Jump to content

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Posts

    33669
  • Joined

  • Last visited

  • Days Won

    4

நன்னிச் சோழன் last won the day on July 31 2023

நன்னிச் சோழன் had the most liked content!

Contact Methods

  • Website URL
    https://ta.quora.com/profile/%E0%AE%A8%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8B%E0%AE%B4%E0%AE%A9%E0%AF%8D-Nanni-Chozhan

Profile Information

  • Gender
    Female
  • Location
    அனுமானாக
  • Interests
    தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான பற்றியம்

Recent Profile Visitors

23450 profile views

நன்னிச் சோழன்'s Achievements

Grand Master

Grand Master (14/14)

  • One Year In
  • Reacting Well Rare
  • Dedicated Rare
  • Very Popular Rare
  • One Month Later

Recent Badges

1.3k

Reputation

  1. பாகம் 7 ஓயாத அலைகள் - 02 வலிந்த தாக்குதலில் கிளிநொச்சி படைத்தளத்தை விடுதலைப் புலிகள் வெற்றிகொண்டமைக்கு காரணம் தமிழீழ தேசியத் தலைவர் வகுத்த தாக்குதல் வியுூகங்களும் திட்டங்களுமேயாகும். அன்று நடந்த உக்கிரமான சமர் இருதரப்பினருக்கும் சவாலாக அமைந்த அந்த சந்தர்ப்பத்தில் தமிழீழ தேசியத் தலைவரின் இராணுவ வல்லமையின் வெளிப்பாட்டின் ஒரு கட்டம் எதிரியை திணறடித்திருந்தது. இவ்வாறு நடந்த அந்த சமருக்கான வேவுத்தகவல்களை பல போராளிகள் முன்னர் வெளிப்படுத்தினர். அன்று அவற்றை நெறிப்படுத்தி நடாத்திய விசேட வேவு அணித் தளபதி கேணல் ஜெயம் இச்சமரில் தாம் கையாண்ட தாக்குதல் வியுூகங்களையும் எவ்வாறு வேவுச் செயற்பாடுகளை மேற்கொண்டார்கள் என்பதையும் இவ்வாறு வெளிப்படுத்துகிறார். வேவு நடவடிக்கையை பொறுத்த வரையில் இராணுவம் நிலைகொண்டுள்ள பகுதிகளில் ஒரு சண்டையை திட்டமிடுவதற்கு முதல் எமக்கு சாதகமான நிலை ஒன்று ஏற்படுமா என்னும் நோக்குடன் தொடர்ந்து வேவு நடவடிக்கையில் ஈடுபடுவது வழமை. அந்த வகையில் கிளிநொச்சிப் பகுதியிலும் வேவு நடவடிக்கை நடைபெற்றது. விசேட வேவு அணியினர் வேவு செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு முன்னதாகவே மட்டு. அம்பாறை அணியினர் வேவு நடவடிக்கையில் ஈடுபட்டு வந்தனா.; இந்த நடவடிக்கை மனோ மாஸ்ரரின் தலைமையில் நடைபெற்று வந்தது. இதற்கு முன்னர் தளபதி பால்ராஜ் தனது போராளிகளையும் இப்பகுதி வேவு நடவடிக்கையில் ஈடுபடுத்தியிருந்தார். இவ்வாறு இந்த நடவடிக்கை தொடர்ந்ததனால் கிளிநொச்சி படைத்தளம் தொடர்பான தரவுகள் எமக்கு ஏற்கனவே கிடைத்திருந்தன. ஆனால் அந்தக் காலப்பகுதியில் கிளிநொச்சி தளத்தை தாக்கியழிப்பதற்கான திட்டம் எம்மிடம் இருக்கவில்லை. ஏனெனில் அந்தக் காலத்தில் ஜெயசிக்குறுசமர் பெருமெடுப்பில் நடைபெற்றுக் கொண்டிருந்தது. அங்கும் வேவு நடவடிக்கைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. ஆகவே வேவு எனும்பொழுது இராணுவ முகாம்கள் அமைந்திருக்கும் இடங்களை கண்காணித்துக் கொண்டிருப்பதும் அந்த சூழல் எவ்வாறிருக்கின்றது. இராணுவத்தினரின் நடவடிக்கை எவ்வாறிருக்கின்றது. எங்களுக்கு சாதகமான பகுதிகள் எங்கெங்கு இருக்கின்றது போன்ற விடயங்களைக் காலம் காலமாக வேவு அணிகள் செய்து வந்திருக்கின்றன. அடுத்து அத்தரவுகள் பொறுப்பாளர்கள் மூலமாக தலைவரிடம் கிடைக்கப் பெற்றபின் தேவை கருதி தாக்குதலை மேற்கொள்வதாக அமையும். வேவினைப் பொறுத்த வரையில் ஒவ்வொரு நகர்வும் அவர்கள் சாவை எதிர்பார்த்துத் தான் நகர வேண்டும.; வேவுக்காக சென்று திரும்பி வருவோமா என்பது கேள்விக்குறியே. ஏனென்றால் எதிரி விழிப்பாக பார்த்துக் கொண்டுதான் இருப்பான். ஆனால் நாங்களும் கண்டிப்பாக எதிரியின் காப்பரணில் ஏறவேண்டும் அப்போதுதான் சென்ற பாதையில் எத்தனை காப்பரண்கள் இருக்கின்றன எத்தனை தடைகள் இருக்கின்றன, அந்தத் தடைகளை எவ்வாறு கடந்து போகலாம் என்பவற்றை பார்க்கமுடியும் ஆனால் வேவுப் போராளி அந்தத் தடைகள் அனைத்தையும் வெட்டிக் கொண்டு போக முடியாது. அதை ஒருவகையில் எதிரிக்குத் தெரியாமல் கம்பி வேலிகளையும் கடந்து உள்ளே போக வேண்டும.; கிளிநொச்சியைப் பொறுத்த வரைக்கும் தடயம் இல்லாமல் திரும்பி வருவதென்பது பெரும் துன்பமானது. ஏனெனில் நீர் நிலைகளும், புற்தரைகளும் அதிகம் கொண்ட பகுதி. அவற்றினு}டே தடயமின்றி உள்நுழைவதென்பது கடும் சிரமம். இந்த சண்டையிலும் தளபதி பால்ராஜ் உள்நுழைந்த பாதைகள் கூட நாங்கள் பார்த்து உறுதிப்படுத்திய பின் நகர்விற்கு முதல் நாள் பாதைகளை சென்று பார்த்த போது எல்லாம் மாறுபட்டிருந்தது. மீண்டும் புதிதாக பாதை எடுத்துத்தான் நகர்த்தினோம.; ஆனால் விசேட வேவு அணியை பொறுத்த வரையில் ஒரே நாளில் பாதையெடுத்து அமைவுகளை குறித்து சரியாக நகர்த்திய சம்பவங்கள் கிளிநொச்சி சண்டையில் உள்ளது. ஏனெனில் சண்டைக்கான திட்டம் இல்லாத நேரத்திலேயே பாதைகளை எடுத்து உட்செல்ல முடியுமென்ற நிலையில் இருந்தபோது, சண்டைக்கான திட்டம் வகுத்த பின் அந்தப் பாதைகளை பார்த்து உறுதிப்படுத்தச் சென்றபோது முதல் பார்த்தது போல் இருக்கவில்லை. மீண்டும் வேறு பாதைகளைத்தான் எடுத்துக்கொடுத்தோம் ஆனால் ஓயாத அலைகள் 02 ஐ பொறுத்த வரையில் திட்டம் வகுத்த ஒரு கிழமைக்குள் வேவு வேலைகளை முடித்துக் கொடுத்தோம். இதற்கு போராளிகள் கடுமையாக உழைத்தார்கள். ஏற்கனவே வேவு பார்க்கப்பட்ட தரவுகள் இருந்தபோது அதைப் பார்த்து உறுதிப்படுத்தப்படும் தரவுகள் ஒரு கிழமைக்குள் நடந்தது. ஆகவே சண்டைக்குத்திட்டமிட்டுப் போகும் போது சண்டையின் போக்கு மாறுபட்டால் அதற்குரிய பொறுப்பு வேவு அணிகளைத்தான் சாரும் ஆகவே இந்த ஓயாத அலைகள் 02 ஐ பொறுத்தவரை திட்டங்களின்படி சிறப்பாக நடைபெற்றது. அதாவது ஜெயசிக்குறு நடவடிக்கை பெருமளவில் நடைபெற்றுக் கொண்டிருந்த காலமது. அதன் திட்டம் கிளிநொச்சியுடன் இணைப்பதாக இருந்தது. அதன்படி இதனை விரைவாக செய்ய முடியுமென்ற நம்பிக்கையில் எதிரி ஜெயசிக்குறுவை தொடங்கியிருந்தான். ஆனால் அப்படை நடவடிக்கையில் ஏற்பட்ட பின்னடைவுகள் காரணமாக எதிரி நினைத்தது போல் இணைக்க முடியவில்லை. அவனது நடவடிக்கை மாங்குளப்பகுதியை நெருங்கியதும் தேசியத் தலைவர் அன்று மாங்குளத்திற்கு பொறுப்பாக இருந்த தளபதி தீபனை கிளிநொச்சிக்கு பொறுப்பாக நியமித்து ஏற்கனவே இத்தளத்தின் மீதிருந்த அவதானிப்பை விட கூடுதலாக அவதானிப்பை மேற்கொள்ளச் செய்தார். இதன் பின்னர் கிளிநொச்சி மீதான முதலாவது தாக்குதலுக்கு திட்டமிடப்பட்டது அதற்கும் விசேட வேவு அணி வேவு செயற்பாட்டில் ஈடுபட்டது. எமது வேவுகளை பொறுத்த வரையில் திடீரென ஒரு திட்டத்தினை வகுத்து வேவு பார்க்கும் போது வேவு அணி பாதைகளை எடுத்து தாக்குதலுக்கான ஒரு பாதையை திறந்து கொடுக்கின்ற அதே நேரம் அந்தப்பாதையினு}டாக எந்தப் படையணி சண்டைக்கு இணைக்கப்படுகின்றதோ அந்தப் படையணிப் போராளிகளையும் இணைத்து செயற்பாட்டில் ஈடுபடுத்துவோம். ஏனெனில் தாக்குதலின் முதல் கட்டத்திற்கான நகர்வை நாங்கள் புூர்த்தி செய்து கொண்டு பாதைகளை காட்டினால் தொடர்ந்து சண்டையில் ஈடுபடப்போவது அந்த அணிகள். ஆனால் பாதையை காட்டி உள்ளே அணிகளை நகர்த்திக் கொண்டு செல்வது விசேட வேவு அணிதான். ஆனால் அந்தப் பாதைக்கு திட்டத்தின்படி எந்த அணி இணைக்கப்படுகிறதோ அந்தப் படையணி தொடர்ந்து சண்டையில் ஈடுபடும். ஆனால் வேவு பார்ப்பதென்பது ஒரு நாளில் முடிவடையும் வேலை அல்ல. பல நாட்களை வேவு பார்ப்பதற்காக செலவு செய்யவேண்டும.; அது எமக்கு சாதகமாகவும் அமையும் பாதகமாகவும் அமையும் வேவு அணியினுடைய நடவடிக்கையில் அவர்கள் விடும் சிறிய சிறிய தவறுகளும் அவர்களின் உயிருக்கே பாதகமாக அமையும். அதாவது முதல்நாள் சென்று ஒரு பாதையைப் பார்த்து விட்டு வரும் போது தவறுதலாக ஒரு தடயத்தை விட்டு விட்டு வந்திருந்தால் அல்லது எதிரிக்கு ஏதோ ஒரு வகையில் சந்தேகம் ஏற்பட்டு மறுநாள் அந்த இடத்தில் நிலையெடுத்திருப்பானாக இருந்தால் இவர்கள் செல்லும் போது இவர்கள் மீது தாக்குதல் இடம்பெறும். ஆனால் அதை எதிர்பார்த்துத்தான் இவர்கள் போகவும் வேண்டும். அந்த வகையில் ஒரு கரும்புலி அணியினுடைய செயற்பாட்டைவிட ஒரு வித்தியாசமான செயற்பாடாக இவர்களின் செயற்பாடு இருக்கும.; கரும்புலிகள் ஒரு வெற்றிக்காக தமது உயிரையே அர்ப்பணித்து விடுவார்கள். இந்த வேவு அணியினரின் நோக்கம் உயிரை அர்ப்பணிப்பதாக இருக்காது ஆனால் எதிரியினுடைய தாக்குதலை முழுமையாக எதிர்பார்த்தபடி தான் செல்வார்கள் வேவு அணியினுடைய செயற்பாடு இவ்வாறு தான் இருக்கும். கிளிநொச்சி ஓயாத அலைகள் 02 இலும் நிறையத் தரவுகள் எங்களிடம் ஏற்கனவே இருந்தது. அத்தரவுகள் அனைத்தையும் வைத்துக் கொண்டுதான் திடீரென தலைவர் ஒரு முடிவை எடுத்தார் கிளிநொச்சியை நாங்கள் கைப்பற்ற வேண்டுமென்று. ஏனெனில் அதற்குமுதல் 1998 ஆம் ஆண்டு 02 ஆம் மாதம் ஒரு தாக்குதலை செய்து முன்னணிப் பகுதிகளை கைப்பற்றினோம். அத்தாக்குதல் எமக்கு முழு வெற்றியளிக்கவில்லை. அப்போதும் எமது திட்டம் உள்ளே ஒரு அணி நகர்ந்து சென்று குறுக்கறுத்து கட்டவுட் போட்டு நிலை கொண்டு கிளிநொச்சியை கைப்பற்றுவதெனும் நோக்கமிருந்தது. ஆனால் திட்டத்தின்படி வேவுக்கேற்ப ஒரு அணிக்கு பாதையை கொடுத்து அந்த அணி பாதையை உடைத்துக் கொண்டு உள்ளே நுழையும் பணியும் சரியாக நடைபெற்றது. ஆனால் மீண்டும் அந்தப் பாதையை எதிரி எதிர்த்தாக்குதல் மூலம் மூடியவுடன் உள்ளே சென்ற அணியைக் கூட வெளியே எடுக்க முடியாத நிலை ஏற்பட்டது. அந்த நடவடிக்கையின் விளைவினை கருத்தில் கொண்டு தான் தலைவர் புதிய திட்டத்தினை வகுத்தார். இந்த சமருக்கு கிளிநொச்சியையும் பரந்தனையும் பிரித்து விட்டால் உள்ளே செல்லும் அணிக்கான வளங்கள் தடைபடாது என்ற நோக்கத்தோடு தான் இரண்டாகப் பிரிக்கும் திட்டத்தை வகுத்தார். அதற்கான வேவு நடவடிக்கையிலும் விசேட வேவு அணியுடன் சேர்ந்து சாள்ஸ் அன்ரனி அணி அந்தந்த பகுதிகளினு}டே உட்செல்ல வேண்டிய அணிகள் அனைத்தையும் அழைத்து சென்று காட்டினோம். இவ்வாறு பாதைகளைக் காட்டியது விசேட வேவு அணிகளே. அதிலே தளபதி பால்ராஜூம் அவரது அணிகளும் உள்நுழைவதற்கான பகுதியில் இரண்டு பாதைகளை எடுத்திருந்தோம.; அதிலே கட் அவுட், கட்ஓப் (கு) என பரந்தனையும் கிளிநொச்சியையும் பிரிக்கும் இடத்தில் நான்கு பாதைகளை எடுத்திருந்தோம். மேற்குப்பகுதியாக 02 பாதைகளையும் கிழக்கு பகுதியால் 02 பாதைகளையும் எடுத்திருந்தோம் இதனு}டாக அணிகளை நகர்த்தி உள்ளே கட்டவுட், கட் ஓப் (கு). என்பவற்றை அமைத்ததால் அந்தப் பாதைகளை இராணுவத்தினர் மீளக்கைப்பற்ற முயற்சிக்கவில்லை. எதிர்ச் சண்டை பரந்தன் பகுதியில் மட்டும் நடந்தது. ஏனைய பகுதியால் எதிரி தாக்குதலை நடத்துவதற்கான சந்தர்ப்பத்தை நாங்கள் கொடுக்கவில்லை. ஆனால் ஏனைய பாதைகள் அனைத்தையுமே மீண்டும் எதிரி கைப்பற்றுவதற்கான கடும் சமர் நடந்து கொண்டிருந்தது. ஓயாத அலைகள் 02ஐப் பொறுத்தவரை 27 ஆம் திகதி மிகக்கடுமையான சமர் நடந்தது எதிரி எல்லாப் பாதைகளையும் கைப்பற்றி ஒரு சில பாதைகளை மட்டுமே தக்கவைக்கப்பட்ட நிலை இருந்ததினால் அடுத்த கட்டம் என்ன நடக்கும் என்ற கேள்விக்குறி இருந்தது. அன்று இரவு தலைவர் தளபதிகள் எல்லோரையும் அழைத்து கதைத்து சரியான திட்டங்களை வகுத்து அந்த நாள் எவ்வாறு சமரை நகர்த்த வேண்டும் என்ற ஒழுங்குபடுத்தல்களைச் செய்தார். அன்று தலைவர் போட்ட திட்டத்தின்படி அடுத்த நாள் அதிகாலையிலேயே சண்டையை ஆரம்பித்தோம். அந்தச் சண்டையிலும் பிரதானமான சமர் நடந்த பகுதி தளபதி தீபன் சென்ற பாதையும் தளபதி ராம் சென்ற பாதையும் ராம் சென்ற பாதையினு}டாகத்தான் கனரக ஆயுதங்களை நகர்த்தி சண்டையில் ஈடுபட்டோம் அதோடுதான் எதிரி பின்வாங்கி. ஓடினான். ஓயாத அலைகள் 02-ன் வெற்றியென்பது நாங்கள் இதற்கு முன்னர் மேற்கொண்ட சமரின் போது ஏற்பட்ட தவறுகளையெல்லாம் கருத்தில் கொண்டு தலைவர் இந்த சமருக்காக அமைத்துத் தந்த திட்டம்தான். ஏனென்றால் இந்த சமரிலும் வழமையாகவே நாங்கள் ஓடுபாதையை இரவில் பிடிப்பதும் காலையில் எதிரி மீண்டும் மூடுவதற்கான முயற்சியை எடுத்து மூடியும் இருக்கிறான். அதே வேலையை இந்த சமரிலும் செய்தான். நாங்கள் இரவு நகர்ந்து போய் பிடித்த பாதைகளை எதிரி மீண்டும் நகர்ந்து வந்து சில பாதைகளை மூடினான். ஆனால் எதிரியை நிலைகுலைய வைத்தது தலைவரின் திட்டம்தான் அது என்னவென்றால் ஊடறுத்து கிளிநொச்சியையும் பரந்தனையும் கூறு போட்டது இந்தத் திட்டத்தை எதிரி எதிர்ப்பார்க்கவில்லை அவர்கள் மறுநாட் காலையில் பாதைகளை மூடி தமது நிலைகளை தக்கவைத்து விட்டோம் என்ற நிலை ஏற்பட்ட போது இந்தப் பகுதியை அவர்களால் உடைக்க முடியாது போனது. இதனால் கிளிநொச்சி இராணுவம் ஆனையிறவுக்கு போகவும் முடியவில்லை ஆனையிறவு இராணுவம் கிளிநொச்சிக்கு வரவும் முடியவில்லை. என்னதான் தமது பகுதியை தக்கவைத்த போதும் இந்த நடவடிக்கையால் உளாPதியாக தாக்கமடைந்து 28 ஆம் திகதி மாலை வரை தப்பியோடத்தான் முயற்சியெடுத்தான். சத்ஜெய படையெடுப்பின் போது விடுதலைப் புலிகள் எதிர்கொண்டு நடாத்திய தற்காப்பு எதிர்த்தாக்குதல்களையே எதிர்கொள்ள முடியாமல் மூன்று கட்டங்களாக மூன்று படை அதிகாரிகள் தலைமை தாங்கி ஆக்கிரமிக்குபோதே தாம் விடுதலைப் புலிகளுடன் போரிடும் வல்லமை அற்றவர்கள் என்பதை இராணுவத்தினர் வெளிப்படையாக நிரூபித்து விட்டனர். இருந்த போதும் அன்று முல்லைப் படைத்தள இழப்பினால் ஏற்பட்ட அவமானத்தை மறைப்பதற்காக அரசாங்கத்தால் பலிக்கடாக்களாகவே இராணுவத்தினர் கையாளப்பட்டதன் விளைவாகவே கிளிநொச்சி ஆக்கிரமிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. அத்தோடு படைத்தளங்களும் அமைக்கப்பெற்று 2000 இற்கும் மேற்பட்ட துருப்புக்களும் நிறுத்தப்பட்டன. இவர்கள் இங்கு நிறுத்தப்பட்ட நாள் தொடக்கம் அரசாங்கம் இவர்களை காணாமல் போனோர் பட்டியலில் இணைத்திருக்கலாம. ஏனெனில் இவர்களை எவ்வேளையிலும் இழக்க நேரிடும் என்ற உண்மை அரசுக்கு அன்று தெளிவாக தெரிந்திருந்தது. அதை ஓயாத அலைகள் 02 இன் மூலம் புலிகள் மெய்ப்பித்தும் காட்டினர்.
  2. பாகம் 6 ஓயாத அலைகள் இரண்டின் வெற்றிக்குப் பின்னணியில் பல மாவீரர்களின் தியாகங்களும், போராளிகளின் தீவிர முயற்சியும் மனவுறுதியும் அவர்களின் மனதில் ஆழமாகப் பதிந்துள்ள விடுதலை வேட்கையுமே அமைந்துள்ளன. இவற்றோடு உலகின் எந்தவொரு இராணுவ விற்பன்னர்களாலும் உணரப்பட முடியாத அளவு போரியல் தந்திரோபாயங்களைக் கொண்ட தமிழீழ தேசியத் தலைவரின் திட்டமிட்ட தாக்குதல் வியுூகங்களும். அவரின் மிக நேர்த்தியான படை நகர்த்தல் தந்திரோபாயங்களுமே இவ் வெற்றிக்கு காரணங்களாக அமைந்தன. சிறிலங்கா இராணுவத்தால் தமிழர் பிரதேசங்களை ஆக்கிரமிப்பதற்கான மிகப் பெரும் படை நடவடிக்கையான ஜெயசிக்குறு களத்தினை எதிர்கொண்டு வந்த சமகாலத்தில் பல இராணுவ ஆய்வாளர்களாலும் உலகின் பிரசித்திபெற்ற இராணுவத் தளபதிகளாலும் அசைக்க முடியாத அதியுயர் பாதுகாப்பு நிலையிலுள்ள படைத்தளம் இதுவென வர்ணிக்கப்பட்ட இத் தளத்தினை, அவர்கள் குறிப்பிட்டதைப் போன்றே பாதுகாப்பு அரண்கள், நிலைகள் விநியோகங்கள் படை எண்ணிக்கை எறிகணைச்சூட்டு ஆதரவுகள் என்பனவற்றோடு, நிலையெடுத்திருப்பவர்களுக்கு மிகமிக சாதகமான நிலவமைப்பும் கொண்ட இத்தளத்தினை ஒரு சில நாட்களுக்குள் துடைத்தழித்ததன் மூலம் உலகின் இராணுவ வரலாற்றில் புதிய அத்தியாயத்தை உருவாக்கினார் தமிழீழ தேசியத்தலைவா.; எண்ணிக்கையில் மிகக்குறைந்த போராளிகளை மட்டும் வைத்துக் கொண்டு ஜெயசிக்குறு பெரும் சமர் நடந்த சம நேரத்தில் இந்தப் பெரும் வலிந்த தாக்குதலை நடத்தி வெற்றிகொண்ட சந்தர்ப்பத்தில் இரு களங்களையும் சாதகமான நிலையில் வைத்திருந்த தந்திரோபாயம் பின்னய காலங்களில் எதிரிக்கு மட்டுமன்றி இராணுவ வல்லுனர்களுக்குமே பெரும் அதிர்ச்சியையும் அதிசயத்தையும் ஏற்படுத்தியிருந்தது. இவ்வாறு வெற்றி கொள்ளப்பட்ட தளத்தின் தாக்குதலுக்கு இடப்பட்ட இரண்டு திட்டங்களில் ஒன்று ஆனையிறவிலிருந்து வரும் விநியோகத்தை தடை செய்யும் ஊடறுப்பு சமரும் அடுத்து படைத் தளத்தை தாக்கியழிக்கும் திட்டமும் என வகுக்கப்பட்டிருந்தது. இதன்படி படைமுகாமின் முன்னரங்க காவலரண்களும், இராணுவ வேலிகள் உயர்பாதுகாப்பு நிலைகள் என்பவற்றோடு நான்கு பற்றாலியன் துருப்புக்களின் கடும் எதிர்ப்பையும் விமானத்தாக்குதல், ஆனையிறவு தளத்திலிருந்து ஏவப்பட்ட எறிகணை சூட்டா தரவுகள், டாங்கிகளின் தீவிர தாக்குதல் என்பவற்றை வெற்றிகரமாக முறியடித்து முகாமைத் தாக்கியழிக்கும் திட்டத்திற்கு தலைமை வகித்தவரும் தற்போதைய வடபோர் முனைக் கட்டளைத் தளபதியுமாகிய கேணல் தீபன் அன்றைய கள நிலவரங்களையும் தமது தாக்குதல் வியுூகங்களையும் மாவீரர்களின் தியாகங்களையும் போராளிகளின் தீரமிகு தாக்குதல் வெற்றிக்கான அவர்களின் கடும் உழைப்பு என்பவற்றை இன்று இவ்வாறு நினைவுபடுத்துகிறார். ஓயாத அலைகள் - 01 இன் மூலம் முல்லைத்தீவு படைத்தளம் எம்மால் அழிக்கப்பட்டபின் அதன் வீழ்ச்சியை சிங்கள மக்களிடம் மறைப்பதற்காக சிறிலங்கா அரசாங்கம் மிகப் பெரும் நகர்வொன்றைச் செய்ய வேண்டிய அவசியமேற்பட்டது. இதன்படி ஆனையிறவுத்தளத்திலிருந்து கிளிநொச்சியை கைப்பற்றுவதற்குரிய நகர்வை சிறிலங்கா இராணுவம் செய்யத் தொடங்கியது அதிலே சத்ஜெய 1,2,3 என்ற நடவடிக்கையை செய்து 1996 ஆம் ஆண்டு யுூலை மாதத்தில் கிளிநொச்சி நகரை ஆக்கிரமித்து நிலைகொண்டார்கள். இந்தப் பிரதேசத்தை பொறுத்த வரையில் எதிரியினுடைய பாதுகாப்பிற்கு சாதகமான புவியியல் அமைப்பை கொண்டதாகத்தான் இந்த கிளிநொச்சி பிரதேசம் உள்ளது. ஏனெனில் வயல் சார்ந்த ஒரு பிரதேசமாக இருப்பதாலும் பெரும் வெளியான பிரதேசமாகவும் சிறிய, சிறிய பற்றைகளைக் கொண்ட பகுதியாகவும் இருப்பதனால் இது ஒரு பிரதேசத்தைக் கைப்பற்றி பாதுகாக்கக் கூடிய புவியியல் அமைப்பைக் கொண்டதாக இருப்பதனால் எதிரி நிலை கொள்வதற்கு சாதகமாக அமைந்திருந்தது. இந்தப் பகுதியைப் பிடித்தபின் பலாலியிலிருந்து விநியோக மையத்தைக் கொண்ட நீண்ட ஒரு விநியோக மார்க்கத்தையும், ஆதரவுகளையும் கொண்ட பலம் வாய்ந்த தளமாக கிளிநொச்சியை மாற்றியதோடு ஆனையிறவின் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தக் கூடிய வகையில்தான் இந்த கிளிநொச்சித் தளம் அமைந்திருந்தது. இத்தளத்தினுடைய அமைவு எவ்வாறிருந்ததெனில் மிகவும் இறுக்கமானதொரு பாதுகாப்பு முன்னரண்களைக் கொண்ட ஒரு பெரிய படைத்;தளமாகத்தான் இத்தளம் இருந்தது. அவர்கள் நிலை கொண்ட 1996 ஆம் ஆண்டு தொடக்கம் பலப்படுத்தி இத்தளத்தை விடுதலைப் புலிகளால் வெற்றி கொள்ள முடியாதென்ற அளவுக்கு சர்வதேச இராணுவ ஆலோசகர்களின் ஆலோசனைகளோடும் இராணுவ நிபுணர்களின் வழிகாட்;டலோடும்தான் ஆனையிறவு கிளிநொச்சி ஆகிய தளங்களைப் பலப்படுத்தி வைத்திருந்தார்கள் இத்தளத்தினுள் ஒரு பிரிகேட் துருப்புக்கள் நிலை கொண்டிருந்தன. அதாவது 54-3 பிரிகேட் இத்தளத்தினிலிருந்தது. அதற்கு ஒரு பிரிகேடியர் பொறுப்பாக இருந்தார். இவருக்குக் கீழ் கிட்டத்தட்ட நான்கு பற்றாலியன்களைக் கொண்ட இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட துருப்புக்கள் நிலை கொண்டிருந்தார்கள். இத்தளத்தில் இராணுவத்தினர் நிலை கொண்ட ஆரம்பகால கட்டத்தில் ஜெயசிக்குறு படையெடுப்பும் இடம்பெற்றிருந்ததனால், எமது பாதுகாப்பு வலயங்கள் பெரிய அளவில் இங்கு இருக்கவில்லை. கண்காணிப்பு நடவடிக்கைகளும் வேவு hPதியான நடவடிக்கைக்குரிய அணிகள் மட்டுமே இங்கு இருந்தார்கள். இதனால் இந்தத் தளத்திலிருந்த இராணுவத்தினர் தமது கட்டுப்பாட்டு எல்லைக்குரிய அரண்கள் தவிர்ந்த ஏனைய குறிப்பிட்ட பிரதேசத்திலும் தமது நடமாட்டத்தைக் கொண்டு ஆதிக்கம் செலுத்தி வந்தனர். இந்த வேளைதான் இராணுவம் ஆக்கிரமித்த பகுதிக்கு வெளியே உள்ள பகுதிகளில் மக்கள் தமது உடமைகளை எடுப்பதற்காகவும் பாதுகாப்பதற்காகவும் சென்றவேளை சிறுவர்கள் உள்ளிட்ட நு}ற்றுக்கும் மேற்பட்டோரை இராணுவத்தினர் கொலை செய்திருந்தார்கள். அதற்குப் பிற்பாடுதான் ஜெயசிக்குறு சமர் நடந்து கொண்டிருந்தபோதும் தேசியத் தலைவர் ஒரு திட்டத்தை வகுத்தார். அதாவது ஜெயசிக்குறு நடவடிக்கை நடைபெற்று மாங்குளம் கரிப்பட்டமுறிப்புப் பகுதியை அண்மித்துக் கொண்டிருக்கையில் நாங்கள் கிளிநொச்சிக்குப் பாதுகாப்பு வலயமொன்றை அமைத்து இத்தளத்தினையும் ஒரு முற்றுகைக்குள் முதற்கட்டமாக கொண்டு வந்தோம். இதன் மூலம் வெளிப்பகுதியில் ஆதிக்கம் செலுத்திய படையினரின் நடவடிக்கைகளை உள்ளே நகர்த்திக் கொண்டு சென்றபின் கிளிநொச்சி முகாமைத் தாக்குவதற்கான திட்டத்தை வகுத்து 1998 ஆம் ஆண்டு இரண்டாம் மாதம் முதலாம் திகதியளவில் தளத்தைக் கைப்பற்றுவதற்கான முதலாவது தாக்குதலை செய்தோம். அந்த தாக்குதலை செய்த போதும் திட்டத்தை முழுமையாக வெற்றிகொள்ள முடியவில்லை ஏனெனில் எமது திட்டத்தின்படி தளத்தின் மையப்பகுதியில் கரும்புலித் தாக்குதலை நடத்துவதற்காக வெடிமருந்தை ஏற்றிக்கொண்டு சென்ற வாகனம் தடம்புரண்டு வெடிக்காது போனதால் திட்டம் முழுமையாக வெற்றியளிக்கவில்லை ஆனால் குறிப்பிட்ட பகுதியை நாங்கள் கைப்பற்றினோம். அதன் பின்னர் கைப்பற்றிய பகுதியில் எமது பாதுகாப்பு அரண்களை போட்டு ஒரு இறுக்கமான முற்றுகைக்குள் கொண்டு வந்தோம். இதன் பின்னர் நாங்கள் கைப்பற்றிய பகுதியை மீள ஆக்கிரமிக்கும் நோக்கில் 1998 ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 4 ஆம் திகதியும்ஃ1998 ஆம் ஆண்டு 4 ஆம் மாதம் 8 ஆம் திகதியும் பெருமெடுப்பிலான இரு நகர்வை இராணுவத்தினர் மேற்கொண்டார்கள். இதனை நாங்கள் முறியடித்தோம். இதில் 500 வரையான இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். 1,000 இற்கு மேற்பட்டோர் காயமடைந்தனர். ஆயுதங்களையும் கைப்பற்றினோம். இதற்குப் பிறகு கிளிநொச்சித் தளத்தின் நகர்வுகள் எல்லாம் கடுமையாக முடக்கப்பட்டு விட, பின்னர் அவர்கள் நகர்வை மேற்கொள்ளாமல் தாம் ஆக்கிரமித்திருக்கும் பிரதேசத்தை பாதுகாத்துக் கொண்டிருந்தார்கள். இந்தக் கட்டத்தில்தான் அடுத்த கட்ட தாக்குதலுக்கான தயார்ப்படுத்தல்களை தலைவர் மேற்கொண்டார். அதன்படி நாங்கள் படிப்படியாக வேவு நடவடிக்கைகளை செய்யத் தொடங்கினோம். அதில் உள்வேவினையும் முக்கியப்படுத்தியிருந்தோம். இதேவேளை தலைவர் ஒரு திட்டத்தை தந்திருந்தார். அதாவது கிளிநொச்சித் தளத்தை தாக்குகின்ற சந்தர்ப்பத்தில் கிளிநொச்சி தளத்தையும் பரந்தன் தளத்தையும் இடையில் துண்டாடி இத்தளத்தை தனிமைப்படுத்தித் தாக்குதலை மேற்கொள்வது தான் அடிப்படையான திட்டம். அதற்கேற்றவாறு வேவு அணிகளை நகர்த்தி உள்வேவுகளை பார்த்தோம். இதற்கு முதல் பரந்தன், ஆனையிறவு, கிளிநொச்சி ஆகிய பகுதிகள் வேவு பார்க்கப்பட்டு தகவல்கள் பெறப்பட்டன. அவற்றை உறுதிப்படுத்துவதற்காகவும் வேவு அணிகளை அனுப்பினோம். அத்தோடு முகாமை துண்டாடுவதற்கான இடத்தையும் வேவின் மூலம் தெரிவு செய்தோம் இதன்படி தலைவர் திட்டத்தினை வகுத்தார். அதில் ஆனையிறவையும் கிளிநொச்சியையும் பிரிக்கின்ற திட்டத்தையும்; பின்னர் கிளிநொச்சி தளத்தை தாக்கியழிப்பதற்கான திட்டத்தையும் வகுத்தார். அதிலே ஆனையிறவையும் கிளிநொச்சியையும் துண்டிப்பதற்கான திட்டத்தை தளபதி கேணல் பால்ராஜிடம் கொடுத்தார். அடுத்து முகாமை தாக்கியழிப்பதற்கான திட்டத்தை என்னிடம் தந்தார். இதிலே முகாமை தாக்கியழிப்பதற்கான திட்டத்தின் படி ஒன்பது பாதைகளால் முகாமுக்குள் இறங்கினோம். இதைவிட ஊடறுப்பதற்கான திட்டத்தின் படி நான்கு பாதைகளால் இறங்கும் திட்டம் ஒரு தனி நடவடிக்கையாக நடைபெற்றது. இதன்படி 1998-09-26 அதிகாலை 1.20 இற்கு சண்டை ஆரம்பிக்கப்பட்டது. சண்டைக்கான நகர்வுத் திட்டங்களில் எந்தவித சிக்கல்களும் ஏற்படவில்லை எமது திட்டத்தின் படி குறித்த நேரத்தில் சண்டையை ஆரம்பித்தோம். அதன்படி எல்லா முன்அரண்களும் கைப்பற்றப்பட்டன. அதன் பின் அன்று காலையில் எம்மால் கைப்பற்றப்பட்ட நான்கு பகுதியாலும் இராணுவத்தினர் முறியடிப்பு நடவடிக்கையை மேற்கொள்ளத் தொடங்கினார்கள். இந்தப்பகுதிகள் எல்லாம் வெளியான பகுதியாக இருந்தன. இராணுவத்தை பொறுத்தவரையில் டாங்கிகள், விமானப்படையின் ஆதரவுகள், ஆட்லறி சூட்டாதரவுகள் எனப் பல ஆதரவுகளோடு நாங்கள் கைப்பற்றி நுளைந்த பகுதிகள் எல்லாவற்றையும் முறியடித்து எமது அணிகளை அகற்றுவதற்கான நடவடிக்கையை காலை 5.30 தொடக்கம் மிகத் தீவிரமாக மேற்கொள்ளத் தொடங்கினர்;. அந்தத் தீவிர நடவடிக்கையால் நாங்கள் பிடித்த கணிசமான நகர்வுப் பாதைகள் எங்களிடமிருந்து விடுபட்டுப் போய் விட்டன. அத்தோடு எதிரி விமானப்படை ஆட்லறிகளாலும் தொடர்ந்து எங்கள் மீது தாக்குதலை நடத்தி நெருக்கடியை ஏற்படுத்தத் தொடங்கினான். இந்த வேளையில் கிளிநொச்சித் தளத்தை மீட்டே தீரவேண்டுமென்ற நோக்கத்தோடு எமது அணிகளும் மூர்க்கமாக சண்டையில் ஈடுபட்டன. அதேநேரம் எதிரியும் மூர்க்கமாகத் தான் சண்டையிட்டான். 27 ஆம் திகதி பகல் முழுவதும் நடைபெற்ற சண்டை நாங்கள் பிடித்த பகுதியை எதிரி கைப்பற்றுவதும் எதிரி பிடித்த பகுதியை நாங்கள் கைப்பற்றுவதுமாகத்தான் அன்று முழுவதும் நாங்கள் நுழைந்த பகுதிக்குள் சண்டை நடைபெற்றுக் கொண்டிருந்தது. நாங்கள் 27 ஆம் திகதி எதிரியின் முகாம் பகுதிக்குள் முழுமையாக நுழையவில்லை. முன்னரங்க நிலைகளை உடைத்துத்தான் சண்டையிட்டுக் கொண்டிருந்தோமே தவிர மையப்பகுதியை நோக்கிய நகர்வை எதிரி முடக்கியிருந்தான். இதேவேளை கிளிநொச்சிக்குளத்துப் பகுதியால் இறங்கி ஒரு இரகசிய நகர்வை மேற்கொண்ட அணியின் தொடர்பு 27 ஆம் திகதி 12 மணியோடு அற்றுப் போனது. அதேநேரத்தில் கேணல் விதுசாவின் அணிகள் இறங்கிய பாதைகளில் ஒரு சில பாதைகளின் தொடர்பு துண்டிக்கப்பட்டுவிட்டன. அதே போன்று தளபதி ராமின் பகுதியால் இறங்கிய பாதைகளில் ஓடுபாதை தான் தக்கவைக்கப்பட்டிருந்தது. அவ்வளவு கடும் இறுக்கமாக உக்கிர சண்டை நடந்தது. 27 ஆம் திகதி சண்டை முழுவதும் நாங்கள் உள்நுழைந்த பாதைகளை தக்க வைப்பதற்காகத்தான் சண்டையிட்டுக் கொண்டிருந்தோம் இதிலே நாங்கள் விழவிழ அந்த இடத்தை பிடிப்பதும் தக்க வைப்பதுமாக வர்ணிக்கக்கூட முடியாத அளவு இறுக்கமான சண்டை நடந்தது. அன்று நாங்கள் குறிப்பிட்ட பாதைகளை தக்க வைத்துக் கொண்டு 27 ஆம் திகதி அதிகாலையில் நாங்கள் ஒரு அதிரடியான முன்னேற்ற முயற்சியையும் மேற்கொண்டவாறு கிழக்குப் பகுதியில் கனரக ஆயுதங்களையும் பாவித்துக் கொண்டு தெற்குப் பகுதியில் கட்டடங்கள் ஓரளவு அமைந்திருந்ததனால் நகர்விற்கு ஓரளவு சாதகமாக இருந்தது. அந்தப் பகுதியால் நகர்வு மேற்கொண்டோம். அந்தப் பகுதியாலும் நான்கு பாதைகளை எடுத்திருந்தோம். அதிலும் இரண்டு பாதைகள் முடக்கப்பட்;டதோடு ஒருபாதை கடும் எதிர்ப்பு வருகின்ற பாதையாக இருந்தது. ஆதனால் இடையில் உள்ள ஒரு பாதையால் திடீர்த் தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளத் தொடங்கினோம். அந்தப்பகுதி ஓரளவு சாகமாக அமைந்தது. அதனு}டாக முன்னேறி கனகபுரம் ஊடாக ஏழாம் வாய்க்கால் பதைக்கு ஓர் அணிசென்றுவிட்டது. இந்த அணி தொடர்ந்து கரடிப்போக்குப் பாதையால் நகர்வை மேற்கொள்ளும்போது எமது அணிகள் மையப்பகுதியை நோக்கி நகரத்தொடங்கின. இதனால் எல்லாப் பகுதியிலும் எதிரியின் பாதுகாப்பு அரண்கள் கைப்பற்றப்பட்டன. இதேவேளை விநியோகமும் முழுமையாக முடக்கப்பட்டதோடு விநியோகத்திற்கு வந்த ரி-55 ரக துருப்புக்காவி ஒன்றும் ஊடறுப்பு அணிகளால் தகர்க்கப்பட்டதோடு அவர்கள் பின்வாங்க கிளிநொச்சித்தளத்தினுள் படுகாயமடைந்தவர்கள் இறந்த உடல்கள் என்பன தேங்கத்தொடங்கின. அத்தோடு இராணுவக் கட்டமைப்புக்களும் சீர்குலைந்து போனது இதனால் தலைமை வகித்திருந்த பிரிகேடியர் உபாலி எதிரிசிங்க உடனடி முடிவெடுத்து காயப்பட்டவர்கள் ஆயுதங்கள் எல்லாவற்றையும் கைவிட்டு இருந்த படைகளைத்திரட்டிக் கொண்டு 28 ஆம் திகதி மாலையளவில் ஓடத்தொடங்கினர். ஓடும்போது அங்குநின்ற எமது மறிப்பு அணிகள் மேற்கொண்ட தீவிர தாக்குதலில் பெருமளவு இராணுவத்தினர் கொல்லப்பட்டனர். இந்தச்சமரின் வெற்றியென்பது ஒவ்வொரு போராளியும் ஒருமனிதனால் செய்யக்கூடிய செயற்பாட்டை விட அதிகமாக தம்மை அர்ப்பணித்து செய்த கடும் உழைப்பும் சண்டையில் தம்மைமாய்த்துக் கொண்ட ஒவ்வொரு மாவீரனின் தியாகத்தின் விளைவாகவும் தான் பெறப்பட்டது. அத்தோடு தேசியத்தலைவரின் சரியான திட்டமிடலும் திடமான வழிகாட்டலும் முக்கிய பங்கினை வகித்தன எனக் கூறினார்.
  3. பாகம் 5 கிளிநொச்சி படைமுகாமில் முன்னரங்க நிலைகளை தகர்த்தழிப்பதற்காக காத்திருந்த அணிகளுக்கு சண்டையை ஆரம்பிப்பதற்கான கட்டளை கிடைத்ததும் முன்னரங்க காவலரண்களைத் தாக்கியழித்து முன்னேறியவாறு அணிகள் நகரத் தொடங்கின. இப்படைத்தளத்தைச் சுற்றி 25 அல்லது 30 மீற்றருக்கு ஒரு காவலரணாக ஏறத்தாழ 500 இற்கு மேற்பட்ட முன்னணி பாதுகாப்பு அரண்கள் அமைந்திருந்தன. இவற்றோடு மண் அரண்கள், முட்கம்பிச் சுருள்கள் கண்ணிவெடிகள் எனப் பல பாதுகாப்பு அரண்கள் இருந்தன. இவற்றைத் தகர்த்தழித்தவாறு முன்னேறிய புலிகள்; அணிகளின் அடுத்த இலக்காக கிளிநொச்சி 6 ஆம் வாய்க்காலில் அமைந்திருந்த 10 ஆவது சிங்கறெஜிமென்ற் - தளம் கணேசபுரப் பகுதியில் அமைந்திருந்த 4 ஆவது சிங்கறெஜிமென்ற் தளம், பிரதான பாதையோரமாக இருந்த 6 ஆவது கெமுனு வோச்தளம், திருவையாற்றிலிருந்த 7 ஆவது கெமுனுவோச் தளம் என்பன அமைந்திருந்தன. இவற்றோடு புலிகளின் தாக்குதல் வியுூகத்துக்கும் அமைந்திருந்த 9 ஆம் வாய்க்கால் பகுதியில் இருந்த 9 ஆவது கெமுனுவோச் தளமும், கரடிப்போக்கு மேற்குப் பகுதியிலிருந்த 7 ஆவது சிறிலங்கா காலாட் படைத்தளமும், மக்கள் வங்கிக் கட்டடத்தினருகிலிருந்த கிளிநொச்சி பிரிக்கேடின் தலைமையகமும் தாக்கப் படவேண்டிய இலக்குகளாகவிருந்தன. இவற்றோடு பல மினி முகாம்களும் இப்பெரும் படைத்தளத்தினுள் இருந்தன. இவற்றை வெற்றிகரமாக தாக்கியழிக்கும் பணியில் விடுதலைப் புலிகளின் பல படையணிகளும் தீவிரமாக செயற்பட்டன. இச்சமரில் மகளிர் படையணிகளின் பங்கும் அளப்பரியதாகவே அமைந்திருந்தன. இச்சமரில் பங்குபற்றிய மகளிர் அணிகளில் 2 ஆம் லெப். மாலதி படையணியின் தளபதி கேணல் விதுசா அன்றைய போர்க்களத்தில் நடந்த சம்பவங்கள் பற்றியும் போராளிகளின் தீரமிகு தாக்குதல்கள் பற்றியும் அவர்களின் தியாகங்களையும் இன்றைய நாளில் இவ்வாறு வெளிப்படுத்துகிறார். 2 ஆம் லெப் மாலதி படையணி மூன்று முனைகளில் இராணுவக் காப்பரண்களைத் தாக்க உட்புகுந்தது. படையினரின் வெளிப்புறப் பாதுகாப்பு வேலிகளை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரும் நடவடிக்கையில் ஈடுபட்ட அதேவேளை கிளிநொச்சி இராணுவம் ஆனையிறவுக்குத் தப்பியோடாமலும், ஆனையிறவிலிருந்து கிளிநொச்சிக்கு உதவிப்படைகள் வராமலும் தடுக்கும் ஊடறுத்து வழிமறிக்கும் அணியாகவும் செயற்பட்டிருந்தது. நாங்கள் தாக்க வேண்டிய பகுதி வேவு பார்க்கப்படாத பகுதியாக விருந்தது. ஏனெனில் நாம் போவதற்காக வேவுப் போராளிகளால் தீர்மானிக்கப்பட்டிருந்த பகுதியில் இராணுவத்தினர் படைத்தளத்திற்கு வெளியே வந்து உலாவத் தொடங்கியிருந்தார்கள். எனவே திடீரென எமக்கு வேறு ஒரு பாதை சண்டை நடக்கவிருந்த அன்று மாலை காட்டப்பட்டது. நாங்கள் அருகே போய் தடைகளையும் காப்பரண்களையும் பார்க்க முனைந்தால் இப்பகுதிச் சண்டை குழம்பி விடும் ஆபத்து இருந்தது. பரந்த வெளியுூடே எமது உருவங்களை மறைத்தவாறு 50 கலிபர் போன்ற கனரக ஆயுதங்களுடன் நாம் நகரும்போது காப்பரண்களிலிருந்தே எதிரியால் தேடொளி பாய்ச்சப்பட்டது. வெளிச்சக் குண்டுகள் ஏவப்பட்டன. படைத் தளங்களோ மிக விழிப்பாக இருந்தன. இத்தனைக்கும் மத்தியில் தடை வரை நகர்ந்த பின்னர்தான் காப்புச் சூட்டாளர்களை நிலைப்படுத்துவதற்கான இடங்களை ஒழுங்கு செய்ய வேண்டியிருந்தது. காப்பரண்களைத் தாக்கி உள்நுழைந்து பக்கக் காப்பரண்களைக் கைப்பற்றியவாறு போகும்போது எமக்குப் பின்புறமாக பிளாட்டூன் தலைமையகத்திலிருந்து கடும் எதிர்ப்பு வந்தது. நிலத்துக்குமேலே உயரமாக அமைக்கப்பட்டிருந்த காப்பரண்களிலிருந்து கனரகச் சூடுகளை இராணுவத்தினர் வழங்கிக் கொண்டிருந்தனர். காப்பரண் வரிசையிலிருந்து குறுக்கே வெட்டப்பட்டிருந்த நகர்வகழிக்குள்ளிருந்தும் (மூவிங்பங்கர்) படையினர் தாக்கினார்கள.; உள்ளிருந்த உயர்ந்த கட்டடமொன்றிலிருந்தும் கடும் எதிர்ப்பு வந்தது. அந்த நேரம் எங்களுடைய 50 கலிபர் தாக்குதல் போராளிகளின் திறமையான செயற்பாடு நிலைமையை மாற்றியது. ஓரிடத்திலிருந்து குறிப்பிட்ட ரவைகளை அடித்துவிட்டு உடனேயே தமது நிலையை மாற்றி மாற்றி தாக்குதலை மேற்கொண்டார்கள். எங்களுடைய இழப்புக்களை குறைத்து இராணுவத்தினரின் எதிர்ப்பைக் கட்டுப்படுத்துவதில் இக்கனரக ஆயுத அணி பெரும் பங்காற்றியது. நீண்டு தொடர்ந்த ஜெயசிக்குறு எதிர்நடவடிக்கைச் சமரில் தொடர்ந்து பங்காற்றிய எமது கனரக ஆயுத அணியினர் குறுகிய காலத்தில் கடும் பயிற்சியைப் பெற்று மிகுந்த சிரமத்தின் நடுவேதான் சண்டைக்கான நகர்வைச் செய்திருந்தார்கள். திடீரென தேர்ந்தெடுக்கப்பட்ட எமது பாதைக்கருகே இராணுவம் வெளியே உலாவுகின்ற பகுதி இருந்தது. எனவே எமது கவனக்குறைவால் எதிரி விழிப்படைந்து சண்டை குழம்பி விடக்கூடாது என்பதில் ஒவ்வொருவரும் உறுதியாக இருந்தோம். உடலின் உயரத்தை குறைத்து (பென்ட்மூவ்) மிக நீண்ட து}ரம் கனரக ஆயுதங்களுடன் நகருவது இலகுவான விடயமல்ல. மிகச் சிறப்பாக இச் சண்டையில் எமது போராளிகள் செயலாற்றியிருந்தார்கள். இச்சண்டையில் எமது போராளிகளின் மனவுறுதியை மேம்படுத்தும் தியாகங்கள் பலவும் நடந்தேறின. அதாவது ஊடறுத்து உள்நுழைந்து வழிமறிக்கும் அணியோடு மழையில் நனைந்தபடி பயிற்சி பெற்ற காலத்தில் லெப். கேணல் செல்வியின் தலையிலும் உடலின் பல பாகங்களிலும் இருந்த ஷெல்லின் சிதறு துண்டுகளின் தாக்கத்தால் ஒரு கையும் காலும் முழுமையாக இயங்காதிருந்தது. பயிற்சிக்குப் பொறுப்பாக இருந்த தளபதி இவரை வெளியே எடுக்குமாறு கூறியிருந்த போதும் தன்னால் செய்யமுடியும் என்று செல்வி வர மறுத்துவிட்டார். கிளிநொச்சி மீட்பு நடவடிக்கையில் தான் பங்குபற்ற வேண்டும் என்று உறுதியோடு சென்ற அவர் நடவடிக்கையின் முடிவில் அவிழ்த்துவிட்ட விலங்குப்பட்டி போல எமது ஊடறுப்பு நிலைகளைக் கடந்து இராணுவம் ஓட முனைந்தபோது தன்னையும் பாராமல் எறிகணைகளை வீசுமாறு கேட்டு பல இராணுவத்தினரை அழித்ததோடு தானும் வீர வரலாறானார். செல்வியோடு நின்ற வீரவேங்கை அக அன்பு (அகன்பு) வைப் பற்றியும் நான் குறிப்பிட வேண்டும். புதிய போராளியாக ஜெயசிக்குறு எதிர் நடவடிக்கை முனைக்கு வந்த இவரை அடர்காடு அச்சமடையச் செய்துவிட்டது. செல்வியின் அணி வழிமறிப்புப் பயிற்சியில் ஈடுபட்டபோது அகன்புவும் பயிற்சியில் ஈடுபட்டார். ஊடறுப்பு நடவடிக்கை சண்டையின் மிக முக்கியமான செயற்பாடு என்பதால் அதில் பங்கேற்பவர்கள் உறுதி மிகுந்தவர்களாக இருக்க வேண்டும். எனவே அகன்புவைப் பயிற்சியெடுக்க வேண்டாமென்றும் அவருக்கு பதிலாக வேறொரு போராளியை விடுவதாகவும் நான் கூறிய போது அவர் மறுத்து விட்டார். தான் திறமையாக நடவடிக்கையைச் செய்வேன் என்று கூறினார். சண்டையில் இராணுவத்தினர் பெருந்திரளாக ஓடிய அந்த சந்தர்ப்பத்தில் தன்னிடமிருந்த ரவைகள் முடிவடையும் வரை சுட்டுவிட்டே வீரச்சாவடைந்தார். இவருடைய மனவுறுதி புதிய போராளிகளின் உறுதியான செயற்பாட்டுக்கு நல்ல எடுத்துக்காட்டாக அமைந்தது. இந்தச் சண்டை எமக்கு ஒரு மாறுபட்ட கள அனுபவத்தை ஏற்படுத்தியது. அதாவது இச்சமருக்கு அண்மைக்காலங்களில் தாண்டிக்குளம் உட்பட எமது பல ஊடுருவல் தாக்குதல்கள் காடுகளிலேயே நடந்தன. காட்டுப் பகுதியில் எதிரியின் நிலைகளுக்கு அருகே நெருங்கிப் போய் வேவு பார்த்துத் தாக்கலாம். காட்டுச் சண்டைகளுக்குப் பழக்கப்பட்ட அணிகள் பரந்த வெளியால் நகர்ந்து கட்டடங்களிடையே சண்டை பிடித்தமை. வேறுபட்ட அனுபவம். இரவு வேளையில் நாம் காப்பரண்களைக் கைப்பற்றி வெளியான பகுதியில் நிலைகொள்ள பகல் வெளிச்சத்தில் மறைந்திருந்த இராணுவம் எம்மைத் தாக்கியதில் எமக்கு இழப்புக்கள் ஏற்பட்டன. காட்டுச் சண்டைகளில் இத்தகைய நிலை இல்லை. எனவே வெளியான பகுதிகளில் நின்று எமதணிகள் கட்டடப் பகுதிக்குள் நின்ற இராணுவத்தோடு சண்டையிட்டன. அந்த நேரத்தில் ஒரு மாறுபட்ட கள அனுபவம் மிகப் பலங் கொண்ட படைத்தளமாக கருதப்பட்ட ஆனையிறவுப் படைத்தளத்திலிருந்து எந்த நேரமும் உதவி பெறக்கூடிய நிலையிலிருந்த கிளிநொச்சிப் படைத்தளத்தை முற்றாக அழித்ததும், பெரியது எண்ணிக்கையில் போராளிகள் வழிமறிப்பு அணியாக ஊடுருவி நின்றதும் வேறுபாடான அனுபவங்களே. இந்த நடவடிக்கையின் வெற்றிக்கு வழிமறிப்பு அணி மிகுந்த பங்காற்றியது. இச்சண்டைக்காக அவர்கள் எடுத்த பயிற்சி கடினமானது. ஜெயசிக்குறு இராணுவத்தினரின் எறிகணை வீச்செல்லைக்குள் விமானக்குண்டு வீச்சுக்களிடையே மாற்ற உடையுமின்றி மழையில் நனைந்து வெயிலில் உலர்ந்தபடி பயிற்சி எடுப்பதும் பின்பு இரவு வேளைகளில் காப்பரண்களில் காவல் செய்ததுமாய் மிகக் கடுமையாக இவ்வெற்றிக்காக உழைத்திருந்தார்கள். நனைந்த குளிருக்குச் சூடாகத் தேநீர் குடிக்கக் கூட வசதி இருக்கவில்லை. வழிமறிப்பு அணியினரின் ஆயுதங்களுக்கேற்ப நிலைப்படுத்தல், இவர்களுக்கான ஆதரவுச்சூடு என அனைத்தையும் தலைவர் அவர்கள் மிக நுணுக்கமாகத் திட்டமிட்டு நெறிப்படுத்திப் பயிற்சி வழங்கியமையானது சண்டையை மிகவும் இலகுவாக்கியது. ஏனெனில் சண்டை தொடங்கி மூன்று நாட்களின் பின்னர் முடியும்வரை வழிமறிப்பு அணியினர் தமது நிலைகளிலிருந்து அசையவில்லை. சத்ஜெய - 1, 2, 3 எதிர் நடவடிக்கைகளில் எதிரியின் கைகளில் கிளிநொச்சி வீழாதிருக்கப் போராடியது. மறுபடி பரந்தன் கிளிநொச்சி (1998.02.01) இல் ஊடுருவித் தாக்குதல் மூலம் நிலத்தை மீட்க முயன்ற நடவடிக்கையில் பங்கேற்றதான நினைவுகள் பயிற்சியின் போது எமதணிகளுக்கு உரமூட்டின. யாழ். நெடுஞ்சாலைக்கு இடப்புறமாக புகையிரதப் பாதையருகே 2 ஆம் லெப். மாலதி படையணியைச் சேர்ந்த ஜமுனாவின் அணி உடைத்து உள்நுழைந்தது. அயலில் வேறு அணிகள் எடுத்த பாதைகள் போராளிகளிடமும் இராணுவத்தினரிடமும் கைமாறியபடியிருந்தாலும் தமது பாதையை அவர்கள் தக்க வைத்திருந்தார்கள். பல நடவடிக்கைகளைச் செய்வதற்கு அவர்களது பாதை பேருதவியாக இருந்தது. மிகக் குறைந்தளவு போராளிகளே இவ்வணியிலிருந்தனர். மிகக் குறைந்தளவு பயிற்சியையே அவர்கள் எடுத்திருந்தார்கள். என்னுடைய தொடர்பேதுமின்றி தனியாகவே அவர்கள் திறம்படச் செயலாற்றினார்கள். இவ்வெற்றிச் சமரில் மகளிர் அணியின் 2 ஆம் லெப் மாலதி படையணி, மேஜர் சோதியா படையணி, கப்டன் அன்பரசி படையணி, சிறப்பு (மகளிர்) படையணி, புலனாய்வுத்துறை மகளிர் தாக்குதலணி போன்ற பல மகளிர் படையணிகள் பல முனைகளில் வெளிப்புறக் காப்பரண்களைத் தாக்கி உள்நுழைந்ததோடு வழிமறிப்பு அணியாகவும் பங்காற்றினார்கள். மிக அதிகளவான பெண் போராளிகள் இச்சமரில் பங்காற்றினார்கள். நடவடிக்கையின் ஆரம்பத்திலிருந்து இறுதி தேடுதல் நடவடிக்கை வரை அவர்களின் பணி தொடர்ந்தது எனக் கூறினார்.
  4. பாகம் 4 ஓயாத அலைகள்- 02 நடவடிக்கையின் போது அணியொன்றுக்கு பொறுப்பாக நின்று வேவு நடவடிக்கையில் ஈடுபட்ட சிறப்பு வேவுப் பிரிவு போராளியான சுரேந்திரன் அல்லது இளம்பரிதி எனும் போராளி தனது வேவு அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்து கொண்டார். கட்டளைத் தளபதி ஜெயம் அண்ணாவும் வேவுப்பகுதிக்கு பொறுப்பாக நின்ற ஜெரி அண்ணாவும் நாம் வேவுபார்க்க வேண்டிய பகுதிகளை விளங்கப்படுத்தி என்னோடு நான்கு போராளிகளையும் சேர்த்து செயற்பாட்டில் ஈடுபடுத்தினார்கள். குறித்த பகுதியில் பாதையமைத்து கொடுக்க வேண்டிய பொறுப்பு என்னிடமிருந்தது. குறிப்பிட்ட நாட்களுக்குள் அந்தப் பகுதியால் பாதை எடுக்க வேண்டுமென்று சொல்லப்பட்டிருந்தது. அதன்படி சண்டை ஆரம்பிக்கும் நேரத்தில் அணிகளை நகர்த்துவதற்காக கிளிநொச்சி குளத்துக்குள்ளால் மூன்று பாதைகளை எடுத்திருந்தோம். அம்மூன்று பாதைகளும் குளத்து நீருக்குள்ளால்; தான் போக வேண்டும். ஏனென்றால் ஆமியின் மண் அரண்கள் வளைந்திருந்ததால் குளத்திற்குள்ளால் பாதை எடுத்தால் இலகுவாக இருக்கும் என்பதற்காக இந்தப் பகுதியால் பாதைகளை எடுத்திருந்தோம். முதல் முறையாக குளத்து நீருக்குள்ளால் சென்று பாதை எடுக்க முயற்சித்த போது நீருக்குள் இருந்த ஒரு நச்சுத்தன்மை எனது முகத்தில் தாக்கியதால் புண்கள் ஏற்பட்டு கதைக்க முடியாத நிலை ஏற்பட்டது. அதன் பிறகு சில நாட்கள் கழித்து அதனு}டாகவே பாதை எடுக்க வேண்டும் என்ற நோக்கத்திற்காக சென்றேன.; குளத்துக்குள் தாமரைக் கொடிகள் உடலைக் கீறிக் கிழித்தன. தண்ணீர் கூடிய பகுதிக்குள்ளால் நீந்தியும் ஏனைய பகுதிகளால் நடந்தும் சென்றுதான் பார்த்தோம். இரவு நேரத்தில் வேவு நடவடிக்கையிலும் பகல் வேளைகளில் அவதானிப்பிலும் ஈடுபட்டோம். டிப்போச் சந்தியிலிருந்து 200 மீற்றர் உள்ளே சென்றால்தான் குளத்திற்கு வரலாம் அந்தப்பகுதியால் வரும்போது ஆமி மரத்திலிருந்து குறிபார்த்து சுடுவான். இப்படி எனக்கு இரண்டு முறை சுட்டபோது ஒருதடவை எனது தொப்பியில் பட்டது. அதேநேரம் மாலதி படையணி போராளி ஒருவருக்கு இராணுவம் குறிபார்த்து சுட்டதில் காயமடைந்தார். நாங்கள் மூவிங் பங்கருக்குள்ளால் சென்றுதான் குளத்துக்குள் வருவோம். இவ்வாறு ஏழு நாட்களுக்குள் பாதைகளை எடுத்தோம். இரவில் மண் அரணில் ஏறிப்படுத்து அவதானித்துக் கொண்டிருக்கும் போது இராணுவத்தினர் ரோந்து செல்வதை காணக்கூடியதாக இருந்தது. பகல் வேளையிலும் மண் அரண் பகுதியில் தடயங்கள் இருக்கின்றதா என அவதானித்தவாறு ரோந்து செய்வதை நாங்கள் து}ரத்திலிருந்து அவதானித்தோம். எதிரியின் அரணில் இருந்து சிறிய இடைவெளியில் தண்ணிக்கு இடையில் பற்றை ஒன்று இருந்தது. அதற்குள் மூன்று நாட்களாக பகல் வேளையில் இரண்டு பேர் நின்று எதிரி எவ்வாறு நிலையெடுத்திருக்கின்றான் அவனது நடமாட்டங்கள் எவ்வாறு இருந்தது என்றெல்லாம் அவதானித்தோம். அத்தோடு எதிரியின் காப்பரணுக்கு மிக அண்மையாக நின்று தான் நாங்கள் அவதானித்தோம். ஒவ்வொரு காப்பரண்களுக்கும் இடையில் 35 மீற்றர் இடைவெளிகளே இருந்தன. இராணுவத்தின் பிரதான முகாமான கிளிநொச்சி மகா வித்தியாலய முகாமை கைப்பற்றினால் ஏனைய பகுதிகளை கைப்பற்ற இலகுவாக இருக்கும் என்பதற்காகவும் அதிலிருந்து ஏனைய பகுதிகளுக்கான விநியோகத்தை தடைசெய்ய வேண்டுமென்பதற்காகவுமே இந்த குளத்துப்பகுதி பாதையை தெரிவு செய்தோம். ஒன்பது நாட்களுக்குள் வேலைகளை முடித்துவிட்டோம். பின்பு தாக்குதல் அணித் தலைவர்களை அழைத்துச்சென்று அப்பாதைகளைக் காட்டினோம். பின்பு அந்தப்பகுதியால் உள்நுழைவதற்கான அணிகளுக்கு குறிப்பிட்ட நாட்கள் பயிற்சி வழங்கினோம். இதேபோன்று ஒரு குளத்தினை தெரிவு செய்து அந்த அமைப்பை உருவாக்கி பயிற்சியை வழங்கினோம். இவ்வாறு சண்டையை ஆரம்பிப்பதற்கான நாள் நெருங்கியதும் தளபதி தீபன் அண்ணா எங்களோடு கதைத்து தயார்படுத்தல்களை செய்தார். 26 ஆம் திகதி இரவு சண்டை ஆரம்பிக்கப்படவிருந்தது. முதல் நாள் இரவு நாங்கள் சென்று இரவு முழுவதும் அவதானித்து விட்டு மறுநாள் பகலிலும் அவதானித்தோம். இருட்டிய பின் திரும்பி வந்து 50 பேர் கொண்ட அணியை அழைத்துக் கொண்டு தண்ணிக்குள்ளால் சென்றோம். செல்லும் போது ஆமி பரா வெளிச்சங்களை அடித்துக் கொண்டிருந்தான் நாங்கள் நீருக்குள் மறைந்துகொண்டு சென்றோம.; 50 பேரும் உள்நகர்ந்து சண்டை தொடங்கும் நேரத்திற்கு சென்று விட்டோம் சென்றவுடன் எதிரிக்கும் எமக்கும் இடையே ஐந்து மீற்றர் அண்மித்திருந்து கொண்டு குண்டு அடித்து சண்டையை ஆரம்பித்தோம். அப்போது துப்பாக்கிகளுக்குள் நீர் சென்றதால் அவை இயங்கவில்லை. அதனால் குண்டுகளையும் டொங்கான்களையும் பயன்படுத்தியே தாக்குதலை நடத்தினோம். தாக்குதல் ஆரம்பித்து அரை மணி நேரத்திற்குள் அதிலிருந்த ஏழு அரண்களையும் பிடித்து விட்டோம். இரண்டு ஆமி இறந்துவிட ஏனையோர் காயங்களுடன் தப்பி ஓடத் தொடங்கினார்கள். இரவு 1.30 தொடக்கம் காலை 6.00 மணிவரை இப்பகுதியை எமது கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்தோம.; 6.00 மணிக்குப்பின் எதிரியிடமிருந்து எதிர்ப்பு வர ஆரம்பித்தது. அந்த நேரத்தில் இரண்டு பகுதிகளாலும் எதிர்ப்பு வர 6.00 மணி தொடக்கம் 8.00 மணிவரை குண்டுகளையும் டொங்கான்களையும் அடித்து பிடித்த பகுதியை தக்க வைத்துக் கொண்டிருந்தோம். பிறகு மூன்று பகுதிகளாலும் ஆமி பெருமளவில் எதிர்த்தாக்குதலை நடத்த தொடங்கினான். இதனால் நாங்கள் பிடித்த காப்பரண்களை விட்டு பின்வாங்க வேண்டிய நிலை உருவானது. ஆமி நெருங்கி வந்து எங்களை எட்டிப்பிடிக்கும் அளவுக்கு வந்துவிட்டான். அந்த நேரம் எமது போராளிகளில் 40 பேர் வரை வீரச்சாவடைந்துவிட்டனர். அந்த அணிக்கு தலைமை தாங்கிய சித்தா மாஸ்டரும் வீரச்சாவடைந்துவிட்டார். ஏனையோருக்கும் காயம் ஏற்பட்டுவிட்டது. என்னோடு ஒன்பது பேரையும் கூட்டிக்கொண்டு ஆமியின் முகாமிற்குள் கண்டல் பகுதியினு}டாக எங்களுடைய மற்றுமொரு அணியுடன் போய்ச்சேர்ந்தோம். பின்னர் அந்தப் பகுதியை அடுத்த கட்டங்களாக நடைபெற்ற சமரின் போது கைப்பற்றினோம் எனக் கூறினார். இதேவேளை கிளிநொச்சி படைத் தளத்தினுள் உட்புகுந்து வேவு நடவடிக்கையில் ஈடுபட்ட வேவுப் போராளி கலையழகன் தனது அனுபவத்தை இவ்வாறு பகிர்ந்து கொண்டார். 1997 ஆம் ஆண்டு ஏழாம் மாத காலப் பகுதியில் கிளிநொச்சி இராணுவ முகாமை வேவு பார்க்குமாறு பணிக்கப்பட்டது. எனக்கு பரந்தன் பகுதியையும் உள்ளேயிருந்த முகாம்களையும் வேவு பார்க்குமாறு கூறி என்னோடு இன்னும் இரண்டு பேரும் சேர்க்கப்பட்டார்கள். நாங்கள் முகாமுக்குள் செல்வதற்காக சுட்டதீவுப் பகுதியில் இராணுவ காப்பரண் பகுதியில் முயற்சிகளை மேற்கொண்டு உட்புகமுடியாத நிலையில் திரும்பி வந்து ஒவ்வொரு பகுதியிலும் பாதை எடுப்பதற்காக முயன்று கொண்டிருந்தோம். அப்போது கண்டாவளையின் நீரேரியினு}டாக உட்செல்லுமாறு கட்டளை கிடைத்தது. அதனு}டாக உள்ளே நுழைந்து ஏறத்தாழ 20 கிலோமீற்றர் நகர்ந்துதான் பரந்தன் பகுதியை அடைந்தோம். முதல் நாள் வந்து பகல் ஆனையிறவுப் பகுதியில் தங்கிவிட்டு அடுத்த நாள் பரந்தனை நோக்கி நகர்ந்து வர நேரம் போதாமலிருந்ததால் அன்று பகலும் பரந்தனில் ஓரிடத்தில் மறைந்திருந்து விட்டு மறுநாள் தான் வேலை செய்ய ஆரம்பித்தோம். பரந்தன் சந்தியில் ஒரு முகாமும் கெமிக்கலுக்கு அருகில் ஒரு முகாமும் இருந்தது. அதேபோன்று பரந்தன் புளியடிப் பகுதியிலும் ஒரு முகாம் இருந்தது. அங்கு வேவு பார்த்தாலும் பகலில் தங்குவதற்கு இடம் இருக்கவில்லை. பற்றைகள், புல் வெளிகளெல்லாம் எரிக்கப்பட்டிருந்தன. வாய்க்கால்களின் கரைகளில் இருந்த பற்றைகளினுள்ளேயே தங்கினோம். இவ்வாறு நான்கு நாட்களாக பரந்தன் பகுதியில் எத்தனை முகாம்கள் இருக்கின்றதென்பதை பார்த்துக் கொண்டு வெளியே சென்றுவிட்டோம். பின்பு பரந்தன் பகுதியின் பிரதான முகாம்கள் இரண்டையும் வேவு பார்க்குமாறு கூறப்பட்டது. அதற்கேற்ப மீண்டும் உள்நுழைவதற்காக சுட்டதீவு பகுதியால் போக முயற்சி செய்தோம். மூன்று நாட்களாக நீருக்குள்ளிருந்து அவதானித்து பாதை எடுத்து உள்நுழைய முயன்றபோது முதலாவதாக கம்பிச் சுருள்களைத் தாண்டி சென்றோம். அடுத்து கற்களால் அரண் ஒன்று அமைக்கப்பட்டிருந்தது. கற்கள் ஒன்றன்மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அதில் தட்டுப்பட்டால் கற்கள் விழக்கூடியவாறு அமைந்திருந்தது. நாங்கள் அதற்கு மேல் ஏறிச்செல்ல வேண்டியிருந்தது. ஏறும்போது கற்கள் விழுந்தால் எதிரி வெளிச்சம் பாய்ச்சி தேடுவான். இவ்வாறு பலமுறை கற்கள் விழ அவற்றை எடுத்து அடுக்கிவிட்டு ஒருவரை ஒருவர் து}க்கித்தான் அடுத்த பக்கம் வைத்து ஒவ்வொருவராக ஏறிக் கடந்தோம். உள்ளே இறங்கினால் அப்பகுதி சேற்றுப்பகுதி அதனுள் இறங்க கடுமையான துர்நாற்றம் வீசியது. அதையும் சகித்துக்கொண்டு வந்து ஆனையிறவுப் பகுதியில் அன்று பகல் தங்கினோம். அடுத்தநாள் இரவு நேரடியாக பரந்தன் பகுதிக்கு வந்து முகாம்களைப் பார்க்கத் தொடங்கினோம். அந்த முகாம்களை சுற்றி இருந்த காவல் அரண்களை அவதானித்தோம். பின் முகாமின் சுற்றளவையும் எடுத்தோம். இவ்வாறு செயற்பட்டுக் கொண்டிருந்த போது நான்கு நாட்களுக்குப் பின்பு எமக்கு குடிநீர் உணவுகள் எல்லாம் முடிந்து விட்டன. நீரை நாங்கள் கெமிக்கலுக்கு முன் உள்ள கோயில் கிணற்றில் எடுத்துக் கொள்வோம். ஆனால் உணவு இல்லாததால் அடுத்தநாள் அந்தகட்ட வேலையை முடித்துக்கொண்டு வெளியே சென்று பின் அடுத்த கட்ட வேலைக்காக உள்ளே வந்தோம். உள்நுழைந்து பரந்தனை நோக்கி நடந்து வரும்போது அதிகாலை மூன்று மணியாகிவிட்டது. அதனால் இராணுவ காப்பரணுக்கு சிறிது து}ரத்தில் இருந்த ஒரு சிறிய பற்றைக்குள் படுத்துக் கொண்டோம். விடிந்தவுடன் எதிரி தேடுதலை ஆரம்பித்தான். பரவலாக தேடுதலை நடத்தத் தொடங்கினான். அப்போது ~நாங்கள் இருந்த பற்றையை நோக்கி ஒரு ஆமி வேகமாக வந்துகொண்டிருந்தான். மிக அண்மையில் வந்து நின்று சிறிது நேரம் சுற்றிப் பார்த்துவிட்டு குனிந்து பற்றைக்குள் நோட்டமிட்டவன் எங்களைக் கண்டு விட்டான். உடனே பதற்றமடைந்து பெரிதாக கத்திக் கொண்டு ஓடத் தொடங்கினான். நாங்கள் உடனே அந்த பற்றையிலிருந்து அடுத்த பக்கமாகப் பாய்ந்து ஓட அந்தப் பகுதியால் வந்த ஆறு இராணுவத்தினரும் எங்களைக் கண்டவுடன் ஓடத் தொடங்கினார்கள். பிறகு எங்களை நோக்கி சுட ஆரம்பித்தார்கள். நாங்களும் பதிலுக்கு சுட்டுக் கொண்டே ஓடி சிறிய வெளியைக் கடந்து சென்றபோது அடுத்த பகுதியில் குழுவாக நின்ற இராணுவத்தினர் எங்களை கண்டு விட்டார்கள். அவர்கள் எங்களையும் இராணுவம் என நினைத்து கிட்டே வருமாறு கையசைத்தனர். நாங்கள் இந்தப் பக்கமாக வருமாறு சைகை செய்துகொண்டு ஓடி தொடர் காட்டுப் பகுதியொன்றினுள் சென்று நடக்கத் தொடங்கினோம். அப்போது எங்களது தண்ணீர்க் கான்களும் விடுபட்டு விட்டன. நீர்த்தாகம் ஒருபுறமிருக்க கால்களிலிருந்த செருப்பும் விடுபட்டதால் முட்கள் குத்தியதோடு கடுமையான வெய்யில் காலமாகையால் கால்களில் கொப்புளங்களும் ஏற்பட்டு விட்டன. இதற்கிடையில் எங்களுக்கு முதல் உள்நுழைந்த ஒரு அணியும் எதிரியின் தாக்குதலுக்கு இலக்காகி இருவர் வெளியே சென்று விட்டனர். இரண்டு பேர் உள்ளே நிற்பதாக முன்னரே அறிந்திருந்தோம். அன்று நாங்கள் வெளியே தொடர்பு கொண்டபோது உள்ளே நின்ற அந்த இருவரிலும் ஒருவர் வீரச்சாவடைந்து விட்டார் என்பதையும் மற்றவர் தனித்து நிற்பதையும் அறிந்தோம். அவரை எங்களோடு இணைக்குமாறும் வெளியிலிருந்து கட்டளை கிடைத்தது. அவரை எங்கு சந்திப்பதென்ற தகவலும் தரப்பட்டது. அதன்படி அங்கு சென்று பதுங்கியிருந்தோம். அப்போது எமக்கு அருகால் மூன்று இராணுவத்தினர் வந்து நின்று சுற்றிப் பார்த்துவிட்டு சென்றுவிட்டார்கள். பிறகு சிறிது நேரம் கழித்து ஒருவர் வந்து தனது தோல்ப்பையை கழற்றி வைத்து விட்டு கீழே அமர்ந்தார். நாங்கள் அவரை அவதானித்தபோது அவர்தான் நாங்கள் தேடிவந்த போராளி என அடையாளம் கண்டுகொண்டு அவரையும் எங்களோடு இணைத்துக்கொண்டோம். அவரும் குடிநீரோ உணவோ இல்லாத நிலையில் சோர்வடைந் திருந்ததோடு உப்பு நீரை குடித்ததால் வயிற்றோட்டத்தாலும் பாதிக்கப்பட்டிருந்தார். இதேவேளை எங்களோடு வந்த ஒருவருக்கும் வயிற்றோட்டம் ஏற்பட்டது. இதனால் நாங்கள் வேலையை செய்ய முடியாமல் திரும்பி வெளியே வந்து விட்டோம். இதற்குப்பிறகு அடுத்தடுத்த சில நகர்வுகளை மேற்கொண்டுதான் பரந்தன் பகுதியின் முகாம்களின் தரவுகளை எடுத்து முடித்தோம். இவ்வாறு விடுதலைப் புலிகளின் வேவு வீரர்கள் தம்மை வருத்தி பல இரவுகள் கண்விழித்து வரைந்தெடுத்த முழுமையான தரவுகள் அடங்கிய வரைபடங்களை அடியொற்றி தாக்குதல் அணிகள் நகரத் தொடங்கின. 16 கிலோ மீற்றர் சுற்றளவையும் 20 சதுரகிலோ மீற்றர் பரப்பளவையும் கொண்ட இம் முகாமில் நிலை கொண்டிருந்த சண்டை அனுபவம் மிக்க 4 பற்றாலியன் துருப்புக்களை அழித்தொழித்து நகரைக் கைப்பற்றும் நோக்குடன் முன்னரங்கநிலைகளை நோக்கி அணிகள் நகர்கின்றன. நகர்ந்து குறித்த நேரத்தில் நிலைகளை அடைந்த அணிகள் அடுத்த கட்டளைக்காக காத்திருக்கின்றன.
  5. பாகம் 3 கிளிநொச்சி இராணுவ முகாமை ஆக்கிரமித்திருந்த படைகளுக்கு அன்று பிரிகேடியர் உபாலி எதிரிசிங்க தலைமை வகித்திருந்த போதும் சத்ஜெய சமரின் மூன்று கட்டங்களுக்கும் வழிகாட்டிய இராணுவத் தளபதிகளில் மேஜர் ஜெனரல் ஜானக பெரேரா, மேஜர் ஜெனரல் சிறீலால் வீரசூரியா, பிரிகேடியர் வசந்த பெரேரா ஆகியோரும் குறிப்பிடத்தக்கவர்கள். தமிழருக்குரிய நிலங்களை ஆக்கிரமிப்பதிலேயே இவர்கள் தீவிரமாகச் செயற்பட்டார்களேயானால் சொந்த மண்ணை இழந்த நிலையில் ஏதிலிகளாகிய தமது மக்களின் வாழ்விடங்களை மீட்கும் செயற்பாட்டுக்கு தமிழீழத் தேசியத் தலைவரும், தளபதிகளும் எந்தளவு தீவிரமாகச் செயற்பட்டிருப்பார்கள் என்பதை உணர முடியும். அதாவது புலிகள் அமைப்பின் ஒவ்வொரு தளபதிகளும் கிளிநொச்சி முகாமைத் தாக்குவதற்கான திட்டங்களை வகுத்தவண்ணமே இருந்துள்ளனர். அதற்காக விடுதலைப் புலிகளின் விசேட வேவுப்பிரிவுப் போராளிகள் மட்டுமல்லாது தேவைக்கேற்ப ஒவ்வொரு தளபதிகளும் தமது அணியின் வேவுப்போராளிகளை இம்முகாம் மீதான வேவு நடவடிக்கையில் ஈடுபடுத்தியும் வந்துள்ளனர். அந்த வகையில் சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியிலிருந்து அன்று வேவு செயற்பாட்டை மேற்கொண்டவரும் பின்னர் விசேட வேவுப்பிரிவோடிணைந்து வேவுச் செயற்பாட்டில் ஈடுபட்டவருமான போராளி வீரமணி தாம் எந்த நோக்கோடு முகாமுக்குள் நுழைந்தார்கள்; என்பதையும் எதிரியின் நிலைகளை எவ்வாறு அவதானித்தார்கள் என்பதையும் தாம் இராணுவ முகாமுக்குள் வேவுச்செயற்பாட்டில் ஈடுபட்டபோது ஏற்பட்ட திகிலூட்டும் அனுபவங்களையும் இவ்வாறு பகிர்ந்து கொண்டார். கிளிநொச்சி இராணுவ முகாமினுடைய வேவு நடவடிக்கையைச் செய்யுமாறு தளபதி பால்ராஜ் அண்ணாவால் எங்களுக்குக் கட்டளையிடப்பட்டிருந்தது. எதிரியின் முகாமிற்கு வெளிப்பகுதியில் எங்களுடைய வேவு நடவடிக்கைகளைச் செய்த அந்தக் காலப்பகுதி எமது நடமாட்டத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாகவே இருந்தது. ஏனெனில் எதிரியின் அரண்களுக்கு முன்பாக அவனது படைகள் பதுங்கியிருந்து தாக்கி எமக்கு இழப்புக்களை ஏற்படுத்தி வந்தார்கள். இதனால் முன்னணி வேவுத்தரவுகளைக் கூடத் திரட்ட முடியாதிருந்த காலப்பகுதியில்தான் உள் வேவு நடவடிக்கைகளைக் கண்டிப்பாகச் செய்ய வேண்டுமென்று எங்களுக்குக் கட்டளைப் பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்தக் காலப்பகுதியில் நாங்கள் சகல இடங்களிலும் எதிரியின் காவல் அரண்களை நெருங்கி நெருங்கி அவதானித்து வந்தோம். எந்தப் பகுதியில் எதிரியின் அவதானிப்பு குறைவாக இருக்கிறதோ அதனு}டாக நாங்கள் உட்புகுவதற்கான வழியினை தேடிக்கொண்டிருந்தோம். அந்தக் காலப்பகுதியில் தான் எதிரியின் கம்பி வேலியிலிருந்து 100 மீற்றர் சில வேளைகளில் 200 மீற்றர் முன்பாக தனது அணியை காவலரண்களுக்கு முன்பாக நிலைப்படுத்தியிருந்தான். ஏனெனில் எமது அணிகளின் நடவடிக்கை எப்படியிருக்கின்றது என்பதை அறிந்து தமது முகாமை உசார்படுத்துவதற்கான ஒரு நடவடிக்கை. இதனால் நாங்கள் கடினமான முயற்சியெடுத்துதான் இந்த வேவு நடவடிக்கையை மேற்கொண்டோம். நாங்கள் உருத்திரபுரம் டி-7 பகுதியால் வந்து ஒரு வேவு நடவடிக்கை செய்தோம் இந்த நேரத்தில் வெளிவேவுகளை தீவிரப்படுத்தியிருந்தார் தளபதி பால்ராஜ் அண்ணா. இதேநேரம் இன்னுமொரு அணியும் உள்வேவுக்காக ஒரு பாதையை பார்த்து உட்செல்ல முயற்சி செய்து கொண்டிருந்த வேளைதான் எதிரி அவதானிப்பு நிலையிலிருந்து அவதானித்து அந்த அணிக்கு பின்புறமாக தமது அணியை நகர்த்தி வந்து தாக்குதல் செய்து போராளி ஒருவரின் தலையை வெட்டிக் கொண்டு போய்விட்டான். அதற்குப் பின்பு நாங்கள் அங்கு சென்று தாக்குதலை நடத்தி அப்போராளியின் உடலை மீட்டுக்கொண்டு வந்தோம். இதனையடுத்து தளபதி பால்ராஜ் உள்நடவடிக்கைக்காக என்னோடு மூன்று பேர் கொண்ட ஒரு வேவு அணியையும் இன்னுமொரு அணியையும் தயார்படுத்தினார். என்னோடு இணைக்கப்பட்டவர்கள் மேஜர் சசிக்குமார், கரும்புலி மேஜர் நிதர்சன் ஆகியோர் அதே நேரத்தில் போராளி லு}யினின் தலைமையிலான மற்றைய அணியில் மேஜர் பரணி, கப்டன் தமிழவன் ஆகியோர் இணைக்கப்பட்டிருந்தனர். இந்த இரண்டு அணிகளையும் உள்ளுக்கு அனுப்புவதற்கான ஏற்பாடுகளைத்தான் அவர் செய்திருந்தார். டி-7 பக்கமாக காவலரணை அடித்து எதிரிக்குச் உயிர் சேதத்தை ஏற்படுத்தும் அதேநேரத்தில், கொண்டு வரவேண்டும். அதேநேரத்தில் எங்களையும் உள்ளுக்கு அனுப்பவேண்டும் என்று முன்னணி வேவு அணிகளுக்குச் சொல்லப்பட்டிருந்தது. அந்தத் தாக்குதலுக்குப் போராளி ரஞ்சன் லாலா பொறுப்பாக இருந்தார். நாங்கள் இந்நடவடிக்கைக்காக ஒருநாள் பயிற்சி எடுத்தோம். காவலரண் மீது தாக்குதல் நடத்தியவுடன் எங்களை உள்ளே அனுப்புவதுதான் திட்டம். இதிலே அந்தச் சண்டையிலும் ஒரு திட்டம் தரப்பட்டிருந்தது. ஒரு இடத்தில் இராணுவத்தினர் பதுங்கியிருந்து சென்றி பார்ப்பான் அந்த இடத்திற்கு குண்டு அடித்து சண்டையை ஆரம்பிப்பதுவே அத்திட்டம். இதற்காகத் தடைவெட்டும் போராளிகளுடன் நாங்கள் ஐந்து பேர் அமைதியாக நகர்ந்தோம். இரவு 12.45இற்கு சண்டையெனச் சொல்லப்பட்டிருந்தது. நாங்கள் தடைகளையெல்லாம் வெட்டி நகர்ந்துகொண்டு போகும் சந்தர்ப்பத்தில் எதிரி வெளிச்சம் பாய்ச்சி நோட்டமிட்டு விட்டு பன்றி என்று நினைத்து கலைக்கத் தொடங்கினான். பின்பு எங்களை இனங் கண்டு விட்டான். உடனே அந்த இடத்திலே சண்டை ஆரம்பமானது. உடனே நாங்கள் இரண்டு குண்டுகளை அடித்துவிட்;டு மறைப்பு வேலிகளைப் பிரித்துக்கொண்டு பாதையை அகட்டி உள்நுழைந்தோம். நிறைய எறிகணைகள் வீழ்ந்து வெடித்துக்கொண்டிருந்தன. பரந்தன் பகுதியின் கிளிநொச்சி எல்லையிலிருந்து டிப்போ வரை எனது அணியின் வேவு நடவடிக்கைக்குரிய பகுதியாக இருந்தது. எனக்குத் தரப்பட்டிருந்த வேலைத்திட்டம் எதிரியின் முகாம்கள் எந்தெந்த இடங்களில் இருக்கிறதென்பதை அவதானிக்கும் திட்டமாக இருந்தது. கிளிநொச்சி எங்களுக்கு ஒரு பாPட்சமான இடமாக இருந்தபோதும் முகாமுக்குள் எல்லாமே மாற்றப்பட்டிருந்தது. எதிரி எல்லாவற்றையும் முழுமையாக மாற்றி வைத்திருந்தான். அன்று இரவு நாங்கள் முகாமுக்குள் சென்று விடிந்துகொண்டு வரும் நேரத்தில் கனகபுரப் பகுதியில் ஒரு ஆலமரத்தின் கீழுள்ள பழைய பங்கர் ஒன்றுக்குள் மூன்று பேரும் ஒழித்திருந்தோம். காலை 7.30 மணிக்கு அப்பகுதியால் இராணுவத்தினர் தேடுதலில் ஈடுபட்டனர். எமக்கு அருகாலும் சிலர் சென்றனர். ஆனால் எங்களைக் காணவில்லை. இராணுவத்தினர் இரவு சண்டை நடந்த இடத்திற்கு போய்க்கொண்டிருந்தனர். அதற்குப்பிறகு பகல் முழுவதும் அங்கேயே இருந்தோம். எதிரியின் அச்சுறுத்தல் அதிகமாக இருந்ததால் அதை பால்ராஜ் அண்ணை தமக்குத் தெரியப்படுத்தச் சொல்லியிருந்தார். அன்றிரவு 7.00 மணிக்கு ஆலமரத்தில் ஏறி பால்ராஜ் அண்ணையோடு தொலைத் தொடர்பு கருவி மூலம் கதைத்துவிட்டு இறங்கி கனகபுரத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தோம். கனகபுரத்தில் இப்போது சங்கம் இருக்கின்ற இடத்திற்குப் பக்கத்தில் அன்று மினிமுகாம் ஒன்று இருந்தது. அங்கிருந்த மைதானம் ஆமி விளையாடும் மைதானமாக இருந்தது. அதற்குப் பக்கத்தில் இருந்து மூன்றுபேரும் அந்த இடத்தை அவதானித்தோம். அப்போது மின்பிறப்பாக்கி இயங்கிக்கொண்டிருந்தது. பின்பு அங்கிருந்து திருநகர் வீதியால் நகர்ந்து முன்பிருந்த சந்தைப்பகுதியில் இருந்த காட்டுப் பகுதிக்குள் அன்று தங்கினோம். விடிந்தவுடன் பார்த்தபோது இராணுவத்தினது தடயங்கள் காணப்பட்டதோடு ஒரு வெளிப்பான பற்றையாகவும் இருந்தது. நாங்கள் அன்று பகல் முழுவதும் அதற்குள்ளேயே இருந்தோம். இருளானதும் அங்கிருந்து பால் சாலை வீதியால் வந்து பார்த்தோம். அப்பகுதியில் எதிரி இருக்கவில்லை. ஆனால் நாய்கள் குரைத்துக் கொண்டிருந்தன. அதனால் இங்குதான் பிரதான முகாம் இருக்கவேண்டும் என்ற ஊகத்தில் இரவு பார்வை சாதனத்தால் பார்த்துக்கொண்டு போய் பிரதான வீதியில் ஏறிவிட்டோம். அங்கிருந்து நகர்ந்து சென்றால் முன்னர் சுவையுூற்று இருந்த இடத்திற்குப்போய் பின் பிரதான வீதியாலே நகர்ந்து வைத்தியசாலையை நோக்கிச் சென்றோம். அங்கு தேவாலயம் அமைந்திருந்த இடத்தில் எதிரியின் முட்கம்பி வேலிபோடப்பட்டிருந்தது. அந்த முட்கம்பி வேலியினைப் பிடித்துக்கொண்டுபோனோம். அங்கு புகையிரத வீதியோடுதான் பிரதான முகாமாக இருந்தது. அங்கு அவற்றை அவதானித்துக்கொண்டு புகையிரத வீதியால் நகர்ந்துசென்றோம். நாங்கள் எதிரியின் கம்பி வேலியை விட்டு விலகிச்சென்றால் எதிரியின் பதுங்கித்தாக்கும் அணிகளை சந்திக்க வேண்டிவரும் என்பதற்காக கம்பி வேலியைப் பிடித்துக்கொண்டே சென்றோம். அன்று பணக்காரத்தெரு என்று சொல்லப்பட்ட அந்தப்பகுதியில் முழுக்கட்டடங்களையும் எதிரி உடைத்திருந்தான் கம்பி வேலிகளின் முன்னால் நாய்களையும் கட்டி வைத்திருந்தான். நாய்கள் எங்களைப் பார்த்துக் குரைக்கத் தொடங்க எதிரி வெளிச்சம் பாய்ச்சிப்பார்த்துக்கொண்டிருந்தான். அதனால் நாங்கள் அமைதியாக குரோல் இழுத்துத் தவண்டு கால்களை மெதுவாக எடுத்துவைத்துதான் எங்களது நகர்வுகளை மேற்கொண்டோம். ஒவ்வொரு காவலரண்களும் எத்தனை மீற்றருக்கு ஒன்று இருக்கின்றதென்பதையும் குறித்துக்கொண்டு சென்றோம். இவ்வாறு ஒருபகுதியைப் பார்த்து முடித்துக் கொண்டு மீண்டும் சந்தைப்பகுதி பற்றைக்குள்ளேயே வந்து தங்கினோம். அன்று பகல் பால்ராஜ் அண்ணாவுடன் தொடர்பு கொண்டு எடுத்த தகவல்களை கொடுத்தோம். அடுத்த நாள் அதேபோன்று மற்றப்பகுதியைப் பார்க்கத் தொடங்கினோம். அப்போது கரடிப்போக்கு வாய்க்கால் பகுதியெல்லாம் மறிக்கப்பட்டிருந்தது. அந்தப் பகுதியால் எல்லாம் உட்சென்று பார்த்துக்கொண்டு அதேபகுதியால் வந்து அரைவாசிப் பகுதியைப் பார்த்து விட்டு மூன்றாம் நாள் சந்தைப் பகுதிக்குள் தங்கினோம். நாங்கள் முதல் நாள் பால்ராஜ் அண்ணாவோடு தொடர்பு கொண்டதை எதிரி தனது தொலைத் தொடர்பு சாதனம் மூலம் கேட்டு நாங்கள் இருக்கும் பகுதியை அறிந்திருந்தான். அதனால் அன்று நாங்கள் இருந்த பற்றைப்பகுதியை சுற்றிவளைத்து இரண்டு டாங்கிகளையும் அப்பகுதிக்குத் தாக்குதல் நடத்தத்தயாராக வைத்துக் கொண்டு தேடுதல் செய்யத் தொடங்கினான். ஒரு பகுதியைத் தேடிமுடிக்க நாங்கள் அடுத்த பகுதிக்கு மாறினோம். இவ்வாறு நான்கு தடவைகள் நான்கு விதமாகத் தேடுதலை நடத்த நாங்களும் மாறிக்கொண்டிருந்தோம். இப்படியாக அவனது தேடுதல்கள் முடிந்து டாங்கிகள் எல்லாம் புறப்படும் நேரத்தில் நாங்கள் ஒரு புற்றுக்குப்பின்னால் மறைந்திருந்தோம். அப்போது ஒரு ஆமி என்னுடைய முகத்திற்கு நேராக வந்து என்னைக் கண்டுவிட்டான். நாங்கள் குண்டுகளை அடிக்கத்தயாராக வைத்திருந்தோம். சைனைட்டையும் வாய்க்குள் வைத்தபடியே இருந்தோம். என்னுடைய முகத்தைப் பார்த்தவன் உடனே பயந்து கண்ணை மூடிவிட்டு திரும்பிச்சென்றுவிட்டான். நாங்கள் இருளும்வரை அங்குதான் இருந்தோம். ஆனால் எங்களைத்தேடி எதிரி வரவில்லை. இதே நேரத்தில் எங்களிடம் இருந்த உணவுகள் குடிநீர் எல்லாம் முடிந்துவிட்டது. அங்குள்ள கிணறுகளிலும் தண்ணீர் எடுக்க முடியாது. கிணற்றுப்படிகள் எல்லாம் உடைந்துபோயிருந்தன. அதனால் எம்மிடம் இருந்த சிறிதளவு நீரை கான் மூடியில் எடுத்து தொண்டையை நனைத்துக்கொண்டுதான் இருந்தோம். மூன்றாம் நாள் எங்களது வேவு நடவடிக்கை முடிந்தது. இதனால எங்களை திரும்பி வருமாறு கட்டளை கிடைத்தது. ஆனால் உள்ளே இருந்து திரும்பிவர பாதையில்லை. எங்களை காவல் அரண் அடித்து உள்ளே அனுப்பியதால் பாதை எடுத்துத்தான் வெளியேவர வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது. அதற்காக நாங்கள் நகர்ந்து டிப்போ பகுதி மத்திய கல்லு}ரிப்பகுதி எல்லாம் பார்த்தோம் எதிரி மண்ணரன்களின் உட்பகுதியில் முட்கம்பிகளை வலைபோன்று மண்ணோடு சேர்த்து அடித்திருந்தான். அவற்றுக்குள் கண்ணிவெடிகளையும் புதைத்திருந்தான் இந்தப்பகுதியால் வெளியால் செல்லமுடியாது. அன்றிரவு மரத்தில் ஏறி பால்ராஜ் அண்ணாவுடன் தொடர்பு கொண்டேன். எங்களை கொம்படியால் வருமாறு கட்டளையிட்டார். அன்று அங்கேயே தங்க வேண்டியேற்பட்டது. அங்கு வற்றிய குளத்தின் ஒரு பகுதியில் நின்ற சேற்று நீரை துணிவைத்து எடுத்துகுடித்து விட்டு வந்து வான்கரையின் ஒருபகுதியில் ஒளித்துக்கொண்டோம். இதேவேளை ரொட்றிக்கோ மைதானத்pல் இராணுவத்தினருக்கு பயிற்சி நடந்து கொண்டீருந்தது. அங்கு நடந்த சூட்டுப்பயிற்சியில் வந்த சன்னங்கள் எங்களைச்சுற்றி வீழ்ந்து கொண்டிருந்தன. பின்பு நாங்கள் இரவு நகர்ந்த தடயங்களை கண்டவுடன் தேடுதலை எதிரி மேற்கொள்ளத் தொடங்கினான். அப்போது நான் இருந்த இடத்தில் எறும்புகள் என்னைமொய்த்துக்கடித்துக் கொண்டிருந்தன. நான் அப்போது அசைய முடியாது இருந்தேன். ஒரு ஆமி வந்து எனது பாதத்திற்கு மேல் தனது கால்களை வைத்துக்கொண்டு சிறிது நேரம் நின்றான். பிறகு தொடர்ந்து தேடுதலை முடித்துக்கொண்டு போய்வி;ட்டான். அடுத்தநாள் நாங்கள் உப்பளப்பகுதிக்குப் போய் அன்று பகல் அங்கேயே மறைந்திருந்தோம். அன்றிரவு தட்டுவன் கொட்டிப்பகுதியால் கடந்து சென்றோம். அன்று நேரம் போதாமையினால் ஆனையிறவின் பெருங்காட்டுப்பக்கமாய் போய் தங்கினோம். அப்போது எங்களுக்கு உணவோ நீரோ இருக்கவில்லை. பசிக்களையில் விழுந்த பனம்பழத்தை எடுத்துச்சாப்பிட்டு விட்டு இருந்தோம். ஆனால் வெளியில் வரப்பாதை இருக்கவில்லை. அப்போது பால்ராஜ் அண்ணை எங்களோடு தொடர்பு கொண்டு நீங்கள் எந்த இடத்திலாவது ஆமியின் காவலரன் மீது தாக்குதலை நடத்திக்கொண்டு வெளியே வாருங்கள் நாங்கள் அந்தப்பகுதியால் வந்து உங்களை மீட்போம் எனக்கூறினார். அன்படி நாங்கள் நகர்ந்து சென்றபோது எதிரி எங்களைக்கண்டு தாக்கத் தொடங்கினான். நாங்களும் தாக்கத் தொடங்கினோம். பிறகு நாங்கள் ஓடி காட்டுக்குள் மறைந்துகொண்டோம். எங்களோடு வந்த போராளி சசிக்குமாரைக் காணவில்லை. நாங்கள் இருவரும் அன்று காலை காட்டுக்குள் இருந்தபோது தேடுதல் நடத்திய ஆமி எங்களைக் கண்டுவிட்டான். அதனால் நாங்கள் அவன் மீது தாக்கியவாறு அவனது அரண்களைத் தாண்டி கட்டைக்காட்டுப்பகுதியால் சென்று ஒரு நாவல் மரத்திற்கு மேலே ஏறி இருந்தோம். ஆமி கீழால் சென்றான். ஆனால் எங்களைக் காணவில்லை. எங்களுக்கு நீர் கூட இல்லாததினால் சோர்வடைந்து விட்டோம். நடக்க முடியவில்லை. ஒருவாறாக அன்றிரவு ஆமியின் வேலியைக்கடந்து பூனைத்தொடுவாய் பகுதியால் வந்து வெளியேறியதோடு மயங்கிவிட்டோம். அப்பகுதி மக்கள்தான் எங்களைக் காப்பாற்றினார்கள். அடுத்தநாள் சுட்டதீவுப்பகுதியால் காணாமல் போன சசிக்குமாரும் வந்து சேர்ந்தார்.
  6. பாகம் 2 ஓயாத அலை 02 தாக்குதலை நடாத்துவதற்கான சிறப்பு வேவுச் செயற்பாட்டில் ஈடுபடுவதற்கு முன்னரே விடுதலைப் புலிகளின் வேவு அணிகள் கிளிநொச்சி இராணுவ முகாம்களிற்குள் ஊடுருவி வேவு செயற்பாடுகளில் தீவிரமாக ஈடுபட்டு வந்தன. அதன் மூலம் பெறப்பட்ட பல முக்கிய தரவுகளும் இந்த ஓயாத அலை 02 தாக்குதல் வெற்றிக்கு மூலபலமாகவிருந்தன. அவ்வாறு வேவுச் செயற்பாட்டில் ஈடுபட்டுவரும் ஓயாத அலைகள் 02 தாக்குதல் நடவடிக்கைக்கான வேவுப்பணியில் அணி ஒன்றுக்குப் பொறுப்பாகவிருந்து வேவு நடவடிக்கையில் ஈடுபட்டவரும் தற்போது சாள்ஸ் அன்ரனி சிறப்புப்படையணியின் தாக்குதல் தளபதிகளில் ஒருவருமான பிரதாபன் அன்று தாங்கள் எவ்வாறு எதிரியின் முகாமுக்குள் ஊடுருவினார்கள் என்பதையும் அங்கு எதிரியின் நிலைகள் எவ்வாறு அமைந்திருந்தன என்பதையும் தாக்குதலுக்கான தகவல்களை எதிரியின் முகாமுக்குள்ளிருந்து எவ்வாறு திரட்டினார்கள் என்பதையும் இவ்வாறு கூறினார். கிளிநொச்சி பரந்தன் பகுதிகளை வேவு பார்க்க வேண்டும் என்று எங்களுக்கு ஏற்கனவே கட்டளைத் தளபதி தீபன் அண்ணாவால் சொல்லப்பட்டது. உள்வேவுக்கான பகுதிகளும் பிரித்து தரப்பட்டன. ஆனால் உள்ளே செல்வதற்கான பாதை இருக்கவில்லை. வெளிலைனைக் (பாதுகாப்பு வேலியை) கடந்து உள்ளே செல்வதற்கான பாதையை நாங்கள் எடுக்கவேண்டிய தேவை இருந்தது. ஆனையிறவிற்கும் கிளிநொச்சிப்பகுதி மற்றும் பரந்தன் பகுதிகளுக்குள்ளால் உட்செல்வதற்கான பாதை எடுப்பதற்காக ஒரு மாத காலமாக முயற்சி செய்து கொண்டிருந்தோம் பாதை இல்லாததால், கட்டைக்காடு வெற்றிலைக்கேணியுூடாக உள்ளே செல்லுமாறு எமக்கு கட்டளை கிடைத்தது. அங்கு சென்று நீரேரியினு}டாக உட்செல்ல முனைந்த போது அங்கே இரவில் மின்குமிழ்கள் பொருத்தப்பட்டு இருந்ததோடு அவதானிப்பும் பலமாக இருந்தது. பிறகு கொம்படி பகுதியால் செல்ல முற்பட்டபோது எதிரியின் தாக்குதலுக்கிலக்காகி திரும்பினோம். இந்த வேளையில்தான் கிளிநொச்சி குளத்தினு}டாக மற்றுமொரு அணி எடுத்த பாதையினு}டே உட்செல்லுமாறு கட்டளை கிடைத்தது. அங்கும் அந்த அணிக்கு அடி விழுந்து விட்டது. அதனால் குளத்தின் அலை கரையினால் நாங்கள் ஒருபாதை எடுத்து உள்நுழைந்தோம். உள்ளே எங்கு தங்குவது எப்பகுதியால் பயணிப்பது என்று எங்களுக்கு எதுவும் தெரியவில்லை. ஏனென்றால் உள்ளே வயல்வெளிகளும் வெளியான பிரதேசமாகவும் இருந்ததால் மறைவான இடம் கிடைக்கவில்லை. அதனால் முதல் நாள் முழுவதும் நாங்கள் தங்குவதற்கான இடங்களைத் தேடி பாதுகாப்பான ஓர் இடத்தை தெரிவு செய்தோம். மறுநாள் அதனுள்ளிருந்து திட்டங்களை வகுத்துக் கொண்டு கரடிப்போக்கு சந்திப் பகுதிக்கு வந்தோம் அங்கு தான் கரடிப்போக்கு முகாம் இருந்தது. அது சிறிய பிரதேசத்தைக் கொண்ட முகாமென நினைத்தோம். ஆனால் கரடிப்போக்கிலிருந்து கிளிநொச்சி வைத்தியசாலை வரைக்கும் அந்த தொடர்முகாம் அமைந்திருந்தது. அங்கிருந்து புகையிரத வீதியினு}டாக குறிப்பிட்ட பகுதியை அவதானித்து விட்டு மறுநாளும் உள்ளேயே தங்கினோம், அடுத்த நாள் முதல் நாள் விட்ட இடத்திலிருந்து அவதானிப்பை தொடர்ந்தோம். இவ்வாறு அந்த முகாமின் புகையிரத வீதிப் பகுதியின் சுற்றளவை எடுக்க மட்டும் 07 நாட்கள் எடுத்தன. ஏனென்றால் கரடிப் போக்கு சந்தியிலிருந்து பரந்தன் நோக்கி 700 மீற்றரில் இன்னுமொரு இராணுவ முகாமிருந்தது. அந்த முகாமிற்கும் கரடிப்போக்கு முகாமுக்கும் இடையால் இறங்கியே நாங்கள் வேவுபார்க்க வேண்டியிருந்தது. அந்த ஒரு கிழமை முடிந்ததும் எடுத்த தரவுகளுடன் கட்டளைத்தளபதி தீபன் அண்ணாவிடம் வந்தோம். பிறகு அடுத்த கட்ட நடவடிக்கைக்கான திட்டங்களை எமக்கு தந்தார். அதற்கேற்ப நாங்கள் இரண்டாவது முறை உட்புக முயன்ற போது முதல் சென்ற பாதையில் இராணுவத்தின் அவதானிப்பு அணி நிறுத்தப்பட்டிருந்தது. அதனால் அந்த பாதையிலிருந்து 50 மீற்றர் விலத்தி ஒரு பாதையை எடுத்து உள்ளே சென்றோம் அங்கு திட்டப்படி முதல் கட்டத்தில் விட்ட பகுதியிலிருந்து முகாமின் சுற்றளவை பார்த்தோம். அதன்பிறகு வெளியே வந்து மூன்றாவது முறை உட்சென்று திருநகர் பகுதியில் இருந்த முகாம்களை அவதானித்தோம். பழைய மஞ்சுளா வெதுப்பகத்தடியில் ஒரு முகாமும் 6 ஆம் வாய்க்கால் சந்தியில் ஒரு முகாமும் கோழிப்பண்ணை வீதியில் ஒரு முகாமும் இருந்தன. இவற்றோடு 3 ஆம் வாய்க்கால் வீதியிலும் ஒரு முகாம் இருந்தது. இவை கிளிநொச்சி பிரதான தளத்திற்குரிய பாதுகாப்பு முகாம்களாக அமைந்திருந்தன. இவற்றை நாங்கள் பார்த்த சமகாலத்திலேயே மற்றுமொரு அணி பரந்தன் பகுதியை பார்த்துக் கொண்டிருந்தது. நாங்கள் பார்த்த பகுதியின் முழுமையான தரவும் எடுக்கப்பட்டு விட்டது. இதற்கிடையில் இரவில் வேலை செய்வது இலகுவாக இருந்தபோதும்; பகலில் உள்ளே தங்குவதென்பது கடினமாகவே இருந்தது. கிளிநொச்சியின் கட்டடப்பகுதிக்குள் இராணுவத்தினர் இருந்தனர்;. ஏனைய பகுதி வெளியானவை. அதனால் நாங்கள் தங்குவதற்காக சில இடங்களை பிரித்து வைத்திருந்தோம். அதாவது 3 ஆம் வாய்க்கால் அருவிக்கருகில் உள்ள சில இடங்களிலும், அடுத்து கோழிப்பண்ணை வீதியின் இடது பக்கத்தில் ஒரு இடத்திலும், திருநகர் சுடலைக்குள்ளிருந்த பற்றைக்குள்ளும் பரந்தனுக்கும் ஆனையிறவுக்கும் இடையில் ஒரு பகுதியிலும் தங்குவதற்கான பகுதிகளை பிரித்திருந்தோம். வீதியோரமாக நாங்கள் தங்கியிருந்த வேளை பகலில் இராணுவத்தின் நடமாட்டம் அதிகரித்திருக்கும் அதிலே நாங்கள் சாப்பிடுவதற்குக் கூட பெரும் சிரமமாகவே இருந்தது. ஏனைய பகுதிகளில் இருந்த புற்கள் பற்றைகள் கூட எரிக்கப்பட்டிருந்தன. ஏனென்றால் வேவுக்காக நாங்கள் இறங்கிவிட்டோம் என்பதை எதிரி தெளிவாக உணர்ந்திருந்தான். அதனால் ஒவ்வொரு நாளும் தேடுதலில் ஈடுபட்டே வந்தான். இதனால் கிளிநொச்சியில் இரவு வேளைகளில் வேலை செய்துவிட்டு பகலில் தங்குவதற்காக ஆனையிறவுப்பகுதிக்கு வந்து தங்கவேண்டிய நிலையும் ஏற்பட்டது. நாங்கள் மூன்று தடவைகள் உள்ளே சென்று ஓரளவு வேலைகளை முடித்திருந்த போதும் சில பகுதிகளின் வேலைகள் நிறைவு பெறவில்லை. எமது திட்டம் கிளிநொச்சிப் பகுதியைக் கட்டம் கட்டமாக பிரித்து மறித்துத் தாக்குதலை மேற்கொள்வதே. எனவே அதற்கான சரியான பகுதிகளை உறுதிப்படுத்த வேண்டிய தேவை இருந்தது. நாங்கள் மூன்றாம் நாள் அந்த வேலையை முடிக்க முன் வெளியே வந்துவிட்டு அடுத்த தடவை செல்ல முற்பட்ட போது பாதையில் எதிரியின் பதுங்கித்தாக்கும் அணிகள் நிறுத்தப்பட்டிருந்தன இதனால் மீண்டும் வெற்றிலைக்கேணி கட்டைக்காட்டினு}டாக உள்ளே வருமாறு கட்டளையிடப்பட்டது. அந்தப்பகுதியால் வருவதற்கு புதிதாக பாதை எடுத்தே வரவேண்டியிருந்தது. அதனால் ஒரு மாதம் அப்பகுதியில் தாமதமானது. அங்கு நின்ற செம்பியன் வேவு அணியின் பாதையினாலேயே நாம் உள்ளே நுழைந்தோம். ஆனால் நாம் சென்ற அப்பாதை எதிரியின் காப்பரணுக்குள் தான் செல்லும் ஆனால் அந்தக்காப்பரண்களில் இருக்கும் இராணுவம் முன்னுக்கு வந்து நிற்பதால் அந்த அரண்கள் வெறுமையாக இருந்ததால் நாம் அந்தப் பகுதியால் உள்நுழைந்தோம். உள்நுழைந்த போதும் ஆனையிறவு தொடக்கம் கிளிநொச்சி வரையுள்ள இராணுவ முகாம்களை கடந்தே வரவேண்டியிருந்தது. அன்று அதிகாலையில் பரந்தன் வீதியைக் கடக்க முடியவில்லை உமையாள்புரப் பகுதி பற்றைக்குள் தங்கிவிட்டோம். அன்று காலைதான் எமக்குத் தெரிந்தது. அப்பகுதியில் இராணுவத்தின் தேடுதல் அதிகமாக நடைபெறும் பிரதேசமென்று. அன்று தேடுதலுக்காக வந்த இராணுவத்தினர் நாய்களையும் கொண்டு வந்திருந்தனர். நாய்கள் எங்களை கண்டு குரைக்கத் தொடங்கின. ஆனால் இராணுவம் அதைப் பொருட்படுத்தவில்லை. அன்று இரவு கிளிநொச்சிக்கு வந்து முன்னர் விட்ட மிகுதி வேலையை ஆரம்பித்தோம். நான்கு நாட்களுக்குள் வேலையை முடித்துக் கொண்டு தட்டுவன் கொட்டியையும் கடந்து போய்க் கொண்டிருந்தோம். அப்போது பதுங்கியிருந்த இராணுவ அணி ஒன்று எங்களைத் தாக்கியது. நாங்களும் திருப்பி தாக்கிக் கொண்டு ஓடினோம். ஒரு போராளி காயப்பட்டு விட அந்த சண்டையோடு வெளியால் வந்து விட்டோம். வந்தவுடன் வெளியில் நின்ற எதிரியின் ஒரு அணியுடனும் சண்டை பிடித்துத்தான் வந்து சேர்ந்தோம். இதேவேளையில் பரந்தன் பகுதியில் வேலை செய்த எமது அணியும் அன்று வெளிவர முயற்சி செய்து இராணுவத்தின் தாக்குதலுக்கு உள்ளாகியது. அவர்கள் முட்கள் நிறைந்த பகுதியால் ஓடி மறுநாள் கால்களில் முட்கள் குத்தி நடக்க முடியாத நிலையில் பனை மட்டைகளை வெட்டி காலில் செருப்பு போல கட்டிக்கொண்டு நடந்து வந்து சேர்ந்தார்கள் எனக் கூறினார்.
  7. ஓயாத அலைகள் இரண்டு – கிளிநொச்சி சமர் ஓயாத அலைகள் – இரண்டு என்பது இலங்கை அரசபடையினரால் கைப்பற்றப்பட்டிருந்த முக்கிய நகரமான கிளிநொச்சியை மீளக் கைப்பற்றும் நோக்குடன் தமிழீழ விடுதலைப்புலிகளால் திட்டமிட்டு நடத்தப்பட்ட வலிந்த இராணுவ நடவடிக்கையைக் குறிக்கும். பின்னணி 1996 ஆம் ஆண்டின் முற்பகுதியில் யாழ்ப்பாணக் குடாநாட்டிலிருந்து விடுதலைப்புலிகள் முற்றாகப் பின்வாங்கியிருந்த நிலையில் அதேயாண்டு ஜூலையில் முல்லைத்தீவுப் படைத்தளத்தை அரசபடையினரிடமிருந்து ஓயாத அலைகள் – ஒன்று நடவடிக்கை மூலம் கைப்பற்றியிருந்தனர். முல்லைத்தீவு நகரம் பறிபோனதைத் தொடர்ந்து அவ்வாண்டின் இறுதிப்பகுதியில் ‘சத்ஜெய’ என்று பெயரிட்டு மூன்று கட்டங்களாக பாரிய படைநகர்வைச் செய்து தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டிலிருந்த கிளிநொச்சி நகரைக் கைப்பற்றியது இலங்கை அரசபடை. அதன்பின்னர் ஜெயசிக்குறு என்று பெயரிட்டு மிகப் பெரிய இராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது அரசபடை. தமது கட்டுப்பாட்டிலிருக்கும் வவுனியாவுக்கும் கிளிநொச்சிக்குடையில் இருக்கும் நிலப்பகுதியையும் முக்கிய வினியோகப் பாதையையும் கைப்பற்றுவதே அரசபடையின் நோக்கமாக இருந்தது. நீண்டகாலமாக நிகழ்ந்த இந்த ஜெயசிக்குறு படைநடவடிக்கை நிகழ்ந்துகொண்டிருந்த போதே, விடுதலைப்புலிகள் கிளிநொச்சி நகரை மீளக் கைப்பற்றத் திட்டமிட்டு ஒரு தாக்குதலைத் தொடுத்தனர். பெப்ரவரி 2, 1998 அன்று நடத்தப்பட்ட கிளிநொச்சி நகர் மீதான தாக்குதல் புலிகளுக்கு எதிர்பார்த்தளவு வெற்றி தராதபோதும் குறிப்பிட்ட சில பகுதிகளைக் கைப்பற்றித் தக்க வைத்துக் கொண்டனர். அதன்பின்னும் ஜெயசிக்குறு நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருந்தது. மீண்டும் ஒரு தடவை கிளிநொச்சியைக் கைப்பற்றும் நடவடிக்கையை புலிகள் மேற்கொண்டனர். இம்முறை புலிகளுக்கு முழுமையான வெற்றி கிடைத்தது. தாக்குதல் செப்டம்பர் 26, 1998 அன்று இந்திய அமைதி காக்கும் படைக்கு எதிராக அகிம்சை முறையில் உண்ணாநோன்பு இருந்து உயிர்துறந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் முக்கிய உறுப்பினர் லெப்.கேணல் திலீபனின் பதினோராம் ஆண்டு நினைவுநாளின் இரவில் ஓயாத அலைகள் இரண்டு என்று பெயரிடப்பட்ட இராணுவ நடவடிக்கை தமிழீழ விடுதலைப்புலிகளால் தொடங்கப்பட்டது. செப்டம்பர் 27ம் நாள் அதிகாலை தொடக்கம் மூன்றுநாட்கள் நடந்த கடும் சண்டையின் பின் கிளிநொச்சி நகரம் முழுமையாக தமிழீழ விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. கிளிநொச்சி நகரம் மீட்கப்பட்டதெப்படி? ஓயாத அலைகள் -02 கிளிநொச்சி மீட்பு நடந்தது எவ்வாறு? சிறிலங்கா இராணுவத்தின் 54 ஆவது டிவிசனின் 3 ஆவது படைப்பிரிவு, பிரிகேடியர் உபாலி எதிரிசிங்கவின் தலைமையில் கிளிநொச்சிப் பகுதியை 1996 ஆம் ஆண்டுகாலப் பகுதியில் தமது ஆக்கிரமிப்புக்குள்ளாக்கியிருந்தது. 1996-07-26 அன்று ஆரம்பமான ‘சத்ஜெய” எனும் இராணுவ நடவடிக்கை மூலம் புலிகளுக்கெதிரான இறுதி யுத்தம் எனக்கூறிக் கொண்டு 70 நாட்கள் மூன்று கட்டங்களாக 12 கிலோமீற்றர் பகுதிக்குள் ஆமை வேகத்தில் முன்னேறி 22.09.1996 அன்று கிளிநொச்சியை ஆக்கிரமித்தன சிறிலங்காப்படைகள். இவ் ஆக்கிரமிப்பினால் அன்று ஒன்றரை இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்தனர். 1,279 சதுர கிலோமீற்றர் பரப்பளவைக் கொண்ட கிளிநொச்சி மாவட்டத்தில் ஏற்கனவே ஆனையிறவு, பரந்தன் படைத்தளங்கள் அமைந்திருந்த நிலையில் சத்ஜெய 60 சதுர கிலோமீற்றர் நிலத்தை விழுங்கிக்கொண்டது. இந்நடவடிக்கைக்கெதிராக புலிகள் 15 நாட்கள் தான் எதிர்சமரை மேற்கொண்டனர். இதன்போது நாளொன்றுக்கு 3,000 எறிகணைகள் என்ற வீதத்தில் புலிகள் மீது எறிகணைகளை ஏவியும், நாளொன்றுக்கு நான்கு தடவைகள் இரண்டு கிபிர் விமானங்கள் குண்டுகளை வீசியும் தாக்குதலை நடாத்தியே ஆக்கிரமிப்பை நடத்தின. இதன்போது சிறிலங்காப் படைகள் பயன்படுத்திய எறிகணைகளின் எடை மட்டும் 500 தொன் எனவும் கிபிர் குண்டுகளின் எடை 325 தொன் எனவும் மொத்தமாக சத்ஜெயவிற்கு 825 தொன் வெடிபொருட்கள் பயன்படுத்தப்பட்டதாகவும் ஆய்வு ஒன்று குறிப்பிடுகிறது. தமிழீழ விடுதலைப் புலிகள் மரபுவழிச் சமரை வெற்றிகரமாகக் கையாண்ட சமராக இது அமைவதோடு, 120 மில்லி மீற்றர் மோட்டார் உட்பட பெயர் குறிப்பிடாத பல சுடுகலன்களை விடுதலைப் புலிகள் முதன்முதல் பயன்படுத்திய சமராகவும் இது அமைகிறது. எனினும் புலிகள் தமது ஆட்பலத்தைத் தக்கவைப்பதற்காக தற்காலிக பின்வாங்கல்களையும் மேற்கொள்ள நேர்ந்தது. இச்சமரில் 700 இற்கு மேற்பட்ட படையினர் கொல்லப்பட 2,500 இற்கும் மேற்பட்ட படையினர் படுகாயமடைந்திருந்தனர். விடுதலைப் புலிகள் தரப்பில் 254 போராளிகள் வீரச்சாவடைந்தனர். இவ்வாறு ஆக்கிரமித்திருந்த படைகளுக்கு இடிவிழுந்த நாள் 27.09.1998 அன்று தமிழீழ விடுதலைப் புலிகள் பல உயிர்த்தியாகங்களைச் செய்து கிளிநகரை மீட்பதற்கான ஓயாத அலைகள் – 02 ஐ ஆரம்பித்தனர். இன்று நீரோடும் கால்வாய்கள் அன்று மாவீரரின் குருதி சிந்திக்கிடந்த கால்வாய்களாகக் காணப்பட்டன. இன்று நாம் எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியும் அன்று பல புலி வீரர்களின் உடல்கள் சரிந்த நிலங்களாகக் காணப்பட்டன. இற்றைக்கு ஏழு வருடங்களுக்கு முன் நடந்த ஓயாத அலைகள் – 02 சமர் எவ்வாறு நடைபெற்றதென்பதை அன்றைய சமர்க்களங்களில் எதிரியைப் புறமுதுகிட்டு ஓடச்செய்த வீரர்கள் நினைவுபடுத்துகிறார்கள். ஓயாதஅலை – 02 சமரின் வெற்றிக்கு வலுச்சேர்த்தவர்களில் எதிரியின் முகாம்களுக்குள் ஊடுருவி தாக்குதலுக்கான தரவுகளையும் உள்ளே எதிரியின் ஒவ்வொரு அசைவையும் அவதானித்த வேவு வீரர்கள் தாம் எவ்வாறு எதிரியின் நிலைகளுக்குள் ஊடுருவினார்கள் என்பதையும், தாக்குதலுக்கான தகவல்களை எவ்வாறு திரட்டினார்கள் என்பதையும் இதுவரை வெளியிடாத தகவல்களை வேவுப்புலி வீரர்கள் ஓயாத அலைகள் – 02 இன் 7 ஆவது ஆண்டு நினைவுநாளில் பகிர்ந்து கொள்கின்றார்கள். அதில் வெற்றிக்கு வழிவகுத்த அம்சங்களை- பல புதிய தகவல்களை வேவு வீரர்களை நெறிப்படுத்தியவரும் அன்றைய விசேட வேவுப் பிரிவின் தளபதிகளில் ஒருவராகவும் இருந்த லெப்ரினன்ட் கேணல் ஜெரி இவ்வாறு கூறுகிறார். ‘ஓயாத அலை இரண்டுக்கான வேவு நடவடிக்கையை ஆரம்பிக்கும் முன்பே நாங்கள் கிளிநொச்சிப் பகுதியை அண்டிய இராணுவ காவலரண்களைச் சுற்றி ஓரளவு கண்காணிப்பை வைத்திருந்தோம் கிளிநொச்சி முகாமை அடிக்க வேண்டுமென்று எல்லாரும் உறுதியோடு இருந்தோம் ஆனால் எப்போது அடிக்கிறதென்ற திட்டம் எங்களுக்குத்தரப் படவில்லை. ஓயாத அலை – 02 நடவடிக்கைக்கு ஒரு மாதத்திற்குள்தான் இந்த வேவு நடவடிக்கையை வேகப்படுத்தினோம். ஆரம்பத்தில் விசேட வேவுப்பிரிவினர்தான் இதைப் பார்த்தார்கள். சண்டைக்கு அணிகளை இறக்குவதற்கான வேவுக்காக ஒவ்வொரு படையணிகளையும் இந்த வேவு நடவடிக்கையில் ஈடுபடுத்தியே இதனை முழுமைப்படுத்தினோம். ஆரம்பத்திலே வேவு பார்த்ததற்கும் கடைசிக் கட்டங்களில் வேவு பார்த்ததற்கும் நிறையப் பிரச்சினைகள் இருந்தன. என்னவென்றால் வேறு நடவடிக்கைகளுக்கு வேவு பார்க்கும் போது குறிப்பிட்ட இடத்தில் சிக்கல் என்றால் 500 அல்லது 600 மீற்றர் விலத்தியும் பார்ப்போம். ஆனால் இந்தப் பிரதேசத்தைப் பொறுத்த மட்டில். எங்களுக்கென குறிப்பிட்டுச் சொல்லப்பட்ட இடத்தில் பாதை எடுத்து கொடுக்க வேண்டிய தேவை இருந்தது. ஏனென்றால் அந்த இடத்தில் உடைப்பை ஏற்படுத்தினால் மட்டும்தான் இலகுவான முறையில் கைப்பற்ற முடியும் என்ற நிலை இருந்தது. இதே நேரத்தில் எதிரியும் எதிர்பார்க்கக்கூடிய இடத்தில்தான் உடைப்பு பகுதியும் இருந்தது. மூன்று பேரைக் கொண்ட வேவு அணி உட்புகுந்து வேவு பார்க்க முடியும். ஆனால் பெரும் அணி நகரும் போது எதிரி அவதானிக்காதவாறும் வேவுபார்க்க வேண்டியிருந்தது. வேவின் ஆரம்பத்தில் சிக்கல் குறைவாக இருந்தாலும் அடுத்தடுத்து வந்த நாட்களில் எல்லாப் பாதைகளிலும் எதிரியின் பதுங்கித் தாக்கும் அணிகளின் அச்சுறுத்தல்கள் அதிகமாக இருந்தது. பகல் வேளைகளிலும் இரவிலும் எதிரி தனது அரணுக்கு வெளியிலும் அவதானிப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்தியிருந்தான். இதற்கும் பின்புதான் நாங்கள் முழுமையான வேவுகளை பார்க்க வேண்டியிருந்தது. அதாவது எமது அணிநகரும் போது அவர்களுக்கு பாதுகாப்பாக மற்றுமொரு அணியை நகர்த்த வேண்டிய நிலையும் ஏற்பட்டது. கூடிய பாதைகளால் அணிகளை நகர்த்துவதற்கான வேவுகளைப் பார்த்து நகர்த்தியதென்பதும் எமக்கு பெரும் வெற்றி என்றே கருதலாம். இதில் எல்லா வேவுப் போராளியும் கடுமையாக உழைத்தார்கள். கடைசிக் கட்டங்களில் இரவு, பகல் முழுமையாக ஓய்வின்றி செயற்பட்டார்கள். ஏனென்றால் சண்டையினுடைய முழுப்பொறுப்பும் வேவு வீரனுக்குரியதாக இருக்கும். உண்மையில் ஒரு வேவுப் போராளி தனது உயிரை மதிக்காமல் கடும் ஆபத்தான பகுதிகளுக்குள் சென்று வருகிறானென்றால் அதன் உண்மையான நோக்கம் தான் உயிரோடு திரும்பினால் அந்தப் பாதையில் ஏனைய போராளிகளின் இழப்புக்களை குறைப்பது தான் வேவுப் போராளியின் நோக்கமாக இருக்கும். வேவில் பிரச்சினைகள் இருந்தால் இழப்புக்கள் கூடும் ஆகவே வேவுப் போராளிகள் சரியாக இதை உணர்ந்து கொண்டுதான் இதில் ஈடுபடுவார்கள் ஒரு சண்டையில் வெற்றியடைந்தால் அதனுடைய ஆரம்ப வெற்றி வேவுவீரனையே சாரும். இந்த ஓயாத அலை – 02 ஐப் பொறுத்த வரையில் முழுப்பாதையாலும் குறித்த நேரத்திற்கு சண்டை தொடங்கி முழுப்பாதைகளையும் உடைத்து அணிகள் உட்புகுந்தன. ஒருபாதையால் 50 பேர் கொண்ட அணி அமைதியாக உள்ளே சென்றுதான் சண்டையில் ஈடுபட்டன. வேவுப் போராளிகளுக்கு இந்தப் பிரதேசத்தில் அமைந்த சாதகம் என்னவென்றால் நடை தூரம் குறைவாக இருந்தது. இந்த போராளிகளுக்கு வேவின் கடைசிக்கட்டங்களில் ஓய்வு கொடுக்க முடியாதிருந்தது. ஏனென்றால் ஓய்வெடுத்தால் சண்டையில் பெரும் மாற்றம் ஏற்படும் அவர்களும் ஓய்வினை எதிர்பார்க்க மாட்டார்கள். ஏனென்றால் சண்டைக்கு முதல்நாள் நகர்விற்கான பாதையில் சிக்கல் ஏற்பட்டால் மற்றுமொரு பாதையை அவர்தான் எடுக்கவேண்டும் இந்த சண்டையிலும் சண்டைக்கு முதல் நாள் ஒரு பாதையில் குழப்பம் ஏற்பட்டுவிட்டது. ஆனால் அந்தபாதைக்குரியவர் அடுத்தநாள் நான்கு மணிக்கிடையில் இன்னுமொரு பாதையை எடுத்தார். நகர்வுப்பாதைகளை எடுப்பதிலும் நிறைய விடயங்களை அவதானிக்க வேண்டும். ஒவ்வொரு பாதையும் எங்களுக்கு சாதகமான முறையில் இருக்க வேண்டும் பாதையால் அணிகள் நகரும் போது எதிரி அவதானிக்காதவாறிருக்க வேண்டும். எதிரியின் பதுங்கித்தாக்கும் அணிகளின் நடமாட்டமற்ற பகுதியாக இருக்க வேண்டும். இது போன்ற பல விடயங்களை அவதானித்துத் தான் பாதை எடுக்க வேண்டும். அதாவது இராணுவம் எந்த உசார் நிலையிலிருந்தாலும் தேவைக்கேற்ப பாதை எடுத்தே ஆகவேண்டும். ஓயாத அலை – 02 இல் குறிப்பிட வேண்டிய ஒரு விடயம் உண்டு அதாவது பயிற்சி முடித்த குறுகிய காலத்திற்குள்ளேயே ஓர் அணியையும் இந்த வேவில் ஈடுபடுத்தினோம். இவர்களுக்கு வேவுப்பயிற்சியை வழங்கும்போது அதிலே சில போராளிகளின் திறமையான செயற்பாடும் இந்த சண்டையில் முக்கியத்துவம் பெறுகிறது. 2 ஆம் லெப்டினன் ரகுவரன் எனும் போராளி ஆரம்பத்தில் வேலைத் திட்டங்களுக்கு அனுப்பும்போது ஒரு வித்தியாசமான துணிச்சல், நகர்வு, பண்பு என்பவற்றை கொண்டிருந்தார். அவரின் திறமையை அவதானித்து இந்த பாதை எடுக்கும் செயற்பாட்டில் அவரையும் ஈடுபடுத்தினோம். பாதைகள் எடுக்கப்பட்ட பின் மேற்கொண்ட பகுப்பாய்வில் அவரின் செயற்பாடு மிகவும் வித்தியாசமானதாகவிருந்தது. ஒரு அனுபவமுள்ள வேவுவீரன் எவ்வாறு செயற்படுவாரோ அதேபோல் இவர் பயிற்சியையும் பொறுப்பாளர்களால் விளங்கப்படுத்தப்பட்ட விடயத்தையும் வைத்து இராணுவத்தின் நடவடிக்கைகளை மிகவும் நுணுக்கமாக அவதானித்திருந்தார். அவ்வாறுதான் ஒவ்வொரு வேவுப் போராளிகளும் செயற்பட்டிருந்தார்கள். சண்டை நடைபெறுகின்ற சந்தர்ப்பங்களில் வேவுப்போராளிகளின் பணி என்ன வென்றால் திட்டத்திற்கேற்ப அணிகளை நகர்த்தி சண்டையை தொடங்கி மண் அரண்களில் ஏறி காப்பரண்களைக் கைப்பற்றியவுடன் வெளி லைனுக்குரியவர்கள் அங்கு நிற்க உள்ளே அணிகளை கொண்டு செல்ல வேண்டியவர்கள் அணிகளுடன் உட்செல்வார்கள். சில பாதைகளை எடுக்கும் காலத்தில் எங்களுக்கு பெரும் நெருக்கடி ஏற்பட்டது. ஏனென்றால் அப்பகுதிகள் வெளியான பிரதேசம், அங்கு எதிரியின் அணிகள் வந்து பதுங்கியிருந்து தாக்குதல்களை பெருமளவில் மேற்கொண்டு வந்தன. இந்த நிலையில் சண்டைக்கு முதல் நாள் அப்போது பொறுப்பாக இருந்தவரால் சொல்லப்பட்டது இந்தப்பகுதியால் பாதை எடுக்கப்படா விட்டால் சண்டையை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்படுமென்று இதனை அந்த பாதைக்குரிய போராளிகளுக்கு தெரியப்படுத்தினோம். அதாவது இந்தப்பாதை தளபதி பால்ராஜ் அண்ணாவின் அணி போகவேண்டிய பாதை இந்த அணிதான் கட்டவுட்போட வேண்டிய அணி. எனவே ஒரு புதுவிதமான முறையில் இதில் வேலையை மேற்கொண்டோம். அதாவது நாங்கள் ஒரு அணியை தயார்ப்படுத்தி நகர்ந்து சண்டை ஏற்பட வேண்டிய நிலை உருவானால் சண்டையிட்டாவது பாதையை எடுப்பது என்ற நிலையில். மிகக்கூடிய ஆபத்துக்களை சந்திக்க வேண்டிய சந்தர்ப்பத்திலும் அந்த போராளிகளின் திறமையான செயற்பாட்டினால் அந்தப்பாதையை எடுத்து அதனூடாகவே மறுநாள் அணிகளை நகர்த்தினோம். ஒரு பகுதிக்கு சுகந்திரன் என்ற போராளி பொறுப்பாக நின்று செயற்பட்டார். அவர்கள் மாலை 6.30 இற்கு குளத்து தண்ணிக்குள் இறங்கினால் காலை 4.30 இற்கு பிறகுதான் அவர்கள் கரைக்கு வருவார்கள் 10 மணித்தியாலம் வரையில் தண்ணிக்குள்ளிருந்து நீண்டநேரம் அவதானித்தார்கள் அதாவது சில இடங்களில் தாழ்வான பகுதியும் சில இடங்களில் தாழ்வற்ற பகுதியுமாக இருந்தது. அதற்குள் சத்தமின்றி அணிகள் நகர்வது என்றால் மிகக் கடினம் அதற்கேற்றவாறு வேவு பார்க்க வேண்டியிருந்தது. இதன்படி இப்பகுதியால் குறிப்பிட்ட நேரத்திற்குள் அணிகள் நகர்த்தப்பட்டன. சண்டைக்கான பயிற்சிகளை அணிகளுக்கு வழங்கும் போது வேவுப் போராளிகளும் ஈடுபடுவார்கள் ஏனென்றால் இவர்களின் வழிகாட்டல் அணிகளுக்கு அவசியமானதாக இருக்கும். ஒரு பகுதியால் சண்டை அணிகள் நகர்ந்து கைப்பற்ற வேண்டிய அரண்கள் எல்லாம் பிடிக்கப்பட்டு விட்டன. இதற்கு லெப். கேணல் சித்தா பொறுப்பாக சென்றார். பின்பு பகலில் இராணுவம் மிக முனைப்பாக சண்டையிட ஆரம்பிக்கும் போது இந்த அணியினரின் துப்பாக்கிகள் நீருக்குள்ளால் சென்றதால் செயற்படாது போனது இதனால் அணிக்கு இழப்பு அதிகரிக்க தொடங்கியது லெப். கேணல் சித்தா உட்பட 40 பேர் வரை குளத்து பண்டில் வீரச்சாவடைந்தனர். இதேபோன்று இன்னுமொரு பாதையிலும் குழப்பங்கள் ஏற்பட்டன. இவ்வாறு இராணுவம் அதி உசார் நிலையில் இருந்த போதும் வேவு வீரர்களின் ;திறமையான வேவுச் செயற்பாட்டினால் தான் ஓயாத அலைகள் – 02 சமரை வெற்றி கொள்ள முடிந்ததென அன்று பொறுப்பாக இருந்த தளபதிகள் கூறினார்கள் அது உண்மையும் கூட. ஓயாத அலைகள் – 02 இல் உள்வேவு என்பதும் முக்கியமானதொன்று இதை பொறுத்த வரையில் வேவுப்போராளிகள் முகாமிற்குள் ஊடுருவி விட்டார்கள் என்பதை எதிரி அறிந்திருந்த நிலையிலும் போராளிகள் உட்புகுந்து மிகவும் துல்லியமாக வேவு பார்த்திருந்தார்கள். அதாவது எதிரியின் முகாமுக்குள் அவனது கட்டளைத் தளங்கள், ஆயுத களஞ்சியங்கள், முக்கிய தளங்கள், மோட்டார் தளங்கள், உள் அரண்கள் முட்கம்பி வேலிகள் அனைத்தும் எவ்வாறு எந்த அளவு உசார் நிலையில் இருக்கின்றன என்பதையும் உள் அரண்கள் எத்தனை எந்த அளவு தூரத்தில் உள்ளன என்பனவற்றைக் கூட வேவுப் போராளிகள் தெளிவாக அவதானித்திருந்தார்கள். வேவைப் பொறுத்த வரையில் தடையங்களை விட்டால் அந்த சண்டையே குழம்பிவிடும். அதற்கேற்றவாறு வேவு வீரன் செயற்பட வேண்டும். உண்மையில் வேவு வீரன் விசுவாசமானவனாகவும் நம்பிக்கையுடையவனாக துணிச்சல் நிறைந்தவனாக இல்லாதிருந்தால் அந்த வேவு வீரனாலேயே பல போராளிகள் வீரச்சாவடைய வேண்டிய நிலை ஏற்படும் ஆகவே இந்த சண்டையில் அவ்வாறு எந்த செயற்பாடும் நடைபெறாதது வேவு வீரரின் திருப்திகரமான செயற்பாட்டையே வெளிப்படுத்துகின்றது. பொதுவாக சண்டை ஆரம்பிக்கின்ற நேரத்தில் அனைத்து பாதைகளும் ஒழுங்கமைக் கப்பட்டு குறித்த நேரத்திற்குள் அணிகள் நகர்ந்து சண்டையில் ஈடுபட்டன. இந்த சண்டையில் தடை உடைப்பிற்கான செயற்பாட்டில் வீரச்சாவுமிகக்குறைவாகவே இருந்தது. பொதுவாக வேவு வீரர்கள் திரட்டும் தகவல்கள் அனைத்தும் தளபதிகளுடாக தேசியத் தலைவருக்கு அனுப்பப்பட்டு தேசியத் தலைவராலேயே சண்டைக்குரிய திட்டங்கள் வகுக்கப்படும் அவரின் திட்டத்திற்கேற்பதான் மாற்றங்கள் மேற்கொள்வதானால் செய்வோம். இந்த சண்டையில் ஏற்கனவே நாங்கள் தெரிவு செய்த சில பாதைகளை தலைவர் நிறுத்தினார். அதற்கேற்ப அடுத்த பாதைகளை எடுத்துத்தான் அணிகளை நகர்த்தினோம். இவ்வேவுப்புலி வீரர்களின் அணிகளின் துணிகரச் செயற்பாட்டுக்கு வித்திட்டவர்கள் வீரச்சாவைத் தழுவிய வேவுப்புலி மாவீரர்கள் என்பதே மிகப்பொருத்த முடையது. ஏனெனில் வேவுக்காக செல்கின்ற ஒவ்வொரு போராளியும் வீரச்சாவடைகின்ற பொழுது அடுத்த வேவு வீரனுக்கு ஏற்படுகின்ற உணர்வு எதிரியின் மீது தாக்குதலை நடத்தவேண்டுமென்ற உத்வேகத்தை அதிகரிக்கும். ஆகவே எமது விடுதலையின் ஒவ்வொரு வெற்றிக்குப் பின்னும் வீரச்சாவ டைந்த ஒவ்வொரு மாவீரனின் தியாகமும் விடுதலை உணர்வுமே உத்வேகத்தை அளிக்கின்றன. கள ஆய்வுகளுடன்:- இ.சசிக்குமார். ” புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம் “
  8. "சந்தன வாசம் வீசிய தேசம் கந்தகம் பூசியதே! - எங்கள் தாயக பூமி வாசலில் எங்கும் சாவொலி கேட்கிறதே!" --> வாகையின் வேர்கள்
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.