Leaderboard

 1. suvy

  suvy

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   58

  • Content Count

   15,632


 2. ஈழப்பிரியன்

  ஈழப்பிரியன்

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   51

  • Content Count

   6,433


 3. தமிழ் சிறி

  தமிழ் சிறி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   43

  • Content Count

   45,234


 4. குமாரசாமி

  குமாரசாமி

  கருத்துக்கள உறவுகள்


  • Points

   40

  • Content Count

   26,577Popular Content

Showing content with the highest reputation since 03/17/2019 in all areas

 1. 9 points
  மனிதரின் தேவைகள்தான் படைப்புக்களாகவும் வடிவங்களாகவும் படைக்க படுகின்றன. புலிகளின் எழுச்சி வளர்ச்சி என்பது எமது இனத்தின் தேவையாக இருந்தபோதே தோன்றியது சாண்டமாருதன் கூறிய அனைத்து பிரிவினையும் கொண்ட ஒரு இனத்தின் வழிகாட்டியாகவும் படகோட்டியாகவும் வரும்போது புலிகளின் கடும்போக்கு தேவையானதாக இருந்தது. என்னையே சுடுவதுக்கு புலிகள் கொண்டு சென்று வைத்திருந்தார்கள் பின்பு எங்கள் எல்லோரையும் விடுதலை செய்தார்கள். நானும் உங்களைப்போல போராடத்தானே போனேன் எனும் ஒருபக்க நியாயம் என்னிடமும் முன்பு இருந்தது புலிகள்மேல் வெறுப்பு பகைமை எல்லாம் எனக்கும் அப்போது இருந்தது. தமிழ் ஈழ விடுதலை என்று வரும்போது புலிகள் செய்தது மிக சரியான செயல் மட்டும்மல்ல செய்த நேரம் தான் மிகவும் சரியான நேரம். புலிகள் கொஞ்சம் தாமதித்து இருந்தால்கூட முள்ளிவாய்க்கால் போல் ஒரு பெரிய அழிவை நாம் ஒருவரை ஒருவர் வெட்டி கண்டிருப்போம். இயக்க மோதல் என்பது தொடராகத்தான் தொடர்ந்தது ....... சொந்த இயக்கத்தவரையும் ஏனைய இயக்கததவரையும் சுட்டும் வெட்டியும் கொல்லும் போக்கு புளட்டின் கொள்கையாக மாறி இருந்தது. 7 டெலா எனும் அமைப்பின் தலைவரையும் (பிரான்சிஸ்) போராளிகளையும் சுட்டு கொன்றார்கள் பின்பு 8 புலி ஆதரவாளர்களை சுதுமலை எனும் இடத்தில் கொன்று புதைத்தார்கள். யாரும் கேட்கவில்லை. வீணான அழிவு வரும் என்பதால் புலிகள் பொறுமை காத்தார்கள்.( நிறைகுடம் தளம்பாது). பின்பு எமது சொந்த இயக்கமான டெலோ எங்களுக்கு தலைவராக அவரைத்தான் தெரியும் தாஸை சுட்டு கொன்றார்கள் (இவர் புலிகளின் தளபதியான கிட்டுவின் நெருங்கிய நண்பன்). பின்பு பேச்சுவார்த்தை நடத்த வந்த புலிகளின் இன்னொரு தளபதியான லிங்கத்தை கொன்றார்கள். புலி பதுங்குவது பாய்வதுக்குத்தான் என்பது கண் கெட்ட பின்பு சூரிய நமஸ்காரம் போல ... அவர்கள் எங்கள் முகாம் வாசலில் வந்து நின்றபோதுதான் காலம்தாழ்த்தி புரிந்தது. அப்போது கூட மிகவும் நேர்த்தியாக ஒலிபெருக்கி மூலம் அறிவிப்பு செய்து தங்களிடம் வந்து சரண் அடையும்படி நேர அவகாசம் தந்துதான் பின்பு கைது செய்ய வந்தார்கள். கைதுசெய்ய பட்டவன் எனும் அவமானம் எனக்குள் இருந்தாலும் .... ஒரு தமிழனாக புலிகளின் வீரத்தையும் தன்னம்பிக்கையையும் கொள்கை உறுதியையும் பாராட்டியே தீர வேண்டும். காரணம் அப்போது ஆள்பலத்திலோ ஆயுத பலத்திலோ மேல் ஓங்கி நின்றவர்கள் நாம். பொற்கோவிலில் இந்திராகாந்தி சீக்கியரிடம் இருந்து எடுத்த ஆர்பிஜி , எ கே எல்லாம் எங்களுக்குத்தான் தந்தார்கள். வீரம் தவிர்த்து அவர்களிடம் வேறு எதுவும் இருக்கவில்லை. இப்போது தில்லுமுல்லு செய்துகொண்டு இருந்த ஈ பி ஆர் எல் எப் எனும் அமைப்பின் தலைவரான பட்பநாபா அவர்களுக்கு ஒரு உண்மை தெளிவாக புரிந்தது. டெலோவுக்கும் புலிகளுக்குமான சண்டையில் கூடிய எண்ணையை ஊற்றி புலிகளை அழித்ததால் தான் தனிக்காட்டு ராஜாவாகலாம் என்ற எண்ணம் தோண்றியது. ஆயுதங்களை இறக்கி ஏத்துவது டெலோ போராளிகளை வேறு வேறு இடங்களில் ஒன்று சேர்ப்பது என்றும் தலைவர் சிறீசபாவை இந்தியா கொண்டு சென்று போரை புதுப்பித்து கொள்ளலாம் என்று களமிறங்கினார்கள். ஈ பி வாகனங்களை பல இடங்களில் புலிகள் டெலோ போராளிகளுடன் வழிமறித்தார்கள் வாய்த்தர்க்கம் நடந்தது .... புலிகள் தமக்கு பயந்து விடுகிறார்கள் என்ற பெருமிதத்தில்தான் அப்போது ஈ பி ஊருக்குள் கதை அளந்தார்கள். எங்கள் மேல் கை வைத்தால் தெரியும் இவர்களுக்கு என்று எமது ஊரிலேயே சொன்னார்களாம். காரணம் அப்போது ஆள்தொகையில் அவர்கள்தான் கூடுதலாக இருந்தார்கள். புலிகள் யார் போராடுவான் என்று பார்த்துதான் ஆள் சேர்ப்பார்கள்... இவர்கள் ரோட்டில் நின்ற எல்லோரையும் ஏற்றி செல்வார்கள். இரண்டு இயக்கத்துடன் ஒரே நேரத்தில் சண்டையை அவர்கள் சாணக்கியமாக தவிர்த்துக்கொண்டு வந்தார்கள். இந்த வாய்தர்க்கமும் முரண்பாடும் நாளும் நாளும் கூடியது தப்பி இந்தியா போனவர்கள் இந்தியாவில் இருந்த டெலோ உறுப்பினர்கள் திடீர் திடீரென யாழ்ப்பாணம் ஈ பி முகாமில் தென்பட்டார்கள் ..... புலிகள் பல முறை பேசினார்கள் வாய்த்தர்க்கம் வரும் சென்று விடுவார்கள். இவர்கள் எம்மில் கை வைத்தால்தான் புலிகளுக்கு தெரியும் என்று பெருமிதம் கொள்வார்கள். பின்பு ஒருநாள் உண்மையிலேயே ஒலிபெருக்கியுடனும் அறிவிப்புடனும் வந்துவிடார்கள். டெலோவுடன் சில இடங்களில் நேரடி மோதல் துப்பாக்கி சண்டை நடந்ததால் புலிகள் கடும்போக்கில் இருந்தார்கள் புலிகளுக்கும் இது புது அனுபவம் எப்படி கையாள்வது என்பதோ அல்லது திட்டம் போட்டு நடந்ததோ இல்லை. ஈ பி ஒரு கேளிக்கை விளையாட்டாக இருந்தது ... காரணம் அதில் இருந்த பெரும்பான்மை இளைஞர்கள் அப்பாவிகள் பல பேர் ஆயுதங்களை கண்ணால் கண்டதுகூட இல்லை. எமது ஊரில் இருந்துதான் படகில் ஏற்றி இந்தியா அனுப்பினோம் ஓடி ஓடி வந்துகொண்டே இருந்தார்கள். புலிகளுக்கும் தெரியும் தெரிந்துதான் விட்டார்கள். பின்பு புளட் ... 90 வீதம் பேச்சுவார்த்தை மூலமே முடிந்து விட்ட்து. இது புலிதான் என்பது தெரிந்தபின்பு அவர்களகாவே வாலை சுருட்டிக்கொண்டு பேசுவது உத்தமம் எனும் முடிவுக்கு வந்தது வரவேற்க கூடியது. இதுதான் இயக்க மோதலின் சுருக்கம் தனி தனியே ஊருக்கு ஊர் ஒரு கதை உண்டு. இதில் சில சம்பவங்களில் இத்தனை வருடம் தாண்டியும் நியாய படுத்த முடியாத சில சம்பவங்களும் தவறுகளும் சில புலி போராளிகள் மேல் உண்டு. புலிகளும் அதை நியாய படுத்த ஒருபோதும் முனைந்ததில்லை. சில போராளிகளை தண்டித்தார்கள் சிலபேரை பதவி நீக்கம் செய்தார்கள். ஏமாற்றம் நம்பிக்கையீனம் என்பது எப்போதும் மனித இனத்தில் வருவதுதான் எமக்கு ஒரு பெருத்த பலவீனம் நிலப்பரப்பு தீவாக அமைந்துவிட்டது கடலை கட்டுப்படுத்தினால் எம்மை கட்டிவிடும் சாத்தியம் எதிரிக்கு கிடைத்த வரப்பிரதாஸம். இப்போதைய துரோகிகளின் அரசியல் மேடை இனத்தை விற்கும் போக்கு என்பதை நான் பாசிட்டிவ் ஆகவே பார்க்கிறேன். இப்போதைய இளைய சமுதாயத்துக்கு புலிகளின் தியாகம் பெரிதாக புரியவில்லை ... இவர்க்ளின் துரோகங்களும் அன்றாட ஏமாற்றங்களும்தான் அவர்களுக்கு சிந்தனையை கொடுக்கிறது. அடுத்தது எமக்கு கிடைக்க கூடியது பொருளாதார போர்தான் வெற்றி பெற கூடிய அனைத்து சாத்தியங்களையும் நான் பார்க்கிறேன். தொலைநோக்கு உடையவர்கள் நகர்ந்துகொண்டு இருக்கிறார்கள். எதிரி இன பரம்பலை உருவாக்கி எமது பிரதேச அங்கீகாரத்தை தகர்க்க திட்டம் போட்டு நகருகிறான் .... இதை கொஞ்சம் நிறுத்தி வைக்க எமக்கு ஒரு அரசியல் பலம் அங்கு தேவை உள்ளது ....... அதை விடுத்து இனி வரும் போர் ... பொருளாதார போர் வெளியில் இருந்தே இலகுவாக செய்து வெல்ல கூடியது. மீண்டும் எழுவோம் எனும் நம்பிக்கை எனக்கு இப்போது உண்டு. உலக பொருளாதார போக்கு பாரிய மாற்றம் காண்கிறது உலக வங்கிக்கு சமமாக சீன வங்கி மூன்றாம் உலகுக்கு கடன் கொடுக்கிறது. டாலரில் வணிகம் கிரெடிட் கார்டு போன்றவைக்கே ஆப்பு வரும் அளவுக்கு எலெட்ரோனிக் பணம் வளர்கிறது. எமக்கு புலிகள் போல வழிகாட்ட ஒரு நேர்த்தியான தலைமை மட்டும் வேண்டும். இதை காலம் உருவாக்கும்.
 2. 9 points
  ஆயுதப்போராட்ட காலத்தைப் பற்றிய விமர்சனங்கள் ஒரு குறுகிய வட்டத்துள் என்னும் நிற்கின்றது அவற்றைக் கடந்து எம்மால் இன்னும் சிந்திக்க முடியவில்லை. ஒரு விதத்தில் சிந்திக்கவும் முடியாத பலவீனமான இனக் குழுமம்தான் நாம். ஆயுதப்போராட்டத்திற்கு முற்பட்ட எமது சமூகம் ஆரோக்கியமான ஒற்றுமையான சமூகமாக இருந்ததிற்கான எந்த ஒரு வரலாறும் இல்லை. இனம் தேசீயம் என்ற பொது உணர்வற்ற சமூகமாக இருந்தது. கீழ்சாதிப் பிணங்கள் மேல்சாதித் தெருக்களில் எடுத்துப்போவதற்கு எதிராக வன்முறையில் இறங்கிய சமூகம். இதற்காக தனது புத்திஜீவிதத்தை கோட்டிலும் வழக்கிலும் பயன்படுத்திய சமூகம். சாதி மதம் பிரதேசவாதம் புரையோடிப்போன சமூகம். இவற்றைக் கடந்து சிங்கள பேரினவாதம் எம்மை இனமாக பெயரிட்டு அடித்தபோதே அதற்கு எதிர்வினையாற்ற சில இளைஞர்கள் முயன்றார்கள். அந்த இளைஞர்களை இனம்கண்டு பல்வேறு பிரிவுகளாக ஆயுதப்பயிற்சியளித்து வளர்த்து விட்டது இந்திய மத்திய அரசு. ஆயுதப்போராட்டம் தொடர்ந்தது பின்னர் முடிந்தது. அதன் பிறகு ஒரு தசப்பதம் முடிந்த இன்றை நிலையில் மனனாரில் இந்துக்களும் கிறிஸ்தவர்களும் மோதல், யாழில் ஆயுதங்களுக்குப் பதிலாக வாள்கள், கசிப்புக்கு பதிலாக கஞ்சா கிழக்கில் இஸ்லாமியர் இந்துக்கள் முறுகல். சாதி மத பிரதேசவாத பிரச்சனை ஆயுதப்போராட்ட காலத்துக்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படியே என்னும் இருக்கின்றது. இனி ஒரு போதும் சிங்களவர்கள் எம்மை இனமாக அணுகிய தவறை செய்ய மாட்டார்கள். மதமாக பிரதேமாக தேவைப்பட்டால் சாதிவாரியாக அணுகுவார்கள். இன அடிப்படையில் நாம் ஒன்றுபட்டு தேசிய எழுச்சிபெற்று இனவிடுதலைக்கான அரசியல் ஆயுதப்போராட்டத்திற்கான எந்த அவசியமும் இனி ஏற்பட வாய்ப்பில்லை. புலியும் ஏனைய இயங்கங்களும் எமது வரலாற்றில் ஒரு குறிப்பிட்ட காலத்தில் எமது சமூகத்தில் தோன்றி மறைந்தவர்கள் தவிர வேறு சமூகத்தை சேர்ந்த அந்நியர்கள் இல்லை. நேற்றும் இன்றும் நாளையும் பானையில் உள்ளதே அகப்பையில் வரும்.
 3. 8 points
  புறாத்தீவு மிகவும் சிறிய தீவாக இருந்தது.மாமியைத் தவிர மற்றைய எல்லோரும் தண்ணீருக்குள் இறங்கினார்கள்.தண்ணீருக்குள் இறங்கினால் கால் வைக்க முடியாது.அந்தளவு கல்வெட்டு போன எல்லோருக்கும் காலில் வெட்டுக்காயம். நல்லவேளையாக பிள்ளைகள் கால்சப்பாத்து கண் வாய்க்கு போட என்று வாடகைக்கு எடுத்திருந்தார்கள்.அவர்கள் தங்கள் பாட்டில் போயிருந்தனர்.இடையில் நாங்கள் நின்ற இடத்துக்கு வந்து கண்ணாடியை ஒருக்கால் போட்டுப் பாருங்கோ என்றார்கள்.நானும் போட்டுக் கொண்டு தண்ணீருக்குள் பார்க்க மிகவும் அதிசயமாக இருந்தது. எனக்கு 15-20 யார் தூரத்துக்கு நீந்தத் தெரியுமே தவிர அதிக தூரம் நீந்த முடியாது.இருந்தாலும் அவர்கள் போட்டிருந்த சினோகில் என்றதை எப்படி போடுவது என்று கேட்டு போட்டுக் கொண்டு சினோக்கில் போட்டு நீந்துவதற்கென்று போட்ட இடத்துக்கு போனேன். வழமையாக நீந்துவதை விட சினோக்கிள் போட்டிருந்தால் சுலபமாக நீந்தலாம்.நானும் போட்டுக் கொண்டு அந்த இடத்துக்குப் போக தண்ணீருக்குள் தலை இருந்ததால் நிமிர்ந்தே பார்க்கவில்லை.அலைக்கு அடித்து அடித்து நான் தனியே மற்றவர்கள் நின்ற இடத்திலிருந்து தனியே மிகவும் ஆழமான இடத்துக்கு போய்விட்டேன். நான் போகபோக மகளுக்கு ஏதொ நடக்கப் போகிறதென்று தெரிந்துவிட்டது.தண்ணீருக்குள் தலை அமிழ்ந்திருந்ததால் கூப்பிட்டதும் கேட்கவில்லை.கீழேயுள்ள பவளப்பாறைகள் விதவிதமான நிறங்களுடன் பார்க்க பார்க்க மீண்டும் மீண்டும் பார்க்க வேண்டும் போல இருந்தது.இதனால் எங்கே நிற்கிறேன் என்று கூட அறிய முற்படவில்லை. வாயால் மூச்செடுத்துக் கொண்டு இன்னும் கொஞ்சம் தலையை தண்ணீருக்குள் விட்டிருக்கிறேன் போல மூச்சை உள்வாங்கும் போது மூச்சுக்கு பதிலாக உப்புத் தண்ணீர் குடித்து பிரக்கேறி தெரிந்த நீச்சலும் போய் தாழத் தொடங்கிவிட்டேன்.பிரக்கடித்ததோடு சினோக்கிளையும் கழற்றிவிட்டேன்.நீந்த முயற்சிக்கிறேன் உடம்ப சோர்ந்து கொண்டு போகிறது.பக்கத்தில் உதவ யாருமே இல்லை.என் வாழ்வு கடேசி நிமிடங்களே தெரிகிறது.ஏற்கனவே ஏதோ ஒரு விபரீதம் நடக்கப் போவதை உணர்ந்து மகள் நான் நின்ற இடம் நோக்கி வந்திருக்கிறார்.நான் தாண்டு தாண்டு எழும்ப மகள் மேலே மேலே தள்ளி சினோக்கிளைப் போடுங்கோ என்கிறாள்.என்னால் எதுவுமே செய்ய முடியவில்லை.சரி ஒன்றும் செய்ய வேண்டாம் பயப்படாதைங்கோ யாரையும் பிடிச்சுப் போடாதைங்கோ என்று நான் தாளத் தாள மேலே தள்ளித் தள்ளி ஒரு மாதிரி கரை சேர்ந்தோம்.எட்டக் கூடிய தண்ணீரில் கூட என்னால் நடக்க முடியவில்லை.இதுகளை கரையிலிருந்து எமதுறவுகள் துடிதுடிப்போடு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.நிறைய உப்புத் தண்ணி குடித்திட்டார் தண்ணி போத்திலை எடுத்துக் கொண்டு வாங்கோ நிறைய தண்ணி குடிக்க வேணும் என்று மகள் சொல்ல ஒரு போத்தலை எடுக்க 4-5 பேர் ஓட்டம். தள்ளாடித் தள்ளாடி கரைக்கு வர மனைவியும் ஓடி வாற.நானும் ஏதோ என்னைத் தான் பிடிக்க வாறாவாக்கும் என்று பார்த்தா வந்த மனுசி இத்தனை பேர் நிக்கினம் நீங்களொராள் தான் இவ்வளவு தூரம் போயிருக்கிறியள் சுதி காட்டுறதுக்கும் ஒரு அளவில்லையோ என்று நுள்ளி எடுத்துப் போட்டா.எல்லோர் முகங்களிலும் கோபமும் சோகமும்.இதற்கு மேல் அங்கிருக்க எவருக்குமே மனசில்லை.அத்தோடு புறப்பட்டு வீடு வந்து சேர்ந்தாலும் ஒவ்வொரு தடவையும் என்னைப் பார்க்கும் போதும் சோகமாக பார்க்கிறார்கள்.எவருக்கும் எதையும் ரசித்து செய்ய மனமில்லை.ஏறத்தாள எல்லோர் கண் முன்னேயும் போய்வந்த உயிரல்லவா.நான் எங்கே போனாலும் எனக்கு பின்னால் யாராவது ஒருத்தர்.ஒன்றுக்கு போனால் கூட 4ம் வகுப்பு படிக்கும் பெறாமகன் நானும் வாறதா என்று கேட்கிறான்.எனக்கு அது பாசமா?கேலியா என்று தெரியவில்லை.பாசமாகவே எடுத்துக் கொண்டேன்.இதை எழுதும் போது கூட கண்கள் கலங்குகின்றன. தொடரும்.
 4. 7 points
  வணக்கம் சோழர்கள் காலம் வரலாற்றில் ஒரு நிகழ்வாக இருக்கும். சோழரும் பாண்டியரும் சேரரும் தமக்குள் அடிபட்டு அழிந்து போகாமல் இருந்திருந்தால் அக்காலம் இன்று நீட்சியாக இருந்திருக்கும். இவர்கள் மூவரும் சேர்ந்து ஒரு தேசத்தை உருவாக்கியிருந்தால் அதுவே தமிழனுக்கு நிரந்தர அடயாளமாக இருந்திருக்கும். பலமான தேசங்களும் குறிப்பாக தமது சுயநலன் சுரண்டலுக்காக சிறு இனக் குழுமங்களை அழிப்பது உலகில் புதியதல்ல. ரசியாவை பின்தள்ள முஜாகுதீன்களை அன்று அமரிக்க உருவாக்கியது இன்றய ஐஎஸ்எஸ் சிரியப் போராளிகளை உருவாக்கியது. பல மில்லியன் மக்களின் சாவும் மில்லியன் குழந்தைகள் அநாதைகளாதலும் அகதியாதலும் என தொடர்கின்றது, இதையே பாகிஸ்தான் உளவுத்துறை காஸ்மீரில் செய்கின்றது. இவ்வாறான அணுகுமுறையைத்தான் இந்தியாவும் இலங்கைப் போராளிகள் விசயத்தில் செய்தது. இலங்கை அரசும் மதம் கிழக்கு பிரதேசவாதம் மற்றும் படித்த புத்திஜீவிகளை வைத்து நிறைய விசயங்களை தனக்கு சாதகமாக்கியது. நாம் இவற்றுக்கெல்லாம் பலியாகக் கூடிய நிலையில் இருந்தோம் இன்னும் இருக்கின்றோம் என்பதுதான் எமது அழிவினதும் அடயாளங்களை இழப்பதின் சுட்சுமமே தவிர எல்லா பழியையும் தூக்கி புலிமீது போட்டுவிட்டு நாம் யோக்கியர் என்பதும் எமது சமூகத்தில் இருந்து தோன்றி மறைந்த புலிகளை எமது சமூகத்திற்கு அப்பாற்பட்ட இடத்தில் வைத்து விமர்சிப்பதும் சாத்தியம் என்றால் அதன் பொருள் நாம் ஒரு சமூகமாக கூட என்னும் வளர்ச்சியடையவில்லை என்பதே, இந் நிலையில் நாம் இனம் என்றும் அதற்கு விடுதலையும் சுதந்திரமும் வேண்டும் என்கின்றறோம். உண்மையில் சோழர் காலத்திலும் சரி இப்பவும் சரி எமது அடயாளம் சாதியாக மதமாக பிரதேசமாக மட்டுமே முன்நிற்கின்றது. ஆனால் இவை இன்றும் எமக்குள் இருந்தாலும் இனமாக புற உலகத்தினர் எம்மை நோக்க இன்றய காலத்தில் புலிகள் பிரதான காரணமாக அமைந்தார்கள்.
 5. 6 points
  மல்லிகையை காதுக்குள் வைத்தால் மான். கொண்டையில் வைத்தால் வுமன்.
 6. 6 points
  அரை முதல் ஒரு புள்ளி அதிகமாக பெற்று வாழும் நாட்டிலிருந்து இங்க பாருங்கப்பா, சாரோட அலப்பறையை..? இந்தியாவ பத்தி யாருங்கோ கவலைப்பட்டா..? தமிழ்நாடு, வளமா, மகிழ்ச்சியா இருந்தால் போதும் சாமி..!
 7. 6 points
  ..............(16). துரையப்பா ஸ்ரேடியத்தை தற்காலிகமாக பெரிய பந்தல்கள் போட்டு நிறைய கதிரைகள் எல்லாம் போட்டு அலங்கரித்திருக்கிறார்கள்.மணமக்கள் ஐயர் மற்றும் பெண்களின் பெற்றோர் பாட்டி எல்லோரும் வந்து விட்டார்கள். நடுநடுவே நாலு இடங்களில் வெள்ளித்திரை அமைத்து திருமணத்தை நேரடியாக காண ஏற்பாடுகளும் செய்திருக்கிறார்கள். ரவீந்திரன் ஆரவ் அவர்களுடைய கைபேசியில் வாழ்த்துக்கள் வந்து குவியுது. மரியா தனது போனை பாட்டியிடம் குடுத்து விட்டாள் கவனமாய் வைத்திருக்கும்படி. கிழவியும் அதை வாங்கி கொட்டைப் பெட்டியில் பத்திரப் படுத்திக் கொண்டாள். மேடை முழுதும் சாம்பிராணி புகை நிறைந்திருக்கு. ஐஞ்சாறு வான் நிறைய உணவுவகைகள் சுடச்சுட வந்து காத்திருக்கு. சக போலீசார் எல்லோரும் அவர்களது குடும்பத்தினருடன் வந்து குழுமி இருக்கின்றனர். தற்காலிகமாக பொலிஸாரின் கடமையை செய்வதற்கு இராணுவம் அழைக்கப் பட்டிருக்கு. ஆயினும் என்ன சுமார் முந்நூறு பேர்வரைதான் அங்கிருக்கின்றனர். மிச்ச கதிரைகளுக்கு இடையால முத்தவெளி மாடுகள் இடறுப்பட்டுக் கொண்டு அங்கும் இங்கும் திரியுது. காஞ்சனா ரவீந்திரனையும் ஆரவ்வையும் பார்த்து கேட்கிறாள் என்ன ஆயிரக்கணக்கானவர்கள் வருவினம் என்று சொன்னீங்கள் கொஞ்ச பேர்தான் வந்திருக்கினம் என்று......! படுபாவிகள் எல்லோரும் போனிலேயே வாழ்த்து சொல்லிக்கொண்டு இருக்கிறாங்கள் என்று போனைக் காட்டுகிறான்.நான் எங்கட ப்ரண்ட்ஸை அழைக்கவா என்று கஞ்சனா கேட்க தாராளமா அழைத்து கொள் என்று ரவீந்திரன் சொல்கிறான்.உடனே அவள் தனது போனில் ஒரு மெசேஜ் தட்டிவிட்டு பேசாமல் இருக்கிறாள். என்ன யாரோ ஒருவருக்கு சொல்லவா இவ்வளவு பில்டப் குடுத்தனி என்று ஆரவ் நகைக்கிறான். சற்று நேரத்தில் ஒருவர் இருவராக ஆட்கள் வந்து குவியத் தொடங்குகிறார்கள்.மாடுகள் எல்லாம் அப்பால் போக கதிரைகள் நிரம்புகின்றன. என்னடி இவ்வளவு பேரா என்று ரவீந்திரன் கேட்க இல்லை இவர்கள் எல்லாம் முன்பு எங்களுடைய சேல்ஸ்மென் ஆட்கள்தான். இன்னும் கஸ்ட்டமர்ஸுக்கு சொல்லவில்லை, அவர்களையும் அழைக்கவா என்று கேட்க, வேண்டாம் தாயே இவ்வளவும் போதும் எங்கள் மானத்தை காப்பாற்றினாய் என்று இருவரும் கோரஸ்ஸாய் சொல்கிறார்கள்.இந்த களேபரத்துடன் கெட்டி மேளம் ஒலிக்க ஜாம் ஜாம் என்று இருவரும் தாலி கட்டுகிறார்கள். மாலையில் கேக் வெட்டுறதும் இரவு நடன நிகழ்ச்சிகளும் உண்டு என அறிவிக்கிறார்கள். எல்லோரும் தம்பதிகளுடன் சேர்ந்து படங்களும் வீடியோக்களும் எடுக்கின்றனர். மகேசன் கிளாரிடாவுடன் வந்து படம் எடுக்கும்போதுதான் காஞ்சனாவை பார்க்கிறார். உடனே ரவீந்திரனிடமும் கிளாரிடாவிடமும் இந்தப் பெண்தான் அன்று அந்த சிவமூலிகை வைத்து கட்டுக்கு கட்டு கட்டி விட்டவ என்று சொல்ல கிளாரிடாவும் ஏய் காஞ்சனா அந்த சிகரெட் இன்னும் இருக்கா என்று ரகசியமாய் கேட்கிறாள்.காஞ்சனாவும் இல்லை என்று உதட்டைப் பிதுக்குகிறாள்......! ஒலிபெருக்கியில் பாட்டுக்கள் அமர்க்களப் படுகுது.அப்போது ரவீந்திரன் மைக்கை வாங்கி ஒரு முக்கிய அறிவிப்பை சொல்கிறார்.......! இங்கு பெருந்திரளாக வந்திருக்கும் கஞ்சாக் கனவான்களே ,கஞ்சா சீமாட்டிகளே போலீஸ் உங்களின் நண்பன் என்பதை புரிந்து கொள்ளுங்கள். விதிவிலக்காக இன்று உங்களை யாரும் இன்று கைது பண்ண போவதில்லை. நீங்கள் உங்களிடம் வைத்திருக்கும் கஞ்சா பொட்டலங்கள்,சிகரெட்டுகள் யாவற்றையும் நீங்களாகவே முன்வந்து மேடைக்கு அருகில் இருக்கும் பெட்டியில் சேர்ப்பித்து விடுங்கள் இது இந் நாட்டுக்கும் வீட்டிற்கும் நீங்கள் செய்யும் மகத்தான தொண்டு அது மட்டுமல்ல இவையே நீங்கள் எங்களுக்கு தரும் திருமணப் பரிசாக நாங்கள் ஏற்றுக் கொள்கின்றோம் என்று சொல்கிறார்.எல்லோரும் வரிசையில் நின்று முகத்தை மறைத்து கொண்டு வரும்போது அவன் மீண்டும் யாரும் முகத்தை மூடத் தேவையில்லை.இந்த மைதானம் முழுதும் அறுபத்திநாலு கமராக்கள் தொடர்ந்து படமெடுத்து கொண்டிருக்கு என்று சொல்ல ......அவர்களும் தைரியமாக சிரித்துக் கொண்டு வந்து அவற்றை அங்கு குடுத்து விட்டு வந்தமர்கின்றனர்......! உடனே மகேசன் அங்கு வந்து தன் மனைவி கிளாரிடாவையும் அங்கிருந்த ஒரு பெண்ணையும் அழைக்கிறார்.உன் பேர் என்னம்மா........! ஸ்னேகா சேர் ......ஓ நல்ல பெயர். நீயும் கிளாரிடாவுமாக சேர்ந்து இந்த கஞ்சா பெட்டியை தூரத்தில் கொண்டுபோய் எரித்து விடுங்கள் என்கிறார்.....! அவர்களும் சந்தோசமாக அதை ஓரமாக இழுத்து சென்று தங்களுக்கு கொஞ்சம் கொஞ்சம் கஞ்சாவும், சிகரெட்டும் எடுத்துப் பத்திரப் படுத்திக் கொண்டு பெட்டியை கோட்டை அகழிக்குள் தள்ளி விட்டு எரித்து விடுகின்றனர்......! கிழவி எழுந்து வந்து காஞ்சனாவிடம் பிள்ளை எனக்கு தலை இடிக்குது நான் பஸ்ஸில வீட்ட போறன் என்று சொல்ல அவளும் கிழவியுடன் படமும் வீடியோவும் எடுத்து விட்டு அனுப்புகிறாள்.கிழவி வெளியே வர ஒரு சிகப்பு வோக்ஸ்வேகன் அவளருகில் வந்து நிக்கிறது. ஏறுங்கோ பாட்டி நான் உங்களை வீட்டில் விடுகிறன் என்று ஸ்னேகா சொல்லி கதவைத் திறந்து விட கிழவியும் ஏறிக் கொள்கிறாள்.அவளை கந்தர்மடத்தடியில் அவள் வீட்டில் இறக்கி விட்டு ஸ்னேகா வேகமாக போகிறாள்.....! வந்திருந்த எல்லோரும் வரிசையாக சென்று மணமக்களை வாழ்த்துகின்றார்கள்......! மகேசன் கனகுவிடம் பெருமையாக பார்த்தியா கனகு வந்த படகும் திரும்பி போய் விட்டது.இந்த அறிவிப்பு மூலம் குடாநாட்டில் இருந்த மிச்ச சொச்ச கஞ்சாவும் வந்து சேர்ந்து விட்டது என்கிறார்.தற்சமயம் குடாநாட்டில் யாரிடமும் கஞ்சா இல்லை என்று சொல்ல யெஸ் சேர் என்று அவனும் அதை ஆமோதிக்கிறான்......! எல்லோருக்கும் திருமண விருந்து தடபுடலாக நடந்து கொண்டிருக்கு.....! காஞ்சனா வீட்டில் கிழவியின் கொட்டைப் பெட்டிக்குள் இருந்து மரியாவின் போன் ஒலிக்கிறது. கிழவி அதை எடுத்து ஹலோ என்கிறாள்.....! நீங்கள் மரியாவா, மரியா நீங்கள் இப்ப கஞ்சா விக்கிறதில்லையாமே, ப்ளீஸ் எனக்கு ஒரேயொரு பொட்டலம் மட்டும் தர முடியுமா ப்ளீஸ் மரியா கெஞ்சுகிறான்....! அடி செருப்பால, ஆரடா சொன்னது கஞ்சா விக்கிறேல்லை என்று. நீ வா நான்தாறன்.ரகசியம் யாருக்கும் சொல்லிபோடாதை, உன்ர கூட்டாளிகளுக்கு மட்டும் சொல்லு. போனை பக்கத்தில் வைத்துவிட்டு எழுந்து இறப்புக்குள் (கூரைக்குள்) இருந்த கஞ்சா பெட்டியை எடுக்கிறாள். (அன்று அந்த மழைநாளில் ரவீந்திரன் காஞ்சூண்டியை மாற்றி வைத்து விட்டு ப்ரிட்ஜில் இருந்த கஞ்சாவை மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து விட்டு உள்ளே போக கிழவி எடுத்து இறப்புக்குள் வைத்துப் போட்டுது). ஒரு வாழையிலையை வெட்டி வந்து பிறப்பக்கமாய் தணலில் வாட்டி விட்டு அதை சதுரம் சதுரமாய் வெட்டி பெட்டிக்குள் இருந்து எல்லிப்போல கஞ்சாவை எடுத்து இலையில் வைத்து மடித்து வாழைநாரால் கட்ட அவன் வருகிறான்.அவனிடம் இரண்டு பொட்டலம் குடுத்து போட்டு காசை வாங்கி கொட்டைப்பெட்டிக்குள் பத்திரப் படுத்துது.....! ..................வளராது.......! யாவும் கற்பனை.....! யாழ் 21 அகவைக்காக....! ஆக்கம் சுவி .....! (இதுவரை ஆக்கமும் ஊக்கமும் தந்த அனைத்து உறவுகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் உரித்தாகட்டும்).
 8. 5 points
  அப்ப எனக்கு ஒரு பதின்மூன்று பதின்நான்கு வயதிருக்கும். எனது அன்ரி மன்னாரில் ஒருபாடசாலையில படிப்பிச்சுக்கொண்டு இருந்தா. நான் அதுவரை அங்கு சென்றதில்லை. ஒரு பெரிய பள்ளி விடுமுறைக்கு அன்ரி எங்களை எல்லாம் அங்கு கூட்டிக்கொண்டு போவதாகக் கூறியவுடன் மனதில ஏற்பட்ட சந்தோசத்தைச் சொல்ல முடியாது. அங்க போற நாளை ஒவ்வொருநாளும் எண்ணியபடி காத்திருக்க ஆரம்பிச்சம் நானும் என் தம்பி தங்கைகளும். அப்போதெல்லாம் எந்த விடயத்தையும் மனதில் வைக்க முடியாது அக்கம் பக்கத்தில் உள்ள எம் வயதுக்காரருக்குச் சொல்லிவிடுவோம்தானே. அப்பிடி நாங்கள் மன்னார் போவதும் பக்கத்து வீட்டு எதிர் வீட்டு ஆட்களுக்கு எல்லாம் தெரிய, எங்களோட வர அவர்களும் ஆசைப்பட, என்னும் இரண்டு பேரை மட்டும் எம்மோடு கூட்டிக்கொண்டு போக அன்ரியும் சம்மதிக்க, என் தம்பிக்கு மற்றவர்களைக் கூட்டிக்கொண்டு போவது பிடிக்காது அவை எங்களுடன் வரவேண்டாமென்று அன்ரியுடன் சண்டைபோட ஆரம்பித்தான். எங்களோட வர இருந்தது எங்கள் மாமிமார்தான். மாமிமாரென்றால் கிழடு கட்டை எண்டு எண்ண வேண்டாம். அவையில ஒருத்திக்கு எனிலும் ஒருவயதும் மற்றவாவுக்கு மூண்டு வயதும்தான் வித்தியாசம். அதுக்கு முதல் இன்னொண்டும் சொல்லவேணும். என்ர அன்ரி மன்னாரில் ஒரு குடும்பத்தோடதான் இருந்தவ. அவைக்கு நாலு பிள்ளையள். ஒரு பெட்டை மூண்டு பெடியள். மூத்த பெடியனுக்கு ஒரு இருபது வயது இருக்கும். இரண்டாவது பெட்டைக்கு ஒரு பதினெட்டும் மூன்றாவதுக்கும் நாலாவதுக்கும் இரண்டிரண்டு வயதைக் குறைச்சுப் பாருங்கோவன். ஆனால் அப்ப எங்களுக்கு முதல் இரண்டுபேரை மட்டும்தான் தெரியும். ஏனெண்டா அவை இரண்டுபேரும் அன்ரியோடை அல்லது மூத்தவர் தனியா யாழ்ப்பாணத்திலே ஏதும் அலுவலிருந்தா வந்து எங்கட வீட்டிலதான் தங்கிப்போறவை. அவை வந்து நிக்கிற நாட்களிலே வீடே இரண்டுபடுமளவு ஒரே சிரிப்புச் சத்தம் தான் கேட்கும். இரவிரவா நான் என்ர பக்கத்துவீட்டு மாமி, தம்பி, அவர் ... அதுதான் தினேஷ் எல்லாரும் சேர்ந்து தாயம் விளையாடுவம். கரம்போர்ட் விளையாடுவம் அல்லது வீடியோ வாடகைக்கு எடுத்து இரண்டுமூன்று படம் என்று பார்ப்பம். அதனால அவை வந்தால் நேரம் போவது தெரியாது. அவை வந்தால் அம்மாவும் நல்லா அவையை உபசரிப்பா. தினேஷ் தனிய வந்தாலும் சரி.தங்கையோட வந்தாலும் சரி அம்மா என்னிடம் தான் மக்கில் தேநீர் அல்லது கோப்பி போட்டுத் தருவா. தங்கைக்கு சிறிய சோசர் தான் பிடிக்கும் அதனால அவவுக்கு அதில குடுப்பன். ஒருக்கா நாங்கள் எல்லாரும் சேர்ந்து வின்சர் தியேட்டருக்கு படம் பார்க்கப்போனால் அவருக்குப் பக்கத்தில இருக்கிறதுக்கு என்ற மாமிமார் இரண்டுபேரும் நான் நீ எண்டு சண்டை போட நான் எதை பற்றியும் யோசிக்காமல் அவரின் தங்கைக்குப் பக்கத்தில் போய் இருந்திட்டன். எனக்குப் பக்கத்தில தம்பி வந்து இருக்க அவர் இரண்டுமாமிமாருக்கும் நடுவில இருந்து என்ர பக்கமா அடிக்கடி எட்டிப்பார்த்துக் கொண்டு இருந்தது என்ர கடைக்கண்ணுக்குத் தெரிஞ்சிது. மனதில ஒரு சந்தோசமும் எட்டிப் பார்த்தது. அவரைப் பற்றிக் கொஞ்சம் நான் சொல்லத்தான் வேணும். பார்த்தால் தலை இழுப்புத் தொடக்கம் பெல்பொட்டம், சேர்ட் போடுறது வரை இளவயதுக் கமல்காசன் போல இருப்பார்.
 9. 5 points
  உணர்வுகள் அனைத்தும் மிகைப்படுத்தப்பட்ட உலகில் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். தாயகத்தில் போர் நிகழும் போதும்கூட நிகழ்ந்திராதவகையில் வெறும் அமெரிக்க அரசியல் பேசி நண்பர்கள் இன்று பிரிந்து போகிறார்கள். யாரும் யாரிலும் தங்கியில்லை. எவரையும் எவரிற்கும் பேணத்தேவையில்லை. தன்னைத் தான் பார்க்கவிரும்பும் உயரத்தில் இருந்து பத்துமடங்காவது அதிகப்படி உயரத்தில் வைத்துப் பிறரிற்குத் தன்னைக் காட்டவேண்டிய கட்டாயம் பலரிற்குள் உணரப்படுகிறது. இது காலாதிகாலமாக இருந்த வரட்டுக்கவுரவம் தான் என்று கொள்ளினும், ஒரு சிறு, ஆனால் மிகமுக்கிய வித்தியாசம் இன்று முனைப்பெடுக்கிறது. அதாவது, மற்றையவன் தன்னைப் பார்;பது பக்கவிளைவு, தான் நினைக்கும் உயரத்தில் தான் இருந்தே ஆகவேண்டும் என்ற சமாதானப்படுத்தமுடியா அடம் சுயத்தின் முனைப்பு என்றாகியுள்ளது. இது சுயத்தின் முனைப்பு என்று சொல்கையில் அது ஒரு சாதகமான முன்னேற்றமான விடயம்போல் தோன்றுகிறது. இருப்பினும் இந்த முனைப்பு திட்டமிட்டு நடுத்தரவர்கத்தினர் மீது விளைவிக்கப்படுகின்றது. முதலாளித்துவம் உயிர்வாழ்வதற்கு கடன் பிராணவாயு. கடன் வாழ்வதற்கு ஆசை அத்தியாவசியம். அனைவரும் எப்போதும் அறி;ந்த ஆனால் என்றைக்கும் விளங்கிக்கொள்ளாத விடயம், வறியோர்க்கும் செல்வந்தர்க்கும் ஆசை அந்நியம். இருவரிற்கும் அதற்கு நேரமில்லை. அதாவது வறியவர்க்கு என்னத்திற்கு ஆசைப்படலாம் என்று றூம் போட்டு யோசிக்க நேரமில்லை, அவர்களது ஆசைகள் அவர்களது ஊர் எல்லைக்குள் விரிவன—சந்தைக்கு அவற்றால் பாரிய சகாயமில்லை. செல்வந்தர்க்கு ஆசைப்படமுதல் வாயில் தோசை என்பதால் இல்லாமை உணர அவகாசமில்லை. இதனால் இடைப்பட்ட வர்க்கத்தில் சந்தை ஆசை வேளாண்மை செய்கிறது. இன்னுமொரு விதத்தில் பார்ப்பின், பெரும் செல்வந்தர் வேண்டாம், ஒரு பத்து மில்லியன் டொலரைக் கையில் வைத்துக் கொண்டு பார்த்தால், 3 வீத உறுதிப்படுத்தப்பட்ட முதலீடு சர்வசாதாரணம். அதாவது 3 லட்சம் வருட வருமானம் உறங்கியபடி எந்த ஆபத்தும் இன்றி உறுதிப்படுத்தப்படலாம். 3 லட்சம் நடுத்தர வர்க்கத்தின் ஊதியம். ஒரு படி மேலே சென்று 100 மில்லியன் உள்ளவரைப் பார்த்தால் அதே 3 வீத முதலீடு அவரிற்கு 3 மில்லியன் பொக்கற் மணி என்றாகிறது. பொதுவாகச் செல்வம் செழிப்பாக இருக்கையில் பணவீக்கத்தை வெல்லும் முதலீடுகளட் மட்டும் போதும் என்று; திருப்த்தியளிப்பினும் ஆறு வீதம் மிக இயல்பான களியாட்டக் காசிற்கான முதலீடு. ஆக 3 தொடக்கம் 6 வீதம் மிகக்குறைந்த ஆபத்தில் வருமானம் ஈட்டும் முதலீடுகள் செல்வந்தரின் பொக்கற் மணிக்கான குறியாகின்றன (பெரும்பணமீட்டும் வியாபாரங்களும் முதலீடுகளும் இன்ன பிற. வெறும் களியாட்டத்திற்கு மேற்படி போதுமானது). இப்போ எங்கிருந்து இந்த 3 தொடக்கம் 6 வீத வருமானம் ஈட்டப்படுகிறது என்று பாhத்தால் பெரும்பாi;மையாக மஞ்சள் தண்ணி தெளித்தபடி நிற்கும் நடுத்தர வர்க்க ஆடுகளே தென்படும். வீட்டுக் கடன். வாகனக் கடன் முதற்கொண்டு நுகர்வுப் போதைக்கு அடிமைப்பட்ட நடுத்தர வர்க்கத்தில் தலையில் செல்வந்தரின் களியாட்டம். ஆக, ஆசை நடுத்தரவர்கத்தில் வேளாண்மை செய்யப்படுகிறது. ஆனால், தாங்கள் மஞ்சள் தண்ணீர் தெளிக்கப்பட்ட ஆடுகள் என்பது என்றைக்கும் நடுத்தர வர்க்கத்திற்குத் தெரிந்திடக்கூடாதென்பதற்காய் எத்தனையோ உத்திகள் காலாதிகாலமாய்க் களமிறக்கப்பட்டுக்கொண்டிருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவெனில், மேற்படி உத்திகளை அமுல் படுத்துவதில் தான் செல்வந்தர் பெருஞ்செல்வந்தராகும் அடிப்படை இருக்கிறது (விளம்பரம், மருத்துவம், மாத்திரை. இன்னபிற). அந்த வகையில் செல்வந்தரின் விளைநிலங்களாக மாடாய் உழைத்து விளைந்தவற்றையும் செல்வந்தரின் சாகுபடியாக்கி நடுத்தரவர்கம் முளித்தபடி சிரிக்க முனைகிறது. எவரையும் பேணாது, பழையவரின் தேடல்களில் பிறந்த பாரம்பரிய பெறுமதிகளையும் புறந்தள்ளி, சுயமுனைப்பில் மிதப்பதாய் நம்பியபடி அடிமைப்படுத்தப்பட்டு, அகங்காரம் புற்றுநோய் கடந்த பயங்கரமாகி, நல்லது கெட்டது எடுத்துச் சொல்ல உண்மையான உறவுகள் என்று யாருமற்று, இயக்கத்தில் தூங்கியபடி தனித்தீவுகளாகத் தம்மை உருவாக்கிக் கொண்டிருக்கும் நடுத்தர வர்க்கம் உணரத் தவறுவது யாதெனில்: மேற்படி மந்தைக்குள் மாடாக கூட்டத்தில் தீவாகப் பாரம்பரிய லாபங்களையும் தொலைத்துத் திரியும் நிலை எதேச்சையானதொன்றல்ல—திட்டமி;ட்டுச் செய்யப்படும் வேளாண்மை. அடிமை என்பது மனதின் நிலை. ஒருவன் பிறிதொருவனை அடிமைப்படுத்துவது என்பது ஆயுதங்களால் சாத்தியப்படாதது. மனதில் விளையும் களைகள் இன்றி அடிமை என்ற தழை சாத்தியமில்லை. மனதில் விதைக்கப்பட்ட களைகளைக் கவனித்துக் கொண்டிருக்கையில், மனதில் களையின்றி வேறேதும் சாத்தியமா? என்ற கேள்வி பிறக்கும். அந்தப் புள்ளியில் விடுதலை வேண்டும் ஆன்மீகத் தேடல் ஆரம்பமாகும்.
 10. 5 points
  இயந்திர மயமான வெளிநாட்டு வாழ்க்கையில் காலம் தொலைந்து போகிறது இன்று தான் வெள்ளிக் கிழமை மாலை, நாளை சனிக்கிழமை வார விடுமுறை ஆரம்பிக்கிறது . வெளி நாட்டு வாழ்க்கையில் சனி ஞாயிறுக் கிழமைகள் எப்படி பறந்து போகிறதென்றே தெரியவில்லை. தி ங்கள் மீண்டும் ஓடத்தொடங்க வெள்ளி வந்துவிடும். வா ரங்கள் மாதங்கள் என்றுஆகி வருடங்கள் உருண்டோடி விடுகின்றன. அன்று சனிக்கிழமை விடுமுறை என்று காலையில் ஆறுதலாக பரபரப பில்லாமல் .. எழுந்தாள் மைதிலி ...கணவனுக்கும் காபி கலந்து வெளியே இயற்கையை ரசித்தவாறு பருகிக் கொண்டு இருந்தார்கள். வசந்தத்தின் முடிவும் கோடையின் ஆரம்பமாகவுள்ள உள்ள காலம் . கண்ணாடி ஜன்னலால் பார்க்கும்போது அழகழகாய் றோஜா க்கள் பூத்திருந்தன . கணவன் மாதவன் மாலைநேரங்களில் கவனித்து வளர்த்த பூங்கன்றுகள். வெளிநாடுவந்து இருபத்தைந்துவருடங்கள் ...மேனன் ஐந்து வயதும் மிதுனன் மூன்று வயதுமாக இருந்தார்கள் , புலம் பெயர்ந்து கனடாவுக்கு வந்த போது ... ஆரம்பம் மிகவும் கஷ்டமாக தான் இருந்தது ...சிறுவர் பள்ளி கல்லூரி என்று என்று படிப்பித்து ஆளாக்கி விடடார்கள். தற்போது மூத்தவருக்கு முப்பதுவயது ...நின்று ஒருகேள்விக்கு பதில் பெறமுடியாது . வயது வந்துவிட்ட்து .கலியாணம் பற்றி ..பேச்சு வந்தது . தட்டிக் கழித்துக் கொண்டே இருக்கிறார். தாமாக விரும்பி இருந்தால் செய்து வைப்பதற்கும் பெற்றவர் தயார். ஆ னால் அவரோ ஒரு முடிவும் சொல்வதாயில்லை . ஆனால் கணவரோ அவர்கள் வீட்டை விட்டு போக எண்ணம் வரும் போது போகட்டும் நாமாக அனுப்புவதுபோல் ஆகிவிடாதா? ...இல்லை அந்தந்த காலத்தில் செய்ய வேண்டியதை செய்ய வேண்டும் என்பது மனைவியின் வாதம். விடுமுறையில் இருவரும் வாக்குவாதப்படுவதே வேலையாகி விட்ட்து. தற்கால இளையோருடைய மன நிலையை எப்படி புரிந்துகொள்ள லாம் ? சில இளையோர் தாமாகவே துணையை தேடி ... பள்ளிக் கடன் கட்டி ...சேமித்து ஒரு இல்லிடத்தை தேட விழைகின்றனர் ..சிலர் அப்படித் தேடி வாடகைக்கு விட்டு பின் தங்களுக்கு தேவை வரும்போது ..பயன் படுத்துகின்றனர் . சிலர் காதலித்துக் கொண்டே நாட்களைக் கடத்துகின்றனர் . திருமணம் செய்ய காசு சேமிக்கிறார்களாம். சிலர் விரைவில் ஏன் இல்லற பந்தத்தை அவசரப்பட்டுக் தேடிக் கொள்வான் இன்னமும் காலம் இருக்கிறது என வாழ்கிறார்கள். சடங்கு சம்பிரதாயம் என்பன எல்லாம் அர்த்தமற்ற தாகி போய் கொண்டே இருக்கிறது அவர்களுக்கு . திருமணம் ஆகினாலும் குழந்தை தேவை இல்லை என்ற மனப்பாங்கும் இருக்கிறது .. மிகவும் வசதியான வீட்டுப்பெண் மூன்று பெண்களில் மூத்தவர் .. காதலித்தார் ..பையன் இந்து, பெண் கிறிஸ்டியன் சமய துறவியின் முன்னிலையில் நிச்சயாத்தம் நடந்தது . மோதிரம் மாற்றிக் கொண்டார்கள் . அடுத்த வருடம் தாலிகட்டிக் கலியாணம் என்ற நிலையில் ..பெண்ணுக்கும் தந்தைக்கும் வாக்குவாதம். சிங்க பூருக்கு வா நகை வாங்க ..என்றார் தந்தை . பையனும் இந்துமதப்படி தாலிகட்டிடலாம் என்கிறார். ஆனால் மணப்பெண்ணோ எனக்கு மினுங்கும் நகை தேவையில்லை .. ( தாலி உட்பட ) தற்போதும் போடுவதில்லை. இனியும் போடப் போவதில்லை. நாங்களும் கொஞ்சம் சேமித்து வைத்திருக்கிறோம் . மண்டபம் எடுத்து ஆடம்பரம் தேவையில்லை. தருவதை தாருங்கள் ஒரு கொண்டோ ( தொடர்மாடிக் கட்டிடம் ) வில் எங்கள் வாழ்வை ஆரம்பிக்கிறோம் என்கிறார்கள். உற்றார் உறவினர் சூழ மாலையும் கழுத்துமாய் மகிழ்வாய் நடத்தி வைக்க ஆசைப்படும் பெற்றோர் விருப்பம் என்னாவது ? ... எங்கள் இளையோருடைய வாழ்வு எங்கே போகிறது ...? .உங்களுக்கும் பிள்ளைகள் இருக்கலாம் ஒரு பெற்றோராக இப்படியான பிரச்சினைகளை எப்ப டிக் கையாளலாம் ? தற்போதுள்ள அசுர வளர்ச்சியில் ...தொலைபேசி முக்கிய இடத்தி வகிக்கிறது ..வளர்ச்சியிலும் முன்னேறி கெட்டு சீரழிவதிலும் முக்கிய இடம் வகிக்கிறது ...பெற்றோர் பிள்ளைகளின் ... உரையாடல் கூட .. mom what is for dinner ...பிட்டும் ..சிக்கன் கறியும் ...வேண்டுமென்றால் மூடடை பொரி த்து தருகிறேன். .. no mom I am not hungry .. Ill eat ..bread and sausage curry .. or Ill go out for dinner... என்று மெசேஜ் சொல்கிறது..... உறவுகள் மேம்பட பேசுங்கள் ..அல்லது ..தொல்லைபேசியை தூர எறி ந்து விடுங்கள்... எட்டு மாதக் குழந்தைக்கு உணவூட்ட் தொலைபேசியில் பாட்டு வே ண்டி இருக்கிறது. குழந்தையை அமைதிப்படுத்த செல்போன் தேவையாய் இருக்கிறது . கால ஓட்ட்த்தில் .இப்படியே இடைவெளிகள் நீண்டு சென்றால் சந்த திகளின் எதிர் காலம் என்னாகும்...
 11. 5 points
  காலையில் எழுந்து கோவிலுக்கு போவோமென்றால் ஆக்கள் கூடினால் அவர் குளிக்கட்டும் இவர் குளிக்கட்டும் என்று ஆளையாள் சாட்டி வெளிக்கிட்டு போகவே நேரம் போய்விட்டது. கோவிலில் நிறைய கூட்டம்.வெக்கை வேற பிள்ளைகள் களைப்பாக இருக்கிறது போவோம் என்றார்கள்.விரைவாகவே வந்துவிட்டோம்.அடுத்தடுத்த நாள் பயண ஏற்பாடும் உறவினர்களின் பிரியாவிடையுடன் கொழும்பு வந்து இருநாட்கள் கொழும்பில் நின்று சுற்றி பார்த்துத்தோம்.கொழும்பில் நின்ற காலத்தில் யூபர் கணக்கு பிள்ளைகளிடம் இருந்ததால் அதிலேயே எல்லா இடமும் போனோம்.ஏறத்தாள ஆட்டோவுக்குண்டான கட்டணம் தான் இதற்கும்.ஏசி போடுவார்கள் பாதுகாப்பானதுமாக இருந்தது. ஊரில் நின்றவேளைகளில் நான் தான் மாடு மேச்சலுக்கு கொண்டுபோய் வாறது.ஒருநாள் நான் மாடு கொண்டுவர போகிறேன் என்று மருமகனும் கொண்டுவந்தார்.அவர் மாடு மேய்க்கும் படத்தைக் கண்டதும் தான் இதை எழுத தூண்டியது. எப்படித் தான் 70 நாட்கள் போனதோ தெரியவில்லை.அவர்கள் சன்பிரான்சிஸ்கோவுக்கும் நாங்கள் நியூயோர்க்குக்குமாக வெவ்வேறு விமானங்களில் புறப்பட்டு பிறந்த ஊரிலிருந்து புகுந்தவீடு வந்து சேர்ந்தோம். இத்தனை நாளாக பச்சை புள்ளிகளாலும் பின்னூட்டங்களாலும் சில உறவுகள் கட்டாயம் ஊக்கம் கொடுக்க வேண்டுமென்றும் உற்சாகப்படுத்தி இதனை எழுதி முடிக்க ஒத்தாசையாக இருந்த உங்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். வணக்கம். முற்றும்.
 12. 5 points
  பகுதி 3 சினிமாவுக்குப் போனதன் பிறகு அடுத்த நாள் தினேசும் தங்கையும் திரும்பப் போட்டினம். நாங்களும் பள்ளிக்கூடம் சோதினை எண்டு எங்கடபாட்டைப் பாக்க வெளிக்கிட்டிட்டம். அப்ப போனும் இல்லை உந்த முகலாலும் இல்லை. தினேசும் ஒரு எட்டு ஒன்பது மாதங்களா வீட்டுப்பக்கம் வரவும் இல்லை. அன்ரியும் ஆசிரியை எண்டதனால பள்ளிக்கூட லீவு விடேக்குள்ளதான் யாழ்ப்பாணம் வருவா. அப்பத்தான் அம்மா எழுதின கடிதத்துக்கு தான் இம்முறை லீவுக்கு வரும்போது எங்களை மன்னாருக்கு கூட்டிப்போவதாக அன்ரி எழுதியிருந்தா. எனக்கு தினேசும் அங்கே இருக்கிறார் என்பதைவிட தினேஷின் தங்கை வர்ணித்து எங்களைக் கடுப்பேற்றும் வயல்வெளிகளும் வாய்க்கால்களும் பெரிய தாமரைக்குளமும் கட்டாயம் பார்த்தே தீரவேண்டும் என்னும் அவாவை என்னுள் ஏற்படுத்தியிருந்தன. அத்தோடு போற வழியில் திருக்கேதீஸ்வரம் கோயிலுக்கும் போய் பாலாவியில் குளிக்கலாம் என்று கடிதத்தில் எழுதியிருந்த வரிகளும் ஒரு எல்லையற்ற எதிர்பார்ப்பைத் தோற்றுவித்திருந்தன. எட்டு வயதாக இருக்கும்போது பெற்றோருடன் கேதீச்சரத்துக்குப் போனதும் படிகளில் இருந்தே காலையில் நடுங்கிநடுங்கிக் குளித்ததும் பாலாவின் மேல் பரவியிருந்த புகைமூட்டம் போல நினைவில் நின்றாலும் தெளிவில்லாமல் இருந்தது. அன்ரி வீட்டுக்கு வந்தவுடன் இம்முறை எங்கள் அலாதியான வரவேற்பும் மாறிமாறி நாங்கள் கேட்ட கேள்விகளும் அவவைத் திக்குமுக்காட வைத்தன. எண்ணி ஐந்தே நாள்த்தான் அங்கு நிற்பதாகத் திட்டம். எங்களை அம்மா அதுவரை தனியே அனுப்பியதில்லை. அதனால் அன்ரியுடன்தான் என்றாலுமே அதிகநாள் நிக்கவிட விம்பவில்லை. அங்க யாற்ற வீட்டில நிக்கிறது என்று மாமி கேட்டா. தினேஷ் ஆக்களின்ர வீட்டிலதான் என்று அன்ரி சொன்னா. தினேஷின் அப்பா ஒரு பெரிய கடையும் வேறு இரு வியாபாரங்களும் செய்துகொண்டு இருந்தாராம். திடீரெண்டு ஒருநாள் விபத்தில இறந்துபோக மூத்த மகனான தினேஷ் A/L ஓட படிப்பை நிப்பாட்டிப்போட்டு வியாபாரத்தையும் வயலையும் பாக்கிறாராம் என்று அன்ரி சொல்ல அப்ப அதுக்குமேல அவர் படிக்கேல்லையோ என்று நான் கேட்டேன். தாய் படிக்கச் சொன்னதுதான். ஆனால் கேட்காமல் நல்ல வடிவா குடும்பத்தைப்பாக்கிது. நல்ல பொறுப்பான பெடியன் எண்டெல்லாம் அன்ரி அம்மாவுக்குச் சொல்லிக்கொண்டிருந்தா. எனக்குச் சினிமாக் கதை கேட்கிறமாதிரி இருந்ததுதான் ஆனாலும் மேல படிக்கேல்லை எண்டதும் ஒரு நெருடலாத்தான் இருந்தது. எனக்கு நினைவு தெரிஞ்ச நாளில இருந்தே எனக்கான பொருட்களை தங்கைகளானானும் சரி நான் யாருடனும் பங்கிடுவதில்லை. சவுக்காரம், துவாய், பவுடர், பொட்டு, ரிபன் .....இப்பிடி சிலது. நான் மூத்த பிள்ளை எண்டதால சலுகைகளும் கொஞ்சம் எனக்கு கூடத்தான். அதனால் வீட்டில இருந்த ஒரு வடிவான பாக்கில என் பொருட்களையெல்லாம் அடுக்கினன் . தம்பி தங்கையினதை இன்னொரு பாக்கில் அடுக்கி தம்பியின் பொறுப்பில் கொடுத்தாச்சு. இங்கேயிருந்து எல்லாம் காவத் தேவையில்லை. என்னட்டை எல்லாமிருக்குத்தானே என்று அன்ரி கூறியும் நான் கேட்கேல்லை. விடியக் காலை ஏழு மணிக்கு வீட்டில இருந்து வெளிக்கிட்டு நாங்கள் ஏழுபேரும் பஸ்ஸில யாழ்ப்பாணம் வந்து அங்கேயிருந்து திருக்கேதீஸ்வரம் நோக்கிப் போறம். விடிய இடியப்பமும் சொதி சம்பலோட உருளைக்கிழங்குப் பிரட்டலும் அம்மா செய்து தந்ததால் பசியில்லை. ஆனால் தண்ணி விடாய். அம்மா கரைச்சுத் தந்த எலும்மிச்சைத் தண்ணியும் குடிச்சு முடிஞ்சுது. பஸ்ஸில யன்னல் கரையில இருந்து வாற காத்தும் காலை வெய்யிலும் நல்லாய் இருக்க இயற்கையை ரசித்துக்கொண்டு வந்தாலும் நீண்ட தூர பயணம். கண்ணை சொக்கிக்கொண்டு வர கொழும்பில என்னை விட்டுவிட்டு இறங்கினமாதிரி இவையும் இறங்கினா என்ன செய்யிறது என்ற பயத்தில வந்த நித்திரையை அடிச்சுக்க கலைச்சுப்போட்டு பார்த்துக்கொண்டே இருந்தால் எனக்குப் பக்கததில இருந்த தம்பியும் சின்ன மாமியும் அன்ரியோட இருந்த தங்கையும் நல்ல நித்திரை. மன்னாருக்குப் போய் இறங்க பதினோரு மணியாய் போச்சு. பிறகு திருக்கேதீஸ்வரம் போக மத்தியானம் ஆச்சு. நல்ல வெய்யிலுக்க போய் பாலாவியில குளிக்க இரண்டு படியை விட்டு இறங்க அன்ரி விடேல்லை. விட்டாலும் நாங்கள் தள்ளிப்போயிருக்க மாட்டம். ஏனெண்டால் ஒருத்தருக்கும் நீச்சல் தெரியாது என்பது ஒன்று. குளித்துக்கொண்டு இருந்தவர்கள் எல்லாம் பெண்களும் கிழவிகளும் தான். ஒரேயொரு ஆண் மட்டும் நீந்திக்கொண்டு இருக்க நாங்கள் அதிசயமாய் பாத்துக்கொண்டு நிண்டம். குளிச்சு முடிய ஒருமண்டபத்தில போய் உடுப்புகளை மாத்திப்போட்டு கோயிலுக்குள்ளே போய் சுத்திக் கும்பிட்டுவிட்டு வெளியே வந்தால் சரியான பசி. அன்ரி எங்களைக் கூட்டிக்கொண்டு ஒரு சாப்பாட்டுக் கடைக்கு கூட்டிக்கொண்டு போய் வடையும் டீயும் வாங்கித் தர, பசியோட இருந்த எங்களுக்கு என்னடா இது இதை வாங்கித் தந்து பேக்காட்டிறாவே என்ற நினைப்பு ஒடியது. தினேசின்ர அம்மா எங்களுக்கு எல்லாம் சமைச்சிருப்பா. இன்னும் ஒருமணித்தியாலத்தில அங்க போயிடலாம் என்று அன்ரி சொல்ல மனம் நின்மதியானது. பஸ்ராண்டில போய் நிக்கேக்குள்ளயும் பாக்கில வச்சிருந்த பிஸ்கற்றை எங்களுக்குத் தர வயிறு நிறைஞ்சிட்டுது. தினேஷ் வீட்டுக்குப் பக்கத்திலேயே பஸ்ராண்ட். பஸ்ஸால நாங்கள் எல்லாரும் இறங்கவே தினேசும் தங்கை தம்பி எல்லாம் பஸ்ராண்டில நிக்கினம். வீட்டுக்குள்ள போனதும் வாங்கோ பிள்ளையள் எண்டு தினேஷின் அம்மா எங்களை ஒவ்வொருவராகக் கட்டி அணைக்கிறா . பெரிய வீடு. எங்கள் பாக்குகள் பைகளை எல்லாம் இங்கே கொண்டு வந்து வையுங்கோ எண்டு அன்ரி தன் அறைக்குள் கூட்டிக்கொண்டு போனா. பாக்குகளை வைத்துவிட்டு வந்து விசிற்ரிங் ரூமில வந்து இருந்தால் சுவர்களில் ஜேசு, மாதா படங்கள். இவை கிறிஸ்தவரா என்று பெரிய மாமி அன்ரியை இரகசியமாகக் கேட்க அன்ரி ஓம் என்று மெதுவாகக் கூறுவது என் காதிலும் கேட்கிறது.
 13. 5 points
  திருகோணமலை நோக்கி பயணம் தொடங்கிய போது எல்லோரும் மிகவும் களைப்படைந்து ஆளாளின் தோள்களில் சரிந்துவிட்டனர்.சாரதி வானிலேயே இருந்தபடியால் அவர் உற்சாகமாக இருந்தார். எனக்கும் அலுப்பாக இருந்தாலும் மிகவும் கஸ்டப்பட்டு சாரதியுடன் பேசிக் கொண்டே போனேன்.இடையில் நாங்கள் தங்குமிடத்திற்கு தொடர்பு கொண்டு இரவு சாப்பாடு பற்றி கேட்ட போது என்ன வேணுமென்று சொன்னால் எல்லாம் வாங்கி செய்து வைத்திருப்பதாக சொன்னார்கள்.சோறும் கடலுணவும் எல்லோரும் விரும்பினார்கள். வழியில் சுடுதண்ணி கிணறு பார்த்தோம்.ஆனாலும் யானை பார்க்க போன இடத்தில் வாகனத்தில் இருந்து களைத்து விட்டதால் யாரும் பெரிதாக ஆர்வம் காட்டவில்லை.அங்கிருந்து நேராக தங்குமிடம் போனோம். பெரியதொரு மாடிவீடு.கடற்கரை.போய் இறங்கியதும் பொறுப்பாக ஒரு சிங்களவரும் சமையலுக்கு ஒரு இளம் தமிழரும் இருந்தார்கள்.இவர் மலையகத்தை சேர்ந்தவர்.நீண்டகாலமாக இங்கிருக்கிறார்.சமையலில் மிகவும் கெட்டிக்காரன்.போனவுடன் சுடச்சுட தேநீர் வடை சம்பல் அருமையாக இருந்தது.கடற்கரையில் குளிப்பு.வந்திருந்து அடுத்தநாள் திட்டம்.ஏற்கனவே எங்கெங்கே என்னஎன்னன செய்ய வேண்டுமென்பதை மருமகனும் மகள்மாரும் திட்டம் போட்டிருந்தனர். அவர்கள் எங்கே போனாலும் ஆழ்கடல் போய் முதுகில் சுவாச சிலிண்டர் கட்டி தண்ணீருக்கடியில் போய் பார்த்தால்த் தான் சந்தோசம்.அதற்காக பயிற்சி எடுத்து சான்றிதழும் வைத்திருந்தார்கள்.இங்கும் சுழியோடி பார்க்க கூடிய இடங்களை தெரிவு செய்திருந்தனர்.இரவு இருந்து கதைக்கும் போது அங்கே போனால் நீங்கள் மட்டும் தான் அனுபவிக்கலாம்.புறாத்தீவு PIGEON ISLAND என்று ஒரு தீவு இருக்கிறது.திருகோணமலை வரும் எவரும் இங்கு போகாமல் போவதில்லை என்று சொல்லச் சொல்ல எல்லோருக்கும் அந்த தீவைப் போய் பார்க்கலாம் என்று சொல்லி பிள்ளைகளின் முடிவை மாற்றிவிட்டார்கள்.காலை சாப்பாடு முடிந்ததும் தானே கூட்டிப் போவதாக சொன்னார். இரவு சாப்பாட்டுக்கு இறால் மீன் பருப்பு அப்பளம் மிளகாய் பொரியல் சோறு என்று எல்லோரையும் அசத்திவிட்டார்.எல்லோரும் மீண்டும் மீண்டும் போட்டு அனுபவித்து சாப்பிட்டார்கள்.அவரின் ஒத்தாசையைப் பார்த்து அவருக்கு கொடுக்க இருந்த பணத்தை விட கூடுதலாக கொடுக்க வேண்டும் என்று பிள்ளைகள் முடிவு எடுத்திருந்தனர்.இரவு விடை பெற்று அவரின் இருப்பிடத்துக்கு போக வெளிக்கிட கூப்பிட்டு பணத்தைக் கொடுத்தேன்.மிகவும் சந்தோமடைந்தார். அடுத்த நாள் காலை நாங்கள் எழும்ப முதலே வந்து இடியப்பம் மீன்கறி சொதி பருப்பு சம்பல் என்று அசத்தியிருந்தார்.இங்கு வேலையில்லாத நாட்களில் ஆட்டோ ஓட்டுகிறார்.மிகவும் துடிதுடிப்பானவர்.புறாத்தீவுக்கு போவதற்கு தனது நண்பர்கள் மூலமாக சகல ஒழுங்குகளும் செய்திருந்தார். புறாத்தீவு பார்க்க போக வெளிநாட்டவருக்கு 4000ரூபாவும் உள்ளூர் வாசிகளுக்கு 100 ரூபா (சரியாக நினைவில்லை).அங்கே போய் இறங்கியதும் ஒருவரும் வரவேண்டாம் என்று ரிக்கற் எடுக்க இவர் போனால் எல்லோரையும் கூட்டிக் கொண்டு வரச் சொல்லிவிட்டார்கள்.எல்லோரும் போனவுடன் அடையாள அட்டைகளைக் கேட்டார்.இவர் பாய்ந்துவிழுந்து என்னையா கடலுக்கு போகும் போது யாராவது இதுகளைக் கொண்டு வருவார்களா சிங்கள ஆட்கள் என்றா ஒன்றும் கேட்க மாட்டீர்கள் தமிழாக்கள் என்றபடியால் அதைத் தா இதைத் தா என்று கரைச்சல் வேறை என்று சத்தம் போட தொடங்கிவிட்டார்.உள்ளே இருந்தவரும் எல்லோரையும் வடிவாக பார்த்து விட்டு அரைகுறைத் தமிழில் எனது மூத்த மகளை கூப்பிட்டு எங்கே படிக்கிறீர்கள் என்று அரைகுறை தமிழில் கேட்டார். மகளும் இது தான் சாட்டென்று நான்படித்து முடித்து கோப்பாய் ஆஸ்பத்திரியில் வேலை செய்கிறேன்.வந்த நேரத்திலிருந்து கரைச்சல் தாறீங்கள் என்ன பிரச்சனை என்றதும் உள்ளிருந்தவர் புரிந்துதோ என்னவோ தமிழில் இப்படி கதைத்தவுடன் கொஞ்சநேரம் தறுபுறு என்று முழிசிவிட்டு ரிக்கட்டைத் தந்துவிட்டார். ஏற்கனவே ஒழுங்கு செய்திருந்த வள்ளக்காரரிடம் கண்ணாடி மூச்செடுக்கிற சாமானுகள் கால் சப்பாத்து எல்லாம் வாடகைக்கு எடுத்துக் கொண்டு இரண்டு வள்ளத்தில் புறப்பட்டோம் .இத்தனை சாமன்களும் அவர்கள் கொண்டுவந்த பொதியில் இருந்தது.தவறுப்பட்டபடியால் வாடகைக்கு எடுக்க வேண்டியாயிற்று.வள்ளத்தில் ஏறப் போனால் மாமியை ஏற்றுவதில் பிரச்சனை.ஒரு மாதிரி மாட்டேன் மாட்டேன் என தூக்கி ஏற்றியாச்சு.இரண்டு வள்ளங்களும் புறாத்தீவு நோக்கி போகிறது. அங்கே வரவேற்பதற்கு இயமன் பாசக்கயிறுடன் நிற்கிறான். தொடரும்.
 14. 5 points
  மற்ற நாடுகளில் இடம் பெற்ற ஆயுத போராட்டங்களிலும், ஜே. வி, பி., சிங்கள பகுதிளிலும் கூட ஆயுத போராட்ட காலத்தில் இப்படித்தான் செயற்பட்டார்கள். போர் காலத்தில் எந்த நாட்டிலும் இவ்வாறான அராஜகம் நிலவுகிறது. அது தான் இராணுவ நடைமுறை. விடுதலை போராட்டங்களும் ஆயுதம் தாங்கி இடம்பெறும் போது இராணுவ ஆட்சியாகவே நடக்கின்றன. நான் விடுதலை புலிகளால் பாதிக்கப்படவில்லை. அவர்களது ஆட்சியில் வாழ்ந்த காலத்தில் எனக்கும் நான் அறிந்தவர்களுக்கும் உரிய மதிப்பும் பண்பான அணுகுமுறையும் அவர்களிடம் இருந்து கிடைத்தது. அதற்காக அவர்களது தடைகள் எம்மை எம்மை பாதிக்கவில்லை என்று எடுத்து கொள்ள வேண்டாம். விடுதலை புலிகளால் பாதிக்கப்பட்டவர்களின் அனுபவங்களும் வெறுப்பும் விளங்கிக்கொள்ள கூடியவை. எனது விருப்பம் அந்த மக்களுக்கு இனி ஒரு ஆயுத போராட்டம் அல்லது இராணுவ ஆட்சி வேண்டாம் என்பதே.
 15. 4 points
  விடயம் பெரிதாக ஒன்றுமில்லை , வீட்டில் சில திருத்தவேலைகள் தற்சமயம் மேற்கொண்டு வருகிறோம் , நிலத்துக்கு tile மாற்றும் tradie ஒரு வியட்னாமியன். சுட்டுப்போட்டாலும் ஒரு ஆங்கில வார்த்தை வராது. சொல்லக் சொல்ல ஓமெண்டு தலையாட்டிப் போட்டு, முழு இடத்துக்கும் primer பூசி விட்டுப் போய் விட்டான் , ஒரு இடமும் கால் வைக்க ஏலாது . அளவாகப் புளித்தப் போயிருந்த தோசையையுடன் நல்ல சாம்பலும் குழம்பும் சேர்த்துச் சாப்பிடலாம் என்றிருந்த எனக்கு மனைவியின் “ இன்றைக்கு நோ சமையல் விரும்பினால் pizza எடுங்கோ இல்லாட்டி சும்மா படுக்கப் போனாலும் ஓகே தான்” என்ற வார்த்தைகள் விசரைத் தான் கொடுத்தது. இண்டைக்கு இடைக்கிடையே என்ன வேலை செய்யுறாங்கள் என்று supervise பண்ணி களைச்சுப் போச்சு எண்ட சாட்டில இரண்டு wine அடிக்கலாம் எண்டிருந்த எனக்கு சும்மா படுக்கப் போனாலும் சரி தான் எண்டால் எப்படி இருக்கும் . “இல்லையப்பா pizza எடுப்பம்” எண்டு சொல்லி மகளைக் கொண்டு இரண்டு vegetarian pizza ஓடர் பண்ணி ( இரண்டும் 10 வெள்ளி ) வாங்கிக் கொண்டு வருவம் என்று போனேன். ஒரு 5 நிமிட டிரைவ் தான் . Pizza ரெடி ஆக இருந்தது , அவ்வளவு crowd இல்லை இரண்டு மூன்று வெள்ளை தடியன்கள் ஆர்டர் குடுத்து விட்டு நின்றார்கள் - வயது 20 க்குள் தான் இருக்கும் . கார்டு தான் வழமையாக பாவிப்பது. வொலட்டை திறக்கும் போது ஒரு 10 வெள்ளி தாள் தெரிய அதனை எடுத்து நீட்டினேன் . கவுண்டரில் இருந்தது ஒரு uni மாணவியாக இருக்க வேண்டும் அதனை வாங்கி விட்டு" ten dollars and fifteen cents " என்றாள். ஏன் அந்த மேலதிக 15 சதங்கள் என கேட்க வாய் உன்னினாலும் 15 சத்திற்கு இதில இப்ப நின்று நேரத்தை வீணாக்காமல் வீட்டை போய் wine அடிக்கிற அலுவலைப் பாரடாப்பா என உள்ளூக்குள் யாரோ எச்சரிக்க, சுதாரித்துக் கொண்டு வாலாட்டிட்குள் இருந்து சில்லறையை எடுத்து வைக்க திறந்தேன். “ take this” எனும் குரல் கேட்டது .. பக்கத்தில் நின்ற தடியன்களில் ஒருவன் ஒரு 20 சத குற்றியை கவுண்டரில் வைத்து விட்டு எடுக்கச் சொல்லி நின்றான். நான் ஒன்றும் சொல்ல முன் அந்த பெண் அதை எடுத்து விட்டு மிச்சம் 5 சதத்தை யாரிடம் தருவது என வினாவி நின்றாள் . எனக்கு கொஞ்சமும் பிடிக்கவில்லை. இவங்கள் யார் எனக்கு 15 சதம் தானம் செய்யிறதுக்கு , நான் கேட்டேனா அல்லது என்னைப் பார்த்தால் 15 சதத்திட்கு வழியில்லாத பரதேசி மாதிரி தெரியுதா. இவனுக்கு பாகிஸ்தானுக்கு போய் அவர்களை வெகு நல்லம் என்றெல்லாம் புகழ்ந்து தள்ளி விட்டு நியூசீலாந்திலே வைத்து போட்டு தள்ளின மாதிரி வரும் பங்குனி உத்தரத்திற்க்கு பிள்ளையார் கோயிலில் கும்பிட்டுக் கொண்டிருக்கும் போது உவன் தான் அந்த 15 சத பார்ட்டி என்று priority basis போட்டு தள்ளுவதற்கான பிள்ளையார் சுழி தானோ etc etc என எக்கச் சக்கமான எண்ண ஓட்டங்கள். கவுண்டர் பெண்ணிடம் சொன்னேன் குற்றியை திரும்ப அவனிடமே கொடுத்து விடும்படி. சில்லறையை நானே கொடுத்தேன் . அவன் பக்கம் திரும்பி நன்றி சொல்லி விட்டு அவனுடைய பணத்தை ஏற்றுக்கொள்ளாமைக்கு வருத்தமும் சொல்லி அவனுடைய நாளின் எஞ்சிய நேரங்கள் நன்றே கழிய வாழ்த்துக்களும் சொல்லி பிஸ்சா வுடன் வெளியே சென்றேன். இதனை மகளிடம் சொல்லி இது ஒரு typical episode of white supremacy என்று சொன்னேன். சிரித்து விட்டு சொன்னாள் “ அப்பா சும்மா ஓவர் ரியாக்ட் பண்ணாதேயுங்கோ, சின்னப் பொடியங்கள் 15 சதம் எல்லாரிடமும் இருக்கும் சாதாரணமான அலுவல் உங்களிடம் change இருந்திராது என்று எதார்த்தமாக தரப்போக அதற்கு இவ்வளவு வியாக்கியானமா அப்பா” என்று. இப்ப வைன் மூன்றாவது ரவுண்டு . ஒரே குழப்பம், இவங்கள் நியூஸிலாந்திலே போய் சுட்டு எல்லாத்தையும் குழப்பிப் போட்டாங்கள் ……
 16. 4 points
  சனி கிழமை அல்லது ஞாயிற்றுக்கிழமை இவருடை தகவல்களை தருகிறேன் முகநூலிலும் (பேக்) இவருக்கான உதவிக்கரங்களை கோரியும் இருந்தோம் உதவிகள் கிடைத்ததா அல்லது கிடைக்கவில்லையா என்பது தெரியாது இருந்தாலும் அந்த கிராம சேவகர் / பிரதேச செயலாளரிடம் கேட்டும் அறியத்தருகிறேன். நேரில் சென்று பார்க்கலாம் ஆனால் சமூகம் பல கண்களுடன் தான் உற்றுப்பார்த்துக்கொண்டிருக்கிறது . (***) விடுதலை செய்யப்பட்டவர்கள் எல்லோரும் ஓர் வட்டத்துக்குள் தான். என்பதையும் கூற முனைகிறேன் அல்லது வங்கி விபரங்களை தரவேண்டுமா என நீங்களே சொல்லுங்கள்
 17. 4 points
  எம் பெருமான் கெல்மெட்டுடன்.... எவன்பாத்த வேலையடா இது?
 18. 4 points
  புலிகள் இல்லாத இந்தப் பத்து வருடங்களில் குறைகூறிக்கொண்டிருப்பதுதான் புலியெதிர்ப்பாளர்களின் பொழுதுபோக்கு. மக்கள் தமக்கு நீதி கிடைக்கவேண்டும் என்று அமைதியான வழியில் போராட இருக்கின்ற ஜனநாயக உரிமையையும் அவர்களின் நியாயமான கோரிக்கைகளையும் கூட காணமுடியாத அளவிற்கு சிலரின் கண்ணுக்குள் புலிதான் நிற்கின்றது.
 19. 4 points
  சொத்தி வைரவப்பிள்ளை அண்ணை வாங்கோ! உக்கல் செல்லையா அண்ணை எப்பிடி சுகமாய் இருக்கிறியளே? விசர் மூத்ததம்பி அண்ணை உங்களை கண்டுகனகாலம்!!! அறுதலி தம்பையா எங்கை கடைக்கே போறாய்? ஹாய் நுள்ளான் பொன்னத்துரை கவ் ஆர் யூ?4 பிரால்வாய் நடராசா அண்ணை என்ன இப்பிடி மெலிஞ்சு போனியள்? இஞ்சை பார் மண்டைக்கண் செல்லரை!!!!!! டேய் புக்கை நடராசா எங்கை கோயிலுக்கே போறாய்? பண்டாரி செல்லர் மாலை எல்லாம் கட்டியாச்சோ? இதெல்லாம் வாசிக்க வடிவுதான்....ஆனால் இதை சம்பந்தப்பட்டவர்களோடை நேருக்குநேர் பகிடிக்கும் கதைச்சுப்பாருங்கோ....அப்ப தெரியும் அதின்ரை விக்கனம்.
 20. 4 points
  உண்மையில், இந்த வெளிநாடுகளுக்கு போக கொடுக்கும் பணமே, அங்கே ஒரு சிறு தொழில் தொடங்க போதுமானது. இலங்கையாயிருந்தாலும், தமிழகமாக இருந்தாலும், சினிமா மோகத்தில், உலகமே புரியாமல் இருக்கின்றார்கள். அதேவேளை மலையாளிகள், சினிமாவின் எல்லை புரிந்து வைத்திருக்கிறார்கள். மத்தியகிழக்கு முழுவதும் அவர்கள் நல்ல தொழில், வேலைகளில் உள்ளனர். ஐரோப்பாவில் உள்ள தமிழர்கள் சந்தையை இலக்கு வைத்து, பரோடா, மரவள்ளி கிழங்கு பொரியல், மிக்ஸ்சர், தவிட்டு அரிசி (குத்தரிசி) எல்லாம் கொண்டு வந்து வியாபாரம் செய்கிறார்கள். அட, யாழ்பாணத்து தமிழர்கள் கூட, இந்த சந்தை தெரியாமல், வெளிநாட்டு வேலை என்று வாழ்கிறார்கள். மீன் பிடிக்க வந்து சூடு வாங்குகிறார்கள் தமிழகத்து தமிழர்கள். அந்த மீனை சிங்களவர்கள் அடாத்தாக பிடித்து இங்கே அனுப்பினார்கள். இப்போது, எதிர்ப்பு வர, தமிழர்களிடம் வாங்கி, கொழும்பு ஊடாக இங்கே அனுப்புகிறார்கள். ஆனால் தமிழர்களோ, இங்கே வர வேண்டும் என்ற ஆவலில் தான் இருக்கிறார்கள். 1990 களிலேயே பல மலையாளிகள், இலங்கைத் தமிழர்கள் என்று கூறி இங்கே அரசியல் தஞ்சம் எடுத்து இருக்கிறார்கள்.
 21. 4 points
  ................(14). தாமோதரம் தன் வீட்டு முற்றத்தில் குறுக்கும் நெடுக்கும் நடக்க மனிசி காவேரி கேட்கிறாள் என்னப்பா "குட்டி போட்ட பூனை மாதிரி " அலையிறீங்கள். அது ஒண்டுமில்லையப்பா ஒரு விசர் வேலை பார்த்திட்டன்........! அது நீங்கள் வழக்கமா பார்க்கிறதுதானே........! என்ன நடந்தது சொன்னாத்தானே தெரியும்....! காலையில் கோர்ட்டில் நடந்தது எல்லாவற்றையும் சொல்கிறார்.........! பாருங்கோ நான்கூட உங்களோட இருந்து ரெண்டு பிள்ளையும் பெத்து போட்டன் ஆனால் உங்களில இவ்வளவு மதிப்பு வச்சதில்லை. அவள் வைத்திருக்கிறாள்......! வாங்கோ போய் கதைச்சிட்டு வருவம். பாவம் கல்யாணி கவலையோடு இருப்பாள். கிளம்பும் போது இரண்டு பொடியலையும் பார்த்து உங்க சண்டை பிடிக்கிறேல்ல புத்தகத்தை எடுத்து படிக்கவேணும் என்று பிள்ளைகளுக்கு சொல்லி விட்டு, கணவனிடம் படிப்பு ஒரு சதத்துக்கு உதவாது. கல்யாணின்ர பிள்ளைகளுக்கு கடவுள் காசு பணம் குடுக்கேல்லை என்றாலும் நல்ல படிப்பைக் கொடுத்திருக்கிறார் என்கிறாள்......! ஏன் அதுகள் நல்லா படிக்குமே தாமோதரம் கேட்க ...... பின்ன .....இரண்டும் வலு கெட்டிக்காரியள்.மூண்டாம் பிள்ளைக்குள்ளதான் வருங்கள். பள்ளிக்கூடத்திலயும் பேச்சுப்போட்டி விளையாட்டு போட்டி என்று ஒன்றும் தவற விடுறேல்ல.ஆசிரியர்களிடமும் நல்ல மரியாதை.....! நடந்து கொண்டு வரும்போது சொல்லிக்கொண்டு வருகிறாள். வீட்டின் முன் மாடத்தில் சுவரோடு கல்யாணி சாய்ந்திருக்க பொட்டைகள் இரண்டும் தாயோடு கோழிக்குஞ்சுகள் போல் ஒட்டிக்கொண்டு இருக்குதுகள். ஒரு அலுமாரி நிறையவும் மேசைகளிலும் புத்தகங்கள்,புத்தகங்கள் எங்கும் புத்தகங்கள் விரவிக் கிடக்கு. இரண்டு வயலினும் சரஸ்வதி படத்துக்கு கீழே இருக்கு. இவர்கள் படலையை திறந்து கொண்டு வர, இவர்களின் பிள்ளைகள் பொட்டுக்குள்ளால் இங்க வந்து நிக்கிறார்கள்......! சின்னவள் சொல்கிறாள் அம்மா அவையள் வருகினம். அவளும் அவசரமாக தலையை முடிந்து கொண்டு எழும்பி பிள்ளையள் வாங்கை எடுத்து இதில போடுங்கோ அன்ரி ஆட்கள் இருக்கட்டும். இருக்கிறார் தாமோதரம்,அங்கு கனத்த மௌனம் நிலவுகிறது.காவேரிதான் எழுந்து வந்து கல்யாணியின் தோளைத் தொட்டு பேச்சை ஆரம்பிக்கிறாள். இந்த மனுசன் விசர் வேலை பார்த்து போட்டுது கல்யாணி. இப்ப வந்து சொல்லத்தான் எனக்குத் தெரியும்.அதுக்காக அவரும் இப்ப ரெம்பக் கவலைப் படுகிறார்.நீ ஒண்டையும் மனசில வச்சுக்காதை என்கிறாள். இதுவரை அடக்கி வைத்திருந்த அழுகை கரையுடைய காவேரியின் கழுத்தில் முகம் புதைத்து ஓ வென்று அழுகிறாள்.பிள்ளைகள் முழுசிக்கொண்டு பாக்குதுகள். தாமோதரமும் பிள்ளை அழாதைங்கோ என்னிலேதான் பிழை. முட்டாள்தனமா நடந்துட்டன். நீங்கள் வழக்கம் போல இருங்கோ. என்ர வளவுக்குள்ளும் வந்து எடுத்து கொண்டு போகலாம் என்கிறார். ஓமடி கல்யாணி, நான் முந்தியே உனக்கு சொல்லி இருப்பன் இந்த மனுசன்ர குணமறிந்துதான் சொல்லேல்ல. இப்பதான் கடவுள் நல்ல புத்தியை கொடுத்திருக்கு....! வேண்டாம் அக்கா, எங்களுக்கு இந்த வளவுக்குள் வாறதே போதும். மரம் ஒண்டும் வெட்ட வேண்டாம் என்று சொல்லுங்கோ அக்கா. வெட்டுறதெண்டால் நாங்கள் அதைத் தொடமாட்டம்.மரங்கள் தெய்வங்கள். நான் வேறு ஏதாவது வேலை பார்க்கிறன். தாமோதரம் சுற்றுமுற்றும் பார்க்கிறார் வேப்பம் பூக்கள், புளியம்பழங்கள் எல்லாம் நிலத்திலே கிடக்கின்றன.எறும்புகள் இழுத்துக் கொண்டு போகுது. உள்ளே பார்க்கிறார், புத்தகங்கள் வயலின்கள் எல்லாம் பரந்து கிடக்கின்றன, இஞ்ச பார் தங்கச்சி வேண்டாம் என்று சொல்லாதே, இனிமேல் என்னை உன்ர அண்ணனாய் நினைத்துக்கொள். நான் ஒண்டும் சும்மா தரேல்ல, என்ர பிள்ளைகளுக்கு உன்ர மகள் பாடம் சொல்லி கொடுக்கட்டும்.எங்களின் வளவுக்குள்ளும் நீ வந்து பழங்களைப் பொறுக்கிக் கொள், அதுகளும் வீணாய்த்தானே போகுது. என்ன சொல்லுறாய்...... ! வித்யாதானம் காசு வேண்டாம் அண்ணை.நீங்கள் தரா விட்டாலும் என்ர மகள் உங்கட பிள்ளைகளுக்கு பாடம் சொல்லிக் குடுப்பாள்........! மூத்தவள் ஒரு ட்ரேயில் எல்லோருக்கும் தேசிக்காய் கரைத்து கொண்டுவர எடுத்து குடித்தவர் நல்லா இருக்கு பிள்ளை.மனிசியை பார்த்து நீயும் இந்த பிள்ளையிட்ட கேட்டு பழகு. ஓமோம் இப்ப சொல்லுவியள்தானே என்று முகத்தை நொடிக்கிறாள் காவேரி......! சரி நான் போட்டு வாறன் என்று சொல்லிப்போட்டு தாமோதரம் போகும்போது நினைக்கிறார், இன்ஸ்பெக்ட்டர் ரவி சொன்னது போல கல்யாணி வீட்டில் சரஸ்வதி கடாட்ஷம் பூரணமாய் இருக்கு.அதில் இருந்து நான் கொஞ்சம் எடுத்தாலும் அது குறையாது பூரணமாகவே இருக்கும், பணமா குறைகிறதுக்கு.....! கல்யாணியின் அருகில் வந்த காவேரி நீ இவரில் இந்தளவு மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பாய் என்று நான் நினைக்கேல்லையடி கல்யாணி.சிறைக்கு போனாலும் பரவாயில்லை வந்த வக்கீலையே வேண்டாம் என்று சொன்னாயாமே, நீ நல்லவள் ரொம்ப நல்லவளடி உனக்கு காசோ பணமோ என்ன உதவி தேவையென்றாலும் என்னட்ட தயங்காமல் கேள், உந்த மனுஷனுக்கு தெரியாமல் நான் தாறன்.நீ வட்டி ஒன்றும் தரவேண்டாம்...... போகிறாள்.....! இவள் என்ன சொல்கிறாள். எந்த வக்கீலை நான் எப்ப வேண்டாம் என்றனான், என்னவோ காமாட்ச்சி அருளால் எல்லாம் நல்லபடியாய் முடிஞ்சுது என்று நிம்மதி பெருமூச்சு விடுகிறாள் கல்யாணி .....! அடுத்த சில நாளில் ஈ -மெயிலில் கனகுவிற்கு பிரமோஷன் வருகுது.போலீஸ் நிலையத்தில் எல்லோரும் அவனை வாழ்த்துகின்றனர். பத்மாவும் தனிமையில் அவனை அணைத்து முத்தமிட்டு வாழ்த்துகிறாள். இப்பொழுது அவர்களது காதல் அங்கு பிரசித்தமாகி ஒரு நல்ல நாளில் ஒரு சிறிய மண்டபத்தில் திருமணம் நாடாத்துவதென முடிவாயிற்று. ரவியும் கனகுவிடம் நீங்கள் உங்கள் காலியாண வேலைகளை பாருங்கோ என்று சொல்லி விட்டு மார்கண்டுவை அழைத்து மெதுவாக அண்ணை இன்றிரவு அந்த கடற்கரைக்கு ஒரு படகு நிறைய கஞ்சா வாறதா தகவல் கிடைத்திருக்கு.நீங்கள் காவலர் வேலுவை கூட்டிக் கொண்டு போங்கோ. அவர் புறப்பட அவன் ஒரு டார்ச் லைட்டை குடுத்து படகில் இருந்து சிக்னல் வந்ததும் நீங்கள் எப்படி பதில் சிக்னல் தரனும் என்று காட்டி குடுக்கிறான்.அவரும் அவனிடம் ஜம்பமாக டார்ச் வேண்டாம் தம்பி, எந்த காலத்தில இருக்கிறியள் நீங்கள், நான் என்ர போனாலேயே சிக்னல் குடுத்து ஆட்களை மடக்குறன் பார் என்று சொல்லி விட்டு போகிறார்.....! ........................... வளரும்.....!
 22. 3 points
  சுமார் 1000 நாட்களுக்கு முன்பு ஜூலை 2016 ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து வெளியேறுவதை 52% மக்கள் ஆமோதித்தார்கள். கூடுதலான பென்ஷன் காரர் வெளியேறுவதை ஆதரித்தார்கள், அவர்களில் ஒரு தொகையினர் இவுலகை விட்டு வெளியேறி இருப்பார்கள். ஆனால் அவர்கள் விதைத்த பிரெக்ஸிட் என்ற விதை விருச்சமாக வளர்ந்து பூக்காமலும் காய்க்காமலும் நிக்கிறது. அரசியல் அமைப்புகளுக்கு எல்லாம் எடுத்துக்காட்டாக திகழ்ந்த வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்றம் இன்று திக்கு முக்காடுகிறது. 90% ஆமா என்று போட்டிருந்தால் பிரச்சனை சுலபமாக தீர்க்கப் பட்டிருக்கும். ஆம் என்று போட்டவர்கள் பெரும்பாலான பழமைவாதிகளும், பென்ஷனக்காரர்களும். இல்லை என்று போட்டவர்கள் பெரும்பாலான இளைஞர்களும் வெளிநாட்டு காரர்களும். வோட்டு போட்ட பலருக்கு தெரியாது பிரித்தானியாவுக்கு ஐரோப்பிய ஒன்றியத்துடன் தரை வழி தொடர்பு உண்டு என்று, பிரச்சினைக்குரிய வடக்கு ஐயர்லாந்து இன்று பாரிய சிக்கலாக உள்ளது. ஐயர்லாந்து எல்லையில் சோதனை சாவடி போடுவதை அவர்கள் விரும்பவில்லை, மீண்டும் கலவரங்கள் வர சாத்தியங்கள் உண்டு என்று ஐயப்படுகிறார்கள். இன்று மக்கள் மத்தியில் உள்ள கேள்வி. பிரதமர் பதவி நீடிப்பாரா? தேர்தல் வரவும் வாய்ப்பு உள்ளது. அதனால்தான் பல ஆளும் கட்சி உறுப்பினர்கள் பிரதமரை குற்றம் சாட்டுகிறார்கள். உண்மையில் பாராளுமன்ற உறுப்பினர்களிடம் ஒருமித்த கருத்து இல்லை. இவர்கள் மீண்டும் எப்படி மக்களை போய் சந்திப்பார்கள். அதனால்தான் இப்பவே பிரதமரை குற்றம் சாட்ட ஆரம்பித்து விட்டார்கள். இப்போது கால அவகாசம் கேட்க போகிறார்கள். அப்படி நீடித்தாலும் பிரதமரால் தனது வரைவை நிறைவேற்ற முடியுமா என்ற கேள்வி உள்ளது. பிரெக்ஸிட்டை (article 50) ரத்து செய்யக்கோரி ஒரு மில்லியனுக்கும் மேட்பட்டவர்கள் கையெழுத்து போட்டிருக்கிறார்கள். இன்னும் ஏழு நாட்கள் தான் உள்ளது. நாடு அரசியல் வியாபாரிகளினால் திக்கு தெரியாத காட்டில் விடப் பட்டிருக்கிறது. அகஸ்தியன்
 23. 3 points
  நனி நாகரிகம் எளியவர்களிடமிருந்து மிக இயல்பாக போகிற போக்கில் நிதானமாகத் தெறித்து விழும் வார்த்தைகளில் இருக்கும் வலிமையை, தெளிவை, அதில் குறும்புடன் எட்டிப் பார்க்கும் அழகியலை உணர்ந்து ஒரு கணம் ஆடி அசந்து போயிருக்கிறீர்களா? தாம் சொல்வது எவ்வளவு பெரிய விஷயம் என்ற பிரக்ஞையோ அலட்டலோ அதிகப்பிரசங்கித்தனமோ இல்லாமல் ‘இவ்ளோதாங்க வாழ்க்கை…’ என்று சர்வ சாதாரணமாகச் சொல்லி விட்டுப் போகிறவர்களின் அருகில் போதி மரங்களே போன்சாய்களாக மாறிப் போகும் அதிசயத்தைக் காணப் பெற்றிருக்கிறீர்களா? அம்மா – அப்பாவை அழைத்து வர ரயில் நிலையம் சென்றேன். சென்றேனா….? இந்திய ரயில்வே துறையின் வரைமுறைகள், விதிகள்,…… எல்லாவற்றின் படி மிகச் சரியாக வழக்கம்போல் ரயில் தாமதமாக வந்து சேரும் என எதிர்ப்பார்க்கப்படுவதாக (!) ஒரு ஆன்டி குற்றவுணர்வே இல்லாமல் அறிவித்துக் கொண்டிருந்தார். குறைந்தது அரை மணி நேரமாவது ஆகும் என்று அம்மாவின் அலைபேசி அழைப்பின் மூலம் அறிந்தேன். பையினுள் இருந்த சிறுகதைத் தொகுப்பே உற்ற துணை என பெஞ்சில் சம்மணமிட்டு அமர்ந்து வாசிக்க ஆரம்பித்தேன். இதமான காலைப் பொழுது மறைய ஆரம்பித்து, வெயில் கொஞ்சம் ஏறத் துவங்கியிருந்தது. சிறிது நேரத்தில் ஒரு கூட்டம் பெஞ்சின் அருகில் வந்து அமர்ந்தது. தங்களது வாழ்வுமுறையை மற்றவர்களுக்கு அறிவிக்க ‘நாடோடிகள்’ என்னும் பதாகை அவர்களுக்குத் தேவைப்படவில்லை. “ஊக்கு, பாசி…. ஏதாவது வாங்கிக்கிறியா அக்கா ?” – குரலுக்குச் சொந்தக்காரியான அந்தப் பெண்ணை…. இல்லை! குழந்தையை….. அட ! தெரியலைங்க! முகம் 17 அல்லது 18 என்றது; வயிறு 6 அல்லது ஏழு மாதம் என்றது. “இல்லம்மா… வேண்டாம்” –சொல்லும் போதே அவளது குழந்தை முகம் என் முகத்தில் புன்னகையை வரைந்து சென்றது. இன்னொரு நிஜமான குழந்தை (வயது 2 இருக்கலாம்) அழுது கொண்டே இவளிடம் தஞ்சம் அடைய, அக்குழந்தையை வாரியணைத்து மடியில் கிடத்தி ஓராட்ட ஆரம்பித்தவள், அங்கு வந்து நின்ற ஒரு பையனைப் (20 வயது இருக்கலாம்) பார்த்து, “என்ன ஆச்சு? பிள்ளை ஏன் அழுது?” என்று கேட்டவாறே குழந்தையிடம், “அப்பாவ அடிச்சுடலாமா?” எனச் செல்லங்கொஞ்சிக் கொண்டே அவனைக் கடிதோச்சி மெல்லெறிந்து விளையாட்டுக் காட்டினாள். இதற்குள் அந்தக் குடும்பத்திலிருந்த ஒருவர் அங்கிருந்த அனைவருக்கும் உணவுப் பொட்டலங்கள் வாங்கி வந்தார். நாகரிகம் கருதி புத்தகத்தினுள் தலையை விட்டாலும் கூட செவிகள் மனதோடு ஒத்துழைத்து அவர்களைக் கவனிக்கலாயின. கண்கள் அவர்கள் பக்கம் அவ்வப்போது ‘ஏதேச்சையாகப்’ பார்ப்பது போல் படம் காட்டிக் கொண்டிருந்தன. “பூரி காலியாயிட்டு… ஒரு பொட்டலம்தான் பூரி…. இந்தா ஒனக்கு. இது ரெண்டும் இட்லி…” என்று கூறி அவளிடம் தந்தார் அந்தப் பெரியவர். இட்லியும் சாம்பாரும் அவள் கைவண்ணத்தில் சிறிது நேரத்தில் சாம்பார் சாதம் ஆனது. அதைக் குழந்தைக்கு ஊட்டியவாறே தானும் சாப்பிட்டாள். அவன் பூரி பொட்டலத்தைப் பிரித்து அவளிடம் தர, “ஒனக்குதான் பூரி புடிக்குமே… நீ தின்னு…” என்றாள். “அய்யே ! வயித்துப்புள்ளக்காரி ஒன்ன வச்சிக்கிட்டு எனக்கு என்ன பூரி வேண்டிக்கெடக்கு? நான் நாளைக்கு சாப்பிட்டுக்குறேன். நீ இப்ப சாப்பிடு…” – கடுகடுத்தான். அவன் குரல் அப்படித்தான் ஒலித்தது. “ஏய் லூசு ! எனக்கு இப்ப இந்த எண்ணெ மக்கு வேண்டாம்; ஓங்கரிக்கும்” என்று அவனை உண்ண வைக்க முயன்றாள். “அப்ப நேத்து மட்டும் எண்ணெ இல்லியா மக்கு” என்று சிரித்தான். இருவரும் மாற்றி மாற்றி செல்லச் சண்டையிட்டு உணவையும் அன்பையும் அவ்வளவு அழகாகப் பரிமாறிப் பகிர்ந்து கொண்டார்கள். ஓர் அருமையான கவிதை கண்ணுக்கெதிரே அரங்கேறிக் கொண்டிருந்ததில் கையிலிருந்த புத்தகம் ரசிக்காமல் போனதில் வியப்பில்லை. அக்கவிதையில் கரைந்து போகும் ஆவலில் சிறுகதைகளை என் வாசிப்பிற்குக் காத்திருக்கும்படி பணித்துப் பையினுள் அனுப்பினேன். சிறிது நேரம் அவளிடம் கதைக்கும் ஆவல் எழுந்தது. உரையாடலைத் தொடங்க வேண்டும் என்ற ஆவலில் பதில் தெரிந்த கேள்வியையே கேட்டேன். “கொழந்த ஒங்களோடதா ?” “ஆமாக்கா… அடுத்தது இன்னும் மூணு மாசத்துல கையில வந்துரும்…. அப்புறம் ஒரு எடத்துல நிக்க நேரம் இல்லாம வெளயாட்டுதான்” – மடியில் கிடந்த குழந்தையின் நாடியை வருடிய தன் விரல்களை முத்தமிட்டுக் கொண்டாள். குழந்தை பலமாக இருமியது கண்டு, “குழந்தைக்கு உடம்பு சரி இல்லியா? டாக்டர்ட்ட அழைச்சிட்டு போனீங்களா?” எனக் கேட்டேன். “டாக்டர் எதுக்கு? அருவாமூக்கு பச்சிலைலருந்து நஞ்சறுப்பான், தழுதாரை வர தேவையான மூலிகை எல்லாம் ஓரளவு தெரியும். பெரும்பாலும் எங்க வைத்தியத்துலயே சரியாயிரும். இதுக்கும் கேக்கலேனா அப்புறம் கூட்டிட்டுப் போகவேண்டியதுதான்” அடுத்து என்ன கேள்வி கேட்டுத் தொடர்வது என யோசித்துக் கொண்டிருக்கையில், “அக்கா... எப்படியும் ஒன்ன விட ஏழு எட்டு வயசாவது எனக்குக் கொறச்சலாதான் இருக்கும். நீங்க வாங்கன்னு சொல்லாம சும்மா நீ வா போன்னே சொல்லேன்” என்று அவளே பேச்சு கொடுத்தாள். “ஏ கிறுக்கு ! அவங்க படிச்சவங்க…. அப்படித்தான் இருப்பாங்க. ஒனக்கு சுட்டுப் போட்டாலும் வராது” – அவள் கணவன் பொய்யாகக் கடிந்து கொண்டான். “அப்போ கொஞ்சம் படிப்பு தலைக்கேறுனா எல்லார்ட்ட இருந்தும் தூரமா போயிருவாங்களோ ?” – அவள் அப்பாவியாகத்தான் கேட்டாள். எனக்குத்தான் “அரைகுறையா படிப்பு ஏறுனா தலைக்கேறிருமோ?” என்று கேட்டது. “நல்லவேள…. அந்த எழவு ஏறுறதுக்குள்ள நான் நிப்பாட்டிட்டேன்” என்றாள். தன் படிப்பையா அல்லது நம் திமிரையா, எந்த ‘எழவைச்’ சொன்னாள் என்று தெரியவில்லை. அவனது ‘அவங்க படிச்சவங்க…. அப்படித்தான் இருப்பாங்க’ என்பது கூட வஞ்சப் புகழ்ச்சியாகத் தோன்றியது. “நீ எதுவரைக்கும் படிச்ச?” – ஒருமையில் நான் வினவியதைக் கண்டு கடைக்கண்ணால் புருவம் உயரப் புன்னகைத்தவாறே, “பாரு… இப்ப எப்பிடி இருக்கு கேக்க? என்னமோ பெருசா பேசுனியே?” – இது அவனுக்கான பதில். பின் என் பக்கம் திரும்பி, “ரெண்டாப்பு வர போனேன் அக்கா….புடிக்கல”. “ஏன் புடிக்கல?” “ஒனக்கு ஏன் புடிச்சுது?” “ம்ம்… எனக்கும் அந்த வயசுல புடிச்ச மாதிரி ஞாபகம் இல்லியே..” – வார்த்தைகள் வந்து விழுந்த பிறகுதான் என் கேள்வி மடமையாகத் தோன்றியது. “அப்புறம் எதுக்குப் போனியாம்?” என்ற அவளது கேள்வி வார்த்தைகளாக அல்லாமல் சிரிப்புச் சிதறல்களாக அவ்விடத்தை நிரப்பிக் கொண்டிருந்தன. இவளிடம் கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் பேச வேண்டும் போலும். “சில விஷயங்கள புடிக்கலங்குறதுக்காக…….” “அது எவ்ளோ நல்ல விசயமா இருந்தா என்ன? புடிக்கலன்னா கருமத்த என்னத்துக்கு சொமந்துட்டுத் திரியணும்?” “இப்ப hardwork பண்ணி படிச்சா நாளைக்கு lifeல settle ஆகிறலாம்ல…. நல்ல job opportunities இருக்கு… ஒங்களுக்காக government எவ்ளோ schemes மூலமா help பண்றாங்க… use பண்ணிக்க வேண்டியதுதானே?” – சத்தியமாக இதை நான் கேட்கவில்லை. அவர்களது வாழ்வியலைப் புரிந்து கொள்ளாமல் யதார்த்தம் என்னும் சாயம் பூசிக்கொண்டு இப்படி அரைவேக்காட்டுத்தனமாகக் கேட்கும் அளவிற்கு நான் ஒன்றும் முட்டாள் இல்லை. அதற்காக இக்கேள்வியைக் கேட்ட, அருகில் இருந்த அந்த நவநாகரிக யுவதியைக் குற்றம் சாட்டவும் இல்லை. அந்த யுவதிக்கு வந்த தொலைபேசி அழைப்பு அவளது கேள்வியை இடைமறித்தது. “Project deadline….. appraisal submission……HR…….” இவ்வார்த்தைகள் அவளது உலகை வெளிச்சம் போட்டுக் காட்டின. பாவம்! வளர்ச்சி, அக்கறை என்று நினைத்துதான் கேட்டிருப்பாள். கேள்விக்கு பதில் எதிர்பாராமல் தொலைபேசியில் பேசியவாறே நடந்து கொஞ்சம் தள்ளிச் சென்று விட்டாள். மடியில் கிடந்த பிள்ளையைத் தட்டிக் கொடுத்துக் கொண்டே இருவரும் அந்த யுவதியை ஆவென பார்த்துக் கொண்டிருந்தனர். அலைபேசியில் மூழ்கியிருந்த அவளுக்குக் கேட்காத தூரத்தில்தான் இருக்கிறோம் என்பதை உறுதி செய்து கொண்டவளாய், பிள்ளையைத் தூக்கித் தோளில் போட்டுக் கொண்டே, “யப்பா… ! தகர ஷீட்ல மழ பேஞ்ச மாரி…ச்சை!” (ஆமாம் ! உவமையை கொஞ்சம் மாற்றித்தான் எழுதியிருக்கிறேன். அதான் கண்டுபிடிச்சிட்டீங்கள்ல…அப்புறம் என்ன?) என்று அங்கலாய்த்தாள். அந்த சொலவடையைக் கேட்டதும் சிரிப்பு வந்தது எனக்கு. “யக்கா… என்ன சொல்லீட்டுப் போகுது அந்தப் பொண்ணு?” அவன் கேட்டான். “இல்ல…. ‘பிள்ளைங்கள படிக்க வச்சா நாளைக்கு நல்ல வேலைக்குப் போவாங்களே?’னு கேட்டாங்க”. “நல்ல வேலைன்னா…?” “நல்ல சம்பளம் கெடைக்குற வேலைய சொல்லீருக்கலாம்” “நல்ல சம்பளம்னா…?” போச்சு போ! “தெரியலியேப்பா…” “சரி விடுக்கா…. நல்ல சம்பளம் கெடைச்சு…?” கிராதகி ! போகிற போக்கில் அந்த அலைபேசிக்காரி கேட்ட முத்தான(!) கேள்விக்கு அநியாயமாக என்னை பதில் சொல்லும் அவல நிலைக்கு ஆளாக்கிவிட்டுப் போனதை எண்ணி கிட்டத்தட்ட அவளைச் சபிக்க ஆரம்பித்து விட்டேன். ஆனால் இவனுக்குப் பதில் சொல்ல வேண்டியிருந்ததால் கொஞ்சம் ஒத்திப் போட்டேன். எதற்கெடுத்தாலும் பளிச்சென்று பதிலுரைக்கும் அல்லது எதிர் கேள்வி கேட்கும் இவர்களிடம் எவ்வளவு யோசித்தும் இதற்கு என்ன சொல்வதென்று தெரியாததால் பொதுஜனத்தின் மூளையாகவே பதிலுரைத்தேன். “நல்ல சம்பளம் கெடச்சா… வசதியா… நிம்மதியா… சந்தோஷமா…” “இப்பவும் அப்படித்தான இருக்கோம்” பளார்! பெரும் சத்ததுடன் எல்லா மனிதர்களின் கன்னங்களிலும் அறை விழுந்ததில் ஒரு கணம் உறைந்து போனது உலகம். தாயின் மடியிலிருந்து தந்தையின் மடிக்குத் தாவிச் சென்று இவ்வுலகத்தை உறைநிலையிலிருந்து மீட்டது அக்குழந்தை. “ஒரு நாளைக்கு எப்படியும் ரெண்டு வேள சாப்பிடக் கிடச்சிருது. கெடச்ச எடத்துல பிள்ளைய மேல போட்டு குறுக்க சாய்ச்சா தன்னால கண்ணு சொருகுது. இத விட வேற என்ன சந்தோசம், நிம்மதி, வசதி….?” வாழ்வில் முதன்முறையாக மனதார பொறாமை என்னும் உணர்வால் ஆட்கொள்ளப்பட்டேன். குழந்தை அவன் மீது ஏறி அவனது தலைக்குப் பயணப்பட்டது. லாவகமாகத் தூக்கித் தோளில் அமர வைத்துக் கொண்டான். அவனது முடியையும் காதுகளையும் பிய்த்து எறியாத குறையாகக் குழந்தை அவனை பொம்மையாக்கி அதன் போக்கில் அவனை ஆட்டிப் படைத்தது. “எழுத படிக்கத் தெரியுற வரைக்குமாவது…?” – இதற்கு எந்த அணுகுண்டை வீசப்போகிறானோ என்று தயங்கித் தயங்கித்தான் கேட்டேன். “அதெல்லாம் வளரும்போது நான் பாத்துக்குவேன் அக்கா…. நாங்க போடுற கணக்க பாத்தே அதுவும் கத்துக்கும். அப்புறம்….. நானும் போனேன் எட்டாப்பு வரைக்கும்… எம்பிள்ள போனாலும் என்னிய மாதிரி கீழ ஒரு ஓரமாத்தான் அதுவும் ஒண்டிக்கெடக்கணும்…. இப்ப பாரு எம்மேல ராசாவாட்டம் ஒக்காந்துருக்குறத… நாள் முழுக்க நாலு சுவத்துக்குள்ள கெடந்து அது என்ன படிப்பு? என் தோள்ல ஒக்காந்து ஒலகத்த பாக்குதே… அந்தப் படிப்பு போதாது…?” எப்பேர்ப்பட்ட விஷயம்? படுபாவி ! இவ்வளவு லேசாகச் சொல்லிவிட்டானே! என் புருவங்கள் வில்லாய் வளைந்து நிமிர்ந்து நின்றதில் என் முகமெங்கும் அம்புகள் ஆகிப்போயின ஆச்சரியக்குறிகள்! அலைபேசி அழைத்தது. “இன்னும் பத்து நிமிஷத்துல வந்துருவோம்” என்றாள் அம்மா. “அதுக்குள்ளயா?” “என்னது?” “ஒண்ணுமில்லை. வாங்க… நான் வந்துட்டேன்.” என்று அம்மாவிற்குப் பதிலளித்துவிட்டு மீண்டும் அவர்கள் பக்கம் திரும்பினேன். “இப்ப ஒரு வண்டி வருது. கெளம்பீருவோமா? அப்பாகிட்ட கேக்கட்டா?” அவளிடம் கேட்டான். “என்ன அவசரம்? இப்பதானே சாப்பிட்ட…. கொஞ்சம் இரு… எனக்கு கொஞ்சம் இருந்திட்டு போலாம்னு இருக்கு. மதிய வண்டிக்குப் போவமே…” உடனடியாக உடன்பட்டான். திட்டமிடலோ அட்டவணையோ இல்லாத வாழ்க்கையில் உள்ள நிதானத்தை இவ்வளவு சுகமாக அனுபவிக்க இயலுமா ? வாழ்ந்து காட்டிக் கொண்டிருந்தார்கள். இந்த ரயிலுக்கு நேரம் காலமும் கிடையாது; விவஸ்தையும் கிடையாது. சரியாக இப்போதுதான் வந்து தொலைக்க வேண்டுமா? இன்னும் இவர்களிடம் பேசவே ஆரம்பிக்கவில்லையே? அவசர அவசரமாக அவளிடம் கேட்டேன், “எங்க இருந்து வர்றீங்க?” “நெறைய எடத்துல இருந்து…” “எங்க போறீங்க?” “நெறைய்ய்ய்ய எடத்துக்கு…” - கறை படிந்த பற்கள் தெரியச் சிரித்தாள். தன்னிடம் மிஞ்சியிருக்கும் குழந்தைத்தனத்தின் மிச்ச சொச்சத்தை விட்டுக்கொடுப்பவளாகத் தெரியவில்லை. அவள் பதிலில் இருந்த அழகியலைக் குலைக்க விருப்பமில்லை எனக்கு. ரயில் வந்து பயணிகள் இறங்க ஆரம்பித்தனர். என் கால்கள் அவ்விடத்தை விட்டு நகர்ந்து அம்மா அப்பாவைத் தேட மறுத்து, கண்கள் மட்டும் இடமும் வலமும் துழாவிக் கொண்டிருந்தன. அவள் கிளம்பும் மதிய நேரம் வரை அவளோடு அளவளாவ வேண்டும் போல் இருந்தது. “அக்கா! நீ எங்க போற?” “நான் உங்க அளவுக்குக் குடுத்து வச்சவ இல்லம்மா… எங்க இருந்து வந்தேனோ அங்கயேதான்… வீட்டுக்கு”. ‘வீட்டுக்கு’ என்ற சொல்லில் அதுவரை இல்லாத சலிப்பு தொனித்ததை உணர்ந்திருப்பாளோ? “எதுக்கு வீடுன்னு ஒண்ண கட்டி வைப்பானேன்; அதக் கட்டிக்கிட்டு அழுவானேன்”, முதிர்ந்த சிரிப்பொன்று உதிர்ந்தது. “If we were meant to stay in one place, we’d have roots instead of feet” என்ற Rachel Wolchinன் வரிகளை சத்தியமாக இவள் அறிந்திருப்பாளில்லை. நான் அவர்களிடம் முட்டாளாகித் தோற்றுக் கொண்டிருந்த அந்த அற்புதத் தருணத்தில், அம்மா அப்பா நான் இருக்கும் இடத்திற்கு வந்துவிட்டார்கள். அவளது குழந்தையிடம் ஒரு சாக்லேட்டை நீட்டினேன். தத்தித் தத்தி என்னருகில் வந்து என் கைப்பிடித்து நின்று அந்த 20 ரூபாய் சாக்லேட்டுக்கு விலை மதிப்பில்லா ஒரு மென் புன்னகையைப் பரிசளித்துச் சென்றது. அவளும் புன்னகையிலேயே நன்றி சொன்னாள் அல்லது மகிழ்ந்தாள். குழந்தை அம்மாவைத் தயக்கத்துடன் பார்ப்பது, அம்மாவின் கண் அசைப்புக்கு இணங்க வாங்கிய பின் அனிச்சையாக “Say thank you! Come on” என்ற கட்டளை என அரங்கேறும் செயற்கைத்தனங்கள் எதுவும் அங்கு இல்லை. விடைபெற்றுக் கொண்டு வேர் பிடித்து என் கால்களைப் பிடித்திழுக்கும் கூட்டிற்குத் திரும்பினேன். அவர்களோடு கதைத்தது, எனது மிகச் சாதாரண கேள்விகள், அதற்கு அவர்களின் அலங்காரமில்லாத ஆனால் ஆழமான பதில்கள், அவர்களிடம் நான் முழுமையாகத் தோற்க விழைந்து அதிலும் தோற்றுப் போய் பாதியிலேயே வந்தது வரை ஒவ்வொன்றையும் அப்பாவிடம் சிலாகித்துக் கொண்டிருந்தேன். “பின்னிட்டான் பின்னி… பிரமாதம்” என்று வெகுவாக ரசித்தார்கள் அப்பா. ‘என்ன ஒரு அழகான கவலையில்லாத எளிய வாழ்க்கை? நாம ஏன் அப்படி இல்ல?’ என்றெல்லாம் பினாத்தி கொஞ்சம் அளவுக்கு அதிகமாகவே சிலாகித்து விட்டேன் போலும். சிரிப்பு – புன்னகை – குறுநகை என்று அப்பாவின் முகம் பரிணாம வளர்ச்சி பெற்றது. இறுதியாக ‘புருவங்களைச் சுருக்கவா? வேண்டாமா?’ என்று மனது நடத்திய பட்டிமன்றத்தின் விளைவாக, “இவளிண்ட போக்கே சரி இல்லையே. ஒருவேளை பையைத் தூக்கிட்டு கிளம்பினாலும் கிளம்பிருவா போலயே” என்னும் வரிகளைப் புருவங்கள் ஏறி இறங்கி முகத்தில் எழுதிவிட்டுச் சென்றன. பொதுவாக ரசனையான கவித்துவமான விஷயங்களை நிதர்சனத்திற்கு உட்படுத்தி நீர்த்துப் போகும் வேலையைச் செய்யக் கூடாது என்று சொல்லாமலேயே சொல்லிக் கொடுத்த அப்பா எனக்காக அதை மீறினார்கள். “நமக்கு அவர்கள் வாழ்க்கை பழக்கமில்லை. அவர்களுக்கு நமது வாழ்க்கைமுறை பழக்கமில்லை. அவ்வளவுதான்” அட போங்கப்பா ! சில நேரங்களில் சரியான பதிலைக் கேட்க மனம் விரும்புவதில்லை. “ஆமா… அவங்க ரெண்டு பேர் பெயர் என்ன?” – அம்மா. உலகிலேயே சிறந்ததொரு வாழ்வியலைக் கொண்டிருக்கும் அவர்களிடம் நான் அதைக் கேட்கவே இல்லை. அட ! பெயரில் என்னங்க இருக்கு? What’s in a name ? That which we call a rose by any other name would smell as sweet. “ஆனா படிச்சு அறிவியல் ரீதியா இவ்ளோ வளர்ச்சி அடஞ்சதாலதான வேற கிரகத்துக்குக் குடி ஏறுற வழியைத் தேடுற அளவுக்கு முன்னேறி இருக்கோம்?” என்று சிலர் கேட்பார்களானால், “வேற கிரகத்துக்குப் போற அளவுக்கு இந்த பூமிய பாழ்படுத்துனது அவங்களா? நாமளா?” என்று முட்டாள்தனமான வளர்ச்சிகளைச் சாடுவதுதான் பதிலாக அமையும். ‘மனிதத்தைச் சிதைக்கும் வளர்ச்சியில் உடன்பாடில்லை’ என்பதில் அவர்களுடன் உடன்படுகிறேன். ‘அப்படியென்றால் அவர்கள் அப்படியேதான் இருக்க வேண்டுமா?’ என்று சில முற்போக்கர்கள் கேட்கலாம். மகிழ்ச்சியாக இருப்பவர்களுக்கு ‘அப்படியேதான்’ என்னும் சொல்லைப் பயன்படுத்துவதே தவறு. ஏதோ அவர்கள் நாகரிகம் அடையாதது போலவும் நாம் நாகரிகர்கள் எனவும் வரித்துக் கொள்வதே மதியீனம்தான். கார்ப்பரேட்டுகளின் பிடியில் சிக்காமல் எவ்விதச் செயற்கைத்தனங்களுக்கும் வளைந்து கொடுக்காமல் வாழும் அந்நனி நாகரிகர்களை அவர்கள் போக்கில் விட்டுவிடலாமே ! அல்லது கிறுக்குத்தனமாக அவர்களை முன்னேற்றுகிறேன் பேர்வழி என்று வலியச் சென்று அவர்கள் கையால் அம்புகளை நெஞ்சில் வாங்கி உயிர் துறக்கும் பேற்றினைப் பெறலாம். கடலைமிட்டாயோ எள்ளுருண்டையோ அல்லாமல் சாக்லேட் கொடுத்ததற்கு அவர்களின் கவணில் இருந்து நான் தப்பிப் பிழைத்ததே அவர்களது கருணையில்தானோ? இன்னமும் இவர்களது வாழ்க்கை முறையை நமது அற்பமான வாழ்க்கை முறையுடன் ஒப்பிட்டுப் பார்த்து கேள்விகள், சந்தேகங்கள், விமர்சனங்கள் ஆகியவற்றை முன் வைக்கும் ஒவ்வொருவரும் தொடர்பு எல்லைக்கு அப்பால் போய்விடக் கடவதாக ! தமது பிள்ளைகள் நன்றாகப் படித்து பணியின் பொருட்டு வெளிநாட்டில் குடியேறிவிட, தமது முதுமைக் காலத்தில் தனிமை என்னும் அரக்கனோடு மல்லுக்கட்டிக் கொண்டிருக்கும் முதியவர் ஒருவர், பேரப்பிள்ளையை வானில் தூக்கிப் போட்டுக் கொஞ்சிக் கொண்டிருந்த நாடோடிக் கூட்டத்தைச் சார்ந்த ஒருவரை ஏக்கத்தோடு பார்த்த கதையை மனோகரன் மாமாவிடம் கேட்டிருக்கிறேன். அதன் பிறகு நாடோடிகளைப் பார்த்துத் தமக்கு வந்த ஆசையை மாமா கூறினார்கள். “இலக்கியா மட்டும் கொஞ்சம் வளர்ந்து பெரியவளாகட்டும்… அவளுக்கு விவரம் தெரிய ஆரம்பிச்ச உடனே மொதல்ல தமிழ்நாட்டுக்குள்ள ஒரு டூர் போகப்போறோம்…. பொன்னியின் செல்வன் கதைக்களத்தை அவளுக்குக் காண்பிக்கப் போறேன். என்னயும் என் பேத்தியையும் யாரும் தொந்திரவு பண்ணக்கூடாது”. இதைக் கேட்டதும் ஏதோ எல்லாம் புரிந்துவிட்டதைப் போல் சிரித்து ஆமோதித்தாள் ஐந்து மாதமே ஆன இலக்கியா. தம்மை உணர்ந்த நாடோடிகளுக்குத் தேவைகள் அதிகம் இல்லாத காரணத்தால் சொந்தங்களிடம் எதிர்ப்பார்ப்போ அவர்கள் மீது பொறாமை துளிர்க்கும் பேச்சுக்கோ இடமில்லை. எனவே அடுத்தவரின் சிறு வெற்றியைக் கூட மனதார பெரிதாய்க் கொண்டாடத் தெரிந்தவர்கள். வாழ்க்கையைக் கொண்டாடத் தெரிந்தவர்கள். அந்தக் கொண்டாட்ட மனநிலையில் உலகமே கேளிக்கைகளுக்கான சொர்க்கமாகிப் போனதையும் இயல்பாய், பக்குவமாய்ப் பார்க்கத் தெரிந்தவர்கள். அவர்கள் மட்டுமே மனிதர்கள்; பாதம் உள்ள மனிதர்கள்; சிறகு முளைத்த பறவைகள். அவர்களுக்கு நிழல் தரும் தகுதியோ அவர்களது கூட்டைச் சுமக்கும் தகுதியோ கூட நமக்கில்லை. ஏனெனில், நாம் வேர் பிடித்த வெற்று மரக்கூடுகள். - சோம.அழகு நன்றி திண்ணை (இணைய வார இதழ்)
 24. 3 points
  நாம் தமிழர் - கோபிச்செட்டிபாளையம்J’aime la Page 6 h · நாம் தமிழர் கட்சியின் கொள்கைகள். நாம் தமிழர் ஆட்சியின் செயல் திட்ட வரைவு. ■ மருத்துவம் அனைவருக்கும் இலவசம், ஆட்சியாளர்கள் கட்டாயம் அரசு மருத்துவமனைகளிலேயே சிகிச்சைபெற வேண்டும். ■ அனைவருக்கும் கட்டணமில்லா செய்வழி (practical) தனித்திறன் கல்வி (ஆரம்ப கல்வி முதல் ஆராய்ச்சி கல்வி வரை இலவசம்). சாதரண குடிமகனின் பிள்ளைகள் முதல் முதலமைச்சரின் பிள்ளைகள் வரைக்கும் அனைவருக்கும் அரசுப் பள்ளியில் சரியான தரமான இலவசக் கல்வி! ■ ஆட்சியாளர்கள் மற்றும் அரசு பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களின் குழந்தைகள் கட்டாயம் அரசு பள்ளிகளிலேயே படிக்கவைக்க வேண்டும். ■ 6 மணி நேர செய்வழி தனித்திறன் கல்வி. 1 மணி நேரம் தமிழரின் வீர விளையாட்டு பயிற்சி. ■ மெக்காலே கல்வி முறை ஒழிப்பு. ■ இயற்கை விவசாயத்திற்கு மட்டுமே அனுமதி. ■ A2பால் தரும் நாட்டு மாடு மற்றும் இறைச்சி ஆடு வளர்ப்பு செய்ய ஊதியம் குறைந்த பட்சம் 20000 மற்றும் அரசு பணி. தமிழ்நாட்டின் பால் மற்றும் இறைச்சி தேவை தமிழ்நாட்டிலேயே பூர்த்தி செய்யப்படும். ■ மரபு வழி சார்ந்த விவசாயம். ■ தமிழில் படித்தால் மட்டுமே தமிழ்நாட்டில் அரசு பணி. ■ நீர் வளம் மேலாண்மை. நீர் வளம் பெருக்கம். 10 லட்சம் நீர் நிலைகள் உடனடியாக அமைக்கப்படும். ■ சாலைகள் இரு பக்கங்களிலும் இயற்கையை பாதுகாக்கும் மரங்கள் நட்டப்படும். ■ புதியதாக காடுகள் வளர்க்கப்படும். ■ 1 கோடி பனைமரங்கள் முதற்கட்டமாக நடப்பட்டு பாதுகாக்கப்படும். ■ விவசாய நிலங்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட்ட பகுதியாக அறிவித்து அரசின் மேற்பார்வையில் இருக்கும். ■ தூய சுத்திகரிக்கப்பட்ட வேதி பொருள் கலக்காத இலவச குடிநீர் அனைவருக்கும் ஒரே மாதிரியாக வழங்கப்படும். ■ தண்ணீர் விற்கத்தடை. ■ கோக், பெப்சி போன்றவை கடைகளில் வைத்து விற்க தடை. ■ இளநீர், பதனி தேசிய பானமாக அறிவிக்கப்படும். ■ நகரத்தில் கிடைக்கும் அனைத்து வசதிகளும் கிராமங்களுக்கும் கிடைக்கச் செய்யப்படும். இதன் மூலம் கிராமங்களில் இருந்து குடிபெயர்வது தடுக்கப்படும். ■ மீனவர் நலம் மற்றும் பாதுகாப்பில் முக்கியத்துவம். வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதிகளை முறைப்படுத்தி மீனவர்களுக்கு அதிக வருவாய் கிடைக்கும் வகையில் திட்டங்கள் கொண்டுவரப்படும். ■ அழிவுத் திட்டங்களுக்கு அனுமதி கிடையாது. ■ பெண் வதைக்கு கடுமையான தண்டணைகள் வழங்கப்படும். ■ வரதட்சணைக்கு தடை. ■ அழிந்துபோன தமிழர் கலைகள் அனைத்தும் மீட்டெடுத்து வளர்க்கப்படும். ■ ஏறுதழுவுதல் / தொழூப்புகுத்தல் (ஜல்லிக்கட்டு) தேசிய திருவிழாவாக அறிவித்து, 7 நாட்கள் அரசு விடுமுறை அறிவித்து கொண்டாடப்படும். ■ காவல் துறை பணி நேரம் 8 மணி நேரமாக குறைக்கப்படும், குறைந்த பட்ச ஊதியமாக, மாதம் 40000 ருபாய் வழங்கப்படும். ■ கைய்யூட்டு (லஞ்சம்) வாங்கினால் உடனடியாக பணி நீக்கம் செய்யப்பட்டு சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும். ■ கைய்யூட்டு( லஞ்சம் ) வாங்குவது தேசத்துரோகமாக அறிவிக்கப்படும். ■ தற்சார்பு பொருளாதார கொள்கை. சுற்றுச்சூழலைப் பாதிக்காதபடி உற்பத்தித் துறைகளில் கவனம், தொழில்முனைவு ஊக்கம், அனைத்து துறைகளில் வேலைவாய்ப்பு பெருக்கம், வளர்ச்சி. நாமே மாற்று, நாம் தமிழரே மாற்று வாக்களிப்பீர் #விவசாயி சின்னம்
 25. 3 points
  வீடு திரும்பிய பின்பு வீடே அமைதி.அடுத்த நாள் கோணேஸ்வரம் போய் அங்கிருந்து வீடு திரும்புவது தான் திட்டம்.ஆனபடியால் சைவ சாப்பாடு என்று முதலே சொல்லி வைத்திருந்தோம்.காலையில் எல்லோரும் ஆறுதலாகவே எழும்பினார்கள்.நான் வெளியே வர எல்லோரும் பாவமாகவே பார்க்கிறார்கள்.இன்னமும் அதிர்ச்சியில் இருந்து மீளவில்லை என்பது தெரிகிறது.தரையிலும் நான் தடக்குபட்டு விழுந்துவிடுவேனோ என்று எங்கு போனாலும் யாரோ ஒருவர் பின் தொடர்கிறார்கள்.இது எரிச்சலூட்டினாலும் வெளிக்காட்ட முடியவில்லை. இந்த இடத்தில் எனது மனைவியின் குடும்பத்தையும் சிறிது சொல்ல வேண்டும். எனது தகப்பனாரும் மனைவியின் தகப்பனாரும் மிகவும் நெருங்கி பழகுவார்கள்.இருவரது வீடும் அரை மைல் தூரம் தான்.கொஞ்சம் சொந்தமும் கூட.மனைவிக்கு 13-14 இருக்கும் போதே காதலிக்கத் தொடங்கிவிட்டோம்.அவர்களது குடும்பத்தில் எட்டு சகோதர சகோதரிகள்.இன்று வரை எவருமே அத்தான் மச்சான் என்று அழைப்பதில்லை.அண்ணன் என்று தான் அழைப்பார்கள்.நானும் ஒரு அண்ணனாகவே இருக்கிறேன்.எல்லோரையும் வாடா போடா போடி வாடி என்று சிறு வயது முதல் கதைத்து பழகியதால் இப்போதும் தொடர்கிறது.இப்படி பழகியதாலோ என்னவோ எல்லோரும் ரொம்பவும் உடைந்துவிட்டனர். காலை சாப்பாடு முடிய அவர்களது கொடுப்பனவுகளையும் முடித்துக் கொண்டு திருமலை நகரையும் பார்த்துக் கொண்டு கோணேஸ்வரம் கோவிலுக்கு போனோம்.சிறிய கோவில் அமைந்திருந்த இடம் எல்லாமே எல்லோருக்கும் மிகவும் பிடித்திருந்தது.எனது பெயருக்கு அரிச்சனை இது எதிர்பார்த்தது தான்.கோவிலின் கீழ்பகுதி கடல் அங்கு தான் சுழியோடிப் பார்க்க திட்டம் போட்டிருந்தனர்.மனைவியும் மாமியும் ஆளாளுக்கு நேத்திக்கடன் வைத்துவிட்டு வந்துவிட்டார்கள்.இனி எப்ப இலங்கை போனாலும் கோணேஸ்வரம் கோவிலுக்கு போயே ஆகவேண்டும்.வெளியே உள்ள கடைதெரு எல்லாம் சிங்கள மக்களே கூடுதலாக காணப்பட்டார்கள்.இது கொஞ்சம் நெருடலாக இருந்தது.எல்லாம் முற்று முழுதாக தமிழர்கள் வாழ்ந்த இடம் என்று கேள்விப்பட்டிருக்கிறேன்.இப்போது எல்லாமே மாறியிருக்கிறது. மீண்டும் மதியச்சாப்பாட்டுக்காக நகரத்துக்கு போய் சாப்பிட்டு இனி என்ன வீட்டுக்கு தான் என்றதும் ஒரு நிம்மதி.பிற்பகல் முருகண்டி போய் வழியாடு அடுத்து வீடு.சாரதியும் அண்ணே சமாதானத்தின் பின் நீண்டகாலமாக வான் ஓடுகிறேன்.வந்தவர்களுக்கெல்லாம் நாங்கள் தான் பாதைகாட்ட வேண்டும்.போற இடத்தில் இரவு தங்குவதற்கு இடம் ஒழுங்கு செய்து கொடுக்க வேண்டும்.நல்ல சாப்பாட்டுக்கடை தேடிப் பிடிக்க வேண்டும்.சாப்பாடு கூடாதென்றால் அதுக்கும் பேச்சு வாங்க வேணும். இப்படி பல பிரச்சனைகளுடன் கொண்டுவந்து இறக்குவோம்.முதல் தடவையாக எனக்கு எந்தவிதமான தொந்தரவுமில்லாமல் போய்வந்திருக்கிறேன் என்று விடைபெற்றார். அடுத்த நாள் நல்லூர் தேர் முக்கியமாக காவடிகள் பார்க்க வேண்டும் என்று வேளைக்கே எல்லோரும் படுக்கைக்கு போய்விட்டோம். இன்னும் ஒருநாள் இணைந்திருங்கள்.
 26. 3 points
  இது சண்டை பிடிப்பதற்கான கருத்தில்லை ஏன் யாழ் களம் முன் நின்று ஏதாவது தொழிற்சாலையை அல்லது சுய தொழில் உற்பத்தியை ஊக்கப்படுத்தி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய முடியாது? கள நண்பர்கள் ஓடிவிடுவார்கள் என்ற பயமா? இது வெறும் வாய்ப்பேச்சிற்கான களம் மட்டுமா?
 27. 3 points
  அடி ஆத்தா ஆத்தோரமா வாரியா,நான் கேட்டா கேட்காமலே தாரியா ......!
 28. 3 points
 29. 3 points
  அண்மையில் மிகவும் நெருக்கமான நண்பன் ஒருவன்.....கொழும்புக்குப் போய் வந்தான்! அங்கிருந்து மரத்தில் செதுக்கப் பட்ட ஒரு காந்தி சிலையை எனக்காக வாங்கிக் கொண்டு வந்தான்! மச்சான் அந்தக் கடையில் ஒரே ஒரு சிலை தான் இருந்தது! உனக்குப் பிடிக்கும் என்று வாங்கி வந்தேன்! ஆனால் மனுசி...தனக்கும் அது பிடிச்சிருக்காம் என்டு சொல்லுது! இருந்தாலும் உனக்கெண்டு வாங்கின படியால்.....தர முடியாது என்று சொல்லி விட்டேன் என்று கூறினான்! என்னடா .....காந்தியோட பெரிய ...பிரச்சனையாய்ப் போச்சுது....என்று நினைத்த படியே....சிலையை வாங்கிக் கொண்டேன்! முள்ளி வாய்க்காலுக்குப் பிறகு காந்தியை வீட்டில் வைத்திருப்பது சரியாகப் படவில்லை! மறு நாள் .....சிலையை வடிவாய்...ஒரு அழகான பெட்டியில்...வைத்து....நண்பனின் மனைவியிடம்...காந்தி உங்கள் வீட்டில் இருப்பது தான் முறை என்று கூறித் திரும்பக் கொடுத்து விட்டு வந்து விட்டேன்! மனதுக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது!
 30. 3 points
  இப்படியான ஒப்பீடுகள் ஒரு போதும் ஒற்றுமையை கொண்டு வர போவதில்லை. மாவீரர்கள் தங்கள் உயிரை மாய்க்கும் போது தான் கிழக்குக்காக தன் உயிரை அர்ப்பணிக்கின்றேனா அல்லது வடக்குக்காக உயிரை அர்ப்பணிக்கின்றேனா என பார்த்து பார்த்து அர்ப்பணிக்கவில்லை. வடக்கும் கிழக்கும் இணைந்த தமிழ் ஈழத்துக்காகவே அர்ப்பணித்தனர். விக்கினேஸ்வரன் தான் அரசியல் செய்ய இப்படியான புள்ளிவிபரங்களை எடுத்து விட்டு இருக்கும் ஒற்றுமையையும் குலைக்க பார்க்கின்றார்
 31. 3 points
  ஒரு முறை வெளியே வந்து விட்டால்... உள்ளே செல்ல முடியாது. ஒரு முறை உள்ளே சென்று விட்டால்... வெளியே வர முடியாது.
 32. 3 points
  ஒண்டுக்கும் யோசிக்க வேண்டாம்..
 33. 3 points
  ரதி.....லண்டன் மாதிரி....நினைக்காதையுங்கோ...! நியுசிலாந்து மிகவும்...பரந்து விரிந்த ஒரு அழகிய தேசம்! இவ்வாறான சம்பவங்கள்....அந்த மக்களுக்கு மிகவும் புதிதானவை! அதனால் தான்......துப்பாக்கி தாரி.....அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தார் என்று கூறுகின்றார்கள்! அந்தப் பொலிஸ் நிலையம் ஒரு கிராமத்துப் பொலிஸ் நிலைய அந்தஸ்துள்ள பொலிஸ் நிலையம் மட்டுமே!
 34. 3 points
  நான் அவர் கமலஹாசன் மாதிரியெண்டு சொல்லி முடியமுதலே உங்கட கற்பனை எப்பிடி எல்லாம் ஓடுது எண்டு எனக்கு விளங்குது. அதுக்காக நான் கண்டபடி கற்பனையில் மிதக்கேல்லை. படம் ஓடிக்கொண்டு இருக்குது. பின் பக்கம் இருந்த எவனோ காலை என் கதிரைக்கு மிண்டு கொடுத்தானோ என்னவோ அடிக்கடி கதிரை ஆட்டுப்பட்டுக்கொண்டே இருக்குது. எனக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை. கொங்சம் முன்னே நகர்ந்து இருக்கிறேன். எத்தனை நேரம் நிமிர்ந்து இருப்பது. மீண்டும் சாய்ந்தால் அதே தொந்தரவு. நான் செய்வதறியாது நெளிந்தபடி தினேஷின் பக்கம் பார்க்க,அவர் என்னைப்பார்த்து என்ன என்பதுபோல் சைகையால் கேக்கிறார். பின்னுக்கு கால என்று மட்டும் சொல்லிவிட்டு பின்பக்கம் திரும்பவே பயந்து திரையைப் பார்த்துக்கொண்டு இருக்க, எடடா காலை என்று தினேஷ் பின் பக்கம் பார்த்துச் சொல்ல எனக்கு நெஞ்சுக்குள் பதட்டம் வந்து சேர்க்கிறது. உடனே தினேஷ் எழுந்து நிவேதா இதில வந்து இருங்கோ என்றபடி தன் இடத்தைக்காட்டி விட்டு என்னிடத்தில் வந்து அமர்கிறார். உடனே மாமியு ம் மற்றவர்களும் என்ன என்ன என்று என்னைக் கேட்கிறார்கள். சத்தம் போடாமல் படத்தைப் பாருங்கோ என்று தினேஷ் கூற மற்றவர்கள் அடங்கிப் போகின்றனர். இடைவேளைக்கு அறிவிப்போடு லையிற் போட அப்பதான் நான் சிறிது துணிவுவரப்பெற்று முதலில் இருந்த கதிரையைப் பார்க்கிறேன். இரண்டு கதிரைகளிலும் எவரையும் காணவில்லை. ஐஸ்கிரீம் வாங்கிக் கொண்டு வாறன் என்று எழுந்த தினேசை நான் அவசரமாகத் தடுக்கிறேன். நீங்கள் போகாதேங்கோ அவன் வெளியில நிண்டு எது பிரச்சனை பண்ணினாலும் என்று பயத்துடன் கூற தினேசும் வெளியே செல்லவில்லை. மாமிமார் தான் குனிந்து என்னடி நடந்தது என்று இரகசியமாக கேட்கினம். நான் சொல்ல திரும்ப வருவங்களோடி என்று பயத்துடன் கேட்கிறா மாமி. எனக்குத்தெரியுமே என்று சொல்லிவிட்டு படம் தொடங்கியதும் பார்த்தால் அவங்களைக் காணேல்லை. மனதுக்குள் பெரிய நின்மதியோட படம் பார்த்து முடிச்சாச்சு. படம் பார்த்து முடிய எல்லாரும் சுபாஷ் கபேக்கு ஐஸ்கிரீம் குடிக்கப் போவம் எண்டு தினேஷ் எங்களைக்கூட்டிக்கொண்டு போனார். இரண்டு மாமிகளையும் தவிர்த்துவிட்டு எனக்குப் பக்கத்திலேயே நடந்துவர முயற்சி செய்தும் முடியேல்லை. ஏனெண்டா என் தம்பி என்னை விட்டு அங்காலை இங்காலை அரக்காமல் என்னோடயே ஒட்டிக்கொண்டு வந்ததுதான் காரணம். கடைக்கு உள்ளபோன உடன அந்த ஏசி சுகமே ஒருவித நின்மதியைத் தர நான் கடைசியாக நிக்கிறன். நாலுபேர் இருக்கிற ஒரு மேசைதான் காலியாக கிடக்கு. தம்பி உடன ஒரு கதிரையில இருக்க மாமிமார் இரண்டுபேரும் ஒராளை ஒராள் பாத்துக்கொண்டு நிக்க அவையைப் பார்த்து இருங்கோவன் என்று தினேஷ் சொல்ல மாமிமார் வேற வழி இல்லாமல் எதிரும் புதிருமாப் போய் இருக்கினம். மிகுதி நாங்கள் மூன்று பேர். இருப்பது ஒருகதிரை. உடனே தினேஷ் நிஷா நீ இதில இரு என்றுவிட்டு சுற்றிவரப் பார்க்கிறார். அடுத்தவரிசையில் சுவரோரம் இரண்டு இருக்கைகள் காலியாக இருக்க வாங்கோ நிவேதா என்றபடி நகர வெளிக்கிட, பின்னால் இரு மேசைகளில் இருந்தவர்களும் எழும்ப, பார்த்துக்கொண்டிருந்த தங்கை அண்ணா எல்லாரும் பின்னுக்குப்போவம் என்றபடி எழுந்து வர முன்னே நின்றுகொண்டிருந்த நான் வேறுவழியின்றி முதலில் போய் சுவர் பக்கம் இருக்காது மற்றப்பக்கமாக இருந்துகொள்ள எனக்குப்பக்கத்தில் என்தம்பி வந்து இருக்க எதிர்ப்பக்கம் தினேஷின் தங்கையும் ஒருமாமியும் இருக்க மறுபக்கத்தில் தினேசும் மற்ற மாமியும் போயிருக்க எனக்கு அந்தக் குளிரிலும் எரிச்சல் எட்டிப் பார்க்கிறது. அவர் எல்லாருக்கும் இரண்டு இரண்டு ரோல்ஸ் சொல்ல அப்ப ஐஸ்கிரீம் இல்லையோ என்கிறான் என் தம்பி. அது கட்டாயம் வரும். முதல்ல இதைச் சாப்பிடுங்கோ என்று சொல்லி வாய் மூட முதல் ரோள்ஸ் வருது. அந்தக்காலத்தில் அடிக்கடி சாப்பிடாததில ரோள்ஸ் நல்ல சுவையா இருக்கும். அதுவும் நாங்கள் உப்பிடி வெளியில போனால்த்தான் அவற்றையெல்லாம் சாப்பிடுவது. சாப்பிட்டுமுடிய ஐஸ்கிரீம் வர நாங்களெல்லாம் அதை சாப்பிடுறதில மும்மரமாக இருந்தமே தவிர எனக்கு ஏற்பட்ட எரிச்சல்கூட ஐஸ்கிரீமின்ரை சுவையில் இல்லாமல் போட்டுது. எல்லாக் கப்பும் காலியாக இன்னும் ஒண்டு ஓடர் செய்யவோ என்று என்னைப் பார்த்துக் கேட்கிறார். தனியா இருந்தால் நான் ஓம் என்றுதான் சொல்லியிருப்பன். ஆனா மற்றவையும் முக்கியமா மாமிமாருக்கும் ஏன் இரண்டாவதை வாங்கிக் குடுக்கவேணும் என்று ஓடிய எண்ணத்தில வேண்டாம் வேண்டாம் வயிறு புல் என்கிறேன் நான். அதுக்குப்பிறகு பஸ்சுக்குப் போய் நிண்டா காங்கேசன்துறை போற பஸ் நிறைய ஆட்களோட நிக்குது. இது போய் அடுத்த பஸ் வந்து .... பிறகு அது எப்ப வெளிக்கிடுதோ .. நிண்டு அடுத்ததில போவமோ என்று என்னைப் பார்த்தே கேட்கிறார். என்ன இவர் என்னைப் பார்த்து கேட்க மாமி ஆட்கள் என்னவும் நினைக்கப் போயினம் எண் ட பயமும் மனதில எட்டிப் பாக்குது. இல்லை இதிலையே போவம் என்கிறேன் நான். நான் வேம்படியில் படித்ததால் ஒவ்வொருநாளும் பஸ்ஸில் போய்ப் பழக்கம். மாமியும் தம்பியும் தினேஷின் தங்கையும் அடிக்கடி போகாதபடியால் முண்டியடித்து பஸ்ஸில் எற கடைசியாய் நானும் தினேசும் ஏறுகிறோம். ஒரு ஐந்து நிமிடத்தில் பஸ் வெளிக்கிட்டு நிடவைபோனவை ஓடிவந்து ஏறி, இனியாரும் எற இடமில்லையென்ற அளவுசனம். நான் எப்போதும் பஸ்ஸின் முன்பக்கக் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு இருப்பதுதான் வழக்கம். அக்கம் பாக்கக் கண்ணாடியைப் பார்த்தால் தலை சுற்றும். எனக்கு முன்னால் நின்ற மாமி என்னையே முறைத்துப் பார்க்கிறா என்று யோசித்தபடி திரும்பினாள் எனக்குப் பின்னால் மிக அருகில் தினேஷ் நிற்பது தெரிகிறது. ஒரு செக்கன் உடல் முழுதும் ஒரு சந்தோசம் பரவ மாமியின் பார்வை மறுசெக்கன் நினைவில் வந்து என் சந்தோசத்தை சடிண் பிரேக் போட்டு நிறுத்த நான் என் உடலை ஒடுக்கியபடி நின்றுகொண்டேன்.
 35. 3 points
  .................(13). அடுத்து ரவீந்திரனின் வழக்கு... கஞ்சா விக்கிறவன் கூண்டில் நிக்கிறார். ஆட்டுக்கல்லும் குழவியும் கூண்டுக்கு அருகிலே ஒரு சிறிய மேசையில் இருக்கு. நீதிபதி ஈஸ்வரதாசன், நீர் கஞ்சா விற்றதை ஒப்புக்கொள்கிறீரா..... ஓம் ஐயா....அப்ப இந்த ஆட்டுக்கல்லு எப்ப களவெடுத்தனீர்.....அது ஒரு நாலு வருஷம் இருக்கும் ஐயா. அப்போது கனகு ஓடிவந்து ரவீந்திரனிடம் சேர் ஆட்டுக்கல்லு அடுத்த வழக்குக்குதான் வரவேண்டும்.இது கஞ்சா வழக்கு மட்டும்தான் சேர்......! கனகு , அது ஸ்டேசனில சும்மா கிடந்து போக வர கால்ல அடிக்குது என்று நான்தான் கடைசி நேரத்தில இந்த வழக்கில சேர்த்து விட்டனான் இப்ப அதுக்கு என்ன.....! அதுக்கில்லை சேர் அதை எடுத்த உண்மையான திருடனைப் பிடித்து விட்டேன் சேர்.....! .யார் அது ......! அந்த நகைத் திருடன்தான் சேர்......! அப்படியென்றால் உடன அந்த கேஸில் இருந்து ஆட்டுக்கல்லை நீக்கி வீடு கனகு ......! இனி அது முடியாது சேர் எல்லா ஆவணங்களும் கோர்டில குடுத்திட்டம் சேர்......! அப்படியா பொறு என்ன நடக்குது என்று பார்ப்பம்......! இவர்கள் பேசிக்கொண்டிருக்கையில் எதிர்பாராத திருப்பமாக காவலரோடு கைவிலங்குடன் நின்ற நகைத்திருடன் முன்னே வந்து ஐயா அந்த ஆட்டுக்கல் நான்தான் களவெடுத்தனான்.இவன் பொய் சொல்லுறான்.என்று சொல்கிறான்.......! ( ரவீந்திரனும் கனகுவும் ஒருத்தரை ஒருத்தர் பார்க்க) நீதிபதி அவனைப் பார்த்து இஞ்சால வாரும், என்ன சொல்லுறதெண்டாலும் கூண்டுக்குள் வந்து நின்று சொல்லும். அவனும் வந்து அந்த கூண்டுக்குள் ஏறுகிறான்.இருவரும் இந்த நாலைந்து நாட்களாய் ஸ்டேசனில் ஒரே அறைக்குள்தான் ஆடு புலி ஆட்டம் ஆடிக்கொண்டு இருந்தவர்கள்.அதனால் நட்பாகி இருந்தார்கள். இவன் வந்ததும் கஞ்சாகாரன் அவன் துடையில் நல்லா வலிக்க ஒரு கிள்ளு கிள்ளுகிறான்.திருடனும் அம்மா என்று அலறிக்கொன்டு திரு திருவென முழிக்கிறான்.....! நீதிபதி முதலாவது ஆளைப்பார்த்து உன் வழக்கு என்ன.............! கஞ்சா வித்தது,ஆட்டுக்கல்லு திருடினது ஐயா.........! மற்றவனிடம் உன் வழக்கு என்ன............! நகைத் திருட்டும் ஆட்டுக்கல்லுத் திருட்டும் ஐயா..........! நீதிபதி: அவன் கஞ்சா வித்தது சரி, நீ நகை திருடினது சரி, அதெப்படி ஆட்டுக்கல்லை இரண்டு பேரும் திருடினீர்கள்.....! கஞ்சாகாரன் படித்தவன் விவரமானவன்.மெதுவாய் இவனுக்கு சொல்கிறான் நான் பதில் சொல்லுறன் நீ தலையை தலையை ஆட்டு என்று சொல்லிப்போட்டு நீதிபதியை பார்த்து....! ஐயா நாலு வருடத்துக்கு முந்தி நாங்கள் ஒன்றாய்தான் தொழில் செய்தோம். (மார்க்கண்டு கனகுவிடம், நாய் களவெடுத்ததை எப்படி கௌரவமாய் தொழில் என்று சொல்லுது பார் ).அப்போது இருவரும் சேர்ந்துதான் இந்த ஆட்டுக்கல்லை எடுத்தோம்.பின்பு தொழில் கொஞ்சம் விரிவடைய எங்களுக்குள் பங்கு பிரிப்பதில் சிக்கல் வர ஆரம்பிச்சது.களவெடுக்கிறது ஒரு தொழிலா கேவலம் என்று நான் கஞ்சா விக்க ஆரம்பித்தேன்......! மற்றவன் குறுக்கிட்டு கஞ்சா விக்கிறது மட்டும் சுத்தமாக்கும்.நானும் அது கேவலம் என்றுதான் திருட்டுடன் நின்றேன் என்கிறான்......! இருவரும் புடுங்குபட அவர் மேசையில் சுத்தியலால் அடித்து சைலன்ஸ் என்கிறார்..... மொத்தத்தில் இருவரும் திருடிக்கொண்டும்,கஞ்சா வித்து கொண்டும் இருந்திருக்கிறீர்கள்...... இருவரும் ஒரே சமயத்தில் ஓம் ஐயா என்கிறார்கள்......! ஒவ்வொருவருக்கும் தலா மூன்று வருடங்கள் கடூழிய சிறைத்தண்டனை விதிக்கிறேன் என்று கூற இருவரும் ஒரே குரலில் ஐயா சாதாரணமாய் மூன்று மாதம், ஆறுமாதம் தானே ஐயா தருவீர்கள் ஏன் இப்ப மூன்று வருடம் என்று கேட்க ....ஏதோ மாமியார் வீட்டுக்கு போய் வரமாதிரி அடிக்கடி வந்து போகிறீர்கள்.அதுதான் நான் கொஞ்ச நாளைக்கெண்டாலும் நிம்மதியாய் இருப்பமெண்டுதான்.....ஒடுங்கடா என்று திரத்திப்போட்டு ஆறுமாதம் என்று எழுதுகிறார். (கோர்ட் கலைகிறது). ரவீந்திரன் கனகுவிடம் இவர்களை சிறையதிகாரிகளிடம் ஒப்படைச்சுட்டு ஆட்டுக்கல்லையும் உரியவரிடம் சேர்த்து விடு என்று சொல்ல கனகு போகிறான்.எல்லோரும் தேனீர் குடிப்பதற்காக கலைந்து செல்கின்றனர்.அப்போது ரவீந்திரனின் பின்னால் இருந்து ஒரு குரல் "வக்கீல் வரதனுக்கு இன்று வவுனியா கோர்டில்தான் வேலை.அவர் நேற்று மாலையே அங்கு போய் விட்டார். திடுக்கிட்டு திரும்பினால் நீதிபதி ஈஸ்வரதாசன் அங்கு நிக்கிறார்..... ஐயா நான் என்று ரவி சொல்லுமுன் கையமர்த்திய நீதிபதி, ஒருத்தருக்கு நல்லது நடக்குமென்றால் நாலு ரீல் சுத்தலாம் தப்பில்லை என்று சொல்லி கடந்து போகிறார்.....! ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,, வளரும்.....! (தொடர்ந்து வாசித்து கொண்டும் ஊக்குவித்துக் கொண்டும் வரும் உறவுகளுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.இது மிகவும் பெறுமதியான கதை.எனது வீட்டில் ஆரம்பித்து பாரிஸ் ,ஜெர்மன் என்று சென்று இப்பொழுது லண்டனில் இருந்து எழுதிக்கொண்டிருக்கின்றேன்.வாசகர்களின் விருப்பத்துக்காக).
 36. 2 points
 37. 2 points
  டி.வி குள்ள தண்ணி ஊத்தினது .....!
 38. 2 points
  நன்றி த.கா. ராஜா. எல்லாரும் தனித்தனியே போடாமல் நீங்கள் ஒருங்கிணைத்தால் நல்லம். முடியாவிட்டால் பரவாயில்லை. இது என் கருத்து மட்டுமே.
 39. 2 points
  இது சிறீலங்கா அரசின் திட்டம் ஆனால் மாகாண அரசினூடாக செயற்படுத்தப்படுவதால் ஐங்கரநேசனும் விக்கியரும் தமது திட்டம் போல் மக்களுக்கு அடிச்சு விட்டிருக்கினம். தாராளமாக.... கிளிநொச்சி அம்மாச்சியில் கீரைபுட்டு 60/= விளாம்பழ ஜூஸ் 40/=. 100 ரூபாவுடன் ஒரு நேர சாப்பாடு முடிந்தது. £ 0.43p
 40. 2 points
 41. 2 points
  வெளிநாட்டு வாழ்க்கை பெருமையும் அல்ல, அதே நேரம் கொடுமையும் அல்ல..! நாம் ஒன்றைப் பெற வேண்டுமெனில் மற்றொன்றை இழந்துதான் பெற இயலும். அந்த வகையில் வெளிநாட்டு வாழ்க்கையும் அப்படியே! வேலைக்கான தகுதியிருந்து நேர் வழியில் பொறுமையாக முயன்றால், தக்க வெளிநாட்டு வேலை நிச்சயம் சாத்தியப்படும். ஆனால் பொறுமையின்றி, குறுக்கு வழியில் அல்லது கண்மூடித்தனமான ஆசையில் வெளிநாட்டிற்கு வந்துவிட்டு ஏஜன்ஸிக்காரனையும் வெளிநாட்டு அரசாங்கத்தையும் குறை சொல்லிப் பயனில்லை. எங்கேயுமே 'டிமாண்ட் Vs சப்ளை' தான் தாரக மந்திரம்.. கெடை மாடு மாதிரி 'அடிமாட்டு விலைக்கு வேலைக்கு வர்ரியா..?' என்றால் தலையாட்டிவிட்டு, அயல்நாடு செல்ல வேண்டியது, பின்னர் அங்கே இறங்கியவுடன் "ஐயோ என் தகுதி ஏற்ற வேலை இல்லை..!" என பொலம்ப வேண்டியது சமீபத்தில் ஒரு செய்தி படித்த ஞாபகம் உள்ளது.. 'ஓர் பட்டதாரிப் பொறியாளர், பாலைவனத்தில் ஒட்டகம் மேய்க்கும் வேலை பார்ப்பதாக..!' - இவரின் வேலை தேடிய பின்புலத்தை ஆராய்ந்தால் கதைகள் பல வரும், ஆனால் அவர் அந்த விடயத்தை யாருக்கும் சொல்வதில்லை. இந்த மாதிரி ஊதிப் பெருக்கும் கவர்ச்சி தலைப்புகளை படிக்கும் மக்களும் பின்புலமுள்ள காரணிகளை சிந்திப்பதில்லை.. முன்பு தமிழ்நாட்டில் மொத்தம் 9 பொறியியல் கல்லூரிகள் மட்டுமே இருந்தபோது 90 சதவீத மதிப்பெண்கள் பெற்றாலும் பொறியியலாராக வர முடியாது. ஆனால் இன்று 50 சதவீத மதிப்பெண் பெற்றாலே நீங்கள் பொறியாளர்தான்.. தற்பொழுது தமிழ்நாட்டில் ஏறக்குறைய 600 பொறியியல் கல்லூரிகள் உள்ளன. இந்த குறைந்த மதிப்பெண்களில் அனுமதிபெற்று படித்து வெளிவருபவர்களின் கல்வித்தரம், அறிவுத்திறன் எம்மாதிரி இருக்குமென சொல்லித் தெரிய வேண்டியதில்லை. போட்டிகள் நிறைந்த வேலை சந்தையில் இவர்களுக்கு எப்படி உள்ளூரில் வேலை கிடைக்கும்? ஆகவே இம்மாதிரிப்பட்டவர்களின் அடுத்த குறி, வெளிநாட்டு வேலை வாய்ப்புகளை தேடுவதுதான்..! அனைவருக்கும் தெரியும் மத்தியக்கிழக்கு நாடுகளில் வேலைக்கு நுழைய அதிக நுண்ணிய அளவில் தரக்கட்டுப்பாடு சோதனைகளோ, சரிபார்க்கும் பொறிமுறைகளோ அதிக அளவில் இல்லை என்பது. ஏஜன்ஸிகாரரிடம் "எப்படியாவது என்னை வெளிநாட்டு மண்ணில் இறக்கிவிடுங்கள், அப்புறம் அங்கே சென்றவுடன் தத்தளித்து கரையேறிக்கொள்கிறேன்" என மன்றாடி வந்து அல்லல்படுபவர்கள்தான் அதிகம். இந்த வேலை சந்தையையும், வேலை தேடுவோரின் மனநிலையையும் பயன்படுத்தி பலவிதங்களில் துஷ்பிரயோகம் செய்வதுதான் அதிகம் நடக்கிறது. அதற்கு வேலை தேடுவோரும் ஒத்துழைக்கின்றனர். சரியான முறையில், தகுதிக்கேற்ற வேலையை நாடி, வேலையையும், அதைக் கொடுக்கும் நிறுவனத்தையும் பற்றி முழுமையாக விசாரித்துவிட்டு, கிடைத்திருக்கும் விசா மற்றும் வேலை நிபந்தனைகளை படித்து சரிபார்த்துவிட்டு வெளிநாடு சென்றால் வெளிநாட்டு வேலை நிச்சயம் நிம்மதியானதே..!
 42. 2 points
 43. 2 points
  கன்னியாகுமரி நுங்கு சர்பத்..
 44. 2 points
  என்னங்க இது, 'சர்பத்' இந்தக் கலர்ல இருக்கு..? எங்க ஊர்ல ஆரஞ்ச் கலர்லதான் இருக்கும்...!
 45. 2 points
  நாம் தமிழர் கட்சிதான் வரணும்.. சீமானுக்கு மொத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் சேர்ந்து ஆதரவு..! சென்னை: லோக்சபா தேர்தல் மற்றும் தமிழக சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட உள்ள நாம் தமிழர் கட்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளித்துள்ளது.லோக்சபா தேர்தல் வரும் ஏப்ரல் 11ம் தேதி துவங்குகிறது. ஏப்ரல் 18ம் தேதி தமிழகத்தில் லோக்சபா தேர்தல் நடக்கிறது. இதனுடன் 18 தொகுதிகளுக்கான சட்டமன்ற இடைத்தேர்தல் நடக்க உள்ளது.இந்த இரண்டு தேர்தலிலும் நாம் தமிழர் கட்சி போட்டியிட உள்ளது. ஆனால் நாம் தமிழர் கட்சி இதுவரை யாரிடமும் கூட்டணி வைக்கவில்லை என்பதால் பெரும்பாலும் தேர்தலில் தனித்து போட்டியிட உள்ளது. இந்த நிலையில்தான் நாம் தமிழர் கட்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு அளித்துள்ளது. தமிழர் தேசிய ஆதித்தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் அ.வினோத், மருது மக்கள் இயக்கத் தலைவர் செ.முத்துப்பாண்டியன் விடுதலைக் கழகத் தலைவர் ஆ.கி.ஜோசப் கென்னடி, தமிழர் நலப் பேரியக்கத் தலைவர் மு.களஞ்சியம், ஆகியோர் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமானை சந்தித்து தங்களது ஆதரவை தெரிவித்தனர். நாம் தமிழர் கட்சிக்கு தமிழர் தேசிய விடுதலைக் கழகம், ஆதித்தமிழர் விடுதலை இயக்கம், தமிழர் நலப் பேரியக்கம், மருது மக்கள் இயக்கம், இஸ்லாமிய மக்கள் இயக்கம், புரட்சிகர கம்யூனிஸ்ட், இந்திய சுதந்திரா கட்சி, தமிழ்த் தேசிய மக்கள் கழகம், தாத்தா இரட்டைமலை சீனிவாசனார் பேரவை, இசுலாமிய சேவை சங்கம், தமிழக இளைஞர் முன்னணி, தமிழக மீனவர் முன்னணி, தமிழக இளையோர் எழுச்சிப் பாசறை, தமிழ் மீனவர் கழகம், கிருத்துவ மக்கள் மன்றம், வீரத்தமிழர் விடுதலைப் பேரவை, விடிவெள்ளி மக்கள் இயக்கம் ஆகியவை ஆதரவு அளிப்பதாக முடிவெடுத்துள்ளது ஒரே கட்டமாக நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் அனைத்து தொகுதிகளிலும் போட்டியிடும் நாம் தமிழர் கட்சிக்கு ஆதரவு அளிப்பதோடு தேர்தல் பணிகளிலும், பிரச்சாரத்திலும் ஈடுபட போவதாக தெரிவித்துள்ளது. https://tamil.oneindia.com/news/chennai/tamil-national-alliance-supports-naam-tamilar-party-lok-sabha-elections-344319.html
 46. 2 points
  ....................(15). அன்று இரவு கடற்கரையில் சில காவலர்களை தூரத்தில் மறைந்திருக்க சொல்லி விட்டு அவரும் வேலுவுமாக கடலுக்கு கிட்டவா போய் படகு மறைவில் இருக்கிறார்கள்.மார்க்கண்டுவும் இன்று நல்ல மூடில் இருந்ததால் போனில் தெரிந்தெடுத்து பாடல்களை போட்டு இருவரும் ரசித்து கொண்டிருக்கிறார்கள். அண்ணை கடத்தல் காரங்கள் துவக்கு வைத்திருப்பாங்களோ... ஓமடா வேலு, அதுக்கு நீ பயப்படுறியே, இஞ்ச பார் என்னட்டையும் இருக்கு. அவனும் சுட்டால் நானும் சுடுவன்..... நீங்கள் சுடுவீங்கள் அண்ணை உங்களிட்டை துவக்கு இருக்கு. ஆனால் என்னட்டை துவக்கு இல்லையே. இஞ்ச பிறகும் நீ பயப்படுறாய் போல..... சீச் சீ......! "தரைமேல் பிறக்க வைத்தான் " முடிந்து "அதோ அந்த பறவைபோல" தொடங்க தூரத்தே படகு ஒன்று வந்து நின்று வெளிச்சத்தில் சிக்னல் போடுது.மார்க்கண்டும் அவசரமாக போனை எடுக்க பாட்டு தானாய் நிக்குது, லைட் வரவில்லை. என்னடா கோதாரி.... இது சார்ஜ் போயிட்டுது போல....கையால் தட்டி தட்டி பார்க்கிறார் ஒண்டும் சரிவரவில்லை......! நாலு வட்டம் அடித்து விட்டு படகு வேகமாக திரும்பி செல்கிறது. எண்ணெண்னை இப்படி பண்ணிபோட்டீங்கள்.வேலு கேட்கிறான். நான் என்னடா செய்ய, சமயத்தில இது காலை வாரி விட்டுட்டுது, அப்பவும் ரவீந்திரன் டார்ச்லைட் தந்தவன்.சே....நான்தான் வேண்டாம் என்றிட்டு வந்திட்டன். எக்கணம் திட்டப் போறான்.டேய் வேலு ஒருத்தருக்கும் சொல்லிப் போடாதையடா. சரிண்ணே நான் ஒருத்தருக்கும் சொல்ல மாட்டன்.. அப்போது வேலுவின் போன் அடிக்கிறது.வேலுவும் எடுத்து, சரியடி செல்லம், இஞ்ச கஞ்சா வந்த படகை மார்க்கண்டு அண்ணை பிடிக்காமல் போக விட்டுட்டார். நான் வரேக்க உனக்கும் பிள்ளைகளுக்கும் மட்டன் கொத்து ரொட்டி வாங்கி வாறன். இரவுக்கு நீ இடியப்பம் ஒண்டும் செய்ய வேண்டாம்......! டேய் வேலு அப்போது உன்ர போனை தந்திருக்கலாம் தானேடா.....! வேலு யோசித்து, அது பல்ப் சுட்டுடுட்டுது அண்ண......சரி ...சரி வாடா ஸ்டேசனுக்கு போவம்......! அண்ணை இவங்களை அனுப்பிட்டு நாங்கள் டவுனுக்கு போய் நாங்களும் சாப்பிட்டுட்டு கொத்துரொட்டி கட்டிக்கொண்டு போகலாம் என்கிறான். உனக்கு நல்ல மனசுடா.......ஓமண்ணை ஆனால் நான் டூட்டிக்கு வரும் பொது பர்ஸ் கொண்டு வாறதில்லை.....! எமகாதகண்டா நீ என்னிடமே உன்ர வேலையை காட்டுறாய் என்று மார்க்கண்டு சொல்ல , இதை வைத்தே ஒரு வருடம் ஒட்டிடலாம் என்று வேலு கணக்கு பண்ணுறான்.....! ஒரு சிறிய மண்டபத்தில் கனகு பத்மா திருமணம் எளிமையாக நடைபெறுகின்றது.அப்படி இருந்தும் அங்கு மண்டபம் கொள்ளாத சனம். சுவையான விருந்து.ஆனால் சாப்பாடு பத்தாமல் போய் விட்டது.ரிஷப்சன் எல்லாம் முடிந்து எல்லோரும் புறப்படும் நேரம் ரவீந்திரனும் ஆரவ்வும் வந்து மணமக்களிடம் விடை பெற்றுக்கொண்டு வருகின்றார்கள். ஒரு இலக்கில்லாமல் ஜீப்பில் வரும்போது ஆரவ் அவனிடம் என்ன திடீரென்று கனகுவும் பத்மாவும் திருமணம் செய்து விட்டார்கள்.முன்பே காதலித்து கொண்டிருந்த மாதிரியும் தெரியவில்லையே என்கிறான். அதுக்கு ரவியும் நம்ம மார்க்கண்டுதான் இந்தத் திருமணத்தை பேசி செய்து வைத்திருக்கிறார்.பத்மாவின் அப்பாவும் அவரும் க்ளோஸ் பிரண்ட் தெரியுமா என்கிறான்....ம்...எமக்கு யார் வந்து பேசி செய்து வைக்க போகினம் என்று பெரு மூச்சு விடுகிறான்.......! ஏன் ரவி நீ யாரையாவது விரும்பிறியா ......! அப்படி என்று இல்லை, கொஞ்சநாளா காஞ்சனாதான் மனசை டிஸ்ட்டர்ப் பண்ணுறாள்......அவள் நிக்கும் இடங்கள் எல்லாம் ரவுண்ட் அடித்து பார்த்தேன்.கண்ணிலேயே காணக் கிடைக்கேல்ல....... நீ யாரையாவது விரும்பிறியாஎன்று ஆரவ்வைப் பார்க்கிறான்........! எனக்கும் பெரிசா அப்படி ஒன்றும் இல்லை.....ஆனால் அன்று மரியாவுடன் நெருக்கமானதில் இருந்து, ஒரு அப்பாவிப் பெண்ணின் மனசைக் கெடுத்து விட்டோமோ என்று அப்பப்ப தோன்றுது.......! என்று சொல்லிக்கொண்டு வரும்போது ஜீப் ஸ்ரான்லி வீதியால் வருகின்றது.எல்லா இடங்களிலும் சுவர்களில் ஒரு புதுமையான விளம்பரம் தென்படுகின்றது. "ஏன்ஜல்ஸ் சேவை மையம்" ஒரு வட்டத்துக்குள் விரல்களில் வெற்றிக்குறி காட்டியபடி ஒயிலாக நெளிந்து ஒருவர் டிக்கியில் ஒருவர் இடித்தபடி சிரித்துக் கொண்டு மவுண்ட் லிவினியா தென்னை போல் போஸ் குடுக்கிறார்கள் காஞ்சனாவும் மரியாவும்..... இருவரும் அதைப் பார்த்து ஒரு நிமிடம் ஸ்தம்பித்துப் போனார்கள். அதில் இருக்கும் விலாசத்தை போனில் உள்வாங்கி கூகுளில் பார்க்கிறான் ஆரவ். அதில் கேட்டரிங், இன்டீரியர் எக்ஸ்டீரியர் டெக்கரேஷன்ஸ், மணப்பெண் அலங்காரம், புகைப்படம் வீடியோ எடுத்தல், என்று எல்லாவற்றுக்கும் எங்களுடன் தொடர்பு கொள்ளவும் என்று இருக்கு. விலாசம் தெரிவித்த இடத்துக்கு இருவரும் போகிறார்கள். ஒரு கட்டிடத்தின் மாடியில் ஒரு அறை எடுத்து நவீனமயமாக அலங்கரித்து உள்ளே பர்னிச்சர்ஸ் போட்டு இருவரும் போனில் பிஸியாய் பிஸினஸ் செய்து கொண்டு இருக்கிறார்கள். வாசலில் காஞ்சனாவின் தந்தை வாட்ச்மேனாக ஸ்டூலில் இருக்கிறார். போலிஸைக் கண்டதும் எழுந்து மரியாதையாக ஒதுங்கி நிக்கிறார். கதவை தட்டி விட்டு "எஸ் கமிங்" என்ற குரல் வந்ததும் தள்ளிக்கொண்டு உள்ளே போகின்றார்கள் ரவீந்திரனும் ஆரவ்வும். இவர்களைக் ஒன்றாய் கண்டதும் சந்தோசமாய் இருவரும் எழுந்து நின்று வரவேற்கிறார்கள்.ஓரத்தே ஓரளவு வெட்கமும் ஒட்டிக் கொண்டிருக்கு......! உங்களை இப்படிப் பார்க்க சந்தோசமாய் இருக்கு. நீங்கள் விளம்பரம் குடுத்தபடி இவ்வளவு வேலைகளும் உங்களுக்கு தெரியுமா என்று கேட்கிறான்.....! இல்லை எல்லாம் ஆன்லைனில் ஆட்களைப் பிடித்துத்தான் செய்கிறோம். என்று மரியா சொல்ல, இப்ப குடாநாட்டிற்குள்தான் செய்கிறோம்.நாங்கள் எதிர்பார்த்ததைவிட பிஸினஸ் நன்றாகப் போகுது. விரைவில் நாடு பூராவும் விஸ்தரித்து விடுவோம்.என்கிறாள்.அப்போது அங்கு ஒரு காவலர் வருகிறார். இவர்களைக் கண்டதும் மரியாதையாக வணக்கம் சொல்லி விட்டு காஞ்சனாவிடம் ஒரு காசோலையை குடுத்து விட்டு செல்கிறார். இது இன்று ஒரு போலீஸ்காரரின் திருமணம், அதற்கு மண்டப அலங்காரம், அய்யர், விருந்து எல்லாமே நாங்கள்தான் ஏற்பாடு செய்தோம்.அந்த காசோலைதான் இது என்கிறாள்......! ஓக்கே பெஸ்ட் ஒவ் லக் என்று ரவி திரும்ப ஆரவ் கதைப்பம்டா மச்சான் என்று மெதுவாய் சொல்கிறான். இப்ப வேண்டாம்டா......! மரியா குறுக்கிட்டு சார் இப்ப நாங்கள் அந்த கஞ்சா விக்கிற வேலை எல்லாம் செய்யிறேல்லை.ப்ராமிஸ் என்கிறாள். ஆரவ்வை பார்த்து நீங்களும் போலீசா என்று ஆச்சரியத்துடன் கேட்கிறாள்....! ஓம் என்ற ஆரவ், நாங்களும் சில நாளாய் ஒரு விடயம் கதைக்க உங்களை தேடினோம் காணவில்லை அதுதான் இப்ப சொல்லலாமா என்று யோசிக்கிறோம்.....! ஏதுவாய் இருந்தாலும் சொல்லுங்கள் என்று காஞ்சனா சொல்கிறாள்......! நான் நேராகவே விடயத்துக்கு வருகிறேன், நீங்கள் இருவரும் விரும்பினால் உங்களை நாங்கள் திருமணம் செய்யலாம் என்று விரும்புகின்றோம் என்ன சொல்கின்றிர்கள் என்கிறான்......! நாங்களும் இதைப்பற்றி நிறைய கதைத்துவிட்டோம். நீங்கள் போலீஸ், நாங்கள் கஞ்சா விற்பவர்கள்.உங்களுடைய தகுதிக்கு இது சரி வராது என்றே நினைத்தோம்.இருந்தாலும் ஒரு நப்பாசை கஞ்சாத் தொழிலை விட்டுட்டு ஓரளவாவது உங்களுக்கு ஏற்றாற் போல் எங்கள் தகுதியை உயர்த்தவேண்டும் என்றுதான் இந்தத் தொழிலையே ஆரம்பித்தோம்.என்று சொன்னாள் காஞ்சனா....! காஞ்சனா கதைத்துக் கொண்டிருக்கும் போதே பக்கத்தில் இருந்த விருந்தினர் அறை வாசலில் நின்று கண்ணசைவால் ஆரவ்வை உள்ளே மரியா அழைக்க அவனும் அங்கு நழுவிப் போகிறான்.உள்ளே வந்தவனை சேர்ட் பட்டனுடன் கொத்தாக பிடித்து இழுத்து முத்தமிட்டபடியே பின்புறமாக நகர்ந்து போய் சோபாவில் மல்லாக்க விழ ஆரவ்வும் பேலன்ஸ் தவறி இரு கைகளாலும் அவள் இடையை இறுக்கி அணைத்தபடி அவள்மேல் சரிகிறான்.........! இயல்பாய் காஞ்சனாவின் அருகே வந்த ரவீந்திரன் மென்மையாய் அவள் தோளையும் இடையையும் தன்னுடன் சேர்த்தணைத்து இதழுடன் இதழ் சேர்த்து பின் விலகுகின்றான்........! சிறிது நேரத்தின்பின் நண்பர்கள் இருவரும் புறப்படத் தயாராகின்றார்கள். அப்போது ஆரவ் அவர்களிடம் எங்களுடைய திருமணத்துக்கும் நீங்கள்தான் சகல ஒழுங்குகளும் செய்ய வேண்டும். இன்று நடந்த திருமணத்தை விட பத்து மடங்கு கூட்டம் நாடு முழுதும் இருந்து வந்து சேரும்.அதற்கேற்றாற் போல் பெரிய மண்டபம் பிடியுங்கள். சாப்பாடு இன்று போல் பத்தாமல் போகக் கூடாது.....! எல்லாவற்றையும் நாங்களே செய்தால் நீங்கள் என்ன செய்வீங்கள் என்று காஞ்சனா கேட்க, அவன் ஆரியகுளத்தில் காஞ்சூண்டி சேகரித்து கொண்டு வருவான் என்று ரவீந்திரன் சொல்ல எல்லோரும் சிரிக்கிறார்கள். ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,வளரும்.....!
 47. 2 points
  மன்னித்துப் பார் வளங்கள் பலவும் பெருகும் வாழ்வின் அர்த்தங்கள் புரியும் மன்னித்துப் பார் இறுகிக் கிடக்கும் பாறையென இதயம் கனத்துக் கிடக்கிறதா? பனியாய் உருகி பாசத்ததைப் பகிர்ந்திட மன்னித்துப் பார் ஏழு தரமல்ல எத்தனை தரம் வேணுமென்றாலும் மன்னித்துப் பார் மனிதம் புனிதமடையும் மரணம் கூட மகத்தானதாய் அமையும் மலரைப்போல மனம் மென்மையடையும் மன்னித்துப் பார் இறுக்கங்கள் தளரும் இதழ்களில் புன்னகை அரும்பும் பேச்சினில் இனிமை கூடும் அணைப்பினில் அன்பு பெருகும் மன்னித்துப் பார் மகிழ்வான தருணங்கள் மனதை வருடும் புலரும் பொழுதுகள் கூட புன்னகை பூக்கும் மன்னித்துப் பார் மன அழுக்குகள் அனைத்தும் அகன்றே போகும் சினம் சீற்றம் எல்லாம் விலகியே ஓடும் மன்னித்துப் பார் பாலைவன வாழ்க்கை பசும் சோலைவனமாய் மாறும் வாழ்க்கையை ரசிக்கவும் ருசிக்கவும் விடைபெறவும் வேண்டுமா மன்னித்துப் பார் புகைபோல மறையும் பகை வாழ்க்கையை வளமாக்கும் சாபங்களைத் தூரமாக்கும் மன்னித்துப் பார் மன்னிப்பதால் நட்டமில்லை மனம் இறுகிக் கிடப்பதோ எவருக்கும் இஸ்டமில்லை ஆமை ஓட்டுக்குள் அடங்கிக் கிடப்பது போல் அன்பை அகந்தைக்குள் அடக்குவதால் பயனென்ன? அன்பெனும் கரங்களை அகலத் திறந்து பண்பெனும் பாதையில் பாசமுடன் நடக்கலாம் மன்னித்துப் பார் விரிசல்களும் வேதனைகளும் விலகிப் போக வேண்டுமா உறவுகளுள் உரிமையுடன் நேசிப்பு வேண்டுமா மன்னித்துப் பார் பழிக்குப் பழி என்றும் இரத்தத்திற்கு இரத்தமென்றும் பகைமை உணர்வுகள் பண்பினை அழித்து விடும் விட்டுக் கொடு தட்டிக் கொடு கரம் குலுக்கு கட்டி அணை துன்பத்தில் துணைகொடு இன்பத்தில் பங்கெடு பாசத்தைப் பகிர் புன்னகையை வரமாக்கு புறம் பேசுவதை நிறத்து பண்பாகப் பழகு இனம் மதம் இல்லாது செய் அன்பில்லாத மனம் என்று ஏதுமில்லை அன்பால் ஆளுமை செய் மன்னிக்கும் மனம் மட்டும் இருந்து விட்டால் உலகில் போர் பஞ்சம் பகை ஏழ்மை என்ற அனைத்தும் அகன்று விடும் மனச் சாளரங்களைத் திறந்து மழலைகள் போல் மனம் தூய்மைபெற வேண்டுமா மன்னித்துப்பார் மன்னிப்பது போல் ஒரு மருந்தில்லை பகை மறப்பது போல் ஒரு வரமில்லை. மன்னித்துப் பார்
 48. 2 points
  மேற்படி எழுச்சி பேரணி இலங்கையில் வசிக்கும் மக்களால் நடத்தப்பட்டுள்ளது. ஜீவன் சிவா நீங்கள் இலங்கையில் வசிக்கிறீர்கள். உங்களுக்கு இப்படியான பேரணி பிடிக்காவிட்டால் அங்கு மக்களை மற்றும் ஏற்ப்பாட்டாளரைச் சந்தித்து எனக்கு இது பிடிக்கவில்லை ஆகவே இதனை நடத்தவேண்டாம் என்று கூறி அதை தடுத்து நிறுத்த இலகுவான வழி இருந்தும் அதை விடுத்து இங்கு வந்து வெட்டித தனமாக பேரணியுடன் எந்த தொடர்பும் அற்ற புலம் பெயர்ந்ந்து வாழ்பவர்களுடன்இது பற்றி முட்டி மோதி தேவையில்லாமல் பொழுது போக்கு விவாதம் நடத்திவது ஏன் ?
 49. 2 points
  ....................(12). காலையில் நீதிமன்றம் மிகவும் ஆரவாரத்துடன் நடந்து கொண்டிருக்கு. வழக்கமான மாமூல் வழக்குகளை பொடி கூடப் போடாமல் சடுதியாய் தீர்ப்புகள் குடுத்து கொண்டிருக்கிறார் நீதிபதி ஈஸ்வரதாசன். ரவீந்திரன் கனகு மார்க்கண்டு மற்றும்பல போலீஸ்காரர்கள் ஒரு ஓரமாய் நிக்கின்றார்கள். அடுத்து ஒரு வழக்கு வருகின்றது. வாதியின் கூண்டில் நிற்பவர் வசதியானவர் போல் இருக்கிறார். எதிர்க் கூண்டில் ஒரு பெண்மணி நிக்கிறாள்.அவளது இரண்டு பெண் பிள்ளைகள் பார்வையாளர்களுடன் சோகமாய் நிக்கின்றனர். பிரபலமான அந்த வக்கீல் எழுந்து வந்து தனது தரப்பை எடுத்துரைக்கிறார். அந்த வக்கீலை பார்த்ததும் நீதிபதிக்கு புரிந்து விட்டது. அவர் தில்லு முள்ளு செய்பவர்களுக்காகவே வாதாடுபவர்.ஆனால் என்ன அவரின் வாதத்தையும் சாட்சிகளையும் உடைத்து தீர்ப்பு சொல்வது மிகவும் சிரமம்.மிகத் திறமைசாலி.எல்லாவற்றையும் துல்லியமாய் கோர்த்து கொண்டுவந்து வாதாடுவார்.....! கனம் நீதிபதி அவர்களே என்று ஆரம்பித்து, எனது கட்சிக்காரர் தாமோதரத்தின் எல்லையில் உள்ள பயன்தரும் மரங்களான வேம்பு, புளி, இலுப்பை போன்ற மரங்களின் பயனை எல்லாம் இதோ இங்கு நிக்கும் இந்தப் பெண் கேட்டு கேள்வி இல்லாமல் களவெடுத்து அனுபவிக்கிறாள்.இனிமேல் அவர் அப்படி செய்ய கூடாது என்றும், இதுவரை செய்ததற்கு தண்டனை வழங்குமாறும் தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றேன் என்று சொல்லி விட்டு திமிராக சென்று அமர்ந்து கொள்கிறார். நீதிபதி அந்தப் பெண்ணைப் பார்த்து, என்னம்மா நீ என்ன சொல்கிறாய்.உன்னுடைய வக்கீல் எங்கே என்று கேட்கிறார். எனக்கு வக்கீல் யாரும் இல்லை ஐயா, அதுக்கு எனக்கு வசதியும் இல்லை. மரங்கள் அவருடைய வளவுக்குள்தான் நிக்கின்றன.ஆனால் நான் எனது வளவுக்குள் விழும் பொருட்களைத்தான் சேகரித்து விற்று வாழ்க்கை நடத்துகின்றேன்.....! உனது கணவர் என்ன செய்கிறார். பிள்ளைகள் இருக்கா.....! வீட்டில் இருந்த எனது கணவரை இராணுவம் பிடித்து கொண்டு போனது.தேடிப்பார்த்து ஓய்ந்து விட்டேன், இருக்கிறாரா இல்லையா என்றும் தெரியாது. இரண்டு பொம்புளைப் பிள்ளைகள் என்று சொல்ல அந்தப் பிள்ளைகள் இருவரும் எழுந்து நிக்கின்றார்கள். நீங்கள் என்னை சிறைக்கு அனுப்புவதென்றாலும் எனக்கு சம்மதம்.ஆனால் ஒரு விண்ணப்பம்.......! இங்கு நீ உன்னுடைய நியாயத்தைத்தான் சொல்லலாம்.ஆனால் நீ தீர்ப்பு எழுத முடியாது.என்ன விண்ணப்பம் சொல்லு.....! நான் சிறைக்கு போனால் என்ர பிள்ளைகளுக்கு வேறு நாதியில்லை.அதனால் அவர்களையும் என்னுடன் சேர்த்து அனுப்பும்படி தாழ்மையுடன் கேட்கின்றேன். (பார்வையாளர் பகுதியில் ஒரே சலசலப்பு.எங்கிருந்தோ ஒரு செருப்பு வந்து தாமோதரன் மேலும்,இன்னொன்று வக்கீல் மேலும் விழுகுது..... மத்தியானம் ஆனதால் கோர்ட்டை கலைத்து விட்டு எழுந்து போகின்றார் ஈஸ்வரதாசன்). அந்தக் காண்டீனில் அவரவரும் தத்தமது ஆட்களுடன் தனித்தனி மேசைகளில் இருந்து சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பெரிய அதிகாரிகளுக்கான கிரீன் தடுப்பில் சில அறைகளும் இருக்கின்றன. ஒரு மூலையில் அந்தப் பெண்ணும் பிள்ளைகளும் இருந்து தேநீரும் பானும் சாப்பிடுகினம். பக்கவாட்டில் ஐந்தாறு மேசை தள்ளி வக்கீலும் தாமோதரனும் இருந்து பிரியாணி சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். அப்போது அங்கு ரவீந்திரன் வருகின்றான்.அவனை தாமோதரன் தனது மேசைக்கு அழைக்கிறார்.அங்கு தனது நண்பரைக் கண்டதும் வக்கீல் எழுந்து செல்கிறார். அந்த கதிரையில் ரவீந்திரன் அமருகின்றான். என்ன சாப்பிடுகிறீர்கள் என்று தாமோதரன் கேட்க.... ஒன்றும் வேண்டாம் இப்போதுதான் சாப்பிட்டேன்.....! (ஏற்கனவே தாமோதரனை ஒரு பெரிய இக்கட்டில் இருந்து ரவீந்திரன் காப்பாற்றி இருந்தான். அந்த நன்றியும் மரியாதையும் எப்போதும் அவருக்கு அவனிடம் இருக்கு). எனது வழக்கை கவனித்தீர்களா...... ம்.....பார்த்தேன்.....! என்ன நினைக்கிறீர்கள்........! அநேகமாய் தீர்ப்பு உங்களுக்கு சாதகமாய்தான் வரும் என்று நினைக்கிறன்.....! நினைக்கிறதென்ன வரும், வர வேணும் அதற்குத்தானே இந்த வக்கீலை கொழும்பில் இருந்து விமானத்தில் வரவழைத்திருக்கிறேன்.......! நான் ஒன்று சொன்னால் குறை நினைக்க மாட்டிர்களே.......! என்னையும், என் மரியாதையையும் காப்பாற்றியவராச்சே நீங்கள். உங்களைப் போய் .....சொல்லுங்கள்.....! அந்தப் பெண் தனது வளவுக்குள் இருந்துதானே பொருட்களைப் பொறுக்குகிறாள், அதில் உங்களுக்கு என்ன பிரசிச்னை........! பிரச்சினை ஒன்றும் இல்லைத்தான் ஆனால் ஒரு ஏழைப் பரதேசி எப்படி எனது மரங்களின் பழங்களையும் பயன்களையும் எடுக்கலாம். என் கௌரவம் என்னாவது......! இண்டைக்கு உங்களின் கௌரவத்தை அந்த பெண்தான் காப்பாற்றி இருக்கிறாள் தெரியுமா.....! என்ன சொல்கிறீர்கள் ........விளக்கமாய் சொல்லுங்கள்......! இன்று காலையில் இந்த கோர்ட் வளாகத்தில் நடந்ததை சொல்கிறேன்.அப்புறம் நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்..... காலையில் அவவும் பிள்ளைகளும் சோகமாக அந்த மரத்தடியில் நிக்கிறார்கள்.நான் போய் என்ன விஷயம் என்று கேட்க பெரியபெண் எல்லாவற்றையும் சொல்கிறாள். நான் அதுக்கு உங்களுக்கு யாராவது வக்கீல் ஒழுங்கு செய்து தரவா என்று கேட்கிறேன்....அந்த அம்மா சொல்கிறா அவர்கள் கொழும்பில் இருந்து பெரிய வக்கீல் எல்லாம் அழைத்து வந்திருக்கினம் என்று.அப்போது அங்கு வக்கீல் வரதன் வருகிறார். உடனே தாமோதரன் குறுக்கிட்டு வக்கீல் வரதனா வில்லங்கம் பிடித்த ஆளாச்சே, அவன் யாரையும் மதிக்க மாட்டான் காசையும் மதிக்க மாட்டான்....... ! (வக்கீல் வரதன் ஒரு வழக்கில் வாதாட வந்தால் பத்திரிக்கை நிருபர்கள் குவிந்து விடுவார்கள்.எதிராளியை எவ்வளவு முடியுமோ அவ்வளவு கேவலப்படுத்தி விடுவார்.வழக்கின் வெற்றி தோல்வி பற்றி அலட்டிக்க மாட்டார். மிச்சத்தை பத்திரிகைகளே காது, மூக்கு வைத்து எழுத விற்பனை எகிறும்.அதனால் பெரும் புள்ளிகளுக்கு அவர் சிம்ம சொப்பனம்). ஓம் அவரேதான், எனக்கு அப்போது நீங்கள்தான் எதிர்தரப்பு என்று தெரியாது.தெரிந்திருந்தால் நான் பேசாமல் போயிருப்பேன்...... பிறகு சொல்லுங்கோ.....! அவரிடம் வழக்கை சொல்ல அவரும் பிள்ளைகளை அங்கால போய் விளையாடுங்கோ என்று அனுப்பிட்டு சொன்னார்,அம்மா நீங்கள் ஒரு வார்த்தை சொல்லுங்கள் அத்துமீறி வீட்டுக்குள் வந்து பலாத்காரம் செய்ய முயற்சித்தார் என்று.... அது போதும்.எந்தக் கொம்பன் எதிர் வக்கீலாய் இருந்தாலும் சரி ஒரு கை பார்த்துடலாம் என்கிறார்...... தாமோதரனுக்கு வேர்க்குது. பிறகு என்ன நடந்தது என்கிறார்.....! அப்ப அந்த அம்மா சொல்லிச்சுது நானே திகைத்திட்டன்...... அப்படி என்ன சொன்னா....! தாமோதரம் ஐயா கோபக்காரர்தான் ஆனால் அந்தமாதிரி ஆள் இல்லை. அவர் காவல்தெய்வம்போல பக்கத்தில் இருப்பதனால்தான் நானும் இந்த குமருகளை வைத்து கொண்டு கௌரவமாய் சீவிக்கிறன்.இல்லையெண்டால் தெருவில போறவன் வாறவன் எல்லாம் வீட்டுக்க வரப்பார்ப்பான்.இது இல்லாட்டிக்கு நான் வேற வேலை பார்த்துட்டு போவன். அவரின் மரியாதை கெட்டாலோ சிறைக்கு போனாலோ அவற்ர பொண்டில் பிள்ளைகளும் எங்களைப் போல்தான் சீரழிய வேண்டும்.அவர்தான் கோபக்காரர். அவர் மனைவி ரொம்ப நல்லவர். எங்களுக்குள் நல்ல நட்பு இருக்கு. என்கிறா. வரதனும் பேசாமல் போயிட்டார்..... இப்ப சொல்லுங்க....யாருடைய கௌரவத்தை யார் காப்பாத்தினது.....! அவரும் சமாளித்து கொண்டு, இல்ல தம்பி நானும் அவ வக்கீல் எல்லாம் வைத்து எதிர்த்து நிப்பா என்றுதான் நினைத்தன் ஆனால் அவ தன்னையும் பிள்ளைகளையும் சிறையில் போடும்படி சொல்லும்போதே நான் உள்ளுக்க உடைஞ்சிட்டன். இப்போ நீங்கள் சொல்லத்தான் தெரியுது அவ என்மீது இவ்வளவு மரியாதை வைத்திருக்கிறா என்று.....வேண்டாம், தீர்ப்பு எப்படியோ போகட்டும் தம்பி இனி நான் அந்த அம்மா வழியில குறுக்கிட மாட்டன்.இனி அவர்கள் என் வளவுக்குள்ளும் வந்து பொறுக்கட்டும். என் நல்ல நேரம்தான் உங்களை நான் இப்ப சந்திச்சது. ஐயா அவர்களுக்கு அதுதான் வாழ்வாதாரம்.நீங்கள் சும்மா குடுக்க வேண்டாம். ஏதாவது வாங்கிக் கொண்டு கொடுங்கள்.....! என்ன தம்பி நீர்....அவர்களால் எனக்கு என்ன தர முடியும்... இதோ இந்த வக்கீலுக்கு நான் குடுக்கிற காசு அவர்களுக்கு ஐந்து வருடத்துக்கு சும்மா இருந்து சாப்பிட காணும்.அவர்களிடம் நான் வாங்கிறதாவது. இல்லை ஐயா அப்படி சொல்லாதீர்கள்."சிறு துரும்பும் பலுகுத்த உதவும்" என்று சொல்ல அருகே ஈக்கிலால் பல்லு குத்திக் கொண்டிருந்தவர் எழுந்து அப்பால் செல்கிறார். எனக்கு என்ன என்று சொல்லத் தெரியவில்லை நீங்கள்தான் அவவுக்கு பக்கத்து வீட்டுகாரர்.நீங்களே யோசித்து பாருங்கள். இவர்களின் உரையாடலை கவனித்தபடி ஸ்கிரீன் அறைக்குள் சாப்பிட்டுக் கொண்டிருந்தவர் தனக்குள் சிரித்து கொள்கிறார்.....! கோர்டில் எல்லோரும் பழையபடி அந்தந்த இடங்களில் இருக்கிறார்கள். நீதிபதி ஈஸ்வரதாசன் தீர்ப்பை சொல்லுகிறார்..... அவர்கள் தமது வளவுக்குள் வரும் பயன்களை எடுத்து அனுபவிக்கலாம்.....! கொழும்பு வக்கீல் கதிரையில் இருக்கிறார்.அவரின் உதவியாளர் மட்டும் எழுந்து குறுக்கிட்டு என் கட்சிக்காரர் மரங்களை வெட்டி விட்டால் என்று சொல்ல ....! வெட்டி பாரும் ....எல்லாரையும் தூக்கி உள்ளுக்கு போட்டிடுவன். முன்தினமாதிரி உங்கட இஷ்டப்படி மரங்களை வெட்டேலாது தெரியுமோ அதுவும் பயன்தரும் மரங்கள். அதததுக்கு சில நடைமுறைகள் இருக்கு.இப்பவெல்லாம் மாநகரசபை மரம் வெட்ட அனுமதி கொடுப்பார்கள் என்று நான் நினைக்கேல்ல.....! அப்ப கிளைகளை வெட்ட அனுமதி தேவையில்லைதானே......! தேவையில்லைதான் தாமோதரத்தை உற்று பார்த்தபடி சொல்கிறார் அது அவசியமா என்பதை அவர் தீர்மானிக்கட்டும்.....! ..................வளரும்.......!
 50. 2 points
  பிள்ளைகளும் யந்திரகதியில் வாழும் வாழ்க்கையை தேர்ந்தெடுத்து விட்டார்கள், அவர்கள் மீதும் தவறில்லை.இன்றைய வாழ்க்கை முறை அப்படி அமைகிறது. நாங்கள்தான் அனுசரித்து போகவேணும்.வேறு வழியில்லை.....கசப்பாய் இருந்தாலும் உண்மையான கதை சகோதரி.......!