Jump to content

ஊர்க்காவலன்

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    693
  • Joined

  • Last visited

  • Days Won

    5

ஊர்க்காவலன் last won the day on October 17 2014

ஊர்க்காவலன் had the most liked content!

Profile Information

  • Gender
    Male

Recent Profile Visitors

ஊர்க்காவலன்'s Achievements

Collaborator

Collaborator (7/14)

  • Reacting Well Rare
  • Very Popular Rare
  • Conversation Starter
  • First Post
  • Collaborator

Recent Badges

268

Reputation

  1. இந்த "இந்து" கோவில்களிற்கு ஈழ தமிழர்கள் செல்வதில்லையா? இது ஈழ தமிழர்களிற்கு நடந்திருந்தால் அடிவாங்கிக்கொண்டு சும்மா இருந்திருப்போமா அல்லது திருப்பி அடித்திருப்போமா? அல்லது அன்பே சிவம் என்று உருட்டிக்கொண்டிருந்திருப்போமா என்ற சந்தேகம் எனக்கு தமிழர்கள் அதிகமாக வாழுகின்ற நாடுகளில் இப்படியான சம்பவங்களை பார்க்கும் போது எழும் கேள்வி. முன்னர் ஒரு முறை இத்தாலியில் சிங்களவர்கள் தமிழர்களின் விளையாட்டுவிழாவில் இப்படி சண்டித்தனம் காட்டினார்கள். அதையும் பார்த்துக்கொண்டு தான் இருந்தோம்.
  2. 4 கிலோமீட்டருக்குள் இவ்வளவு நடந்திருக்கிறதென்றால் கடைக்காரர்களையும் கொஞ்சம் சந்தேகப்பட தான் வேண்டி இருக்கிறது. காப்பீட்டு நிறுவனங்களின் நஷ்டஈட்டு தொகை, மற்றும் கொள்ளையடித்த நகைகளில் பாதி அல்லது முழுவதும் என்று இரட்டிப்பு லாபம் பார்க்கலாம். இப்படி தான் நடந்திருக்கவேண்டும் என்று சொல்லவில்லை. இப்படியும் நடந்திருக்கலாம் 😉
  3. ஓ.. திராவிட பண்பாடா. நான் எதோ புத்தகமும் தொல்திராவிட மொழியில வரப்போகுதாக்கும் என்று நினைச்சன். 😂
  4. கமலை இறக்கி பார்த்தார்கள். ரஜனியை இறக்கி பார்த்தார்கள். இப்பொழுது விஜய். பொறுமை புலம்பெயர்ந்தவர்களே. ஒரு சராசரி மனிதனுக்கு புரியும் படி இப்பொழுது எந்த அரசியல் காய் நகர்த்தல்களும் இடம்பெறுவதில்லை. நாம் பார்ப்பதையும் அவர்கள் பேசுவதையும் வைத்து எந்த முடிவிற்கும் வர முடியாது. 😁
  5. இதற்கு சிறந்த வழி prepaid கடனட்டைகள். தேவையென்றால் பணத்தை போட்டுவிட்டு உபயோகித்துக்கொள்ளலாம். கைத்தொலைபேசியில் இருந்து கடனட்டைக்கு பணப்பரிமாற்றம் சில வினாடிகளில் நடக்கிறது. கைத்தொலைபேசியில் இருந்து கைரேகை மூலம் தான் உள்ளே செல்ல முடியும். அப்படியே சென்றாலும் பணம் வெளியில் போகும் போது ஒரு தகவல் வரும்படி setting செய்துள்ளேன். இதையெல்லாம் தாண்டி உள்ளே போனாலும் எடுப்பதற்கு பெரிய தொகை பணம் இருக்காது. சமபலம் வந்தவுடனே எல்லாம் பிரித்து பிரித்து ஒவ்வொரு திசைக்கும் அனுப்பிவிடுவேன். அந்த மாத செலவிற்கு ஒரு தொகை மட்டும் இருக்கும். ஒரு மூன்று அடுக்கு பாதுகாப்புடன் தான் நடமாடுகின்றேன். 🤣
  6. இந்த அணுகுண்டு பூச்சாண்டி எல்லா நாடும் எல்லா காலங்களிலும் செய்யிறது தான். அவ்வளவு முட்டாள்தனமாக எந்த நாடும் அணுகுண்டு பாவனைக்கு போகாது. இது முழு உலகத்தையும் எதிர்ப்பதற்கு சமன். இந்த சமாச்சாரம் சாதாரண மனிதர்கள் யூகிக்க மட்டுமே முடியும். ஒரு போதும் "இப்படி தான்" என்று உறுதியாக சொல்லமுடியாது. உதாரணமாக அமெரிக்க இந்த தாக்குதல் பற்றி ஏற்கனவே எச்சரித்திருந்தது. அப்படியிருந்தும் இதை இஸ்ரேல் அனுமதிருக்கிறது. யுகத்தின் அடிப்படையில் வேண்டும் என்றால் இஸ்ரேல் உலக நாடுகளிடம் அனுதாபம் தேடுவதற்கு வேண்டும் என்றே இந்த தாக்குதலை நிகழ்த்த விட்டிருக்கிறது என்று எடுத்துக்கொள்ளலாம். அதேவேளை ஈரான் வெளிவிவகார அமைச்சர் ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். அந்த ஹெலிகாப்டர் பேரிச்சம் பழத்திற்கு போடும் அளவு கண்டிசனில் இருந்தது நமக்கு தெரியும். இந்த சம்பவத்தை வைத்துகூட ஈரானின் நவீன ஆயுத பலத்தை யுகத்தின் அடிப்படையில் கணக்கிட முடியும். வெளியில் வாய்ப்பேச்சில் எல்லோரும் வீரர்கள் தான். உள்ளே நிலைமை எப்படியென்று சண்டை வரும் போதுதான் தெரிய வரும்.
  7. ஈரானிற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் ஆதரவு கொடுக்கவிருக்கின்ற நாடுகளை நினைத்து தான் இஸ்ரேல் தடுமாறுகிறது என்று நினைக்கிறன். அதே வேளை இஸ்ரேலிற்கு அமெரிக்காவை தவிர வேறொரு நாடும் ஆக்கபூர்வமான ஆதரவை வெளிப்படுத்தவில்லை ஐ.நா. உட்பட. வெறுமனே ஈரானும் இஸ்ரேலும் ஒன்றோடு ஒன்று மோதுமாயின் ஈரானிற்கு சக்கை அடி விழும். இஸ்ரேலின் தொழில்நுட்பம் அப்படி.
  8. சிங்களவர்கள் நினைத்தால் மட்டுமே தமிழர்களிற்கு நன்மை கிடைக்கும் என்பது தான் இனவாதம். இதை ஒருவருக்கு ஒரு ஓட்டு உள்ள பல்லினங்களை கொண்ட நாடுகளில் இந்த இனவாதத்தை வேறு வழிகளில் சரி செய்வார்கள். பெரும்பாலும் பாராளமன்ற அமைப்பின் மூலம் நடைபெறும்.
  9. பிரிட்டன் மற்றும் பிரான்சின் இந்த முடிவுகள் புரிந்துகொள்ளக்கூடியவை தான். இருவருக்கும் உள்நாட்டில் பலஸ்தீனாவுக்கு ஆதரவான குடியேறிகள் அதிகம். இது உள்நாட்டிற்குள் தேவையில்லாத கலகங்களை கொண்டுவரும். ஏற்கனவே 1008 பிரச்சனை. இதுக்குள்ள எதுக்கு இந்த தேவையில்லாத பிரச்சனை என்று விலகியிருப்பார்கள். இந்த முடிவு தான் ஜெர்மனியும் எடுக்கும் என்று நம்பலாம்.
  10. அனைவருக்கும் வணக்கம் வருகின்ற சனிக்கிழமை இளையராஜாவின் இசைநிகழ்ச்சி ஒன்று சுவிஸில் தாளம் வானொலி ஏற்பாடு செய்திருந்தது. அவர்கள் இப்பொழுதும் டிக்கெட் விற்றுக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் மண்டபம் உத்தியோகபூர்வமாக அவர்களது இணையதளத்தில் நிகழ்ச்சி கான்செல் செய்யப்பட்டுள்ளது என்று அறியத்தந்திருக்கிறார்கள். இணையத்தில் டிக்கெட் இப்பொழுதும் வாங்கக்கூடியதாக இருக்கிறது. என்ன நடக்கிறது என்று தெரியவில்லை. எனவே யாரும் டிக்கெட் வாங்கி ஏமாற வேண்டாம். அல்லது நிகழ்ச்சி நடத்துபவர்களிடமே தொடர்பு கொண்டு நிகழ்ச்சி வேறு இடத்திற்கு மற்றம் செய்யப்பட்டிருக்கிறதா என்று கேட்டுவிட்டு டிக்கெட் வாங்கவும். இது ஒரு விழிப்புணர்வு பதிவு மாத்திரமே. https://www.ticketcorner.ch/event/ilaiyaraaja-live-music-concert-st-jakobshalle-19069134/ டிக்கெட் விற்பனை நடந்துகொண்டிருக்கிறது... https://stjakobshalle.ch/kalenders/maestro-ilaiyaraaja/ மண்டபத்தின் இணையதள அறிவிப்பூ
  11. "இனவாதிகள் இனி இலங்கையை ஆள முடியாது" என்று அனுரா பேசியதாக ஒரு youtube தலைப்பு பார்த்தேன். அவருடைய பின்புலமே ஒரு இனவாத பின்புலம் தான். அது இருக்கட்டும். இனவாதம் ஒன்று அவ்வளவு பொல்லாத நிலைப்பாடு இல்லை. அதை சரியான முறையில் கையாண்டால் அதுவும் நல்லது தான். அனுரா தெரிவுசெய்யப்பட்டதே ஒரு இனவாத தேர்தல் முறையில் தானே. 5௦% வாக்குகளை ஒருவர் பெறவில்லையென்றால் அவர் வென்றதாக அறிவிக்கமுடியாது. ஒரு தமிழருக்கு 5௦% வாக்குகள் கிடைப்பது இலங்கையில் சாத்தியமா? அப்படியே ஒரு தமிழர் 49% வாக்குகள் பெறுகிறார் என்று வைத்துக்கொள்ளவோம். அடுத்தக்கட்ட விருப்பு வாக்குகள் சிங்களவர்கள் யாருக்கு போடுவார்கள் என்று நினைக்கிறீர்கள்? தமிழருக்கா? எண்ணிக்கையளவில் பல மடங்கு அதிகமாக உள்ள சிங்களவர்களின் விருப்பு வாக்கு ஒரு சிங்களவருக்கு தான் விழும். இந்த முறை ஒரு இனவாதம் இல்லையா? அனுரா இதை புரியாதவர் ஒன்றும் இல்லை. இலங்கையின் இந்த ஆட்சி மாற்ற முறை தென்னமெரிக்க நாடுகள் பலவற்றில் நடந்திருக்கிறது. அரபு புரட்சியையும் மறந்துவிடுவதற்கில்லை. ஊழல், பொருளாதார நெருக்கடி என்று பேசி முன்னர் இருந்த அரசை வீழ்த்தி ஒருவர் வருவார். பின்னர் அதே காரணத்தை கூறி அவரை வீழ்த்துவதற்கு இன்னொருவர் வருவார். இந்த நாடுகளில் IMF, அமெரிக்கா எதிர்ப்பு தலைதூக்கியிருக்கும். எனவே இப்படி நடைபெறும் ஆட்சி மாற்றங்களை அமெரிக்கா ஒருபோதும் விரும்பாது. IMF ஒன்றும் ஆட்சியில் இருப்பவர்களுக்கு கடன் கொடுப்பதில்லை. அது ஒரு அரசாங்கத்திற்கு தான் கொடுக்கிறது. எனவே ஏற்கனவே இருந்தவர்கள் வாங்கிய கடனில் இருந்து அனுரா தப்ப முடியாத வரை அவர் வெளித்தோற்றத்திற்கு IMFயை எதிர்ப்பது போல் பாசாங்கு செய்யலாம். உள்ளே அவரும் IMF கைப்பாவையாக செயல்படத்தான் வேண்டும். எந்த அமெரிக்கா நிறுவனங்களிலும் அவர் கை வைக்க முடியாது. அனுரா அமெரிக்காவையும் எதிர்க்கிறார். IMFயையும் எதிர்க்கிறார். ஏற்கனவே ஆட்சியில் இருந்தவர்களையும் எதிர்க்கிறார். இந்த மூன்றையும் எதிர்த்து அவர் நீண்ட நாட்கள் ஆட்சியில் நிலைப்பது சாத்தியமில்லை. அவர் பொருளாதாரத்தை தூக்கி நிறுத்தி, தமிழர்களுக்கு சிறிதளவேனும் நன்மை செய்ய தொடங்குகிறார் என்றால், இப்பொழுது வெளிநாட்டிற்கு தப்பிச்சென்ற முன்னாள் ஜனாதிபதிகளின் பிள்ளைகளை சிங்கள மக்களே மீண்டும் நாட்டுக்குள் கொண்டு வந்து ஆட்சியில் அமரவைப்பார்கள். புரட்சியின் மூலம் ஆட்சி மாற்றம் வந்த நாடுகளில் இதுவும் நடந்து தான் இருக்கிறது. இலங்கையில் புரட்சியாளன், சிவப்பு புரட்சி வென்றது என்று புலம்பெயர் தமிழர்கள் சில்லறைகளை சிதறவிடுவதை கொஞ்சம் தள்ளி போடுவது நல்லது. தமிழர்களிற்கு இலங்கை அரசியலில் எப்பொழுதுமே "சங்கு" தான். எல்லோருக்குமே ஒரு மாற்றம் தேவைபட்டது. மற்றும்படி இதில் சிங்கள டயஸ்போராக்களின் புத்திசாலித்தன்மை என்று ஒன்றையும் நான் காணவில்லை.
  12. சுவிஸ் தமிழர்களின் தொகையைவிட அமைப்புகளின் தொகை அதிகரித்துக்கொண்டு போகிறது. கடவுள் புண்ணியத்தில் "ஒரிஜினல்" புலிகள் மீதான தடையை நீக்காமல் விட்டது நல்லதா போச்சு. இலையென்றால் இப்ப விடுதலைப்புலிகள் என்ற பெயரிலையே 1008 அமைப்பு தோன்றியிருக்கும்.
  13. இந்த திரியே 2009ற்கு பின்னர் நடந்த மோசடி பற்றித் தான். 2009ற்கு முன்னர் நடந்தவற்றை யாரும் மோசடியாக தூக்கிக்கொண்டு வரவில்லையே. 2009ற்கு முன்னரும் சிறிய அளவில் நடைபெற்றதுகொண்டு தான் இருந்தது. அதை பெரிதாக யாரும் கண்டுகொள்ளவில்லை. கொஞ்சம் யதார்த்தத்திற்கு வாருங்கோ. புலிகளுக்கு பணம் சேர்ப்பது எல்லா நாடுகளிலும் தடைசெய்யப்பட்டிருக்கேலை. அதனால அது குற்றமாகாது. அடிச்ச பணத்தை மக்களிட்ட திருப்பி கொடுக்கிறதுக்கு 1008 சாட்டு சொல்ல வெளிக்கிடாதேங்கோ . அப்பிடி அந்த அடித்த பணத்தை திருப்பிக்கொடுக்க முடியாமல் மனவேதனையில் இருப்பவர்களை என்னிடம் அனுப்பிவிடுங்கள். அவர்களுக்கு எந்தவித பிரச்சனையும் இல்லாமல் நான் அந்த பணத்தை வெள்ளையாகி உரியவர்களிடம் ஒப்படைக்கிறேன். என்னிலை நம்பிக்கையில்லாட்டில் குழந்தை பிள்ளைக்கு விளங்கிற மாதிரி ஒரு திட்டம் சொல்லுறேன் கேளுங்க. இதை அந்த மனவேதனையில் தவிக்கிற மாபியா கும்பலிட்ட சொல்லி பயம் இல்லாமல் செயல்படுத்த சொல்லுங்க. இங்க கடைகளில் இப்ப Bitcoin gift card வந்திருக்கு. கையில இருக்கிற காசுக்கு ஒரு 10 bitcoin card வாங்கிட்டு அதை ஒரு bitcoin walletற்கு transfer செய்திட்டு, அந்த bitcoinஐ வெள்ளையா ஒரு வங்கி கணக்குக்கு transfer செய்யலாம். கடைசிக்கட்டத்தில ஒருத்தரும் வங்கி மூலமா போராட்ட நிதி சேகரிக்கேலை. எல்லாரிட்டையும் கட்டிலுக்கடியில தான் காசு இருக்கும். இதை ஏன் சொல்லுறேன் என்றால், பிறகு நீங்கள் வேற ஒரு உருட்டோட வந்தாலும் வருவீங்கள். எதுவாகினும் உருட்டுவதை நிறுத்தாதவர்கள் எத்தனை ஆண்டுகளானாலும் இருக்கத்தான் போகிறார்கள். மேற்கொண்டு இந்த திரியில் எழுதுவதை நான் தவிர்க்கிறேன்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.