Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

Cruso

கருத்துக்கள உறவுகள்
  • Joined

  • Last visited

Everything posted by Cruso

  1. அவர்கள் தலைக்குள் உள்ளதை சரியாக பாவித்தார்கள். இவர்களுக்கு தலைக்குள் இருந்தாலும் எப்படி பாவிப்பதென்று தெரியவில்லை. அதுதான் முக்கிய காரணம். மற்றப்படி மேட்கு நாடுகளை குற்றம் சாடட முடியாது.
  2. பானை உடைந்து விட்ட்து. இனி ஒடட முடியாது. ஓட்டினாலும் தண்ணீர் கசிந்து கொண்டுதான் இருக்க போகின்றது.
  3. இந்தியா காரனுக்கு (சங்கிகளுக்கு) பயித்தியம் பிடித்து விடடதோ தெரியவில்லை. இங்குள்ள பயித்தியங்கள் , கொலைகாரர்கள் எல்லோரையுமே அழைத்து விருந்து கொடுக்கிறார்கள். பாவம் சங்கிகள், இலங்கையில் எவன் ஆட்சிக்குவருகிறானோ எண்டு தெரியாமல் என்ன என்னமோவெல்லாம் செய்கிறார்கள். மீண்டும் ஒரு முய்ஸ்சு வந்து விட கூடாது எண்ட ஆதங்கம்தான்.
  4. இதட்கு சேவை வழங்கும் நிறுவனங்கள் சில நிபந்தனை போட்டிருப்பதால் பிரச்சினை உருவாக்கி இருக்கிறது. எனவே கடந்த வாரம் நிறைவேற்றிய இணைய வழி பாதுகாப்பு சடடத்தை அவசர அவசரமாக திருத்துகின்றது. இல்லாவிடடாள் இவர்களது இந்த UPI கடடண முறை அம்போதான்.
  5. அப்ப என்ன நினைத்திருப்பார் என்று நினைக்கிறீர்கள்? மாவடட சபையாவது கிடைக்குமா எண்டு நினைத்திருப்பாரோ?😂
  6. இந்த மனுஷன் ஜனாதிபதி முறையை ஒழிப்பேன் எண்டுதான் ஆட்சிக்கு வந்தார். கடைசியாக அப்பாவி மக்களை குண்டு வைத்து கொலை செய்ததுதான் மிச்சம். ஆட்சிக்குவந்த பின்னர் ஜனாதிபதிகதிரையில் அமர்ந்து சுகம் கண்டார். சந்திரிக்கா அமையாரும் ஜனாதிபதி முரியை ஒழிப்பேன் எண்டுதான் ஆட்சிக்குவந்தார். அவரும் சுகத்தை அனுபவித்தார். இப்போதுரனில் தனக்கு அந்த கதிரை கிடைக்காது என்றவுடன் அதை ஒழிக்க வேண்டுமென்கிறார். சஜித் தான் அந்த கதிரைக்கு வந்த பின்னர் ஒழிப்பேன் என்கிறார். மொத்தத்தில் யாருமே அதை செய்யப்போவதில்லை. அது அப்படி ஒரு சுகமான அனுபவம்.
  7. பொது பயன்பாட்டு ஆணைக்குழுவை இவர்தான் அங்கிருந்துகளைத்து விட்டு தனது எடுபிடிகளை நியமித்திருக்கிறார். எனவே அவர்களும் இவர் சொல்படிதான் நடக்கிறார்கள். இப்போது அவர்கள்மீது பழியை போடுகிறார் . எப்படி இருந்தாலும் மின்சார கடடனம் அதிகம்தான். இலங்கையில் இப்போது கூடுதலாக நீர் , காற்றாலை மூலமாகத்தான் மின்சாரம் பெறப்படுகின்றது.
  8. வேதாளம் மீண்டும் முருங்கை மரத்தில். உண்மையாகவே ஏழை மக்கள் வைத்தியசாலைகளில் வந்து அழுவதை பார்க்கும்போது மிகவும் பரிதாபமாக இருக்கும். இந்த விடயத்தில் ஒரு பகுதியினருக்கு மட்டும் பெருமளவு ஊதிய உயர்வு கொடுத்து அரசு தவிறிழைத்தது என்பது உண்மை.
  9. சுமந்திரன் வந்து ஏறக்குறைய 10 வருடங்கள்தான் ஆகுது. சாம் சும் கூடடணி அதிக காலம் இருக்கவில்லை. இப்போது அதுவும் முடிந்து விட்ட்து. இனி ஈழம் கிடைக்கும் எண்டு பெருமால்களைப்போல கனவு காணலாம். அது பகல் கனவா இரவு கனவா என்பதை கனவு காண்பவர்கள் தீர்மானிக்க வேண்டும். இந பிரச்சினை தொடங்கி எத்தனையோ தசாப்தம் கடந்து விட்ட்து. எத்தனையோ கோட் சூட் அணிந்த தலைவர்கள், வெள்ளையும் சொள்ளையும், அணிந்த தலைவர்கள், எவருமே தோற்கடிக்க முடியாது என்று கூறப்படட ராணுவ அமைப்புக்கள் எல்லாம் இருந்தன. என்ன நடந்தது? தமிழ் மக்கள் இனப்பிரச்சினை தொடங்கும் முதல் உள்ள நிலையிலும் கீழேதான் இருக்கிறார்கள். வெளி நாடுகளில் வசதியாக இருப்பவர்களுக்கு இது புரிவதட்கு காரணம் , ஞாயம் எதுவும் இல்லை. உண்மையை , கள நிலவரத்தை எழுதும்போது சில பேருக்கு அது சஞ்சலமாக இருக்கலாம். எனவே உண்மை கசக்கத்தான் செய்யும். மண் பானை உடைந்து விட்ட்து. ஒடடவா முடியும் ?
  10. அவையள் எல்லாம் கதைக்க மாட்டினம் பாருங்கோ. இந்தியாதான் அதை தீர்மானிக்கும். இப்போது இந்தியாவின் தலையீட்டில் தமிழ் தலைவர் ஒருவர் வந்திருக்கிறார் பாருங்கோ. அவர் நிச்சயமாக அதை தீர்த்து வைப்பார். இந்தியாவை நம்புங்கள். 😜
  11. அதைத்தானே கலாம் ஐயாவும் சொன்னார்கள். நன்றாக கனவு காண வேண்டும். அது பகல் கனவா அல்லது இரவு கனவா என்று கனவு காணும் ஒவ்வொருவரும் தீர்மானிக்க வேண்டும். அந்த சுதந்தரத்தில் யாரும் தலையிட முடியாது. 😂
  12. என்ன செய்வது சில பயனதான் கொள்ளிகள் இங்கிருந்து ஓடிப்போய் வெளி நாடுகளில் பதுங்கி இருந்து கொண்டு வீரம் பேசுகிறார்கள். இதனை ஆமோதிப்பதட்கும் ஒரு மடயர் கூடடம் இருக்கத்தான் செய்கிறது. கள நிலவரம் என்னவென்றே தெரியாத மடயர் கூடடம். சங்கிகள் எல்லாம் இப்படித்தான் இருப்பார்கள். இந்தியாவின் அடிமைகளுக்கு சொல்லுவதட்கு வேறொன்றும் இல்லை.
  13. இப்போது ஒவ்வொருவரும் பதவி ஆசையில் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். எப்படி பாராளுமன்ற கதிரையில் அமர்ந்து சுகம் காணலாம் என்று திரிகிறார்களே ஒழிய வேறு ஒன்றுமில்லை. சுமந்திரன் விலகினால் தீரும் என்றால் சுமந்திரன் வருவதட்கு முன்னர் ஏன் தீர்க்கப்படவில்லை. இதெல்லாம் நொண்டி சாட்டுக்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு நிகழ்ச்சி நிரல்கள் இருக்கின்றன. அதன்படி இயங்குகிறார்கள். பணம், பணம், பணம்.
  14. மேலே உள்ள கட்டுரையுடன் வீரகேசரியில் நேற்றும் (11.02.2024) ஒரு கட்டுரை எழுதி இருந்தார். அதையும் முடியுமென்றால் இணைத்து விடுங்கள். தமிழ் ஈழம் , சமஷடி என்னும் கனவுடன் வெளி நாட்டில் வாழும் உறவுகள் நிச்சயம் வாசிக்க வேண்டிய கட்டுரைகள் .
  15. கத்தார் நாட்டுடன் செய்து கொள்ளப்படட $78 பில்லியன் ஒப்பந்தத்துக்காகன பரிசு. மிக பெரிய விலை கொடுக்க பட்டிருக்கிறது.
  16. குறைந்த பட்ச்சம் அவர்களிடம் உள்ள பணய கைதிகளை விடுதலை செய்தால் நிச்சயமாக இஸ்ரேல் போர் நிறுத்தத்துக்கு இணங்கலாம். இல்லாவிட்ட்தால் அழிவுகளை நிறுத்த முடியாது.
  17. அறிவித்தால் மட்டும் போதாது. அதை செயலில் காடட வேண்டுமில்லையா. அதைத்தான் இப்போதும் செய்கிறார்கள். நம்மட ஆட்கள் மாதிரி வாயால் வடை சுடுபவர்கள் அல்ல. எனக்கு இன்னும் ஞாபகம் இருக்குது. ஒரு முறை காசி ஆனந்தன் ஒரு அரசியல் கூடத்தில் பேசுகிறார். பழம் பழுக்கும் , அப்போது வௌவால்கள் வரும், வவ்வால்களின் கால்களில் விடுதலைக்குரிய ஆயுதங்கள் இருக்கும், தமிழ் ஈழம் கிடைக்கும் என்கிறார். இப்போது என்ன பிச்சைவேணாம் நாயை பிடி என்ற நிலைமைதான். சிங்களவன் சொன்னதை செய்கிறான்.
  18. இப்பதான் ஒரு கூடடம் தப்பினோம் பிழைத்தோம் என்று அங்கிருந்து ஓடிப்போய் இருக்கிறார்கள். அதுக்குள்ள இவருமா? கெதியா வர சொல்லுங்க. 😛
  19. இங்கு கருத்தாடல்களை பார்க்கும்போது தமிழ் மக்களுக்கு சிங்களவர்களிடம் இருந்து சுதந்திரம் கிடைக்க வேண்டும், போராட வேண்டும் என்பது போலத்தான் இருக்கின்றது. அனாலும் கள நிலவரம் அப்படி இல்லை. இனி தனி ராஜயமோ, சமஷடியோ, அல்லது வடக்கு கிழக்கு இணைந்த மாகாண சபையோ கிடைக்க போவதில்லை. ஆக கூடியது மாகாண சபை எனப்துடன் முழு அதிகாரம் கிடைக்குமா என்பதும் சந்தேகமே. எனவே அவர் அப்படி, இவர் இப்படி என்று கதைப்பதில் இனி ஒரு பிரயோசனமும் இல்லை. இந்திய நிச்சயமாக மாகாண சபைக்கு மேலே போகாது, இலங்கை அரசை பகைத்து கொள்ளவும் மாடடாது. சிலர் மக்களை உசார் மடயர்களாக்குவதட்கு வேஷ்ட்டியை மடித்துக்கொண்டு போகலாம், ஆனால் ஒன்றுமே நடக்க போவதில்லை. இந்தியாவில் இருந்து சாந்தன் இங்கு வர அனுமதி கொடுத்தாலும் அவர் சுதந்திரமாக செயட்பட முடியாது. அதே போல விடுதலை புலிகள் பற்றி அவர்களது சொந்த காரர்களே இப்போது அதைப்பற்றி பேசுவதில்லை. இப்படி கதைத்தால் சிலர் அடிக்கவும் வருகிறார்கள். அதாவது தங்களை நிம்மதியுடன் வாழ் விட சொல்லுகிறார்கள். எனவே இங்குள்ள யதார்த்தத்தை புரிந்து கொள்ள வேண்டும். இங்கு பெரிய பெரிய கட்டுரைகள் எழுதலாம் , மீண்டும் மீண்டும் வாசித்து அவர்கள் சந்தோச படலாம். வெளி நாடுகளில் இருந்து யதார்த்தத்தை புரிந்து கொள்ளாமல் எழுதுவதையே இது காண்பிக்கிறது. எனவே கள நிலவரம் எப்படி இருக்கிறது என்பதை புரிந்து கொண்டால் நல்லது.
  20. ஆன்மீக தலைவர் போப்பாண்டவரே அனுமதி கொடுத்த பின்னர் இந்த சடட திட்ட்ங்கள் எல்லாம் தேவையற்றது .
  21. அது சரி முய்ஸ்சு அதை ஏற்று கொண்டுள்ளாரா? ஏற்றுக்கொள்ளுவார் என்று எதிர்பார்க்கிறர்களாம். அதுசரி யாருக்கு லாபம்?
  22. இந்தியாவில் மதராஸாக்களை இடிக்கிறார்கள், ஐக்கிய அரபு அமீரகத்தில் இந்து கோவில்களை காட்டுகிறார்கள். என்ன உலகமடா இது. முஸ்லிம்கள் இந்தியாவுக்கு பயப்படுகிறார்களோ? ஆனாலும் மாலைதீவு பயப்படவில்லை.
  23. தமிழ் நாடடை குழப்புவதட்காக பயங்கரவாதிகள் வெளி நாடுகளில் இருந்து செயட்படுகின்றார்கள். அண்ணாமலையின் கும்பலாக இருக்க வேண்டும்.
  24. அரசியலில் இதெல்லாம் சகஜம்தானே . இன்னும் கொஞ்ச காலம் செல்லும்போது பிஜேபி இல் இணைந்தாலும் ஆச்சரியப்படுவதட்கில்லை.
  25. சிங்கப்பூர் பொருளாதாரம் ஏற்றுமதி இறக்குமதியில் தங்கி இருப்பதால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது என்பது உண்மை. இருந்தாலும் இலங்கை அதனால் பயனடைந்துள்ளது. அரசியல் வாதிகள் கொள்ளையடிக்காத வரைக்கும், இனி இலங்கை சிங்கப்பூராக மாற சந்தர்ப்பம் அதிகரித்துள்ளது.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.