Everything posted by பசுவூர்க்கோபி
-
ஊதாரி ஊடகங்கள்!
பாஸ்பண்னினாலும் பெயில் விட்டாலும் பாடசாலைக்கு போறமாதிரி ஒரு பழக்கதோசம்தான்😀 உங்களின் கருத்துக்கு உளமார்ந்தநன்றிகள். அன்போடு நன்றிகள் அக்கா
-
ஊதாரி ஊடகங்கள்!
நீங்கள் சொல்பதுபோல் லைக்குக்கு பிச்சையெடுக்கும் விஞ்ஞான உலகமாகி விட்டது. மிக்க நன்றிகள்🙏 நெஞ்சார்ந்த நன்றிகள்🙏
-
ஊதாரி ஊடகங்கள்!
உண்மைதான் பொறுக்கமுடியல்லையே! நெஞ்சார்ந்த நன்றி alvayan அவர்களே
-
ஊதாரி ஊடகங்கள்!
ஊதாரி ஊடகங்கள் ************************ எங்கு பார்த்தாலும் வலையொளித்தளங்கள் எதையெடுத்தாலும் எம்நாட்டுச் செய்திகள். உழைப்புக்காக ஊடக தர்மத்தை-சிலர் விலைக்கு விற்கும் வேடதாரிகள். தலைப்பில் மட்டும் உழைப்பை தேடுவார்-உள்ளே தரமில்லா செய்தியால் மடையராக்குவார் ஒருவரை உயர்வாய் ஓங்கியே கத்துவார் ஒருசில நாட்களில் ஏறியும் மிதிப்பார். செய்திகள் பற்றி கவலையே இல்லை சேரும் பணம்தான் அவர்களின் எல்லை ஆளுக்கொரு கமறா கிடைத்தால் அனைவரும் ஊடக அறிஞராய் நினைப்பார். ஏழை மக்களின் படங்களைக் காட்டி எல்லோர் மனதிலும் நெருடலை மூட்டி புலம்பெயர் பணத்தை தன்வசப்படுத்தும்-சில போக்கிரியர்களும் இணையத்தில் திரிகிறார். நல்லசெய்தியும் சிந்தனை உயர்வும் நலம்கெடா நடுநிலை ஊடகத் தெழிவும் உள்ள பலபேரின் உண்மைத் தன்மையும் உலகமறியும் இதுஉங்களுக்கில்லை. அன்புடன் -பசுவூர்க்கோபி.
-
நம்பிக்கை ஒளி தெரிகிறது!
உளமார்ந்த நன்றிகள் அக்கா.
-
நம்பிக்கை ஒளி தெரிகிறது!
அடிக்குமேலடிவிழுந்து எழமுடியாத எமக்கு ஏகேடியாரின் உரையில் சில மாற்றம் தெரிகிறது. அது ஏமாற்றமா?என்பதை பொறுத்திருந்து பார்போம். உங்கள் கருத்துக்கு உளமார்ந்த நன்றிகள்.வாத்தியார். மற்றவர்களைவிட இவரின் கருத்தில் சில மாற்றம் தெரிகிறது.நீங்கள் சொல்வதுபோல் பொறுத்திருந்து பார்ப்போம். கருத்துக்கு நெஞ்சார்ந்தநன்றிகள்.
-
நம்பிக்கை ஒளி தெரிகிறது!
75 வருடத்துக்குப் பின் புதிய அரசின் வரவு நம்பிக்கை தருமென நினைக்கிறேன் உங்களின் கருத்தே நானும்விரும்புகிறேன். உளமார்ந்த நன்றிகள் 🙏
-
நம்பிக்கை ஒளி தெரிகிறது!
75 வருடத்தைவிட இது புதுமையாக தென்படுகிறது என்றுநினைக்கிறேன். கருத்துக்கு மிக்கநன்றிகள் ஏராளன் அவர்களே.
-
நம்பிக்கை ஒளி தெரிகிறது!
நம்பிக்கை ஒளி தெரிகிறது! ******************************** பேய்களையெல்லாம் ஓடக் கலைத்து பெருந்துயரனைத்தும் தீயில் கொளுத்தி புதுமுக வரவால் பொங்குது மண்றம் பொறுப்போம் விரைவில் விடியுமெம் தேசம். குடு குடு கிளடுகள் கதிரையில் இல்லை குடும்ப ஆட்சியும் கோட்டையில் இல்லை கொள்ளையும் திருட்டும் வரப்போவதில்லை கோயிலும் மசூதிக்கும் அழிவேதுமில்லை. இனங்களைப் பிரிக்கும் தந்தரமில்லை இளையோர் நெஞ்சில் வஞ்சகமில்லை எனிவரும் காலம் பஞ்சமுமில்லை எல்லோர் மனத்துக்கும் துன்பமுமிலை. தமிழர் தரப்பிலே ஒற்றுமையில்லை தனித் தனி சுயநலம் தேவையுமில்லை-சிலர் போரின் அவலத்தை புரிந்ததேயில்லை போன கதிரயை மறப்பதேயில்லை. தெற்கைப் போலவே திடமாய் நீ சேரு தென்றலாய் மண்றத்தில் தமிழால் விளையாடு அன்றைய ஆட்சிபோல் இல்லை நீ பாரு அன்போடு உரிமையை நீ கேட்டு வெல்லு. அன்புடன் -பசுவூர்க்கோபி.
- IMG_6014.jpg
-
யாழ்கள இலங்கை பாராளுமன்ற தேர்தல் போட்டி
போக்குவரத்தில் ஏற்பட்டதடங்கலால் வாக்களிக்கமுடியாமைக்கு வருந்துகிறேன்.
-
யாழ் களத்தில் புதுவரவு
வணக்கம் வருக!வருக! செவ்வியன் அவர்களே.
- IMG_3675.jpg
-
உயிர்த்தமிழே நீ வாழ்வாழ்வாய்.
உங்களின் வரிகள் அருமை. நிகழ்கால நிஷங்களையும் படம்பிடித்து காட்டியுள்ளது. பாடல்கேட்டு கருத்துப் பரிமாறியதற்கு உளமார்ந்த நன்ரிகள்.goshan அவர்களே. நெஞ்சார்ந்த நன்றிகள்🙏
-
உயிர்த்தமிழே நீ வாழ்வாழ்வாய்.
உங்களின் அன்பான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்🙏
-
உயிர்த்தமிழே நீ வாழ்வாழ்வாய்.
- 5 வயது பேரனின் கேள்வி
நீங்கள் ஏன் வந்தீர்களோ அந்த உண்மையை குழந்தைகளுக்கு சொல்வதே சரியானது.- மாறுமா?
மாறுமா? *********** தேர்தல் திருவிழாக் காலமிது-தன் தேவைக்கு வாக்குறுதி மழை கொட்டும் நேரமிது. வாசலுக்கு வந்துநிற்கும் வருங்கால.. தலைவர்களைப் பாருங்கள் வாக்குறுதிப் பொட்டலத்தை வாங்கிப்பிரியுங்கள்-உள்ளே தேன் இருக்கும் தினைமா இருகும் தித்திகும் பண்டங்கள் நிறைந்திருக்கும்-தமிழ் தேவைகள் அனைத்தும் நிவர்த்தி செய்வதாய்-பல திட்டங்கள் எம்முன்னே கொட்டிக் கிடக்கும். வாக்குதனை வாங்கிப்போனபின்னோ? உங்களிடம்வெறும் வாய் மட்டுமேயிருக்கும். பசியிருக்கும் கியூவிருக்கும் பட்டினியே தொடர்திருக்கும் அரசமரத்தடியில் புத்தர் சிலையிருக்கும். போதையால் அழிக்கும் போர் இருக்கும். அவர்களிடமோ? சொகுசுக் காரிருக்கும் மாளிகை வீடிருக்கும் Fபார் இருக்கும் அவர்களுக்கு நிறையப் படியிருக்கும். இவ்வளவு காலமாய் இதுவே!நடந்தது. இம்முறையாவது மாறுமா? இல்லையேல் இதுவே வாழ்க்கையா? இனங்களின் பிரச்சனை தீருமா? இலங்கையும் உலகோடு உயருமா? அன்புடன் -பசுவூர்க்கோபி.- எச்சரிக்கை!
ஆகா உண்மைதான் நெறிகெட்ட ஆயுதத்துக்குமுன்....எதுகும்?... நெஞ்சார்ந்த நன்றிகள். உங்களின் அன்பான கருத்துக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.- எச்சரிக்கை!
கட்டாயம் பிரம்பு தேவையென்றுதான் நினைகிறேன். உங்கள் கருத்துக்கு அன்போடு நன்றிகள்.- எச்சரிக்கை!
எச்சரிக்கை! *************** கடிக்க வந்த நாய்க்கு கல்லெறிந்தேன் அது ஓடித் தப்பியது. தேன் கூட்டுக்கு கல்லெறிந்தேன் ஒற்றுமையாக துரத்திவந்தது என்னை ஓடவைத்தது. இது போன்ற ஒற்ருமையே தமிழர்க்கும் தேவை ஒன்றுசேர் இல்லையேல் தனித் தனியாய் நின்று அழிந்தே! போவாய். அன்புடன் -பசுவூர்க்கோபி.- IMG_5767.JPG
- இலங்கைக்கு சுதந்திரம் எனியாவது கிடைக்கட்டும்!
இலங்கைக்கு சுதந்திரம் எனியாவது கிடைக்கட்டும்! *************************************************** கத்தும் கடல் நாற்திசையும் கரையமைத்து வேலிதந்து முத்தும்,மாணிக்கமும்,இரத்தினமும் மண்ணில் உள்ளடக்கி முல்லையும்,மருதமும்,நெய்தலும்,குறிஞ்சி பாலையென இயற்கையவள் எமக்களித்த எங்கள் தேசத்தை போத்துக்கேயன்,ஒல்லாந்தன்,பிரிட்டிஸ் ஆண்டுவிட்டு போகையிலே உம்மிடத்தில் எம் பொக்கிஷத்தை மலைகுடைந்து பாதை தந்து வருமான பயிர் நட்டு வீதி பல அமைத்து வீடுகட்டி கோட்டை தந்தான். நீங்களோ… முட்செடியும்,புதரும்,புற்றும்,கஞ்சாவும்,களவும்,போதையும் கொலையும்,கொள்ளையும்,இனத் துவேஷமும்-விஷமும் சுயநலமும்,மதமும்,மதச் சண்டையும்,இனக் கலவரமும் பெரும்பான்மை,சிறுபான்மையென பேசியே அழித்தீர்கள். அன்றே ஒருதாயின் பிள்ளைகளாய் ஒன்றாய் வாழாமல் சிங்களவன் தமிழன் முஸ்லீம் பறங்கியென பிரித்து சண்டையிட்டு சவக்கிடங்கில் போட்டு மகிழ்ந்தீர்கள் சிங்களவன் மேல்லென்று சினமும் கொண்டீர்கள். ஒரு தேசம் ஒரேமக்கள் ஒற்றுமையே எம் நாடு என்றிருந்தால் வடகிழக்கு,தமிழ்,முஸ்லீம்,தமிழீழம் வரைபடமே இருக்காது. அரசியலில் உங்களிருப்பை தக்கவைக்க அப்பாவிமக்களையே ஆட்டிப் படைத்து பாராளுமன்றத்தில் பல் இளித்து குதித்தீர்கள். சிங்கள தமிழ் முஸ்லீம் மலையக அப்பாவி மக்களுக்கு அடிமை,வறுமை,அகதி,உயிரிழப்புகள் தவிர என்னதான் தந்தீர்கள் ஆட்சி செய்த உங்களுக்கோ அரண்மனையும் வீடும் காரும் சொத்தும் சுகபோகமும் சுறண்டியெடுத்து சுதந்திரமானீர்கள். சேர்ப் பட்டம் பெற்ற தமிழர்களும் எம்மை சேற்றிலே தள்ளினார்கள் அவர்களுக்கு சிலையமைத்து உலக அரங்குக்கு காட்டினீர்கள் எழுபது ஆண்டாக மக்களை இருளுக்குள் தள்ளிவிட்டு ஒளிபெற்று நீங்கள் மட்டும் உன்னதமாய் வாழ்ந்தீர்கள். எனிக் காணும் இந்த இழிநிலைகள். மக்களை உயிர் வாழ விடுங்கள் உன்னத சமுதாயம் உருவாக்க இளையோரே ஒன்றுபடுங்கள்-அது இன மத மொழியின்றி எல்லோரும் சமமென பார்க்கும் “அரசாகட்டும்” அவரவர் வாழும் மண்ணிலே அவரவர் கலாச்சாரவிழுமியங்கள் மிழிரட்டும். இருநாக்கு படைத்த தமிழ் அரசியல் வாதிகளுக்குமிது சமர்ப்பணம். அன்புடன் -பசுவூர்க்கோபி.- பெண்ணாய் பிறந்து விடடால்....
அருமையான வரிகள்.- கிளிநொச்சியில் இராணுவத்தால் நிர்மாணிக்கப்பட்ட இரு வீடுகள் பயனாளிகளிடம் கையளிப்பு
இதுபோல் அவர்கள் பிடித்திருக்கும் வீடுகள் காணிகளையும் மக்களிடம் ஒப்படைத்தால் வரவேற்புக்குரியது. - 5 வயது பேரனின் கேள்வி
Important Information
By using this site, you agree to our Terms of Use.