ராஜபக்ச சகோதரர்களின் அரக்கத்தனத்தைவிட, இந்தியா கொடுத்த ஆயுதங்களைவிட ஆபத்தானது 7 கோடி தமிழர்களின் மௌனம்தான் என்பதை இப்போது கூட உணராவிட்டால்…. நாம் எப்போதுதான் உணரப்போகிறோம்?. என் எதிரிகளின் கையில் இருக்கும் ஆயுதங்களைவிட ஆபத்தானது என் நண்பர்களின் மௌனம்” என்கிற மார்ட்டின் லூதர் கிங்கின் வார்த்தைகளுக்கு என்ன அர்த்தம் என தெரிந்துகொள்ள இனிமேலாவது நாம் முன்வர வேண்டாமா?
அங்கே நடந்த்து போர் அல்ல திட்டமிட்ட இனப்படுகொலை. விரட்டி விரட்டி கொல்லப்பட்ட நம் சொந்தங்கள், அமெரிக்கா உதவ வரும் என்று காத்திருந்த்தாக் கதை சொன்னவர்கள், முதலில் உண்மையை புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் நம்மைத் தவிர வேறு எவரையும் எதிர்பார்த்து காத்திருக்கவில்லை என்பதுதான் உண்மை.
அந்த ஒரு லட்சம் பேர் எங்கே?—இயக்குனர் புகழேந்தி தங்கராஜ்