-
இரு வர்ணத்தில் இனிய பாடல்கள்.....!
சினிமாவுக்கு கவிஞர் வாலி எழுதிய முதல் பாடல்
-
தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026 - செய்திகள்
“நீங்கள் தமிழ்த் தேசியவாதியா?தமிழ் மீள தமிழ் ஆள தங்களால் முடிந்த பங்களிப்பை வழங்குங்கள்” என்று இணையத்தளங்களில் விளம்பரமும் வந்திருக்கின்றது
-
பாலியல் வன்முறையைத் தடுக்க ’Rape-aXe’
வரவேற்க வேண்டிய ஒரு கண்டுபிடிப்பு.👏🏽 கேள்வி- ஒருவேளை பெண் இதைக் கழட்ட மறந்தால், வீட்டுக்காரன் பாடு என்னவாகும்?
-
கிறுக்கல்கள்
கிறுக்கல்கள்
-
கருத்துப்படம் 28.03.2026
-
கருத்துப்படம் 22.03.2026
-
கருத்துப்படம் 19.03.2026
-
கருத்துப்படம் 13.03.2026
-
கருத்துப்படம் 12.03.2026
-
கருத்துப்படம் 11.03.2026
-
கருத்துப்படம் 07.03.2026
-
கருத்துப்படம் 03.03.2026
-
கருத்துப்படம்17.02.2026
-
கருத்துப்படம் 14.02.2026
-
கருத்துப்படம் 29.01.2026
-
கருத்துப்படம் 28.01.2026
-
கருத்துப்படம் 24.01.2026
-
கருத்துப்படம் 06.06.2026
-
கருத்துப்படம் 01.01.2026
-
கருத்துப்படம் 01.01.2026
-
கருத்துப்படம் 31.12.2025
-
கருத்துப்படம் 30.12.2025
-
கருத்துப்படம் 29.12.2025
-
கருத்துப்படம் 28.12.2025
-
-
தெய்வங்கள் மனிதர்கள் மற்றயவை
திருப்பதி மட்டும் தமிழ்நாட்டுக்கு கிடைத்திருந்தால் திமுக ஆட்டையைப் போட்டு திருப்பதியானுக்கு மொட்டையடித்து பழனியாக்கியிருப்பார்கள். இங்குள்ள (யேர்மனியில்) கோயில்களில், தட்டில் விழுவது ஐயருக்கு, மற்றவை நிர்வாகத்துக்கு.கோயிலில் எங்கே சாமி இருக்கிறார்? ஆசாமிகள்தான் கோயிலை ஆக்கிரமித்திருக்கின்றார்கள்.
-
டிஜிட்டல் காலத்தில் பெண்கள் மீதான புதிய அச்சுறுத்தல்
டிஜிட்டல் காலத்தில் பெண்கள் மீதான புதிய அச்சுறுத்தல் சமூக ஊடகங்கள் மற்றும் செயற்கை நுண்ணறிவு வேகமாக வளர்ந்து வரும் இன்றைய உலகில், மனிதர்களின் தனியுரிமையும், பாதுகாப்பும், புதிய சவால்களை எதிர்கொள்கின்றன. குறிப்பாக, டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் தவறாகப் பயன்படுத்தப்படும் போது, அது ஒருவரின் வாழ்க்கையை முழுமையாகவே பாதிக்கக்கூடியதாக மாற்றும் வல்லமை கொண்டது. யேர்மனியில் சமீபத்தில் பலரின் கவனத்துக்கு வந்த Collien Fernandes தொடர்பான விவகாரம், இந்த புதிய ஆபத்துகளை மிகத் தெளிவாகக் காட்டுகின்றது. Collien Fernandes யேர்மனியில் பிரபலமான தொலைக்காட்சித் தொகுப்பாளரும் நடிகையும் ஆவார். ஊடகங்களில் நேர்மையான, பலமான பெண் குரலாக அறியப்பட்ட இவர், சமீபத்தில் தனது தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றியிருந்த வேண்டத்தகாத ஒரு நிகழ்வை இப்பொழுது பொதுவெளியில் வெளிப்படுத்தியிருக்கின்றார். இந்த குற்றச்சாட்டுக்கு அவர் சுட்டிக் காட்டுவது அவரது முன்னாள் கணவர் Christian Ulmenஐ. Fernandes கூறுவதன்படி, பல ஆண்டுகளாக அவரது பெயரில் போலியான சமூக வலைத்தள கணக்குகள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. அந்தக் கணக்குகளூடாக, பிறருடன் பாலியல் சம்பந்தமான உரையாடல்கள் நடத்தப்பட்டிருப்பதாக அவர் குற்றம்சாட்டுகிறார். மேலும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட deepfake பாலியல் படங்களும் பரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அனுபவத்தை அவர் “மெய்நிகர் பாலியல் வன்முறை” என்று குறிப்பிட்டிருக்கின்றார். இந்த விவகாரம் ஏன் இப்பொழுது முக்கியமானதாக மாறியிருக்கின்றது என்றால், இது ஒரு தனிநபரின் பிரச்சினையைத் தாண்டி, சமூக அளவிலான ஆபத்துகளைக் கொண்டது என்பதால். Deepfake தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி இன்று யாருடைய முகத்தையும் வைத்து போலியான வீடியோக்களை உருவாக்கலாம். இது குறிப்பாக பெண்களுக்கு எதிரான ஒரு புதிய வகை டிஜிட்டல் வன்முறை எனலாம். ஒருவரின் அடையாளம், சமூகத்தில் அவருக்கான மதிப்பு, மற்றும் மனநிலை ஆகியவற்றை ஒரே நேரத்தில் பாதிக்கும் இந்தத் தொழில்நுட்பம், சட்ட ரீதியாகவும் சவாலாக இருக்கின்றது. இந்த குற்றச்சாட்டுகள் வெளிவந்ததன் பின்னர், யேர்மனியில் ஒரு சமூக எழுச்சி ஏற்பட்டிருக்கின்றது. இப்பொழுது, நாளுக்கு ஒரு ஊர்வலம் என்று ஏதாவது ஒரு பெரும் நகரத்தில் நடந்து கொண்டிருக்கின்றது. Fernandesஉம் இதில் கலந்து கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு வழங்கும் சட்டங்களை வலுப்படுத்த வேண்டும் என்று கோரிக்கைவிடுக்கிறார். இன்று இது ஒரு பெண்ணின் தனிப்பட்ட குற்றச்சாட்டு என்பதைத் தாண்டி, ஒரு சமூக விழிப்புணர்வாக மாறியிருப்பது கவனிக்கத்தக்கது. இந்த வழக்கு இன்னும் நீதிமன்றத்தில் இருக்கிறது. விசாரணைகள் நடைபெறுகின்றன. Fernandesஇன் முன்னால் கணவர். Christian Ulmen இந்த குற்றச்சாட்டுகளை முற்றாக மறுக்கின்றார். Collien Fernandes விவகாரம், இன்றைய உலகில் நாங்கள் எதிர்கொள்ளும் புதிய சவால்களின் ஒன்று. ஒரு பக்கம் தொழில்நுட்ப முன்னேற்றம் மனித வாழ்வை எளிதாக்குகிறது, அதே நேரத்தில் அதைத் தவறாக பயன்படுத்தப்படும் அபாயத்தையும் உருவாக்குகிறது. இந்த நிகழ்வு, டிஜிட்டல் பாதுகாப்பு, பெண்களின் உரிமைகள், மற்றும் சட்ட மாற்றங்களின் அவசியம் குறித்து நாம் தீவிரமாக சிந்திக்க வேண்டிய அவசியத்தைச் சொல்கிறது. படம்- நன்றி,விக்கிபீடியா
- Collien Fernandes
-
கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
- மீண்டும் எழுதப்படுமா எம்.ஜி.ஆர் வரலாறு?
விசுகு, எம்ஜிஆர் பற்றிய நிறை குறைகளை ஏற்கனவே அதிகம் வாசித்திருக்கிறேன். இனி புதிதாக எதற்கு என்பதால்தான் , நீங்கள் குறிப்பிட்ட பக்கத்தை நான் பார்க்கவில்லை- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
உங்களைப் போல்தான் எனக்கும் இணைந்து பயணித்த அனுபவமாக இருந்தது. ஆனாலும் வழி நெடுக அவர் மட்டும் சாப்பிட்டுக் கொண்டு வந்தார். எங்களுக்குத் தரவேயில்லை😁 இந்த மகிழ்ச்சி அவரது வீட்டுக்காரருக்கு இருந்திருக்குமா?- அதிர்ச்சியூட்டும் சைக்கிள் திருட்டு ஆனால் அதிசயமாக முடிந்த கதை
கடந்த வெள்ளிக்கிழமை (20.03.2026),யேர்மனி, Hamburg, Hansestadtஇல் நடந்த ஒரு சம்பவம் பலரையும் அதிர்ச்சியடையச் செய்திருக்கின்றது. 44 வயதான Rene, தனது நான்கு வயது மகளுடன் ஒரு வணிக வளாகத்துக்கு தனது E-Bike மூலம் வந்திருந்தார். அவரின் மனைவி பின்னர் அவர்களுடன் சேருவதாக இருந்ததால், காத்திருக்கும் சிறிது நேரம் கடைக்குள் சென்று Donuts வாங்க முடிவு செய்தார். அந்த நேரத்தில், அவரது நான்கு வயதுச் சிறுமி சைக்கிளின் trailer-இல் ஆழ்ந்த தூக்கத்தில் இருந்தாள். அவளது தூக்கத்தை கலைக்க விரும்பாத Rene, சைக்கிளை வணிக வளாகத்தின் அருகில் நிறுத்திவிட்டு ஒரு சில நிமிடங்களுக்கு மட்டும் உள்ளே சென்று Donuts வாங்கிக் கொண்டு திரும்பி வந்தார். ஆனால் வெளியே வந்தபோது சைக்கிள் காணாமல் போயிருந்தது அதிர்ச்சியடைந்த Rene, சற்றுத் தூரத்தில் தனது மனைவியை நிற்பதைப் பார்த்தார். Rene தன் மனைவியிடம் விசயத்தைச் சொல்ல பதட்டம் அதிகரித்தது. அந்த நேரத்தில், Reneக்கு சைக்கிளைப் பற்றிய கவலை இல்ல. அவரது மனதில் இருந்தது ஒன்றே ஒன்று. அது trailerஇல்தூங்கிக் கொண்டிருந்த அவரது மகள். உடனடியாக போலீசுக்கு தகவல் அளிக்கப்பட்டது. பெரும் அவசர நடவடிக்கையாக தேடுதல் தொடங்கப்பட்டது. ஹெலிகாப்டரும் இதில் ஈடுபடுத்தப்பட்டது. இந்த பதற்றமான நேரத்தில், Reneக்கு திடீரென ஒரு முக்கிய விசயம் நினைவுக்கு வந்தது. அது, அவரது E-Bike-இல் GPS Tracker பொருத்தப்பட்டிருந்த விடயம். உடனே தனது ஸ்மார்ட்போன் மூலம் அதன் இருப்பிடத்தை கண்டறிந்து, போலீசாருக்கு அறிவித்தார். சுமார் ஒன்றரை கிலோ மீற்றர் தூரத்தில் இருந்த ஒரு கடைக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த சைக்கிளை பொலிசார் இனம் கண்டுகொண்டார்கள். 30 நிமிடங்களாக என்ன நடக்கிறது என்று அறியாமல் Reneஇன் மகள் Ann Marie அந்த E-Bike இன் trailerஇல் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்திருக்கிறாள். திருட்டு சம்பந்தமாக 58 வயதான ஒரு பெண் கைது செய்யப்பட்டிருக்கின்றார். அந்தப் பெண், குழந்தையைக் கடத்த முற்பட்டாரா? E-Bikeஐத் திருட நினைத்தாரா? இல்லை, ஒன்றரை கிலோ மீற்றர் வீணாக ஏன் நடக்க வேண்டும் என்று சைக்கிளை எடுத்துச் சென்றாரா? தெரியவில்லை.- என் பெயர் பூனா (Buna)!
இப்படித்தான் திப்பிலி (மிளகு) கிறேக்கம் போய் பிப்பிலி ஆகி இன்று பெப்பர் ஆகி நிற்கின்றது.- கொழும்பில் இருந்து சவுதியரேபியா வழியாக ஒரு நாள்
என்னதான் உயிர் போகிற விசயமாயிருந்தாலும் சாப்பாட்டிலே நீங்கள் ரொம்பக் கவனம்- விடுமுறையில் வாங்கிய வில்லங்கமான நகை
நீங்களும் கெட்டிக்காரன்தான். நான்தான் ‘மூனா😜’ வழக்கறிஞர் என்றில்லாமல் நண்பன் என்ற முறையில். சரியான கணிப்பு. 09ந் திகதி சுற்றுலா பொலிஸ் அலுவலகத்துக்கு முதலாளி போயிருக்க வேண்டும். ஐயா ஹொலிடேயில் இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. 17ந்திகதி அடுத்த அழைப்பு, ஐயா இன்னும் ஹொலிடேயில் இருக்கிறார். ஒருநாள் வருவார். உண்மை ஒருநாள் வெளியாகும்- அதில் பொய்யும் புரட்டும் வெளியாகும் வரும்
Important Information
By using this site, you agree to our Terms of Use.