Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Cruso

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Cruso

  1. தேர்தல் நெருங்கும்போது அரசாங்கம் முக்கியத்துவம் கொடுக்கும். ஆனால் நிச்சயமாக அரசாங்கம் வீரசேகராவை அங்கு அனுப்பவில்லை என்று கூறலாம். அவரை அனுப்பி இருக்கிற வாக்கு வங்கியையும் ரணில் அரசு இழக்க விரும்பாது
  2. நீதிமன்றம் குற்றவாளி என்று தீர்ப்பு கொடுத்தாலும் எந்த நடவடிக்கையும் எடுக்க மாடடார்கள். தலைமைக்கு எதிராகவே நீதிமன்ற குற்ற சாட்டு இருக்கும்போது எப்படி நடவடிக்கை எடுக்க முடியும். எப்படி பாதுகாக்கலாம் , எப்படியான காரணங்களை சொல்லி சமாளிக்கலாம் என்று செயல்படுவார்களே ஒழிய எந்த எதிர் நடவடிக்கையும் இருக்காது.
  3. இப்போது வாட்டசாப்ப் பயனாளிகள் எச்சரிக்கும்படியான குறியீடுகளை அறிமுகம் செய்திருக்கிறார்கள் சேவை வழங்குநர்கள்.
  4. கெஹெலிய இப்போது அரச மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். ஆனாலும் தனக்கு அந்த அரச மருந்துகள் வேண்டாம் என்றும் தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கும்படியும் அடம் பிடிக்கிறாராம். இது எப்படி இருக்குது?
  5. நீர்மூழ்கி கப்பல் நிட்பதை காணவில்லையாம். தங்களுக்கு தெரியாமல் கடலுக்குஅடியால் வந்து விடடார்களாம். விரைவில் விரட்டி அடிப்பதாக கூறி உள்ளார். எப்படி இருந்தாலும் புலிகளுடனோ , தமிழர்களுடனோ பேச்சுவார்த்தை இல்லை என்று சொல்கிறார். அதாவது தமிழர்களுக்கு பிரச்சினை இல்லை என்பதுதான் அவரது கருத்து. விமல், கம்மன்பில , வீரசேகர போன்றோரை இணங்க வைப்பது நாய் வாலை நிமிர்த்துவது போல.
  6. சீன இங்கு வந்தால்தான் இந்திய பிரச்சினைபடுத்தும். அமெரிக்கா பிரச்சினையாக இருந்தாலும் இந்திய அந்தளவுக்கு கவலை படாது. அமெரிக்கா இப்போது தனது இலங்கை தூதரக எல்லையை மிக பெரிய அளவில் விஸ்தரித்துள்ளது. இந்த பாதுகாப்பு கருவிகளை வழங்குவதன் மூலம் எல்லாவற்றையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வர முயட்சிக்கிறது. எப்படியோ முய்ஸ்சுவின் ஆட்சிவர முன்னர் எல்லா ஒப்பந்தங்களையும் முடித்துவிட இந்தியாவும், அமெரிக்காவும் தீவிரமாக செயட்பட்டு கொண்டு வருகின்றது.
  7. இந்தியா இப்போது குழம்பி போய் இருக்கிறது. அதாவது அரசியலில் உள்ள யாரையுமே விட்டு வைக்காமல் எல்லோரையும் கவனிக்க வேண்டிய நிலையில் இருக்கிறது. இன்னுமொரு முயிஸு உருவாகிவிடா கூடாதென்ற எண்ணத்தில் இந்திய அரசு செயல்படுகின்றது. உண்மையாகவே முயிஸுவை உருவாக்கியது இந்தியாதான். அவர் ஒரு தீவிர இஸ்லாமிய பற்றுள்ளவர். இந்தியாவில் சங்கிகளால் அங்குள்ள முஸ்லிம்களுக்கு நடக்கும் அநியாயத்தை பார்த்து தீவிர இந்திய எதிர்ப்பாளராக மாறினார். சீனா அதனை நன்றாக பயன்படுத்தி கொண்டது. இப்போது சீன ஜேவிபி இனருக்கு பண உதவி செய்வதுடன் அவர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதையும் இப்போதுதான் இந்திய அறிந்ததோ தெரியவில்லை. கடந்த வாரம் கூட சீனா வழங்கிய உதவி பொருட்களை கிளிநொச்சி மக்களுக்கு JVP வழங்கி வைத்தது. இப்போதைக்கு ஜேவிபி இந்தியாவுடன் அனுசரித்து செல்லவே முயட்சிக்கும். ஆட்சிக்கு வந்தால் எல்லாமே இன்னுமொரு மாலைத்தீவாக மாற சந்தர்ப்பம் உருவாக்கலாம் . அந்த நாள் தொடக்கம் இந்திய எதிர்ப்பு கொளகையை உடையவர்கள் ஜேவிபி இணர். இப்போது அரசியல் காரணங்களுக்காக இந்தியா சென்றிருப்பதை இந்தியா தவறாக புரிந்து கொண்டிருப்பதாகவே தெரிகிறது.
  8. இல்லை. யாழ் மக்கள் அன்புடன் அழைத்ததால் அதை அவரால் தடட முடிய வில்லையாம் .
  9. இஸ்ரேல் மட்டுமில்லை. நிறைய நாடுகள் பதிக்கப்பட்டுள்ளன. அதாவது சூயஸ் கால்வாயுடான கப்பல் பயணம் 40 % ஆல் குறைவடைந்துள்ளது. அதாவது இஸ்ரேல் அல்லாத மற்றைய நாடுகளுக்கான பயணங்களும் தடைபட்டுள்ளன. எனவே இது மற்றைய நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கும் நடவடிக்கை. எனவே இது விரைவில் முடிவுக்கு கொண்டு வரப்படும். அன்கொன்றும் , இன்கொன்றுமாக நடந்தாலும் முடிவு உண்டாகும்.
  10. ஹத்தி என்பது ஒரு அரசோ , அங்கீகரிக்கப்பட அமைப்போ இல்லை . ஒரு கும்பலினால் யேமெனின் ஒருபகுதி கட்டுப்பாட்டில் கொண்டு வர பட்டு இரானால் பராமரிக்கப்படும் ஒரு பகுதி. இவர்களால் ஒரு சர்வதேச வழித்தடம் தாக்கப்படுவதை எவருமே ஏற்று கொள்ள மாடடார்கள். எனவே அமெரிக்கா , பிரிட்டன் போன்ற வல்லரசு நாடுகள் தங்கள் பொருளாதாரம் பாதிக்கப்படுவதை ஏற்று கொள்ள மாடடார்கள். இப்போதைக்கு இரானையவர்கள் தாக்க வில்லை. எனவே அவர்களிடமுள்ள கடல் வழி கடமைப்புகளாலே அவர்களைகட்டுப்படுத்த முடியும் என நினைக்கிறேன். இழப்புக்கள் இருந்தாலும் 50 % என்பது மிகவும் அதிகம்.
  11. இதில் சிறப்பமசம் என்னவென்றால் இலங்கையின் இலங்கையின் ஜனநாயகத்துக்காக , தமிழ் மக்களின் உரிமைக்காக போராடும் சரத் வீரசேகர அந்த நிகழ்வில் பங்கு பற்றியது. 😜
  12. இப்போதுதான் மொழி பெயர்ப்பு செய்வதட்கு நிறைய வசதிகள் இருக்கின்றனவே. இதையே தட்டி விடடீர்கள் என்றால் உடனே மொழி பெயர்ப்பை பெற்று கொள்ளலாம். மேலும் ஏதும் மாற்றங்களுடன் நீங்களே இந்த சேவையை செய்யலாம் என்று நினைக்கிறேன். அதாவது ஒரிஜினல் செய்தியுடன் உங்கள் மொழி பெயர்ப்பையும் இணைத்தால் அது நமபக தகுந்ததாக இருக்கும்.
  13. முன்னர் எல்லாம் எதை என்றாலும் வீடுகளில் சமைத்து சாப்பிடலாம் . இப்போது எல்லாமே பாஸ்ட் பூட் (Fast Food ) என்று ஓடுவதும் ஒரு காரணம். இன்னும் ஒன்று வெய்யில் பட்டு பங்கஸ் தாக்குதலுக்கு உள்ளான பிளாஸ்டிக் போத்தலில் அடைக்கப்படட தண்ணீர் பருகுவது. இது இப்போது அதிகமாகவே எல்லா இடங்களிலும் காணப்படுகின்றது.
  14. அது இந்தியாவிடக்குதான். சீனாவின் கைக்கு போகாத வரைக்கும் அமெரிக்காவிட்க்கு பெரிய பிரச்சினையில்லை.
  15. இவரது கருத்தை பார்க்கும்போது நிறைய இலங்கைத்தமிழருக்கு உதவி செய்திருக்கிறார் என்று ஊகிக்கலாம். உண்மையாகவே இலங்கையில் பல்கலை கலக்கம் வரிக்கும் இலவச கல்வியை பெற்று நிறைய பேர் வெளி நாடுகளில் மிகவும் நல்ல பதவிகளில், நல்ல நிலைமையில் இருக்கிறார்கள். ஆனாலும் 90 % இட்கும் அதிகமானோர் இவரை போல உதவி செய்திருக்கவில்லை என்று கூறலாம். அப்படி என்றால் வடக்கு கிழக்கு மக்களின் நிலைமை இன்று இருப்பது போல இருப்பதட்கு சந்தர்ப்பம் இல்லை. எப்படியோ இப்படியான நல்ல உள்ளங்கள் இருப்பது பாராட்ட தக்கது.
  16. மக்கள் சேவை என்று வரும்பொழுது இப்படி எல்லாம் துன்பங்கள், அவமானங்களை சந்திக்கத்தான் வேண்டும். கெஹெலிய ரம்புகவெல்லா அவர்கள் எத்தனையோ வியாதிகள் இருந்தாலும் மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்பதட்காக அரசியலை தொடர்ந்தவர். அவுஸ்திரேலியாவில் கூட தனது நோய்க்காக எத்தனையோ நாட்கள் வைத்தியம் செய்தார். பாவம், அவரை போய் இப்படியான பொய் குற்றசாட்டுகள் சுமத்தி உள்ளே தள்ளியிருப்பது ஏற்க கூடியதல்ல. இப்போது வைத்தியசாலையில் இருந்து கொண்டு மக்களுக்காக சேவை செய்து கொண்டிருக்கிறார். மக்கள் சேவை என்றால் எவ்வளவு கஷடம் பாருங்கள். 😜
  17. எந்த ஒரு யுத்தத்திலும் இழப்புக்கள் ஏட்படத்தான் செய்யும். இலங்கை போன்ற சிறிய நாட்டிலேயே ஏட்படட இழப்புக்கள் (இரு பக்கத்திலும்) அளவு எல்லோருக்குமே தெரியும். எனவே நிச்சயமாக அமெரிக்கா இழப்புக்களையும் சந்திக்க வேண்டும். அதட்காக குத்தி, இரான் போன்ற நாடுகள் செய்யும் அடடாகாசங்களை பார்த்து கொண்டு இருக்க முடியாது. அப்படி இல்லாமல் ஒதுங்கி இருந்தால் அவர்களால் உலக போலீஸ் காரனாக இருக்க முடியாது.
  18. ஸ்ரீதரன் இவர்களது போராட்டத்துக்கு வலு சேர்க்குமாறு கூறுகிறார். ஆனால் மாணவர்களின் கோரிக்கையாக 13 வது திருத்தத்தை ஏற்கமுடியாது என்று கூறி உள்ளனர். ஆனால் ஸ்ரீதரன் மற்ற தமிழ் தலைவர்களுடன் (??) இணைந்து 13 வது திருத்தத்தை அமுல் படுத்துமாறு இந்திய தூதரை அன்மையில் கேட்டு கொண்டுள்ளார் . இது அவரது இரட்டை நிலைப்பாடு இல்லையா? மாணவர்களை ஏமாற்ற ஒன்று, மக்களை ஏமாற்ற இன்னொன்று. நல்ல இருக்குது.
  19. தேசிய கொடியை பார்த்து சிங்கள மயம் என்று சொல்ல முடியாது. மூவின மக்களாலும் (அரசிஅயல்வாதிகள்) ஏற்றுக்கொள்ள பட கொடி அது. இனி அது மாற்றப்பட கூடியதுமல்ல. எனவே இலங்கையின் சுதந்திர தின நாளும் தேசிய கொடியும் நாங்கள் ஏற்று கொண்டாலும் இல்லாவிடடாலும் அதில் மாற்றமில்லை. வேண்டுமென்றால் சிங்கள குடியேற்றங்களை வைத்து சிங்கள மயம் என்று சொல்லலாம்.
  20. உண்மை. ராஜபக்சேக்களின் அழுக்குகளை எல்லாம் அந்த நாட்களில் நன்றாக சவர்க்காரம் போட்டு கழுவினார். இன்று அவருடைய அழுக்குகளை கழுவுவதட்கு யாருமே இல்லை. பாவம் மனுஷன். இதைத்தான் ஊழ் வினையென்பதோ? உப்பு திண்டவன் தண்ணீர் குடிப்பான். எப்படி இருந்தாலும் இந்த ஆளை உள்ளே தள்ளுவதட்கு போராடியவர்களை பாராட்ட வேண்டும்.
  21. அதனை யார் செய்வார்கள் என்பதும் பிரச்சினை. எந்த ஒரு வெளி நாடும் அப்படி தயாரக இருப்பதாக தெரியவில்லை. இதட்கு நிறைய பணம் தேவைப்படும் என்று நினைக்கிறேன். நிச்சயமாக இலங்கையில் உள்ள தமிழர்களால் அதனை முன்னெடுக்க முடியாது.
  22. அப்படி என்றால் இஸ்லாமிய பயங்கரவாதிகளும் சரியான பாதையில் செல்கிறார்களா? கடந்த வருடம் நிறைய இஸ்லாமிய பயங்கரவாதிகளின் இருப்பிடங்களில் NIA இன் தேடுதலுடன் கைதும் இடம் பெற்றது.
  23. நீங்கள்சொல்வது சரி. இருந்தாலும் அரசியலில் எதுவும்சொல்ல முடியாது. இப்போது விஜய் குறித்து சங்கிகள் பெரிதாக கதைப்பதில்லை. அடக்கி வாசிக்கிறார்கள். விஜயும்கூட விஜய் ஜோசெப் என்பதில் ஜோசப்பை அகற்றி விடடார். மேலும் தமிழ் நாடு என்பதை விட்டு சங்கிகள் கூறுவது போல தமிழகம் என்றுதான் பெயரும் வைத்திருக்கிறார். எனவே வரும் காலம்தான் இதட்கு பதில் சொல்லும். இருந்தாலும் இவரால் சாதிக்க முடியுமா என்பது கேள்விக்குறியே.
  24. ஈரானிய இலக்குகள் சிரியாவிலும், ஈராக்கிலும் குறி வைக்கபடாயிற்று. 80 இட்கும் மேட்படட இலக்குகளில் தாக்குதல்நடத்தப்பட்டுள்ளது. இன்னும் நிறைய எதிர்பார்க்கலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.