Saturday, September 10, 2011, 1:30
தமிழீழம், மாவீரர்கள்
10.09.1997 அன்று புளியங்குளம் பகுதியில் சிறிலங்கா படையினருடனான மோதலில்வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் பாவரசன்(பைப்) அவர்களின் 13ம் ஆண்டு நினைவு நாள்.
10.09.2000 அன்று யாழ். கொழும்புத்துறைப் பகுதியில் சிறிலங்கா படையினருடன் ஏற்பட்ட மோதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் சிவம் அவர்களின் 11ம் ஆண்டு நினைவு நாள்
10.09.2008 அன்று வீரச்சாவைத் தழுவிக் கொண்ட லெப்.கேணல் செண்பகச்செல்வன், லெப்.கேணல் எரிமலை, லெப்.கேணல் முல்லைமாறன், லெப்.கேணல் சிறிகாந்த், லெப்.கேணல் வீமன்(ஜது) உட்பட்ட கடற்புலிகளினதும், லெப்.கேணல் கலையழகன்(லுஜின்) ஆகியோரதும் 3ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
10.09.1995 அன்று காங்கேசன்துறைத் துறைமுகத்தில் வைத்து சிறிலங்கா கடற்படையின் தரையிறங்கு கலம் மீதான கரும்புலித் தாக்குதலில் வீரச்சாவைத் தழுவிக் கொண்ட கடற்கரும்புலி கப்டன் அருள்ஜோதியின் 16ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.
தமிழீழ தாயக விடுதலைக்காய் தமது இன்னுயிரை ஈந்த இந்த வீரமறவர்களிற்கு எமது வீரவணக்கங்கள்.
லெப். கேணல், கலையழகன் (லூயின்) சாள்ஸ்அன்டனிசிறப்புபடையணி
தமிழ் எல்லை தாண்ட எத்தனித்த எமனை
முகமாலை முன்னரங்கில் நீதனே!! செங்களம் ஆடியவன்
சிங்களத்தைச் சிதறடித்தாய்…… நில் எனத் தடைபோட்டாய்
நிறுத்தி வேலியிட்ட - எங்கள் கட்டளைத் தளபதியே – கலையழகன் !!
வீர வணக்கம்,,,,,,,,,,,,,,,, வீர வணக்கம்,,,,,,,,,,,,,,,, வீர வணக்கம்,,,,,,,,,,,,,,,,
ஈனப் படைகொண்ட கயவர் கூட்டத்தை – எல்லையில்
உடல் கிழித்துப் போர்க்களத்தில் புறமுதுகிட ச் செய்தாய்
தலைவன் தத்தெடுத்த தாக்குதல் தளபதியே………………..
வீர வணக்கம்,,,,,,,,,,,,,,,, வீர வணக்கம்,,,,,,,,,,,,,,,, வீர வணக்கம்,,,,,,,,,,,,,,,,
http://youtu.be/JS05jYgZ2sI
>
http://www.tamilthai.com/?p=26371