தந்தை செல்வா ஒன்றுபட்ட இலங்கையில் சிறுபான்மையினம் தமது குறைந்த பட்ச உரிமைகளை பேண முடியாது எனும் நிலையிலேயே தனிநாட்டு கோரிக்கையினை முன்வைத்தார் என நினைக்கிறேன் (சரியாக நினைவில்லை), தற்போதும் ஒப்பீட்டளவில் இந்தியாவில் இருக்கும் அரசியலமைப்புடன் ஒப்பிடும் போது மிகவும் இலங்கை அரசியலமைப்பு மிகவும் பிந்தங்கிய ஒரு அரசியலமைப்புச்சட்டம். இலங்கை அரசியலமைப்பில் சிறுபான்மை சமூகத்திற்கு பாதுகாப்பில்லை, ஒரு நீண்ட கால போரின் பின்னர் கூட அவர்கள் அதனை மாற்றும் எண்ணம் கூட இல்லை, அதனாலேயே தமிழ் தேசியமும் இன்னமும் உயிர்ப்புடன் உள்ளது. மகாவம்ச சிந்தனை கொண்ட இலங்கை பெரும்பான்மை மக்களின் மனநிலை என்றும் மாறாது, தாம் சிங்கத்தின் வம்சாவளியினர் என நம்பும் ஒரு சமூகத்திடம் மனித நாகரிகத்தினையோ அல்லது சாதாரண மனித இறமைகள் பற்றிய புரிந்துணர்வு இருக்காது. தற்போதய உலக ஒழுங்கில் எமது இறமைகளை முழுவதுமாக பெறமுடியாது அது ஒரு மட்டுப்படுத்தப்பட்டளவிலேயே பெறமுடியும். எமது இறமைகளை தற்போது அதிகார பரவலாக்கம் எனும் விடயத்தினூடாகவே அணுக முடியும் என கருதுகிறேன், 2ஆம் உலக மகாயுத்ததில் ஜப்பான் செய்த தவறிற்காக மனிதகுல வரலாற்றில் மிக மோசமாக தண்டிக்கப்பட்டு சிதறிக்கிடந்த தேசம் தன்னை மீழ கட்டமைத்து உயர்ந்தெழுந்தது. அதே போல எமது நிலையும் ஏற்படுவதற்கு ஏற்ப சில அடிப்படை உரிமைகளை முதலில் பெறுவதற்கு இந்த அதிகார பரவலாக்கம் மூலம், நிதி, சட்டம் ( காவல், சட்டவமைப்பு), காணி போன்ற அதிகாரம் முதலில் தேவை. போர் தோல்வி ஏற்படுத்திய அதிர்ச்சி எமது சமூகத்தினை அந்த நிலையிலேயே தேங்க வைத்துள்ளது, அதனாலேயே எமது சமூகம் போர் தொடர்பான விடயங்களில் தேங்கிய நிலையில் அது தொடர்பிலேயே தமது கவனத்தினை குவித்துள்ளனர். எமது வரலாற்றினை திரும்பிப்பார்ப்பது நல்லதுதான் ஆனால் அது ஒரு குறுகிய வட்டத்திற்குள் நிற்க கூடாது, அத்துடன் நடைமுறைக்கு ஏற்ப கடந்த கால அனுபவ புரிதல் எதிர்கால சிறப்பிற்கு உறுதுணையாக இருக்கவேண்டும்.