் தமிழ் இன விடுதலைக்கானது என்பதை இந்நிலத்து இளையோர் புரிந்து கொள்ளத்தான் வேண்டும். ரகு தாத்தா திரைப்படம் குறித்து முன்னர் நான் முகநூலில் எழுதியவை பின்வரும் இணைப்பில் : https://www.facebook.com/share/p/1bL1fCKieF/6 points- யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
மிகவும் கவலையான தகவல். சின்ன வயதில் இருந்து அப்பா, அம்மா, எனக்கு படிப்பித்த நல் ஆசான்கள், வாசித்த இலக்கியங்கள், கடந்து சென்ற நல்ல மனிதர்கள் எல்லாம் சொல்லிக் கொடுத்தது நல்லவர்களுக்கு பெரும் துயரமோ இழப்போ ஏற்படாது என்பதே. அறத்தின் வழி வாழ்கின்றவர்களுக்கு துன்பமும் இழப்பும் குறைவு என்பதே. ஆனால் வாழ்வில் நிகழ்வது அவ்வாறு இல்லை எனும் மிகவும் கசப்பான உண்மையைத் தான் நான் அடிக்கடி காண்கின்றேன். மோகனுக்கும், அவரது பிள்ளைகளுக்கும் ஏற்பட்ட இந்த இழப்பை என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. வாழ்வின் யதார்த்தம் முகத்தில் அறைந்து செல்கின்றது. முரண்பட்ட அறம் தான் இன்று கண் முன்னே விரிந்து செல்கின்றது. மோகன், உங்களைப் பார்த்து Be Strong, இந்த நேரத்தில் உறுதியாக இருங்கள் என்று சொல்ல வேண்டிய தேவை இல்லை என்பதை கடந்த ஒரு வருடத்துக்கும் மேலாக உங்களை அவதானித்ததில் இருந்து நான் உணர்ந்த விடயம். ஏனெனில் உங்கள் துணை சுகவீனம் அடைந்ததில் இருந்து நீங்கள் காட்டிய உறுதி என்னால் நினைத்துப் பார்க்க முடியாதது. எல்லா வழிகளும் அடைபட்டு போன பின்பு கூட நீங்கள் மனதளவில் உறுதியாக இருந்ததை கண்டுள்ளேன். யாழை நிர்வகிப்பதில் கூட எந்த தளர்வையும் நீங்கள் காட்டவில்லை என்பது சாதாரண விடயம் அல்ல. எந்த நிலையிலும் தளராமல் இருக்கும் இந்த மனவுறுதி தான் உங்கள் பிள்ளைகள் இருவருக்கும் இருக்கும் என நம்புகின்றேன். அக்காவுக்கு எனதும் என் குடும்பத்தினரதும் கண்ணீர் அஞ்சலிகள்.6 points- யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
https://www.karainagar.org/about-us முதலில் இரு ஊரோடு ஆரம்பிப்போம் அண்ணை. தெளிவாக இந்த திரியில் மட்டும் வேலைகளை ஒருங்கிணைப்போம். இப்போதைக்கு இந்த இரு ஊர்களிலும் மலசல கூடம் இல்லாத அத்தனை குடும்பத்துக்கும் கட்டி கொடுப்போம். ஊர்கள் காரை நகர் சுழிபுரம் வாத்தியார் அண்ணா மேலே உள்ள காரைநகர் அமைப்போடு ஆரம்ப தொடர்பை ஏற்படுத்தி தருவார் எனில், ஏராளன் தனது அமைப்பின் மூலம் இதையே சுழிபுரத்தில் செய்வாராயின் - நீங்கள் பணத்தை திரட்டி இந்த நம்பகமான அமைபுக்களிடம் கட்டம் கட்டமாக கையளித்து வேலையை முடிக்கலாம். தயவு செய்து வாத்தியார் அண்ணா, ஏராளனுக்கு @ போட்டு விடவும். அவர்கள் செய்ய வேண்டியது முதற்கட்டமாக தலா 5 குடும்பங்களை இனம் கண்டு, மலசல கூடம் கட்டி கொடுக்கும் பொறுப்பை ஏற்க இந்த அமைப்புகள் சம்ம்யிக்கிறனவா என்பதை கேட்டு சொல்வதே. வேறு யாரும் யாழ்கள உறவுகள் தமது ஊர் பாடசாலை சங்கம் மூலமும் இதை செய்ய முன்வந்தால் அதையும் செய்யலாம். உதாரணம் விசுகு அண்ணா, புலவர், நந்தன் போன்றோர் இப்படியான சங்காங்கலில் இருப்பார்கள் என நினைக்கிறேன். எனது உலக மகா சோம்பேறித்தனத்தை கொஞ்சம் ஒதுக்கி இதில் நான் ஒருங்கிணைப்பு பணியை மேற்கொள்ள சித்தமாய் உள்ளேன். பிகு சங்கங்கள் சம்பதிக்கும் போது, அதன் பொறுப்பானவர்களோடு இமெயில், போன் தொடர்புகளை பேணவும் நான் தயார். நேரடி சந்திப்புகள், பணம் (money handling) இவை மட்டும் என்னால் முடியாது.6 points- முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கைது!
6 points- கிரீன்லாந்து - ஐரோப்பிய நாடுகள் மீது அமெரிக்கா விதிக்க இருந்த மேலதிக வரி நீக்கம்
கிரின்லாந்து விடயத்தில் அமெரிக்க அதிபர் டிரம்ப் பின்வாங்கியுள்ளதாக தெரிகிறது. கிரீன்லாந்தை அமெரிக்கா வசமாக்கியே தீருவோம் என அடம்பிடித்த டிரம்ப் சுவிஸ்லாந்தில் டவோசில் நேட்டோ பிரதானியுடன் நடந்த பேச்சின் பின் - நீண்டகால பாதுகாப்பை உறுதி செய்யும் ஒப்பந்தம் செய்வோம், பாதுகாப்பு வளையத்தை அமைப்போம் என நிலையை மாற்றியுள்ளார். டிரம்ப் ஏலவே இருந்த டென்மார்க்-அமரிக்கா ஒப்பந்தபடியே நடக்க ஒப்புகொண்டிருப்பதாக தெரிகிறது. கிரீன்லாந்தை அமெரிக்கா வசமாக்குவது பற்றி முன்னர் கூறினீர்களே என பத்திரிகைகள் கேட்க, மழுப்ப்பல் பதில் சொன்ன டிரம்ப்👇 டிஸ்கி மார்க் கார்னியும், ஐரோப்பிய தலைவர்களும் போட்ட போட்டில், தம்பர் கிரின்லாந்து வேண்டாம் என்ற நிலைக்கு வந்துள்ளார். டவோசில் ஆளை வரவேற்க எவரும் போகவில்லை. ஆளை எந்த தலைவரும் சந்திக்கவில்லை. நேட்டோ தலைமை அதிகாரி மூலம் பேசி பணிய வைத்துள்ளார்கள். சர்வதேச அரங்கில் அமெரிக்காவின் கோமணத்தை கனடா+ஈயூ உருவிய நாள் இன்று😂.5 points- மேல் மாடிகளை கட்டுவதை விடுத்து முதலீடுகள் செய்வதற்கு முன்வரவேண்டும்
முதலீடு என்றால் பார் திறப்பதுதானே ?5 points- யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
யாரையும் நம்பி அல்லது அவர்கள் செய்வார்கள் என்று இந்தத் திட்டத்திற்க்குள் நான் என்னை இனைத்துத்துக் கொள்ள விரும்பவில்லை சங்கங்களின் நிலைமையை அறிந்தவன் என்பதாலும் அவற்றை விமர்சிக்க விரும்பாததாலும் அதற்கு அப்பால் சென்று இப்படியான ஒரு உதவி காரைநகர் மக்களுக்கு கிடைத்தால் அதை நானே முன் நின்று செய்து முடிப்பேன் என்று உறுதியாக கூற முடியும் . இப்படியான செயற்திட்டங்களை நடைமுறைப்படுத்தும் வேளை எனது காத்திரமான நிதிப் பங்களிப்பும் நிச்சயமாக இருக்கும். கோஷான் 👍🙏5 points- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
கணேஷா ஹாட்வெயார் கடைக்கு செலுத்தவேண்டி உள்ள 4850 ரூபா கடை உரிமையாளர் திரு ரி.முருகசோதி அவர்களின் வங்கிக் கணக்கில் செலுத்திவிட்டேன். இருப்பு இருப்பு 205,845.67-4875=ரூ 200,970.67 சதம் இன்று 23/01/2026 4850 ரூபா வைப்புச் செய்த பின் தற்போதைய வங்கி மீதி. 25 ரூபா இலங்கை வங்கிக்கு மாற்றுவதற்கான கட்டணம் எடுத்துள்ளார்கள். வைப்புச்செய்த இலத்திரனியல் பற்றுச்சீட்டு. மட்டமாக 30000 ரூபா தருவதாக கேட்டேன், சம்மதித்துள்ளார். 4 லீற்றர் அசிற் காசு 3200 ரூபா இன்று தெரிந்த பாமசி நண்பரின் வங்கிக் கணக்கிற்கு 33200 ரூபா மாற்றியுள்ளேன். ஏற்கனவே சம்பளம் 20000 ரூபாவை பாமசியில் வாங்கிவிட்டார். மிகுதி பத்தாயிரம் ரூபா மற்றும் அசிட் காசு 3200 ரூபா இன்னும் சென்று பெறவில்லை. வாங்கியதும் 30000 ரூபா பெற்றுக்கொண்டேன் என கையெழுத்து பெற்று படத்தைப்போடுகிறேன். இருப்பு இருப்பு 205,845.67-4875=ரூ 167,745.67 சதம் இன்று 23/01/2026 33200 ரூபா வைப்புச் செய்த பின் தற்போதைய வங்கி மீதி. 25 ரூபா இலங்கை வங்கிக்கு மாற்றுவதற்கான கட்டணம் எடுத்துள்ளார்கள். பொன்னாலை 3 இயலாமையுடையவர்களின் மலசலகூடப் புனரமைப்பிற்கான மொத்தச் செலவு பொருட்கள் வாங்கிய காசு (கணேசா காட்வெயார்) 84850 கொமட், பூட்டும் பொருட்கள், கொண்டுவந்த ஓட்டோ காசு 44500 அசிட் 3200 சம்பளம் 30000 மொத்த செலவு 162550 மலசலகூடக்குழியில் இருந்து காற்று வெளியேற இரண்டு குழாய்கள் நேற்று பொருத்திவிட்டார். இதன் மூலம் பிளாற் வெடிக்காமல் இருக்கும் என நினைக்கிறேன். பொன்னாலை மூன்று சகோதரர்களில்(நடமாடமுடியாது) இருவர் ஏதாவது ஒன்றில் சாய்ந்தபடி தான் இருப்பார்கள், ஒருவர் மட்டும் எந்தவொரு பிடிமானமும் இல்லாமல் இருப்பார். கழுத்து எலும்புகளில் ஏற்படும் பிரச்சனையால் தான் இவர்களுக்கு இந்த வருத்தம் என சகோதரி கூறினார். சகோதரிக்கு 2 மகள்கள் இரண்டாவது மகளுக்கும் அதன் தாக்கம் உள்ளது, ஆனால் நடமாடுகிறார். இவர்களைப் போன்ற 5 வேறு வேறு சிறார்களுக்கு கொழும்பில் சத்திரசிகிச்சை செய்ய அழைத்தவர்களாம். அதில் முதலாமவருக்கு செய்த சத்திரசிகிச்சை வெற்றியளிக்காது கோமாவிற்கு போனதால் ஏனையவர்களை திருப்பி அனுப்பிவிட்டதாகவும் கூறினார். அங்கே நிறைய உறவுகளுக்குள் திருமணமாகி ஜெனற்றிக் வருத்தக்காறர் இருக்கிறார்கள். 3 மாதத்திற்கு ஒருமுறை நிகழ்வுகள் ஏதாவது நடத்தவேண்டும் என்ற எண்ணம் அவர்களுடன் கலந்துரையாடிய போது உணர்ந்தேன். டிசம்பர் 3 ஆம் திகதி நிகழ்விற்கு 2 பேர் வந்தவர்கள், அழைத்து வராதவர் சண்டையாம் தன்னை அழைத்து செல்லவில்லை என. இந்த மகத்தான பணிக்கு உதவிய அத்தனை யாழிணைய உறவுகளுக்கும் எனது உளப்பூர்வமான நன்றிகள்.❤️🙏💪 உங்கள் கருத்துகள், நன்கொடைகள், கரிசனைகள் எல்லாவற்றிற்கும் சிரம் தாழ்த்தி நன்றி தெரிவிக்கிறேன். உங்கள் எல்லோரதும் ஆதரவோடு தொடருவோம்.4 points- யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
மோகன் அண்ணையின் துணைவி சுமதி (பூமா) அக்காவின் இறுதி நிகழ்வு இன்று ஒஸ்லோவில் நடைபெற்றது. வாழ்வின் மீது பிடிமானம் கொண்டு அதனை நேசிக்கின்ற எல்லோருக்கும் நீண்ட ஆயுள் வாய்த்துவிடுவதில்லை. இத்துயர உண்மையை மனிதவாழ்வு அவ்வப்போது நினைவூட்டிவிடுகிறது. பூமா அக்கா வாழ்வின் தருணங்களை நேசித்து ரசித்து மகிழ்ந்து வாழ்ந்தவர். சுற்றியிருப்பவர்களையும் மகிழ்வித்து வாழ்ந்த ஒருவர். நம்பிக்கையும் Positive energy உம் கொண்ட ஒருவர். மோகன் அண்ணை, வைதேகி, ஆதிரை, மற்றும் குடும்பத்தாருக்கு பெரும் இழப்பு.ஆறுதல் சொல்வதற்கு எந்தச் சொற்களும் இங்கு தோற்றுத்தான் போய்விடும். அவர் விட்டுச் செல்லும் வாழ்வின் நினைவுகளும் காலமும் தான் இழப்பின் வலிகளையும் துயரங்களையும் ஆற்றக்கூடியவை. மோகன் அண்ணை நீண்ட காலமாக நோர்வேயில் சமூகப் பணிகளிலும் தாயகம் நோக்கிய செயற்பாடுகளிலும் ஈடுபட்டுவந்த ஒருவர். கணினித் தொழில்நுட்பம், நூல் வடிவமைப்புகள், இணைய ஊடகம் என அவருடைய பணிகள் பன்முகப்பட்டவை. அவருடைய பொதுப்பணிகள் பூமா அக்காவினுடைய ஒத்துழைப்பும் புரிதலும் இன்றி சாத்தியமாகியிருக்காது. மோகன் அண்ணையின் பொதுப் பணிகளில் முதன்மையானது Yarl.com இணையத்தளத்தினை நிறுவி இயக்கியமை. புலம்பெயர் தமிழ்ச் சூழலின் இணையத் தளங்களில் முன்னோடியானது அது. இன்றைய சமூக ஊடகங்களின் வருகைக்கு முந்தைய நிலையென இணையத் தளங்களின் ஊடான chatting எனப்படுகின்ற நிகழ்நேர உரையாடல், தகவற்பகிர்வுகளையும் கருத்தாடல்களையும் குறிப்பிடலாம். இணையவெளியில் புலம்பெயர்/உலகத் தமிழர்களுக்கான கருத்துப்பகிர்வுத் தளமாகவும் யாழ் இணையம் 1998களின் ஆரம்பத்திலிருந்து இருந்துள்ளது. ஆர்வமுள்ள எவரும் எழுதலாம், கருத்துகளைப் பகிரலாம் என்ற நிலைக்கு வித்திட்ட தளங்களில் யாழ் இணையத்தின் இடம் தனித்துவமானது. செய்திகள், தகவல்கள், கட்டுரைகள் ஆய்வுகள், கதைகள், கவிதைகள், பகிர்வுகள், ஓவியங்கள் எனப் பல்வகையான ஆக்கங்களுக்கான தளமாக விளங்குகின்றது. புலம்பெயர் சூழலில் எழுத்தாளர்களாக உள்ள பலரின் ஆரம்பக் களமும் தளமுமாகவும் யாழ் இணையம் திகழ்ந்திருக்கின்றது. பூமா அக்கா மனிதர்களோடு இயல்பாகப் பழகக்கூடியவர். துணிந்து தன் உணர்வுகள், கருத்துகள், எண்ணக்களைச் சொல்லக்கூடியவர். ஒரு அம்மாவாகப் பிள்ளைகளின் நலன்களில் மட்டுமல்லாமல் அவர்கள் சுயதெரிவுகளுடனும் தமக்கான சுதந்திரங்களுடனும் வாழ்வில் உயர வேண்டுமென்ற எண்ணங்களைக் கொண்டவர். நோய்க் காலத்திலும் மனோபலத்தோடு அதனை எதிர்கொண்டிருக்கின்றார் என்று அறியும் போது அவரது அவர் மீது மதிப்புக் கூடுகிறது. மோகன் அண்ணையும் பிள்ளைகளும் அவரைத் தாங்கியிருந்திருக்கிறர்கள். பெரும் காதலோடும் கரிசனையோடும் நோய்க்காலத்தில் அவரைப் பராமரித்திருக்கிறார்கள். ஆறுதல் சொல்வதற்கு எந்தச் சொற்களும் இங்கு தோற்றுத்தான் போய்விடும். அவர் விட்டுச் செல்லும் வாழ்வின் நினைவுகளும் காலமும் தான் இழப்பின் வலிகளையும் துயரங்களையும் ஆற்றக்கூடியவை. https://www.facebook.com/share/p/1BgkDMANcf/?mibextid=wwXIfr4 points- 📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
இவர்கள் விட்ட தவறே, அனுரா கட்சி வடக்கில் நுழைந்ததும் பொங்கல் விழா கொண்டாடியதும் என்பதையும் ஏற்க முடியவில்லை, அனுரா பொங்கல் கொண்டாடியதை பொறுக்கவும் முடியவில்லை. இவர்கள் இல்லாவிட்டால் என்ன? அவர் மக்களோடு பொங்கல் கொண்டாட வந்தார், கொண்டாடினார், போனார். இவர் ஏன் புலம்புகிறார்? உங்களுக்கு அங்கு என்ன வேலை? உங்களது மரியாதை அவ்வளவுதான். உங்களை கூட்டி வைத்து கும்மாளம் அடித்தவர்கள் எதை சாதித்தார்கள் மக்களுக்கு? அல்லது நீங்கள்தான் எதை சாதித்தீர்கள்? நீங்கள் நிஞாயமாக நடந்திருந்தால் மக்கள் உங்களை தவிர்த்து அனுராவுடன் பொங்கல் கொண்டாடியிருப்பார்களா? மக்களே உங்களை மதிக்கவில்லை, அனுரா ஏன் அழைக்கப்போகிறார்? சிவஞானத்தின் அறிவு அவ்வளவுதான்! இவர்கள் எல்லாம் கட்சி கொள்கை திட்டத்தின் படி அங்கீகாரம் பெற்றா பதவிகளை பெற்றுக்கொண்டார்கள்? மக்கள் இவர்களை விட்டு வெகுதூரம் சென்றதே அனுரா வடக்கிற்கு வரக்காரணம் என்பதைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லை பாவம் இவரால். கட்சிப்பிரச்சனை கட்சிக்குள் இருந்திருந்தால் யாரும் விமர்சிக்கப்போவதில்லை. கட்சிப்பிரச்சனை வெளியில் வந்தால், நீதிமன்றம் வந்தால் யாரும் விமர்சிக்கத்தான் செய்வார்கள். நீங்களே உங்கள் உறுப்பினர்களை பகிரங்கமாக விமர்ச்சிக்கிறீர்கள், அவர்கள் மேல் சேறடிக்கிறீர்கள், தெற்கிற்கு செய்தியனுப்பி விசாரணை செய்யச்சொல்லி கேட்க்கிறீர்கள், உங்கள் தவறுகளை மறைத்துக்கொண்டு மற்றவர்கள்மேல் நடவடிக்கை எடுக்கிறீர்கள், ஒரு கட்சியை விமர்சித்து விட்டு உங்கள் தேவைக்காக அந்தக்கட்சியை தேடிச்சென்று கட்டி தழுவுகிறீர்கள், காரணம் என்ன? மக்கள் உங்களை நிராகரித்து விட்டதனாலேயே. இதற்குள் தமிழரசுக்கட்சிக்குள் மறைந்திருந்து போட்ட அட்டகாசம் எல்லாம் போதும். குந்தியிருந்த வீட்டை பூட்டிவிட்டு வேறு எங்கே போய் குந்தப்போகிறார்கள்? சிவஞானத்திற்கு தன் முதுகிலுள்ள அழுக்கும் தெரியவில்லை, கட்சியிலுள்ள சர்வாதிகாரமும் புரியவில்லை, இதற்குள் மற்றவர்களை சாட வெளிக்கிட்டு தலைகுனியப்போகிறார்.4 points- 📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
நீங்களும், சுத்துமாத்து சுமந்திரனும் காட்டுற "சோ" வை விட, இது பரவாயில்லை. போய்... நித்திரை குளிசையை போட்டுட்டு, குப்புற படுங்கோ.4 points- “மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!
மரியா மரியாதையா கொண்டு வந்து குடுத்திரு இல்லாட்டி மற்றவருக்கு நடந்தது தெரியும் தானே என மரியாதையா சொல்லியிருப்பாரு நைனா4 points- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
பயனாளியின் முகம் மறைக்கப்பட்ட படம். வங்கிப்பரிமாற்ற பிரதி.4 points- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
அண்ணை, 1) படங்கள் கிடைத்து வட்சப் குழுவில் பகிர்ந்து விட்டேன். 2) விபரங்களை கேட்டுப் பெறுவேன். 3) படம், காணொளி எடுத்து போடச் சொல்லி உள்ளேன். 4) இதற்கு முடிந்தால் நானே சென்று எடுப்பேன் 5) பற்றுச்சீட்டுகள் பெற்றுத்தர சொல்லி உள்ளேன். (கடைகளில் பெறும் பொருட்களுக்கு சீமந்து, மணல், கல்லு போன்றவற்றிற்கு பெறலாம். பெக்கோ மூலம் குழி தோண்டுபவர் கையால் எழுதிய துண்டு தான் தருவார். தொழிலாளர் சம்பளமும் அவ்வாறு தான் தருவார்கள்.) அரச தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் மதிப்பீடு செய்ய பணம் கேட்கிறார்கள், பிரதேச செயலரிடம் இலவசமாக செய்துதர கோரியுள்ளேன். மலசலக்குழிகள் வெட்டி கட்டுவதற்கான பிரதேச சபை அனுமதியையும் அவர்களே பெற்றுத்தர வேண்டும்)4 points- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
நன்றி தம்பி. கீழ் உள்ளதை நீங்கள் ஏலவே சிந்த்தித்து இருப்பீர்கள் என நினைக்கிறேன். இருந்தாலும்... பயனாளர்களிடம் கீழ்கண்டதை கோருவது ஏற்புடையடதாக இருக்கும் என நம்புகிறேன். நாம் மேலும் கொடையாளர் நம்பிக்கையை பெற இது மிகவும் உதவும். 5 படங்கள் எடுத்து அனுப்பல் வேண்டும். 1. வேலை ஆரம்பிக்க முன்னான நிலை (before construction) 2. வேலைக்கான பொருள்கள் ( items used in construction) 3. வேலை நடக்கும் போது (during construction) 4. வேலை பூரணமானபின் (after construction) 5. ஏதேனும் அத்தாட்சிகள் (இருப்பின்) அவை (receipts etc) *பயனாளார்கள் படம் தவிர்க்கப்பட வேண்டும். *அத்தாட்சியில் பெயர் தவிர் வேறு தனி விபரங்கள் இருப்பின் அவை மறைக்கப்படலாம். இதில் மாற்றுக்கருத்து இருப்பின் கூறவும், யாருக்கேனும்.4 points- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
3) முன்னோடிக்கான மூன்றாவது நன்கொடை ரூபா 319,122.00 சதம் 14/01/2026 கிடைக்கப்பெற்றது. இன்றைய 14/01/2026 வங்கி மீதி ரூபா 430,445.67 சதம் ஆகும். 250 ரூபா Swift கட்டணம் எடுத்துள்ளார்கள். மூன்றாவது நன்கொடையை அனுப்பி வைத்த உறவிற்கு மிக்க நன்றி. உங்கள் ஒவ்வொருவரின் கூட்டு முயற்சியால் வறுமை/ஏழ்மையில் இருக்கும் ஒரு குடும்பத்திற்கு அடிப்படை சுகாதார வசதி கிடைக்கட்டும். முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026. ஒற்றுமையே பலம்.4 points- மாதுளை மரம்
4 pointsமாதுளை மரம் இலங்கையைப் பூர்வீகமாகக் கொண்ட T.தம்பிமுத்து எழுதி ‘நியூ யோர்க்கர்’ சஞ்சிகையில், 05 நவம்பர் 1954-இல் வெளியாகிய சிறுகதை : The pomegranate tree. தமிழில்: எழுத்துக்கினியவன் சில மனிதர்களுக்கு ஒரு விசேடமான பலவீனம் இருக்கும்; அதற்காக எதை வேண்டுமானாலும் தியாகம் செய்து விடுவார்கள், தங்களுக்கு உயிரானவர்களின் மனமகிழ்ச்சியைக் கூட அர்ப்பணித்து விடத் தயங்க மாட்டார்கள். இதற்கு ஒரு நல்ல உதாரணம் மகாபாரதத்தில் திரௌபதியைப் பணயமாக வைத்து இழந்த தர்மன். எனது இரத்தின மாமாவின் பலவீனம் வட இலங்கையின் அச்சு வேலிக் கிராமத்தில், அவருடைய வீட்டுக் கிணற்றடிக்கு அருகில் வளரும் மாதுளை மரத்தின் பழங்களுக்குத்தான். விறாந்தைக்குக் கீழே கல்லாசனத்தின் மேல் விரித்திருந்த புலித்தோலில் உட்கார்ந்து மாதுளம் பழக் கொட்டைகளைச் சுவைத்தபடி இரத்தின மாமா எனக்கும் என் சகோதரர்களுக்கும் சேர் வால்டர் ஸ்காட்டின் கதைகளுக்குத் தானும் கொஞ்சம் கண்ணும் மூக்கும் வைத்து ஆலாபிப்பார்: “அப்போ அந்தக் கறுப்பு மறவன் கடிவாளத்தைப் பற்களால் கடித்துப் பிடித்தபடி குதிரையை ஓட்டிவந்து, ‘ஹோ ஐவன்ஹோ! ஹோ ஐவன்ஹோ!’ என்று கூவினான். ரெபெக்கா வெகு உயரத்திலிருந்து, தன் கூந்தல் ஒரு கார்மேகம் மாதிரிக் கவிழ்ந்து விழக் கீழே பார்த்தாள்…இந்த மாதுளம்பழம் அருமை. அச்சுவேலிக் கிணற்றடி மாதுளைக்குப் போட்டியாக எதுவுமே கிடையாது!” ஆங்கிலேயர் மாதுளம்பழக் கொட்டைகளைக் கரண்டியால் கோதி அள்ளி உண்ணும் முறை முழுப்பிழை என்று இரத்தின மாமா சொல்வார். கரண்டியால் கோதி எடுத்தால் ஏதோ கற்பூரத் தைலம் சாப்பிட்டது போல மாதுளம்பழத்தின் உருசியையே கெடுத்துவிடும். அது மட்டுமல்ல, மாதுளங் கொட்டைகளை விழுங்கக் கூடாது. ஒரு கொஞ்சத்தை வாயில் போட்டு ஒன்றிரண்டு முறை மென்று மாதுளம்பழச் சாற்றை, சிப்பிமீன் சாப்பிடுகிற மாதிரி உறிஞ்சி எடுத்தபிறகு கொட்டைகளைத் துப்பிவிட வேண்டும். மரத்திலேயே பழுத்த புத்தம்புது மாதுளம்பழம் கொஞ்சம் எலுமிச்சை கலந்த ஷாம்பேன் மாதிரி இருக்கும். அச்சுவேலிக்கு வெளியே இவ்வளவு உருசியான மாதுளம்பழத்தைக் கண்ட ஞாபகமே எனக்கு இல்லை. மாரிகாலத்தில் நானும் எனது ஐந்து சகோதரர்களும் எங்கள் பெற்றோருடன் கொழும்பு நகரத்தில் வசித்தோம். அங்கேதான் பள்ளிக்கூடம் போனோம். கோடை விடுமுறைகளுக்கு அச்சுவேலிக்குப் போய்விடுவோம். அப்பப்பா உயிரோடிருக்கும் வரை அவருடன் தங்கியிருந்தோம். அவருக்குப் பிறகு இரத்தின மாமாவுடன் அல்லது ஆறு மாமாவுடன். இரத்தின மாமா எனது அப்பாவின் ஒன்றுவிட்ட மைத்துனர். ஆறு மாமா அம்மாவின் மைத்துனர். இலங்கை உறவுமுறைகளின் படி இவர்கள் எனக்கும் என் சகோதரர்களுக்கும் மாமாக்கள்தான். இலங்கையில் மாமாக்கள் மருமக்களுக்கு அளவுமீறிய செல்லம் கொடுப்பது வழக்கம். ஆகவே அச்சுவேலிக்குப் போவதென்றால் எங்களுக்குக் கொள்ளைப் பிரியம். ஆறு மாமா ஒரு சன்னியாசி மாதிரியான மெலிந்த சிறிய உருவம் கொண்டவர். செம்மையாகச் செதுக்கிய கழுகு போன்ற தலையில் நரைத்துப்போன வெள்ளைத் தலைமுடி. ஒரு பறவை மாதிரி கொஞ்சம் பதற்றமான அசைவுகள் கொண்டவர். எந்த விஷயத்தையும் கவனித்துச் செய்கிற கறார்ப் பேர்வழி. கீரிமலைக் கேணியில் குளித்துப் பிறகு பிராமணக் கடையில் மதிய உணவு அருந்த எங்களைக் காரிலோ குதிரை வண்டியிலோ அனுப்பும் போது எல்லோருக்கும் தனித்தனியாகத் துவாய்களும், சாப்பிட்டபின் குட்டித்தூக்கம் போடப் பாய்களும் கவனமாக எடுத்து வைப்பார். பிறகு அந்தப் பயணத்துக்குத் தேவையான சரியான அளவு பணத்தை எடுத்துத் தன் மகன் – எங்கள் மைத்துனன் – ராஜா கையில் வைப்பார். ஏதாவது ஏற்பாடுகள் செய்யப்படாத மாலைகளில் எங்களை உள்ளான் குருவியோ புறாவோ வேட்டையாட அழைத்துச் செல்லும்படி ராஜாவைப் பணிப்பார். ராஜா உயரமாக அழகாக இருப்பான். கவிதைகளை, முக்கியமாக ஔவையாரின் நாலடிச் செய்யுள்களை, மேற்கோள் காட்டுவதென்றால் அவனுக்கு அலாதிப் பிரியம். இப்போது அவன் ஒரு அரசாங்க அதிபராகக் கடமையாற்றுவதால் நடைமுறைகளையும் பல்வேறு படிவங்களைப் பூர்த்தி செய்வதையும் சீராக நடத்துவதிலேயே கவனமாக இருக்கிறான். ஆனால் என் நினைவில் அவன் ஒரு கவிஞன்தான். வேட்டை என்பது திறந்த வெளிகளிலும், பனங்காணிகளிலும், வயல்வெளிகளிலும், பறவைகளிலும் காணக்கூடிய கவிதைகளின் ஒரு அம்சம்தான். சிலவேளைகளில் சிறுமிகளைப் பற்றிக் கேட்டு ராஜா எங்களைக் கேலி செய்வான். “வளர்ந்த பிறகு ஆரைக் கட்டுவாய்? நளினியா சகுந்தலாவா சாவித்திரியா?” நான் “சாவித்திரி!” என்று சிலவேளைகளில் கத்துவேன். அல்லது “சகுந்தலா!” ஒரே கும்மாளம்தான். திரும்பி வரும்போது பென்னாம்பெரிய பனையோலைகள் சரசரக்க, சில்வண்டுகள் இருண்ட பனங்காணிகளில் களேபரம் செய்ய, ஒற்றைக் காபைட் விளக்கெரியும் தெருவோரக் கடையில் நிறுத்தி ஒரு கோர்வை வடையும் எலுமிச்சம்பழச் சாறும் வாங்கித் தருவான். ஆறு மாமா வீட்டுக்குப் போகும் போது பெட்டிபெட்டியாக வாணங்களும் பட்டாசுகளும் இருக்கும் என்று எங்களுக்கு நிச்சயமாகத் தெரியும். கோப்பாய்க்கு அருகிலுள்ள முடிவில்லாத ‘நிலாவரை’ கிணற்றைப் பார்க்கப் போகும்போதும் அல்லது விடுமுறை முடிந்து வீடு திரும்பும்போதும் ஆறு மாமா எங்களுக்கு ஆளுக்கொரு வெள்ளி ரூபாய் நாணயம் தருவார். இரத்தின மாமா வீட்டில் நாங்கள் இருந்தபோதும்கூட வேட்டை, நீச்சல் பயணங்கள் போயிருக்கிறோம் என்றாலும் அங்கே எங்களை மிகவும் கவர்ந்தது மாதுளம்பழங்களும் நாட்கணக்கில் தொடரும் இரத்தின மாமாவின் நெடுங்கதைகளும்தான். கிராமத்தினருக்கு இரத்தின மாமாவின் மேல் பயங்கலந்த மரியாதை இருந்தது. அவர் ஒரு ராங்கிபிடித்த, பிடிவாதக்கார, இலகுவாகத் திருப்தி செய்ய முடியாத, ஆனால் நல்ல மனமுள்ள சர்வாதிகாரி. அவர்தான் ஊர்ப் பிரச்சினைகளைத் தீர்த்து வைக்கும் பஞ்சாயத்தின் தலைவர். அப்பப்பா காலமான போது, அவருடைய பிள்ளைகள் யாரும் அந்தக் கிராமத்தில் வசிக்கவில்லை. இரத்தின மாமா, அப்பப்பாவின் மைத்துனர் என்கிற முறையில், அப்பப்பாவின் முறையான வாரிசாக, அச்சுவேலியின் முதற்குடிமகனாகத் தன்னைத்தானே வரிந்து கொண்டார். அத்தோடு கிடைக்கும் எல்லா விதமான விசேட உரிமைகளும் தனக்குத்தான் என எதிர்பார்த்தார். ஆறு மாமா இதற்கு முற்றிலும் பலத்த எதிர்ப்பு. கிராமத்தின் ‘உடையார்’ என்ற முறையில் சட்டத்துக்கும் நீதிக்கும் பொறுப்பான தான்தான் அச்சுவேலியின் நியாயமான முதற்குடிமகன் என்று நினைத்தார். அப்பப்பா உயிரோடிருக்கும் வரை கிராமத் தலைவர் யார் என்பதில் ஐயம் எதுவுமே இருக்கவில்லை. அவர் தெருவில் நடந்து வந்தால் ஊர் மக்கள் மரியாதை காட்டி தத்தம் வீடுகளுக்குள் ஓடிப்போய்ப் பதுங்கிக்கொள்வார்கள். நாங்கள் சிறுபிள்ளைகள் ஊர்த் தெருக்களிலும் ஒழுங்கைகளிலும் ஓடித்திரியும் போது, தாழ்த்தப்பட்ட சாதியினர் மண்டியிட்டு மரியாதை தந்தமை நகரத்துப் பிள்ளைகளான எங்கள் கண்களுக்கு வியப்பாகத் தெரிந்தது. எங்களோடு பேச முதல் அவர்கள் தலையில் கட்டியிருந்த தலைப்பாகையையோ தோளில் போட்டிருந்த துண்டையோ கழற்றி இடையில் சுற்றிக்கொள்வார்கள். ஏனென்றால் அவரது பேரப்பிள்ளைகளுக்கு முன்னால் பகட்டாக அணிந்துகொள்வது மரியாதையின்மை என்று கருதப்பட்டது. ஊருக்கு வருகை தரும் வெளியூர்ப் பிரமுகர்களுக்கு ஊரார்களை அறிமுகப்படுத்தும் பணியை அப்பப்பாவும், அவருக்கு முதல் அவரது தகப்பனும்தான் எப்போதுமே செய்வார்கள். ஆறு மாமா, இரத்தின மாமா இரண்டு பேருக்குமே அந்த உரிமை தங்களுக்குத்தான் வரவேண்டும் என்ற ஆசை. ஊரில் நடக்கும் எல்லாத் திருமண அல்லது மரண வீட்டு ஊர்வலங்கள் தன் வீட்டுக்கு நூறு யார்ட் அண்மைக்கு வந்ததும் தத்தம் வாத்தியக் கச்சேரிகளை நிறுத்திவிட வேண்டும் என்ற கட்டளையை இரத்தின மாமா அறிவித்த கையோடேயே ஆறு மாமாவும் அதே கட்டளையைப் பிறப்பித்தார். அப்பப்பாவுக்கு இன்னுமொரு சலுகையும் இருந்தது. வருடப்பிறப்பு நாளில் ஊரிலுள்ள எல்லா நாதஸ்வரக் கோஷ்டிகளும் அவரது வீட்டுக்குப் போய்த்தான் முதலாவது கச்சேரி வைக்க வேண்டும். ஆறு மாமா இந்தச் சலுகையைத் தனக்கென்று எடுத்துக்கொண்டதும் இரத்தின மாமா கோபம் கொந்தளிக்க ஆறு மாமாவோடும் அவரது குடும்பத்தோடும் பல வாரங்கள் பேசாமலேயே விட்டுவிட்டார். ஆறு மாமா சாதுரியமாகப் பெருமனதுடன் வேட்டைக்குப் பிறகு வழமையாகச் செய்வது போல ஒரு காட்டுப்பன்றித் தொடையை அனுப்பி வைத்த பிறகுதான் இரத்தின மாமாவின் கோபம் தணிந்தது. இப்படி உரிமைகளைத் தம் வயமாக்குவதற்கு இரண்டு மாமாக்களும் சமர் செய்யும்போது, அதன் விளைவுகள் அச்சுவேலியின் ஒவ்வொரு கல் வீட்டிலும் ஓலைக் குடிசையிலும் எதிரொலித்தன. மரபுவழிகளை மிகக் கவனமாகப் பேணும் ஒரு கிராமம்தான் அச்சுவேலி. கிராமத்து ஆண்கள் தங்கள் உரிமைகளைப் பேணிப் பாதுகாப்பதில் மிகுந்த அக்கறை கொண்டவர்கள். திருமண, மரண வீட்டு ஊர்வலங்கள் போகும் போது புழுதி பறக்கும் ஊர் வீதிகளில் விரிக்கும் வெள்ளைத் துணிகளை வழங்குவது ஊரிலுள்ள வண்ணாரின் உரிமை. அதை ஊர்த் துணிக் கடைக்காரர் செய்ய முனைந்தால் ஊர் பொங்கியெழுந்து தர்ம அடியிலோ கொலையிலோதான் முடிந்திருக்கும். ஒரு குறிப்பிட்ட தாழ்த்தப்பட்ட சாதிப் பெண்களுக்குத்தான் திருமண ஊர்வலங்களில் மண் கலயங்களைக் காவிக்கொண்டு செல்லும் உரிமை இருந்தது. அவர்கள் மண்பானைகளுக்குள் ஊதி ஒரு ஆழமான ஒத்ததிரும் தொனியைக் கிளப்புவார்கள். ஒவ்வொரு சில அடிகளுக்குப் பிறகும் நகர்வதை நிறுத்திச் சில வெள்ளி நாணயங்கள் பானைக்குள் போடப்படும் வரை பொறுத்திருப்பார்கள். நகை வேலை செய்யும் உரிமை ஒரு விசேடமான தட்டார் சாதியினருக்கே. பனந்தென்னைகளில் ஏறிக் கள் இறக்கும் உரிமை இன்னொரு சாதியினருக்கு மட்டும்தான். அனேகமாக எல்லா விஷயங்களிலும் கண்டிப்பான முன்னுரிமை வரிசை பேணப்பட்டது. உதாரணமாக, இரண்டு கிராமக் குடும்பங்கள் கொண்டாட்டங்களில் முதலில் பாடும் உரிமையைப் பாரம்பரியமாக வைத்திருந்தன. வேறு யார் பாடகர்கள் இருந்தாலும் பரவாயில்லை, முதலில் ஒரு குடும்பம் பாடிய பிறகு அடுத்த குடும்பம் தொடரும். மிகவும் தாழ்த்தப்பட்ட ஒரு சாதியினருக்குத்தான் திருமண, மரண வீட்டு விருந்துகளில் எஞ்சியிருக்கும் உணவுகளைச் சேகரிக்கும் உரிமை இருந்தது. செத்துப் போன மாடுகளைக் கொண்டு செல்லும் உரிமை நளவர்களுக்கு மட்டும்தான். சில உயர்த்தப்பட்ட சாதிகளுக்கு மட்டும்தான் காலணிகளை அணியும் உரிமை. இத்தகைய எழுதப்படாத விதிகளெல்லாம் மிகுந்த கட்டுப்பாட்டுடன் கடைப்பிடிக்கப்பட்டன. இப்படியான ஒரு பாரம்பரியம் எங்கெங்கும் படர்ந்திருந்த ஒரு பின்னணியில்தான் மற்றப்படி நல்ல மனதுகொண்ட இரத்தின மாமாவும் ஆறு மாமாவும் தங்களுடைய உரிமைகளுக்காக மல்லுக்கட்டினார்கள். பண்பாடு, பாரம்பரியம் என்ற உணர்ச்சிகள் அவர்களிடம் மேலோங்கி நின்றன. வருங்காலத்தில் எந்தக் குடும்பம் ஊரில் முன்னின்று தழைத்தோங்கி வளரும் என்பது அப்போதே தீர்க்கப்பட வேண்டிய ஒரு விஷயமாக இருந்தது. அதேநேரத்தில், போட்டிக்கு நின்ற இரண்டு குடும்பங்களுக்குமிடையில் ஒரு நிரந்தரமான பிணைப்பு வரப் போகிறது என்ற ஒரு கதை ஊரில் பரவலாகப் பேசப்பட்டது. இந்தக் கதை பரவிய கோடைகால விடுமுறையில் எனக்கு எட்டு வயதுதான் என்றாலும், குடும்பங்கள் இரண்டுக்கும் இடையில் நிலவிய இறுக்கமான பதற்றம் எல்லோருக்கும் போல எனக்கும் புரிந்திருந்தது. ஒருநாள் இரத்தின மாமா வீட்டு முற்றத்தில் நான் விளையாடிக் கொண்டிருந்த போது, ஒரு மீன்காரி தன் பனையோலைக் கடகத்தைக் காவிக்கொண்டு வந்தாள். நிலத்தில் கடகத்தை இறக்கி வைத்துக் கவிழ்த்தாள். வழக்கம் போலப் பெரிதும் சிறிதுமாகப் பலவகை மீன்கள் அதிலிருந்து கொட்டுண்டன. சூறை, வாள்மீன், இறால், நண்டு, கணவாய், சிங்கி இறால், நெய்த்தோலி என்று பலவகை. வல்லையோ பருத்தித்துறையோ ஏதோ பக்கத்தூர்க் கடற்கரை மணல் வைரத்துகள்கள் போல இன்னும் அந்த மீன்களில் ஒட்டிக்கொண்டிருந்தன. மாமிக்கும் அவரது இரண்டு சமையற்காரருக்கும் துணையாக வேடிக்கை பார்க்க அக்கம் பக்கத்திலுள்ளவர்கள் எல்லோரும் ஓடிவந்தார்கள். சமையற்காரர்தான் இறுதி முடிவு எடுப்பவர் என்றாலும், மாமிக்கு முன்னால் வைத்தே பேரம் பேசினார்கள். சமையற்காரர் திருப்தியடைந்து சம்மதம் கொடுத்ததும் மாமியும் சம்மதம் தெரிவித்துத் தலை ஆட்டுவார். அந்தக் காலை வெளிச்சத்தில் மீன்கள் கைமாறக் கூட்டத்தின் கலகலப்பு ஏறிப் பிறகு இறங்கித் தணிந்தது. கொஞ்சம் கலகலப்பு அடங்கிய நேரம் மீன்காரி சட்டென்று மாமியைப் பார்த்து “ஆறு ஐயாவின்ர மகனைச் சுந்தரி அம்மாவுக்குப் பேசுறீங்கள் எண்டு பத்தர் சொன்னார்” என்றாள். எங்களது மைத்துனன் ராஜாவைப் பற்றித்தான் அவள் சொல்கிறாள் என்று அறிந்ததும் எனது காதுகளைத் தீட்டிக்கொண்டேன். இரத்தின மாமாவுக்கு மகன்கள் கிடையாது. சுந்தரி ஒரே மகள். பக்கத்தில் விருந்தினரை உபசரிக்கும் ‘சாலை’ என்ற கொட்டகையில் நின்றிருந்த சுந்தரி நாணத்துடன் தலையைத் தாழ்த்திக்கொண்டாள். அவளுக்குப் பதினாறு வயது. இதுவரை அவளுக்கு நூறு தடவைகளாவது கல்யாண வரன் பேசி வந்த கதை கேட்டிருப்பாள். முதலாவது வரன் பேச்சு வந்த போது அவளுக்கு மூன்று வயது இருந்திருக்கலாம். அல்லது ஒரு வயதாகக் கூட இருந்திருக்கலாம். மாமி பதில் சொல்லாமல் மௌனம் சாதித்தார். “பெடியன் நல்ல வடிவு” மீன்காரி, சுந்தரியைத் திரும்பிப் பார்த்தபடி இளம் பெண்களைக் கல்யாணத்துக்குச் சம்மதிக்க வைப்பதற்குப் பேசும் தெவிட்டுகின்ற குரலில் தொடர்ந்தாள், “படிப்பிலும் கெட்டிக்காரனாம்.” சுந்தரி வெட்கத்துடன் கலகலவென்று சிரித்தபடி, கையில் போட்டிருந்த காப்புகள் கிணுகிணுக்கத் தன் சேலையைச் சரி செய்துகொண்டாள். “சாத்திரியார் பொருத்தம் பாக்கிறார்” மாமி ஒப்புக் கொண்டார். “பொருத்தம் எண்டால்தான் மிச்சம் எல்லாம் நடக்கும்.” “நீங்கள் ஒரு லட்சம் சீதனம் குடுக்கிறியளாம்! மாப்பிளைக்கு அது சரிதான். எப்பவோ ஒருநாள் அரசாங்க அதிபரா வந்திடுவார்” மீன்காரி, சுந்தரியைக் கடைக்கண்ணால் பார்த்தபடி தொடர்ந்தாள். மாமி பதிலேதும் சொல்லவில்லை. மீன்காரி கடகத்தைத் தலையில் தூக்கி வைத்துக்கொண்டு நழுவிப் போனாள். நகை செய்யும் ‘பத்தர்’தான் அச்சுவேலியின் செல்வந்தக் குடும்பங்களின் பாரம்பரியக் கல்யாணத் தரகர். ராஜாவுக்கும் சுந்தரிக்கும் திருமணப் பேச்சைக் கொண்டு நடத்துகிற இந்தத் தரகர் கொஞ்சம் அளவுக்கு மிஞ்சிப் புளுகிற, செருக்கு மிகுந்த, எப்போதும் குங்குமப் பொட்டு வைத்த, சிறிய, மாநிற மனிதர். அவரது தரகு வேலைத் திறமையும் எதையும் பேசி நிறைவேற்றி வைக்கக் கூடிய ஆற்றலும் அச்சுவேலிக்கு வெளியே கூடப் பேர் போனவை. தொலைவிலுள்ள திருகோணமலை மற்றும் கொழும்பு போன்ற நகரங்களில் கூடக் கூலிக்குத் தரகு வேலை செய்து வெற்றி கண்டவர். மெல்லிய திசுக் காகிதத்தில் பென்சிலால் வரைந்த தனது நகை வடிவமைப்புகளைக் காவிக் கொண்டு நாடு முழுவதும் பயணம் செய்யும்போது, அவர் வயதுவந்த வாலிபர்களினதும் யுவதிகளினதும் படங்களையும் ஒரு கட்டாகக் கொண்டு செல்வார். தனது தரகுத் தொழிலைத் திறந்த மனப்பான்மையுடன் அணுகுபவர். ஒரு சாதாரண பெண்ணுக்குப் பெரிய சீதனத்தோடு -ஐம்பதாயிரம் அல்லது ஒரு லட்சம் – பேசுவதும், ஒரு அழகான பெண்ணுக்குச் சில ஆயிரங்களோடு பேசி முடிப்பதும் அவருக்கு ஒன்றுதான். தனது இரண்டு கலைகளையும் -தரகு வேலையையும் நகை செய்யும் பத்தர் வேலையையும் -ஒன்றிணைத்ததால் மிகப் பெரிய செல்வந்தராகி விட்டார். தரகு வேலைக்குச் சீதனத்தின் பத்து வீதத்தை அறவிடுவார். திருகோணமலைக்கோ கொழும்புக்கோ பயணம் செய்யும்போது, கையில் போட்ட தங்க வளைகாப்பும், விரலில் போட்ட வைர மோதிரமும், வேட்டிக்கு மேல் அணிந்திருக்கும் வெள்ளை ஐரோப்பிய மேலங்கியும் அவரது செல்வந்தத்தை உலகத்துக்குப் பறைசாற்றின. இரத்தின மாமா தன் மகளை ஆறு மாமாவின் மகனுக்குக் கைபிடித்துக் கொடுக்கப் பண்ணினால் அது இந்தப் பத்தரின் தரகு வேலையின் சிகரமாகி விடும். அன்று மாலை, காகங்கள் எல்லாம் முருங்கை, வேப்ப மரங்களில் சென்றடைய, வௌவால்கள் இலுப்பம் பழங்களை வேட்டையாடப் படையெடுக்கத் தொடங்கிய நேரத்தில், அச்சுவேலியின் எல்லா வீடுகளிலும் ஒரே செய்தியைப் பற்றித்தான் கதை நடந்தது. இரத்தின மாமா கிணற்றடி மாதுளை மரத்திலிருந்து ஆறு பழங்களை ஆறு மாமா வீட்டுக்கு அனுப்பிவைத்தாராம் (இதற்கும் பிறகு நடந்ததற்கும் தொடர்பு ஏதாவது இருந்ததா என்று நான் பிறகு யோசித்ததுண்டு). பத்தரின் தரகு வேலையால் திருமண நாள் நிச்சயிக்கப்பட்டுவிட்டது. திருமண நாளுக்கு முதல் நாள் மாலை சீதனப் பேச்சு முடிவுற்றுச் சீதனம் மாப்பிள்ளையிடம் கையளிக்கப்படும். திருமண நாள் அருகே வர, இரத்தின மாமாவின் வீட்டில் வேலைகள் மும்முரமாக நடந்தன. பச்சையும் மஞ்சளுமான தென்னோலைகளால் வேயப்பட்ட கிடுகுகளால் பந்தல்கள் கட்டப்பட்டுக் கொன்றை, சம்பங்கி, வெள்ளையும் இளஞ்சிவப்புமான செவ்வரளி, செம்மஞ்சள் நிறத் தென்னம்பூ போன்ற பலவகைப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டன. கூரைக்குக் கீழே வெள்ளைத் துணிகள் கட்டப்பட்டன. தரையில் இந்தியக் கம்பளங்கள் விரிக்கப்பட்டன. ஒரு பந்தலில் மிகையாக அலங்கரிக்கப்பட்ட கூரைக்குக் கீழே உயர்த்தி வைக்கப்பட்ட திண்ணைதான் மணவறை. அதிலே நண்பர்களோடு மணமகன் அமர்ந்திருப்பார். அவருக்கு முன்னால் ஒரு பித்தளைக் குடத்தின் மேல் வெற்றிலைகளும், மஞ்சள் எலுமிச்சம் பழமும், பூக்களும் அலங்கரிக்கப்பட்டிருக்கும். அவை மகப்பேற்றுக்கான சின்னங்கள். இரத்தின மாமா காசியிலிருந்து கையால் நெய்யப்பட்ட சரிகை வேலைப்பாடுள்ள கூறைப்புடவை ஒன்றைக் கொண்டுவர ஒழுங்குபடுத்தியிருந்தார். குங்கும நிறத்தில் மின்னிய அந்தப் புடவையின் விலை அந்தக் காலத்திலேயே மூவாயிரம் ரூபாய். வளவின் வாசலில் நிறுத்தப்பட்டிருந்த ஐந்து உள்ளூர்த் தவில் வாத்தியக்காரரைத் தவிர, தஞ்சாவூரிலிருந்து இரண்டு சங்கீதக் கோஷ்டிகளை வீட்டுக்குள் கச்சேரி வைக்கக் கொண்டுவந்திருந்தார். ஒவ்வொரு விருந்தினரின் வருகையையும் வாசற் தவில்காரர் அறிவிக்க, சிறுவர் குழாம் சீனப்பட்டாசு வெடிப்பதற்கு ஓடிப் போக, உள்ளேயிருக்கும் ஒரு சங்கீதக் கோஷ்டி கச்சேரியை ஆரம்பிக்க, மக்கள் கையிலிருக்கும் எல்லா விதமான ஆயுதங்களாலும் வெடிவைத்துக் கோலாகலமாக விருந்தினர்களை வரவேற்பார்கள். ஒவ்வொரு நாளும் வீட்டுக்குத் திருமணப் பரிசுகள் ஊர்வலமாக வந்தபடி இருந்தன. இரண்டு பேர் சுமக்கும் ஒரு தடியின் இரண்டு பக்கமும் தொங்கும் வாழைக் குலைகள், இலுப்பெண்ணை, நல்லெண்ணைச் சாடிகள், கால்நடைகள், கோழிகள், அரிசி மூட்டைகள், சாராயப் போத்தல்கள், சுருட்டுப் பெட்டிகள், கத்தரி, பலா, முருங்கை போன்ற காய்கறிகள், மாம்பழம், பப்பாசிப்பழம், ஜம்பு போன்ற பழவகைகள். கொஞ்சம் வறிய மக்கள் திருமண விருந்துக்குச் செய்யப்படும் கறிகளுக்குக் கூட்டுச் சேர்ப்பதற்காகத் தேங்காய்களை அனுப்பி வைத்தார்கள். திருமணத்துக்கு முதல் நாள் ஒருவர் மாமரத்துக்குக் கீழே உட்கார்ந்தபடி மணித்தியாலக் கணக்காக நெற்றியில் பொட்டாக அணிவதற்காகச் சந்தனம் அரைத்துக்கொண்டிருந்தார். அரைத்த சந்தனம் வெள்ளிப் பேழைகளில் போடப்பட்டு விருந்தினர்கள் வரும்போது அவர்களுக்குப் பன்னீர் தெளித்த பிறகு, சந்தனப் பொட்டு போடுவதற்காக நீட்டப்படும். வெளியே மாந்தோப்பில் மூன்று கல் வைத்த அடுப்புகளில் பென்னாம்பெரிய கிடாரங்கள் சோறு கறி சமைப்பதற்காக வைக்கப்பட்டன. திருமணத்துக்கு முந்நூறு விருந்தினராவது வருவார்கள். அதைத் தவிர, தாழ்த்தப்பட்ட சமூக வேலையாட்களுக்கும் மிஞ்சிய உணவு வழங்கப்படும். அது எல்லா விருந்துகளின் பின்னரும் நடக்கும் பாரம்பரிய வழக்குமுறை. முதலில் பெண்கள் ஆண்களுக்கு உணவு பரிமாறுவார்கள். அதற்குப் பிறகு பெண்களும் வேலையாட்களும் சாப்பிடுவார்கள். அதற்குப் பிறகு தாழ்த்தப்பட்ட சமூகத்து வேலையாட்களுக்குப் புளியந்தோப்பிலோ மாந்தோப்பிலோ உணவு வழங்கப்படும். ஏனென்றால் அவர்களுக்கு வீடுகளுக்குள் வர அனுமதி கொடுப்பதில்லை. ஒரு தேர்ந்த பரிசுக் கிடாய் ஆடு வெட்டப்பட்டது. பந்தல்கள் அலங்கரிக்கப்பட்டன. சலவைக்கார வண்ணார் ஊர்வலம் செல்வதற்கு விரிப்பதற்காகக் கட்டுக் கட்டாக வெள்ளைத் துணி கொண்டுவந்தார். இரண்டு யானைகள் பாகர்களோடு வந்தன. மாப்பிள்ளையும் பெண்ணும் அவற்றில்தான் கோவிலுக்குப் போய் வருவார்கள். பக்கத்து ஊர் சங்கீதக் கோஷ்டிகளெல்லாம் அருகில் கூடாரம் போட்டிருந்தார்கள். சாத்திரியார், வழக்கறிஞர், பத்தர் அவர்களோடு ஆறு மாமா பிற்பகல் நேரம் வருவார். அப்போதுதான் சீதனம் பேசி நிர்ணயிக்கப்படும். இரத்தின மாமா முற்றத்தில் ஒரு மேசைக்கருகே உட்கார்ந்திருந்தார். மேசையில் ஒரு கிண்ணத்தில் மாதுளங்கொட்டைகளும் அதற்கருகே ஒரு போத்தல் சாராயமும் வைக்கப்பட்டிருந்தன. நானும் என் ஐந்து சகோதரர்களும் இரத்தின மாமாவைச் சுற்றி முண்டியடித்துக்கொண்டு நின்றோம். அவர் சிவப்பும் தங்கமுமாகச் சரிகை வைத்த தலைப்பாகை அணிந்திருந்தார். அவருடைய மேலங்கி முழங்கால் வரைக்கும் தொங்கியது. மேலே கழுத்துவரைப் பொத்தான் போடப்பட்டிருந்தது. அடிக்கடி கொஞ்சம் மாதுளங்கொட்டைகளை வாய்க்குள் போட்டு, ஒரு மிடறு சாராயமும் குடித்தார். பத்தர் சாத்திரியாருடன் வந்து சேர்ந்தார். “இருங்கோ” என்று சொன்ன இரத்தின மாமா “எங்கே இந்த ஆறு? தாமதமாப் போச்சு…” என்று கேட்டார். “கெதியா வந்திடுவார்” என்று பத்தர் தேற்றினார். இரத்தின மாமா பொறுமையில்லாமல் மேசையில் விரல்களால் தாளம் போட்டார். இன்னும் கொஞ்சம் சாராயம் குடித்தார். தட்டாருக்கோ சாத்திரியாருக்கோ சாராயம் கொடுத்து உபசரிக்கவில்லை. சாதி ஒழுங்குமுறையில் அவர்களுக்கு உட்காரும் தகுதி வழங்கப்பட்டிருந்தாலும் சேர்ந்து உண்பதற்கோ குடிப்பதற்கோ தகுதி வழங்கப்படவில்லை. இரத்தின மாமா சிந்தனையில் மூழ்கியிருந்தார். இன்றைய தினம் அவரது செல்வத்தின் பெரும்பகுதியைக் கொடுத்து விடப் போகிறார். தனக்கென்று இருந்த வீட்டையும் கொஞ்சம் வருமானத்துக்காக ஒருசில வயற்காணிகளையும் மட்டும்தான் வைத்துக்கொள்ளப் போகிறார். சீதனம் கொண்டு வருவதற்கு யாராவது மகன் இருந்திருந்தால் அவரை இது இவ்வளவாகப் பாதித்திருக்காது. கடைசியில் ஆறு மாமா ஒரு வழியாக வந்து சேர்ந்தார். வெள்ளைத் தலைமுடி குடுமியாகப் போடப்பட்டு, உருக்கி வார்த்தது போல இருந்த அவரது காதுகளில் கடுக்கன் தோடுகள் தொங்க, மிகவும் ஒல்லியாக மிடுக்காக இருந்தார். அவரும் முழங்கால் வரைக்கும் கறுப்பு நிற மேலங்கி அணிந்திருந்தார். “இதைக் கெதியா முடிப்பம்” என்றார் இரத்தின மாமா. “சரி, சரி” என்றபடி உட்கார்ந்த ஆறு மாமா, ஒரு சின்ன வெள்ளி உரலையும் உலக்கையையும் பையிலிருந்து எடுத்து அதற்குள் கொஞ்சம் வெற்றிலை பாக்கைப் போட்டு இடிக்க ஆரம்பித்தார். இரத்தின மாமா தாழ்த்திய குரலில் பேச ஆரம்பித்தார். “சகுனங்கள் எல்லாம் சரியாம். சாதகமும் நல்ல பொருத்தம் எண்டு சாத்திரியார் சொல்லுறார்.” எனது இருதயம் அடிக்கும் சத்தம் எனக்குக் கேட்டது. ‘சகுனம்’ என்ற சொல் ஏதோ பயங்கர மர்மங்களின் ஆட்டங்களை நினைவுக்குக் கொண்டுவந்தது. “அப்பிடித்தான் கேள்விப்பட்டன்” வெற்றிலை பாக்கை இடித்தபடி ஆறு மாமா சொன்னார். விருந்தினர் பந்தலில் பெண்கள் பரிவாரம் சூழ நின்ற சுந்தரியைக் கண்டேன். எல்லோரையும் போல அவளுக்கும் எதிர்பார்ப்பும் உற்சாகமும் நிறைந்திருந்தாலும் இந்தச் சந்தர்ப்பத்துக்குத் தகுந்த மாதிரி நாணமும் தன்னடக்கமும் கொண்டவளாய் நின்றாள். வழக்கறிஞர் கை நிறைய வீடு – காணி உறுதிகளைத் தூக்கிக் கொண்டு முற்றத்துக்கு வர, இரத்தின மாமா அவற்றைக் கையில் வாங்கிக்கொண்டார். “சுன்னாகத்து வயல் காணி எல்லாவற்றையும் எனது மகளுக்கு எழுதிவிடப் போகிறேன்” என்று இரத்தின மாமா ஆறு மாமாவைப் பார்த்துச் சொன்னார். “தவறணைக்குப் பின்னாலே உள்ள போயிலைக் காணி எப்பிடி?” ஆறு மாமா கேட்டார். “அதுவும் அவளுக்குத்தான்” என்றார் இரத்தின மாமா. ஆறு மாமா தொடர்ந்து வெற்றிலை பாக்கை இடித்துக்கொண்டிருந்தார். “அது இரண்டுக்கும் இருபத்தையாயிரம் பெறுமதி” இரத்தின மாமா தொடர்ந்தார் “ஐம்பதாயிரம் காசாக. மிச்சத்துக்கு இந்தக் காணியில் ஒரு பங்கையும் பக்கத்து வீட்டையும் குடுக்கிறன். வா, எல்லைக் கோட்டைக் காட்டுறன்.” அத்துடன் அவர்கள் எழுந்து கிணற்றடி நோக்கிப் போனார்கள். நானும் எனது சகோதரர்களும் பின் தொடர்ந்தோம், மற்ற வீட்டுக்காரர்களும் கூட்டமாகத் தொடர்ந்தார்கள். இரத்தின மாமா கிணற்றடியில் நின்று, மாதுளந்தோப்பின் நடுவே வளர்ந்திருந்த ஒரு மாமரத்துக்கு அப்பால் சுட்டிக் காட்டி “இதுதான் எல்லை” என்றார். “ஓ” என்றார் ஆறு மாமா. “பக்கத்துக் காணிக்குக் கிணறில்லாட்டி என்ன பிரியோசனம்? இரத்தின மச்சான், எல்லைக் கோட்டைக் கிணத்துக்கு நடுவால போடு. அப்பிடியெண்டா பக்கத்துக்கு வீட்டுக்குத் தண்ணி உரிமை இல்லாமல் போகாது.” இரத்தின மாமாவின் முகம் கறுத்தது. தனக்குப் பிரியமான மாதுளை மரத்தை ஏறிட்டுப் பார்த்தார். சீதனக் காணிக்குக் கிணற்றுக்கு நடுவில் எல்லைக் கோடு போட்டால், அந்த மரம் இனி அவருக்குச் சொந்தமில்லை. “கிணறு பாவிக்கிற உரிமையை எழுதித் தாறன்” இரத்தின மாமா சொன்னார், “ஆனால் எல்லைக் கோடு மாமரத்தடியோட போகட்டும்.” “நியாயமில்லாமல் கதையாத” ஆறு மாமா பதில் சொன்னார், “கிணத்துக்குள்ளால எல்லை போகட்டும். அதுதான் இலகுவான தீர்வு.” “இல்லையில்லையில்லை!” இரத்தின மாமா பிடிவாதத்துடன் முகத்தைக் கோணினார். பத்தர், இரத்தின மாமாவின் காதுக்குள் ஏதோ குசுகுசுத்தார். அது இரத்தின மாமாவை மிகவும் குழப்பிவிட்டது. பத்தர் பிறகு ஆறு மாமாவின் பக்கம் திரும்பி ஏதோ சொன்னார். “நான் சொல்லுறதைக் குறை நினைக்காத இரத்தி… கிணறு அல்லது கிணத்தின் பாதி என்ர மகனுக்கு வாற காணியில கட்டாயம் இருக்க வேணும்” ஆறு மாமா சொன்னார். பத்தர் மீண்டும் இரத்தின மாமாவின் காதில் ஏதோ குசுகுசுத்தார். இரத்தின மாமா “இல்லை!” என்று அடித்துச் சொல்லிவிட்டார். பத்தர், ஆறு மாமாவின் பக்கம் திரும்பி சலாம் போட்டுவிட்டு “கிணத்தில என்ன இருக்கு? நீங்கள் எப்ப வேணுமெண்டாலும் இன்னுமொரு கிணத்தைக் கிண்டிப் போட்டுப் போகலாம்” என்றார். “நான் கேட்ட மாதிரி எல்லைக் கோடு போடாட்டில்…” ஆறு மாமா தனது உரிமைகளைப் பாதுகாக்கும் கறாரான தொனியில் சொன்னார், “இந்தக் கலியாணம் நடக்காது!” “ஐயா! ஐயா!” பத்தர் கைகளைப் பிசைந்தபடி கெஞ்சினார். “மடையன்!” என்று இரத்தின மாமா முணுமுணுக்க, ஆறு மாமா திகைத்துப் போனார். இலங்கையில் ‘மடையன்’ என்று சொல்வது பெரிய அவமரியாதை. “சுத்த மடையன்” என்று திரும்பவும் சொன்ன இரத்தின மாமா, “பாழாப்போன கலியாணம்!” என்று சொல்லிவிட்டுத் தோப்புக்கூடாக வீட்டை நோக்கி நடக்க ஆரம்பித்தார். சீதனப் பேச்சுவார்த்தை குழம்பியதால் திருமணம் நிறுத்தப்பட்டது. பந்தல்களும் தோரணங்களும் அவிழ்க்கப்பட்டன. அன்றிரவு சாப்பிடும்போது “அந்தப் பிசாசு! அவன் என்ர கிணத்தடி மாதுளையைத்தான் கண் வச்சான்!” என்று இரத்தின மாமா கத்தினார். அடுத்த நாள், மலாயாவில் பெரிய தோட்டம் வைத்திருந்த தன் மைத்துனருக்கு அவரின் மகனுக்கும் சுந்தரிக்கும் கல்யாணம் பேசிக் கடிதம் அனுப்பினார். இரண்டு வாரத்துக்குள் மாப்பிள்ளை வந்து சேர்ந்தான். திருமணம் கோலாகலமாக நடந்தது. யாழ்ப்பாண நகரத்திலிருந்து ஒரு மின்னியற்றி இயந்திரம் வாடகைக்கு எடுத்து வீட்டைச் சுற்றியும் மரங்களுக்கு மேலும் வண்ண மின்சார விளக்குகளெல்லாம் போட்டு அமர்க்களம் பண்ணிவிட்டார். இந்த விளையாட்டெல்லாம் ஆறு மாமாவைப் பிரமிக்க வைக்கத்தான். ஆறு மாமா திருமணத்துக்கு வருகை தரவில்லை. ஆனால், கொஞ்ச நாள் போனதும் இரத்தின மாமாவுக்குக் காட்டுக் கோழியும், காட்டுப் பன்றித் தொடைகளும், மான் இறைச்சியும் வழக்கம் போல வேட்டைக்குப் பின்னர் அனுப்பி வைக்கத் தொடங்கினார். ராஜாவுக்குக் கல்யாணப் பேச்சு நேரம் சுந்தரிமேல் காதல் பிறந்து விட்டதால், பல வருடங்கள் கல்யாணம் வேண்டாம் என்று ஒற்றைக் காலில் நின்றான். பிறகு ஒருநாள் ஒரு கொழும்புப் பெண்ணைச் சந்தித்ததும் மனம் மாறிவிட்டான். அவளுக்குப் புத்தளத்தில் பெரிய தென்னந்தோப்புகள் இருந்தன. அவள் டென்னிஸ் விளையாடுவாள். கார் கூட ஓட்டத் தெரியும். அவள் உதட்டுச் சாயம் பூசி, கையில்லாத ரவிக்கையும் அணிந்ததைப் பார்த்து ஊரார் திகைப்பில் ஆடிப் போய்விட்டார்கள். ஆனால் அவள் ஆறு மாமாவின் வயதான காலத்தில் நல்ல மருமகளாக அவரைச் சந்தோஷமாக வைத்திருந்தாள். அவளுக்காக வீட்டுக்குப் பக்கத்தில் ஒரு டென்னிஸ் மைதானத்தையே ஆறு மாமா கட்டிக் கொடுத்தார். ஆனால் அவளுக்கு மூத்த மகன் பிறந்த கையோடு அவளது டென்னிஸ் ஆர்வம் விட்டுப் போயிற்று! இரத்தின மாமா இறந்தபோது, எனக்குப் பத்து வயதுகூட இல்லை. ஆனால் வேலைக்காரி ஒரு கிண்ணத்தில் கிணற்றடி மாதுளைமரத்தின் பழக் கொட்டைகளைக் கொண்டு வரும்போது அவரது வட்டமான, சுருக்கமில்லாத முகத்தில் மலரும் மகிழ்வு எனக்கு இப்போதும் கண் முன்னால் தெரிகிறது. அந்த மரம் அச்சுவேலி முழுக்கப் பிரபலமான மரமாக இருந்தது. இன்னும் இருக்கிறது. Artist : Arpitha Reddy எழுத்துக்கினியவன் என்ற புனைபெயரில் மொழியாக்கங்கள் செய்துவரும் ந.அசோகன் தமிழ் – ஆங்கிலம் என இருவழிகளிலும் மொழியாக்கங்களைச் செய்து வருகிறார். இவரது ஆங்கில மொழியாக்கங்கள் Copper Nickel, Lunch Ticket, Jaffna Monitor ஆகிய இதழ்களில் வெளியாகியுள்ளன. தமிழ் மொழியாக்கங்கள் காலச்சுவடு, வீரகேசரி ஆகியவற்றில் வெளியாகியுள்ளன. இவரது ஆங்கில மொழியாக்கமொன்று Gabo Prize-க்கான இறுதிப் பட்டியலில் தேர்வானது. https://thadari.com/the-pomegranate-tree-t-tambimuttu-short-story/?fbclid=IwdGRleAPHMyRleHRuA2FlbQIxMQBzcnRjBmFwcF9pZAo2NjI4NTY4Mzc5AAEeCFdVxcuG8DMvh6BM5WiRfhB9f2VThtnfL0rsSEfZH3RPMi9z_Vw_uwQTi2Y_aem_tH25YO_Qwhrh963g_Z5J3w4 points- விடுதலைப் புலிகள் மருத்துவ அணியின் சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம்!
சரித்திரமாகும் சல்லியர்கள் – விமர்சனம்! 1 Jan 2026, 8:53 PM மூன்றாம் உலகப் போர் எப்போது வரும் எப்போது வரும் என்று இன்னும் முட்டாள்தனமாகப் பேசிக் கொண்டு இருக்கிறோம். உண்மையில் மூன்றாம் உலகப் போர் வந்து நடந்து முடிந்து பதினாறு வருடம் ஆகி விட்டது. அந்தப் போரில்தான் ஈழம் அழிக்கப்பட்டது. தமிழினத்துக்கு எதிராக திராவிடம், தேசியம், கம்யூனிசம் எல்லாம் கரம் கோர்த்தன. அண்டை மாநில அரசியல்கள் வஞ்சகம் செய்தன. வட இந்தியா தமிழனை விட சிங்களனே தனக்கு சொந்தம் என்று, இறையாண்மை இல்லாத குறையாண்மையோடு செயல்பட்டது. இந்தியாவும் பாகிஸ்தானும், இந்தியாவும் சீனாவும் எதிரி நாடுகள். ஆனால் ஈழத்தை அழிக்கும் விஷயத்தில் இவை எல்லாம் ஒன்றுக்கு ஒன்று ‘தொடுப்பு’ நாடுகளாக மாறி ஈழத்தை அழித்தன. ஐ நா சபையிலும் இந்திய பாதுகாப்பு ஆலோசகர், வெளியுறவுத் துறை செயலர் பதவிகளிலும் , இலங்கை ராணுவ ஆலோசனை பதவிகளிலும் மலையாளிகள் உட்கார்ந்து , ஒரு பக்கம் தமிழ் நாட்டில் மாய்மாலம் செய்து பிழைத்துக் கொண்டே . தமிழினத்துக்கு எதிராக அவிழ்த்துப் போட்டார்கள். ஏகாதிபத்தியத்துக்கு எதிராக எப்போதும் இருப்போம் என்று வரலாற்றுப் புத்தகங்களை வழித்து நக்கிக் கொண்டிருக்கும் கியூபா, இலங்கைக்கு உதவி செய்ததன் மூலம் நியாயம் துறந்து அம்மணமாக நின்றது . பிரபாகரன் முன்பு பிச்சைக்காரன் ஆனான் பிடல் காஸ்ட்ரோ. இத்தனை ஈன தேசங்கள், ஈனப் பிறவிகள் தமிழினத்தின் மானத்தோடு விளையாடிய அதுதான் மூன்றாம் உலகப்போர். இனி ஒரு போர் வந்தால் அது நான்காம் உலகப் போர். உலகமே எதிர்த்து நின்றாலும் அஞ்சாமல் மானத்தோடு மனசாட்சியோடு போர் அறத்தோடு களமாடி தோற்றாலும், வரலாற்றில் வென்று, அந்த அநியாயத்துக்கு துணை போன தேசங்கள் ஒவ்வொன்றும் தனக்கு முகத்தில் தாங்களே காறி உமிழ்ந்து கொள்ளும் நிலைமையை உருவாக்கி வரலாற்றில் நிலைத்தது விடுதலைப் புலிகள் அமைப்பு. குறைகளே இல்லாத அமைப்பு அல்ல அது. ஆனால் அதை விட சிறப்பான ஓர் இனப் போராளிகள் குழுவை இந்த உலகம் கண்டதில்லை. இனி காணப் போவதும் இல்லை. தனது படையில் இருந்த கடைசி வீரனின் உயிரும் தனது மனைவி மகன்களின் உயிரும் ஒன்று என்று எண்ணிய ஒரு போராளி (வஞ்சகர்கள் பார்வையில் தீவிரவாதி; பயங்கரவாதி) இந்த உலகத்தில் இருந்தான் என்ற உண்மையை, இனி நீங்கள் கற்பனையில் சொன்னாலும் இந்த உலகம் நம்பாது. லாஜிக்கா இல்லையே என்று சொல்லி விட்டு நகர்ந்து விடும். ஒரு நாடே ஓர் பெரும்பான்மை இனமே, சுற்றி வளைத்து நிராயுதபாணிகளை ஆயுதத்தால் கொன்று பெண்களை எல்லாம் சீரழித்து அழிக்கும் வன்முறையில் வெறியாட்டம் ஆடிய நிலையில், அண்டை நாடுகள் எல்லாம் வக்கிரத்தோடு வேடிக்கை பார்த்த சூழலில், புலிகள் படையில் காயம்பட்ட போராளிகளை மீட்டு, எந்த வசதிகளும் இல்லாத நிலையில், தரையில் தோண்டப்பட்டு உருவாக்கப்பட்ட – பங்கர்கள் எனும் – அடிப்படை வசதிகள் கூட இல்லாத, சிறிய, மண் சுரங்க அறைகளில், உயிருக்கு ஆபத்தான நிலையில் போராடும் அந்த போராளிகளை மீட்க, உயிரைப் பணயம் வைத்து, பசி பட்டினி கிடந்து, குடும்பத்தை இழந்து வாழ்வை இழந்து, போராளிகளைக் காப்பாற்றிய, விடுதலைப் புலிகள் மருத்துவ அணியின் பணி எப்படிப்பட்டது என்பதை சொல்லும் படம் இது. ஆம். விடுதலைப் புலிகள் அமைப்பின் மருத்துவ அணியின் பெயர் சல்லியர்கள். சிங்கள மிருகங்களால் அம்மா, அப்பா, உறவுகள், காதல், பாசம் வீடு, வாசல், சொத்து சுகம் இழந்து, எங்கெங்கோ போய் ஒரு வழியாக மருத்துவம் படித்து… அயல்நாட்டுக்கு போய் மருத்துவம் பார்த்தால் கோடி கோடியாக சம்பாதிக்கலாம் என்ற சூழலில் அதை விட்டு விட்டு… தாய் மண்ணை மீட்கும் போராளிகளைக் காப்பற்ற ஈழம் வந்து…. ஒவ்வொரு நொடியும் மரணத்தை எதிர்பார்த்து வாழ்ந்து… தங்கள் மேல் அதிக ஆத்திரத்தோடு குறி வைக்கும் சிங்களப் படையினரை சமாளித்து, பணியாற்றிய மாவீர மருத்துவர்கள் இந்த சல்லியர்கள். எத்தனை சிலுவைகளைப் போட்டாலும் இந்த சல்லியர்கள் சுமந்த சிலுவைகளை செஞ்சிலுவைச் சங்கம் கூட சுமந்தது இல்லை. எனினும் ஒருவன் அடிபட்டு உயிருக்கு ஆபத்து என்று வந்தால் அவன் யாராக இருந்தாலும் ஒரு மருத்துவர் என்ன செய்ய வேண்டும்? அதில் இந்த சல்லியர்கள் எவ்வளவு தெய்வத்தன்மையோடு இருந்தார்கள்… அதன் விளைவு என்ன? என்பதே இந்தப் படம். இன உணர்வு இல்லாவிட்டாலும் கூட, மனசாட்சி உள்ள, சாப்பாட்டில் கிரிஸ்டல் சேர்த்துக் கொள்கிற எல்லோரும் கூட, இந்த படத்தைப் பார்த்தால் நெகிழ்ந்து போவார்கள். அப்படி ஒரு கதை. அப்படி ஒரு களம். ஓர் இயக்குனராக மேக்கிங்கில் அசத்தி இருக்கிறார் கிட்டு. தன்னை மேதகு முதல் பாகத்திலேயே நிரூபித்தவர் அவர். கதை நிகழும் பின்புலம், லொகேஷன்கள், ஷாட்கள், ஃபிரேம்கள், படத்துக்கு அவர் கொடுத்து இருக்கும் டோன் எல்லாம் அபாரம். நடிக நடிகையர் தேர்வு, அவர்களுக்கான கெட்டப் எல்லாம் அபாரம். சின்னச் சின்ன நடிகையர்களைக் கூட பொருத்தமாக தேர்ந்தெடுத்து சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். ஒரு போராளியின் உயிரைக் காப்பாற்ற, ஒரு சல்லியர் மருத்துவர் ரத்தம் கொடுத்து விட்டு பட்டினியோடு அந்தப் போராளிக்கு, அறுவை சிகிச்சை செய்யும் பணியில், அந்த குண்டுக் காயம் பட்ட இடத்தைச் சுற்றி அந்த மருத்துவர் ஆட்காட்டி விரலால் அழுத்திச் சுழற்ற, அதே நேரம் சிங்கள ராணுவ முகாம் அதிகாரி ஒருவர், தான் சுகமாக அருந்தும் கோப்பைக்குள் விரலை விட்டு ஆள்காட்டி விரலால் சுழற்றும் காட்சியை, டிரான்சிஷன் செய்து ஒப்புமைப்படுத்திக் காட்டும் இடம், இயக்குனருக்கு மகுடம். ரிக்ஷாக்காரன் படத்தில் ”அங்கே சிரிப்பவர்கள் சிரிக்கட்டும்…” பாட்டில் எம் ஜி ஆர் பாதிக்கப்பட்ட குழந்தையின் புன் சிரிப்பை ரசித்துக் கொண்டிருக்க, அயோக்கியக் கூட்டம் ஆடிப் பாடிக் குடித்துக் கொண்டு ஆபாச நடனம் பார்த்துக் கொண்டு ஆணவச் சிரிப்பு சிரித்துக் கொண்டிருக்கும். அதற்கு இணையான காட்சி, சல்லியர்கள் படத்தில் வரும் இந்தக் காட்சி. சிபி சதாசிவத்தின் ஒளிப்பதிவு ஒரு படிம ஓவியம் போல படத்துக்கு உயிர் கூட்டுகிறது. கென் மற்றும் ஈஸ்வரின் இசை, இளங்கோவனின் படத் தொகுப்பு இரண்டும் நேர்த்தியான பங்களிப்பை செய்துள்ளன. முஜிபுர் ரஹ்மானின் கலை இயக்கம், பூங்குயில் கிட்டுவின் ஆடை வடிவமைப்பு இரண்டுக்கும் நூற்றுக்கு நூறு மார்க். சிகையலங்காரமும் சிறப்பு. சற்றே துருத்திக் கொண்டு தெரிந்தாலும் அப்துலின் மேக்கப்பும் பல இடங்களில் அசத்துகிறது. நாயகியாக பெண் மருத்துவராக நடித்திருக்கும் சத்யா தேவியிடம் எல்லோரும் ஒரு கேள்வியைக் கேட்க வேண்டும்.கேட்காமல் விட்டு விடாதீர்கள். “உண்மையை சொல்லுங்கள். நீங்கள் விடுதலைப் புலிகள் படையில் எத்தனை நாள் பயிற்சி எடுத்தீர்கள். எத்தனை நாள் சல்லியர்கள் அமைப்பில் பணியாற்றினீர்கள். இல்லவே இல்லை என்று எல்லாம் பொய் சொல்லக் கூடாது” அப்படி ஒரு அட்டகாசமான நடிப்பு.. இல்லை இல்லை.. இருத்தல்.. இல்லை இல்லை அதுவாகவே ஆதல். அற்புதம் சத்ய தேவி. வாழ்க. வளர்க, சக மருத்துவராக வரும் மகேந்திரனும் அப்படியே சிறப்பாக நடித்துள்ளார். படமாக்கல் அளவுக்கு திரைக்கதை பலமாக இல்லை. சல்லியர்கள் வாழ்வு, இலங்கை ராணுவத்தின் கொடுமைகள், போராளிகளின் தனிப்பட்ட வாழ்வு இழப்புகள் இவற்றில் எதற்கு முதன்மை முக்கியத்துவம் கொடுத்து, எதை எந்த அளவில் சொல்வது என்பதில் தெளிவின்மை காரணமாக, ஒன்றை இடித்துக் கொண்டு வந்து இன்னொரு விஷயம் நிற்கிறது. அதேபோல இந்தப் படத்தில் முக்கியமாக வலியுறுத்தப்படும் விஷயம் சிங்கள ராணுவத்தில் யாருக்கு நடக்கிறது என்ற விஷயத்தைக் கூட இன்னும் தீவிரமாக யோசித்து இருக்கலாம். அப்படி சொன்னால் அதில் தவறும் இருக்காது. சிங்கள அரசியல் தலைவர் ஒருவரின் மகன் கால்பந்து விளையாட்டை ஊக்குவிக்க யாழ்ப்பாணம் வருகிறான். ”சுட்டு விடுவோமா?” என்று கேட்கப்பட்ட போது,” நல்ல விசயத்துக்கு வருகிறான். இப்போது சுட்டால், நாம் விளையாட்டுக்கு எதிரான இயக்கம் என்று ஆகிவிடும். வேண்டாம் “என்றார் பிரபாகரன். ஆனால் அவன்தான் பிரபாகரன் இறந்த பிறகு யாழ்ப்பாணம் முழுக்க சாராயக் கடைகளைத் திறந்து போதை ஆற்றை ஓட விட்டான். எனவே அந்த சிங்கள கதாபாத்திரம் எது என்பதில் இன்னும் இறங்கி அடித்திருக்கலாம். அதே போல ரத்தம் சேகரிக்கப்பட்டு இருக்கும் பைகளை, சிங்கள ராணுவ அதிகாரி காலால் மிதித்து உடைப்பதை பெண் மருத்துவர் நேரில் பார்க்கவில்லை. ஆனால் அவர் யோசிக்கும் போது,அந்தக் காட்சி அவருக்கு விஷுவலாக வருகிறது. அது பொருத்தமாக இல்லையே. ‘இல்லை இல்லை.. நடந்த விஷயத்தை அவர் இமாஜினேஷன் செய்கிறார்..’ என்று ஒரு வாதத்துக்கு எடுத்துக் கொண்டால் கூட, நடந்த சம்பவத்தில் மருத்துவர் இமாஜின் செய்து பார்க்க, அம்மா அப்பா கொல்லப்படுவது முதல் இதை விட முக்கிய சம்பவங்கள் அந்தக் காட்சியிலேயே இருக்கு, எனவே அப்போதும் பொருத்தமாக இல்லை. இப்படி சில குறைகள் இருந்தாலும், எடுத்துக் கொண்ட கதை, சூழல், படமாக்கல், நடிப்பு, கருத்தியல், போன்ற வகைகளில் உயர்ந்து நிற்கிறது படம். ஒவ்வொருவரும் ஒரு முறையாவது பார்க்க வேண்டிய படம் சல்லியர்கள்.. கண்ணீரும் ரத்தமும்.. மகுடம் சூடும் கலைஞர்கள் சத்ய தேவி, கிட்டு. https://minnambalam.com/salliyargal-tamil-film-review-2026/4 points- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
4 points- வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
இன்று வெனிசுலாவில் அரங்கேறி வரும் அமெரிக்காவின் அதே "கடத்தல்" தந்திரம், முப்பத்து மூன்று ஆண்டுகளுக்கு முன்பு ஆப்பிரிக்காவின் ஒரு மண்ணில் மிக மோசமாகத் தோல்வியடைந்தது. அந்த வரலாற்றுப் பாடத்தின் பெயர்: 'Mogadishu War' (1993). 1993-ல் சோமாலியாவின் உள்நாட்டுப் போரில் தலையிட்ட அமெரிக்கா, அங்கிருந்த முக்கியத் தலைவர்களைக் கடத்தத் திட்டமிட்டது. இதற்காக உலகின் மிகச்சிறந்த படைப்பிரிவாகக் கருதப்படும் Delta Force மற்றும் Rangers களமிறக்கப்பட்டனர். நவீன ஆயுதங்கள், அதிநவீன ஹெலிகாப்டர்கள் என ஒரு சினிமா பாணியில் அந்தத் தாக்குதல் தொடங்கியது. அமெரிக்காவின் கர்வத்தை உடைக்கும் விதமாக, சோமாலிய வீரர்கள் எளிய ஆயுதங்களைக் கொண்டு அமெரிக்காவின் பெருமைமிகு இரண்டு பிளாக் ஹாக் (Black Hawk) ஹெலிகாப்டர்களைச் சுட்டு வீழ்த்தினர். வானில் பறந்த அந்த இரும்புப் பறவைகள் மண்ணில் சரிந்தபோது, அமெரிக்காவின் திட்டமும் சுக்குநூறானது. ஒரு சில மணிநேரங்களில் முடியும் என்று நினைத்த அந்த நடவடிக்கை, 15 மணிநேரக் கொடூரப் போராக மாறியது. அடி என்றால் அப்படி ஒரு அடி…கனவிலும் கூட அப்படி ஒரு அடிவிழும் என நினைத்து பார்த்திருக்க மாட்டார்கள்… அந்த எதிர்த்தாக்குதலில் 18 அமெரிக்க வீரர்கள் கொல்லப்பட்டனர். 73-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். மிக முக்கியமாக, உயிரிழந்த அமெரிக்க வீரர்களின் உடல்கள் மொக்டிஷோ நகரின் தெருக்களில் இழுத்துச் செல்லப்பட்டன. உலகமே தொலைக்காட்சியில் பார்த்த அந்த காட்சிகள், அமெரிக்காவின் முகத்தில் பூசப்பட்ட அழிக்க முடியாத கரியானது. ஒரு வல்லரசின் அராஜகம், வீரமும் விசுவாசமும் நிறைந்த ஒரு எளிய தேசத்தின் முன்னால் எப்படிப் பாழாகிப் போகும் என்பதற்கு இதுவே சாட்சி. இந்த வரலாற்று அவமானத்திற்குப் பிறகு, சோமாலியா பக்கம் எட்டிப் பார்க்கவே அமெரிக்கா நீண்ட காலம் அஞ்சியது. இன்று வெனிசுலாவில் நடக்கும் அதிகார ஆக்கிரமிப்புகளுக்குப் பின்னால் அதே போன்ற ஒரு 'வெற்றி' கிடைக்கும் என அமெரிக்கா கணக்குப் போடலாம். ஆனால், வரலாறு எப்போதும் ஒரு பாடத்தை மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டே இருக்கிறது: "மண்ணின் மைந்தர்களின் வீரம், எந்த நவீன ஆயுதத்தையும் விட வலிமையானது." (குறிப்பு: இந்தச் சம்பவத்தை அடிப்படையாக வைத்துத்தான் புகழ்பெற்ற 'Black Hawk Down' திரைப்படம் எடுக்கப்பட்டது) email4 points- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
அண்ணை, புலர் அறக்கட்டளைக்கு ஊடாக இயலாமை உடையவர்களை மட்டுமே முன்னுரிமை கொடுத்து செயற்படுகிறோம். ஆனால் அந்த வங்கிக் கணக்கிற்கு பணம் அனுப்பினால் பணத்தை மீளப்பெற நிர்வாக அனுமதி கோரவேண்டும். அடிக்கடி பணத்தை மீளப்பெற நிர்வாகிகளை (அதிபர், ஆசிரியர்) தொந்தரவு செய்யவேண்டும். அதனால் தான் பயனாளிகளின் வங்கிக் கணக்கை பெற்று தர விரும்பினேன். இது சிரமம் என்றால் ஒரு வங்கிக் கணக்கை திறந்து தருகிறேன், அதனை "முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026" மட்டுமே பயன்படுத்தும் வகையிலும் இணைய வங்கிச்சேவை, குறுஞ்செய்தி வசதி, வங்கி வரவு, செலவு அறிக்கை என்பவற்றை பெறக்கூடிய வகையிலும் செயற்படுத்தி தருவேன். மாதம் மாதம் வங்கி அறிக்கையை இங்கே வெளிப்படையாக பகிர்கிறேன். அரசு கண்காணிப்பு(ஒரு தடவையில் 10 இலட்சத்திற்கு மேல் அனுப்புவது) இருப்பதால் கவனமாக நிதியை கையாளவேண்டும்.4 points- யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
நன்றி அண்ணை. எனக்கு சம்பளம் தர விரும்பினால் அதனை புலர் அறக்கட்டளைக்கு உங்கள் நன்கொடையாக தரும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன். (உண்மையில் சேவைக்கு ஊதியம் தேவையில்லை அண்ணை) என்னை இப்பணியில் ஈடுபட கேட்பது எனக்கு மிக மகிழ்ச்சி தருவது. ஏனெனில் வீட்டிற்குள் முடங்கி இருக்கும் நான் இந்தப்பணிகளுக்காக வெளியே பயணிப்பதில் அளவிட முடியாத மகிழ்வடைவேன். புதிய மூன்று சக்கர வாகனம் ஒன்றும் எனது கனடிய நண்பர் வாங்கித்தந்துள்ளார். ஒரே ஒரு பிரச்சனை நினைத்தவுடன் புறப்பட முடியாது. இன்னொருவர் வந்து வாகனத்தில் ஏற்றிவிடவேண்டும், முன்னர் தந்தையார் ஏற்றி விடுவார். உதவிக்கு வருபவர் பின்னேரம் தான் வருவார். இவையெல்லாவற்றையும் தாண்டி பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு உதவுவதில் ஆத்ம திருப்தி அடைகிறேன்.4 points- நயினாதீவு விகாராதிபதி தையிட்டிக்கு விஜயம்
ஒரு சிலர் தடம்புரள்வது என்பது வழமையான ஒன்று. இப்படி பார்த்தால் கொசாவோ வாக்கெடுப்பு நடந்திருக்காது. கிழக்கு திமோர் வாக்கெடுப்பு நடந்திருக்காது... தென் சூடான் வாக்கெடுப்பு நடந்திருக்காது. ஏன் தென்னாபிரிக்கா விடுதலைப் போராட்டம் வெற்றி பெற்றிருக்காது. அல்ஜீரியாவில் பிரான்ஸ் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்திருக்காது. ஆக நாம் எமது தார்மீக உரிமைகளையும் கோரிக்கைகளையும் தொடர்ந்து முன்னிறுத்தாமல்.. சர்வதேசத்திடம் இதைச் செய் அதை செய் என்று கோரி நிற்க முடியாது. எல்லா நாட்டிலும் எல்லா இனத்திலும் கோடரிக்காம்புகள் உண்டு. அவற்றை விஞ்சி தான் எல்லா உரிமைப் போராட்டங்களும் வெற்றிகளைப் பெற்றுள்ளன. ஆயுதப் போராட்டம் தோற்ற நிலையிலும்.. பல போராட்டங்கள் தொடர் உரிமைக்குரலால் வெற்றி பெற்றதே யதார்த்தம். எமது ஆயுதப் போராட்டம் தேவையான அளவுக்கு எமது உரிமைக்குரலை சர்வதேச மயப்படுத்தி இருக்குது. ஆனாலும் தொடர்ந்து நாம் எமது உரிமைக்குரலுக்கு அதற்கான நியாயத்திற்கு முன்னுரிமை வழங்கி சர்வதேசத்தின் முன் தொடர்ந்து எம்மை முன்னிறுத்தாமல்.. எமக்கான உரிமையை தேச விடுதலையை சாத்தியமாக்க முடியாது. தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம் எப்போதையும் விட இப்போது இன்னும் இன்னும் முன்னிறுத்த வேண்டியதும் அதை தொடர வேண்டியதும் மிக அவசியமாகும்.4 points- இந்திய- தமிழீழப் போர் மூள முன்னர் இந்தியப்படை செய்த நாசங்கள்
@goshan_che @Sasi_varnam @ஈழப்பிரியன் நீங்கள் மூவரும் கூறியதை வைத்து மாவீரர் பட்டியலினுள் தேடிப் பார்த்தேன். மொத்தம் 16 போராளிகள் புளட், இ.என்.டி.எல்.எஃவ்., மற்றும் ரெலோ ஆகிய தேசவிரோத கும்பல்களால் வீரச்சாவடைந்துள்ளனர். அவர்களில் புளட் என்ற கூலிப்படையைச் சேர்ந்தவர்களாலையே அதிகளவான போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். இவர்கள் அனைவரும் ஓகஸ்ட் 5ம் திகதி புலிகள் தமது ஆயுதங்களை ஒப்படைத்த பின்னரே - ஆயுதமற்றவர்களா பயணித்த போது - இவ்விந்திய கூலிப்படைகளால் தேசத்திற்கு விரோதமான முறையில் கொல்லப்பட்டனர். புலிகள் ஆயுதங்களைக் களைந்த பின்னர் இவர்களிற்கு இந்தியப் படையினர் ஆயுதங்களை வழங்கி புலிகளைக் கொல்ல தூண்டிவிட்டுள்ளனர். ஆக மொத்ததில் இந்தியா நரி வேலை செய்துள்ளது. இதையும் அறியாமல் இந்த இந்தியக் கூலிப்படைகள் தமது சொந்த இனத்தின் விடுதலைக்காகப் போராடிய வீரர்கள் ஆயுதமற்றவர்களாக இருந்தபோது கொன்றுள்ளனர். வெட்கித் தலைகுனிய வேண்டிய செயல்! இவர்களை பின்னாளில் புலிகள் வேட்டையாடியதில் எந்தத் தவறும் இல்லை. (இவர்கள் தவிர இன்னும் 6 போராளிகள் இதே காலகட்டத்தில் வீரச்சாவடைந்துள்ளனர். எனினும் அவர்களில் நால்வர் எதிர்பாராத வெடி நேர்ச்சிகளிலும் இருவர் தமிழீழக் கடற்பரப்பில் சிறிலங்காக் கடற்படையுடனான சமரிலும் வீரச்சாவடைந்துள்ளனர். மொத்தம் 22, ஈழப்பிரியன் அவர்களின் கணக்குச் சரியே.) இந்திய நரிவேலையால் மாவீரரான போராளிகள்: வீரவேங்கை யோகன் - 16.08.1987 வேப்பங்குளம் பகுதியில் புளொட் கும்பலுடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவு வீரவேங்கை அருச்சுனா, வீரவேங்கை ரஞ்சன், வீரவேங்கை கில்மன் - 26.08.1987 நானானட்டான் பகுதியில் புளொட் கும்பலின் வெறியாட்டத்தில் வீரச்சாவு வீரவேங்கை டென்சில் - 02.09.1987 பெரியபண்டிவிரிச்சான் பகுதியில் புளொட் கும்பலின் வெறியாட்டத்தில் வீரச்சாவு கப்டன் தனம், 2ம் லெப்டினன்ட் கண்ணன் - 04.09.1987 குருமன்காட்டுச் சந்தியில் புளொட் கும்பல் நடத்திய தாக்குதலில் வீரச்சாவு 2ம் லெப்டினன்ட் கைலை, வீரவேங்கை இரத்தினம் (சிவகுமார்) - 04.09.1987 பன்றிக்கெய்தகுளம் பகுதியில் புளொட் கும்பல் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவு வீரவேங்கை அமீர் (அமல்) - 07.09.1987 குளவிசுட்டான் பகுதியில் புளொட் கும்பல் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் வீரச்சாவு லெப்டினன்ட் கொலின்ஸ் (லூக்) - 07.09.1987 தம்பனை பகுதியில் புளொட் கும்பல் மீதான தாக்குதலின்போது வீரச்சாவு வீரவேங்கை ராஜேந்தர் - 12.09.1987 கிளிநொச்சி பகுதியில் ஈ.என்.டி.எல்.எவ் கும்பல் நடத்திய தாக்குதலில் வீரச்சாவு வீரவேங்கை அமலதாஸ் - 26.09.1987 ரெலோ கும்பல் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் வீரச்சாவு வீரவேங்கை தாஸ் - 02.10.1987 கற்கபுரம் பகுதியில் புளொட் கும்பலின் தாக்குதலில் வீரச்சாவு வீரவேங்கை பாபு - 07.10.1987 கற்கபுரத்தில் புளொட் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு 2ம் லெப்டினன்ட் விக்கி - 08.10.1987 10ம் வாய்க்கால் பகுதியில் ஈ.என்.டி.எல்.எவ் கும்பல் மேற்கொண்ட தாக்குதலில் வீரச்சாவு4 points- யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
துளி துளியாய் பகுதியில் இதற்கென ஒரு தனித்திரி திறந்து விடுங்கள். அதனை pin பண்ணி விடுகின்றேன். திரி சரியான விதத்தில் சென்றால் முகப்பிலும் இணைப்பை கொடுக்க முடியும்.4 points- ஈழத்தமிழர் மீதான இனவழிப்புப் போரில் எனது தனிப்பட்ட அனுபவங்கள்
என்னுடைய ஞாபகத்தின்படி இந்திய இராணுவ வருகைக்கு சில (மாதங்கள்) காலங்களுக்கு முன்னமே ஊர் பெரியவர்கள், பிரபலங்கள் மற்றும் இளைஞர்கள் அனைவரையிம் உள்ளடக்கி இப்படியான பிரஜைகள் குழு அமைக்கப்பட்டது. இலங்கை இராணுவ திடீர் படை இறக்கம், உளவாளிகள் ஊடுருவல், கிராம மட்டங்களில் நடக்கும் சிறிய சமூக பிரச்சினைகள் போன்றவற்றை அவதானித்து இயக்க பொறுப்பாளருடன் உரையாடி ஆலோசிப்பது அவர்களுக்கான ஒத்துழைப்பை , உதவிகளை வழங்குவது போன்ற செயல் பாடுகள் நடந்தன. நாவட்குழியில் நானும் நண்பர்களும், ஊர் பெரிசுகளும் சேர்ந்து இரவு நேர ஊர் காவல், நோட்டமிடல், சென்ரி, உணவு வழங்கள் போன்ற செயல்பாடுகளில் இருந்து இருக்கிறோம் . இது தவிர, இந்திய இலங்கை ஒப்பந்தத்துக்கு பிறகு மக்கள் அரசியல் செயல்பாடுகளாகவும் பிரஜைகள் குழு என்று ஒன்றும் இருந்தது நினைவுக்கு வருகிறது. இவர்கள் பலரை ராணுவ துணை குழுக்கள் கொலை செய்த்ததாகவும் செய்திகள் வாசித்த ஞாபகம் இருக்கிறது.4 points- இலங்கையில் பிறந்த தமிழ் கல்வியாளருக்கு இங்கிலாந்தில் கெளரவ பட்டம்!
துரை இது என்ன அர்ச்சனா இராமநாதன் போல் பேசுகின்றீர்கள். அவர்தான் ஓ எல் படிச்சனியா யூனிவசிட்டி போனியா என்று கேட்பார். யூரியூப் காணொளி பார்த்தேன். அதில் கிங்க் சார்ல்ஸ் பிரம்பால் தோளின் இரண்டு பக்கமும் தட்டி பார்த்துவிட்டு கழுத்தில் மாலை போட்டுவிடுகின்றார். கழுத்தில் மாட்டப்படும் மாலையின் பாரத்தை ஆள் தாங்குவாரோ என உறுதிப்படுத்த தோளில் தட்டி பார்க்கின்றார்கள் என நினைக்கின்றேன்.4 points- யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
நீங்கள் தான் பல மக்கள் நலன்புரி அமைப்புகள் வட பகுதிகளில் வெற்றிகரமாக இயங்குவதாக எழுதினீர்களே. அந்த அமைப்புகளுக்கு தாங்கள் கடிதம் எழுத முடியாதா? இல்லையேல் தந்தியாவது அடிக்க முடியாதா? கோபுரம்,சுற்றுமதில் கட்டும் புலம்பெயர்ந்தவனுக்கு தங்கள் உடன் பிறந்தவர்களுக்கு கக்கூஸ் கட்டிக்கொடுப்பதில் எவ்வித பிரச்சனையும் இருக்கப்போவதில்லை. இதற்கென ஒரு அமைப்பை உருவாக்குங்கள்.....இல்லையேல் இருக்கும் அமைப்பின் விலாசத்தை தாருங்கள். 10 குடும்பத்திற்கு மலசலம் கட்டும் நிதியை நான் திரட்டி தருகின்றேன்.4 points- 📢 அரச செலவில் வந்து தேசிய மக்கள் சக்தி எங்களுக்கு சோ காட்டக்கூடாது – சீ.வி.கே –
ஆசை, தோசை, அப்பளம், வடை…. 😁 😂 🤣 “நந்தவனத்தில் ஓர் ஆண்டி, அவன்…. நாலாறு மாதமாய் குயவனை வேண்டி கொண்டு வந்தான் ஒரு தோண்டி - மெத்தக் கூத்தாடி, கூத்தாடி போட்டுடைத்தாண்டி.” இது… சுத்துமாத்து சுமந்திரனுக்காகவே எழுதிய பாடல். 😂 பைத்தியக்காரன் கதைப்பதை எல்லாம், சீரியசாக எடுக்கக் கூடாது. 🤣 இவர், அனுர அரசில், பிரதம மந்திரி பதவிக்கும் ஆசைப் பட்ட ஆள். 😁 அதுதான்…. சென்ற தேர்தலில், கட்டின கோவணத்தையும் உருவி விட்டு… வீட்டில் குந்த வைத்திருக்கிறார்கள். 😁 😂 🤣3 points- யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
விடை கொடுக்கிறோம், சோதரியே! நண்பர் மோகனின் மனைவி சுமதியின் (பூமா) இறுதி வணக்க நிகழ்வுகள் இன்று (21.01.26) ஒஸ்லோவில் நடைபெறுகிறது. நான் நோர்வேயில் இல்லாத காரணத்தினால் இந்த இறுதி வணக்க நிகழ்வில் கலந்து கொள்ள முடியாத மிகுந்த கவலையுடன் இப்பதிவை எழுதுகிறேன். பிரியமானவர்கள் பலரின் இறுதி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்கு எனக்கு வாய்ப்பு கிடைத்திருக்கவில்லை; எனது அம்மா அப்பாவின் இறுதி வணக்க நிகழ்வுகள் உட்பட. சுமதி, நண்பர் மோகனின் மனைவியாகத்தான் எனக்கு அறிமுகமானார். காலப்போக்கில் நாம் குடும்ப நண்பர்கள் ஆகி விட்டோம். அவருடன் பழகிய காலங்களில் அவர் துணிச்சலானதொரு பெண்ணாகவும், குழந்தை உள்ளம் கொண்டவராகவும், நகைச்சுவை உணர்வு மிகுந்தவராகவும், வாழ்க்கையை ரசித்து வாழ்வதில் விருப்பம் கொண்டவராகவும், எவரோடும் அன்பாகவும் பண்பாகவும் பழகும் நற்பண்புமிகுந்தவராகவும் இவரை நாம் உணர்ந்து கொண்டோம். சுமதி இளகிய மனம் படைத்தவர். கலையுள்ளம் கொண்டவர். கலைகளை நன்கு ரசிப்பார். இயற்கையை நேசிப்பவர். பயணங்கள் செல்வதிலும், சுற்றுலா போவதிலும் விருப்பம் கொண்டவர். கணவனையும் பிள்ளகளையும் நன்கு நேசித்தவர். நண்பர்களையும் அன்பால் அரவணைத்தவர். வயதின் மூப்பில், வாழும் கால எல்லையெல்லாம் வாழந்து இயற்கையாய் கண் மூடும் வரை வாழ்க்கையின் ஒவ்வொரு கணமும் இரசித்தபடியே வாழ்ந்திருக்க வேண்டியவர். 2024 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் நம் எல்லோரையும் அதிர வைத்த அந்தச் சேதி கிடைத்தது. சுமதியை கொடிய புற்றுநாய் தாக்கியுள்ளது என்பதே அந்தச் சேதி. இந்தச் செய்தியினை அவரேதான் சொன்னார். பலரும் புற்றுநோயை மறைப்பதுபோல அவர் அதனை மறைக்க முயலவில்லை. இவரை இக் கொடும் நோய் தாக்கும் என்று எவர் தான் கற்பனை பண்ணினோம் ! புற்றுநோய் என்றாலே உயர் ஆபத்து என்ற எண்ணம் பலருக்கு உண்டு. ஆனால் உண்மைநிலை அவ்வாறு இல்லை. புற்றுநோய் எந்த இடத்தில் வருகிறது, எப்போது கண்டு பிடிக்கப்படுகிறது, எவ்வளவு தீவிரத்தன்மை கொண்டுள்ளது என்பதைப் பொறுத்து நோயின் பாதிப்பு வருகிறது. சிகிச்சை முறையிலும் பாரிய முன்னேற்றங்கள் வந்துள்ளன. நோயால் பாதிக்கப்பட்ட பலர் பூரண குணமாகியுள்ளனர். சுமதிக்கு வந்தது பித்தக் குழாய் புற்றுநோய்( ஆங்கிலத்தில் Bile duct cancer, நோர்வேஜிய மொழியில் Gallegangskreft). இது ஒப்பிட்டளவில் அரிதாக வருகின்ற, ஆனால் ஒரு ஆபத்தான புற்றுநோய் நோய் என்றும் கூறுவார்கள். பித்தக் குழாய் மிக மிக சிறிய உறுப்பாக இருப்பதன் காரணமாகவும், அது அமைந்திருக்கின்ற இடம் பல உறுப்புகளுடன் தொடர்புபட்டிருப்பதன் காரணமாகவும் மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கு கடினமான ஒரு புற்று நோயாகவும் இதனைக் கூறுவார்கள். இந்த நோய் வரும்போது அதனை எதிர்த்துப் போராடுகின்ற போராட்டம் வாழ்வா சாவா என்கின்ற ஒரு போராட்டம் தான். இந்த நோயிலிருந்து போராடி மீண்டும் வருவது மிகவும் கடினமான ஒரு விடயமாக இருக்கப் போகின்றது என்பதனை ஏதோ ஒரு வகையில் சுமந்து உணர்ந்து கொள்கிறார். எனக்கு இந்த இடத்தில் ஏன் இந்த நோய் வந்தது என்கின்ற கவலை ஒரு புறமும், இதனை எவ்வாறு எதிர்கொள்ளலாம் என்ற தேடல் மறுபுறமாகவும்அந்த நோயை எதிர்கொள்ளத் தயாராகி விடுகிறார். இந்நோய் தொடர்பாக ஒரு வெளிப்படையான அணுகுமுறையை அவர் மேற்கொள்கிறார் தனது நோயின் தன்மை பற்றி தனது நண்பர்களுடன் பகிர்ந்து கொள்கிறார் ஏறத்தாழ பதினைந்து - பதினாறு மாதங்களாக நோயுடன் போராடிப் போராடி, ஒவ்வொரு காலடியை முன்னோக்கி வைப்பதற்கு முயன்று முயன்று தோற்றுப் போக போக இறுதிக் கணம் வரை மனந் தளராமல் அவர் போராடினார். எமது கண் முன்னால் நாம் நேசித்த ஒரு சோதரி ஒவ்வொரு மருத்துவ முயற்சிகளிலும் முன்னேற்றத்தை காணாமல் போராடிக் கொண்டிருப்பது நம்ம எல்லோருக்கும் மிகுந்த மிகுந்த மனவருத்தத்தை தந்து கொண்டிருந்தது. இறுதியில் இயற்கையின் விதிப்படி 14.01.26 அன்று அவர் இயற்கை எய்தி விடுகிறார். ஏது தான் செய்ய முடியும் எம்மால். சாவை ஏற்படுத்தக் கூடிய ஆபத்தான நோயுடன் போராடி மருத்துவமனையில் இருக்கின்ற போது அதற்கு மிகுந்த ஒரு மன உறுதி தேவை. அந்நேரத்தில் குடும்ப உறவுகளதும், நண்பர்களதும் அரவணைப்பு ஒரு நோயாளிக்கு மிகுந்த மனபலத்தை தரும். அதனை அனுபவரீதியாக உணர்ந்தவன் நான். நண்பர் மோகனும் பிள்ளைகள் வைதேகி, ஆதிரையும் சுமதியைக் காப்பாற்ற தம்மால் முடிந்ந அனைத்தையும் செய்தார்கள். சிகிச்சை தொடர்பாக நோர்வேயில் மட்டுமல்ல உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள எல்லா வாய்ப்பைக்களையும் தேடினர். எதனையும் விட்டு விடாமல் எல்லாக் கற்களையும்ப புரட்டினார்கள். எதுவும் நோர்வேயினை விட மேம்பட்டதாக இருக்கவில்லை. தனது மனைவி பதினைந்து -பதினாறு மாதங்களாக நோயுடன் போராடிக் கொண்டிருக்கின்ற போது கண்ணை இமை பாதுகாத்தது போல கிடைக்கக் கூடிய ஒவ்வொரு கணமும் தன் மனைவியின் அருகிலேயே நின்றார் நண்பர் மோகன். பிள்ளைகளும் தமது அம்மாவை நோயில் இருந்து மீட்டெடுத்து விட வேண்டும் என்று துடி துடிப்புடன் தாயுடன் தமிக நெருங்கி நின்றார்கள். தான் அருகாமையில் இருக்கின்ற போது சுமதி பாதுகாப்பாக உணர்கிறார் என்பதை புரிந்து கொண்டு மோகன் தனது மனைவியை பராமரித்த விதம் எல்லோருக்கும் மிக மிக உன்னதமான முன்னுதாரணம். சுமதி எம்மை விட்டு பிரிவதற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் எனது மனைவியும் (அவர் சுமதியின் ஒரு நல்ல நண்பர்) சுமதியின் ஏனைய இரு நண்பர்களும் வைத்தியசாலையில் சுமதியியைப் பார்க்கச் சென்றோம். அவர் இருந்த அறையின் உள்ளே சென்று அவரோடு சிறிது நேரம் கதைத்து விட்டு நான் நண்பர் மோகனுடன் அறையின் வெளியிலிருந்து கதைத்துக் கொண்டிருந்தேன். உள்ளே சுமதியும் எனது மனைவியும் நண்பர்களும் பேசி சிரித்து உற்சாகமாக கதைக்கின்ற சத்தம் எமக்குக் கேட்கிறது. ஏறத்தாழ ஒரு மணி நேரம் போயிருக்கும். நாங்கள் மீண்டும் அறைக்குள் போகும்போது ‘ நல்ல energy உடன் சுமதி இருந்தால் பல விடயங்களையும் கதைத்தோம்’ என என் மனைவியும் நண்பர்களும் சொன்னார்கள். நான் அப்போது சுமதியிடம் ‘நீங்கள் energy யான ஆள் தானே, energy யா இருங்கோ’ என்று சொன்னேன். உடன் அவர் விம்மி அழத் தொடங்கி விட்டார. ‘நானும் எல்லாத்தையும் positive ஆகத்தான் பாக்கிறன், அண்ணா. ஆனால் நினைக்கிற மாதிரி ஒண்டும் நடக்குதில்லை’ என்று கவலையுடன் சொன்னார் . அவர் இதனைச் செல்லும் போது இவர் தனது இறுதி நாட்களை எண்ணிக் கொண்டிருக்கிறார் என்ற மருத்தவர்களின் தகவல் எமக்குத் தெரிந்திருந்தது. பாசத்துடன் அவரது இரண்டு கன்னங்களையும் எனது இரு கைகளாலும் தடவி விட்டதனைத் தவிர எந்தப் பதிலையும் கூற என்னால் முடியவில்லை. சுமதியின் பிரிவுத்துயரைக் காலம்தான் ஆற்ற வேண்டும். காலம் எல்லாக் காயங்களையும் ஆற்றும் என்பார்கள். அதனை நம்புவோம். நணபர் மோகனதும் பிள்ளகளதும் தோழணைத்து நாம் நிற்போம். விடை கொடுக்கிறோம், சோதரியே. https://www.facebook.com/share/p/1DbBE4ME6h/?mibextid=wwXIfr3 points- “மரியாவை சந்தித்ததே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய கௌரவம் ; நன்றி மரியா!” - அமைதிக்கான நோபல் பரிசை மரியாவிடமிருந்து பெற்ற மகிழ்ச்சியில் ட்ரம்ப்!
ட்ரம்பின் இந்தச் செயல் சின்னப்புள்ளத் தனமா இல்ல மூளை சீரழிந்த தனமா ? லூசிக்குப் பொறந்த, லூசிட புருசன்.3 points- ஈரானில் தீவிரமடையும் போராட்டம்: இணைய சேவைகள் முடக்கம்
சொந்த பணமா? கடனோடு கடனாக ஏத்திவிட வேண்டியது தானே. வந்தா மலை போனா மயிர்.3 points- கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!
கண்கள் செருகிக் கொண்டு வருகின்றது. ஆள்… தப்புவது கடினம். தேசியக் கொடியை... அரைக் கம்பத்தில் பறக்க விடுங்கப்பா.3 points- இரசித்த.... புகைப்படங்கள்.
3 points- 'செவ்வருக்கை' நூல் அறிமுகம் - சுப.சோமசுந்தரம்
'செவ்வருக்கை' நூல் அறிமுக உரை - சுப.சோமசுந்தரம் எழுத்தாளர் எம்.எம்.தீன் அவர்களின் சமீபத்தியப் படைப்பான 'செவ்வருக்கை' எனும் சிறுகதைத் தொகுப்பினை வாசிக்கும் பேறு பெற்றேன். தொகுப்பிலுள்ள முதற்கதையின் தலைப்பே நூலுக்கான தலைப்பானது. செவ்வருக்கை என்பது ஒரு வகை பலா மரத்தைக் குறிப்பதாகும் - வாழையில் செவ்வாழை போல. இதன் பழத்தில் சுளைகள் மிக அடர்த்தியாகவும் செவ்வண்ணத்திலும் அமைவன. கனியின் மணமும் சுவையும் தன்னிகரற்றவை. இத்தொகுப்பின் கதைகள் அனைத்தும் சாதி ஆணவம் பற்றிப் பேசுபவை. தீன் அவர்கள் தக்கோரிடம் கேட்ட உண்மை நிகழ்வுகளைக் கதைக்களத்திற்கு ஏற்றவாறு அமைத்தளித்த படைப்பு இது. நூலில் உள்ள அனைத்துக் கதைகளையும் நாம் இங்கு பேச வரவில்லை. ஒரு பானைச் சோற்றுக்கு நான்கு சோறு (!) பதமாய் நான்கு கதைகளைச் சொல்லி முழுச்சோற்றையும் நீங்களே உண்டு பாருங்கள் என அழைப்பு விடுவதே இவ்வெழுத்தின் நோக்கம். முதலில் செவ்வருக்கை. சுமார் முந்நூறு வருடங்களுக்கு முன்பு மலைப்பகுதியில் இருந்த ஒரு ஆதிக்க சாதியினரின் காட்டில் (தோட்டத்தில்) ஆத்தி புலையனும் அவன் மனைவி வெயிலாளும் மற்றும் சில குடியானவர்களும் உழைத்து வந்தனர். அதனைப் பொறுப்பாக வழிநடத்தியவன் ஆத்திபுலயன். வெயிலா நிறைமாத சூலியான நேரம் இரண்டு செவ்வருக்கைப் பழங்கள் ஒரு மரத்தில் காய்த்துக் கனிவாகின. அதனை உண்ண ஆசைப்பட்ட வெயிலா தனது அண்ணன் மாடப்புலையன் மூலமாக வெட்டிக் கொணர்ந்து ஆசை தீர உண்டாள். அதனை அந்த நில உரிமையாளர்கள் ஏற்கமாட்டார்கள் என்பதையுணர்ந்த ஆத்திபுலயன் குடும்பத்துடன் அங்கிருந்து தப்ப முயல, ஆதிக்க வெறி பிடித்தவர்களால் கொலையுண்டு முடிந்து போயினர். கொலையாவதற்கு முன் வெயிலா ஈன்ற ஆண் மகவினைக் காப்பாற்றிய மாடப்புலயன் அவனுக்கு செங்காடன் எனப் பெயரிட்டு வளர்த்து ஆளாக்கினான். செங்காடன் வளர்ந்து ஆளாகித் தன் அப்பன் - ஆத்தாளைக் கொன்றவர்களைக் கொன்று அந்தச் சண்டையில் தானும் உயிர் நீத்தான். இதன் பின்னர் பல இன்னல்களுக்கு ஆளான பண்ணையார் குடும்பத்துக்குப் பரிகாரம் சொன்ன மலையாள மாந்திரீகர்கள் ஆத்திபுலயன், வேலாயி, செங்காடன் ஆகியோருக்குப் பூடம் போட்டு வருடா வருடம் செய்முறைகள் செய்து வழிபடச் செய்தார்கள். இது நடந்து முந்நூறு வருடங்களுக்குப் பிறகு பழைய கதையெல்லாம் திரிந்து இப்போது பண்ணையார் குடும்பத்து வகையறாக்கள் அந்தத் தெய்வங்கள் தங்கள் குலத்தைச் சார்ந்த, தங்கள் குலத்தை ஆசீர்வதிக்கும் குலசாமி என்றே நம்புகின்றனர். தங்களுக்குக் கீழான பகைச்சாதியினர் மீது தாக்குதல் நடத்தப் போகும்போதெல்லாம் அக்குல தெய்வங்களை வணங்கி உத்தரவு பெற்றே செல்கின்றனர். "செங்காடனும் மற்ற குல தெய்வங்களும் பழியை மறந்து சமாதானம் ஆகியோ அல்லது அவர்களது அதிகாரம் கண்டு பயந்தோ சிரித்தபடியே உத்தரவு கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்" என்று எழுத்தாளர் தம் கூற்றாக அங்கதத்துடன் கதையை நிறைவு செய்கிறார். எம்.எம்.தீன் அவர்களின் கதை சொல்லும் நேர்த்தியைத் தனியாகச் சொல்ல வேண்டியதில்லை. எழுத்து அவருக்குப் புதிதல்ல. சமூக அவலங்களை எடுத்தியம்புவதில் நேரிடையாகச் சொல்ல வேண்டிய இடத்தில் நேரிடையாகவும், குறிப்பாகச் சொல்ல வேண்டிய இடத்தில் குறிப்பாகவும் சொல்வதில் அவருக்கு நிகர் வெகு சிலரே. ஒவ்வொரு கதையிலும் அவர் போடும் நிறைவுத் திரை பற்றி ஓரிரு வார்த்தைகள் சொல்வது நிறைவாய் அமையும். எடுத்துக்காட்டாக, செவ்வருக்கையை இப்போது கையிலெடுப்போம். தாங்கள் முன்னர் அநீதி இழைத்தவர்களிடமே வந்து ஆதிக்க வர்க்கத்தினர் மீண்டும் அந்த அநீதியைத் தொடர்ந்திட உத்தரவு கேட்பதும், அதற்கு அவர்கள் இசைவதுமான வெளிப்பாடு நகைமுரண் மட்டுமல்ல; இன்றைய சமூக அவலத்தின் அபாரமான குறியீடும் கூட. நமக்குத் தெரிந்து தலித் சமூகத்தினர் சிலரும், ஒரு காலத்தில் மேலாடை அணிய மறுக்கப்பட்ட சமூகத்தில் பலரும் அதே பாசிச சக்திகளிடம் சரணடைந்து நிற்பது என் போன்றோர் நினைவில் நிழலாடுவது தவிர்க்க இயலாத ஒன்று. எழுத்தாளர் இக்குறிப்பைத்தான் பெரும்பாலும் கொண்டிருப்பார்; உறுதியாகத் தெரியாது. எழுத்தாளர் சிந்தித்ததை வாசகரும் சிந்திக்க வைப்பதும், அவர் சிந்திக்காதையும் சிந்திக்க வைப்பதும்தானே சிறந்த எழுத்தாக அமைய முடியும் ! போகிற போக்கில் இக்கதை தொடர்பான வேறு ஒன்றைச் சொல்வது என் கடமை என எண்ணுகிறேன். இது செவ்வருக்கை. அறிஞர் அண்ணா எழுதிய சிறுகதை செவ்வாழை. முக்கனிகளில் இரண்டு வந்து விட்டனவே ! இரண்டு கதைகளின் பொதுவான அடிநாதம் மேட்டிமைத்தனம் சாடல். செவ்வருக்கை சாடுவது சாதிய மேட்டிமையை; செவ்வாழை சாடுவது வர்க்க மேட்டிமையை. செங்கோடன் என்னும் ஏழைக் குடியானவன் தன் குழந்தைகளிடம் ஆசையை வளர்த்து, தன் வீட்டுக் கொல்லையில் செவ்வாழை ஒன்றை வளர்த்து வருகிறான். அந்த ஏழையின் கனவு செழித்து வளர்ந்தது. இரண்டொரு நாட்களில் வாழைக்குலையினை வெட்ட எண்ணுகிறான். பிள்ளைகள் கொண்ட மகிழ்ச்சிக்கு அளவேயில்லை. அவன் வேலை செய்யும் பண்ணையின் உரிமையாளர் தம் வீட்டில் நிகழும் சுப நிகழ்ச்சியொன்றுக்கு அந்த செவ்வாழைக் குலையைக் கேட்டு ஆள் அனுப்புகிறார். மறுப்பது எங்ஙனம் ? தனது மற்றும் தன் குழந்தைகளின் கனவெல்லாம் நொறுங்க, அக்குலையை வெட்டிக் கொடுத்து விடுகிறான். குழந்தைகளின் அழுகை நாட்கணக்கில் ஓயவில்லை. ஓரளவு விவரம் தெரிந்த பெரிய பையனின் விரக்தி நிலையைக் கதையின் முத்தாய்ப்பாக அறிஞர் அண்ணா இவ்வாறு வைக்கிறார் - "பாவம் சிறுவன்தானே ! அவன் என்ன கண்டான் - செங்கோடனின் செவ்வாழை தொழிலாளர் உலகில் சர்வ சாதாரண சம்பவம் என்பதை !". உழுபவனுக்கே நிலம் சொந்தம் எனும் பொதுவுடமைக் கருத்தை அண்ணா முன்னெடுக்கும் கதை செவ்வாழை. தோழர் தீன் சமூக நீதியைக் கையிலெடுத்ததும், சமூக நீதியை அதிகம் பேசும் அறிஞர் அண்ணா பொதுவுடமை பேசியதும் ஒரு இனிமையான ஒப்பீடு ! வர்க்க விடுதலையும் சமூக நீதியும் பின்னிப் பிணைந்த வை என்னும் பொதுவுடைமைவாதிகளின் கருத்திற்கு உரமிடுவது. சாதியம் என்னும் இழிவு, மத எல்லைகளைக் கடந்தது என்பதை சுட்டிக்காட்ட எம்.எம்.தீன் ஒருபோதும் தவறவில்லை. இந்திய இஸ்லாமியரிடையே சாதியம் விரவிக் கிடப்பதை 'நாசுவம்' எனும் கதையிலும், கிறித்துவத்தில் சாதியப் போக்கினை 'ஊரு ஒப்பாது' எனும் கதையிலும் ஆணித்தரமாய் உரைப்பதில் அவர் பின்வாங்கவில்லை. இஸ்லாமிய சமூகம் பெருமளவில் வாழும் ஊருக்கு முடி திருத்தும் தொழிலுக்காகவே கொண்டுவரப்பட்ட குடும்பத்தின் வாரிசு ஒருவர் பிற்காலத்தில் சென்னை சென்று கட்டுமானத் தொழிலில் கொடி கட்டிப் பறக்கிறார். தம் மகனின் திருமணத்தை இந்த ஊரில் அவர் கட்டித் தந்த 'நிலா மஹால்'இல் நடத்த முடிவு செய்து ஊரடைக்க மதிய விருந்துக்கும் மாலை வரவேற்புக்கும் தடபுடலாக ஏற்பாடு செய்து அழைக்கிறார். மதிய விருந்துக்கு அந்த ஊர்க்காரர் ஒருவர் கூட வரவில்லை. அவரும் இஸ்லாமியராயினும் அவரது சாதி கருதி ஊர் மக்களான இஸ்லாமியர்கள் (!) திருமணத்தைப் புறக்கணித்த விவரம் அவருக்குத் தெரிய வருகிறது. நியாயமான அறச்சீற்றத்துடன் மாலை வரவேற்பை ரத்து செய்துவிட்டுக் குடும்பத்துடன் சென்னைக்குக் கிளம்பிச் சென்று விடுகிறார். திருமணத்திற்கு போன மாதிரியும் இருக்கட்டும், போகாத மாதிரியும் இருக்கட்டும் என்று மாலை வரவேற்புக்கு வந்த ஊர்க்காரர்கள் சிலரை பூட்டிய கதவு வரவேற்கிறது. வந்தவர்களில் தொப்பியும் பெரிய தாடியும் வைத்திருந்த பெரிய மனுசர் ஒருவர், "என்ன இருந்தாலும் நாசுவப் பயலுக்கு இம்புட்டு பவிசும் வீம்பும் ஆவாது" என்று சொல்ல, கதை முடிகிறது. இந்திய இஸ்லாத்திலும் சாதிய மனநிலை மாறவில்லை; மாறுவதாகவும் இல்லை என்பதை 'நாசுவ'த்தின் அந்த இறுதி நொடி உணர்த்துகிறது. இக்கதை அன்வர் பாலசிங்கம் எழுதிய 'கருப்பாயி என்ற நூர்ஜஹான்' எனும் குறுநாவலை நினைவுறுத்துகிறது. சாதியக் கொடுமையால் மீனாட்சிபுரத்தில் இஸ்லாத்தைத் தழுவிய தலித் சமூகத்தினர் பின்னர் தம் சமூகத்தாராலும், இஸ்லாமியராலும் ஒதுக்கி வைக்கப்பட்டு அல்லலுற்ற கதையைத் தத்ரூபமாகப் படம் பிடித்த நாவல் அது. அந்த நாவலை எழுதிய பின் அன்வர் பாலசிங்கம் பட்ட பாட்டை நண்பர்களிடம் கேள்விப்பட்ட நினைவு. நெஞ்சில் உரம் கொண்டு நேர்மைத் திறம் கொண்டு 'நாசுவம்' எழுதிய தோழர் தீன் அவர்களுக்குப் பாராட்டு. தேவாலயத்தில் இரு குடும்பங்கள் சந்தித்து மனமொத்து (தலைவனையும் தலைவியையும் சேர்த்துதான் !) ஒருவருக்கொருவர் விவரங்களைப் பகிர்ந்த பின், "நீங்க வேற நாங்க வேற; ஊரு ஒப்பாது" என்ற நூலிழையில் திருமணப் பேச்சு முறிந்து போகிறது. பின்வாங்கிய குடும்பம் தாங்கள் அவர்களை விட மேலோராக்கும் எனும் கற்பனையில் மிதக்கும் இடைநிலைச் சாதியினர் என்பதும், சிறிய அல்லது பெரிய ஏமாற்றத்துக்குள்ளான பிறிதொரு குடும்பம் வெளுத்ததெல்லாம் பால் என நினைக்கும் பட்டியல் இனத்தோர் என்பதும் சொல்லித் தெரிய வேண்டுமா என்ன ? அவர்களுக்குள் திருமணப் பேச்சு வார்த்தையை முன்னெடுத்த பாஸ்டரும் சாதிய மனநிலையில் இருந்து விலகியவர் அல்லர் என்பது சூசகமாக வெளிப்படுத்தப்படுகிறது. இதன் மூலம் அங்கேயும் உள்ள அநாகரிகத்தை 'ஊரு ஒப்பாது' கதையில் குறிப்பாக வெளிப்படுத்தியது எழுத்தாளரின் நாகரிகம். பன்னிரெண்டு கதைகளைக் கொண்ட இத்தொகுப்பின் கடைசிக் கதையான 'சாதி நாற்காலி', பட்டியலினப் பெண்ணுக்கு ஒதுக்கப்பட்ட ஊராட்சித் தலைவர் பதவியில் அமர்ந்த ஒரு படித்த அருந்ததியர் பெண் ஆதிக்க இடைநிலைச் சாதியினரால் எதிர்கொள்ளும் அவமானங்களைத் தோலுரித்துக் காட்டுவது. அவள் கற்ற கல்வி அவளைக் கொள்கைப் பிடிப்புடன் நிற்க வைக்கிறது. அவர்களால் கொடூரமாகத் தாக்கப்பட்டு சாவின் விளிம்பு வரை சென்று திரும்பும் அப்பெண் வீறு கொண்டு நிற்பதைப் பேசும் கதை இது. சமநிலையை ஏற்க மறுக்கும் சமூகத்திற்கு எதிரான போராட்டத்தில் அறிவாயுதம் கொண்டு நேர்மையாக சமூகப் பணியாற்றும் உறுதியேற்று உயிரையும் பணயம் வைக்கத் தயாரான புதுமைப் பெண்ணின் கதை இது. ஏனைய கதைகள் நிதர்சனத்தை சமூகத்தின் முகத்திலறைந்து சொல்லுகையில் இக்கதை ஒரு படி மேற்சென்று நம்பிக்கை ஒளியூட்டுவதாய் அமைகிறது. சமீபத்தில் வெளியான மாமன்னன் திரைப்படம் போல அறவழி நின்று எதிர்வினை ஆற்றுகிறது. தோழர் தீன் அவர்கள் தமது எழுத்துப் பணியான சமூகப் பணியினைப் பன்னெடுங்காலம் முன்னெடுத்துச் செல்வார்; செல்ல வேண்டும். https://www.facebook.com/share/p/1E5ofEE61x/3 points- வண்ணங்களோடும் வடிவங்களோடும் ஓர் கலைப்பயணி
ஓவியர், சிற்பக் கலைஞர் கலாபூஷணம் ரமணி (முன்னாள் வருகைதரு விரிவுரையாளர் - யாழ் பல்கலைக்கழகம்) கலைகளும், கலைப்படைப்புகளும், கலைஞர்களும் இல்லாமல் உலகைக் கற்பனை பண்ணிப் பாருங்கள்... வேண்டாம் அந்த விபரீதக் கற்பனை. மரணமில்லா வாழ்வு கலைஞனுக்கு மட்டும்தான். அதனால்தான் கவியரசு கண்ணதாசன் என்ற பன்முகக் கலைஞன் கம்பீரமாக நிமிர்ந்து நின்று தன்னை "மானிட இனத்தை ஆட்டி வைப்பேன் அவர் மாண்டுவிட்டால் அதைப் பாடி வைப்பேன் - நான் நிரந்தரமானவன் அழிவதில்லை - எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை" என உறுதிபடப் பாடியதோடு மட்டுமின்றி விடாது "பாமர ஜாதியில் தனிமனிதன் - நான் படைப்பதனால் என்பேர் இறைவன்" எனப் பிரகடனமும் செய்துவிட்டுப் போயுள்ளான். இது உண்மையான ஆற்றல்மிகு கலைஞரின் புவிசார் தகைமையை அர்த்தபூர்வமாகச் சொல்லும் யதார்த்த வரிகளாகும். ஒரு மனிதன் அவன் எப்படியானவனாக இருந்தாலும் அவன் ஒரு படைப்பியல் திறன் கொண்ட கலைஞனாகத் தன் சுயத்தை வெளிப்படுத்தி நிற்பவனேயானால் அவனது சாகாவரம் பெற்ற கலைப்படைப்புகள் தரும் பிரமிப்பும், ரசனையும் அவனது அனைத்துக் குறைபாடுகளையும் மறக்கவைத்து அவனை வணங்க வைத்துவிடும் என்பதே நிசம். "நாளும் நலியாக் கலையுடையோம்" என எம்மண்ணின் கவிஞனும் அத்தகைய ஒரு அமர கலைஞனுமான மஹாகவி உருத்திரமூர்த்தி அவர்கள் பாடிய வரிகள் இப்போது நினைவுக்கு வருகின்றமை தவிர்க்க முடியாத ஒன்றாகவே உள்ளது. "யாழ்பாடி" என்ற பார்வையற்ற இசைக்கலைஞனின் கலாகீர்த்தியைப் பாராட்டி அவருக்கு அன்பளிப்பாக வெகுமதியாக அரசனால் வழங்கப்பட்ட பிரதேசமே யாழ்ப்பாணம் என இன்று எம்மால் எம் தந்தையர் பூமியாகப் போற்றப்படுகிறது. எனவே யாழ்ப்பாணத்தின் தோற்றமே கலைஞனோடு தொடர்பு கொண்டதாக இருப்பது புளங்காகிதம் தரும் விடயமாகும். பழம்பெரும் தமிழ் பேரகராதி ஒன்றில் யாழ்ப்பாணம் என்ற பெயருக்கு (சொல்லுக்கு) "வீணாகான புரம்" என அழகான - கலைத்துவமான விளக்கம் கொடுக்கப்பட்டிருப்பதை இங்கு கூறவே வேண்டும். இலங்கை வேந்தன் தேவ கலைஞன் இராவணேஸ்வரன் வீணை வாசிப்பதில் நிகரற்றவன் என்பதை புராண, இதிகாச, மற்றும் தேவாரப் பதிகங்கள் பதிவு செய்துள்ளமையைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. அந்தத் தசமுகவை வீணைக் கொடியுடை வேந்தன் எனவே இதிகாசம் வர்ணிக்கிறது. எனவே கலைகளுக்கும் ஈழத் தமிழனுக்கும் இடையேயான தொடர்பின் அடிப்படையில்தான் கவிஞர் "மஹாகவி" அவர்கள் "நாளும் நலியாக் கலையுடையோம்" எனப் பாடியிருக்கிறார் எனக் கருதலும் பொருத்தமேயாகும். எமக்கென்று தனித்துவமான கலை, பண்பாட்டு மற்றும் கலாசாரப் பாரம்பரியம் உண்டென்பது வரலாற்றுரீதியாக நிர்ணயமான விடயமாகும். மிகப்பெரிய அறிஞர்களை, கலாவிற்பன்னர்களை, இலக்கியப் பெருமக்களை உலகிற்கு குறிப்பாகத் தமிழுலகிற்கு வழங்கி வருகின்ற பெருமை ஈழ மண்ணுக்குண்டு. இத்தகைய மாண்புமிகு மனிதர்களுள் இன்று நம்மிடையே வாழ்ந்து தமிழுக்கும், தாய் மண்ணிற்கும் கௌரவம் பெற்றுத் தரும் கலைஞர்களுள் - சிற்ப, ஓவிய நுண்கலைத் துறையில் தனக்கென ஒரு தனித்துவமும் கலைத்துவமும் மிக்க இடத்தை வகித்து வரும் வாழ்நாள் சாதனையாளரான "ரமணி" என்று தன்னை அடையாளப்படுத்திக் கொண்டு அமைதியும், ஆழமும் மிக்க கலைஞனாக நாம் பெருமைப்படக்கூடிய கலாவிற்பன்னராக விளங்கும் வைத்தீஸ்பரன் சிவசுப்பிரமணியம் ரமணி முக்கியத்துவம் பெறுபவராகிறார். நல்ல கலைஞன் மிகப்பெரிய அடையாளம் அவர் கலைச்செருக்கு, வித்துவக்கிறுக்கற்ற நல்ல மனிதனாகவும் அவர் விளங்குவதுதான். அந்தவகையில் ரமணி அவர்களின் அடக்கமும், அமைதியும் மிக்க மனிதநேயப் பண்புதான் அவரது கலாசிருஷ்டிகளின் கலைத்துவ தனித்துவத்திற்கும் மூலகாரணியாகும். முதலில் அவர் நல்ல மனிதர், நல்ல ஆசான், அது அவரது கலைப் படைப்புக்களின் ஆத்மாவாக வெளிப்பட்டு நிற்பதை அனைவரும் உணர்வர். அந்த கலைவளம் மலிந்த ஊரில் கல்வி, மற்றும் இசைக்கலைத் துறையில் பேரார்வம் கொண்டவரான அட்சலிங்கம் வைத்தீஸ்பரன் என்பவருக்கும் மங்கையற்கரசி என்பவருக்கும் மகனாகப் பிறந்தவர் ரமணி. அவரது இயற்பெயர் சிவசுப்பிரமணியம். இப்பெயரின் இடையே வரும் "ரமணி" என்ற பெயர் இவரது கலையுலக பெயராக இவரே வைத்துக்கொண்டதாகும். 1942 ஆவணி 3ஆம் நாளில் பிறந்த இவரிடம் பரம்பரை கலையார்வம் இயல்பாகவே இணைந்து கொண்டதில் வியப்பில்லை. இவர் மட்டுமல்ல இவர் குடும்பத்தவர் அனைவருமே கலைத்துவ ஆளுமை கொண்டவர்கள் தான். இவரது அண்ணா சச்சிதானந்தசிவம் மிகச்சிறந்த ஓவியர். அற்புதமான இலக்கியப் படைப்பாளி, ஞானரதன் என்ற பெயரில் சிறுகதைகள் - நாவல்கள் பலவற்றை படைத்தவர். திரைப்படத் துறையில் சாதனை படைத்த இயக்குநர். இந்தியாவில் இணையற்ற இயக்குநராக, ஒளிப்பதிவாளராக விளங்கும் பாலு மகேந்திராவின் பள்ளித்தோழர், பல பல்துறைக் கலைஞர்களை உருவாக்கிய நல்லாசான். "கலாகீர்த்தி" விருது பெற்றவர். ஏனைய சகோதரர்களும் சகோதரிகளும் கூட அவரவர் வாழ்வியல் தொழிற்றுறைகளுடன் மேலதிகமாக கலைத்துறை ஈடுபாடுகளையும் கொண்டவர்கள். அவர்களின் வாரிசுகளும் அப்படியே... வாழையடி வாழையாக கலைஞானம் கொண்டவர்களாக விளங்குவதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். ஆகவொரு பெரும் கலாவிருட்சத்தின் அங்கங்களாக அவரவர் தனித்துவத் திறனை வளர்த்துக்கொள்ள அந்தக் கலைக் குடும்பத்தில் தடையேதும் இருக்கவில்லை. தந்தையின் ஆதரவும், தமையனின் வழிகாட்டலும், சக நண்பர்கள், அயலவர்களின் உற்சாக ஊக்குவிப்பும் "ரமணி" அவர்களை அவர் துறையில் உச்சத்தை நோக்கி உயர வழிவகுத்தது. அளவெட்டி அருணோதயக் கல்லூரியில் தனது இளமைக் காலக் கல்வியை மேற்கொண்ட "ரமணி" அவர்கள் க.பொ.த சாதாரணப் பரீட்சையில் சித்தி பெற்று உயர்தரப் பேறு பெறுவதற்கான கல்வியைத் தொடர நினைத்த வேளை அவரது வாழ்வின் திருப்புமுனையாக அமைந்தது. கலைத்துறைசார் கல்வியை மேற்படிப்புக்காக தெரிவு செய்ய திரு.எஸ்.பொன்னம்பலம் (ஆதவன்) என்பவரின் வழிகாட்டல் ஊக்குவிப்பு காரணியாகியது. இவர் அக்காலத்தில் அளவெட்டியில் புகழ்பெற்ற பல்துறைக் கலைஞராகவும், சித்திர ஆசிரியராகவும் விளங்கியவர். இவரை ரமணி அவர்களுள் மிளிர்ந்து கொண்டிருந்த ஓவியக் கலையை துல்லியமாக இனங்கண்டு அவரைப் பாராட்டி ஊக்குவித்து உயர்தரப் பரீட்சையில் ஓவிய பாடத்தில் விசேட சித்தி பெற வழிவகுத்தார். தன் இன்றைய கலைசார் பெருமைகளுக்கான காரணகர்த்தா திரு. பொன்னம்பலம் அவர்களே என மிக நன்றியுடன் நினைவு கூறுகிறார் "ரமணி". 07.03.1978 இல் "கலைஞானக் கதிர்" என்ற விருதினை ஓவியம், சிற்பம் ஆகிய துறைகளில் இவர் ஆற்றும் சேவைக்காக பருத்தித்துறை பிரதேசசபை வழங்கிக் கௌரவித்தது. 01.10.2000 அன்று வடமராட்சி கலைஞர் வட்டம் சிறப்புக் கேடயம் வழங்கிக் கௌரவித்தது. 18.11.2001 ஆம் ஆண்டு வடக்கு அபிவிருத்தி புனர்வாழ்வு மற்றும் புனரமைப்பு தமிழ் விவகாரங்களுக்கான அமைச்சினால் இந்துசமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தினூடாக “கலைஞான கேசரி” என்ற கௌரவ விருது வழங்கப்பட்டது. 05.05.2002 இல் : யாழ்ப்பாணம் இந்து சமயப் பேரவையால் "சிவ கலா பூஷணம்" என்ற விருது வழங்கப்பட்டது. 22.05.2006 : கலாசார அலுவல்கள் திணைக்களத்தால் "கலாபூஷணம்" எனும் பட்டம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார். 2008 இல் இவருக்கு வடமாகாண கல்வி பண்பாட்டு அலுவல்கள் விளையாட்டுத் துறை அமைச்சால் "ஆளுநர் விருது" வழங்கப்பட்டது. 2010 இல் : மன்னார் தமிழ்ச்சங்கம் நடாத்திய செம்மொழி மாநாட்டில் கலாயோகி ஆனந்தக் குமாரசாமி ஞாபகார்த்த "வாழ்நாள் சாதனையாளர்" விருது வழங்கப்பட்டது. 2011 இல் : பருத்தித்துறை பிரதேச செயலக கலாசாரப் பேரவை "கலைப்பரிதி" என்ற விருதை வழங்கியது. 2012 இல் : வடமராட்சி கல்வி அலுவலகத்தினால் நடாத்தப்பட்ட நிறைமதி விழாவில் ஓவிய-சிற்பத் துறையில் இவர் ஆற்றிய பணிகளுக்காக "கலைவாரிதி" விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது. விருதுகள், பட்டங்கள், பாராட்டுக்கள் அனைத்தும் "ரமணி" என்ற அற்புதமான கலைஞனுள் ஆளுமை பெருமிதச் செருக்கைப் புறந்தள்ளி அடக்கத்தையும், பணிவையும் மட்டுமே வளர்த்துள்ளமையை அனை வரும் ஆச்சரியத்துடன் நோக்குவது வழமை. நிறைகுடம் தளும்புவதில்லையே. ஓவியர்-சிற்பி என பன்முகத்திறன் கொண்ட ரமணி அவர்களை ஆரம்பத்திலேயே அவரது திறனை இனங்கண்டு ஊக்குவித்து அவரது வளர்ச்சியில் மகிழ்வும் நிறைவும் கொண்டு அவருக்குரிய அங்கீகாரத்தை வழங்கிய புகழ்பெற்ற ஓவியரும், கேலிச் சித்திர விற்பன்னருமான சிரித்திரன் சுந்தர் அவர்கள் "ரமணி" குறித்து கூறிய கருத்தை இங்கு முத்தாய்ப்பாகக் கூறமுடியும். "ரமணி இலங்கையில் அதுவும் தமிழ்க் கலைஞனாக பிறந்தபடியால் அவரது முழுமையான ஆளுமைதிறன் வெளிவராமல் இருக்கிறது. இவர் மட்டும் வெளிநாட்டில் பிறந் திருப்பாரேயானால் இவரது தூரிகையும், உளியும் பெரும் அற்புதங்களைப் படைத்திருக்கும்....." உண்மையில் இது ஓவிய, சிற்ப ஆளுமை மிகு "ரமணி" அவர்கள் பற்றிய சுந்தரின் துல்லியமான மதிப்பீடேயாகும். ஒரு பெரும் கலைஞனை இன்னொரு பெருங்கலைஞனால்தான் இனங்காணவும் மதிப்பிடவும் முடியும் என்பது உண்மை தான். -ராதேயன் [தமிழ் முற்றம் 2015] இம்மாபெரும் கலைஞன் கடந்த 29/12/2025 அன்று காலமானதைத் தொடர்ந்து இக்கட்டுரை பதிவேற்றம் செய்யப்படுகிறது.3 points- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
SIVARANCHAN THEVAKUMARAN A/C:- 300131108781 National Savings Bank Chankanai Branch Swift Code:- NSBALKLX முழுப்பெயர் போட்டுள்ளேன். முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம் 2026 - யாழ் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்களுக்கான அடிப்படைச் சுகாதார மேம்பாட்டிற்கான செயற்பாடுகள் என்ற பெயரில் பனர் ஒன்றும் அடித்தால் நல்லது, கீழுள்ளது போல இலச்சினை ஒன்றும் வடிவமைத்தால் சிறப்பாக இருக்கும். @goshan_che @valavan @நிழலி @இணையவன் @மோகன் அண்ணாக்கள் கவனத்திற்கு.3 points- வெனிசுலா ஜனாதிபதி மதுரோவும் அவரது மனைவியும் அமெரிக்க இராணுவத்தினரால் கைது!
இவர்தான் அந்தத் தம்பர்3 points- சோனியா காந்தி மருத்துவமனையில் அனுமதி : தீவிர கண்காணிப்பில் இருப்பதாக தகவல்
அழுந்திச் சாக வேண்டும்3 points- நான்காவது கொலை - கருணாகரன்
3 pointsநான்காவது கொலை - கருணாகரன் ‘உங்களுடைய பொருளை நேரில் வந்து பெற்றுக் கொள்ளுங்கள்’ என்று அன்பான அழைப்பில் ஒரு கடிதம் சுங்கப் பகுதியிலிருந்து வந்திருந்தது. இலங்கையின் சுங்கப் பகுதியிலிருந்து இப்படி ஒரு அன்பான கடிதம், தமிழ் எழுத்தாளருக்கு வருவதாக இருந்தால், அந்தக் கடிதத்தின் எடையை நீங்கள் கற்பனை செய்தே பார்க்க முடியாது. தலையிலும் மனதிலும் சட்டென அந்தப் பாரம் ஏறி விடும். ‘அப்படியென்ன பெரிய பாரம்?’ என்று நீங்கள் கேட்கலாம். இந்தக் கேள்விக்கான பதிலை நான் சொல்வதையும் விட, நீங்களும் என்னோடு வந்தால் அதை அறிந்து விடலாம். நாங்கள் அந்தக் கடிதத்தை எடுத்துக் கொண்டு சுங்கப் பகுதிக்குச் செல்கிறோம். பொதிகள் பரிசீலனைப் பிரிவிலுள்ள வாடிக்கையாளர் இருக்கையில் ஐந்தாறுபேர் மட்டுமே இருக்கிறார்கள். நல்லவேளை, இன்று கூட்டம் அதிகமில்லை. சிலவேளை நிறையபேர் காத்திருப்பார்கள். கூட்டம் இல்லை என்பது கொஞ்சம் ஆறுதலாக இருக்கிறது. எதிர்பார்த்தபடியே அரை மணி நேரத்துள் கட்டண உத்தியோகத்தரைச் சந்திக்க முடிகிறது. கடிதத்தைக் கொடுக்கிறோம். அவர், கடிதத்தை வாங்கிப் பார்த்து விட்டு உதவியாளரை அழைத்து, அவரிடம் கொடுக்கிறார். உதவியாளர் கடிதத்தில் குறிப்பிட்டிருந்த பொதி இலக்கத்தைச் சரிபார்த்து, பொதியை எடுத்து வருகிறார். ஏற்கனவே பொதி பிரிக்கப்பட்டிருக்கிறது. இது எதிர்பார்க்கப்பட்டதே. அதிகாரியின் முன்னே உள்ள மேசையில் பொதியிலிருந்து பொருட்களை எடுத்து வைக்கிறார், உதவியாளர். நாங்கள் அதிகாரியைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஐந்து புத்தகங்கள். கவிதை நூல் ஒன்று. நாவல் ஒன்று. படுகொலைகளைக் குறித்த நூலில் மூன்று பிரதிகள். அவற்றோடு, ஏதோ எழுதி வைக்கப்பட்ட ஒரு தாள். அநேகமாக அந்தப் பொதியைப் பற்றிய குறிப்பாக இருக்கலாம். புத்தகங்களைப் பார்த்த கட்டண உத்தியோகத்தர், மொழிபெயர்ப்பாளரை அழைத்து வருமாறு உதவியாளரிடம் பணிக்கிறார். அதற்கிடையில் அந்தத் தாளை எடுத்து கவனமாகப் படிக்கிறார், புருவங்கள் சுருங்குகின்றன. மொழிபெயர்ப்பாளர் வந்து புத்தகங்களை எடுத்து கையில் வைத்து கொண்டு எங்களிடம் சொல்கிறார், “இந்தப் புத்தகங்களில் கொலைகளைப் பற்றியெல்லாம் எழுதப்பட்டிருக்கு” அவருடைய குரலில் அதிகாரத்தின் வெம்மை புலப்படுகிறது. நாங்கள் ஒருவரை ஒருவர் பார்க்கிறோம். அப்படியே அதிகாரியையும் மொழிபெயர்ப்பாளரையும் பார்க்கிறோம். அவர்களும் எங்களைக் கூர்ந்து பார்க்கிறார்கள். இதொன்றும் வியப்பான சங்கதி இல்லை என்று எங்களுக்குத் தெரியும். ஏற்கனவே இந்த மாதிரி பல சந்தர்ப்பங்களில் பல புத்தகங்கள் தடுத்தாட்கொள்ளப்பட்டன. சிலவற்றை வாதிட்டு மீட்டிருக்கிறோம். சில கடல் கொண்டதைப்போல கைவிடப்பட்டன. பாதுகாப்பு அமைச்சு என்பது இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் ஆழக்கடல்தான். ‘தாழ்வதும் மீள்வதும் அதன் அருளாலே’ என்று ராகவன் பகடியாகச் சொல்வார். ‘அதன்’ என்று அவர் எதைக் குறிப்பிடுகிறார் என்று எல்லோருக்கும் தெரியும். பாதுகாப்புத்துறையின் தங்க மூளை. நான் வலிந்து, மெல்லிதாகச் சிரிக்கிறேன். ‘இதெல்லாம் எங்களுக்கு ஏற்கனவே தெரிந்ததுதான். இப்படித்தான் நடக்கும் என்று அறிவோம். இதைத்தானே எப்போதும் செய்து கொண்டிருக்கிறீர்கள்?’என்ற மாதிரி அவருக்கு அந்தச் சிரிப்புச் சொல்லியிருக்க வேணும். “ஆகவே, உங்களிடம் இவற்றை நாங்கள் தர முடியாது. இதை நாங்கள் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்புவோம். அங்கிருந்து பதில் கிடைக்கும்போது உங்களுக்குத் தகவல் தருவோம்” என்கிறார் மொழிபெயர்ப்பாளர். அதற்கும் சிரிக்கிறேன். இந்த மாதிரி சந்தர்ப்பங்களில் சிரிப்பு ஒரு ஆயுதம். சில நேரங்களில் அது பலமான கேள்விகளின் குறியீடாகும். “கொலைகள் நடந்தால், அதைப் பற்றி எழுதாமல் வேறு எதைப்பற்றி எழுதுவது?” கேட்கிறேன். அவர் பதிலளிக்கவில்லை. அதிகாரியின் முகத்தில் இறுக்கம் கூடுகிறது. பொருட்படுத்தாத மாதிரி, அவர் ஒரு படிவத்தை நிரப்பிக் கொண்டிருக்கிறார். எழுதுவதை நிறுத்தி விட்டுத் தலையை நிமிர்த்தி, எங்களைப் பார்த்துக் கொண்டு சொல்கிறார், “எங்களை நீங்கள் கோவித்துக் கொள்ளக் கூடாது. எங்களுடைய கடமையைச் செய்கிறோம். அதைத்தான் நாங்கள் செய்ய முடியும்” இந்தப் பொன்னான வார்த்தைகளைக் கேட்க உண்மையிலேயே எனக்குப் பெரிதாகச் சிரிப்பு வந்து வந்து விடுகிறது. அவர் ஒரு மாதிரியாக என்னைப் பார்க்கிறார். அந்தப் பார்வையில் தன்னை இளக்காரமாக எண்ணித்தான் சிரிக்கிறேனா? என்றொரு எண்ணம் ஓடியதாகப் பட்டிருக்க வேணும். முகத்தில் அசடு வழிகிறது. அவரை மேலும் குழப்பாமல், ”இங்கே கொலைகள் நடந்ததால், அதைப் பற்றி எழுதப்பட்டிருக்கு. அதற்கான ஆதாரங்களும் இணைக்கப்பட்டுள்ளன. புத்தகத்தை நன்றாகப் படித்துப் பாருங்கள். அப்பொழுது உங்களுடைய இதயம் என்ன சொல்ல விரும்புகிறதோ அதைச் சொல்லுங்கள்…” என்கிறேன். “மன்னிக்க வேணும். இதைப்பற்றி நீங்கள் எங்களோடு பேசுவதால் பயனில்லை. எங்களுக்குப் பணிக்கப்பட்டதைத்தான் நாங்கள் செய்ய முடியும்” மீண்டும் அதே பதிலைச் சொல்கிறார் அவர். மேலே ஏதோ நிழலாட, நான் அண்ணாந்து பார்க்கிறேன், ஒரு சிறிய குருவி அங்குள்ள கண்காணிப்புக் காமிராவின் மேலே வந்து அமர்கிறது. “இது, இந்தக் கொலைகள் நடந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகி விட்டது. இப்பொழுது ஒரு புதிய ஆட்சி வந்திருக்கு. நாட்டில் மாற்றங்களும் நீதி வழங்கல்களும் நிகழ்த்தப்படும் என்று சொல்லப்படுகிறது. அதனால், பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கான நீதிக்காக இந்தக் குரலை இங்கே முன்வைத்திருக்கிறார்கள். இது அவசியமல்லவா! இதில் என்ன தவறிருக்கு?“ எனக் கேட்கிறேன். அவருக்கு ஒரு மாதிரி ஆகி விடுகிறது. “ஆம், நீங்கள் சொல்வது புரிகிறது. ஆனால், எங்களால் என்னதான் செய்ய முடியும்? நாங்கள் அரச உத்தியோகத்தர்கள். அரசாங்கத்தின் உத்தரவையும் கட்டளையையும்தான் நிறைவேற்ற முடியும். எங்களுக்கு விடுக்கப்பட்ட அறிவுறுத்தலின்படி இப்படியான புத்தகங்களோ, பொருட்களோ வந்தால், அதை நாங்கள் படைத்துறைக்குத்தான் (Military of Defence) பாரப்படுத்த வேண்டும். அவர்கள்தான் இதைப் பற்றிய இறுதி முடிவைச் சொல்ல வேணும். இல்லையென்றால் என்மீதுதான் கேள்விகள் வரும். நான்தான் அதற்கான பதிலைச் சொல்ல வேண்டியிருக்கும். இதற்குத் தனியே முடிவெடுக்கும் அதிகாரம் எனக்கு இல்லை. நீங்கள் சொல்வதைப் போல, ஆட்சியாளர்கள் மாறியிருக்கிறார்கள் என்பது உண்மையே. ஆனால், கட்டளைகள் – உத்தரவுகள் எதுவும் மாறவில்லையே!“ இதற்கு மேல் தன்னால் என்ன செய்ய முடியும் என்பது போல, ஒரு பரிதாபகரமான தோற்றத்தைக் காண்பிக்கிறார். உங்களுக்குச் சிரிப்பு வருகிறது. ஆனாலும் அந்தச் சூழலில் சிரமப்பட்டு உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்வதற்கு முயற்சிக்கிறீர்கள். “அரசாங்கம், பல அறிவிப்புகளைச் செய்திருக்கு. படைகளை விலக்குவதாக. ஜனநாயகத்தையும் கருத்துச் சுதந்திரத்தையும் பாதுகாப்பதாக. (நாற்பத்தைந்து வயதுடைய பயங்கரவாதச் சட்டத்தைப் பற்றி அப்பொழுது உங்களுக்கு நினைவுக்கு வருகிறது). போராளிகள் புதைக்கப்பட்ட மாவீரர் துயிலுமில்லங்களில் நிலைகொண்டிருக்கும் படையினர் கூட விலக்கப்படுவார்கள்… என்றெல்லாம். ஆனால், நீங்களோ இந்தச் சாதாரண புத்தகங்களையே தர மாட்டோம் என்று தடுத்து வைத்திருக்கிறீர்கள்… இது எவ்வளவு அநியாயம்?” என்று அப்பாவித்தனமாகக் கேட்பதைப் போல கேட்கிறேன். “ஐயா, நீங்கள் பேசுவது அரசியல். நாங்கள் இங்கே செய்வது நிர்வாகம். நான் அரசாங்கத்தின் உத்தரவைத்தான் செய்ய முடியும். என்னை மன்னித்து விடுங்கள். நான் ஒரு சிங்கள அதிகாரி. முன்பு இப்படி இங்கே, யாழ்ப்பாணத்தில் வந்து என்னைப் போன்ற ஆட்கள் வேலை செய்ய முடியாது. எனக்கும் யாழ்ப்பாணத்தில் நடந்த அநீதிகள் எல்லாம் கவலையைத்தான் தருகின்றன. இந்த நூலகம் (யாழ்ப்பாண நூலகம் இருந்த திசையைச் சுட்டி) எரிக்கப்பட்டதும் இங்கே உள்ள மக்கள் சிரமப்பட்டதும் எல்லாம் வேதனையே. ஆனால், நாங்கள் சமாதானமாக – சந்தோசமாக இருப்போம்… நீங்கள் இந்தப் படிவத்தில் கையெழுத்து இடுங்கள். நாங்கள் இந்தப் புத்தகங்களைப் பாதுகாப்பு அமைச்சுக்கு (MOD) அனுப்புகிறோம். அங்கிருந்து பதில் வந்ததும் உங்களுக்குத் தகவல் சொல்கிறோம்…” நீங்கள் இப்பொழுது அண்ணாந்து அந்தப் பணிமனையின் கூரையைப் பார்த்து சற்றுச் சத்தமாகவே சிரித்து விடுகிறீர்கள். அதிகாரி சற்றுக் கலவரமடைந்தது போல தெரிகிறது. வியப்புடன் எங்களைப் பார்க்கிறார். “அப்படியென்றால் அரசாங்கத்தரப்பினரால் சொல்லப்படுகின்ற மாற்றங்கள் எதுவுமே நடக்கவில்லையா?” என்று கேட்டுவிடுகிறீர்கள். “ப்ளீஸ்.. இதற்கு மேல் என்னை எதுவும் கேட்காதீர்கள். அதுதான் நான் சொன்னேன், நான் ஒரு சாதாரண உத்தியோகத்தன் என்று. நான் எதையும் தீர்மானிக்க முடியாது. அரசியல்வாதிகள் அப்படித்தான் சொல்வார்கள். அவர்கள் அதையெல்லாம் எங்களுக்கு எழுத்தில் – உத்தரவாகத் தந்தால் நாங்கள் அதை உங்களுக்குச் சேவையாகச் செய்வோம்.. இதற்கு மேல் என்னால் எதுவும் சொல்ல முடியாது… ஏனென்றால், என் மீதான உத்தியோக பூர்வமான கேள்விகளுக்கு நான்தான் பதில் சொல்ல வேண்டும். எந்தத் தலைவர்களும் அதைச் சொல்ல வர மாட்டார்கள்…” என்று எழுந்து விட்டார். அவருடைய முகத்தில் மெல்லிய சினம் நிழலாக ஆடியது. “நீங்கள் ஒற்றுமை பற்றி பேசுகிறீர்கள்? யாழ்ப்பாணத்தில் வேலை செய்வதில் மகிழ்ச்சி என்று சொல்கிறீர்கள். ஆனால் இந்த ஐந்து சாதாரண புத்தகங்களையே தடுத்து வைத்துக் கொண்டு, எப்படி நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும்? இந்த மாதிரி செயல்களால், எப்படி எங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்கப் போகிறீர்கள்?” அதிகாரி குழப்பமடைந்து விடுகிறார். “மறுபடியும் சொல்கிறேன், நான்… நான் ஒரு சாதாரண அதிகாரி. நான் விதிகளைப் பின்பற்றுகிறேன்” “விதிகள்? இது சட்டபூர்வமாக தடை செய்யப்பட்ட புத்தகம் அல்ல! இது ஒரு வரலாற்று ஆராய்ச்சி. நடந்த சம்பவங்களைப் பற்றிய ஆதாரபூர்வமான குரல். இது உண்மையைப் பதிவு செய்கிறது. நாம் நமக்கு முன்னே உள்ள இடைவெளிகளை நிரப்பாமல், ஒற்றுமைக்கான பாலத்தை நிர்மாணிக்க முடியுமா? ஆனால், நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும், ஏனென்றால் நீங்கள் இந்த அமைப்பின் பாதுகாப்பில் இருக்கிறீர்கள். நீங்கள், எங்களுடைய குரல்களைக் கட்டுப்படுத்தும்போது, எப்படி நாம் மகிழ்ச்சியாக இருக்க முடியும்?” அதிகாரி சில நொடிகள் மௌனமாக இருக்கிறார். அவர் தனது கைகளை விரித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறார். ஆழ்ந்த யோசனை. “நான்… என்னால் என்ன செய்ய முடியும்? நான் ஒரு சிறிய கடிகாரத்தின் பல். அவ்வளவுதான்” “ஆமாம், நீங்கள் ஒரு கடிகாரத்தின் பல்தான். ஆனால் ஒவ்வொரு பல்லும் முழு கடிகாரத்தின் செயல்பாட்டிற்கு அவசியம். நீங்கள் இல்லாமல், இந்த அடக்குமுறை இயந்திரம் செயல்படாது. நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க முடியும், ஆனால் உங்கள் மகிழ்ச்சி, எங்கள் வலியின் மீதல்லவா கட்டப்பட்டுள்ளது” மின்விசிறியின் சத்தம் அறையில் முழுதாக நிரம்பிக்கிடக்கிறது. அதைத் தவிர சில நொடிகள் அங்கே வேறு எந்த ஒலிகளும் இருக்கவில்லை. மெதுவாக, ஆனால் கூர்மையாக அவருக்குச் சொல்கிறேன், “நீங்கள் ஒற்றுமையைப் பற்றிப் பேசுகிறீர்கள்? யாழ்ப்பாணத்தில் வேலை செய்வதில் மகிழ்ச்சி என்று சொல்கிறீர்கள்?” அதிகாரி தலையை உயர்த்துகிறார். “ஆம்…” “இப்படியான செயல்களால் எங்களுக்கு எப்படி மகிழ்ச்சியை அளிக்கப் போகிறீர்கள்?” அதிகாரி திணறுகிறார். “நான்… நாங்கள் விதிகளைப் பின்பற்றுகிறோம். ஒற்றுமைக்காக…” “ஒற்றுமை என்பது பாலம் கட்டுவது. இந்தப் புத்தகங்கள் அதற்கான இடைவெளிகளை நிரப்புகின்றன. இவை உண்மையைச் சொல்ல முயல்கின்றன. உண்மைகளை ஏற்றுக் கொள்வது கைகளை இறுகப் பற்றிக் கொள்வதாகும். இது சட்டபூர்வமாகத் தடை செய்யப்பட்ட புத்தகம் அல்ல! இது வெறும் வரலாற்று ஆவணம்.” “ஆனால்… பாதுகாப்பு…” “எந்தப் பாதுகாப்பு? யாருடைய பாதுகாப்பு? உண்மையிலிருந்து பாதுகாப்பா? நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கலாம். நீங்கள் ஒரு வேலையைச் செய்கிறீர்கள். ஆனால் உங்கள் மகிழ்ச்சி எங்கள் மீதான கட்டாய மௌனத்தின் மீது கட்டப்பட்டுள்ளது. அது எப்படி ஒற்றுமையாகும்?” இதைப் பார்த்துக் கொண்டிருக்கும் நீங்கள் பொறுத்துக் கொள்ள முடியாமல், இடையில் சொல்கிறீர்கள், “ஒற்றுமை என்பது வேறுபாடுகளை ஏற்றுக் கொள்வதில் வருகிறது, வேறுபாடுகளை மறைப்பதில் அல்ல“ அதிகாரி, தன்னுடைய இருக்கையில் வந்து அமர்ந்து கொண்டு, எங்களை நோக்கி முன்னே சரிந்து சற்றுத் தணிந்த மெல்லிய குரலில் சொல்கிறார், “நீங்கள் சொல்வதிலுள்ள நியாயத்தை நான் அறிவேன். ஆனால் நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும். இங்கே ‘மகிழ்ச்சி’ என்பது ஒருவகை உயிர்வாழ்தல். நான் மகிழ்ச்சியாக இருப்பதாகச் சொல்கிறேன், ஏனென்றால் நான் பயந்திருக்க வேண்டாம் என்று நினைக்க விரும்புகிறேன். நான் ஒற்றுமை பற்றி பேசுகிறேன், ஏனென்றால் நான் மோதல்களையோ முரண்பாடுகளையோ எதிர்கொள்ள விரும்பவில்லை” அவர் ஒரு ஆழமான மூச்சை விடுகிறார். எனக்கு ஒரு புதிய நம்பிக்கை ஏற்படுகிறது. குறைந்தது, இந்த அதிகாரியுடனாவது இந்த மாதிரி பேச முடிகிறதே! “இந்தப் புத்தகம் உண்மையின் ஒரு சிறிய பகுதியே. இதை விட நடந்தவற்றின் ரத்த சாட்சியாக உலகமெங்கும் பலர் இருக்கிறார்கள். அவர்களின் நினைவுகள், அவர்களின் கதைகள் – அவை எங்கும் உள்ளன” அவர் மேசையில் இருக்கும் புத்தகங்களைத் தொடுகிறார். முகம் மெல்லிதாக வாட்டமுறுகிறது. “இன்றைய அறிவியல் யுகத்தில், இந்தப் புத்தகத்தை மின்நூல்களாக லட்சம் பிரதிகள் உருவாக்க முடியும். இணையம் எங்கும் உள்ளது. அப்படியிருக்கும்போது…” என்று சிரிக்கிறேன். அது கசப்பான சிரிப்பு. “நீங்கள் இதைத் தடுப்பது, சூரியனைக் கைகளால் மறைப்பது போல சிரிப்புக்குரியது. உங்களுக்கு இது வெட்கம் தரும் செயலாக இல்லையா? நீங்கள் இதைத் தடுத்தாலும், இதை ஒளிப்படங்களாகவும், யூடியூப்களாகவும், PDF பிரதிகளாகவும் நாம் வெளியே இருந்து எடுக்கலாமே. உங்களுடைய விதிமுறைகள் அப்பொழுது என்ன செய்யும்? ஏராளமாக விரிந்து பரவிக் கிடக்கும் வலைத்தளங்களைத் தடுக்க முடியுமா? ஒவ்வொரு மின்நூலையும் கண்காணிக்க முடியுமா?” “நீங்கள் சொல்வது சரிதான். ஆனால்…” அவருடைய அகத்தில் வெட்கம் ஏற்படுவதை உணர்கிறோம். முகம் அதைப் பிரதிபலிக்கிறது. அது அவருடைய வெட்கம் அல்ல. அது நாட்டினுடைய, ஆட்சியினுடைய, அதிகாரத்தினுடைய வெட்கம். “ஆனால் நாங்கள் எங்களிடம் வரும் பொருட்களை மட்டுமே கட்டுப்படுத்துகிறோம். மின்நூல்கள்… அவை வேறு துறை. அது தொழில்நுட்பத் துறை. எங்களுக்கு எட்டாதது” “அப்படியானால், இந்தத் தடை வெறும் காட்சி மட்டுந்தானா? பொய்யான பாதுகாப்பா?” சமாளித்துக் கொண்டு அவர் சொல்கிறார், ”மக்கள் இவ்வாறான தடையைப் பார்க்கிறார்கள். அது ஒரு செய்தியை அவர்களுக்குச் சொல்கிறது. ‘இது அனுமதிக்கப்படாதது’ என்று. அதாவது இந்தப் பொதி தடுக்கப்படுவதை அவர்கள் பார்க்க முடியும். அது அவர்களை நிதானமடைய வைக்கும்” நான் அவரிடம் கேட்கிறேன், “இப்படிச் சொல்வதும் சிந்திப்பதும் வெட்கம் தருவதாக இல்லையா?“ அவருடைய கண்கள் கலங்குவதைப்போலிருக்கிறது. ஒரு நீண்ட மௌனத்திற்குப் பிறகு, “வெட்கமா? ஆம். எனக்கு வெட்கமாகத்தான் இருக்கிறது. ஆனால் நான் என்ன செய்ய முடியும்? உண்மையில் நாங்கள் ஒரு நாடகம் நடத்துகிறோம். இது அந்த நாடகத்தின் ஒரு காட்சி” அவர் சுற்றுமுற்றும் பார்க்கிறார், குரலைத் தாழ்த்திக்கொண்டு சொல்கிறார். “நீங்கள் PDF செய்தால், அதை அனுப்புங்கள். யூடியூபில் போடுங்கள். ஆனால்… இந்த இந்தப் புத்தகங்களை நாங்கள் தடுக்க வேண்டும். ஏனென்றால்… ஏனென்றால் அது எங்களுடைய ‘செயல்முறை’. இந்தச் செயல்முறை முக்கியம். மக்கள் அதைப் பார்க்க வேண்டும்: அரசு கட்டுப்பாட்டில்தான் எல்லாம் உள்ளது என்று.” “அப்படியானால், இது வெறும் பாசாங்கு?” “இல்லை. இது ஒரு அடையாளம். ஒரு குறியீடு. நாங்கள் நடைமுறை உலகில் இன்னும் அரசாங்கத்தின் கட்டுப்பாட்டைக் காட்ட வேண்டும். டிஜிட்டல் உலகில்… அங்கே நாங்கள் தோற்கடிக்கப்படுகிறோம். உண்மைதான். ஆனால் இங்கே இல்லை” ‘எங்களுக்கு அவரைப் பார்க்கப் பரிதாபமாக உள்ளது. அவரைப் பார்க்கும்போதல்ல, அரசாங்கத்தை எண்ணிப்பார்க்கும்போதுதான் பரிதாபமாக உள்ளது’ என்று நீங்கள் நினைக்கிறீர்கள். அதனால் உங்களுக்குச் சிரிப்பு வருகிறது. கூடவே கவலையும். ‘எப்படியெல்லாம் இந்த அதிகார மயக்கம் உள்ளது‘ என்று நினைத்துச் சிரிக்கிறீர்கள். கவலைப்படுகிறீர்கள். எத்தனை அறிவுசார் முன்னேற்றங்கள் வந்தாலும் அதிகாரத்தின் அறை எப்போதும் இருளாகத்தான் உள்ளது. நான் அதிகாரியிடம் சொல்கிறேன், “நான் இதை PDF ஆக மாற்றுவேன். அப்பொழுது எழுதுவேன், ‘இன்று சுங்கத்தில் தடுக்கப்பட்ட புத்தகம் இது. இப்போது இது உலகம் முழுவதும் வருகிறது. இனி இது உங்களுடையது‘ என்று. ஆனால் நான் இந்தப் பிரதிகளையும் விடமாட்டேன். ஏனென்றால்… இந்த எதிர்ப்பு முக்கியம். இது ஒரு குறியீடு. மக்கள் இந்தத் தடையைப் பார்க்க வேண்டும். அதற்கான எதிர்ப்பையும் அவர்கள் காண வேண்டும். இது சாட்சியமாக இருக்க வேண்டும். இது நீங்கள் செய்யும் கட்டுப்பாட்டு நாடகத்தின் சாட்சியாக. அதைப்போல, இந்தத் தடையை நாம் உடைப்பதையும் மக்கள் பார்க்க வேண்டும்” அதிகாரி ஆச்சரியத்துடன் பார்க்கிறார். “ஏன்? PDF ஆக்கி இணையத்தில் பரவ விடும்போதே உங்களுக்கு வெற்றி கிடைத்து விடுகிறதே?” “இது வெற்றி பற்றியது அல்ல. இது சாட்சி பற்றியது. இந்தப் புத்தகங்கள் இங்கே தடுக்கப்பட்டதை உலகம் பார்க்க வேண்டும். அது சாட்சியமாக இருக்க வேண்டும்.” அவர் எழுந்து நின்று, ஜன்னலுக்கு அருகில் செல்கிறார். “நீங்கள் கேட்டீர்கள் – எனக்கு வெட்கமாக இல்லையா? என்று. ஆம், வெட்கம்தான். ஆனால் இப்போது அந்த வெட்கம் வேறு வகையானது. இது எங்கள் சக்தியினுடைய வெட்கம். நாங்கள் இன்னும் காகிதத்துடன் போராடுகிறோம், ஆனால் உலகம் இலத்திரனியலில், தொழில்நுட்பத்தில், அறிவில் முன்னேறிவிட்டது” அவர் திரும்பிப் பார்க்கிறார். “நீங்கள் வார்த்தைகளைத் தடுக்கலாம், ஆனால் உண்மையைத் தடுக்க முடியாது. நீங்கள் புத்தகங்களைத் தடுக்கலாம், ஆனால் யுகங்களைத் தடுக்க முடியாது” எங்களுடன் தொடர்ந்து உரையாடவும் முடியாமல், அதைத் தவிர்க்கவும் விரும்பாமல் தடுமாறுகிறார் அதிகாரி. அவரிடம் “ஒரு கேள்வி. ஒன்று மட்டும்” என்கிறேன். அவர் அலுவலகத்தைக் கண்களால் சுற்றிப் பார்க்கிறார். அங்கே மௌனமான, கனத்த சுவர்கள், படிவங்களின் அடுக்குகள், விதிமுறைகளின் கனம் கூடியிருக்கிறது. நான், மெதுவாக, ஒவ்வொரு வார்த்தையும் எடை போட்டபடி, “ஆம், கொலைகளைக் கண்டு நீங்கள் அச்சமடைகிறீர்கள். அதனால்தான் இந்தத் தடை” என்கிறேன். அவர் பதறத் தொடங்கி விடுகிறார். முகம் கறுத்துச் சட்டெனச் சிவக்கிறது. கண்களும் சிவந்து கலங்குகின்றன. அவர் ஒரு புத்தகத்தை எடுத்து, அதைத் திறந்து ஒரு பக்கத்தைக் காட்டுகிறார். அது ஒரு செய்தித் தாளின் நகல். “மண்டைதீவில் கொல்லப்பட்டவர்கள் கிணற்றுக்குள் போடப்பட்டனர்” என்ற தலைப்பு. “நீங்கள் அந்தக் கொலைகளைச் செய்யாமல் தடுத்திருக்கலாம் அல்லவா? அதாவது உங்களுடைய படைகள், உங்களுடைய அரசாங்கம். அதுதானே நியாயமானது? அதுதானே சரியானது?” என்கிறேன். அதிகாரியின் முகம் வெளிறுகிறது. “நான்… நாங்கள்…” தடுமாறுகிறார். கண்ணாடியைக் கழற்றி மேசையில் வைத்து விட்டு, முகத்தைத் துடைத்துக் கொள்கிறார். “சரி. அதை விட்டுவிட்டுவோம். இப்பொழுது கொலைக்கான சாட்சியங்களைத் தடுப்பது, என்ன வகையில் நீதியாகும்?” அவர் புத்தகத்தை மேசைமீது வைக்கிறார். அது ஒரு சத்தமான தட்டச்சுப் போல் ‘தொப்‘ என ஒலித்தது. “இது இன்னொரு கொலை அல்லவா? ஆம். சாட்சியங்களின் கொலை.” அறை முழுவதும் மௌனம் பெருகித் தடித்துக் கனமாயிற்று. அவர் எதுவுமே பேசவில்லை. மொழிபெயர்ப்பாளர் மெதுவாக நழுவிச் செல்கிறார். நான் அவரைப் பார்த்துச் சிரிக்கிறேன். இப்போது அந்தச் சிரிப்பு கசப்பானது அல்ல; அது விடுதலை தரும் சிரிப்பு. அந்தச் சிரிப்பு அதிகாரிக்கு வெட்கத்தை அளித்திருக்க வேண்டும். அவர் வேறு ஒரு கோப்பை எடுத்து அந்த வேலையில் மூழ்குவதாக நடிக்கிறார். மெதுவான குரலில் சொல்கிறேன், “முதல் கொலை, உயிரை எடுத்தார்கள். இரண்டாவது கொலை, அந்த உயிரின் கதையை எடுக்கிறார்கள். மூன்றாவது கொலை, அந்தக் கதையின் நினைவை எடுக்கிறார்கள். இது எத்தனை மடங்கு கொலை?” அவர் நாற்காலியில் சாய்ந்து, இரண்டு கைகளையும் உயர்த்தித் தலையின் பின்பக்கமாகச் சரிந்து, கண்களை மூடுகிறார். முகம் மேலே மின்விசிறி நோக்கிக் கொண்டிருக்கிறது. “நீங்கள் விதிமுறைகளைச் சொல்கிறீர்கள். நான் நீதியைச் சொல்கிறேன். விதிமுறைகள் காகிதம். நீதி இரத்தம். எது கனமானது?” என்று கேட்கிறேன். அவருடைய இதயமும் காதுகளும் மிக விரிந்து கேட்டுக் கொண்டிருக்கின்றன. இப்போது முற்றிலும் அமைதியாக, ஆழ்ந்த துக்கத்துடன் குரலைத் தாழ்த்தி, அழுத்தமாகச் சொன்னேன், “நீங்கள் ஒரு விஷயத்தைப் புரிந்து கொள்ளவில்லை. நீங்கள் மனிதர்களை மட்டும் கொல்லவில்லை” அவர் எழுந்து நின்று, சுவரில் தொங்கிக் கொண்டிருக்கும் வரைபடத்தை நோக்கி நடக்கிறார். “நீங்கள் உண்மையைக் கொல்கிறீர்கள். வரலாற்றைக் கொல்கிறீர்கள். இந்தப் புத்தகம் வெறும் காகிதம் அல்ல; இது நடந்தவற்றின் சாட்சியம். நீங்கள் இந்தச் சாட்சியத்தைக் கொல்கிறீர்கள்” திரும்பி எங்களை அவர் பார்க்கிறார். என்னை என்ன செய்யச் சொல்கிறீர்கள்?‘ என்று கேட்பதைப்போலிருக்கிறது அந்தப் பார்வை. காட்டில் தனித்துத் தவித்து அலையும் மானின் கண்களைப்போல அவர் மிரட்சியடைவதைப் பார்க்கிறோம். “உண்மையும் வரலாறும் கொலை செய்யப்பட்டால் மிஞ்சுவது என்ன? பொய்களின் கோட்டை! உண்மைகள் மறக்கப்பட்ட பாலைவனம்!! ஒரு தேசத்துக்கு உண்மையும் வரலாறும் வேண்டாமா?” அதிகாரி மௌனமாக வந்து அமர்கிறார். அவருடைய விரல்கள் மேசையின் மீது வெறுமையாக எதையோ எழுதுகின்றன. “நடந்தவற்றுக்குப் பொறுப்புக் கூறுதலும் குற்றங்களை ஒப்புக்கொள்ளுதலும் அவசியமில்லையா? ஒரு தேசம் தன் குறைகளை ஒப்புக்கொள்ளாமல், தன் பிழைகளை மறைக்காமலும் எப்படி முன்னேற முடியும்? இது ஒரு குழந்தைத்தனத்தைப் போலல்லவா? தவறு செய்து, அதை மறைக்க முயல்வது? ஆனால், இங்கே வன்மையான கபடம் உள்ளது” அவர் புத்தகத்தைத் தூக்கி, அதை மெதுவாகத் தடவுகிறார். அது அவருடைய மனதின் உறுத்தல் என்று உங்களுக்குத் தோன்றுகிறது. “இந்தக் கொலைகள் நடந்தன. இது உண்மை. இப்போது, உண்மையைச் சொல்வதைத் தடுப்பது – இது இரண்டாவது குற்றம். முதலில் செய்த தவறை ஒப்புக்கொள்ளாமல், இரண்டாவது தவறும் செய்வது.” அவர் ஒரு ஆழமான மூச்சை விடுகிறார். “நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்? வரலாற்றை மறைத்தால், அது மாறிவிடுமா? இல்லை. அது காயமாகவே இருக்கும். ஆனால் அந்தக் காயம் சீழ்பிடித்துக் கொள்ளும். தேசத்தின் ஆன்மாவில் சீழ்பிடித்த காயம்” ‘ஆம்’ என்பது போல மெல்லத் தலையசைக்கிறார். ‘இருந்தாலும்..’ என்பதுபோல.. கண்கள் எதையோ சொல்ல முற்படுகின்றன. “ஒரு கேள்வி தோன்றுகிறது. நீங்கள் நூலகம் எரிக்கப்பட்டதைப் பற்றி வருத்தமடையவாகச் சொன்னீர்கள். அது ஒரு பெரும் இழப்பு என்றும். ஆனால்… இப்போது நீங்களே இந்தப் புத்தகங்களைத் தடுத்து வைக்கிறீர்கள். இந்த இரண்டுக்கும் இடையே என்ன வித்தியாசம்?” அதிகாரியின் முகம் வெளிறுகிறது. அவர் ஒரு வினாடி மௌனமாயிருக்கிறார். அவரது வாய் சிறிது திறந்திருக்கிறது. ஆனால் வார்த்தைகள் வரவில்லை. சிறிது நேரத்திற்குப் பிறகு மெல்லச் சொல்கிறார், “அது… அது வித்தியாசமான விஷயம்.” “உண்மையாகவா? 1981 இல், நூலகத்தில் இருந்த புத்தகங்கள் எரிக்கப்பட்டன. 2025இல், நூலகத்துக்கு வரவிருக்கும் புத்தகங்கள் தடுக்கப்படுகின்றன. இரண்டும் ஒரே இலக்கை நோக்கிய திட்டமில்லையா? ஞாபகங்களை, வரலாற்றை இல்லாமலாக்குவது? வரலாற்றை முடக்கி வைப்பது?” “அப்போது அதில் நான் இல்லை. நான் அங்கே இல்லை…” அவசரமாக மறுக்கிறார். “ஆனால் இப்போது நீங்கள் இங்கே இருக்கிறீர்கள். இப்போது நீங்கள்தான் அந்தத் தடையாளி. நூலகத்தின் காவலாளிகள் அன்று தீயை வைத்தனர். இன்று நீங்கள் இப்படிக் கதவைச் சாத்துகிறீர்கள். வித்தியாசம் என்ன?” அதிகாரி தனது நாற்காலியில் பின்னால் சாய்கிறார். அவரது கண்கள் கரைகின்றன. “நான் எரிக்கவில்லை. நான் வெறும் காகிதப் பரிமாற்றம் செய்கிறேன். ஒரு படிவம். ஒரு கையெழுத்து. MOD க்கு அனுப்புகிறேன். இது வித்தியாசம்தானே? நான் எரிக்கவில்லை. நான் எனக்குரிய… நிர்வாகப் பணியைச் செய்கிறேன். அவர்களே பொறுப்புச் சொல்ல வேண்டும்“ நான் அவரை மறுத்துச் சொல்கிறேன், “வித்தியாசம் இல்லை. கையாளும் முறை மட்டுமே மாற்றம். தீ மாறி படிவமாகியிருக்கிறது. அத்துமீறல் இங்கே மாற்றமடைந்து அதிகார உத்தரவாகியிருக்கிறது. இலக்கு ஒன்றே. வார்த்தைகளையும் எண்ணங்களையும் மௌனமாக்குவது, வரலாற்றை முடக்கி வைப்பது” அந்தப் புத்தகப் பொதியைச் சுட்டிக்காட்டிச் சொல்கிறேன், “மேலும் ஒரு விஷயம். இந்தப் புத்தகங்களைத் தடுத்து வைப்பது – இது உண்மையை மறைப்பது மட்டுமல்ல. இது ஒரு சிறை வைத்தலும்தான். அரசியற் கைதிகளைச் சிறை வைப்பதைப் போல, புத்தகங்களையும் சிறை வைக்கிறீர்கள். இவை அறிவுச் சிறை கைதிகள். சிந்தனைச் சிறை கைதிகள். உண்மையின் சிறை கைதிகள்” என்னுடைய குரலில் ஆவேசமும் புத்துணர்வும் ஏற்படுகிறது. அதிகாரியின் கண்களுக்குள் நாங்கள் புகுந்து இதயத்தைத் தாக்கி விட்டதைப்போலிருக்கிறது. அப்படித்தான் அவருக்கும் தோன்றியிருக்கக் கூடும். அவர் மிகச் சங்கடத்தில் தவித்துக் கொண்டிருக்கிறார். “நம்முடைய நாட்டின் அரசியற் சாசனத்திலோ, நீதித்துறையின் விதிமுறைகளிலோ, இதைப் பற்றி எழுதப்பட்டுள்ளதா? ‘புத்தகங்களைச் சிறை வைத்தல்’ என்று எந்தச் சட்டத்தில் உள்ளது? ‘கருத்துக்களைச் சிறை வைத்தல்’ என்று எந்தச் சட்டப் பிரிவில் சொல்லப்பட்டுள்ளது?” அதிகாரி பதிலளிக்க முன், தொடர்கிறேன், “நான் சட்டத்தைப் படித்தவன் அல்ல. ஆனால் இதை நன்றாக அறிவேன். சட்டம் மனிதர்களைச் சிறை வைக்கலாம். குற்றம் செய்தவர்களை. ஆனால் எண்ணங்களை? வார்த்தைகளை? உண்மைகளை? அவற்றை சிறை வைக்க முடியுமா? அது எந்தச் சட்டம்?” அவர் எங்களையே பார்த்துக் கொண்டிருக்கிறார். உதவியாளருக்குச் சங்கடமாகி விட்டது. தனக்கு ஆயிரம் வேலைகள் உண்டு என்பதைப்போல, எதையோவெல்லாம் செய்து கொண்டிருந்தார். காதுகளை இங்கே வைத்திருப்பதும் எடுப்பதும் என்ற மாதிரி இங்கும் அங்குமாக அலைந்து கொண்டிருந்தார். “இல்லை. இது சட்டம் அல்ல. இது பயத்தின் ஆட்சி. பயம் சட்டமாகும்போது, சட்டம் சிறைச்சாலையாகிறது. பயம் நீதியாகும்போது, நீதி நியாயமெல்லாம் கொலை செய்யும் கருவியாகிறது.” உதவியாளர் வந்து ஒரு கோப்பை அதிகாரியின் முன்னே வைத்துவிட்டுச் செல்கிறார். “நீங்கள் ஒரு புதிய வகை சிறையை உருவாக்குகிறீர்கள். இது பொது சிறையல்ல. இது ‘அறிவுச் சிறை’. இங்கு கைதிகள் மனிதர்கள் அல்ல; எண்ணங்கள். தண்டனை, தூக்குத் தண்டனை அல்ல; மறத்தல். இந்தச் சிறையில், புத்தகங்கள் செத்துக் கிடக்கின்றன. ஆனால் அவை இறக்கவில்லை; அவை மறைக்கப்படுகின்றன” சட்டென எழுந்து அவர் மறுக்கிறார் “இது… இது கடுமையான விமர்சனம்” குரல் சற்று உயர்ந்து காட்டமாக இருக்கிறது. “உண்மை எப்போதும் கடுமையானதுதான். சட்டம் மென்மையாக இருந்தால், அது சட்டம் அல்ல; விருந்தோம்பலாகி விடும் என்ற கலக்கம்” “போதும் இத்தோடு நாம் நிறுத்திக் கொள்வோம்” என்ற அதிகாரி, உதவியாளரை அழைத்து, அவ்வளவு புத்தகங்களையும் MOD க்கு அனுப்புவதற்கான படிவத்தை நிரப்பி, என்னிடம் கையெழுத்தைப் பெறுமாறு பணிக்கிறார். அலுவலகத்தின் மின்விசிறி சுற்றும் ஒலியைவிட, அவருடைய மனசாட்சி சத்தமாகச் சுற்றிக்கொண்டிருக்கிறது என்பதை அவருடைய குரலின் பதட்டம் காட்டுகிறது. MOD. பாதுகாப்பு அமைச்சு. ஒரு மூன்றெழுத்து வார்த்தைதான். ஆனால் அது ஒரு கண்ணி. திறக்கக் கடினமான ஒரு கடவுச்சொல். பல சந்தர்ப்பங்களிலும் அது ஒரு கல்லறை என்று உங்களுடைய மனதில் தோன்றுகிறது. MOD க்கான படிவம்: SR / Jaf / Post / 56 / 4054 மூலப்பிரதி தொடர் இல: 196448 மூடைகளைத் தடுத்து வைத்தல் பெயரும் கடவுச் சீட்டு / அடையாள அட்டை இலக்கமும்: ஞானசேகரம் அருட்குமரன் தடுத்து வைத்தலுக்கான காரணம்: பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் தகவல் துறையின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது (Pending Approval from MOD and Department of Information) தடுத்து வைக்கப்பட்ட பொருட்களின் விவரம் (எண்ணிக்கை, மாதிரி இல, முதலியவை) 05 புத்தகங்கள் (தமிழ்) 1. 1990 – லைடன்தீவு மண்டைதீவு படுகொலைகளும் புதைகுழிகளும் – 02 2. ஒரு சவரக்காரனின் கவிதை மயிருகள் – 02 3. நெரிந்து – 01 பரிந்துரை: பரிசீலனை செய்யப்பட வேண்டும். காரணம்: தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல். பொருட்கள் தடுத்து வைத்த திகதி: 2025.11.20 சொந்தக்காரரின் ஒப்பம் உதவிக் கட்டண உத்தியோகத்தர் நான் ஒரு புன்னகையுடன் அவரைப் பார்க்கிறேன். “அப்படியென்றால், எதுவுமே மாறவில்லை. யுத்த கால நிலவரம்தான் இப்போதும். அப்போதும் MOD தான். இப்போதும் MOD தான்” அவர் எதுவுமே சொல்லவில்லை. சிரிக்கவும் முடியாமல், முறைக்கவும் முடியாமல் நெளிகிறார். அவர் கேட்கிறார்: “பெயர்?” நான் சொல்கிறேன்: எழுத்தாளர்களின் பெயர்களை அவர் எழுதினார்: “தமிழ் எழுத்தாளர்” நான் சொன்னேன்: “வரலாற்றாசிரியர்கள் அல்ல” அவர் எழுதினார்: “அரசியல் உள்ளடக்கம்” நான் சொன்னேன்: “மனித உரிமைப் பதிவு” அவர் எழுதினார்: “MOD-க்கு அனுப்பவும்.” நான்: கொலைகளைப் பற்றிய கதைகள்தான் உங்களை அச்சுறுத்தலாம். சாதியக் கவிதைகள்? அவர்: பாதுகாப்புச் சிந்தனையில் எல்லாம் ஒன்றுதான் நான்: ஆமாம், சரியாகச் சொன்னீர்கள். இலக்கை நோக்கி வீசப்படும் குண்டு வீச்சில் அதிகமாகக் கொல்லப்படுவது பொதுமக்கள்தான். அதைப்போலவே கொலைகளின் ஆவணமே இல்லாத மற்ற இரண்டு கவிதை நூல்களையும் தடுத்து விட்டீர்கள்… சுங்க அதிகாரியின் கண்ணெதிரே, புத்தகங்கள் பொதிசெய்யப்படுகின்றன. அவர் அதை ‘சரக்கு’ என்று நினைக்கிறார். நான் அதை ‘வரலாறு’ என்று எண்ணுகிறேன். இந்த உரையாடலை எல்லாம் கேட்ட புத்தகங்கள் அமைதியாக இப்போது ‘To MOD’ என்று எழுதப்பட்ட பெட்டியில் இருக்கின்றன. 02 புத்தகங்களின் குரல் இணைகிறது: “எங்களைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாங்கள் சாட்சியங்கள். எங்களில் சிலர் எழுதப்பட்டோம். பெரும்பாலானோர் எழுதப்படவில்லை. எங்களில் சிலர் இந்தப் புத்தகத்தில் இருக்கிறோம். பலர் இல்லை. ஒவ்வொரு தடுக்கப்பட்ட புத்தகமும், ஒவ்வொரு மௌனமான கதையும், ஒவ்வொரு அழிக்கப்பட்ட சாட்சியமும் – இவை அனைத்தும் ஒரே கொலையின் பகுதிகள். நீங்கள் இந்தப் புத்தகத்தைத் தடுக்கிறீர்கள் என்று நினைக்கிறீர்கள். ஆனால் உண்மையில், நீங்கள் மீண்டும் கொல்வதைத் தொடர்கிறீர்கள். ஒவ்வொரு முறையும் நீங்கள் எங்கள் கதையைத் தடுக்கிறீர்கள், எங்களை மீண்டும் கொல்கிறீர்கள். ஆனால் நீங்கள் எங்களைக் கொல்ல முடியாது. ஏனென்றால், சாட்சியங்கள் இரத்தத்தில் எழுதப்படுவது மட்டுமல்ல; அவை காலத்தில் எழுதப்படுகின்றன. அவை காற்றில் எழுதப்படுகின்றன. அவை மனித நெஞ்சில் எழுதப்படுகின்றன. எங்களை எரியுங்கள். இன்னும் நூறு புத்தகங்களை எழுதுவோம். இன்னும் ஆயிரம் கதைகளைச் சொல்வோம். நாங்கள் சாட்சிகள். எங்கள் வேலை, சாட்சியமளித்தல். உங்கள் வேலை, அதைத் தடுத்தல். யார் வெல்லுவார்கள் என்று நினைக்கிறீர்கள்? நீங்கள் எங்களைப் பொதியில் அடைத்தீர்கள். எங்களை MOD க்கு அனுப்புகிறீர்கள். ஒரு ஆவணமாக எண்ணுகிறீர்கள். தவறு. நாங்கள் வெறும் வார்த்தைகள் அல்ல. நாங்கள் கண்கள். 1983இல் நூலகத்தின் ஜன்னல்களில் இருந்து பார்த்த கண்கள். 1987இல் வீதிகளில் நடந்த கண்கள். 2009இல் முள்ளிவாய்க்கால் கரையில் நின்ற கண்கள். உண்மையான வரலாறு பகிரங்கமாக வெளியே உள்ளது. எல்லோருக்கும் தெரிந்தது. அது ஒவ்வொரு வீட்டு முற்றத்திலும் உள்ள ஆழமான வெட்டு. ஒவ்வொரு குடும்ப மரத்திலும் உள்ள ஆறாத புண். அந்தக் காயங்களில் இருந்து வடியும் குருதி – அது எங்கள் மையில் உள்ளது. நீங்கள் எங்களை மறைத்து வைக்கலாம். இந்த ஐந்து புத்தகங்களைத் தடை செய்யலாம். ஆனால் வெளியே உள்ள உண்மையை… அதனுடைய ஆதாரத்தை… காயாத அந்தக் குருதியை எப்படி மறைக்க முடியும்? அது யாழ்ப்பாணத்தின் மண்ணில் இருக்கிறது. கிளிநொச்சியின் வேர்களில் இருக்கிறது. முள்ளிவாய்க்காலில் வீசும் காற்றில் இருக்கிறது. கொக்கட்டிச்சோலையில், உடும்பன்குளத்தில், ஏறாவூரில், மன்னார் – முருங்கனில், வாகரையின் மணலில் கொதித்துக் கொண்டிருக்கிறது. நாங்கள் எதிரொலிகள். உண்மையின் எதிரொலிகள். கண்காணிப்புக் காமிரா 04: ரிக்கார்டிங். 10:25:15. பொருள்: ஒரு (அடையாளம்: தமிழ்) எழுத்தாளரும் நீங்களும் புத்தகப் படிவங்களோடு நுழைகிறீர்கள். நேரம் 10:45:22. பொருள்: சுங்க அதிகாரி (அடையாளம்: காமினி லொக்குபண்டார) புத்தகங்களைப் பிரிக்கிறார். 10:58:41. ஆண் சிரிக்கிறார். வாய்ப்பதிவு இல்லை. பாதுகாப்புக் காரணங்களுக்காக ஓடியோ ரிக்கார்டிங் முடக்கப்பட்டுள்ளது. 12:12:07. புத்தகங்கள் பக்கேஜ் செய்யப்படுகின்றன. 12:20:33. எழுத்தாளர் கையெழுத்திடுகிறார். காமிரா கோணம்: அவரது கைகள் மட்டுமே தெரிகிறது. புத்தகங்கள் மட்டுமே தெரிகிறது. முகங்கள் தெளிவாகத் தெரியவில்லை. ரிக்கார்டிங் முடிந்தது. கோப்பு MOD க்கு மாற்றப்படுகிறது. பறவை பார்த்தது: நீல நிறக் கூண்டு ஒன்று. அதன் உள்ளே, இரண்டு கால்கள் உள்ள மனிதப் பறவைகள், வெள்ளைத் தாள்கள் என்ற இறகுகளை அடுக்கி வைத்திருந்தனர். ஒருவர் மற்றவருக்கு ஒரு கறுப்பு வட்டத்தை (முத்திரை) கொடுத்தார். அது உணவு போல இல்லை; ஆனால் அவர் அதை வாங்கிக் கொண்டார். ஒரு பெரிய பொட்டலம், சிறு சிறு கறுப்பு எழுத்துகளால் நிறைந்தது. அது ஒரு பெட்டியில் வைக்கப்பட்டது. அந்தப் பெட்டியில் மற்றொரு பெரிய கூண்டுக்கு அனுப்பப்படும் என்பது போல, ‘MOD’ என்று குறிக்கப்பட்டிருந்தது. (பறவைக்குப் புரியவில்லை) எழுத்துகள் விதைகளா? இல்லை, அவை முளைக்கவில்லை. அவை பறக்கவும் முடியாது. பிறகு ஏன் அவற்றை காப்பாற்றுகிறார்கள்? அல்லது அழிக்கிறார்கள்? பறவை சிறகை அசைத்தது, மேலே பறந்தது. கீழே, நீலக் கூண்டு இன்னும் அங்கேயே இருந்தது. அதன் வாயில், ஒரு சிறிய மனிதப் பறவை நின்று கொண்டிருந்தான், காலத்தை வெளியே எறிந்து கொண்டிருந்தான்” பறவை பறந்து சென்றது. அது கீழே உள்ள நீலக் கூண்டைப் பார்த்தது. அது ஒரு பெரிய கட்டிடத்தைப் பார்த்தது. அதன் மீது மூன்று எழுத்துக்கள்: M O D. சுங்க அதிகாரியின் குறிப்பு: “அந்தப் பொதியைக் கட்டவிழ்க்கச் சொன்னபோது, என் கைகள் ஈரமாயின. ‘நடவடிக்கை எண் 15(ஆ): தேசிய பாதுகாப்புக்கு இடையூறான வெளிநாட்டு பொருட்கள்’ என்ற பிரிவு என் மனத்தில் ஒளிர்ந்தது. ஆனால் மறுகணம், ‘இவை புத்தகங்கள். வார்த்தைகள். காகிதம் மீது மை’ என்ற மெல்லிய குரல் எழுந்தது. பார்த்தேன் – அந்த எழுத்தாளர் அசைவற்று இருந்தார். அவர் கண்களில் எதிர்பார்ப்பும் தீவிரம் குன்றாத அறிவும் களைப்பான உறுதியும் மட்டுமே இருந்தது. அவர் எத்தனை முறை இந்த நாடகத்தில் முடிவில்லாமல் வாழ்ந்து கொள்ள வேண்டியுள்ளது? நான் எத்தனை முறை இந்த வரிகளைப் பேசியிருக்கிறேன்? துக்கமும் அவமானமுமாக உள்ளது. உண்மையும் நியாயமும் புரிகிறது. சரிகளைத் தெரிந்தும் அதை ஏற்றுக் கொள்ள முடியாமலிருப்பது, அவமானச் சுமையினால் அழுந்துவதன்றி வேறென்ன? ஒரு கணம், நான்தானா இந்தப் பொம்மலாட்டத்தை நடத்துகிறேன் எனத் தோன்றியது. பின், அலுவலகத்தின் பட்டியலில் என் பெயரைக் கண்டேன். காமினி லொக்குபண்டார’ ஆம். நான் இங்குள்ளேன். நான் இதைச் செய்வேன். கையெழுத்து. முத்திரை. MOD க்கு கடமை முடிந்தது. ஆனால் ஏன் இந்த மார்பு இப்படி இடிக்கிறது?” ஏனிந்தக் கண்களில் நீர்? MOD பெட்டியின் கண்ணோட்டம்: “நான் ஒரு பெட்டி. என்னுள் என்ன இருக்கிறது என்று எனக்குத் தெரியாது. ஆனால் இதுவரை, என்னுள் வந்த பல காகிதங்கள் ‘ரகசியம்’ என்று முத்திரை குத்தப்பட்டுள்ளன. அவற்றில் சில உண்மையில் ரகசியங்களாக இருக்கலாம். பெரும்பாலானவைப் பெரும் உண்மைகள். ஆனால் ‘ரகசியம்’ என்ற முத்திரை, ஒரு சாதாரண உண்மையைக் கூட ஒரு ஆயுதமாக மாற்றிவிடும்” அதிகாரியின் உள்உரையாடல்: “சாட்சியங்களின் கொலை.” இந்த வார்த்தைகள் என் நெஞ்சில் குத்தின. அவர் சொன்னது சரிதான். நாங்கள் என்ன செய்தோம்? நாங்கள் கொலைகளைத் தடுக்கவில்லை. அதைச் சொல்ல நான் பயப்படுகிறேன். ஆனால் அது உண்மை. 1983இல் நான் இளம் வயதினன். நாங்கள் செய்திகள் கேட்டோம். ‘தேசியப் பாதுகாப்பு’ என்று சொன்னார்கள். ‘அமைதி’ என்று சொன்னார்கள். ஆனால் இப்போது… இப்போது நான் கொலைகளைத் தடுக்கும் படையின் ஒரு பகுதி. ஆனால், நான் சுங்க அதிகாரி. அல்ல, இன்னும் மோசமானது. நான் கொலைகளை மறக்க வைக்கும் படையின் ஒரு பகுதி. முதல் கொலை: அவர்களுடைய உயிர். இரண்டாவது கொலை: அவர்களுடைய குரல். மூன்றாவது கொலை: அவர்களுடைய நினைவு. நான்காவது கொலை: அவர்களுடைய நீதி. ஆம், நான்கு கொலைகள். நான் நான்காவது கொலையில் பங்கு கொள்கிறேன். நான் ‘நீதியை’ கொல்கிறேன். வெறும் கையெழுத்து மூலம். வெறும் படிவம் மூலம். சட்டம் சொல்கிறது: இது தவறு அல்ல. ஆனால் மனசாட்சி சொல்கிறது: இது கொலை. 03 அவருடைய பதட்டத்தைக் கண்ட அந்த உதவிப் பணியாளர், இயந்திரம்போல மிக வேகமாக அதையெல்லாம் செய்து ஒப்பத்துக்காகப் பத்திரத்தை அதிகாரிடம் கொடுக்கிறார். பிரிக்கப்பட்ட பொதியில் புத்தகங்களை உள்ளிட்டு, மீளவும் பொதியாக்கி, To the MOD என்று எழுதுகிறார் உதவிப் பணியாளர். “ஆட்கள் மாறியிருக்கிறார்களே தவிர, ஆட்சி மாறவில்லை” என்கிறேன். ‘அதேதான்’ என்பது போல சிரித்தார் அதிகாரி. முகத்தில் ஒரு சிநேகபாவம் தோன்றியது. “உங்களுக்கு நல்ல பதில் கிடைக்க வேண்டும் என்று பிராத்திக்கின்றேன்” என்றார். “நல்ல பதில் அல்ல. புத்தகங்கள்தான், நீதிதான் கிடைக்க வேண்டும்” ஒப்பமிட்ட பின் ‘தடைசெய்யப்பட்டன புத்தகங்கள்’ என்று எழுதப்பட்ட பத்திரத்தை, அதிகாரியைப் பார்த்துக் கொண்டு வாங்குகிறேன். அந்த முத்திரையிட்ட உறையை வாங்கும்போது, என் கைகள் நடுங்கவில்லை. வரலாறு மீண்டும் தடுக்கப்பட்டதை உணர்கிறேன். ஆனால் அதிகாரியின் கண்களில், முன்பு இல்லாத ஒரு வெளிச்சம் இருக்கிறது. அவர் கடித உறையை நீட்டும்போது, அவரது விரல்கள் மெதுவாக என் கையினைத் தொடுகின்றன. அது ஒரு தவறுதலாக, தற்செயலானதாக இருக்கலாம். அல்லது ஒரு மௌனமான உரையாடலாக இருக்கலாம். அந்தத் தொடுகையில் நடுக்கத்தை உணர்கிறேன். நாங்கள் வெளியேறும்போது, அவர் மெதுவாகச் சொல்கிறார், “உங்கள் புத்தகம்… அதில் பல பக்கங்கள்… மிகவும் நன்றாக எழுதப்பட்டுள்ளது” அந்த வார்த்தைகள், அந்த இரும்புக் கதவைத் தாண்டி வந்து, எங்களுடன் நடந்து கொண்டிருக்கின்றன. 04 “அன்றிரவு, உங்களுடைய கனவில், நூலகமும் சுங்க அலுவலகமும் ஒன்றாக மாறியிருந்தன. புத்தக அலமாரிகள் சுங்க அலுவலக கவுண்டர்களாகி விட்டன. ஒவ்வொரு புத்தகத்தின் மேலும் ‘தடை செய்யப்பட்டது’ என்ற முத்திரை. ஆனால் புத்தகங்கள் பேசிக் கொண்டிருந்தன. அவை சத்தமாகப் படித்துக் கொண்டிருந்தன. ‘நாங்கள் எரிக்கப்பட்டோம். ஆனால் எங்கள் வார்த்தைகள் மட்டும் எரியவில்லை’ என்று ஒரு புத்தகம் சத்தமிட்டது. 05 இப்படியெல்லாம் நடப்பதைப் பற்றி நீங்கள் ஆழமாக யோசித்துக் கொண்டேயிருக்கிறீர்கள். இது உங்களுடைய மனதில் கனமான ஒரு நெருப்புத் துண்டைப்போலவே கிடக்கிறது. அப்படி யோசித்துக் கொண்டிருக்கும்போது உங்களுடைய நினைவுக்கு வந்த பதிவொன்று – அலெக்ஸாண்டிரியாவின் பழமையான நூலகத்தை (Library of Alexandria) பற்றி தெரியுமா உங்களுக்கு? இது எகிப்தின் அலெக்ஸாண்டிரியாவில் கி.மு 03 ஆம் நூற்றாண்டில் தாலமிக் வம்சத்தால் நிறுவப்பட்டது. ‘மௌசியோ’வின் (Mouseion) ஒரு பகுதியான இந்த நூலகம், உலகின் அனைத்து இலக்கியங்களையும் சேகரிப்பதை நோக்கமாகக் கொண்டிருந்தது. இதில் 40,000 முதல் 400,000 சுருள்கள் (scrolls) இருந்திருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. விரிவுரைக் கூடங்கள், ஆய்வகங்கள், தோட்டங்கள் மற்றும் விலங்கியல் பூங்காக்களும் இதில் இருந்தன. அறிஞர்களுக்கான தங்குமிடம், வரி விலக்குகள், ஊதியத்தை எல்லாம் வழங்கியது. அறிஞர்களான பிளாட்டோ, அரிஸ்டாட்டில், ஹிப்போகிரேட்டஸ் போன்றோரின் படைப்புகள் இங்கே இருந்தன. இங்குப் பழங்காலத்தின் மிக பிரபலமான சிந்தனையாளர்கள் பலர் ஆய்வுகள் செய்தனர். பெரும்பாலான புத்தகங்கள் பாபிரஸ் காகித சுருள்களாக வைக்கப்பட்டிருந்தன. இது கலைகளின் ஒன்பது தெய்வங்களான, முஸைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்டது. கி.பி. 03 ஆம் நூற்றாண்டில் நடந்த உள்நாட்டுப் போரின்போது முக்கிய நூலகம் அழிந்தது. பின்னர், அதன் துணை நூலகமான செராபியம் (Serapeum) கி.பி 391 இல் கிறிஸ்தவர்களால் அழிக்கப்பட்டது. இந்த நூலகத்தில் உள்ள நூல்கள் தீக்கிரையாக்கப்பட்டு அழிவுக்கு உள்ளாயின. அதன் அழிவானது கலாச்சார அறிவு இழப்புக்கான ஒரு சின்னமாக மாறியது. இதனுடைய முழுமையான அழிவு கி.மு. 48 இல் ஜூலியஸ் சீசரின் இராணுவத்தால் மற்றும் கி.பி 270 இல் ஆரேலியனின் தாக்குதல் ஆகியவற்றால் ஏற்பட்டிருக்கலாம். எகிப்தை முஸ்லீம்கள் வெற்றி கொண்ட காலமான கி.பி. 642 இல் (அல்லது அதற்குப் பிறகு) நூலகம் இறுதியாக அழிந்தது. 06 இந்தக் கதையைக் கொந்தளிப்போடு நீங்கள், உங்களுடைய மகளுக்குச் சொன்னபோது, அவள் கேட்டாள், “வரலாற்றின் மனநோயாளிகளைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?” “அவர்கள் வரலாற்றைக் கண்டு அச்சமடைகிறார்கள் மகளே!” 00 https://vallinam.com.my/version2/?p=108333 points- முன்னோடி - அடிப்படை சுகாதார வசதி திட்டம்
முதலாவதும் இரண்டாவதும் சரியாக வருமா என்று தெரியவில்லை. உதவி செய்ப்பவர்கள் நேரடியாகப் பயனாளிகளுக்கு அல்லது ஒப்பந்தக்காரர்களுக்கு அனுப்புவதை விரும்புவார்களா என்பது ஒரு கேள்வி. அங்கெ அவர்களுடைய தனிப்பட்ட தகவல்கள் தெரிய வரலாம் மூன்றாவது சரியாக இருக்கும் என்னைப் பொறுத்தவரையில் ஒரு புதிய வங்கிக்கணக்கு இருந்தால் உதவி செய்பவர்களின் தனிப்பட்ட தகவல்கள் பாதுகாக்கப்படும் உதவி செய்பவர்களின் விருப்பத்திற்கேற்ப அவர்களின் தனிப்பட்ட தகவல்களை தெரியப்படுத்தலாம் இல்லையா ? பெயர் உண்மையிலேயே வித்தியாசமான ஒரு நல்ல தமிழ்ப் பெயராக இருக்கின்றது. நல்லதொரு தெரிவு 👌 மற்றவர்களின் கருத்துக்களையும் கேட்போம் பலரும் முன்னோடிகளாக இருப்பதை விரும்புவார்கள்3 points- யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
இதனை பின்ட் செய்து விட்டால் இலகுவாக இருக்கும்..அவ்வப்போது வந்து பார்த்து சந்தர்ப்பம் ஏற்படும் போது விருப்பப்படுபவர்கள் தங்களால் முடிந்ததை செய்ய முடியும்.3 points- யாழில் 3012 குடும்பங்களுக்கு மலசலக்கூட வசதி இல்லை!
நீன்ட காலத்துக்குப் பின் யாழில் நல்லதொரு முயற்ச்சி வாழ்த்துக்கள்.3 points- “தமிழர்கள் ஓட்டு போதும்; திராவிடர்கள் ஓட்டு வேண்டாம்!” - நாதக பொதுக் குழுவில் சீமான் பேச்சு
3 points3 points- சாள்ஸ் அன்ரனி சிறப்புப் படையணியில் பணியாற்றிய போராளியின் நினைவுகள்
அழியாத நினைவுகள் புகைப்படத்தை பார்த்ததும் கடந்த கால பயணத்தை பதிவு செய்கிறேன்… கோகுலன் அண்ணாவின் கீழ் பயணிக்கும் பொழுது சிறப்பு பயிற்சி ஒன்றுக்காக அனுப்பப்படுகிறோம் நானும் செந்தாழனும்... எங்களுக்கு அருகில் தான் சாள்ஸ் அன்ரனி கோபித் அண்ணாவின் முகாம் இருந்தது வட போர் முனை கிலாலி பகுதியில்...அவரோடு அன்று 5 போராளிகள் இருந்தார்கள் பாவலன்,மதுரன்,வளநெஞ்சன்,அறிவுச்சுடர்... இந்த புகைப்படத்தில் கோபித் அண்ணாவும் பாவலனும் இருக்கிறார்கள்… நான் ஒரு ஆசிரியர் துறை சார்ந்த கல்வியை அப்பொழுது நிறைவு செய்தபடியால் இவர்களோடு இணைந்து கொண்டோம் வட போர்முனை போராளிகள் சார்ந்து…ஐந்து மாதங்கள் ஒன்றாக பயணித்தோம் காலை நாலு முப்பது தொடக்கம் நள்ளிரவு 11 மணி வரை மிகக் கடுமையான பயிற்சிகள் ஓய்வு நேரத்தில் சதுரங்கம் விளையாடி துடுப்பாடிய நினைவுகள் அதிகம்… இதில் மேலும் ஒரு சகோதரர் இருக்கிறார் காண்டீபன் தூயவன் அரச அறிவியல் கல்லூரியில் ஒன்றாக கல்வி கற்றோம் மிகச் சிறந்த கல்வியாளர்…நான் புலம்பெயர்ந்த நாட்டிற்கு வந்த பின்னர் இரண்டு முறை கோபித் அண்ணாவோட உரையாடும் சந்தர்ப்பம் கிடைத்தது அன்று எங்களுக்கு சிறப்பாக சமைத்து தரும் மதுரன் அண்ணாவை விசாரித்தேன்…மேஜர் மதுரன் கேப்டன் அறிவிச்சுடர் இருவரும் வீரச் சாவடைந்துவிட்டார்கள் அவர்களைப் பற்றி இறுதியாக உரையாடினேன் கோபித் அண்ணாவோடு நோர்வே நாட்டிலிருந்து… அன்று நகுலன் அண்ணா துணை தளபதியாக இருந்தார் சாள்ஸ் அன்ரனி படையணியில் வீரமணி அண்ணா தளபதியாக இருக்கும் பொழுது நான் (லீமா சேரா)லாரன்ஸ் அண்ணாவோடு நகுலன் அண்ணாவை பலமுறை சென்று சந்தித்திருக்கிறேன் சந்திப்போம் சிறப்பாக வரவேற்பார் அன்புடன் நினைவுகள் இப்பொழுதும்…. லீமா சேரா மற்றும் நகுலன் அண்ணா இக்கச்சி பிரதேசத்தில் இருந்த போர் பயிற்சி கல்லூரியில் தைப்பொங்கல் கொண்டாட்டத்தில் இருவரையும் ஒன்றாக சந்தித்தேன் நினைவுகள் இன்றும்…ஒருவர் உயிரோடு இருப்பதாக அறிந்தேன்…லோரன்ஸ் அண்ணா ஆனந்தபுரம் முற்றுகையிலிருந்து காயப்பட்ட தகவலை மட்டும் அறிந்தேன் புலம்பெயர்ந்த நாட்டிலிருந்து… எங்களைப் போன்றவர்கள் மரணிக்கும் வரை எங்கள் இனத்திற்காக நாங்கள் பயணித்த பாதைகள் பயணங்கள் ஏதோ ஒரு விதத்தில் ஒவ்வொரு சந்தர்ப்பங்களிலும் கடந்து செல்ல முடியாமல் எங்களை காயப்படுத்துகிறது வலிகள் நிறைந்திருந்தாலும் தமிழ் இனத்திற்காக வாழ்ந்த மறவர்கள் நாங்கள்… எழுத்தாளர்: தரன் ஸ்ரீ💐3 points - யாழிணைய நிர்வாகி திரு மோகன் அவர்களின் அருமைத் துணைவியார் இன்று (14-01-2026) காலமானார்.
Important Information
By using this site, you agree to our Terms of Use.
Navigation
Search
Configure browser push notifications
Chrome (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions → Notifications.
- Adjust your preference.
Chrome (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Select Site settings.
- Find Notifications and adjust your preference.
Safari (iOS 16.4+)
- Ensure the site is installed via Add to Home Screen.
- Open Settings App → Notifications.
- Find your app name and adjust your preference.
Safari (macOS)
- Go to Safari → Preferences.
- Click the Websites tab.
- Select Notifications in the sidebar.
- Find this website and adjust your preference.
Edge (Android)
- Tap the lock icon next to the address bar.
- Tap Permissions.
- Find Notifications and adjust your preference.
Edge (Desktop)
- Click the padlock icon in the address bar.
- Click Permissions for this site.
- Find Notifications and adjust your preference.
Firefox (Android)
- Go to Settings → Site permissions.
- Tap Notifications.
- Find this site in the list and adjust your preference.
Firefox (Desktop)
- Open Firefox Settings.
- Search for Notifications.
- Find this site in the list and adjust your preference.