Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நியாயம்

கருத்துக்கள உறவுகள்
  • Joined

Everything posted by நியாயம்

  1. ஒரு தமிழ் பிள்ளை அமெரிக்க போராட்டத்தில் கைது ஆனால் அது எமக்கு செய்திதானே ஐயா. இந்திய மாணவிகள் இருவர் களவெடுத்து அமெரிக்காவில் கைதாகிய விடயம் விவாதிக்கப்படலாம் என்றால் அதைவிட முக்கியமான விடயம் இது. மற்றையது அமெரிக்கா பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம் அதிக மதிப்பு உடையது. அங்கு அனுமதி கிடைப்பதே கடினம் என பொதுவான கருத்து உள்ளது. இந்த மாணவி கைது எமது சமூகத்திற்கு முக்கியமான விடயம்.
  2. வேறு என்ன செய்யலாம்? மத்தளம் ஆரம்பமே தவறான முதலீடு என கூறப்படுகின்றது. குருவி கூடு கட்டுவதை விட இது பரவாயில்லை.
  3. யார் இராதிகா சிற்சபைசனா? இந்த அம்மாவின் அட்டன்சன் சீக்கிங்கை பார்த்தால் அப்படித்தான் தோன்றுகின்றது. இனி இவா மீண்டும் பாராளுமன்றம் தெரிவாவுவதற்கு கனேடிய தமிழர்கள் ஆதரவு கொடுப்பார்களா?
  4. சிங்கத்தின் பதவி கடந்த மார்கழியில் 2028 வரை நீடித்துள்ளார்கள் என செய்தி உள்ளது. உள்ளக நடப்புக்கள் பற்றி எங்களுக்கு தெரியவா போகுது. எதற்கும் மாத்தைய்யா என ஒரு பெரிய கும்பிடு போட்டு வையுங்கோ நாளைக்கு கனடா பாதுக்காப்பு அமைச்சரோ தெரியாது. சிங்களவன் கெட்டிக்காரன். யார் யாருக்கு தங்கள் வேலைகளை பார்க்க மரியாதை கொடுக்க வேணும் என்று தெரிந்துள்ளது. எங்கடையதுகள் பாராளுமன்ற உறுப்பினராக உள்ளபோதும் எதுவும் கிழிப்பதில்லை. வெளியில் நின்று குரைக்கத்தான் லாயக்கு.
  5. ஆளுனர் போலிசில் முறைப்பாடு செய்யும் அளவுக்கு பத்திரிகையாளர் என்னத்தை எழுதினார்? சிமார்ட் போன், சமூக ஊடகங்களின் வரவின் பின் இப்போது எல்லாரும் ஊடகவியலாளர்கள். பத்திரிகையாளருக்கு எதையும் எழுதுவதற்கு உரிமை உள்ளது என்றால் ஆளுனருக்கு போலிசில் முறைப்பாடு செய்வதற்கு உரிமை இல்லையா?
  6. ஏற்கனவே அறிந்தவிடயம் தான். இருபது வருடங்களுக்கு முன்னர் பலர் என்னையும் இவர் போல் அணுகினார்கள். நான் நினைக்கின்றேன் இப்போதைய சமூக ஊடக காலத்துக்கு ஏற்றவகையில் இப்போது கொஞ்சம் மாற்றங்கள் செய்துள்ளார்கள் போல.
  7. இவர்கள் என்ன செய்கின்றார்கள்? பிரமிட் திட்டம் என்றால் என்ன? ஒன்றும் புரியலையே.
  8. படத்தின் டிரெயிலர், பாடல்கள், காட்சிகள் ஏதாவது காணொளி பகிருங்கள், பார்ப்போம்.
  9. நல்ல விடயம். எங்கள் காலத்தில் விசுக்கோத்து வழங்கப்பட்டது. சத்துணவும் சிறிதுகாலம் தரப்பட்டது. இலவச கல்வி, இலவச மருத்துவம் இவை எல்லாம் பெற்றுவிட்டு பிறந்து வளர்ந்த நாட்டை ஒரு காலத்தில் சொறிலங்கா என திட்டமாட்டார்கள் என எதிர்பார்ப்போம்.
  10. வைத்தியசாலையில் உள்ளே விடாவிட்டாலும் நியூஉதயன் உள்ளே விடலாம் தானே. சத்திர சிகிச்சையின்போது தவறுகள் நடைபெறுகின்றன. ஏதோ வகையில் உறவினர்கள் அதுபற்றி அறிந்து இருக்கலாம்.
  11. வீரப்பன் பையன்26 என்பதன் அர்த்தம் நீங்கள் வீரப்பனின் மகன் எனும் அர்த்தம் ஆகாதா? உங்கள் விருப்பம்.
  12. வீரப்பையன் என்று மாற்றலாமே.
  13. ஆட்களை பிடித்துள்ளார்கள் சரி. காணாமல் போன 90 கிலோ தங்கம் கிடைக்குமா?
  14. விமான பயணத்தில் குழந்தை பிரசவம் ஏற்படுவது பற்றி பரவலான செய்திகள் உள்ளன. கடலில் பிரசவம் புதுமையாக உள்ளது. குழந்தையின் பெயர் அறிந்தால் அறியத்தாருங்கள். என்ன பெயர் சூட்டுவார்கள் என அறிய ஆவல்.
  15. வீசா பெறுவது இலகுவாக்கபடுவது முக்கியம். இழுபறி கூடாது. மற்றும்படி கட்ணங்கள் சம்மந்தமாக குறை சொல்ல ஏதும் இல்லை. அது எல்லாருக்கும் பொதுவானது தானே. ஆனால் இங்கே என்ன கவனிக்கப்படவேண்டும் என்றால் நாங்கள் வீசா பெற்று சென்று இறங்கும்போது விமானநிலையத்தில் இலங்கை குடிவரவுப்பகுதி கையூட்டு/கைவிசேடம் கேட்டு எங்களுக்கு கரைச்சல் தரக்கூடாது.
  16. 2022/2023 கால பகுதியில் உச்சம் தொட்ட வெள்ளிகள் இப்போது இலங்கை ரூபாக்கு இறங்க தொடங்கி உள்ளது. பணவீக்கம் ஒரு புறம் என்றாலும் அனுப்புகின்ற வெள்ளிக்கு அதிக ரூபாய்கள் தேறும்போது ஒரு சந்தோசம்தான் நமக்கு.
  17. தான் துவாரகா என்று சொல்லிக்கொண்டு முன்னால வந்த பிள்ளையை விட சுஜி என்கின்ற இந்தப்பிள்ளை பெரிய புரட்சியை ஏற்படுத்த போகுதோ? 😁
  18. இலங்கையில் விளையாடிய போட்டியில் பந்துவீச்சு/ஓட்ட விபரங்கள்/காணொளி கிடைத்தால் பகிருங்கள், பார்ப்போம்.
  19. இந்த விடுமுறை கழிய வரும் மாதம் கா.பொ.த சாதாரணம் வரும்போது மீண்டும் விடுமுறை. மாணவர்களுக்கு ஜாலிதான். இலங்கையில் இந்த வியாழன், வெள்ளி விடுமுறை. சனி, ஞாயிறு வாரவிடுமுறை. இது போதாது என்று ஒரு குரூப் திங்கள் அரசாங்கவிடுமுறை தேவை என போராடுதாம். அவரவர்ட்கு அவரவர் பிரச்சனை.
  20. ஆனந்த சங்கரி, டக்லஸ் இப்படி ஒவ்வொருவராய் ஓய்வு பெற்றால் எங்கள் ஆட்களுக்கு போர் அடிக்கப்போகிறது. சுமந்திரன் அவர்களால் டக்லஸ் தேவானந்தா இடத்தை நிரப்ப முடியுமா. தூற்றுவதற்கு எவரும் இல்லை என்றால் தேசிய அரசியலை எப்படி நகர்த்தப்போகின்றார்கள்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.