Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Leaderboard

  1. வல்வை சகாறா

    கருத்துக்கள உறவுகள்
    5
    Points
    5818
    Posts
  2. மகம்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    4
    Points
    369
    Posts
  3. நிழலி

    கருத்துக்கள பொறுப்பாளர்கள்
    3
    Points
    15791
    Posts
  4. அஞ்சரன்

    கருத்துக்கள பார்வையாளர்கள்
    2
    Points
    2597
    Posts

Popular Content

Showing content with the highest reputation on 05/26/14 in Posts

  1. தாயகக் கனவுகளுடன் ....... [26] "எமது விடுதலைப் போராட்டத்தின் பளுவை அடுத்த பரம்பரை மீது சுமத்த நாம் விரும்பவில்லை.எமது கடின உழைப்பின் பயனை அவர்கள் அனுபவிக்கவேண்டும். எமது வாழ்நாளில் எமது இலட்சியம் நிறைவேறாது போகலாம். அப்படியாயின் அடுத்த தலைமுறைக்குப் போராட்டத்தைக் கையளிக்கும் தெளிந்த பார்வை எமக்குண்டு." "சுதந்திரத்தை வென்றெடுக்காமல் போனால் நாம் அடிமைகளாக வாழவேண்டும்.தன்மானம் இழந்து தலைகுனிந்து வாழவேண்டும். பயந்து பயந்து பதற்றத்துடன் வாழவேண்டும்.படிப்படியாக அழிந்து போகவேண்டும்.ஆகவே சுதந்திரத்திற்காகப் போராடு வதைத் தவிர எமக்கு வேறு வழி எதுவுமில்லை." "எமது மக்கள் சுதந்திரமாகவும்,கௌரவமாகவும்,பாதுகாப்பாகவும் வாழவேண்டும். இந்த இலட்சியம் நிறைவேற வேண்டுமாயின் நாம் போராடியே ஆகவேண்டும்." "இந்திய இராணுவத்துடன் மோதுவதற்கு முடிவெடுத்த வேளையில், வெற்றி தோல்வி என்ற பிரச்சனைபற்றி நான் அலட்டிக்கொள்ளவில்லை. இந்த யுத்தத்தை எதிர் கொள்ளும் உறுதியும் துணிவும் எம்மிடம் உண்டா என்பதுபற்றியே சிந்தித்தேன். தோல்வி ஏற்படலாம் என்ற அச்சத்தில் ஒரு மக்கள் இனம் தனது இலட்சியத்தையும் உரிமைளையும் விட்டுக்கொடுப்பதில்லை. " "சாவையும் அழிவையும் துன்பத்தையும் பரிசாகக் கொடுத்துத்தான் சுதந்திரம் எனும் சுவர்க்கத்தை நாம் காணமுடியும். " --- தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் ---------------------------------------------------------------------------------------------------
  2. தாயகக் கனவுகளுடன் ....... [25] "பெண்விடுதலை என்ற இலட்சியப்போராட்டமானது எமது விடுதலை இயக்கத்தின் மடியில் பிறந்த அக்கினிக் குழந்தை." "பெண் அடிமைத்தனத்தின் விலங்குகளை உடைத்தெறியாத எந்த ஒரு நாடும்,எந்த ஒரு சமூகமும், முழுமையான சமூக விடுதலையைப் பெற்றதாகக் கூறமுடியாது." "நாம் தமிழீழப்பெண் சமூகம் மத்தியில் ஒரு பெரிய புரட்சியை நிகழ்த்தியிருக்கின்றோம்.தமிழர் வரலாற்றிலேயே நடைபெறாத புரட்சி ஒன்று தமிழீழத்தில் நடைபெற்றிருக்கின்றது." "வீரத்திலும் தியாகத்திலும், விடுதலை உணர்விலும் ஆண்களுக்கு எவ்வகையிலும் பெண்கள் சளைத்தவர்கள் இல்லை என்பதை பெண்போராளிகள் தமது வீரச்சாதனைகள் மூலம் நிரூபித்துக் காட்டியுள்ளனர்." "பெண்கள் சம உரிமை பெற்று சகல அடக்கு முறைகளிலிருந்தும் விடுதலைபெற்று ஆண்களுடன் சமத்துவமாக கௌரவமாக வாழக்கூடிய புரட்சிகர சமுதாயமாகத் தமிழீழம் அமைய வேண்டும் என்பதே எனது ஆவல்." --- தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் -------------------------------------------------------------------------------------------------------------
  3. தாயகக் கனவுகளுடன் ....... [23] "தமிழரின் பிரச்சினைக்கு சமாதானவழியில் நிரந்தரமான‌ அரசியற்தீர்வு காணப்படவேண்டுமாயின் தமிழர் பற்றிய‌ சில அடிப்படை உண்மைகளை சிங்களதேசம் ஏற்றுக் கொண்டே ஆகவேண்டும்.அத்தோடு தமிழ்மக்கள் எத்தகைய‌ தீர்வை விரும்புகிறார்கள் என்பதையும் அவர்களது அடிப்படை அபிலாசைகள் என்ன என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும். ஈழத்தமிழர்கள் தனித்துவமான இனஅடையாளத்தைக் கொண்டவர்கள்.ஒரு தேசிய இனக்கட்டமைப்போடு,அந்த‌ இனத்துவப் பிரக்ஞையோடு வாழும் ஒரு மக்கள் சமூகம். அவர்களுக்கு வரலாற்றுரீதியான தாயகமண்ணாக சொந்த‌ நிலம் உண்டு.எமது மக்கள் விரும்புவதெல்லாம் ஒன்றுதான். தமது சொந்தமண்ணில் நிம்மதியாக நிறைவாக‌ வாழ வேண்டும் என்பதுதான்.மற்றையவர்களின் அதிகாரஆதிக்கமோ, நெருக்குவாரங்களோ இல்லாத ஒரு அரசியற் சூழலில் தம்மைத்தாமே ஆட்சிபுரிந்து கௌரவமாக வாழவேண்டும் என்பதே எமது மக்களின் ஆழமான அபிலாசையாகும். சிங்களமக்கள் இதனைப் புரிந்துகொள்ளவேன்டும். இந்தப் புரிந்துணர்வின் அத்திவாரத்திலிருந்துதான் ஒரு நியாயமான, நிரந்தரமான தீர்வைக் கட்டியெழுப்புவது சாத்தியமாகும்." --- தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன் ------------------------------------------------------------------------------------------------------- தாயகக் கனவுகளுடன் ....... [24] "குட்டக்குட்டத் தலைகுனிந்து அடிமைகளாக அவமானத்துடன் வாழ்ந்த தமிழனைத் தலைநிமிர்த்தி தன்மானத்துடன் வாழ- வைத்த பெருமை எமது விடுதலை இயக்கத்தையே சாரும்." "விடுதலை என்ற இலட்சியத்தை நாம் இலகுவாகத் தேர்ந்தெடுக்க- வில்லை.வரலாறுதான் அதை எம்மிடம் வலுக்கட்டாயமாகக் கையளித்தது.சுதந்திரம் வேண்டுவதைத்தவிர வேறு வழி எதையும் வரலாறு எமக்கு விட்டுவைக்கவில்லை." "கரடுமுரடான பாதைகள் நிறைந்த இந்த இலட்சியப்பயணத்தில் எமக்கு ஒரேயொரு ஊன்றுகோலாக இருப்பது எமது உறுதிதான்." --- தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன்
  4. தாயகக் கனவுகளுடன் ....... [22] "அணையாத நெருப்பாக சுவாலை விட்டெரியும் எமது வீரவிடுதலைப் போரில் நாம் புரிந்துவரும் அதியுயர் தியாகங்களும் அற்புதமான அர்ப்பணிப்புகளும் இன்று முழு உலகத்தையுமே வியப்பில் ஆழ்த்தியுள்ளன.இந்த‌ வீரவிடுதலை வரலாற்றின் கதாநாயகர்களாகத் திகழ்பவர்கள் எமது மாவீரர்களே. எமது தேசத்தின் விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்த‌ ஒவ்வொரு சுதந்திரப் போராளிக்கும் எமது தேசத்தின் வரலாற்றில் அழியாத இடமுண்டு.இவர்கள் சாதாரணர்- களாகச் சாவைத் தழுவவில்லை.எமது இனத்தின் இருப்பிற்காக,இவர்கள் தமது சுயத்தை அழித்தவர்கள். இந்த அற்புதமான துறவறத்தால் இவர்களது அடையாளங்கள் என்றுமே அழிவதில்லை.இவர்கள் ஒவ்வொருவரும் ஒரு தனிமனித சரித்திரம்.ஆயிரமாயிரம் மாவீரர்களின், ஆயிரமாயிரம் தனிமனித சரித்திரங்கள் சங்கமமாகிய‌ பெருநதியாகவே எமது தேசத்தின் வரலாறு வீறுகொண்டு ஓடுகிறது." --- தமிழீழத் தேசியத்தலைவர் வே.பிரபாகரன்

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.