Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. கண்டிப்பாக ஐயா.... வரலாறு இல்லாத இனம் வரலாறே அற்றுப் போகும் என்பது சான்றோர் கருத்து. எமக்கு அதைத்தான் சிங்களவன் செய்ய நினைக்கிறான்.. அதை நாம் நடந்தேற்ற விடக்கூடாது.
  2. "தோற்றிடேல், மீறித் தோற்றிடினும் வரலாறின்றி மரியேல்!" -நன்னிச் சோழன் எழுதருகை(warning): இங்குள்ள செய்திகள் யார் மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்படவில்லை. இவை தமிழினத்தின் வரலாற்றை ஆவணப்படுத்தும் முகமாகவே எழுதப்பட்டுள்ளன என்பதை தாழ்மையுடன் தெரிவித்துக்கொள்கிறேன்…! இன்று நாம் பார்க்கப்போவது தமிழீழ வான்படையான வான்புலிகளிடம் இருந்த வானூர்திகளைப் பற்றியே. இங்கு நான் எழுதும் அனைத்தும் இறுதிப்போரில் சிங்களப்படைகள் வெளியிட்ட படங்கள், மற்றும் ஓர் நெடும்தொடராக வெளிவந்த கட்டுரை ஆகியவற்றில் இருந்து கிடைக்கப்பெற்ற செய்திகளை அடிப்படையாகக் கொண்டே எழுதுகிறேன். இற்றைய தேதிவரை உலகில் இருந்த எ இருந்துள்ள அனைத்து அமைப்புகளிலும் எ நடைமுறையரசுகளிலும் தமிழீழ நிழலரசை நடாத்திய த.வி.பு. மட்டுமே சொந்தமாக வானூர்தி கட்டுமான திறனை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்தவர்கள், அதுவும் அந்தக்காலத்திலேயே! . புலிகளிடம் பறக்கக்கூடிய நிலையில் இருந்த மொத்த வானூர்திகள் (உறுதிப்படுத்தப்பட்டவை): 13 கொச்சு இலகு கீழிதைகள் (micro light gliders) - 2 தற்சுழல் பறனை(Gyroplane) - 2 சிலின் Z 143 இலகு வானூர்திகள்(Zlin Z 143 Light Aircrafts) - 4 → செம்மைப்படுத்தப்பட்ட Z 143 குண்டுதாரிகள்(Improvised Zlin Z 143 Bombers) - 2 வானலை கட்டுப்பாட்டு மாதிரி வானூர்தி (radio controlled model aircraft)- 4 செஸ்னா ஸ்கைமாஸ்ரர் (Cessna Skymaster) - 1 84 - 87களில் வெள்ளோட்டம் விடப்பட்ட வானூர்தி (தோல்வி) கடல் மேல் பறக்கும் சிறிய வடிவ வானூர்திகள் போன்ற தோற்றமுடையவை - 2 87ல் வெள்ளோட்டம் விடப்பட்ட வானூர்தி (வெற்றி) சரியான வடிவம் தெரியவில்லை - 1 2008-2009 ல் புலிகளால் ஆக்கப்பட்ட வானூர்தி விதமறியா இலகு வானூர்தி (unknown type light aircraft)- 1 புலிகளின் வானூர்தி கட்டுப்பாட்டு அறை: 84ல் இருந்தே நான் கணக்கைத் தொடங்குகிறேன்.. 1)84 - 87களில் வெள்ளோட்டம் விடப்பட்ட வானூர்தி இருப்பு எண்ணிகை - 2 மேலும் வாசிக்க: 2) சரியான வடிவம் தெரியவில்லை உருவாக்கியவர்: கேணல் சங்கர் இருப்பு எண்ணிகை - 1 இதுதான் முதலில் வானில் பறந்தது. மேலும் வாசிக்க: கொச்சு இலகு கீழிதை (micro light glider) : →கொச்சு- சேர நாட்டு வழக்கு (எ.கா: கொச்சு வள்ளம்.. இருப்பதிலேயே சிறிய வள்ளம்) இதே போல் புலிகளிடம் மொத்தம் இரண்டு வானூர்திகள் இருந்ததாக செய்திகள் கிடைக்கப் பெற்றுள்ளன. இருப்பு எண்ணிகை - 2 → கீழிதை - 1 'இடது புறத்தில் நிற்பவர் கேணல் சங்கர் ஆவார். இவர்தான் வரலாற்றுக் காலத்தில் தமிழர் வான்படையின் முதல் கட்டளையாளர் என அறியப்படுபவர் ஆவார்..' 'கீழிதையின் உடல்' 'கீழிதையின் பின்பக்கம். வெள்ளை நிறத்தில் தெரிவதுதான் அதன் சுழலி' 'கீழிதையின் பக்கவாடு. ' → கீழிதை - 2 இரண்டாவது கீழிதை ஒன்று புலிகளிடம் இருந்ததாக சிங்களம் தான் கூறுகிறது.. ஆனால் இருந்தமைக்கான பூதியல் ஆதாரம் எதையும் இன்று வரை சிங்களம் காட்டவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. செஸ்னா ஸ்கைமாஸ்ரர் (Cessna Skymaster) இருப்பு எண்ணிகை - 1 (ஆகக்குறைந்தது) ஜூலை 28, 2006 அன்று சிங்கப்பூரைத் தளமாகக் கொண்ட ஏசியன் ரிபியூன் என்ற புலியெதிர்ப்பு மின்-செய்தித்தாளானது செஸ்னா ஸ்கைமாஸ்டர் வகை வானூர்திகள் பல மாதங்களாக வானில் பறப்பதை எழிலன்புரம், புதுக்குடியிருப்பு மற்றும் மீருகண்டி ஆகிய இடங்களில் வசிக்கும் மக்கள் அடிக்கடி பார்த்ததாகவும் செய்தி வெளியிட்டது. மேலும் இதே பகுதிகளின் மக்கள் இரு சிலின் 143 வகை வானூதிகள் பறப்பதையும் நேரில் கண்டதாக செய்தி வெளியிட்டு பின்னாளில் அது மெய்யான நிகழ்வுகளும் உண்டு என்பதை ஞாபகப்படுத்த விரும்புகிறேன். தற்சுழல் உலங்கூர்தி/தற்சுழல் பறனை (Gyrocopter/Gyroplane) இருப்பு எண்ணிகை - 2 1) பக்கப்பக்க இருக்கைகள் கொண்ட தற்சுழல் பறனை 'தற்சுழல் பறனையின் உடல் மேல் சுழலியைப் பொருந்துவதைக் காட்டும் படம்' 'மூலைப் பார்வை' 'முன்பக்க பார்வை' 'தோழர்கள் புடைசூழ கொடிஞ்சியில்(cockpit) 2 வானோடிகள் அமர்ந்திருக்கின்றனர்.' மேற்கண்ட திரைப்பிடிப்பில் நெகிழ்வான மகுடக்கவி(Floppy hat) அணிந்திருப்பவர் ஒரு வானோடியே. அவர்தான் பின்னாளில் வான்புலிகளின் துணைத் கட்டளையாளராய் ஆகியவர். அவருடைய இயக்கப்பெயர் லெப்.கேணல் முல்லைச்செல்வன்(குசந்தன் என்று பொதுவாக அறியப்படுபவர்) என்பதாகும். அந்தக் கறுப்புக் கண்ணாடி போட்டிருப்பவர் அச்சுதன் எ சுரேஸ் ஆவார். எனக்கு இவரைப் பற்றி ஏதும் தெரியாது. சிங்கள புலனாய்வுத் துறையின் அறிக்கைகள் மூலம்தான் இவரும் ஒரு வானோடி என்று அறிந்தேன். இவர்தான் பின்னாளில் வான்புலிகளின் கட்டளையாளராய் செயற்பட்டவர் என்று சிங்கள புலனாய்வுத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 'தற்சுழல் பறனையின் வால்பகுதி' 'தற்சுழல் பறனையின் பின்பக்கச் சுழலி' முன்-பின் இருக்கைகள் கொண்ட தற்சுழல் பறனை 'தமிழீழ வானோடிகள் இருவர் (அச்சுதன் மற்றும் இன்னொருவர்) வானூர்தியோடு நின்று நிழற்படத்திற்கு பொதிக்கின்றனர்' 'தமிழீழ வானோடி ஒருவர் நிழற்படத்திற்கு பொதிக்கின்றார்' புலிகளின் வான்படை வானூர்தியொன்றின் பொறி.. எதனது என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் மேலுள்ளவற்றினது மட்டும் இல்லை என்று உறுதியாத் தெரிவித்துக்கொள்கிறேன். இது சிறிய வகை இலகு வானூர்திகளிற்கான பொறியாக இருக்கலாம் என்று எண்ணுகிறேன். பொறி: 80 குதிரைவலு எஃவ்-30 காற்றால் குளிராகும் பொறி (80 HP F-30 air cooled engine) 'பின்பக்கத் தோற்றம்' 'பக்க வாட்டுத் தோற்றம்' சிலின் Z 143 இலகு வானூர்திகள்(Zlin Z 143 Light Aircrafts) - 4 செம்மைப்படுத்தப்பட்ட Z 143 குண்டுதாரிகள்(Improvised Zlin Z 143 Bombers) - 2 இதுதான் புலிகளின் குண்டுதாரி வானூர்தி. இது செக் குடியரசின் உண்டாக்கல்(made) ஆகும். இவற்றில் களத்தில் 2 உம், தருவிக்கப்பட்டு புலத்தில் (ஓர் ஐரோப்பிய நாட்டில்) தரித்த நிலையில் 2ம் இருந்தன. இந்த 4 வானூர்திகளும் புலிகளிடம் இருந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இதைப் புலிகளே உறுதிப்படுத்தும் விதமாக வான்கரும்புலித் தாக்குதல் முடிந்த பின்னர் வெளியிட்டிருந்த அறிக்கையில் தம்மிடம் மேலும் மூன்று வானூர்திகள் இருப்பதாக கூறியிருந்தனர் என்பது இங்கு நினைவுகூரத் தக்கது. ஆனால் புலத்தில் இருந்த மூன்றிற்குமான பூதியல் ஆதாரங்கள் எனக்குக் கிடைக்கப்பெறவில்லை. புலிகளின் வானூர்திகளின் செங்குத்து நிலைப்படுத்திகளில்(vertical stabilizer) இரண்டு தொடரிலக்கங்கள் எழுதப்பட்டிருந்தன. முறையே: 905, 906 'தாக்குதல் வானூர்தியாய் மாற்றும் முன்னர் எடுக்கப்பட்ட நிழற்படம்' 'தாக்குதல் வானூர்தியாய் மாற்றிய பின்னர் எடுக்கப்பட்டு தொகுக்கப்பட்ட(edited) நிழற்படம்' (விதப்பங்கள்- specifications, பெருமம்- maximum, சில்லுத் தடம் - wheel track, நெடுக்கம் - range, ஏறோட்டம்- Take-off run, இறங்கோட்டம்- Landing run) 'சிலின் 143-இன் கொடிஞ்சி (cockpit)' (மானுறுத்தம் - manufacture) 'வான்புலிகளின் வானூர்தித் தீக்குடுக்கை' இது போன்ற குண்டுகளை அந்தக் காலத்தில் தீக்குடுக்கை என்று சொல்வார்கள். இதுவே மிகவும் பொருத்தமானச் சொல். ஆனால் இது இன்று வழக்கொழிந்துவிட்டது. குண்டின் நீளம் : 114cm-127cm குண்டின் விட்டம்: 10-12" குண்டின் மொத்த எடை : 66 கி.கி. வெடிபொருள் நிறை : 55 கி.கி, வெடிபொருள் வகை : C-4 குண்டுச்(ball) சிதறல்களுடன் . 'குண்டுச்(ball) சிதறல்கள் கோர்வையாய் | தீக்குடுக்கையின் முன்பகுதி ' 'குண்டுச்(ball) சிதறல்கள் ஒற்றையாய்' 'வான்புலிகளின் வான்கலவர்களால்(airmen) சிலின் 143-இன் மின்சாரக் குண்டு அடுக்கத்தில்(electric bomb track) வழிகாட்டப்படாத குண்டுகள் (unguided bombs) பொருத்தப்படுகின்றன.' 'சிலின் 143-இன் மின்சாரக் குண்டு அடுக்கத்தில் ஆற்றப்படாத குண்டுகள் பொருத்தப்பட்டுள்ளன.' 'சிலின் குண்டுதாரியின் அடிப்பக்கம்' "வன்னியில் இருந்த ஓர் வான்பொல்லத்தில் (air strip) இருந்து சிலின் மேலெழும்புவதற்காக இரவு நேரத்தில் ஓடுதளத்தில் ஓடியபோது" → கடைசியாய் வான்கரும்புலித் தாக்குதலிற்குச் சென்ற வான்கரும்புலி வானோடி லெப்.கேணல் சிரித்திரன் அண்ணாவிற்கு கையிலும் நெஞ்சிலும் வெடி விழுந்ததாகவும், அதனால்தான் இவரால் மேற்கொண்டு ஓட்ட முடியாமல்போய் விழுந்தார் என்றும், நான் இரணப்பாலையில் இருந்தபோது (தாக்குதல் நடந்த 2 ஆம் நாள் - அப்போது எனக்கு 9 வயது) எனக்கு ஒருவர்(அவரது பெயரை வெளியிட விரும்பவில்லை) தெரிவித்தார். → அறியில்லா இரண்டு வான்புலிகளின் துணைவி/மனைவி-களின் மனை திருவையாறு(கிளி.) SSLR மிதிவண்டி கடைக்கு('SSLR சைக்கிள் கடை' என்றால் எல்லோருக்கும் தெரியும்) இடது பக்கமாக போகும் ஒழுங்கையில் 2008 வரை இருந்தது. இருவரும் சிங்களத்திதான். அந்த வீடு ஒருமாடி கட்டடம் ஆகும். மூன்றாவது வானூர்தியிற்கான பாகங்கள் தமிழீழத்தில் இருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. ஆனால் அதற்கு என்ன நடந்தது என்று எனக்குத் தெரியாது. எதனால் அப்படிச் சொல்கிறேன் என்றால் சிறீலங்கா படையினரால் சிலினிற்கான உதிரிப்பாகங்கள் சில கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. வான்கரும்புலிகளால் கொண்டு செல்லப்பட்டதைக் காட்டிலும் இன்னொன்று இருந்தமைக்கான மற்றொரு ஆதாரமாக நான் வைப்பது யாதெனில் மே 13, 2009 அன்று சிங்களப் படைகளால் கண்டெடுக்கப்பட்ட இன்னொரு பிலிறுந்தியே (Propeller) ஆகும். இதோ உங்களின் பார்வைக்காக… 'புதைகுழியில் இருந்து பிலிறுந்தி வெளியில் கொண்டுவரப்படுகிறது' 'இரண்டு படத்திலும் உள்ள பிலிறுந்தியும் ஒன்றே. இரண்டாவது படத்தில் பிலிறுந்தியின் நடு மூடி திறந்து வைக்கப்பட்டுள்ளது' இந்த பிலிறுந்தி உதிரிப் பாகமாகவும் இருக்க வாய்ப்புகள் உண்டு. அதேநாளில் சிங்களப் படைகள் இன்னுமொன்றைக் கண்டெடுத்தன. அதுதான் கீழுள்ள சில்லாகும். இது ஒரு இலகு வானூர்திக்கான சில்லாகும். ஆகவே இது புலிகளிடம் இருந்த அந்த சிலினிற்கானதாகவும் இருந்திருக்கலாம், அல்லாமல் உதிரிப் பாகமாகவும் இருந்திருக்கலாம். 'சிங்களப் படைகளால் கண்டெடுக்கப்பட்ட முன்பக்க ஒற்றைச் சில்லு' வானலை கட்டுப்பாட்டு மாதிரி வானூர்தி (radio controlled model aircraft ) இவ்வானூர்திகளைப் புலிகள், தமது உளவு சேவைக்காகவோ அல்லது புலிகளின் வலவனில்லா வானூர்திகளின் முன்மாதிரி வானூர்தியாகவோ இருப்பதற்கு தருவித்திருக்கலாம் என்பது என் துணிபு. → (1) இந்த வண்டு கடந்த 2007 ஆம் ஆண்டு சிங்களப் படைகளால் கடற்புலிகளின் வழங்கல் அணியிடம் இருந்து கைப்பற்றப்பட்டது ஆகும். உடல் நீளம்: 5.5அடி இறக்கை நீட்டம்(wing span): 13 அடி (தோராயமாக) அதற்கான வானலை கட்டுப்படுத்தி(radio controller) செசுனா N739RF (Cessna N739RF) இது சீகல் மாதிரியைச்(seagull model) சேர்ந்த KIT விதமான வானூர்தியாகும். உடல் பகுதிகள் உதிரிகளாக: அதற்கான வானலை கட்டுப்படுத்தி (radio controller):- அதை ஒன்று சேர்ப்பதற்கான கையேடு: இலகுவானூர்தி ( light aircraft) இவ்வானூர்தி கைப்பற்றப்பட்ட இடம் பார்ப்பதற்கு வானூர்தி பழுதுபார்க்கும் பட்டறை போன்று இருந்தது என்கிறது சிங்களம். அது தொடக்கநிலையிடமாக இருந்தாலும், அங்குள்ள கட்டுமானங்களானவை புலிகள் தமது சொந்த சரக்குகளை உருவாக்க, பராமரிக்க மற்றும் செயல்படுத்துவதற்காகப் பயன்படுத்தினர் என்பதைக் குறிக்கிறது. கைப்பற்றப்பட்ட பொருட்களினுள் பரவலான அறிவியல் இதழ் மற்றும் பல வானூர்தியியல் பொறியியல் புத்தகங்கள் இருந்தன. இவற்றுடன் அங்கு எளிய ‘நீரே செய்யும் (do it yourself)’ புத்தகங்கமும் இருந்துள்ளது. இப்புத்தகத்தில் உள்ள வழிகாட்டலின்படி பெருவங்க விங்களம் (aluminum alloy) / உலோகத் தாள்களைக் (metal sheet) கோத்திணைக்க(fabricate) கடைசல் எந்திரம்(lathe) உட்பட பல எந்திரங்கள் அங்கிருந்தன. 'எதிரி கையில் கிடைக்கக்கூடாது என்பதற்காக எரியூட்டப்பட்ட வானூர்தி-ன் எச்சம்' 'எதிரி கையில் கிடைக்கக்கூடாது என்பதற்காக எரியூட்டப்பட்ட வானூர்தின் எச்சம்' 'எரியூட்டப்பட்ட வானூர்தின் மையப்பகுதி' 'வானூர்தி மாதிரிப்படம்' 'வானூர்தி மாதிரிப்படம்' மேற்கண்ட வானூர்தி பற்றிய செய்திகள் இந்நிகழ்படத்தில்(video) உண்டு. மேலும் நான் மேற்கூறியிருந்த அந்த வானூர்திப் பட்டறையையும் புத்தகங்களையையும் இதில் காணலாம். புலிகளின் வான்படை அணியங்கள்(accessories) தேவிபுரத்தில், 'தெறுவைக்குளம்' என்ற சிற்றூரில் புதைத்துவைக்கப்பட்டிருந்த நிலையில் சிங்களப் படைகளால் தோண்டியெடுக்கப்பட்ட புலிகளின் வான்படை அணியங்கள்(accessories):- 'பயிற்சி பாவனையாக்கி (training simulator)' 'பறப்பு பாவனையாக்கி (flying simulator)' 'ஓடுதள மின்சூழ்கள்' 'நீல நிறத்தில் தெரிவது சிறிலங்கா படைத்துறையால் செய்து வைக்கப்பட்ட போலி பறனை உடுப்பு ஆகும். இது புலிகளினது அல்ல.' 'வட்டைகள்(tires) மற்றும் ஒருசில கோப்புகள்' 'ஒன்றன் மேல் ஒன்றாக உள்ளது தொடர்பாடல் கரணங்கள் (communication device) என்று நினைக்கின்றேன். மற்றையது கதிவீ காட்சியக கரணமாக (RADAR display device) இருக்கலாம் என்று நினைக்கின்றேன், சரியாகத் தெரியவில்லை.' சிங்களப் படைகளால் கைப்பற்றப்பட்ட 12 வானூர்தி வட்டைகள்: 2 முதன்மைச் சில்லுகள்: உசாத்துணை: Air Tigers of LTTE Full Documentary with Video (Air Tigers of LTTE Full Documentary with Video) Dossier on ltte- pdf (read airforce section) YouTube /watch?v=PRecveMQQpc&list=LLhxWzcQVce-7x8bST_nSJ2w&index=12 http://dailymotion.om (http://dailymotion.om) (/video/x6x8v3z) Tiger aircraft rockets Palaly base, curfew in Jaffna Sri Lanka rebels say suicide air raids successful) Zlín Z-143 – Wikipedia (Zlín Z-143 – Wikipedia) (Navy Recovered a remote controlled air craft from Sea Tiger Boat (Update)) (Partially burnt 2 LTTE aircraft found in Puthukkudiyirippu- Mullaittivu) Hamilton, Dwight. "Terror Threat: International and Homegrown terrorists and their threat to Canada", 2007 ARF, PNP, RTF, RTR - What Does It All Mean? Seagull Cessna - Kits Ex-Sri Lankan navy chief describes how US helped destroy LTTE floating armories - NewsIn.Asia http://galledialogue.lk/assets/template/research_papers/2010/Prof_Rohan_Gunarathne.pdf http://eelabarathi.blogspot.com/2006/07/blog-post_115435098311053391.html https://eelam.tv/watch/sky-tigers-aircraft-accessories-வ-ன-ப-ல-கள-zlin-z-143-propeller-aircraft-tires-flight-simulat_nNjn4vd8q28u2rJ.html படிமப்புரவு: Double vie de Prabhakaran Album n°5 EelamView Dossier on ltte- pdf ruupabaahini TV YouTube /watch?v=PRecveMQQpc&list=LLhxWzcQVce-7x8bST_nSJ2w&index=12) http://dailymotion.om (/video/x6x8v3z) Sri Lanka Guardian eelamtv.com தொகுப்பு & வெளியீடு நன்னிச்சோழன்
  3. விடுதலைப் புலிகளின் கொடியேற்றல் நிகழ்வு & உறுதியுரை ஏற்றல் & அகவணக்கம் செலுத்தல்: https://eelam.tv/watch/அர-ய-ந-கழ-படம-க-ட-ய-ற-றல-ந-கழ-வ-உற-த-ம-ழ-ஏற-றல-அகவணக-கம-ச-ல-த-தல-full-documentry_eZ5z74mlphSquwa.html (இந்த நிகழ்படத்தை(video) எதிர்காலத்திற்காக பாதுகாத்து வைக்கவும். அரியது)
  4. இப்படகின் வகுப்புப் பெயர் நானறியேன் இது மிக நொவ்விய கடற்கல (Very slender vessel) வகையைச் சேர்ந்த ஒரு கடற்கரும்புலிக் கலனாகும்.
  5. கடற்சமர் ஒன்றின் முடிவுரை 2001 '2001, முல்லைத்தீவுக் கடலில்' 'புலிகளால் 2001 கைப்பற்றப்பட்ட ''டோறா" ஒன்றிலிருந்து தமிழரின் மிராஜ் வகுப்பின் 'ராகினி' என்னும் கலப்பெயர் கொண்ட கடற்கலத்தில் படைக்கலங்களை கழற்றி ஏற்றும் காட்சி' ZPU-1 உடன் நிற்பது எமது வோட்டர் ஜெட் ஆகும்.
  6. அட எங்கடையளுமே... 🤦‍♂️🤦‍♂️ சீ... உதுக்குப் பெயர்தான் காலமறதி என்டுறது.... சொந்த இனத்தின் வீரியம் பற்றித் தெரியாமல் நக்கல் அடிப்பது கேவலமான செயல்.
  7. உதை இந்தியாக்காரர் தானே அண்ணை நக்கல் அடிச்சவங்கள் என்டு கேள்விப்பட்டனான். எங்கடையளுமோ? (தெரியாமல்தான் கேட்கிறேன்..)
  8. சோதியா படையணியினள் 6-செப்- 2004
  9. மாவீரர் நாள், கள்ளப்பாடு, முல்லைத்தீவு 2005 ஒன்பது வயது சிறுவன் தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர் போல உடையணிந்துள்ளார். அவர் கட்டைப்படகு வகுப்பு படகின் வலப்பக்க பக்கவோரத்தில்(gunwale) அமர்ந்திருக்கிறார். சில சிறார்கள் தவிபு போன்று உடையணிந்துள்ளனர்:- 'கட்டைப்படகு (Dinghy) வகை #### வகுப்பு படகின் மீகாமன் இடம்'
  10. மேலுள்ள அதே விதமான குண்டுப்படகிலேதான் கப்டன் சிதம்பரம் மற்றும் கப்டன் ஜெயந்தன் ஆகியோர் சென்று பி 714 என்னும் தொடரிலக்கமுடைய அபிதா என்ற சிங்களக் கடற்படையின் கட்டளைக் கப்பல் மீது மோதி வெடித்தனர், 1991 அவ்விரு கடற்கரும்புலிகளும் அக்குண்டுப்படகில் நிற்பதைக் காண்க:

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.