Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நன்னிச் சோழன்

கருத்துக்கள உறவுகள்+
  • Joined

  • Last visited

Everything posted by நன்னிச் சோழன்

  1. இத்தாலியிலுள்ள மிலனில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு 16/06/2008 மிலனில் உள்ள பீசா அர்ஜென்டினாவில் தமிழீழ தேசியக் கொடி ஏற்றப்பட்டது மக்களாட்சி சட்ட வல்லுநர்கள் சங்கத்தைச் சேர்ந்த புரானி வைனர், மிலனில் நடைபெற்ற பொங்கு தமிழ் பேரணியில் உரையாற்றுகிறார். எங்கட அன்பிற்கினிய சிங்கள மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் விதமாக எதிர்ப் பேரணி ஒன்றினை நடத்துகின்றனர்.
  2. நோர்வேயின் ஒஸ்லோவில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு 14/06/2008 கவிஞர் அறிவுமதி புலவர் புலமைப்பித்தன் ஆகியோர் தமிழீழ தேசியக் கொடியினை ஏற்றுகின்றனர் கவிஞர் அறிவுமதி எழுச்சிச்சுடர் ஏற்றுகிறார் டிராண்ட் ஜென்ஸ்ருட், தொழிலாளர் கட்சி சாம் ஜாரெட், எரித்திரியன் அமைப்பைப் நிகராளிதுவப்படுத்தி ஒற்றுமை உரை நிகழ்த்துகிறார் கவிஞர் அறிவுமதி உரையாற்றுகிறார்
  3. இது நடப்பதற்கு முன்னரான காலங்களில் தென் தமிழீழத்தில் ஆயிரக்கணக்கான தமிழர்கள் முஸ்லிம்களால் உயிருடன் எரிக்கப்பட்டும், தமிழ்ப் பெண்கள் பாலியல் வன்புணர்வுக்குட்படுத்தப்பட்டனர். இவற்றை முழுமையாக வாசிக்க இந்த ஆவணத்தை வாசிக்கவும். காத்தான்குடி நடப்பதற்கு முன்னர், முதல் நான்கு நாட்களில் மட்டும் பல தமிழர்கள் எரித்து கொல்லப்பட்டுள்ளனர். தமிழீழ விடுதலைப் போரில் முஸ்லிம்களால் படுகொலையான அனைத்து தமிழ் தியாகிகளுக்கும் எமது அஞ்சலிகள்😭
  4. படுகொலை விரிப்புகள் புத்தகம்: தமிழினப் படுகொலைகள் 1956-2008 எழுத்துருவாக்கம்: வட கிழக்கு மனித உரிமைகள் செயலகம் பக்கம்: - நூல் வெளியீட்டு ஆண்டு: 2005 கரப்பொழை, முத்துக்கல் படுகொலை - 29 ஏப்பிரல் 1992 படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I கரப்பொழை, முத்துக்கல் கிராமங்கள் பொலநறுவை மாவட்டத்தில் அமைந்துள்ளன. இக்கிராமங்கள் மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக்கிராமங்களாகும். இக்கிராம மக்களின் பிரதான தொழில் கூலிவேலை செய்தல், மந்தை வளர்த்தல், காடுகளிற் தேனெடுத்தல் என்பனவாகும். 29.04.1992 அன்று நள்ளிரவு இராணுவத்தினரும் முசுலிம் குழுக்களும் இணைந்து பகல் முழுவதும் வேலை செய்த களைப்பில் இரவு நல்ல உறக்கத்திலிருந்த கரப்பொழை, முத்துக்கல் கிராமமக்களை, அவர்களின் வீடுகளினுட் புகுந்து வெட்டிப் படுகொலை செய்தனர். ஆண்கள், பெண்கள், சிறுவர்கள், குழந்தைகளென தொண்ணூற்றேழிற்கும் மேற்பட்டவர்கள் இராணுவத்தினராலும் முசுலிம் குழுக்களினாலும் படுகொலை செய்யப்பட்டார்கள். இதனைத் தொடர்ந்து இரண்டு கிராம மக்களும் இடம்பெயர்ந்து வேறு இடங்களுக்குச் சென்றார்கள். *****
  5. ஐயனே, அவர்கள் எழுதிய கட்டுரைக்கான எதிர்வினை தான் இது. கட்டுரை இல்லையெனில் எதிர்வினை இல்லை. எதிர்வினை ஆற்றாமல், எமக்கு அவர்கள் செய்த - உதை விட பத்து மடங்கான அழிவுகளை நாம் மறந்து போனதால் தான் எம்மை மடையர்களாக்கி ஏதோ தாங்கள் உத்தம தேவர்கள் போன்றும் சும்ம கிடந்த சங்கை (சோனகர்) நாம் (தமிழர்கள்) தான் ஊதிக் கெடுத்தோம் என்றும் இந்தச் சோனகக் கூட்டம் மாயை செய்கிறது. எவ்வாறெயினும் மெய்யுண்மை அதுவன்று என்பதை படம் போட்டுக் காட்டத் தான் நான் உந்தக் கருத்தை எழுதினேன் (ஆவணக்கட்டும் இந்த சோனகர்கள் பற்றி எழுதியுள்ளேன்). இந்த மாயை உடைக்கப்பட வேண்டும். இப்போது கூடப் பாருங்கள், திருமலையில் தமிழர்களை முதலில் எடுத்த உடமைகளோடு விரட்டியது இந்த சோனகர்கள் தான், முதலில். வட தமிழீழ தமிழர்கள் சோனகர்களால் பாதிக்கப்படாத காரணத்தால் அவர்களுக்கு முஸ்லிம்கள் மீது பாசமும் (இதை சோனகர்களிடமிருந்து நீங்கள் எதிர்பார்க்க இயலாது) சிங்கள படைத்துறையால் பாதிக்கப்பட்டதால் அவர்கள் மீது வெறுப்பும் ஏற்படலாம், நான் கதைத்தறிந்தது வரை. ஆனால் தென் தமிழீழ மக்கள் "மத்தளத்திற்கு இரு பக்கமும் அடி" என்ற மாதிரி சோனகர்களாலும் சிங்களவர்களாலும் அழிந்தனர். கூட இருந்த முஸ்லிம்களே தமிழர்களை அழித்தனர், நான் கதைத்தறிந்தது வரை. இதெல்லவற்றையும் மறைத்து என்னினம் மீது கருப்பு பூசுவதை ஏற்கவியலாது இழந்தவனுக்குத்தான் அதன் வலி தெரியும். அது போல தான் இதுவும். தவறைத் திருத்தலாம், ஆனால் வரலாறை மறந்து போகக் கூடாது. மறந்து போனால் எம்மையே அரக்கர்கள் மாதிரி கதை கட்டிப் போடுவாங்கள். ஆனால், மெய்யில் உவங்கள் தான் அரக்கத்தனம் செய்தவர்கள்.
  6. ஐயையோ.... அப்ப 2006 ... சீ சீ, 1990இற்கு முன்னர் தென் தமிழீழ பரப்புகளிலிருந்து சோனகர்களால் விரட்டியடிக்கப்பட்ட தமிழர்கள் பற்றியெல்லாம் சிந்தித்ததுண்டா... குறிப்பாக இதே திருமலையின் கிண்ணியாவில் 1986ம் ஆண்டு மே மாதம் 4ம் திகதி 24 மணிநேரத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தமிழர்கள் இந்த கொடும் சோனகர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைச்சர் மக்ரூபால் விரட்டியடிக்கப்பட்டனர், சோனகர்கள & சிங்களப் படைத்துறையின் உதவியுடன்! அவர்களின் முழு உடைமைகளைக் கூட எடுக்க நேரமின்றி விரட்டப்பட்டனர். இதெல்லாம் எந்தக் கணக்காம்... இது மட்டுமல்ல, அவர்கள் விரட்டப்பட்ட பின்னர், ஒரு நாள் கழித்து, 1986ம் ஆண்டு மே மாதம் 5ம் திகதி தவிபு இன் தம்பலகாமம் பிரதேசப் பொறுப்பாளர் லெப். குரு மற்றும் 2ம் லெப். உதயன் ஆகிய போராளிகள் கிண்ணியா குட்டிக்கரைச்சி என்ற இடத்திற்கு அண்மையில் மிதிவண்டியில் சென்றுகொண்டிருந்த போது நான்கு முஸ்லிம் இளைஞர்களால் வலைவீசிப் பிடிக்கப்பட்டனர். பின்னர் சிங்களப் படைத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்கள் சிறிலங்காப் படைமுகாமில் சயனைட் அருந்தி வீரச்சாவடைந்தனர்.... இவ்வாறாக இந்த சோனிகளின் நாச வேலைகளின் பட்டியலை அடுக்கிக்கொண்டு செல்லலாம். செய்யுறதையும் செஞ்சுபோட்டு இப்ப Victim Card விளையாடுறான் பார்.... உப்புத்திண்டவன் தண்ணி குடிக்கத்தான் வேணும். இவ்வாறான தென் தமிழீழ அட்டூழியங்களாலுக்கு பரிசாக - எங்கள் மக்களை விரட்டிய படியால்தான் (நான் குறிப்பிட்டதைவிட இன்னுமுண்டு. எழுதினால் எழுதிக்கொண்டேயிருக்க முடியும்) - வடக்கிலிருந்து எடுத்த கையோடு விரட்டியடித்தோம் என்பது ஞாபகமிருக்கட்டும்.
  7. படுகொலை விரிப்புகள் புத்தகம்: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I எழுத்துருவாக்கம்: வட கிழக்கு மனித உரிமைகள் செயலகம் பக்கம்: 152-156 நூல் வெளியீட்டு ஆண்டு: 2007 மொழிபெயர்ப்பு: நன்னிச் சோழன் வந்தாறுமூலை படுகொலை - 05, 23/09/1990 படிமப்புரவு: Lest We Forget - Massacres of Tamils 1956 - 2001 Part I வந்தாறுமூலை படுகொலை தொடர்பாக மட்டு. வந்தாறுமூலை பல்கலைக்கழகத்தின் விடுதிக்குப் பொறுப்பாகவிருந்த திரு. வர்ணகுலசிங்கம் என்ற பேராசிரியரின் கண்கண்ட சாட்சியாக கீழ்வருபவை பதிவிடப்படுகின்றன. "............ பல்கலைக்கழக புகலிட இடத்திற்குள் படைத்துறை உள்நுழைய வேண்டாம் என்று ஏற்கனவே சிங்களம் மற்றும் தமிழ் மொழிகளில் பலகைகளை வைத்திருந்தோம். உள்ளே இருந்தவர்கள் எங்கிருந்து வந்தவர்கள் என்று படைத்துறைக் கட்டளையாளர் எங்களிடம் வினவினார். வாழைச்சேனை முதல் ஆறுமுகத்தான் குடியிருப்பு வரையிலான 6 ஊர்களிலிருந்து மக்கள் இருந்தனர். இப்படி நடந்து கொண்டிருக்கும் போது இரண்டு பேருந்துகள் வந்தன. உள்ளே இருந்த அனைவரையும் வரிசையில் நிற்கச் சொன்னார்கள். அப்போது என்னுடன் வாழைச்சேனைச் சேர்ந்த தங்கமணி செட்டியார் இருந்தார். அவர் நல்ல மனிதர். முத்தலி, கலீல் என்ற இரு முஸ்லிம்கள் தரைப்படையினருடன் இருந்தனர். அவர்கள் இருவருக்கும் என்னையும் செட்டியாரையும் நன்றாகத் தெரியும். செட்டியாரின் ஊர்தியை கடன் வாங்கி அடிக்கடி ஓட்டி வந்தனர். அவர் தனது இரு கைகளாலும் அவர்களிடம் மன்றாடினார். வரிசையில் நின்றவர்களிடமிருந்து 138 சிறுவர்களை அழைத்து வந்து பேருந்தில் ஏறச் செய்தனர். இரண்டு பேருந்துகளும் புறப்பட்டன. அவர்கள் வாழைச்சேனை நோக்கி செல்வதாக அறிந்தோம், ஆனால் வேறு எதுவும் இல்லை. தாய், தந்தையர் அனைவரும் அலறினர். எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை. செட்டியார், டொக்டர் ஜெயசிங்கம், தலைமை விரிவுரையாளர் மனோசபாரத்தினம் மற்றும் நானும் 138 சிறுவர்களின் பெயர்களை எடுத்தோம். எங்களிடம் அவர்களின் பெயர்கள் இருந்தபோதிலும், அவர்கள் எங்கு சென்றார்கள் என்பதைக் கண்டுபிடிக்க யாரைக் கேட்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை. நாங்கள் கேட்ட ஒவ்வொரு படைமுகாமிலும் சிறுவர்கள் இல்லை என்று மறுத்தனர்......." இந்நிகழ்வு நடந்து நான்கு நாட்களில் பேராசிரியரை வாழைச்சேனையிலிருந்த அவருடைய வீட்டிலிருந்து நாவலடி படைமுகாமிற்கு படைத்துறையினர் பிடித்துச் சென்றனர். ஒன்பது நாட்களின் பின்னர் அவர் விடுதலை செய்யப்பட்டார்: "......அந்த முகாமில் தங்கியிருந்த காலத்தில், சில முஸ்லிம்கள் அந்த முகாமுக்குள் தொப்பியுடன் வருவதை பார்த்திருக்கிறேன். பின்னர் அந்த பரப்புகளில் தமிழர்களுக்கு எதிரான பல்வேறு நடவடிக்கைகளுக்காக தொப்பிகளை கழற்றி வைத்துவிட்டு தரைப்படையுடன் சென்றனர்....." ".....ஓட்டமாவடி பாலத்தில் சில முஸ்லிம்களின் உதவியுடன் படையினரால் பலர் வெட்டிக் கொல்லப்பட்டனர். ஓட்டமாவடியிலுள்ள முஸ்லிம்களை யாராவது பிடித்தால், இந்தப் படுகொலைகளின் முழு உண்மையையும் தெரிந்துகொள்ள முடியும். இந்த குற்றவாளிகளின் பெயர்கள், பாதிக்கப்பட்டவர்களின் பெயர்கள் மற்றும் எண்ணிக்கை, குற்றங்கள் செய்யப்பட்ட இடங்கள் போன்றவை......" *****
  8. நியூசிலாந்தின் ஆக்லாந்திலுள்ள பொட்டேர்ஸ் பார்க்கில் நடைபெற்ற பொங்கு தமிழ் மாநாடு 14/06/2008 நியூசிலாந்தின் ஆக்லாந்தில் பார்வையாளர்களிடம் உரையாற்றும் திருமதி மெய்ர் லெட்பீட்டர்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.