இது தண்டிக்கும் விதமல்ல. சிறுவனுக்கு தான் பேசியதின் பொருள் தெரியாது, தான் யாரிடம் இருந்து அந்த வார்த்தையை கற்றுக்கொண்டாரோ அவர் தண்டிக்கப்படாமல் தான் மட்டும் தண்டிக்கப்படுவது அவனை எதிர்காலத்தில் பல சந்தேகங்களுக்கு, அவநம்பிக்கைகளுக்கு, குழப்பங்களுக்கு ஆளாக்கும். அநேகமாக சிறுவர்கள் தாங்கள் அதிகம் நேசிக்கும் நபர்களையே பின்பற்றி பாவனை செய்வதும், பேசுவதும் உண்டு. இந்தப்பராயத்தில் தண்டிப்பதை விடுத்து அன்பாக எடுத்துக்காட்டி அரவணைத்து அவனது சூழலை தக்க அமைக்க உதவ வேண்டும். நான்கு வயது சிறுவனின் ஆரம்ப பாடசாலை அவனது குடும்பமே. ஆகவே குடும்பத்தினரை அழைத்து பேசியிருக்கலாம், ஆனால் வீட்டில் சிறுவன் தண்டிக்கப்பட வாய்ப்பிருக்கு. ஆகவே சமுதாயத்தில் விழிப்புணர்வு, பொறுப்புணர்வு அவசியம்.