Jump to content

SUNDHAL

கருத்துக்கள உறவுகள்
  • Posts

    11590
  • Joined

  • Last visited

  • Days Won

    8

Everything posted by SUNDHAL

  1. யாழ் களத்தில் உங்கள் அனுபவங்களை சொல்லி எங்களை வழிநடத்த வேண்டும் மற்றும் யாழ் களம் மாற்று கருத்தாளர்களின் கைக்கு போக விடாமல் முன் எப்பொழுதையும் விட இப்பொழுது நிறைய உழைக்கனும் சோ be ready .....
  2. என்றும் யாழ் களத்தின் உரிமைக்குரலாய் நீங்கள் ஒலிக்க வேண்டும் என்பதே எமது அவா விசு அண்ணா
  3. வாழ்த்துக்கள் சபேஷ் அதே வேலை இனிய பிறந்த நாளை கொண்டாடும் சுபேஷ் அவர்களுக்கும் வாழ்த்துக்கள்
  4. உளம் நிறைந்த பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள் கவிதை.நீங்கள் விரும்பிய எல்லாம் பெற்று பல்லாண்டு வாழ என் வாழ்த்துகள்.
  5. எங்கள் தானைத்தலைவர்....... தன் மானச்சிங்கம்........ புரட்சி வீரன் ..... யாழ் களத்தின் நாயகன் ...... முப்பதாம் புலிகேசி நந்தன் அண்ணா அவர்கள் இன்று தன்னுடைய 21 ஆவது பிறந்த நாளை London மாநகரே ஸ்தம்பித்து போகும் அளவிற்கு வெகு விமர்சையாக கொண்டாடுகின்றார்....... அவருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் ..
  6. இன்று holland இல் தன்னுடைய பிறந்த நாளை மிகவும் பரபப்பாகவும்...... சிறப்பாகவும் கடற்கரையில் பென்னாம் பெரிய கேக் வைத்து அதை சிறு சிறு துண்டுகளாக..வெட்டி விளையாடி தன்னுடைய தொண்டர்களுடன் பிறந்த நாளை கொண்டாடிக்கொண்டு இருக்கும் எங்கள் ஆண்கள் குல விளக்கு பெண்கள் போற்றிடும் நாயகன்..... அவன் இசையில் கடல் தமிழுக்கோர் சூரியனாம் தமிழ் சூரியன் அண்ணா அவர்களுக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் இப்பிடிக்கு இனிய தொண்டர் அடிப்பொடிகளில் ஒருவன் சுண்டல் சாந்தி அக்கா ஹாப்பி பர்த்டே....
  7. வாழ்த்திய உறவுகள் அனைவருக்கும் நன்றிகள்..... மற்றும் பிறந்தநாள் கொண்டாடிய கொண்டாடும் கொண்டாட இருக்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.......,
  8. அது அப்ப இது இப்ப.... தி மு-திரு மணத்துக்கு முந்தி தி பி- பிந்தி..... எண்டு சொல்லி confused ஆக்கிட வேண்டியது தானே.... இல்லாட்டி இருக்கவே இருக்கு நான் அவன் இல்லை..... :d
  9. தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு பத்திரிக்கையாளர் சந்திப்பு. அன்புடையீர் வணக்கம், இலயோலா கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பிற மாவட்டக் கல்லூரி மாணவர்கள் இணைந்து தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பின் சார்பில் அடுத்தக்கட்ட போரட்டங்கள் பற்றிய செய்தியாளர் சந்திப்பு நடக்க இருக்கிறது. இடம் : சென்னை பத்திரிக்கையாளர் சங்கம் தேதி : 25 மார்ச் 25.03.2012 நேரம் : காலை 11 மணி தொடர்பிற்கு : ஜோ பிரிட்டோ: 8678962611
  10. விருதுநகரில் கண்ணில் கருப்புத்துணி கட்டி மாணவர்கள் மனிதச் சங்கி- பேராட்டம் நடத்தினர். தமிழ் ஈழ விடுதலை மாணவர் கூட்டமைப்பைச் சேர்ந்த 250 பேர் இந்த மனிதச் சங்கிலி பேராட்டத்தில் கலந்து கொண்டனர்.
  11. நீயா நானா கோபி கும், ஸ்டார் விஜய் தொலைகட்சிக்கும் ஒரு வேண்டுகோள் : பல்வேறு சமூக பிரச்சனைகளையும் , துயர்களையும் மக்கள் மன்றத்தில் எடுத்துரைத்த நீயா? நானா? நிகழ்ச்சியில் தமிழ் ஈழ விடுதலை மற்றும் அங்கு நிகழ்ந்த இனப்படுகொலை பிரச்சனை பற்றி விவாதம் நடத்த வேண்டுகிறேன். வழக்கம் போல் இல்லாமல் ஒரு மற்றுமுறையை நான் தங்களுக்கு சொல்ல விளைகிறேன். ஆய்ந்து பார்த்து ஆவன செய்யவும் வேண்டுகிறேன். ஒரு பக்கம் மாணவர்களையும், மறுபக்கம் நம் தமிழ்நாட்டு அரசியல்வாதிகளைய ும் அழைத்து ஒரு வரலாற்று நிகழ்வை நாம் பதிவு செய்தாகும் தருணத்தில் இருப்பதாய் நான் உணர்கிறேன். சிலருக்கு ஐயம் எழக்கூடும் ! எப்படி பல்வேறு இயக்கங்களின் , கட்சிகளின் பிரதிநிதிகளை அழைப்பது என்று! அண்ணாதுரை போன்றோரெல்லாம் மக்கள் மன்றத்தில் பலமுறை தங்கள் கருத்துக்களை, மாறுபட்ட நிலைபாட்டை எல்லாம் மக்களுக்கு தெளிவு செய்த வரலாறும் இங்குண்டு என்பதனை நினைவுபடுத்த கடமை பட்டுள்ளேன். இதற்கான அழைப்பை தனியே மட்டும் அறிவிக்காமல் பொதுவாக ஊடகம் வாயிலாக வெளியிடவும். மக்கள் நலம் நாடும்அரசியல்வாதிகள் தானாக முன் வந்து இந்த மக்கள்மன்றதில் தங்கள் குரலை பதிவுசெய்யட்டும ். மக்கள் நலம் எண்ணாதபோலி அரசியல்வாதிகள் பற்றி நமக்கு கவலை வேண்டாம். மன்றத்தில் மாணவர்கள் எல்லோரும் அரசியல் நிலை உணர்ந்து, அவை நாகரிகத்தை பின்பற்றி நடக்கவும் வேண்டுகிறேன். வழக்கம் போல் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக மனிதஉரிமை ஆர்வலர்கள்,சட்ட நிபுணர்களை அழைத்தாள் அது விவாதத்தை மேலும் வலு படுத்தும் என நம்புகிறேன். இதெல்லாம் சாத்தியம் தான? என எண்ணாமல் இதுவும் சாத்தியம் என ஒரு மாற்று புரட்சியை நாம் செய்து காட்டுவோம். எங்கோ உள்ள சேனல் 4 தொலைகாட்சிஎல்லா ம் எம் இனத்தை காக்க பல நிலைபாட்டை எடுத்துள்ளது. நம் பங்கிற்கு நாமும் களத்தில் பங்கெடுப்போம்.த மிழரை, மனிதனின் உரிமையை காப்போம். Fb
  12. Loyolahungerstrike 21 நிமிடங்களுக்கு முன்பு · முக்கிய செய்தி; தமிழீழ்ம் கோரியும் மாணவர் போரட்டத்தை வலுசேர்க்கவும் எத்திராஜ் கல்லுரி மாணவி தற்கொலை செய்து கொண்ட்தாகவும், இன்று மாலையே அடக்கம் செய்ய காவல் துறை வர்புறுத்துவதாகவும், மாணவர்கள் விரைந்து வருங்கள் என்றும் எனக்கு திரு மணி, தமிழ் உணர்வாளரிடம் இருந்து செய்தி வ்ந்துள்ளது. இடம் வியாசர்பாடி எண் 9840480273
  13. தமிழகத்தில் கவர்னர் ஆட்சி வேண்டும்- சுப்ரமணிய சுவாமி திருவாய் மலர்ந்து உள்ளார் . தமிழகத்தில் ஈழ பிரச்சினை பெரிதாக வெடிக்கும் பொழுதெல்லாம் , சுப்ரமணிய சாமி பெயர் அடிபடும் , தமிழர்களிற்கு எதிரான நிலையை எப்போதும் எடுத்து, பேசி தமது இருப்பை காட்டி கொண்டு அரசியல் செய்பவர் சுப்ரமணிய சாமி . மாணவர்கள் போராட்டம் தமிழகம் முழுதும் எரிந்து கொண்டு இருக்கும் இந்த நிலையில் , மாணவர்களை முதல்வர் ஜெயலலிதா அடக்க முடியாவிட்டால் தமிழகத்தில் கவர்னர் ஆட்சியை சில காலத்திற்கு கொண்டு வர வேண்டும் என்று தனது ட்விட்டர் தளத்தில் திருவாய் மலர்ந்து உள்ளார் . சுப்ரமணிய சாமி எங்கு உள்ளீர்கள் ? நீங்கள் அதையே தமிழகத்தில் அனைத்து பத்திரிகையாளர்களையும் அழைத்து ஒரு கூட்டம் போட்டு சொன்னால் செய்தி வேகமாக சேருமே ?
  14. " இனியொரு இனியொரு விதி செய்வோம் விதியினை மாற்றும் விதி செய்வோம் " ஆயுதம் எடு ஆணவம் சுடு தீபந்தம் எடு தீமையை சுடு இருளை எரித்துவிடு ஏழைக்கும் வாழ்வுக்கும் இருக்கின்ற இடைவெளி குறைத்து, நிலை நிறுத்து அட கொட்டத்தின் விட்டத்தை, சட்டத்தின் வட்டத்தை உடைத்து. காட்டுக்குள் நுழைகிற காற்றெதுவும் காலணி எதுவும் அணிவதில்லை. ஆயிரம் இளைஞர்கள் துணிந்துவிட்டால் ஆயுதம் எதுவும் தேவையில்லை.
  15. நாளை மெரினா கடைகரையில் மாணவர்கள் 10 மணியளவில் ஒன்று கூடுவோம். ஒரு கோடி மாணவர்கள் . "எதிர்வரும் 20-03-2013 (புதன்) அன்று நடைபெற உள்ள ஒரு கோடி மாணவர்கள் பங்கேற்கும் தொடர் முழக்கப் போராட்டம்" - தமிழீழ விடுதலைக்கான மாணவர் கூட்டமைப்பு. தொடர்புக்கு:- ஒருணைப்பாளர்கள் மதுரை வெங்கட்ராமன் -94438 49163 தஞ்சாவூர் கெளதமன் -97866 03669 திருவாரூர் சு.பாலசுப்ரமணியன் -9750030006, மன்னார்குடி துரை.அருள்ராஜன் -9952213636, திருத்துறைப்பூண்டி ப.பழனி -9750277873
  16. பொறியியல் கல்லூரிகளுக்கு காலவரையற்ற விடுமுறை கொடுக்க பட்ட பின்னர் கல்லூரி வளாகத்தில் நுழையாமல் சுங்கான் கடை தேசிய நெஞ்சாலையில் ஈழ தமிழர்களுக்கு நீதி கேட்டு போராடிய மாணவர்களை குண்டர்கள் மூலம் கலைத்த்தும் , மேலும் மாணவர்களின் வீடுகளுக்கு மாணவர்களை சஸ்பென்ட் செய்துள்ளதாக தகவல் கொடுத்துள்ளது மிகவும் கண்டிக்க தக்கது. உயர்ந்த லட்சியங்களுக்கு போராடும் மாணவர்களை கல்லூரி நிர்வாகங்கள் பழி வாங்குவது எனது தமிழ் இன உணர்வு இல்லை என்பதையும் போராட்டத்தை தாங்கி கொள்ள முடிய வில்லை என்பதையும் காட்டுகிறது.. இதை ஒவ்வெரு மாணவர்களும் தமிழ் உணர்வாளர்களும் கண்டிக்க வேண்டும். உடனே கல்லூரி நிர்வாகம் சஸ்பெண்ட்டை திரும்ப பெற வேண்டும்.. கல்லூரி தொடர்பு எண் 04652 232 560 http://www.sxcce.edu.in/web3/advisoryboard.html மேலும் இந்த இணைப்பில் ஆலோசனை குழுவினரின் தொலைபேசி எண்கள் உள்ளன.. தொடர்பு கொண்டு சஸ்பெண்டை திரும்ப பெற வலியுறுத்துங்கள்
  17. காஞ்சிபுரம் மாவட்ட தோழர்களின் மிக முக்கிய கவனத்திற்கு!!! காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து பள்ளி-கல்லூரி-பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு சார்பில் நாளை (20.03.2013) காலை 9 மணியளவில் காஞ்சிபுரம் பெரியார்நகர் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வரையில் மாபெரும் மாணவர் பேரணி எழுச்சியுடன் நடைபெற உள்ளது. மாணவ சமூகம் மற்றும் பொதுமக்கள் திரளாக பங்கேற்று நம் தொப்புள் கொடி உறவுகளுக்கான ஆதரவினை தந்து பேரணியை வெற்றியடையச் செய்யவும். தொடர்புக்கு தோழர்கள்-9940911235, 9659241174, 9094522380 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும். அனைத்து கல்லூரிகளும் பாகுபாடின்றி கட்டாயம் பங்கேற்கவும். தோழர்களின் வருகையை உறுதி படுத்தவும். முடிந்தவரை அனைத்து தோழர்களும் இச்செய்தியை பகிருங்கள், பரப்புங்கள். மிக்க நன்றி! Kancheepuram district is very important to the attention of our friends! Kancheepuram District All School - College - University Student Federation of the day (20.03.2013) at around 9 in the morning, the first district of Kanchipuram periyarnakar Pachaiyappa College men's head office is scheduled to rise to the massive student rally. Student community and the general public, providing support for a mass rally to be successful in our relations to the umbilical cord. Contact comrades -9940911235, 9659241174, 9094522380 and contact numbers. All colleges must participate pakupatinri. In order to confirm the arrival of friends. Share best news of all comrades, Spread. Thank you very much!
  18. திருப்பூரில் சுமார் 4 மணி நேரத்திற்கும் அதிகமாக கல்லூரி மாணவர்கள் நடத்தி வந்த சாலை மறியல் போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது. திருப்பூர் போலீஸ் கமிஷ்னர் அமீத்குமார் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு எட்டப்பட்டதை அடுத்து போராட்டம் வாபஸ் பெறப்பட்டுள்ளது திண்டுக்கல் மாவட்டத்தில் 7 இடங்களில் ஈழத்தமிழர்கள் முகாம் உள்ளது. இங்கிருக்கும் தமிழர்கள் இன்று ஒன்றுகூடி 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் திண்டுக்கல் கல்லறைத்தோட்டம் அருகே, போர்க்குற்றவாளி ராஜபக்சேவை தூக்கிடக்கோரி உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். சட்ட கல்லூரி வளாகத்திலேயே நடந்த இந்த உண்ணாவிரதம் இன்று 7வது நாளை எட்டியது. இதில் காலை 11.30 மணியளவில் இரண்டு மாணவர்கள் அந்த இடத்திலேயே சுருண்டு மயங்கி விழுந்தனர். ஆம்புலென்ஸ் வந்து அவர்களை மருத்துவமனைக்கு ஏற்றி சென்றது. அந்த நேரத்திலும் தனி ஈழம் வேண்டும் என அவர்களின் உதடுகள் உச்சரித்தபடியே இருந்தது. இதே போல பெரியார் பல்கலைகழக வாசலிலேயே பல்கலைகழக மாணவர்கள் தொடர்ந்து உண்ணாவிரதம் இருந்து வருகின்றனர்
  19. கருணாநிதி , காங்கிரஸ் கூட்டணியில் இருந்து வெளியேற முக்கிய காரணம் , தமிழகத்தில் வெடித்த மாபெரும் மாணவர் புரட்சி . அந்தப் புரட்சித் தீ மேலும் பரவட்டும் ! மாணவர்கள் போராட்டங்களுக்கு ஆதரவாக நாம் போடும் பதிவுகள் தொடரட்டும் !!
  20. தி மு க வை மத்திய அரசில் இருந்து வெளியேற்றியது மாணவர்களுக்கு கிடைத்த முதல் வெற்றி......வாழ்த்துகள் மாணவர்களே அம்மா சொல்லி வேலை இல்லை இந்த படங்களை பாக்க பாக்க மாற்று கருத்து கும்பல்களுக்கு வயித்தால போக போது ......
  21. காஞ்சிபுரம் மாவட்ட அனைத்து பள்ளி-கல்லூரி-பல்கலைக்கழக மாணவர் கூட்டமைப்பு சார்பில் நாளை (20.03.2013) காலை 9 மணியளவில் காஞ்சிபுரம் பெரியார்நகர் பச்சையப்பன் ஆடவர் கல்லூரி முதல் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் வரையில் மாபெரும் மாணவர் பேரணி எழுச்சியுடன் நடைபெற உள்ளது. மாணவ சமூகம் திரளாக பங்கேற்று நம் தொப்புள் கொடி உறவுகளுக்கான ஆதரவினை தந்து பேரணியை வெற்றியடையச் செய்யவும். தொடர்புக்கு தோழர்கள்-9940911235, 9659241174, 9094522380 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளவும். அனைத்து கல்லூரிகளும் பாகுபாடின்றி கட்டாயம் பங்கேற்கவும். தோழர்களின் வருகையை உறுதி படுத்தவும். முடிந்தவரை அனைத்து தோழர்களும் இச்செய்தியை பகிருங்கள், பரப்புங்கள். மிக்க நன்றி!
  22. தெருத்தெருவாக நாய் சங்கிலியால் கட்டி இழுத்துச் செல்லப்பட்ட ராஜபக்சே..! ஐ.நா.பொதுவாக்கெடுப்பு நடத்த வேண்டும். இனப்படுகொலை செய்த இலங்கை மீது பன்னாட்டு விசாரணை வேண்டும். இனப்படுகொலைக்கு துணை போன இந்திய அரசை கூண்டிலேற்ற வேண்டும். என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஈழ விடுதலைக்காக தூத்துக்குடி வழக்குரைஞர்கள் போராட்டம். தொலைபேசித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்.
  23. கருணாநிதி பேட்டி: இலங்கையில் தமிழர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் போர்க்குற்றம் என்றும், இனப்படுகொலை என்றும் பிரகடனப்படுத்த வேண்டும்; இலங்கை மீது சுதந்திரமான விசாரணை நடத்த பன்னாட்டு குழு அமைத்து, குறிப்பிட்ட காலவரையறைக்குள் விசாரணை முடிக்கப்பட வேண்டும்; உள்ளிட்ட திருத்தங்கள் அடங்கிய தீர்மானத்தை நாடாளுமன்றத்தில் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்று மத்திய அமைச்சர்களிடம் கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார். காணொளி: http://youtu.be/ZutSP9UL2Ns
  24. ஈழத்தமிழர்களின் உரிமைக்காக 20.03.2013 புதன் அன்று தமிழகம் தழுவிய ஒரு கோடி மாணவர்களின் தொடர் முழக்கப் போராட்டம் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கிறது. மாணவர்களே!, அனைவரும் பங்கேற்பீர்!!. தொடர்புக்கு திருவாரூர் சு.பாலசுப்ரமணியன்-9750030006, மன்னார்குடி துரை.அருள்ராஜன்-9952213636, திருத்துறைப்பூண்டி ப.பழனி-9750277873.
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.