Everything posted by பசுவூர்க்கோபி
-
டிட்வா தந்த வலி!
டிட்வா!துயர். **************** மண் சரிவு இது மற்றவர்களுக்கு ஒரு செய்தி. நாளை விடிந்தால் மகிழ்வான.. எத்தனை எண்ணங்கள் எத்தனை கனவுகள்.. எத்தனை குழந்தைகளின் மழலைப் பேச்சுக்கள் வேலை, பாடசாலை. திருமணங்கள்.காதல். கொ̀ண்டாட்டங்கள். அத்தனையும் ஒரு நொடியில் உயிரோடு மண்ணுக்குள் புதைக்கப்பட்டு விட்டதே! இறைவா! அப்பா,அம்மா,அண்ணன்,தம்பி அக்கா,தங்கை நண்பர்களென வெளியில் நின்று தேடும் உறவுகளுக்குத் தான் தெரியும் மூடிய மலையைவிட பெரியது. இந்த இழப்புகளின் வலியென்பது. மண்சரிவு இது மற்றவர்களுக்கு ஒரு செய்தி. துயருடன் -பசுவூர்க்கோபி.
-
இயற்கையே ஏன் இந்தக்கோபம்!
இயற்கையே ஏன் இந்தக்கோபம்! *************************************** உழுதவன் விதைக்கும் காலம் உணர்விலே மகிழ்ச்சி பொங்கும் அழுதவன் வறுமையெல்லாம் அடங்குமே என நினைத்தான். வரம்பு நீர் உயற்ச்சி கண்டு வளர்கின்ற நெற்பயிரின் அருகிலே.. அதிகாலை தொட்டு ஆதவன் மறையும் மட்டும் உடலது உயிராயெண்ணி ஒன்றியே வாழ்ந்தான் வயலில். கடலலை அடித்தாற் போல காற்றிலே பயிர்கள் ஆட உளமது நிறைந்துழவன் உச்சத்தில் மகிழ்ச்சி கண்டான். நிறைமாத கெற்பனி போல் நெற்பயிர் குடலை தள்ள வறுமையும் கடனும் நீங்கி-நல் வாழ்கையை கனவில் கண்டான். மனைவிக்கு சாறியோடு மகளுக்கு வரனும்தேடி மகனுக்கு கல்வியூட்ட மனதினில் எண்ணம் கொண்டான். அடை மழை கட்டி வானம்-"டித்வா" அடித்தது புயலாய் நாட்டில் பெரு வெள்ளம் உட்புகுந்து பிரளையம் ஆச்சே வீட்டில். வயலெல்லாம் குளமாய் போச்சு வருமானம் அழிந்தே போச்சே கனவெல்லாம் கலைந்து போச்சு கண்ணீரும் மழை நீராச்சே. மலையெல்லாம் உருண்டுவந்து மண்மூடி உயிர்கள் போச்சு குளம் குட்டை ஆறு எல்லாம் நிலம் மூடி கடலாய்யாச்சே பார்க்கின்ற இடங்களெல்லாம் பரிதவிக்கும் மக்கள் கூட்டம் இயற்கையின் கோபத்துக்கு எவன் தானோ? குற்றவாளி. எதிர்க் கட்சி வாதமெல்லாம் இந்நேரம் தேவையில்லை அழிவினிலிருந்து நாட்டை அனைவரும் காப்போம் வெல்வோம். அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
பனையின் கவலை!
பனையின் கவலை! ********************** என் மண்ணைப் பற்றி பிடித்ததனால் மரமாக நிற்கின்றேன் பிள்ளைகளை மாடுழக்கி தோலுரித்து பற்களால்- உதிரக்கழி உறிஞ்சி தூக்கியெறிய வந்தவனோ பனம் பாத்தியென்று மண்தோண்டி மூடிச்சென்றான். நாளை வடலியாக வளருமென்ற நம்பிக்கையில்தான் நான் வாழுகின்றேன். -பசுவூர்க்கோபி.
-
பெரும்பான்மைக்கு ஒரு கடிதம்!
கவலை தருகிறது! ********************** பெளவுத்தத்தை வணங்கும்-அன்பு பெரும்பான்மை மக்களே! புத்தர் போதித்ததெல்லாம் அறமும்,அகிம்சையும் தானே. அடாவடித்தனமும்,அரசியலுமா? புத்தரின் புனிதம் கெடுமளவில்-சில காவியுடையணிந்தவர்களை எப்படி அனுமதிக்கீறீர்கள். ஒற்றுமையான நாட்டில் தான் ஒவ்வொரு மனித இனமும் வாழநினைப்பது தப்பா? இலங்கையென்ற அழகிய நாடை கெடுப்பதற்கென்றே- சில அரசியல் வாதிகளும், அரசடி வாதிகளும் தங்களின் சுகபோக வாழ்வுக்காகவே இனங்களை பிரித்து பிணங்களை தின்ன நினைப்பது உங்களுக்கு புரியவில்லையா? மதங்களெல்லாம் மனிதத்துள்ளடங்கும். புத்தபெருமானே இன்று பார்த்தால் இரத்தக் கண்ணீர் வடிப்பார். எந்த அரசாங்கம் வந்தாலும் இவர்களுக்கு அடங்குவதென்றால் ஜனாதிபதி,பிரதமர் என்ற அரசியலமைப்புத்தான் ஏனோ? அறிவார்ந்த சிங்கள மக்களே! சிந்தியுங்கள். அன்புடன் -பசுவூர்க்கோபி. 18.11.2025
-
போதையை ஒழிக்க போர்க்கொடி தூக்குவோம்!
போதையை ஒழிக்க போர்க்கொடி தூக்குவோம்! ****************************************************************** எழுபது வருடமாய் ஆட்சியில் இருந்தவர் என்னத்தை எமக்கு கி̀̀̀̀ளித்தார்க̀̀̀̀̀̀̀̀̀ள். இலங்கையை விற்றுமே இனங்களை அழித்துமே இன்னல்கள் தந்துமே கெடுத்தார்கள். உலகத்தின் குழந்தையாய் உன்னத அழகியாய் இயற்கையே படைத்தாள் எம்நாட்டை ஊளலும்,இலஞ்சமும் போதையும்,சண்டையும் ஊரெல்லாம் அலைந்ததே எம் வாழ்க்கை. ஐவகை நிலமும் ஆறுகள் குளமும் அழகிய கடலும் அவள் தந்தாள். பொய்யையும் போரையும் உலகுக்கு காட்டி பொல்லாத செயல்செய்து அவன் உயர்ந்தான். அரசியல் வாதியோ நானில்லை - ஆனால் அனுர ஆட்சியை தினமறிவோம். இளையோரை கொல்லும் பாதாளப் போதையை எல்லோரும் சேர்ந்துமே ஒழித்திடுவோம். ஏற்றங்கள் தாழ்வுகள் கட்சிகள் பேதங்கள் எல்லாம் மறந்து அணிதிரள்வோம் -தோழரின் இத்திட்டம் மேம்பட இளையோரை காத்திட இனங்கள் அனைத்துமே கை கோர்ப்போம். வணக்கம். அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
கைகூ வடிவில்!
மிக்க நன்றிகள். நன்றிகள்.
-
இனிய தீபாவளி
ஆடடித்து தீபாவளி கொண்டாடி விட்டீர்கள் அருமை (வரிகள்) கொன்றால் பாவம் தின்றால் போச்சு.என்பார்கள்.
-
தீபாவளி துளிகள்!
தீபாவளித் துளிகள்! ************************ தீப ஒளியில் இருளகன்றது குடிசை எங்கும் வெளிச்சம் அடுப்புக்குள் பூனை கிடப்பது தெரிந்தது. தீபாவளி எப்போது வருமென காத்துக் கிடந்தார்கள் குழந்தைகள் அடுத்த புது உடுப்புக்காக. விற்கும் விலையை இருமடங்காக்கி பாதிவிலைக்கு தருவதாக கொடுக்கிறார்கள் கடைக்காரர்கள். நரகாசூரனை அழித்த நாளென கொண்டாடுகிறார்கள் உயிரோடே இருக்கிறான் போதைப்பொருள் அசுரனாக. தீபாவளி கொண்டாட்டத்துக்காக பழய உடுப்புகளை களட்டி வீசுகிறார்கள் பாவம் ஆடு மாடுகள். கோயில்களை விடவும் நிரம்பி வழிகிறது மக்கள் கூட்டம் மதுக்கடை வாசல்களில். ஆலயங்களுக்கு எல்லா பூக்களும் எடுத்து செல்கிறார்கள் ஆனால் செவ்வந்தியை தவிர்த்து. பெற்றோலுக்கு பதிலாக மது ஊற்றி ஓடும் வாகனங்கள் பயணிகள் எச்சரிக்கை. தபால் காரர்களிடமிருந்து தீபாவளி காட்டுகளை கைபேசிகள் பறித்தெடுத்துவிட்டன. தீபாவளி இனிப்புகளும் பலகாரங்களும் இப்போது அம்மாக்கள் செய்வதில்லை ஆயாக்கள் செய்கின்றார்கள் கடைகளில். அன்புடன் -பசுவூர்க்கோபி. “எல்லோர் வாழ்விலும் இருள் அகன்று ஒளி பிறக்க இனிய நல் தீபாவளி நல் வாழ்த்துகள்”
-
கைகூ வடிவில்!
கைக்கூ வடிவில்... நீண்ட இடை வெளிக்குப் பின் "அன்பு இதயங்களை" சந்திப்பதில் மகிழ்வடைகின்றேன்.நன்றி ஐஸ் மழை கொட்டுகிறது நனைந்தவர்கள் எரிந்து சாகிறார்கள். “போதை” ************************************************* ஜாலியாக பஸ்களில் ஏறும் பிரயாணிகள் ஆவியாக்கி இறக்கப்படுகிறார்கள். “விபத்து” *************************************************** பட்ட மரமும் துளிர் விடுகின்றது பார்ப்பதற்கு யாருமில்லை. “முதியவர்கள்” ***************************************************** எரிவோம் என்று தெரிந்தும்நெருப்பை தலையில் கொட்டுகிறார்கள். “வடி” **************************************************** நச்சு மருந்து கடைகளாக மாறிவிட்டன “மரக்கறிச் சந்தை” ***************************************************** தற்போது காமத்துக்கே முதலிடம் கொடுக்கிறது. “காதல்” ********************************************************** பருவமழை பெய்யாவிட்டாலும் விதைக்கிறார்கள் “காமம்” ***************************************************** மீன் பிடிக்க வலைபோடுகிறார்கள்- அதில் தாங்களே மாட்டிக்கொள்ளுகிறார்கள். “இந்தியமீனவர்கள்” **************************************************** ஒழிந்திருந்தாலும் உன் வாழ்வை உயர்த்தும்,தாழ்த்தும் அளவுகோல். “நாக்கு” ***************************************************** பழய அரசுகளால் செயற்கையுரத்தை தடைசெய்து இயற்கை உரம் தயாரிக்கப்பட்டது. “மனித எலும்புக்கூடுகள்” தொடரும்… அன்புடன்-பசுவூர்க்கோபி.
-
தென்றலாய் வந்தது வசந்தகாலம்!
உண்மைதான் அக்கா வேலைப்பளு காரணங்களால் தொடர்ந்து கவிதை தரமுடியாமலுள்ளது. இருந்தாலும் இடையிடையே "யாழ்" வந்து போவது மிக்க மகிழ்வு தருகிறது.அன்போடு நன்றிகள். அன்பு தமிழ் சிறி அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்🙏
-
தென்றலாய் வந்தது வசந்தகாலம்!
தென்றலாய் வந்தது வசந்தகாலம்! *************************************** பொதிகையிலே பூத்தவளே வசந்தத்தின் வடிவழகே இதமான மயிலிறகே இளம் காற்ரின் உடல் அழகே உலகெல்லாம் நடைபயிலும் உத்தமியே இனியவளே இயற்கையின்.. படைப்பில் நீதான் இளமொட்டுத் தேவதையே. கன்ணுக்குத் தெரியாத இளம் புன்னகை தாரகையே விண் தொட்டு மண் தொட்டு விளையாடும் பெண்ணழகே கடல் தொட்டு கரை தொட்டு காவியங்கள் படைத்தவளே அகிலத்தில் உனைத்தானே அனைத்துயிக்கும் பிடித்ததுவே பஞ்சு போன்ற உன் மேனி பட்டாலே உணர்வு பொங்கும் பிஞ்சான உன் கையை பிடித்திழுக்க எமைத்தூண்டும் வஞ்சமில்ல உன் நெஞ்சால் வருடிவிட்டு போகையிலே நெஞ்சமெல்லாம் இனிக்குமடி நின்மதியோ பெருகுமடி நீ வந்து தொடும் போது பழய நினைவெல்லாம் வருகிறது நிலவொளியில் கடல்கரையில் காதலித்த பொழுதுகள் தாய் தந்தை உறவோடு தமிழ் பூத்த நேரங்கள்-நாம் கூட்டுக் குடும்பங்களாய் குதுகழித்த காலங்கள். முல்லை பூ தடவிமுத்தமிட்டு நீ செல்வாய்-மரங்களை செல்லமாய் ஆட்டிவிட்டு செய்யாததுபோல் நீ நடிப்பாய் கல் நெஞ்சுக்காரரையும் கரையவைத்து மகிழ்விப்பாய் காலமெல்லாம் எம் வாழ்வில் கலந்து நீ உயிர் தருவாய். கவிஞர்-பசுவூர்க்கோபி.
-
பஞ்சத்திற்கு சிறகு வைப்போம்!
தற்செயலாக சந்தித்தது அத்தோடு இனும் சில கிடைத்திருக்கிறது காலம் கடந்தாலும் யாழ் இணையத்தில்போடும்போது மீண்டும் புத்துணர்வு ஏற்படுகிறது. மகிழ்வோடு நன்றிகள்.
-
பஞ்சத்திற்கு சிறகு வைப்போம்!
நீங்கள் சொல்வதுபோல் பழமையை நினைத்து இனிமை காணத்தான் முடியும். வாழ்த்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்🙏
-
பஞ்சத்திற்கு சிறகு வைப்போம்!
நான் பிறந்த மன்ணுக்கு நெடுந்தீவு,Delft,பசுவூர்,ஆவூர்,மூலிகைத் தீவு,பசுந்தீவு என்று பல பெயர்களுண்டு பசுக்களும்.குதிரைகளும் நிறைந்திருந்ததாம் எங்கள் மூதாதையர் காலத்தில் இராமேஸ்வரக் கோயிலின் திருவிழாக் காலங்களில் தோணிகள்,வத்தைகள் மூலமாக பால்,பூக்கள் கொண்டுபோய் வழிபட்டு வருவார்களாம். இதன் காரணமாக பசுவூர் என்னும் பெயரை எனது பெயருக்குமுன் சேர்துக் கொண்டேன். Delft என்ற பெயரும் ஒல்லாந்தர் ஆட்சிக்காலத்தில் வைக்கப்பட்டபெயர்.இதற்கு முன்னும் தமிழ் மன்னன் வெடியரசன் ஆண்ட கோட்டையொன்றும் எங்கள் வீட்டுக்கு அருகாமையில் உண்டு. உங்கள் கேள்வியால் எங்கள் ஊர் பற்றிகொஞ்சம் சொல்வதில் மகிழ்சியடைகின்றேன் உளமார்ந்த நன்றிகள் நிலாமதி அக்கா. தற்போது பல ஆண்டுகளாக ஒல்லாந்து(நெதர்லாந்து) தேசத்தில் தான் வசித்து வருகிறேன் இங்கும் Delft எனும் பெயரில்பெரு நகரமொன்று இருக்கிறது. உங்களுக்கும் உளமார்ந்த நன்றிகள். மகிழ்வோடு நன்றிகள்🙏
-
பஞ்சத்திற்கு சிறகு வைப்போம்!
14.01.1986 தைப் பொங்கல் தினத்தன்று வெளியாகி இருந்த இந்தக் கவிதையை எனது பழய பொக்கிஷங்களிலிருந்து கண்டேன். அதை 14.01.2025 நடந்த பொங்கலோடு சேர்த்துக் கொள்ளுவோம். பஞ்சத்திற்கு சிறகு வைப்போம்! ************************************* ஏட்டைப் படித்த நாங்களனைவரும் சேட்டைக் கோட்டை வெறுத்திடுவோம் காட்டையழித்து மாட்டைப் பூட்டி நாட்டை ஏரால் உயர்த்திடுவோம் சூட்டையடித்து நெல்லைக் கொட்டி மூட்டையிலிட்டுச் சேர்த்துதிடுவோம் ஆட்டை மாட்டை பண்ணையில் வளர்த்து சோட்டையுணவை உண்டிடுவோம் வீட்டையாளும் பஞ்சப் பாட்டை ஓட்டை வழியால் துரத்திடுவோம். அன்புடன் -பசுவூர்க்கோபி.
- IMG_3074.jpg
-
மாற்றமொன்றே மாறாதது!
உங்கள் கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்கநன்றிகள்🙏
-
மாற்றமொன்றே மாறாதது!
உங்களின் அன்பான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள் 🙏
-
மாற்றமொன்றே மாறாதது!
மாற்றமொன்றே மாறாதது! ****************************** ஆண்டுகள் பழசு,அனுபவம் பழசு மாண்டவர் பழசு,மன்னர்கள் பழசு இன்றைய நாளே எமக்கு புதிது எனிவரும் நாட்களும் புதிது புதிதே! பத்து ரூபாய்க்கு பவுண் விலை விற்றதும் பனாட்டொடியல் நாங்கள் உண்டதும் வித்துகள் சேர்த்து விவசாயம் செய்ததும் வேறு கிராமங்கள் வண்டிலில் சென்றதும். சூள்கொழுத்தி மீன்கள் பிடித்ததும்-தோணி சுக்கான் பிடித்து கரைகளத் தொட்டதும் நடந்தே நாங்கள் பள்ளிக்கு சென்றதும் நம்முன்னோர் வாழ்வுக் கதைகள் சொல்வதும். இந்தகாலத்து பிள்ளைகள் காதுக்கு இவைகள் எல்லாம் கற்பனைக்கதைகளே! எங்கள் வாழ்வோ இப்போது இல்லை இவர்களின் வாழ்வும் இதுபோல்லாகலாம். ஏனெனில்…. பாலை வனங்கள் மழையால் அழியுது-வெண் பனி கொட்டுமிடமெல்லாம் வெய்யில் அடிக்குது மும்மாரி மழையும் மோசமாய் போயிற்று முன்பு போல் இல்லை இயற்கையே மாறிற்று. பழசை மட்டுமே இறுக்கமாய் பிடிப்பதால் பயனொன்றுமில்லை புரிதலும் வேண்டும் புதுசை நோக்கியே போய்க்கொண்டிருந்தாலே புதுமைகள் பார்த்து மகிழ்வோடு வாழலாம். அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
2024/2025 புது வருடம்!
தமிழர்களின் பண்பாடு தானே வரவேற்பது. உங்கள் கருத்துக்கு உளமார்ந்த நன்றிகளுடன் ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகளும்.Satan
-
2024/2025 புது வருடம்!
நன்றிகளும் ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகளும் அக்கா. அன்புடன் தமிழ் சிறி அவர்களுக்கு. உளமார்ந்த நன்றிகளும் புதுவருட நல் வாழ்த்துகளும் உரித்தாகட்டும்.
-
2024/2025 புது வருடம்!
2024/2025 *************** பழமைக்கு பிரியாவிடையும் புதுமைக்கு வரவேற்பும் இன்றிரவு 12 மணிக்கு! இழப்புகள், ஏற்றங்கள் துக்கங்கள், மகிழ்சிகள் வேதனைகள், சாதனைகள் வெறுப்புகள், வெற்றிகள எல்லாமே இரண்டறக் கலந்து எமக்குத் தந்தாய். அத்தோடு.. உலகச் சண்டைகளும் இயற்கையழிவுகளும் பொருளாதார சிக்கல்களும் தந்து.. பொறுமையிழக்க வைத்தாய். இத்துடன் முடிந்தது என்றுதான் இருந்தோம் உனது கோரப் பற்களால்-தென் கொறியா விமானத்தை தீயிட்டுக் கொளுத்தி 179 அப்பாவி உயிகளை தின்றுவிட்டுச் செல்கிறாயே இது நியாயமா? நீயே சொல். அவர்களின் துக்கத்தில் மூழ்கி உன்னை அனுப்பி வைக்கிறோம் போய் வா! ஆண்டே 2024. 2025தே வருக! வருக! புலரும் புது ஆண்டே வந்து- நீ உயிர் கொல்லி நோய்களை நீக்கு உலகத்தின் சண்டைகள் போக்கு ஊழல்கள் இலஞ்சத்தை கொழுத்து ஊர்களெல்லாம் அன்பை நிலை நிறுத்து. செயற்கை உணவுகளை பொசுக்கு தேசத்தில் உணவில்லா நிலைதன்னை ஓட்டு ஏழைகள் என்ற சொல்லை எடுத்தெறி இருள் சூழ்ந்த இனங்களுக்கு ஒளி கொடு மதச் சண்டை இனச் சண்டை அகற்று மனிதரெல்லாம் ஒன்றென நீ உயர்த்து இயற்கையவள் அழிவிலிருந்து காப்பாற்று எல்லோர்க்கும் உலகமென்பதை உணர்த்து. அன்பு இதயங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல் வாழ்த்துகள். அன்புடன்-பசுவூர்க்கோபி.
-
எப்படி மறப்பது?
உயிரோடு கரைதின்ற கடல்..! ************************************* கண் இமைக்குள் உனை வைத்தே! காலம் எல்லாம் வாழ்ந்தோம் கடல் எங்கள் தாயென்றே- உன்கால் ஓரம் கிடந்தோம். அலை கரத்தால் எம் உடலை அன்போடு தொடுவாய்…. அதை எடுத்து எம் நெஞ்சின் ஆழத்தில் புதைப்போம். உனை விட்டு ஒரு நாளும் ஊர் தள்ளி போகோம். உன் வாழ்வில் எம் வாழ்வை ஒன்றாகக் கலந்தோம். ஓர் இரவில் உன் உயரம் ஓங்கியது ஏனோ? உயிர் குடிக்க உந்தனுக்கு தூண்டியது யாரோ? தாயே தன் பிள்ளைகளின் தலை கொய்யலாமோ? தடை உடைத்து மதம் பிடித்து- எம்தடம் அழிக்கலாமோ? உன் மீது நாம் கொண்ட உயிர் பாசம் எங்கே? உணர்வறுந்து உயிர் குடித்த, உலகோடு சேர்ந்தாய். இப்போதும் எம்காதில் நீ இரையும் சத்தம் எம் உயிர்கள் பேசுவதாய் இருக்கிதம்மா நித்தம் கண்ணீர்தான் எம் இடத்தில் கடசி வரை மிச்சம் கடல்தாயே?எனி வேண்டாம் எங்களுக்கோர் அச்சம். துயருடன் -பசுவூர்க்கோபி. (26.12.2004ம் ஆண்டின் ஆழிப்பேரலை நினைவாக)
-
இலங்கையின் பொறுப்புக்கூறலை அர்த்தமுள்ளதாக்குவதற்கு உதவுங்கள்; கனடிய அரசாங்கத்திடம் சிறீதரன் எம்.பி கோரிக்கை
வீடு பற்றி எரிகிறது முதலில் அதையும் அணைக்கவேண்டும். சிறி ஐயாவுக்கு வாழ்த்துகள்
-
ஊதாரி ஊடகங்கள்!
அதுதான்நடக்கிறது. நம்ம விரல்களும் சும்மா இருப்பதில்லைத் தான்😀 கோதாரி ஊடகங்கள்தான்😀 அன்போடு மிக்க நன்றிகள்.