Everything posted by பசுவூர்க்கோபி
-
பஸ் பயணம்!
நாட்டில் நின்ற காலம் தொடர்-2 பஸ் பயணம்! ************* பஸ்.. நிக்கமுன்னே ஏறச்சொல்லி நடத்துனரோ கத்திறார் நாங்கள் ஓடி ஏறமுன்னே சாரதியோ இழுக்கிறார் யன்னல் சீற்று அத்தனையும் தண்ணிப்போத்தல் கிடக்குது நாம் இருக்க போனாலே-அருகில் ஆள் இருக்கு என்கிறார் அத்தனைக்கும் காசு வாங்கி ஆளைப் பின்பு ஏற்றுறார் ஆரம்பத்தில் ஏறியவர் அவலப்பட்டுத் தொங்கிறார். ஏறிவரும் அனைவர் முதுகிலும் சாக்கு பைகள் தொங்குது என்னொருவர் இடத்தை கூட அந்தபைகள் பிடிக்குது இறங்கிப் போகும் போதுகூட கையில் எடுப்பதில்லை இழுத்திழுத்து அனைவருக்கும் இடஞ்சல் கொடுத்து போகுறார். குடி போதையில் சிலபேரோ அருகில் வந்து அமருறார் கொஞ்சநேரம் போன பின்பு குரங்குப் புத்தியை காட்டுறார். கைபேசி பேசிக்கொண்டு-சில சாரதியோ ஓடுறார். சடும் பிறேக்கு போட்டுப் போட்டு சனத்தை சாவடிக்கிறார். ஐம்பதற்கு மேற்பட்டோர் இருந்த பஸ்சில் ஒருநாள் ஏந்தம்பி மெதுவாயோடு-என எழுந்ந்து நானும் சொன்னேன் என்கருத்தை ஏற்றுக்கொண்டு இருவர் மட்டும் எழுந்தார் ஏன் சோலி என்றதுபோல் மற்றவர்கள் உறைந்தார். விபத்தொன்று நடந்தபின்பு விம்மி அழுதென்ன விளிப்போடு நாமிருந்தால் விடியும் எங்கள் நாடு. தொடரும்… அன்புடன் -பசுவூர்க்கோபி.
- Unknown-1.jpeg
-
ஊர்த் தாய்க்கு ஒரு கடிதம்!
மகிழ்வோடு நன்றிகள். உளமார்ந்த நன்றிகள்.
-
ஊர்த் தாய்க்கு ஒரு கடிதம்!
உங்கள் கருத்துப் பார்த்து மிகவும் சந்தோசம் அடைகிறேன் நெஞ்சார்ந்த நன்றிகள்.🙏
-
ஊர்த் தாய்க்கு ஒரு கடிதம்!
ஊர்த் தாய்க்கு ஒரு கடிதம்! ************************* உயிருக்கு பயந்து ஒழித்தோடிப்போனவர்கள் என்று கேலி செய்கிறார்கள் அம்மா… அன்று நீதானே சொன்னாய் ஓடித்தப்பு பின் ஊர்களைக் காப்பாற்றவேண்டுமென்று. அதனால்.. வெளிநாடொன்றில் தஞ்சம் புகுந்து விட்டோம். எங்களை.. ஏற்றுக்கொள்ள எத்தனை கேள்விகள் எத்தனை விசாரணைகள் எத்தனை இழுத்தடிப்புகள் இப்படியே எத்தனை வருடங்கள் காத்துக்கிடந்தோம். அகதியென்ற பெயருடனும் கையில்.. அன்னத் தட்டுடனும் அவர்களின் முகாங்களில் அலைந்தபோது கூட எங்கள் துன்பங்களை உனக்கு சொல்ல நாம் விரும்பியதேயில்லைத் தாயே! விடிவு தேடும் உனது துன்பத்தை விட இது சிறியதென்பதால். நாங்கள்.. தாங்கியே வாழப் பழகினோம். வேறொரு மொழி, வேறொரு கலாச்சாரம், வேற்று மனிதர்கள் விபரம் தெரியாத நாம். அரசுகள் எங்களை ஏற்றுக்கொண்டபோதிலும் இங்கு சிலர் எங்களை வேற்ரு கிரக மனிதர்களாகவே பார்த்தார்கள். இப்படி இருந்தும் எங்களின் உழைப்பின் ஒருபகுதியை உனக்கு அனுப்பியே அங்குள்ளேரை வாழவைத்தாயென்பதை அவர்களுக்கு ஞாபகப் படுத்து தாயே! அனால் இன்றோ எங்களின் உழைப்பு பொய் களவில்லா எங்களின் வாழ்க்கை முறை மொழியின் தேர்ச்சி குழந்தைகளின் கல்வியின் உயற்சி பலதையும் பார்த்து மனிதநேயத்துடன் தங்களின் குழந்தைகளாக எங்களை பார்கிறார்கள். தாயா?தத்தெடுத்த தாயா? என்ற குளம்பம் எங்களை இப்போது வாட்டுகிறது. இருந்தாலும்- எம் உயிர் போகும் நிலை வந்தாலும் உன்னை மறக்கமுடியுமா? அம்மா.. எங்கள் பிள்ளைகளுக்கு பேரப் பிள்ளைகளுக்கு பூட்டப் பிள்லைகளுக்கு உன்னைத்தான் பேர்த்தி,பாட்டி பூட்டியென சொல்லி வளர்கிறோம் தாயே! ஒருகாலம் நாங்கள் வரும்போது-இது எனது பிள்ளைகள், எனது பேரப்பிள்ளைகள் எனது பூட்டப் பிள்ளைகளென்று “அங்கிருப்போர்க்கு” சொல்லிவை தாயே அது போதும் எங்களுக்கு! அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
புதியன புகுதலே வாழ்வு!
நெஞ்சார்ந்த நன்றிகள்🙏
-
புதியன புகுதலே வாழ்வு!
உங்களின் கருத்துக்கு நன்றிகள்.
-
புதியன புகுதலே வாழ்வு!
புதியன புகுதலே வாழ்வு! ***************************** ஆண்டுகள் பழசு,அனுபவம் பழசு மாண்டவர் பழசு,மன்னர்கள் பழசு இன்றைய நாளே எமக்கு புதிசு எனிவரும் நாட்களும் புதிசு புதிதே! பத்து ரூபாய்க்கு பவுண் விலை விற்றதும் பனாட்டொடியல் நாங்கள் உண்டதும் வித்துகள் சேர்த்து விவசாயம் செய்ததும் வேறு கிராமங்கள் வண்டிலில் சென்றதும் சூள்கொழுத்தி மீன்கள் பிடித்ததும்-தோணி சுக்கான் பிடித்து கரைகளத் தொட்டதும் நடந்த்தே நாங்கள் பள்ளிக்கு சென்றதும் நம்முன்னோர் வாழ்வு கதைகள் சொல்வதும் இந்தகாலத்து பிள்ளைகள் காதுக்கு-இவைகள் எல்லாம் வெறும் கற்பனைக்கதைகளே! எங்கள் வாழ்வோ இப்போது இல்லை... இவர்களின் வாழ்வோ எனி வரப்போவதில்லை பாலை வனங்கள் மழையால் அழியுது-வெண் பனி கொட்டுமிடமெல்லாம் வெய்யில் அடிக்குது மும்மாரி மழையும் மோசமாய் போயிற்று முன்பு போல் இல்லை இயற்கையே மாறிற்று. பழசை மட்டுமே இறுக்கமாய் பிடிப்பதால் பயனொன்றுமில்லை பரிதாப வாழ்வே! புதுசை நோக்கியே போய்க்கொண்டிருந்தாலே புதுமைகள் பார்த்து மகிழ்வோடு வாழலாம். அன்புடன் -பசுவூர்க்கோபி.
- newton.jpg
-
நிலவே நிலவே கதை கேளு!
எனது கவிதைக்கு கருத்துப் பரிமாறி ஊக்கம் தந்த அனைத்து கலைஇலக்கிய நல் உள்ளங்களுக்கும் நன்றிகள். அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
நிலவே நிலவே கதை கேளு!
நிலவே! நிலவே..! ********************* உனைக் காட்டி அம்மா எனக்கு சோறூட்டினாள் உன்னுக்குள் -ஒளவை இருப்பதாக உணர்வூட்டினாள் உனைப் பிடித்து தருவதாக அன்பூட்டினாள்-பின்பு உனைத்தேடி போவென்றே! அறிவூட்டினாள்-நீயோ உலகத்தின் பெண்களுக்கு உவமை ஆகினாய்-அதனால் உன்னை வைத்தே பலபேர்கள் கவிஞராகினார். இருள் கடலில் மிதந்து வந்து இளமை காட்டுவாய் இடையிடையே வளர்ந்து ,தேய்ந்து எம்மை வாட்டுவாய். உன்னை வந்து பார்ப்பதற்கு பணக் கோடியுமில்லை-நீ எமை மறந்து போவதர்கு-மனித சுயனலமில்லை-அதுதான் சூரியனின் கோவமதைக் குளிர்மையாக்கிறாய்-இரவு சுதந்திரமாய் நாம் திரிய ஒளியை பாச்சிறாய்-நிலவே கோடியாண்டு உன்னோடு வாழ்ந்தவர் பற்றி-கொஞ்சம் கொட்டுவாயா நாம் மாறி வாழ்வதற்க் காக. அன்புடன் -பசுவூர்க்கோபி-
- main-qimg-c75fb730bc4b76f0f6765b88cca924e0-lq.jpeg
-
வெறுப்பு!
மகிழ்வோடு நன்றிகள்
-
தாயின்றி நாமில்லை.!
ஆகா உண்மைதான்கவியே பொட்டதுபோல் என்கண்ணுக்கு தெரிந்ததால்.... மகிழ்வோடு நன்றிகள்.
-
தாயின்றி நாமில்லை.!
உங்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்.
-
தாயின்றி நாமில்லை.!
சர்வதேச மகளீர் தினம்(08.03.2024) அதற்காக எழுதிய கவிதையை இன்று உங்களுடன் பகிர்ந்துகொள்வதில் மகிழ்சியடைகின்றேன்.நன்றிகள். தாயின்றி நாமில்லை.! ************************ பூமித்தாய் என்று சொல்லும் புவிகூடத்தாய் தானே-வானில் பொட்டதுபோல் சுற்றிவரும் நிலவுகூட பெண்தானே நீலத்தால் சாறிகட்டி நிலம் காக்கும் கடல் அவளும் தாய் தானே நித்திலத்தில் தாய்க்கு நிகர்-எதுவும் இல்லை என்பேன் சரிதானே. சிந்து,கங்கை,யமுனை,சரஸ்வதி சித்தப்பா பிள்ளைகளா? காவேரி,குமரி,கோதவரி,நர்மதா. பெரியப்பா பிள்ளைகளா? இல்லை இல்லை இயற்கை ஈண்றெடுத்த நதித் தாய்கள் இவைகளும் பெண் பெயாரால் உயிர்த்தார்கள். பூமிதன்னில் பெண்ணினமே இல்லையென்றால் போட்டியிடும் ஆண்களெங்கே? பொறுமையெங்கே? ஆணினம்தான் அகிலத்தில் தனித்திருந்தால் அன்பு எங்கே? காதல் எங்கே? இனிமை எங்கே? கற்பனைக்கு பெண் இனமே இல்லையென்றால் கவிஞரெங்கே?கலைஞர் எங்கே? கலைதானெங்கே? கர்ப்பத்தில் எமைத் தாங்கி வளர்க்காவிட்டால் கல்வியெங்கே? கருணையெங்கே? காசினிதானெங்கே? பொன்னுலகம் பெண் இனத்தை மறந்திருந்தால் புதுமையெங்கே,புலமையெங்கே புரட்சியெங்கே? மண்ணகமும் வாழ்வதற்காய் படைத்து தந்த மாதவத் தாய்யினத்தை மதித்து வாழ்வோம். அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
அன்றுபோல் இன்று இல்லையே!
கிழ்வோடு நன்றிகள் மகிழ்வோடு நன்றிகள்
-
அன்றுபோல் இன்று இல்லையே!
அருமையான பாடல் நாம் வாழ்ந்த அன்றைய வாழ்வியலை நினைத்து கண்கலங்க வைத்துவிட்டது. ஈழப்பிரியன் அவர்களுக்கு என் உளமாந்த நன்றிகள். ஊக்கம் தரும் உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு உளமார்ந்த நன்றிகள்.
-
அன்றுபோல் இன்று இல்லையே!
30 வருடத்தின் பின் எனது ஊருக்குப் போயிருதேன் எல்லாமே மாறிவிட்டது.அந்தப்பழமையை நினத்து கவலையடைந்தேன். அப்பொழுது என்னுக்குள் வந்த வரிகள்தான் இவை தற்போது நீங்கள் சொல்வதுதான் உண்மை. உளமார்ந்த நன்றிகள் நிலாமதி அக்கா.
-
வெறுப்பு!
உண்மையாகச் சொன்னீர்கள். உளமார்ந்த நன்றிகள்.
-
அன்றுபோல் இன்று இல்லையே!
அன்றுபோல் இன்று இல்லையே! *************************************** அதுவொரு கடல் சூழ்ந்த அழகிய கிராமம் அதிகாலைப் பொழுதும் அந்திமாலையும் அத்தியும்,இத்தியும் ஆலமரமும் அதிலிருந்து கத்திடும்,கொஞ்சிடும் பறவை இனமும் ஏரும் கலப்பையும் வண்டிலும் மாடும் உழைப்போர் வியர்வையில் வளரும் சாமையும்,வரகும்,குரக்கனும்,சோளனும் பனையும்,தென்னையும் பனாட்டும்,ஒடியலும். வேலிகள் தோறும் கொவ்வையும்,குறிஞ்சாவும் தரவை நிலமெங்கும் மூலிகைச் செடிகளும் கடலும் காற்றும் மீன்களும்,இறாலும் இயற்கை மாறாத மாரியும்,கோடையும் இனிமை தருகின்ற கருப்பணிக் கள்ளும் இனிக்க இனிக்க பேசிடும் தமிழும் கொடுத்து கொடுத்தே மகிழ்திடும் மனிதரும் குடும்பங்கள் பிரியா வாழ்ந்த இணையோரும். உறவும் உரிமையும் கூட்டுக் குடும்பமும் உயிர்கள் அனைத்திலும் காட்டிடும் அன்பும் பொருட்களை மாற்றும் பண்டமாற்றமும் பொழுது முழுதும் உழைத்திடும் தன்மையும் பள்ளியும் படிப்பும் உள்ளத்து தூய்மையும் பண்பும் அடக்கமும் மரியாதைச் சொற்களும் பாயில் கிடக்காத பலமுள்ள தோற்றமும் நோயில்லா உணவும் நூறாண்டு வாழ்வும். ஆயுள்வேதமும் ஆயாக்கள் மருந்தும் வீட்டில் பிறந்தே விளையாடும் குழந்தையும் தலைமுடி கொட்டாத ஆவரசுக் கொழுந்தும் தாவணி மயில்களும் தமிழ் கலாச்சார உடையும் கிட்டியும் புள்ளும் தாச்சியும் கொடியும் கிராமத்து பேச்சும் கிளு கிளு கொஞ்சலும் சுத்தக் காற்றும் சுதந்திரப் போக்கும்-எம் பக்கத்தை விட்டு பறந்துமேன் போனதோ? -பசுவூர்க்கோபி.
-
வெறுப்பு!
பேரன்புடன் நன்றிகள்❤️ மகிழ்வோடு நன்றிகள்🙏
-
வெறுப்பு!
வெறுப்பு! *********** அரசமரக் கன்றுகளை அழித்துக்கொண்டிருந்தான் அந்தத்தேசத்து மனிதனொருவன் எத்தனையாண்டுகள் வாழும் மரத்தை ஏன்.. அழிக்கிறாய்யென்றான் வழிப்போக்கன். எனக்கும் கவலைதான் என்னசெய்வது வருங்காலப் பிள்ளைகளும் வாழவேண்டுமே என்று பெரு மூச்சுவிட்டான் அந்த மனிதன். அன்புடன் -பசுவூர்க்கோபி.
- IMG_2709.JPG
-
மனிதம் செத்துவிட்ட மகாத்மாபூமி!
மனிதம் செத்துவிட்ட மகாத்மா பூமி! ***************************************** வாசலை திறந்து கொண்டு-நீ வருவாயென்றுதானே ஏங்கிக் கிடந்தது எம் தேசம்… விடுதலை பெற்றபின்னும் தூக்கு கயிறை மாட்டி தூங்கவைத்து அனுப்புமென்பது யாருக்குத் தெரியும். 😢 உன்னைப்போலவே உன் அம்மாவும் ஒவ்வொருநாளும் செத்து செத்து.. உன்வரவுக்காகவே காத்துக் கிடந்தாள்-எனி அவளுக்கு ஆறுதல் சொல்ல யாரால் முடியும் இந்த பூமியில். ஆத்மார்த்த அஞ்சலிகள்🙏 பசுவூர்க்கோபி.