Everything posted by நீர்வேலியான்
-
சகோதரி யாயினியின் தந்தை காலமானார்
ஆழ்ந்த இரங்கல்கள் யாயினி
-
இஸ்ரேல் - பாலஸ்தீன போரும் அழிவுகளும் - செய்திகளின் தொகுப்பு
மிகசிறப்பான கட்டுரை, பகிர்வுக்கு நன்றி
-
தமிழீழ விடுதலைப் புலிகளின் குடிமைக் கட்டமைப்புகள் | திரட்டு
உங்கள் முயற்சி ஒரு மலைப்பூட்டும் விடயம், நீங்கள் தொடர்ந்து தளராது இப்பிடியான விடயங்களை ஆவணப்படுத்துகிறீர்கள், வாழ்த்துகள். வேறு எந்த நாட்டு விடுதலை இயக்கங்களும் செய்திராத, பாரிய ஒரு கட்டமைப்பை உருவாக்கியிருந்தார்கள், எல்லாம் போய்விட்டது
-
குமாரசாமியின்ரை வேஸ்ற் & பேஸ்ற் புக்.
ஊரில் பல தமிழ் பேக்கறிகளிலும் இப்பிடித்தான், காலால்தான் குழைப்பார்கள், நேர பார்த்திருக்கிறேன்
-
எனது 7 வருட உக்கிரேன் வாழ்க்கை அனுபவங்கள்
உக்ரைன், ரஷ்யா, மற்ற எல்லை நாடுகளுடனான ரஷ்யாவின் உறவுகள் பற்றி கொஞ்சம் முன்பு வாசித்துள்ளேன், இதைப்பற்றி அறியவும் ஆர்வம் அதிகம். உங்களது நேரடி அனுப்பவம் சுவையாகவும் விளக்கமாகவும் இருந்தது. தொடர்ந்து உங்கள் அனுபவங்களை பதியவும், வாசிப்பதுக்கு ஆர்வமாக உள்ளோம். தமிழர்களில் இந்தமாதிரி, இப்பிடியான இடங்களில் நேரடி அனுபவங்கள் பெற்றவர்கள் மிகக்குறைவாகவே இருப்பார்கள்
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
நானும் இதே மாதிரிதான் யோசித்தேன், வடக்கு கிழக்கில் சிங்களவர்களை குடியேற்றி எம்மை இரண்டாம் தர பிரசைகள் ஆக்கியது போல நடந்துள்ளது. எந்த நாடாக இருக்கட்டும், பெரும்பான்மை இனங்களுக்கு பக்கத்தில் உள்ள சிறுபான்மை இனங்களுக்கு எப்பவுமே சிக்கல்தான்
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
அதாவது ரஞ்சித் மேலே எழுதிய, கொலைகள் எப்பிடி நடந்ததென்று மக்கள் கொடுத்த வாக்குமூலங்கள் எல்லாம் பொய், வெறும் பரப்புரை, ரஷ்யா உக்கிரைன் மக்களை அநியாயத்துக்கு நன்றாக நடத்துகிறது? நல்லது, இப்பிடியே தமிழ் மக்களுக்கு நடந்த போர்குற்றதுக்கு வெளியுலகில் நியாயம் கேட்க வாழ்த்துக்கள்.
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
மேலே ரஞ்சித் எழுதின கொலைகள் நடக்கவில்லை என்கிறீர்களா? இவ்வளவு எங்களுக்கு நடந்தும், படை எடுக்கும் ஒரு ராணுவம், அது எந்த ராணுவமா இருக்கட்டும், என்ன செய்யும் என்று எங்களுக்கே புரியாவிட்டால் வேறுயாருக்கு புரிய வைக்கலாம்? இலங்கை ராணுவம் போகும்பொழுது, அதன் பரப்புரைகள் சர்வதேசத்தில் எப்படி வேலை செய்ததென்று எமக்கு நன்றாகவே தெரியும், அது ஒரு மீட்பு போராக வெளியில் நம்பவைக்கப்பட்டது, எவ்வளவு கொலைகள் நடந்தேதென்று உள்ளே இருந்த நம்மவர்களுத்தான் தெரியும். புடின் போன்ற தனி மனித ஆளுமையில் இருக்கும் ராணுவம், மனிதாபினாமமாக நடக்கிறது என்று நீங்கள் நம்புவதே ஆச்சரியமாக இருக்கிறது. அதிகாரத்தை பிடித்து, நாட்டை சர்வாதிகார நாடா மாற்றி, தமது சொத்துக்களை பெருகியதால் பூட்டினுக்கும் கோத்தாவுக்கும் எவ்வளவு வித்தியாசம் உள்ளது?
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
எங்களுக்கும் இப்பிடி நடந்துதான், வாசிக்கும்போதே ஒரு மாதிரியாக உள்ளது, இவ்வளவையும் தேடி, மொழிபெயர்த்து, தொகுத்து எழுதியுள்ளீர்கள்👏👏
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
இதிலிருந்து தெரிவது, இங்கு பதியப்படும் , விவாதிக்கப்படும் விடயங்கள் உண்மையிலேயே வெளியில் கவனிக்கப்படுகிறது. இங்கிருந்து சுட்டு எங்கேயோ போட்டவன், இது ஒரு ஏப்ரல் 1 பதிவு என்று உறுதிப்படுத்தாமலேயே போட்டது ஆச்சரியமாக உள்ளது.
-
கொழும்பில்.. தரையிறங்கிய... மூன்று, இந்திய இராணுவ விமானம்.
சிறி, நீங்கள் இப்ப பெரிய ஆள் ஆகிவிட்டீர்கள் , இன்னும் இது youtube இல் ஓடிக்கொண்டு இருக்கு
-
புட்டினும் புதுமாத்தளனும்
சசி வர்ணம், நாலு பெயர் ஏற்கனவே வந்துவிட்டது, ஆகவே பயப்பிடாமல் தொடர்ந்து கருத்து சொல்லவும். இன்னும் மூன்று நான்கு புதுப்பெயர் கிடைக்கலாம், பின்னால் படித்த பட்டம் மாதிரி பெருமையாக போட்டுக்கொள்ளலாம். ஒரு படத்தில் ரமேஷ் கண்ணா "அந்த கஞ்சா கேஸையும் இவன் தலையில் போடுங்கடா" என்று சொன்ன மாதிரி பெயர் சூட்டு விழா நடைபெறுகிறது. வெள்ளைகளுக்கு சூ துடைக்கும் வேலை எப்பிடி போகிறது? நான் பழகிக்கொண்டு இருக்கிறேன்.
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
தனிக்காட்டுராசா, கொழும்பான், யாயினிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள்
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
இணைப்புக்கு நன்றி, கொஞ்ச காலமா இந்திய முறைப்படி சில வகை சட்னி செய்து வடை, இட்டலிக்கு சாப்பிடுவதுண்டு, இதில் காட்டியுள்ள வகையான தேங்காய்-பொட்டுக்கடலை சட்னியும் அதில் ஒன்று, கொஞ்சம் கடலை பருப்பும் போட்டு, கடைசியில் கொஞ்சம் உளுந்தும் தாளித்துபோட்டால் நன்றாக இருக்கும்.
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
நன்றி, இதுதான் உண்மையிலேயே நமக்கு தேவை, வெறுமனவே உக்கிரைனுக்கு விழும் அடியையும் அதன் அழிவை ரசிப்பதை விட்டு விட்டு , இதை வைத்து இனி இப்பிடி ஏதாவது எங்களுக்கு கிடைக்குமா என்று பார்க்க வேண்டும், நீ முன்பு எங்களுக்கு துரோகம் செய்தாய் என்று குளத்துடன் கோபித்துக்கொண்டு ஒன்றுமே நடக்க போவதில்லை.
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
யாழின் ஆக்கத்துக்காக ஒருவர் எழுதும் சொந்த படைப்பில்போய், அவர் தொடர்ந்து எழுதமுடியாத அளவுக்கு தொடர் கும்மி அடிப்பதும், அவர் எழுதுவதுக்கும் அதிகமாக, அவரது பதிவில், வேறு வேறு இடங்களில் இருந்து கொண்டுவந்து தொடர்ந்து இணைத்து குழப்புவதும் நேர்மையாகவோ அல்லது constructive criticism ஆகவோ கருதப்படுவதில்லை.
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
ரஞ்சித், எல்லா பக்கத்தாலும் வரும் distractionஇற்கு மத்தியில் இப்பிடி ஒருங்கிணைத்து எழுதுவது எவ்வளவு கஷ்டம் என்று தெரியும், நிறுத்தாமல் நீங்கள் நினைத்ததை தொடர்ந்து எழுதி முடியங்கள் ஒருவர் தான் நினைத்ததை, அவருக்கு சரியென்று பட்டதை எழுதுகிறார். அதற்கு ஏன் இவ்வளவு வன்மம் என்று புரியவில்லை.
-
நேற்று என் கனவில் கடல் வந்தது - நிழலி
இப்பிடி படங்கள் உடனே எங்கிருந்து தேடிப்பிடிக்கிறீர்கள்?
-
நேற்று என் கனவில் கடல் வந்தது - நிழலி
அவர் இன்னும் சுந்தராம்பாள் ஐ தாண்டவில்லை, அவர் நினைவாகவே இருக்கிறார் கவிதை சூப்பர், எங்களுக்கு வரும் கனவுகளை இப்பிடி எல்லாம் எழுத்தெரியாது. எழுத்ததெரிவது ஒரு கொடுப்பினை.
-
மரியோபுல் - இரண்டாம் முள்ளிவாய்க்கால்
ரஞ்சித், நீங்கள் அதிகமாக உணர்ச்சி வசப்படுகிறீர்கள், புரிகிறது, ஆணாலும் உடல் நலத்துக்கு அவ்வளவு நல்லதல்ல
-
புட்டினும் புதுமாத்தளனும்
உங்களை அங்கே பார்த்துவிட்டு, பதில் போட்டுவிட்டு இங்கே வந்தால், அட்டகாசமாக இருக்கு
-
உணவு செய்முறையை ரசிப்போம் !
பார்க்க வித்தியாசமாகவும் நன்றாகவும் இருக்கிறது, இப்பிடி மீன் குழம்பு செய்து பார்த்ததில்லை. கறுவா, இறம்பை கூட போடுகிறார்கள். பழப்புளிக்கு பதில் தேசிப்புளி! இது செய்து பார்க்க வேண்டும், நாட்டுக்கோழி எடுப்பதுதான் கஷ்டம்
-
பிறந்தநாள் வாழ்த்துக்கள்!
இனிய பிறந்தநாள் வாழ்த்துகள் இணையவன்
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
நன்றி அண்ணை , இது எனக்குத் தெரியாத ஒரு புது செய்தி. இந்த இடத்துக்குக்கிட்ட வேலை சம்பந்தமாக பல தடவைகள் சென்றுள்ளேன், சில Wineriesஇற்கும் போயுள்ளேன், இந்த இடத்தில பிரபலமான wineries உள்ளது. இனிமேல் போகும் போது பார்ப்போம்
-
சன்பிரான்ஸ்சிஸ்கோ ரூ லாஸ்அங்கிலஸ்(San Francisco to Los Angeles)
அண்ணை, காசை வட்டியுடன் திருப்பித்தந்தால் நாங்கள் ரெடி, சண்டை வந்தால் தற்போது ரஷ்யாவுக்கு சப்போர்ட் பண்ணிய அமெரிக்க, கனடா வாழ் யாழ்கள மக்களின் நிலைதான் கொஞ்சம் சிக்கல், உடல் அமெரிக்காவில் உயிர் ரஷ்யாவில் என்று கவிதை எல்லாம் வடிக்கவேண்டி வரும்