Everything posted by நீர்வேலியான்
-
சிரிக்க மட்டும் வாங்க
வேறு ஒருவரும் இணைத்த மாதிரி தெரியவில்லை. Situation இற்கு பொருத்தமாக இருக்கும்😎
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
அண்ணை, சம்பலுடன் குண்டு தோசை அந்த மாதிரி இருக்கும். அடிக்கடி தோசை செய்பவர்கள், இடக்கிடை குண்டு தோசை செய்து சாப்பிட்டு பார்த்தால் வித்தியாசம் விளங்கும்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
வீட்டில் குண்டு தோசை என்று ஒன்று செய்வோம், கிட்டத்தட்ட இப்பிடியான ஒரு சட்டிதான்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
புது வகையான குழம்பாக இருக்கு! கட்டாயம் செய்து பார்க்க வேண்டும்
-
மலரும் நினைவுகள் ..
இது எங்கே உள்ளது? இந்தளவு வசதியாக பார்த்ததில்லை. கோவில் திருவிழா முடிவில் அல்லது இதற்கென ஒரு திறந்த வெளியில் ஓர் பெரிய திரையை வைத்து படம் போடுவார்கள். ticket எடுக்காமல் வரும் ஆட்களை தடுக்க, சுத்த வர தகரம் அல்லது கிடுகால் அடைத்து விடுவார்கள். சின்ன வயதில் அந்த வேலிக்கு உள்ளாலே கள்ளமாக பூருவது பெடியளுக்கு ஒரு திரில்
-
மலரும் நினைவுகள் ..
இதை ஞாபகபத்தியத்துக்கு நன்றி! இது மழைக்காலத்துக்கு பிறகு எங்கே போகும்? மசுக்குட்டி போல் வேறு ஒன்றாக மாற்றம் அடையுமா? இதை பார்த்தவுடன் மசுக்குட்டியின் ஞாபகம் வந்து விட்டது
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
தோடம்பழ இனிப்பு என்று எங்களூரில் சொல்லுறது. இருக்கிறதிலேயே மலிவானது இதுதான். 25 சதம் கொடுத்தாலே நிறைய அள்ளித்தருவாங்கள். அங்கு பல பெடியளின் பொருளாதார நிலைமை, கிடைக்கும் pocket money இதை மாத்திரமே வாங்கி சாப்பிடும் நிலையில் இருந்தது
-
மலரும் நினைவுகள் ..
இதை சில வீடுகளில் மாத்திரமே பார்த்துள்ளேன், எல்லோரும் வைத்திருப்பதில்லை, பயறு போன்றவற்றை உடைக்க பாவிக்கிறவர்கள் என்று நினைக்கிறன், இல்லையா?
-
மலரும் நினைவுகள் ..
அணில், எலி அடிக்கவும் பாவிக்கிறவர்கள். ஒரு சீசன்இற்கு பெடியள் personal ஆயுதம் போல பொக்கெட் இல் கொண்டு திரிவார்கள்.
-
மலரும் நினைவுகள் ..
ஒவ்வொருத்தரும் தங்களுக்கென ஒரு லக்கி மார்பிள் வைத்திருப்பார்கள், அதற்கு '"அடியன்" என்று சொல்லுவார்கள், அதாவது நன்றாக அடிக்கும் என்ற பொருளில் இதுக்கு உண்மையிலேயே வெள்ளை paint அடிப்பார்களா? இல்லாவிட்டால் வேறு வகையான ஒரு பூச்சா?
-
மலரும் நினைவுகள் ..
இப்பொழுது சிறிது ஞாபகம் வருது. சிப்பி கோடு என்றும் சொல்லுவதுண்டு. நினைவுகளை இரைபோட உதவிய எல்லோருக்கும் நன்றி. இந்த காலங்களை, இச் சூழ் நிலைகளை இனி எமது வாழ்க்கையில் காணமாட்டோம் என்பது மனதுக்கு பாரமாக இருக்கு. எமது பிள்ளைகளுக்கு அம்மா அப்பா இப்படித்தான் வாழ்ந்தார்கள், இப்படி ஒன்று இருந்ததே தெரியாமல் போகப்போகிறது.
-
மலரும் நினைவுகள் ..
அண்ணை நீங்கள் துலாவில் பரத நாட்டியம் ஆடி இருக்கிறீங்கள். நானும் ஏறி இருக்கிறேன். இப்பொழுது நினைத்தால் பயமாக இருக்கு. அப்பொழுது பக்கத்து வீடு, முன் வீடு, கோவிலடி, பக்கத்து ஊர் என்று சொல்லிக்கொள்ளாமல் போவது எல்லோருக்கும் சாதரணமாக இருந்தது. மழையால் முட்டி இருக்கும் குளத்துக்குள் குதிப்பது , நீந்துவது இயல்பாக இருந்தது. இங்கை இப்ப நாங்கள் எங்கள் பிள்ளைகளை வீட்டின் முன்னாள் இருக்கும் ரோட்டில் தனியாக விளையாட விட முடிவதில்லை. றொபின் ஞாபகம் உள்ளது. ஊசிலி என்று ஒரு இயந்திரம் ஆரம்பகாலங்களில் famous. இதை கைகளால் தொடர்ந்து சுழட்டுவதான் மூலமே startபண்ண முடியும்.Alcon என்ற ஒரு வகையும் பாவிப்பார்கள். இவை எல்லாம் பெரியவை. பிற்காலதில் வந்தவை horse power குறைந்தவை
-
மலரும் நினைவுகள் ..
நானும் இந்த விளையாட்டுகளை பெண்கள் போன்று விளையாடி இருக்கிறேன் 😃 மறக்க முடியாத காலங்கள்
-
மலரும் நினைவுகள் ..
சிறி, இதுக்கு ஷாக் absorber என்ற ஒன்று இருக்கிறமாதிரி இல்லை, இதன் குலுக்கல் அந்தமாதிரி, அதனால் இப்பிடி சொல்லுவது என்று நினைக்கிறேன். உங்கள் ஜட்டி அனுபவம் புல்லரிக்க வைக்குது!!
-
மலரும் நினைவுகள் ..
இதற்கு வேறு ஒரு பெயரும் சொல்லுவார்கள், உடனடியாக ஞாபகம் வருகுதில்லை
-
மலரும் நினைவுகள் ..
சிறி, இந்த தட்டி வான் அனுபவங்கள் மறக்கமுடியாதவை. இதை எழுதலாமா என்று தெரியவில்லை, தட்டி வானிலும், ட்ராக்டர் இலும் பெடியல் அடிக்கடி ஏறி இருக்கக்கூடாது என்று ஊரில் சொல்லுவார்கள். அப்பிடி இருந்தால் சந்ததி வராது என்று வெருட்டுவாங்கள்😄 இதில் அடிக்கடி போற சில பெடியல் பயத்தில் நின்றுகொண்டு போவாங்கள். இது சாவகச்சேரி நெல்லியடி ரூட் இலும் கொடிக்காமம் நெல்லியடி ரூட் இலும் பிரபலம். சங்கானை, அச்சுவேலி பக்கமும் பார்த்திருக்கிறேன். ஆச்சரியமாக இங்கே அமெரிக்காவில் இருக்கும் school busஉகள் இதே போன்ற ஒரு முன்பக்க தோற்றத்தை கொண்டிருக்கும் ஆனால் புதிதாக இருக்கும்
-
மலரும் நினைவுகள் ..
இதை நான் பார்த்ததில்லை! இது அங்கு பரவலாக பாவிக்கப்பட்டதா அல்லது ஒரு சில பிரதேசங்களுக்கு உரியதா?
-
மலரும் நினைவுகள் ..
சிறப்பான இரை மீட்டல். தட்டி வான் மறக்க முடியாதது, அதில் போவது ஒரு அனுபவம். எனக்கு உடனடியாக ஞாபகம் வரும் பொருட்கள் லாண்ட்மாஸ்டர், ட்ராக்டர், இதைவிட நாற்சார வீடு, கொத்து (அரிசி அளக்க பயன்படுவது), பத்தாயம் (அரிசி சேமிக்க பயன்படுவது), கிடாரம், பித்தளை தாம்பளம். இவை எல்லாவற்றினதும் படங்கள் கிடைக்கவில்லை. எனது வீடும் ஒரு பழைய நாற்சார வீடு. எனது வீட்டுக்கு முன்னாள் இருக்கும் வீட்டின் முகப்பு சரியாக இதே போல இருக்கும்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
அண்ணை, வெட்கமாகத்தான் இருக்கிறது. வாழைக்குருத்து ஞாபகத்துக்கு வருகுதே இல்லை.வயது போய்க்கொண்டு இருக்கு 🙄
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சிறு வயதில் பருத்தித்துறையில் சில நாட்கள் தங்கியபோது வாங்கி சாப்பிட்டது ஞாபகம் வருகிறது. மிகவும் சுவையாக இருக்கும். சுவையான மஞ்சள் தோசையும் இடித்த சம்பலும் கூட இப்பிடி வாங்கியதாக ஞாபகம். அந்தந்த இடங்களும் சூழ்நிலைகளும் சில உணவுகளுக்கு அதிக சுவை சேர்ப்பன , இதே மாதிரி இப்ப வீட்டில் செய்து சாப்பிட்டாலும் அந்த சுவை வருவதில்லை. இப்பவும் இப்பிடி செய்து விக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக உள்ளது தென்னை பனையில் நிறைய குருத்து சாப்பிட்டு இருக்கிறேன். வாழையிலும் குருத்து சாப்பிடுவதுண்டா? ஞாபகம் வரவில்லை.
-
பெயர் மாற்றங்கள்.
நன்றி! நீர்வேலியான் என்று மாற்றி விடுங்கள்
-
பெயர் மாற்றங்கள்.
எனது Display பெயரை தமிழில் மாற்ற முயற்சிக்கிறேன், முடியவில்லை. உதவி தேவை