Jump to content

satan

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    9063
  • Joined

  • Last visited

  • Days Won

    1

Everything posted by satan

  1. அவரவர் அனுபவிக்கும் போதுதான் அந்த வலியின் வேதனை என்ன என்பது அவர்களுக்குப் புரியும்.
  2. அவர் அதற்காகவே பதவியிலிருந்து விலகினார் அல்லது விலக்கி வைக்கப்பட்டார் போலுள்ளது. அவர் தன்னிச்சையாக கத்தினால், விமல் வீரவன்சவோடு புதிய கூட்டணி அமைப்பார். இல்லையேல், மீண்டும் தமிழர் பிரச்சனை கிடப்பில், பத்தோடு பதினொன்று. அனுரா கூறியிருந்தார், தமிழ் மக்கள் தொடர்ந்து அரசுகளால் ஏமாற்றப்படுத்தப்பட்டத்தினாலேயே பொதுவேட்பாளர் என்கிற முடிவை எடுத்தனர் என்று. அந்த ஏமாற்றத்தை தராமல் இருப்பதே அவரின் கருத்துக்கு அழகு. இல்லையேல் ரில்வின் சில்வாவை வைத்து விளையாட வெளிக்கிட்டால் அதன் பயனை அடைவார்.
  3. பயங்கரவாத சட்டம் தமிழருக்கெதிராகவே இயற்றப்பட்டது நடைமுறைப்படுத்தப்பட்டது ஆனால் அது இன்று தமிழருக்கானது அல்ல அப்படியென்றால் மஹிந்தவே இன்றும் தேர்தலில் வென்றிருப்பார் அது கடைசியில் அரகலியாவுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டது முஸ்லிம்களுக்கு எதிராகவும் பயன்பட்டது அப்போதுதான் அந்த சட்டத்திற்கு எதிராக எல்லோரும் குரல் எழுப்பினார்கள் எதை வைத்து தம் எதிரிகளை அடக்கியதோ சிங்களம் அதை அனுபவிக்க வேண்டாமோ எத்தனையோ முறை நாங்கள் இதற்கு எதிராக குரல் எழுப்பினோம் அப்போதெல்லாம் அது வீரியம் பெற்றது அதன் தாக்கம் வலி அவர்களுக்கு புரியவில்லை இவர்கள் அதன் வலியை அனுபவிக்கும்போது அதன் தாக்கம் புரியும் அவர்களே குரல் எழுப்புவார்கள் இப்போ நாங்கள் குரல் எழுப்பி அதை தகர்த்துவிட்டால் அவர்களுக்கு அதன் வலி புரியாது தமது வல்லாதிக்கத்தை மீண்டும் நம்மேல் காட்டுவார்கள் எந்த மாற்றமும் நிகழ விடமாட்டார்கள் வீதியிலே இறங்கி தமிழரை அழிப்பார்கள் சும்மாவே கொக்கரிக்கிற சரத் வீர சேகர போன்றோர் அடக்கி வாசிப்பதன் நோக்கம் என்னவென்று நினைக்கிறீர்கள் விமல் வீரவன்ச அண்மையில் தெரிவித்த கருத்துக்கள் எதன் பின்னணியில் வந்தது முதலில் அனுராவை எச்சரிப்பார்கள் எதிர்ப்பார்கள் சவால்விடுவார்கள் பின்னர் வேறுவழியின்றி இணைந்து போக முயற்சிப்பார்கள் இது எனது தனிப்பட்ட நம்பிக்கை இது பிழையாக கூட இருக்கலாம் இறுதியில் தெரியும் முடிவு. அடிமேல் அடி அடித்தால் அம்மியும் நகருமாமே! சொல்கிறார்கள். மீண்டும் சொல்கிறேன். இனவாதத்தையல்ல, இனவாதத்தை தூண்டும் இனவாதிகளை தடுக்க!
  4. வடக்கின் வசந்தத்தின் வேட்டி நாளுக்குநாள் உரியப்படுகிறது. வேலைவாய்ப்பு என்று கூறி அவர்களின் சம்பளங்களை வாங்கி உறிஞ்சியதும், ஜமீன்தார் வாழ்க்கை வாழ்ந்ததும் இப்போ வெளிவருகிறது. லஞ்சம் வாங்கிக்கொண்டு, அறிவில்லாத பண்பில்லாதவர்களை வேலைக்கமர்த்தி சீர்கேடுகளை உருவாக்கி மக்களை அலைக்கழித்தவர்கள் இவரால் நியமனம் பெற்றவர்களே. இவர்களெல்லாம் பணியில் இருந்து நிறுத்தி வீட்டுக்கு அனுப்பப்படவேண்டும்! லஞ்சம் கொடுத்தவன் வாங்கவே செய்வான். இதுகள் சேவை செய்யுதுகளாம் மக்களுக்கு. இவர் திரட்டிய பணமெல்லாம் பறிமுதல் செய்து ஓட விடவேண்டும், செய்த கொலைகளுக்கு விசாரணை செய்து ஆயுள் முழுவதும் உள்ளே களி தின்ன விடவேண்டும். ஆனால் இவர் செய்த கொலைகள் இவரை சும்மா விடுமா? அதுசரி, யாரிடமோ நஷ்ட்டம் கோரி வழக்கு தாக்கல் செய்யப்போகிறேன் என்றாரே, போட்டாரோ? போடமாட்டார். இவர் முதலில் இறங்கினால், இவருக்கெதிராக பல கொலை கொள்ளை வழக்குகள் பதிவாகும்.
  5. நீங்கள் உப்பிடி சொல்வீர்கள் என்று நினைத்தேன், சொல்லியே விட்டீர்கள். அதனாற்தான் பயந்தோ என்னவோ களத்தில் சிங்களம் கதைத்து திறமையை வெளிப்படுத்துகிறீர்கள். மக்களுக்கு தெரியாத மொழியில் பேசினால் நீங்கள் திறமைசாலிகள் என்று நினைப்பர், யாரென்பது உங்களுக்குத்தான் தெரிய வேண்டும். இதைத்தான் ரணிலாரும் லண்டன் போய் நம்மவருக்கு சொல்லி, தானே சிரித்து அசடு வழிந்தார். அதுதான் நான் சொல்லுறது என்னெண்டால் முகநூல் முகநூல். நான் சொல்லுறது விளங்குதோ என்னோ?
  6. நாட்டில் வீழ்ச்சி கண்டு கொண்டிருந்த பொருளாதாரத்தை தாங்கி உயர்த்தியது குடிமகன்களே, அவர்களை இப்படி தவிக்க விடலாமா? மீண்டும் நாட்டின் பொருளாதாரம் பாதாளத்திற்கு செல்ல வாய்ப்பிருக்கிறது.
  7. இங்கு சம்பந்தப்பட்ட இருவருமே சமூகத்தில் அதிகூடிய பொறுப்புள்ளவர்கள், மக்களுக்கு பொறுப்பு சொல்ல வேண்டியவர்கள். உண்மையில் வைத்தியர் சத்திய மூர்த்தி கூறும் காரணங்கள் ஏற்றுக்கொள்ளக்கூடியவை, பிழையாக இருந்தாலும். அவரின் வீட்டுக்கு போயும் கதைக்க முடியாது. ஆகவே அவருக்கு உரிய முறையில் அழைத்து விசாரித்திருக்கலாம். உண்மையில் போலீஸார்கூட செய்யும் அக்கிரமங்களை யாராவது தட்டிக்கேட்டால் தமது கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறி சுட்டுக்கொன்று விடுகிறார்கள், அதையும் சட்டம் சரியென ஏற்றுக்கொள்கிறது. இந்த இருவருக்கும் பஞ்சாயத்து தீர்ப்பதிலேயே ஐந்து வருடங்கள் ஓடி மறைந்து விடும். இருவரில் ஒருவரின் பதவி பறிக்கப்பட வாய்ப்புண்டு. தமது பிரச்சனைகளை தீர்ப்பார் என்று நம்பி வாக்களித்த மக்களும், இந்த தொண்டர் சேவையாளர்களுமே பாதிக்கப்படுவர் இவர்களின் பொறுப்பற்ற செயலால்.
  8. ஓ.... அதுதான் இங்குவந்து கலக்குகிறீர்களோ? கேள்வி கேட்க மாட்டார்கள் என்று. அவர்களுக்கு விளங்கும் விதத்தில் பேசமுடியவில்லையோ உங்களால்? ரவிராஜ் பேசினாரே!
  9. நன்றி கோசான் இணைப்பிற்கு! நமது மக்களின் மனோநிலை இவ்வளவு சீக்கிரம் மாறுகிறது என்பதற்கு இது உதாரணம். அதேபோல் நாமளும் செய்திகளை மாற்றுகிறோம்.
  10. எதையும் ஆராய்ந்து அறியத்தெரியாத முட்டாள்களை இப்படித்தான் பலர் பயன்படுத்திக்கொள்கிறார்கள். இதில், இவர் தலைவனாம் முதலில் அந்தப்பாதிரியாரை கைது செய்ய வேண்டும்.
  11. அதல்ல இவர்களின் பிரச்சனை, சிங்களத்தோடு சேர்ந்து தமிழருக்கு ஆப்பு செருகினதும், அவர்களோடு வரிஞ்சு கட்டிக்கொண்டு நின்று, எதையும் பெறவிடாது தட்டிப்பறித்ததும், இப்போ வயிற்றை கலக்குது. எங்கே தாம் செய்தது தமக்கெதிராக மாறிவிடுமோ என்பதுதான் அவர்களது கவலை. சகல துறைகளிலும் திறனும் அறிவும் கொண்டவர்கள் நாட்டை நேசிப்பவர்களென்றால் அமைச்சரவையில் இல்லையாயினும் பங்களிக்கலாம், எதற்கு அமைச்சரவை வேண்டும்? ம்.... புலிகளை அழிப்பதற்கு அரசாங்கம் கேளாமலேயே தாம் உதவியதாக சொல்லி, வசதிகளை அனுபவித்தும், சிங்களம் விட்ட மிச்சத்தை கூட, இருந்து பொறுக்கியும் வளர்ந்தவர்கள். தமிழருக்கெதிராக சேர்ந்தியங்குவதும், பின்னர் எங்களுக்கும் உரிமை வேண்டுமென்று தமிழரோடு சன்னதமாடுவதும் இவர்கள் பிழைப்பாய் போச்சு. ரில்வின் தனக்கு பதவி வேண்டாம் என்று விலகிவிட்டார், அவருக்கு வேறொரு பதவி இருக்கு, அது நேரம் வரும்போது வெளிப்படும். அவரிடம் ஏன் போனார்கள் இவர்கள்? ஒருவேளை, அவரது பொறுப்பு தெரிந்துதான் போனார்களோ அல்லது அவரே அழைத்தாரோ இவர்களை?
  12. இன்னொரு பலத்த ஆதாரம். மஹிந்த இன்றுவரை சொல்லிவருகிறார், புலிகளிடமிருந்து அப்பாவி தமிழ் மக்களை மீட்க மனித நேயப்போர் செய்து, மக்களை மீட்டதாக. அப்படியென்றால்; அவரது வெற்றி விழாவை தமிழ் பிரதேசங்களில், தமிழ் மக்களல்லவா கொண்டாடியிருக்க வேண்டும்? தமிழ் மக்களின் வாக்கு அவருக்கு வகைதொகையின்றி வீழ்ந்திருக்க வேண்டுமே? மாவீரர் தினத்தை அனுஷ்டிப்பதற்கு மக்கள் தடைகளையும் தாண்டி முண்டியடிக்க தேவையில்லையே? அதை கட்டுப்படுத்த அரசாங்கம் படைகளை திரட்டி தடுக்க தேவையில்லையே? இங்கு இனப்பிரச்சனையில்லை, பயங்கரவாதம் என பொய் சொல்லத்தேவையில்லையே? தமிழரின் தலைவரை கொன்றதுதான் நான் செய்த தவறு என மனஸ்தாபப்படத்தேவையில்லையே? இன்னும் இராணுவம் தமிழர் பிரதேசங்களில் சுற்றி இருப்பதற்கான காரணம் என்ன என விளக்குவீர்களா? அவர்களை வெளியேறும்படி மக்கள் வற்புறுத்துவது ஏன்? மாவீரர் வாரத்தை பெரிய விவகாரமாக சிங்கள மக்களிடம் தோற்றுவிப்பது ஏன்? ஏன் அந்த சிங்கள மக்கள் கேள்வி கேட்கவில்லை? எதற்காக தங்களை வருத்தியவர்களின் நினைவை தமிழ் மக்கள் அனுசரிக்கிறார்கள்? ஏன் தடை போடுகிறீர்கள்? என்று கேள்வி கேட்க வேண்டுமே? முன்பு யூட், கற்பகத்தின் பெயர்கள் மாறி கருத்துக்கள் இன்னொரு பெயரில் எதிரொலிக்கிறது.
  13. எல்லோர் நாவிலும் ஒலிக்குக அனுரா மாத்தையா நாமம்!
  14. அது உங்களின் கருத்து, அதற்கு நான் பொறுப்பல்ல. தங்களது கடமையை அவர்கள் சரியாக செய்யவில்லை என்பதற்கு, எமது மக்கள் அனுபவிக்கும் பிரச்சனைகளே சான்று என்பதே எனது கருத்து. இங்கே, சிங்களம் தெரியாதவர்களிடம் சிங்களம் பேசுவதால் பயனில்லை. இதைத்தான் சிங்களமக்களிடம் பேசும்படி வெகுநாளாக வேண்டுகிறேன். ஆனால் அதை செய்யாமல் நையாண்டி செய்கிறார்கள்.
  15. நான், பந்தி பந்தியாக எழுதுவதுதான் உங்கள் பிரச்சனையா? கடந்து போங்கள். உங்களை நான் வாசிக்கும்படி வற்புறுத்தவில்லையே? நான் கொழும்பில் சிறிது காலம் வசித்தேன். அப்போ அங்கிருந்த தமிழ் மக்களை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்த போது, சில சிங்களவர் இவ்வளவு புலிகள் இங்கே பதுங்கியிருந்தார்கள் என்று குதூகலித்தார்கள். அப்போ அங்கே இருந்த எனது உறவினர் உண்மையை விளக்கியபோது, அவர்கள் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. போர்முடிவடைந்தபின், மஹிந்தா ஒவ்வொரு பௌத்த சங்க குடும்பங்களுக்கும் தலா பத்தாயிரம் கொடுத்து வடக்கை தனது வெற்றியை பார்வையிட சுற்றுலா அனுப்பி வைத்தார். அங்கே போய் வந்த ஒரு குடும்பம் சொன்னது, மஹிந்த மாத்தையா அப்பாவி தமிழ் மக்களை புலிகளிடம் இருந்து மீட்டார், இடிந்து போன வீடுகளை திரும்ப அமைத்துக்கொடுக்கிறார், கடைகள் இன்னும் இராணுவம் நடத்துகிறது, வெகு விரைவில் திருப்பி உரியவர்களிடம் கொடுத்து விடுவார்கள் என கூறினார். அதை விட யாழ்ப்பாணத்திற்கு பொருளாதார தடை ஏற்படுத்திய போது, அங்குள்ள வியாபார நிலையங்கள் கேள்வி எழுப்பிய போது, மஹிந்த சொன்ன காரணம், புலிகள் உங்கள் பொருட்களை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார்கள், வரி அறவிடுகிறார்கள், உங்கள் பொருட்களை மக்களிடம் சேர அனுமதிக்கிறார்கள் இல்லை, தாங்களே எடுக்கிறார்கள், கொஞ்சம் பொறுத்துக்கொள்ளுங்கள், புலிகளை முறியடித்தபின் உங்களுக்கு நல்ல சந்தர்ப்பம் கிடைக்கும் என்றார். இவைகளெல்லாம் பத்திரிகைகளில் வந்தன. அதைவிட ஊடகவியலாளர் அந்த பிரதேசத்துக்கு செல்ல மறுக்கப்பட்டனர், உண்மையை கூறக்கூடிய, அங்கிருந்து விடுவிக்கப்பட்டு வந்த இராணுவத்தினரை யாரும் சந்திக்க முடியாதவாறு தடுக்கப்பட்டனர், சணல் நான்கை பார்ப்பதற்கு தடை விதித்தனர், இவையெல்லாம் எதை கூறுகின்றன? மக்களிடம் உண்மை போய்ச்சேராதவாறு தடுத்தனர், உண்மையை கூறியவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர், கொலை செய்யப்பட்டனர். உதாரணம், பா .உ. ரவிராஜ். பொது அமைப்புகளை ஏன் பலவந்தமாக விரட்டினர்? நான் சொல்லும் கூற்றுக்களுக்கு ஆதாரம் அளிக்க வேண்டும். அதனாலேயே எனது கருத்துக்கள் பந்தியாக வருகின்றன. சும்மா ஓரிரண்டு வார்த்தைகளில் சொல்வதால் அது உண்மையாகாது. எனது பதிவுகள் உங்களுக்கு மட்டுமானதாலல்ல. உண்மையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இப்படி குற்றம் சாட்டுவது இயல்பு. அதற்கு நான் ஒன்றும் செய்ய முடியாது. நிர்வாகம் எச்சரித்தால் பரிசீலிப்பேன்!
  16. இவையெல்லா விளைச்சலிலும் முன்னிலை வகித்தது தமிழர் பிரதேசம். தமிழரை அழிக்கிறோம், அவர்களின் பொருளாதாரத்தை இடிக்கிறோம்என்று கங்கணம் கட்டி ,நாட்டை இந்த நிலைக்கு கொண்டுவந்து விட்டு, இப்போ வேறு நாட்டை எதிர்பார்த்து இருக்கிறார்கள். இதுதான் இனவாதத்தின் வெற்றி. பதுக்குவோர்தான் பொருள் தட்டுப்பாடை ஏற்படுத்துவது. மக்களிடையே இல்லாமையை ஏற்படுத்தி தாம் பிழைப்பது. பறிமுதல் செய்ய வேண்டும் அல்லது வேறு வழியில் பிரச்சனையை கையாண்டு, அவர்களது பதுக்கிய பொருள் அழிவடைய விட வேண்டும்.
  17. முதலில், நீங்கள் போய்விட்டு வந்து உங்கள் அனுபவத்தை சொல்லுங்கள். அதன் பின் நான் தொடர்கிறேன். வியட்நாமுக்கு ரிக்கெட் போட முண்டியடித்தீர்கள், அதனால் இலகுவான வழி சொன்னேன். அவ்வளவுதான்.
  18. நலம் பெற்று நீடு வாழ வேண்டும் என பிரார்த்திக்கிறேன்.
  19. ஏன் ஏராளன், இதே முகாமுக்கு முன் மக்கள் கூடி நின்று இராணுவத்தை அகற்றவேண்டாமென போராட்டம் செய்யும் போது படத்துடன் பத்திரிகைகளில் வெளி வந்ததே? அதை ஒருக்கா முடிந்தால் தயவு செய்து தேடியெடுத்து இணைத்து விடவும். அன்றைய படமும் இன்றைய படமும் ஒரே மாதிரியாக இருக்கிறது. ஆனால் போராட்டத்தின் காரணம் மட்டும் முன்னுக்கு பின் முரணாக இருக்கிறது. போதைப்பொருள் கடத்தல், அடாவடி நடக்கிறது. போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதில்லை, ஆகவே இராணுவ பாதுகாப்பு தங்களுக்கு வேண்டுமென்று போராடினார்களே? அது வேறை பிரதேச மக்களா?
  20. நாட்டுக்குள் கடல்வழியாக வரும் போதைப்பொருட்களை, இந்திய கடற்தொழிலாளரின் அத்துமீறல்களை கட்டுப்படுத்த முடியாதவர்களுக்கு பதவியுயர்வு. இதைவிட நம்மவர் சாதித்தவை மேலானவை. அவற்றை கட்டுப்படுத்தாமைக்கு உயர்வு வழங்குகினமோ?
  21. தயார் போலிருக்கே! விரும்பியவர்கள் விண்ணப்பிக்கலாம். வியட் னாம் எல்லாம் போகவேண்டியதில்லை. என்னென்ன சாதனையெல்லாம் படைக்கிறார்கள். ஆண்டவன் கொடுத்த உடலையும் ஆரோக்கியத்தையும் வைத்து.
  22. இதே மக்கள்தான் இராணுவம் வெளியேறக்கூடாது, அவர்கள் வெளியேறினால் தமக்கு பாதுகாப்பில்லை என்று கூறி போராட்டம் செய்தார்கள் முன்பு.
  23. ம்.... பொறுத்துக்கொள்ளலாந்தான், ஐந்து வருடங்களின் பின் எலும்பும் மிஞ்சாது, பின்னெப்படி, யார் அனுராவை வீட்டுக்கனுப்புவது? கொஞ்சம் யோசியுங்கள்! இதுதான், ஒரு பிரச்சனையை வேறொரு பிரச்சனைக்குள் செருகுவது என்பது.
  24. ஐயோ, மாத்தையாவை தோற்கடித்து வரலாற்றுதுரோகத்தை செய்து, வாழ்நாள் முழுவதும் பழியை சுமக்காதீர்கள்.
  25. ஐயோ.... எனக்கு சிங்களம் தெரியாது, ஆளை விடுங்கோ! அதனாற்தான் சிங்களம் தெரிந்த கள உறவுகளை நெடுநாளாக வேண்டுகிறேன்.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.