Everything posted by நீர்வேலியான்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
இதில் யாழ்ப்பாணத்தில் இருந்து போட்டியிட்ட வெண்ணிலா விருப்பு வாக்குகளின் அடிப்படையில் தெரிவு செய்யப்படவில்லை என்று நினைக்கிறேன், மற்ற மூன்று தமிழ் பெண்களும் வெற்றி பெற்றுள்ளார்கள்
-
பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் - 2024
தமிழ் இடங்கள் ஒருபுறத்தில் இருக்க, எப்பிடி இருந்த மஹிந்த ராஜபக்சே, தம்பி கோத்தா வந்து கட்சியை ICUவில் படுக்கவைத்துவிட்டு போய்விட்டார்
-
அனுராவின் ஆள் என்று வவுனியாவில் அட்டகாசம் .
உங்கள் பழைய சிங்கள நண்பி இடதுசாரி அல்லது ஜேவிபி ஆ?
-
முல்லை மக்கள் என்பிபியை நோக்கி படையெடுப்பு.
பையன், இவர்கள் பேட்டி எடுக்கிற எல்லாரையும் காட்டுகிறார்களா அல்லது சார்பாக பேசுகிறவர்களின் பேட்டிகளை மாத்திரம் போடுகிறார்களா என்று இந்த youtube காணொளிகள் மீது எனக்கு எப்பவுமே ஒரு சந்தேகம் உள்ளது. எல்லோரும் அப்பிடியே மாறிவிட்டார்கள் என்று நம்ப முடியவில்லை.
-
மதுபான விற்பனை நிலையங்களுக்கு வழங்கப்பட்ட அனுமதி பத்திரங்கள் உடன் நடைமுறைக்கு வரும் வகையில் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.அநுர அதிரடி உத்தரவு - தமிழ் அரசியல்வாதிகள் உட்பட பலர் அதிர்ச்சி
விக்கியின் நிலைமை பரிதாபமாக உள்ளது, பெயரை நல்லா டேமேஜ் பண்ணீட்டாங்கள். சந்தானத்தின் நகைசுவை மாதிரி போய்விட்டது " அவனவன் பத்து பதினைந்து பார்களை வைத்துக்கொண்டு நிம்மதியாக இருக்கிறாங்கள், ஒரேயொரு பார் லைசென்ஸ் ஐ கொடுத்துவிட்டு நான் படுகிற பாடு இருக்கே" என்பதுபோல அவரின் நிலைமை .
- மேன்மைதங்கிய ஜனாதிபதியாக ஒரு தோழர்
-
அநுர குமார திசாநாயகவும் அவரது கட்சியும் தமிழர்களுக்கெதிராக நடத்திய, நடத்திவருகின்ற செயற்பாடுகளின் நாட்காட்டி
உங்களிடம் ஒரு கேள்வி, இப்போதிருக்கும் நிலையில், அங்கிருப்பவர்கள் என்ன செய்யலாம், அல்லது என்ன செய்ய வேண்டும் என நினைக்கிறீர்கள்? கொஞ்ச நாட்களுக்கு முன்பும் அங்கு போயிருந்தேன், மக்களின் சிந்தனைகள், தேவைகள் மாறிக்கொண்டு இருக்கின்றது. காலம் அதுபாட்டுக்கு மாற்றங்களுடன் போய்க்கொண்டிடுகிறது நாங்கள் சிலர் இங்கே கடந்த காலத்தில் தங்கிவிடுகிறோம், இவர்கள் இனப்பிரச்சினையை தீர்ப்பார்கள் என்று நம்பவில்லை. ஆனால் கப்பம், ரவுடித்தனம், அரசியல் தலையீடுகள், இராணுவத்தலையீடுகள்,மதத்தலையீடுகள், குடியேற்றங்கள் கொஞ்சம் குறையலாம், மக்கள் மூச்சுவிடுவதுக்கு கொஞ்சம் அவகாசம் கிடைக்கும். கொஞ்ச நாளில் இவர்கள் எப்பிடி என்று எல்லாம் தெரிந்துவிடப்போகிறது. தமிழர் தரப்பில் இருந்து வீசும் ஆதரவுஅலை, இதுவரை இருந்த சிங்கள தேசியக்கட்சிகள், தமிழ் கட்சிகளிலும் பார்க்க இவர்கள் பரவாயில்லை என்று தற்போது நினைப்பதால் வந்தது. பழைய முறையிலேயே எல்லாம் நடந்தால், இந்த அலையில் தற்போது உள்வாங்கப்படுபவர்கள் வெளியே வந்துவிடப்போகிறார்கள், எதுவுமே நிரந்தரமில்லை
-
மேன்மைதங்கிய ஜனாதிபதியாக ஒரு தோழர்
5% இருந்த கட்சி தீடீரென ஆட்சியை பிடித்ததுக்கு காரணமே பொருளாதார சீரழிவு. பொதுவாகவே இடதுசாரிகள் பொருளாதாரத்தை கீழ் நோக்கி தள்ளுவதில் கெட்டிக்காரர்கள், இவர்கள் தனியார் மயமாக்கும் திட்டங்களுக்கு ஆதரவு அளிக்கப்போவதில்லை. எனினும் அனுராவுக்கு அவர்களுக்கு கிடைத்த வாக்குகள் நோக்கம் புரிந்திருக்கும், முரட்டுத்தனமாக இடதுசாரி கொள்கைகளை அமுல்படுத்த மாட்டார்கள் என்று நினைக்கிறன், பார்ப்போம். தற்பொழுது, அரசாங்க செலவீனங்களை குறைப்பதிலும், ஊழல் பணத்தை வெளியே கொண்டுவரும் முயற்சியில் இருக்கிறார்கள் போலுள்ளது. கிடைத்த சந்தர்ப்பத்தில் பெரிய மாற்றங்களை செய்ய முடிந்தால், அரசியலில் இவர்களுக்கு பொன்னான எதிர்காலம் உள்ளது.
-
தமிழக அமைச்சரவை மாற்றம்: உதயநிதிக்கு துணை முதல்வர் பதவி!
வெட்கமே இல்லாமல் இந்த வயதில், அனுபவங்கள் இன்றி வந்திருக்கிறார்.
-
லெபனான் மீதான இஸ்ரேல் தாக்குதலில் 492 பேர் பலி - பதிலடியாக ஹெஸ்பொலா 200 ராக்கெட்டுகள் வீச்சு
குர்திஷ்காரரும் அப்பிடியா? அவர்களிடம் மதவெறி குறைவு என்று நினைத்திருந்தேன்
-
விசா பிரச்சினைக்கு அநுர அரசாங்கத்தின் உடனடி தீர்வு.
பழைய முறை சிறப்பாகவே இருந்தது , கேள்விகளும் குறைவு, காசும் குறைவு, விசாவும் உடனே வந்து விடும். இந்த புதிய முறையில் நான் சில மாதங்களுக்கு முன் எடுக்கவேண்டி வந்தது. இந்த website சரியாகவே இயங்கவில்லை, நிறைய கேள்விகள், 50 டாலர்கள் கட்டவேண்டி வந்தது. நான் நினைக்கிறேன் , இந்தியாவிடம் வாங்கிய கடன் காசுக்கு, இந்த நிறுவனத்துக்கு கொடுக்க அங்கிருந்து உத்தரவு வந்திருக்கும்
-
ஹரிணி அமரசூரியவின் முள் பயணம்
அவர் மாறிக்கீறி, ஓமெண்டு தந்தாலும் நீங்கள் விடமாட்டியல் போல இருக்கு
-
ஹரிணி அமரசூரியவின் முள் பயணம்
நீங்கள் முதலில் எங்கள் கமிஷனை வெட்டுங்கள், அது வந்தால் பிறகு, உங்களுக்கு பார் லைசென்ஸ் எடுத்துத்தரலாம்
-
ஹரிணி அமரசூரியவின் முள் பயணம்
பேராசிரியர் அபயக்கோன் ஒரு நல்ல தெரிவு. உங்கள் காலத்துக்கு பிறகு இவர் கனடா சென்று, பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்துவிட்டு, நாங்கள் படித்து முடிக்கும் காலத்தில் மீண்டும் பேராதனை பொறியியல் பீடத்துக்கு விரிவுரையாளராக வந்தார். எல்லோருடனும் நன்றாக பழகுவார், எனது ஊர் நண்பன் இவர் கனடா Vancouver நகரில் இருக்கும் பொது இவருடன் நல்ல பழக்கம், அதன் காரணமாக அப்பொழுது இவருடன் சில தடவைகள் தனிப்பட்டும் உரையாட முடிந்தது. எல்லோராலும் விரும்பப்படும் ஒருவர், முக்கியமாக தமிழ் மாணவர்களால் விரும்பப்பட்ட ஒருவர்
-
திடீரென வெடித்துச்சிதறிய ஹெஸ்புல்லா அமைப்பின் உறுப்பினர்களின் பேஜர்கள் - நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் காயம்-
ஹமாஸ் போன்ற இயக்கங்கள் தோன்றுவதற்கும் வளர்வதற்கும், இவர்களின் பல செயற்பாடுகள் காரணம். இதனால்தான் பாலஸ்தீன விடுதலை இயக்கம் படிப்படியாக வலுவிழந்து போனது
-
நுணாவிலான் அவர்களின் தந்தையார் இயற்கை எய்தினார்
நுணாவிலானுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்
-
வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
கவனம் அவங்கள் உங்களை பிடிச்சு கட்டாயமாக 15 மணி நேரம் இந்த வேலை செய்ய சொன்னால், இரண்டு நாளில் மேலே போய் சேர்ந்துவிடுவோம்
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
இங்கு நடப்பதை, முன்முடிவுகளுடன் அணுகுபர்களுடன் பேசி புரிய வைக்க முடியாது. நான் கமலா அக்காவுக்கு வாக்கு போடப்போவதது அவரின் திறமைக்காக அல்ல, டிரம்ப் எனும் மறைகழண்டவர் வந்துவிடக்கூடாது என்பதற்காகவே, வேறு தெரிவுகள் இல்லை
-
வேலை செய்யும் இடங்களில் உடலுறவு – ரஷ்ய ஜனாதிபதி அதிரடி அறிவிப்பு!
ஈழப்பிரியனுக்கு கூச்ச சுபாவம் அதிகம். எங்களுடன் பப்ளிக் ஆக வர மாட்டார். எப்பிடியும் ஒரு தனி வண்டியில் முக்காடு போட்டுகொண்டு வந்து இறங்குவார்.
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
கிருபன் நகைசுவையாத்தான் எழுதினார் என்று தெரியும். ஆம் பழைய சிவப்பு கட்சி இப்போது செத்துவிட்டது. இவருக்கு முன் அந்த கட்சியில் சிறந்தவர்களும் இருந்தார்கள், சட்டத்தை மதிப்பவர்களாகவும், எதிர்குரல் கொடுப்பவர்கள் என்று ஒரு ஒழுங்கு முறையுடன் இருந்தது. தற்பொழுது இவருக்கு எதிராக அந்த கட்சியில் இருந்து ஒருவருமே பேசமுடியாது. இந்த நாட்டில் இப்பிடியும் நடக்குமா என்ற அளவுக்கு, கிட்டத்தட்ட கோத்தபயா, மோடி கட்சி நடத்துவதுபோல் கொண்டுவந்துவிட்டார். இவர் திரும்ப பதவிக்கு வந்தால் அநேகமாக பாலஸ்தீனத்துக்கு அடி இன்னும் மோசமாக இருக்கும். கடுமையான இனவாதி, இங்கு ஜனாதிபதி வேட்பாளர்கள், புள்ளி விபரங்களுடன் வார்த்தைகளை அளந்துதான் பேசுவார்கள், இப்படி நாயை, பூனையை சாப்பிடுகிறார்கள் என்று பொதுவெளியில் பேசி கேட்டதே இல்லை, வெட்கமாக உள்ளது
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
இவர் பொருளாதாரத்தில் பெரிதாக ஒன்றுமே செய்ததில்லை. ஒபாமா காலத்தில் இருந்த பொருளாதர வளர்ச்சியின் தொடர்ச்சியில் காலத்தை ஒட்டினவர். இவரின் காலத்திலத்தான் இரான் உடனான உறவுகள் மோசமாகின, இரானுடனான ஒப்பந்தத்தை முறித்தார், தளபதி சுலைமானியை கொன்றார். ஜெருசலேம் நகரம் இஸ்ரேலின் தலைநகரம் என அங்கீகரித்து அமெரிக்க தூதரகத்தை அங்கு மாற்றினவர். அதுவரை எல்லா அமெரிக்க ஜனாதிபதிகளும் இதை கிடப்பில் போட்டு வைத்திருந்தார்கள். பாலஸ்தீனினியர்களின் கடும் எதிர்ப்பாளர். மத்தியகிழக்கில் இன்று நடக்கும் பல பிரச்சனைகளுக்கான விதை இவரது ஆட்சில் போடப்பட்டது. இவரது நண்பர்கள் புடின், மோடி, கிம் யங், துருக்கி மற்றும் பிரேசில் தலைவார்கள், சொல்லி வேலையில்லை
-
அமெரிக்கா: டிரம்ப்பை கொல்ல மீண்டும் முயற்சி...? துப்பாக்கி சூட்டால் பரபரப்பு
எனக்கு ஒரேயொரு கவலை, வாழ்க்கையில் எனக்கு முதன் முதலில் கிடைத்த ஓட்டளிக்கும் உரிமையை பாவித்து 2016இல் இந்த நபருக்கு வாக்களித்து விட்டேன். இதற்கு முதல் இலங்கையில் கூட வாக்களித்ததில்லை.
-
அமெரிக்க லாஸ்அங்கிலசஜல் 4.4 அளவு பூமிஅதிர்வு.
இடைக்கிடை இப்பிடி நடக்கும், பழகிவிட்டது
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
கையில் கிடைத்த வாய்ப்பை தென்னாபிரிக்கா கோட்டைவிட்டுவிட்டது. ஒரு கட்டத்தில் 6 விக்கெட்டுகளுடன், 5 வர்களில் 30 ரன்கள் மாத்திரமே அடிக்கவேண்டி இருந்தது.
-
யாழ் கள T20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி - 2024
இப்ப என்ன நடக்குது? யார் பைனலிற்கு போவார்கள்?