போர்க்குற்ற விசாரணையை மேற்பார்வை செய்ய, அல்லது நல்லெண்ண செயற்படுகளை கண்காணிக்க ஓரிருவர் வந்தாலே நாட்டின் இறையாண்மைக்கு இழுக்கு என்று மூச்சுக்கு முன்னூறு தடவை முக்கினவை, அதற்கெதிராக ஆர்ப்பாட்டங்களும் அறிக்கைகளும் விட்டவை, இந்தியா தமிழருக்கு ஈழம் பெற்றுக்கொடுத்துவிடும் என்று அப்பாவி சிங்களவர் பயப்படுகிறார்கள் என்று இங்க கூட சிலர் மூக்காலை அழுதவை. இப்ப என்னடாவென்றால் ஒரு இரவில் ஆறாயிரம் இராணுவம், இன்னும் போர்க்கப்பல்கள் விரைந்து வந்துகொண்டிருக்காம். நாட்டில் என்ன நடக்கிறது? தங்கள் பிழைகளை மறைக்க உடனே போரை ஆரம்பிக்கிறது. சிங்கள மக்கள் உணரும் காலமிது. இந்த நன்னாளுக்காவே நான் காத்திருந்தேன், இவ்வளவு விரைவாக வரும் என்று நான் நினைத்திருக்கவில்லை. இனவாதம் பேசி வாக்கு கேட்ப்பவர்களை செருப்பாலடித்து வீட்டுக்கனுப்பவேண்டும்! தங்கள் சுகபோகத்துக்காக மக்களை ஏமாற்றி, உசுப்பேற்றி வாக்கு வாங்கி, கதிரை ஏறிய பின் அந்த மக்களை நடுவீதியில் அலையவிட்டு, அதை அடக்குவதற்கு அயல்நாட்டு இராணுவம் வருவிப்பு. இந்த முட்டாளுகள் கூப்பிட்ட உடனே அவையும் தாரை தம்பட்டையோடே வருகினமாம், எல்லாம் பழக்கதோஷம். அந்த முட்டாளுக்கு அறிவு வேண்டாம்? சர்வதேசமே விடுதலைப்புலிகளை உங்களால் அழிக்க முடியாது என்று சொன்னபோதும் எமது இராணுவம் அவர்களை இலகுவாக வெற்றிகண்டார்கள் என்று வருடாவருடம் விழா எடுத்து கொண்டாட, சொந்த இன மக்களை அடக்க ஏன் எங்களை அழைக்க வேண்டும் என்று யோசிக்க வேண்டாம்? தன் இராணுவத்தையும், தன்னையும் பாதுகாத்து இந்தியாவை சிங்கள இனவாதப்போரில் மாட்டிவிட்டு தான் தப்பும் நோக்கமாக இருக்கலாம், இந்தியா தானாக வராமல் இதே சாட்டோடு இங்கு வந்து குந்துற நோக்கமாக இருக்கலாம், ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நோக்கம் இருக்கலாம். ஆனால் சேர்ந்து அழித்தவர்கள் சேர்ந்தே அனுபவிக்கவும் வேண்டும் என்று விதி நினைத்ததோ யார் கண்டா? முள்ளிவாய்க்கால் போரில் என்ன நடந்திருக்கும் என்று சிங்கள மக்களும் உணரவேண்டும், தமது அரசின், இராணுவத்தின் யோக்கியதை தெரிய வேண்டும். வாக்கு போட்ட எங்களை அடக்க அயல் நாட்டு இராணுவத்தை அழைக்கும் இவர்கள், பாதைகளை அடைத்து எங்களை எப்படி சித்திரவதை செய்துஇருக்கும் என்பதை யோசித்து பார்க்கட்டும். சணல் நான்கின் படம் இருந்தால் சிங்களவரின் முகநூலில் இணைத்து விடுங்கள் பார்த்து உணரட்டும்.