Jump to content

பசுவூர்க்கோபி

கருத்துக்கள உறவுகள்
 • Posts

  388
 • Joined

 • Last visited

Everything posted by பசுவூர்க்கோபி

 1. அன்னையர் தினம்..! ************* பூமாதேவியென பூமியும் பெண்ணே கங்கை யமுனை சிந்து காவேரி ஓடும் ஆறுகளும் பெண்ணே.. உயிரினம் அனைத்தும் உன் மடிதாங்கியே உலகில் உதித்தன. கருவறை தன்னுள் உருவினை தாங்கி உதிரம் கலந்து உடலினைத் தந்து உணர்வையூட்டி உலகினைக்காட்டிய அம்மாதானே அனைத்துக்கும் தெய்வம். அன்னையர் தினத்துக்கு ஒருநாள் போதுமா-எம் ஆயுள் வரையும் அன்னையை மறக்கத்தான் முடியுமா? அன்னையர் தின வாழ்த்துக்களுடன். அன்புடன் -பசுவூர்க்கோபி- 09.05.2021
 2. மேநாள்..! *********** உழைப்பாளர் தினம் 18ம் நூற்றாண்டின் போராடிப் பெற்றதிற்கான வெற்றித்தினம்-இந்த மேதினம்.. ஆனால் இன்றும் ஆதிக்க அரசியல் முதலாளி.. வர்க்கத்துக்கு எதிராக போராடவேண்டிய தினம். உலகெங்கும் இன்று லீவுநாள். முதலாளிகளுக்கு ஆடம்பர நாள் அன்றாட தொழிலாளர்களுக்கு-இது பட்டணியின் நாள். இருந்தாலும் எல்லோரையும் துரத்தும் பொது எதிரியின் நாள் அதுதான் “கொரோனாவின் நாள்” உயிர் காக்க அனைவரும் இணைந்து.. போராடுவோம். அன்புடன் -பசுவூர்க்கோபி- 01.05.2021
 3. அன்பான யாழ் உறவுகளுக்கு.. எனது இந்த கவிதை முனைவர் முபா ஐயா அவர்கள் தமிழ் நாடு புதுக்கோட்டை ஆசிரியர் பயிற்சிக் கல்லூரியில் படித்திருந்தார் அவர்களுக்கு நன்றிகள். பார்கின்ற உங்களுக்கும் நன்றிகள்.
 4. நாளைய விடிவு நமக்கா விடியுமென்ற நம்பிக்கையோடு வாழுவோம். நன்றி அண்ணா
 5. எமக்கு மேலே இருக்கின்ற அந்த சக்தியால் தான் எல்லாமே முடியும். உண்மையே அக்கா நன்றிகள்
 6. சித்திரையே வருக! சிறப்பெமக்கு தருக! ******************************* நிலையான நின்மதி எமக்கு வேண்டும்-2020 நீழ் துயர் எமை விட்டு அகலவேண்டும் உலகத்து நாடனைத்தும் உயர வேண்டும் உயர்வான எண்ணங்கள் தோன்ற வேண்டும். அருவியும் விழுந்தோடி ஆட வேண்டும்-அகிலம் அழகிய பூஞ்சோலை ஆக வேண்டும் உணவில்லா பஞ்சநிலை ஒழியவேண்டும் ஊரெல்லாம் மழை பொழிந்து செழிக்கவேண்டும். விமானமும் கப்பலும் சேவை வேண்டும்-நாம் விரும்பிய நாடெல்லாம் போகவேண்டும் அருமைமிகு இடமெல்லாம் பார்க்க வேண்டும் அடைபட்டமனம் திறந்து அலசவேண்டும். விண் மேகம் கடலோடு உரச வேண்டும்-பூமி விளைநிலத்தில் தென்றலது பாடவேண்டும் இருள் வெளுக்க சூரியனும் ஒளிர வேண்டும் இயற்கையவள் எமைச் சேர்த்து வாழவேண்டும். அவளிடத்தில் எங்களுக்கு பணிவு வேண்டும் அனைத்துயிரும் எமைப்போல காக்கவேண்டும் அண்டவெளி பிரபஞ்சம் நாம் அறிய வேண்டும் அறிந்த பின்பு எம்மையவன்அழைக்கவேண்டும். அன்புடன் -பசுவூர்க்கோபி- 13.04.2021
 7. உங்களின் ஆசீர்வாதம் என்னை மென்மேலும் எழுதத்தூண்டும் நன்றிகள் அண்ணா
 8. பசுவூர்க்கோபியின் படம்சொல்லும் வரிகள்-03 ********************************** கூட்டுக்குடும்ப வாழ்வை விட்டு குடத்து நீரை இடுப்பில் அணைத்து பிரிவின் துயரை மனதில் சுமந்து ஒற்றையடி பாதையிலே ஓரமாய் வந்தேன் அப்போது.. கும்பலாய் கிடந்த நெருஞ்சி முற்கள் குத்திச் சொன்னது. இயற்கையின் விதியை தனியே வாழ ஆசைப்படுகிறோம் தாயே எடுத்து தூர எறியுங்கள். உதிரம் வடிந்த காலின் வலியால் ஒளிமயமானது எங்களின் வாழ்வும். -பசுவூர்க்கோபி- 08.04.2021
×
×
 • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.