Jump to content
களத்தில் உள்நுழையும் வழிமுறையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. மேலதிக விளக்கங்களிற்கு

satan

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  4,099
 • Joined

 • Last visited

Everything posted by satan

 1. இவரது கடந்த காலத்தைப்பற்றியும் எடுத்துச் சொல்லலாம். தாவும் அரசியல்வாதிகள் ஒருவர் மற்றொருவரைப்பற்றி அலசி ஆராய்கிறார்கள்.
 2. அதிகார்பூர்வமான சந்திப்பா அல்லது நட்ப்பு ரீதியிலானதா? எனக்கென்னவோ சுரேன் ராகவன் நினைவில் வந்து தொலைக்கிறார்.
 3. ஈழத் தமிழர்களிற்காக அரசியல் செய்யும் கட்சிகள் இந்திய அரசு கோபிக்குமே என எண்ணி எமது உரிமையினை அடைவு வைப்பதாகவும் தேர்தல் காலம் வரும்போது இந்த தலைவர்கள் நாடிவரும்போது தகுந்த பதுலடி கிடைக்கும் என மீனவர்கள் கூறிவருகின்றனர். இந்திய மீனவர்களின் அத்துமீறலுக்கெதிராக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள போராட்டத்தில் பங்கு கொண்டால் இந்தியா தம்மீது கோபம் கொள்ளும் நிலை ஏற்படும் எனத் தெரிவித்து கூட்டமைப்பின் தலைவர்கள் அந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கு கொள்ளாது ஓடி ஒளிவதாக ஆர்ப்பாட்டத்தை ஒழுங்கு செய்தவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். கடல் பேரணி வெற்றிகரமாக நகர்த்த வண்ணம் உள்ளதாக ஏற்பாட்டாளர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார். தலை சுற்றுகிறது எனக்கு மட்டுமா? இதன் பொருளை யாரேனும் தெரிந்தால் விளங்கப்படுத்துங்களே!
 4. இது வெற்றிகளிப்பின் உச்சக்கட்டத்தின் அறிகுறியல்லவா?அதாவது வெற்றியை விழாவாக கொண்டாடும் முறை.
 5. வடக்கில் கேட்ட வசனந்தான், கொஞ்சம் மாற்றி பேசுகிறார். எல்லா அடிமைகளும் பேசும் வசனம். இப்போ இவர்களின் எஜமானர்களுக்கு இவர்களை வைத்து பொம்மலாட்டம் ஆட நேரமில்லை. எப்படி புலம்பெயர்ந்தவர்களை தன் வலையில் வீழ்த்துவது என்பதே கவலை.
 6. நாடு முழுவதும் உள்ள திருமணச் சடடந்தானே, இது என்ன புதுசா மலைநாட்டுத் திருமணம் என்று குறிப்பிடுகிறார்கள்? எதையோ மறைக்க முயலுகிறார்கள்.
 7. அது ஏது...... இவரது பதவிக்காலத்தில் நடந்தது அப்போ மௌனம், இப்போ நீதி தேடுகிறார். சமரசம் படிந்ததோ?
 8. அழைத்து வந்து வேடிக்கை பார்த்தவர்களே துரத்தியடிக்கும் நிலை வந்துவிட்டது. வடக்கு, கிழக்குத்தான் காப்பாற்ற வேண்டும் அவர்களை. காப்பாற்றுவார்கள் அதில் சந்தேகமில்லை.
 9. எத்தனை முறை அறிவுறுத்தப்பட்டிருந்தது, எச்சரிக்கை விடப்பட்டது. இது அவர்களாகவே தேடிவந்தது. இந்திய மத்திய மாநில அரசுகளே இதற்கு பதில் சொல்ல கடமைப்பட்டுள்ளது.
 10. அவர் மறுத்துழுகிறார். பிலத்து கதைக்காதீங்கோ! இப்ப ஒராள் அவர் கமக்காரன் என்பதார்த்தான் அவர்மேல் இவ்வளவு விமர்சனம் என்று இன்னொரு பட்டியலோடு ஓடி வரப்போறார்......
 11. இவர் ஏதோ தெரியாமல் பேசுறார் போலுள்ளது. எதற்கும் ஒருக்கா எங்கட சட்டாம்பியிடம் விளக்கம் கேட்டுபாப்போம்.
 12. மாகாணசபைத் தேர்தல் நடத்தப்படலாம் என்று ஒரு கதை அடிபடுகிறதே.... உண்மையா? வானம் கறுத்தால் மழை வரும்.
 13. திண்ட பாற்சோறு எல்லாம் வெளியேறிய பின் இவர் இப்போ இதுகளை பேசி அமைதியாக இருக்கும் எம்மவர்களை சீண்டி வேடிக்கை பாக்கப்போறார். கொஞ்சம் பொறுங்கோ வரிசையில் வருவினம் பாடம் எடுக்க.
 14. அதே.....! சொந்தநாட்டில் சோரம்போனதுகளை வைத்து தமிழரை ஏமாற்றுவதுபோல், புலம்பெயர் தேசத்திலும் களமிறக்கப்பட்டவர்களை ஒரு அமைப்பாக, ஏதோ ஒரு பெயரில் அழைத்து பேசலாம். என்ன பேசப்போகினம்? கூடியிருந்து கதைபேசி, கூத்தடித்துவிட்டு சிங்களம் ஒரு அறிக்கை விடும், இவர்களும் ஆமாம் போடுவினம். தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு கண்டாச்சு.
 15. அப்போ சுமந்திரன் த .தே . கூட்டமைப்பின் உறுப்பினர் இல்லையா? ஐயா கடலில் இறங்கி நிற்பதைப்பார்த்தால் அப்படிபோல்தான் உள்ளது. கடல் ராஜாவுடன் கைகோர்க்கலாம், கூட்டணி வைக்கலாம் என்று நினைத்திருப்பாரோ? கடல் பேரணி வெற்றிகரமாக நகர்த்த வண்ணம் உள்ளதாக ஏற்பாட்டாளர்களில் ஒருவரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
 16. என்னைப்பொறுத்தவரை இந்தியா நல்லது செய்யும் என்று நான் ஒருபோதும் நம்பவில்லை, நம்பப்போவதுமில்லை. எங்களின் இந்த கையறு நிலைக்கு முக்கிய காரணமே இந்தியாவின் நயவஞ்சகமே. ஆனால் சுமந்திரனின் சுத்துமாத்துக்களை எல்லாம் கிறிஸ்தவத்துக்குள் இழுத்து மூடி, கிறிஸ்தவர்கள் எல்லோரும் சுத்துமாத்துகள் என்கிற பிம்பம் ஏற்படக்கூடாது. கிறிஸ்தவ பாதிரிமாரே சுமந்திரனிடம் பல கேள்விகள் எழுப்பியுள்ளனர்.
 17. இதற்கு பின்னும் பொறுத்திருக்க மாட்டீர்கள் என்பது தெரிந்துதான் அழைத்தேன் தங்களை. தங்களது வருகைக்கு நன்றி. நிற்க! இங்கு யாருக்கும் சுமந்திரனின் சாதி, சமயம், இன்னோரன்ன சொந்த விஷயங்களை பற்றி தெரியாது, கதைப்பதுமில்லை, அது பிரச்னையுமில்லை. அவரது சுத்து மாத்துகளையே தெரியும் அதுபற்றியே பகிர்வோம். ஆனால் நீங்களோ விலாவாரியா அவரைப்பற்றிய எல்லாத் தகவல்களையும் தெரிந்து வைத்திருக்கிறீர்கள், இங்கு அதை வெளியிட்டுமிட்டிருக்கிறீர்கள். பின், அவர் வேதக்காரன் என்பதார்த்தான் எல்லோரும் விமர்சிக்கிறார்கள் என்று வேறு குற்றஞ்சாட்டுகிறீர்கள். அப்படி குற்றஞ் சுமத்தும் உங்களுக்கு சாள்ஸ் நிர்மலநாதன், செல்வம் அடைக்கலநாதன், இன்னும் இருவர் பெயர் மறந்து விட்டேன். ஒருவர் முன்னாள் யாழ் மாநகர முதல்வர், மற்றவர் சொலமன் மத்தியூ என்று நினைக்கிறன், ரொனால்டு ஆனோல்ட்? கிறிஸ்தவர்கள். அவர்கள் மேல் குற்றச்சாட்டு வைக்கவில்லை என்று புரியவில்லையா? அல்லது சுமந்திரன் விசுவாசம்: அவர் மட்டுந்தான் கிறிஸ்தவர் என்று ஏற்கும் உங்களால் இவர்களை கிறிஸ்தவர் என்று ஏற்கவும் மனம் வரவில்லையோ? அவரைப்பற்றிய இவ்வளவு தகவலும் தெரிந்த நீங்கள், அவருக்காகவே அழும் நீங்கள், அவரின் உறவா? அல்லது நட்பு வட்டாரமா? அதற்கும் இந்தியாவையும், கிறிஸ்தவத்தையும் தொடர்புபடுத்தாதீர்கள். சிறில் மத்தீயூ....?
 18. காந்தி சொன்னது மட்டுமே. அவரின் வாழ்வு எப்படி இருந்தது என்பது இந்தியர்களுக்கு மட்டுமே தெரிந்திருக்கும். அல்லது கோவிற் பூனை தேவரை மதியாதோ? ட்
 19. இன உணர்வு இல்லாவிடினும் நீதி, நியாயம், தர்மம் கூட இல்லாதவர்களாயிருப்பதாலே அவர்களால் அப்படி செயற்பட முடிகிறது. அநிஞாயத்தை நிஞாயப்படுத்தவும், தலையில் வைத்து கொண்டாவும் முடிகிறது.
 20. கனிய வளங்கள் இருக்கோ, இல்லையோ உதய கம்மன்பில கத்திக் கத்தி தொண்டை வரளப்போகிறார். விடுதலைப்போராட்டத்தை பயங்கரவாதமாக்கி பிழைப்பு நடத்தியதுபோல் எல்லாவற்றிலும் பிழைப்பு.
 21. பேசாமல் தாழை அச்சிட்டு ஒவ்வொரு குடும்பத்துக்கும் கொடுத்து, அதை பார்த்து பசியாற சொல்ல வேண்டி வரப்போகுது. ஒரு நாளைக்கு ஒரு வேளை மட்டும் சாப்பிடுங்கள், என்று ஆலோசனை வழங்கியவர்கள் இதையும் சொல்லலாம்.
 22. வேண்டும் போது தடை விதிப்பு, வேண்டாத போது தடை எடுப்பு. ஹா..... ஹா.... சிங்களவன் மகா புத்திசாலி இல்லாவிட்டாலும் நாங்கள் இருக்கிறோம் சொல்லிக்கொடுக்க!
 23. இவருடைய தலையாய பிரச்சனை: ஏனைய தமிழ்க்கட்சிகளே! இதையே மீனவரிடம் போனாலென்ன, விவசாயிகளிடம் போனாலென்ன, பல்கலைக்கழகம் போனாலென்ன தன் பிரச்சனையை முதலில் புலம்பி அவர்களிடம் தீர்வு கேட்டுக்கொண்டிருக்கிறார். இவரோ கடற்தொழில் அமைச்சர். தங்கள் பிரச்சனையை தீர்க்கவில்லை என்று சம்பந்தப்படடவர்கள் குறைகூறுகின்றனர். இவரிடம் போய் விவசாயிகள் பிரச்சனையை கூறும் கூறு கெட்டவர்களா இவர்கள்? அதுவரை விவசாயிகள் விவசாயத்தை கைவிட வேண்டும் என்பது இவரது ஆலோசனை. எந்த அறிவும் இல்லாதவர்களிடம் அமைச்சுப்பதவி, மாற்று வழி காணாமல் தடை போட்டதன் காரணம்: நாட்டின் வங்குரோத்து நிலைமை. அதை மறைக்க முட்டாள்த்தனமான விளக்கம். வெறும்பானையில சோறு அள்ளப்போகினமாமல்லே!
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.