Everything posted by நீர்வேலியான்
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
ஈழப்பிரியன் சென்ற வழித்தடம் இங்கு பிரபல்யமானது, இது லாஸ் ஏஞ்சல்ஸ் நகரின் கீழ் எல்லையில் தொடங்கி, சான் பிரான்சிஸ்கோ நகரும் தாண்டி மேலே போய் முடிகிறது, உங்கள் கணக்கில் கிட்டத்தட்ட 1000 km தூரம் வரும், இதில் இவர் 700 km ஓடியிருப்பார். கடற்கரையால் செல்லும் மிகவும் அழகான ஒரு வழித்தடம், எல்லாமே விலை அதிகமான பணக்கார இடங்கள். beach, பிரபல wineries, mystery spot என்று நிறுத்தி பார்ப்பதுக்கு நிறைய இடங்கள் உள்ளது. இந்த வழித்தடம் slow என்றால் மாறி போவதுக்கு இதற்கு அருகிலேயே ஒரு freeway ஒன்றும் செல்கிறது.
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
சூப்பர், அமெரிக்காவும் ரஷ்யாவும் நேரடியாக சண்டை பிடித்தால், யாழ் களம் எப்பிடி இருக்கும் என்று யோசித்து பார்த்தேன். கனடாவுக்கு மேலே இருப்பதால், நம்ம கனடாகாரருக்குத்தான் அடி பலமாக விழும் இது உங்களுக்கே கொஞ்சம் ஓவர்ஆக தெரியவில்லையா?😀
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
நீங்கள் இருவரும் சொல்லுவது ஓரளவுக்கு உண்மை. இருவருமே அடிமை முறையை கொண்டுதான் தங்களை வளப்படுத்தினார்கள், மெக்ஸிக்கர்கள் அடிமை முறையை சட்டப்படி முதலில் முடிவுக்கு கொண்டு வந்தார்கள், அனால் அமெரிக்கா கொஞ்சம் லேட். ஆங்கிலேயர்கள் infrastructureஐ நன்றாக கவனித்து தங்களுக்கு உட்பட்ட இடங்களை வளப்படுத்தினார்கள், ஸ்பானியர்கள் இந்த விடயத்தில் அவ்வளவு சொல்லும்படியாக இருக்கவில்லை. இருவருமே இங்குள்ள மக்களுடன் கலந்த முறைகளில் வேறுபாடு உண்டு. வெள்ளை அமெரிக்கர்கள், பெரும்பாலானவர்கள் ஜெர்மானியர்கள், அடுத்து ஐரிஷ் உம் ஆங்கிலேயர்களும் , இங்குள்ள native மக்களுடன் அவ்வளவாக கலக்கவில்லை, ஆனால் ஸ்பானியர்கள் நன்றாகவே கலந்தார்கள். இதன் காரணமாக இந்தியாவில் இருப்பதுபோல் மெக்சிக்கர்களிடமும் ஒருவகை சாதி முறை உண்டு. கலப்பு குறைந்த, வெள்ளையின தோற்றம் கொண்டவர்கள் உயர் சாதிகளாகவும், நன்றாக கலந்தவர்கள் குறைந்த சாதிகளாகவும் கருதப்படுவதாக மெக்ஸிகோவில் இருந்து வந்த ஒருவன் சொன்னான், எவ்வளவு தூரம் இவை அங்கெ நடையின்முறையில் இருக்கிறது என்பது தெரியவில்லை. இந்த கலப்பின் அளவு விஞ்ஞானரீதியானது நிருபிக்கப்பட்டதல்ல, நமது சாதி போன்ற ஒரு சமூக கட்டமைப்பு (Social Construct) தற்பொழுது அமரிக்காவும் மெக்ஸிகோவும் சில இடங்களை, native மக்களுக்குரிய தனி நாடுகளாக அங்கீகரித்துள்ளார்கள். அமெரிக்காவில் அவர்களுக்கும் அவர்களின் இடங்களுக்கும் வரிகள் மற்றும் இதர சலுகைகள் நிறைய உண்டு. பக்கங்களில் இருப்பவர்கள் அங்கு சென்று சாமான்களும் வாங்கிக்கொண்டு எரிபொருள் நிரப்பிக்கொண்டு வருவார்கள். பொருளாதார நிலைமைகளினால், மெக்ஸிகோவில் இவை அவ்வளவாக நன்றாக நடைமுறைப்படுத்தப்படுவதில்லை. இந்த கதை எவ்வளவு தூரம் உண்மை என்று தெரியவில்லை, முன்பு அங்கீகரிக்கப்பட்ட செவ்இந்தியர்களின் தலைவர்கள், எவரையுமே தங்கள் இனத்தில் சேர்க்கலாம், அப்பிடி சேர்த்தவர்கள் உடனடியாக அமெரிக்கா குடியுரிமை பெறுவார்கள், சில சீனர்கள் இப்படி அவர்களின் இனத்தில் சேர்ந்து அமெரிக்கர்கள் ஆனார்கள், பின்பு இந்த முறையை ஒளித்து விட்டார்கள் என்று ஒரு கதை உலாவியது. தமிழ் சிறி, எனது பிள்ளைகளுக்கு படிப்பதுக்கு உதவி செய்யும்பொழுது அந்த பாடப்புத்தகங்களிலில் இருந்து நான் இவற்றை நிறைய அறிந்து கொண்டேன். கொலம்பஸ் இறங்கியது கிழக்கு கரை. 1600 கடைசியிலும் 1700 ஆரம்பத்திலும், மெக்ஸிகோவில் இருந்து அமெரிக்காவின் மேற்கு பக்க மாநிலங்கலில் ஸ்பானிஷ் குடியேற்றங்கள் வேகமாக நடைபெற்றது. ஸ்பெயின் அரசரின் கட்டளைக்கு இணங்க, முறைப்படுத்தப்பட்ட குடியேற்றங்கள் நடைபெற்றது. படைவீரர்களுடன், பாதிரியார்களும் ஆண்களும் பெண்களுமான குழுவாக சென்று குடியேறினார்கள். அமெரிக்கா-மெக்ஸிகோ யுத்தம் நடந்தது 1848இல். அதன்முடிவில் பல மாநிலங்களை/நிலங்களை அமெரிக்கா பெற்றுக்கொண்டது. அமெரிக்காவின் கிழக்கு பக்கங்களில் (அதிக மக்கள் கொண்ட இடங்கள்) ஆங்கிலேயர்களும், நடுப்பகுதிகளில் பிரான்ஸ் உம், தென் அமேரிக்காவில் இருந்து, மெக்ஸிகோ மற்றும் அமெரிக்காவின் மேற்குவரைக்கும் ஸ்பானியர்களும் ஆதிக்கம் செலுத்தினார்கள். கிழக்கின் சில பகுதிகளில் (உதாரணம் நியூயார்க், Delaware) Dutch West India கம்பெனி மூலம் ஹாலந்தும் ஆதிக்கம் செலுத்தி செவ்விந்தியர்களுடன் வியாபாரம் செய்தார்கள். 1776 இல் கிழக்கில் இருந்த 13 மாநிலங்கள் பிரித்தானியாவிடம் இருந்து சுதந்திரம் பெற்றது, பிறகு Louisiana மற்றும் சில நடுப்பகுதிகளை பிரான்ஸின் நெப்போலியன் உடனான ஒப்பந்தத்தின் மூலம் வாங்கினார்கள், பிறகு மெக்ஸிக்கோவிடம் இருந்து மேற்கு பகுதிகளை பிடித்தார்கள், வடஅமேரிக்காவில் ரஷ்யா இருப்பது நல்லதல்ல என்ற காரணத்தினால், கிட்டடியில் அலாஸ்காவை ரஷ்யாவிடம் இருந்து வாங்கி சேர்த்தார்கள். ரஷ்யாவிற்கும் அலாஸ்காவுக்கும் இடைப்பட்ட கடல் பகுதியில் இருக்கும் இரண்டு சிறிய தீவுகளுக்கிடையில் எல்லை பகுதியை வகுத்தார்கள். ஒரு தீவு ரஷ்யாவிடமும் மறு தீவு அமேரிக்காவிடம் இருக்கிறது. தற்பொழுது அமெரிக்காவுக்கும் ரஷ்யாவுக்கும் இடைப்பட்ட தூரம் வெறும் 2.4 மைல்கள் மட்டுமே. நான் எனக்கு தெரிந்தவற்றை பொதுவாக, மேலோட்டமாகவே எழுதியுள்ளேன், தவறுக்கு இருக்கலாம்.
-
பார்வை ஒன்றே போதுமே.......!
கதை அந்த மாதிரி, வாசிக்க நன்றாக இருந்தது
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
கலிபோர்னியா, நேவாடா, அரிசோனா, கொலராடோ,யூட்டா, டெக்சாஸ், போன்ற பெரும் பிரதேசங்கள், ஸ்பெயின்இன் ஆளுகையின் கீழ், மெக்ஸிக்கோவுடன் இருந்தது. பிறகு அமெரிக்க-மெக்ஸிகோ யுத்தத்தின் முடிவில், உடன்படிக்கையின் படி வெற்றி பெற்ற அமெரிக்காவிடம் வந்தது. இதற்கு ஈடாக மெக்ஸிகோ வுக்கு பணம் கொடுக்கப்பட்டது. 1700 களில் ஸ்பானிஷ் குடியேற்றங்கள் திட்டமிடப்பட்டு, மிக அதிகமாக நடைபெற்றது, இங்குள்ள native இந்தியர்களுக்கு மதமும் பரப்பப்பட்டது, பிறகுதான் ஆங்கிலேயர்களும் மற்றைய ஐரோப்பியர்களும், தங்கத்துக்காக வந்தார்கள். அதனால்தான் இங்குள்ள இடங்களின் பெயர்கள் பெரும்பாலும் ஸ்பானிஷ் மொழியில் இருக்கும். Native இந்தியர்களுக்கு சொந்தமான இடங்களுக்காக ஸ்பானியர்களும் ஆங்கிலேயர்களும் அடிப்பட்டுக்கொண்டார்கள்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சிறி, வீட்டில் தேங்காய் எப்பவுமே துருவி பிரிட்ஜ்ல் இருக்கும், ஆனாலும் அதை பால் புழிந்து வேஸ்ட் ஆக்க விரும்பவில்லை, எனவே டின் இல் உள்ள தேங்காய் பால் தான் பாவித்தேன், இரண்டாம் பாலுக்கு சிறிது தண்ணீர் அதிகமாகவும், முதலாம் பாலுக்கு தண்ணீர் குறைவாகவும் சேர்த்தேன். நீங்கள் படத்தில் போட்ட நீங்கள் சொல்வது போல் அரிசி களைய பயன்படுத்துவது என்று நினைக்கிறன், இவர் சமைத்த பாத்திரம் இரும்புச்சட்டி போல் இருந்தது, கைபிடிதான் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது.
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சுவி, நாங்கள் வெளிநாட்டுக்கு வந்தபின் ஆட்டிறைச்சி சமையல் முறை மாறிவிட்டது. ஊரில் முன்பு இப்படி நாங்கள் எல்லாம் சமைத்து சாப்பிட்டதுதான். நீண்ட காலத்துக்கு பிறகு இன்று வித்தியாசமாக இப்பிடி சமைத்து பார்த்தேன், உண்மையிலேயே நன்றாக இருந்தது, பழைய நினைவுகளும் அத்தோடு வந்தது. காணொளிக்கு நன்றி
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இன்று இது செய்து பார்த்தேன், சுவையாக இருந்தது. மிகவும் இலகுவானது. மிதமான சூட்டில் நிறைய நேரம் பொரிக்கவேண்டி இருந்தது. இல்லாவிட்டால் உள்ளுக்குள் அவ்வளவு வேகாது.
-
மலரும் நினைவுகள் ..
இலங்கையில் சிறு வயதில் இதேமாதிரி கறுப்புக்கலரில் கிட்டத்தட்ட கீழே உள்ள படத்தில் உள்ளது மாதிரி நூல் காட்டுவார்கள். இப்பொழுது அந்த வழக்கம் இல்லை என்று நினைக்கிறன்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
ஈழப்பிரியன் அண்ணைக்கு இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
சிரிக்க மட்டும் வாங்க
என்ன மனுசனையா இவன், சும்மா நாங்கள் பெருமூச்சு விடவேண்டியதுதான்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
அவர் நல்ல நேரம், ராகு காலம் பார்த்துதான் முட்டை உடைப்பாரோ தெரியவில்லை. இல்லாவிட்டால் முட்டை உடைத்து பொரிக்கிறது கூட தெரியவிடாமல் மனைவி அப்பிடி தாங்குகிறாரா? 🤣
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
நிச்சயமாக ஒருநாள் செய்து பார்ப்பேன், தமிழ் சிறி மாதிரி சட்டி இல்லை, அகப்பை இல்லை, இப்ப நேரம் சரியில்லை என்று பேய்க்காட்டமாட்டேன்😂
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இதை ஒரு நாளும் சாப்பிட்டுப்பார்த்ததில்லை, சுவை எப்பிடி?
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சிறி, நீங்கள் செய்யாமல் இருப்பதுக்கு ஏதாவது சாட்டு தேடுகிறீர்கள்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
சொல்லிக்கொண்டே இருக்கிறீர்கள், செய்து காட்டுகிறீர்கள் இல்லை. செய்துவிட்டு கள உறவுகளை கூப்பிடுங்கள், சுவை எப்பிடி உள்ளது என்று சொல்கிறோம்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஆம் இவர் யோசிக்கக்கூட இல்லை, உடனடியா எழுதியது சந்தேகமாகதான் இருக்கு . யாழ் களத்தில் நிறைய சிங்கங்கள் இருக்கு
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சிறி, எங்கெயிருந்தது இவற்றை எடுக்கிறீர்கள்? சளைக்காமல் ஒவ்வொரு நாளும் தவறாமல் நிறைய விடயங்களை இங்கு பகிர்ந்து கொண்டு இருக்கிறீர்கள்,
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
அண்ணை, என்ன இருந்தாலும் ஒரு புழுக்கொடியலுக்கு 2000 டாலர் கூடத்தான். கொஞ்சம் ஓவராக ஆடிவிட்டீர்கள்😁 ஓரிரு பல்லுகள் அப்பிடி இப்பிடி இருந்தாலும், புளுக்கோடியல் இன்னும் சாப்பிடும் கண்டிஷனில்தான் இருக்கிறேன்
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
சூப்பர் . பனங்கிழங்கையும் புழுக்கொடியலையும் அளவு தெரியாமல் சும்மா சாப்பிட்டுக்கொண்டே இருக்கலாம், எனக்கும் மிகவும் பிடிக்கும். பகிர்வுக்கு நன்றி
-
மலரும் நினைவுகள் ..
சிறி, நீங்கள் காதலியின் பெயரை கையில் கவராயத்தால் (Arc) ரத்தம் தெறிக்க எழுதிக்கொண்டு திரியவில்லையா?😀 டிராக்டர் , லேண்ட் மாஸ்டர் அல்லது கார் இற்கு பின்னால் ஓடுவதும் இப்பிடித்தான்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
உண்மையிலேயே மிக சுவையானது. சிறு வயதில் எனது விருப்பமான உணவு. இங்கு கூட எமது backyardஇல் மனைவி இரண்டு மூன்று தடவை வைத்து , நன்றாக விளைந்து வந்தது.
-
சிரிக்க மட்டும் வாங்க
சூப்பர். நான் எழுதியிருக்கிற மாதிரிதான் வாசித்தேன், நம்புங்கள்
-
கருத்து படங்கள்
காலி பக்கமும் இருக்கிறது ஆச்சரியமாக இருக்கு. பிக்குகள் எப்பிடி விட்டார்கள்? இது அரபியும் அவர்களது மார்க்கமும் மாத்திரம் படிக்கும் இடமா இல்லை சாதரணமான பாடசாலைகளா?
-
மலரும் நினைவுகள் ..
நன்றி! இதை பார்த்தவுடன் சூத்திர கிணறும் ஞாபகம் வருகுது, படம் கிடைக்கவில்லை இதை பார்த்த மாதிரி ஞாபகம் இருக்கு. இதில் விடு வீடாக கொண்டு போய் மண்ணெண்ணை விற்பார்களா?